Thottal Thodarum

May 18, 2009

காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.?

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பல பேருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. முக்கியமாய் திமுக நிச்சயமாய் பத்து சீட்டுகளுக்கு மேல வரவே வராது,  என்ற கிளி ஜோசிய ஹோஷ்யங்கள்  சொன்னவர்களின் வாயை அடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள். இப்படி மக்கள் முடிவு எடுத்தற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும்?

பொதுவாய் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகால ஐக்கிய முண்ணனி  ஆட்சியை பற்றி பெரிய குறை சொல்லும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . பெட்ரோல், விலைவாசி, ரிஷச்ன் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி அரசியல்வாதிகள், சொல்லியிருந்தாலும் மக்களை பொறுத்தவரை பெரிதாய்  அவர்களின் குற்றசாட்டுகள் எடுபடவில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாமல் தற்போதைய ரிசெஷன் நேரத்தில் மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என்கிற மக்களின் எண்ணமும் காரணமாய் இருக்கலாம்.

இதே நிலைதான் தமிழகத்திலும்.  திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்பு அலையோ, அல்லது குற்றச்சாட்டோ இல்லை என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும். பவர்கட், விலைவாசி, குடும்ப அரசியல் என்று வழக்கமான குற்றசாட்டுகளே இருந்த்து.  குடும்ப அரசியலை முன்வைத்து இங்கேயிருக்கும் முண்ணனி அரசியல் தலைவர்கள் யாருக்கும் பேச தகுதியில்லை ஜெயலலிதா உள்பட. ஏனென்றால் எல்லோருடய வாரிசுகளும் ஏதோ ஒரு வகையில் அரசியலில் அவர்களின் வாரிசாக இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். . பவர்கட் மேட்டர் நிச்சயம் குறை சொல்லபட வேண்டிய மேட்டர்தான்.  கோவை திருப்பூர் போன்ற ஏரியாக்களில் திமுகவின் வெற்றிக்கு எதிராய் இந்த பிரச்சனை  ஒர்க் ஆனது  என்னவோ நிஜம் தான்.

ஈழதமிழர்களை முன்வைத்து கடைசி கால பிரசாரங்கள் திமுகவை பின்னடைய வைக்கும் என்று நினைத்தது எதிர்கட்சிகள்,  திமுக தலைவரும் அதற்கு ஏற்றார் போல் உண்ணாவிரதம் இருந்தது பெரும் காமெடியாய் போனது. ஆனால் அதையெல்லாம் மீறி ஜெயலலிதா தனி ஈழம் அமைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்டது மிகப் பெரும் காமெடியாய் போனதால் கலைஞரின் காமெடி சப்பையாகி போய்விட்டது. ஈழ தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தேர்தலில் எடுபடாது என்பது  பற்றி என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன்.  உள்ளூர் தமிழர்களின் பிரச்சனையே பெரும் பிரச்சனையாய் இருக்கும் போது ஈழ தமிழர்கள் பிரச்சனையை முன் வைத்து ஓட்டு அரசியல் எடுபடாது என்பது உண்மையாகிவிட்டது. இதை சொன்னதற்காக தமிழின துரோகியாய் கூட என்னை நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஈழதமிழருக்காக உருகும் கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்..

அதிமுக, பமகவின் தோல்விக்கு மிகப் பெரிய ஸ்பாய்லர் விஜயகாந்த், போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும், மூன்றாவது இடத்தில் இருக்கும் அவரின் கட்சி முக்கிய பங்கு வகுத்தது என்றால் அது மிகையாகாது. இப்படியே இவர் மெயிண்டெயின் செய்தால் நிச்சயமாய் 2016 முதலமைச்சர் ஆக் வாய்ப்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.

இந்த தேர்தல் முடிவுகளில் திமுகவின் வெற்றியை விட சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட்.  இந்த முடிவு நிச்சயமாய்  அவர்கள் செய்யும் அரசியல் தில்லாலங்கடிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது. மம்மி எலக்‌ஷன் முடிந்ததும் எட்டி ஒதைத்தாலும், சகோதரி உதைத்த இடத்தை தடவி விட்டு கொண்டு, இருந்தாக வேண்டும் இல்லைன்னா பமக என்றொரு கட்சி காணாமல் போய்விடக்கூடிய  வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு சந்தோஷ விஷயம், தங்கபாலு,  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தோல்வி.. சிதம்பரம் ஜஸ்ட் மிஸ்.

இந்த தேர்தல் முடிவுகள் பற்றி பலர் பல கணிப்புகளை கணித்திருந்தாலும், சரியாய் கணித்தவர் எனக்கு தெரிந்து நம் பதிவர்களில் லக்கியும், அப்துல்லாவும் தான். என்னுடய் கணிப்பு 20 சீட்டுகள் என்றிருந்த நேரத்தில் லக்கி 25 மேல் என்றும், அப்துல்லா அரித்மெடிக்கலாய் 32 சீட்டுகள், கடைசி நேர எமோஷனல் முடிவில் ஏதேனும் சிறிய மாற்றம் என்றால் 29 என்றார். லக்கி, அப்துல்லாவின் கணிப்பு  ஆல்மோஸ்ட் ரீச். இருவருக்கும் வாழ்த்துக்கள்

டிஸ்கி

பமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே  பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை  இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து  ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு  பமகவுக்கு  எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

ஹி.. ஹி.. ஹி….





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

60 comments:

நட்புடன் ஜமால் said...

மீண்டும் தோற்றது

ஜன(மும்)நாயகம்.

(யார் ஜெயித்தாலும் இதே நிலை தான்)

kalil said...

me the first

Vidhya Chandrasekaran said...

நல்ல அலசல். விஜயகாந்த் கட்சி ஒட்டுகளை ஸ்ப்ளிட் செய்திருக்கிறார்கள். இன்றைய தினகரன் நாளிதழில் வெளியாகிருக்கும் தகவலைப் பாருங்கள். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இந்த முறை தமிழகத்தில் பதிவான 5% எக்ஸ்ட்ரா வோட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளியிருக்கிறார். People need a change என்பதற்கு ஒரளவேனும் ப்ரூஃப்.

அக்னி பார்வை said...

டிஸ்கி அக்மார்க் கேபிள் டச், சரி என்ன சர்வம் புட்டுக்கிச்சாமே

உடன்பிறப்பு said...

//பமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ//

பா.ம.க.வின் மதுவிலக்கு தமிழ்நாட்டுக்குள் மட்டும் தான் புதுவையில் அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் தெரியுமா

யூர்கன் க்ருகியர் said...

தி மு க விற்கும் ..காங்கிரஸ் க்கும் திறமையான ஊழலற்ற எதிர் கட்சி இல்லாததே இந்த கொடுமைக்கு காரணம். :((

யூர்கன் க்ருகியர் said...

பூமி வாய பொளக்க போறா ...எல்லாரும் உள்ள போக போறீங்க......

அப்படின்னு சொன்னவங்க

காங்கிரஸ் மறுபடியும் வந்துட்டாங்க....எல்லாம் சாக போறீங்க

இப்படி சொல்றாங்க ....

ALIF AHAMED said...

இவர் மெயிண்டெயின் செய்தால் நிச்சயமாய் 2016 முதலமைச்சர் ஆக் வாய்ப்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.//


:))

:))))

கார்க்கிபவா said...

// People need a change என்பதற்கு ஒரளவேனும் ப்ரூஃப்.//

அது மட்டுமில்லாமல் அந்த மாற்றமும் எங்கள் கேப்டன் தான் என்றும் தெரிகிறது..

தமில் வால்க..

கேப்டன் வால்க

Sanjai Gandhi said...

தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மிக சந்தோஷமான முடிவுகள். மிந்தடையும் கொங்கு பேரவையும் இல்லாமல் இருந்தால் இன்னும் 5 தொகுதிகள் கிடைத்திருக்கும். அப்துல்லா சொன்னது அவைகளையும் சேர்த்த 32 தான்.

இன்று பங்கு சந்தை ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிக்கிறது. மும்பை சந்தை 1300 புள்ளிகளுக்கும் மெல் சென்றுவிட்டது. தேசிய சந்தை 500 புள்ள்களுக்கு மேல். இனி எல்லாம் சுகமே. :))

ஜெய் ஹோ.

எம்.எம்.அப்துல்லா said...

ஆமாம் மாப்ள.அதையும் சேர்த்துதான் 32 சொன்னேன். நீ சொல்லும் 5 கணக்கு என்ன? சற்று விளக்கேன்.

Sanjai Gandhi said...

http://thinkcongress.blogspot.com/2009/05/blog-post_17.html

இதுல பாருங்க மாமா..

ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கரூர். இவை ஐந்தும் நம்ம கூட்டணி ஜெயிக்க வேண்டியது. அங்கு தோற்றதற்கு காரணம் மின் தடை மற்றும் கொங்கு பேரவை பிரித்த ஓட்டுகள்.

http://thinkcongress.blogspot.com/2009/05/blog-post_18.html

இதுல இருக்கிற பொம்மையை பாருங்க. நூலிழையில் தவற விட்டிருக்கோம். :(

முரளிகண்ணன் said...

super disclaimer

லக்கிலுக் said...

திமுககாரன் கருப்பு சிவப்பு துண்டு போட்டு நடமாட ஆரம்பித்ததே கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின் தான்.

எலிக்கறி சாப்பிட்டவனை சோறு பொங்கிச் சாப்பிட வைத்தார் கலைஞர். தமிழன் நன்றி விசுவாசம் மிகுந்தவன்.

நர்சிம் said...

நல்ல அலசல் தல. டிஸ்கியும் சேத்துத்தான்.

நர்சிம் said...

ம்.

தீப்பெட்டி said...

நல்லா தெளிவா சொல்லியிருக்கீங்க பாஸ்..

Anonymous said...

கலைஞர் தோற்றிருந்தால் இங்குள்ள தமிழனும் அகதியாக வேறெங்காவது செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது வ்லைப்பதிவர்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுக் கொண்டிருப்பார்கள்

Anonymous said...

இருக்கறதுலையே டிஸ்கி தான் சூப்பர்...

ஷண்முகப்ரியன் said...

டிஸ்கிக்காக உங்களுக்கு எனது ஸ்பெஷல் ஓட்டு, ஷங்கர்.
தேர்தல் கணிப்பைப் பொறுத்தவரையில் வண்ணத்துப் பூச்சியாரின் கணிப்பை அவரது ‘நந்தவனம்’ ப்ளாக்கில் படித்துப் பார்த்து மிரண்டு போனேன்.நட்சத்திர வேட்பாளர்களைப் பற்றிய அவரது கணிப்பு ஒன்று கூட மிஸ் ஆகவில்லை.

ravichandran said...

40 members online///

;):):)

Ashok D said...

அரசியல், சினிமா, கதைகள் என்று கலந்து கட்டிஅடிக்கிறீங்க. தலைவரின் அரை நாள் விரதம் கூட காமடியில்ல.ஜெயா ‘தனி ஈழம் அமைப்போம்’ என்றதுதான் காமடியே. மொத்ததில் ஆகச் சிறந்த ஆய்வு(டிஸ்கி உட்பட) தேர்தல் முடிவுகளை ஒட்டி.
அப்துல்லா, லக்கி எதிர்காலத்தில் சிறந்த அரசியல் விமர்சகர்களாக வரலாம்.(CNN-IBN, NDTV...)

malar said...

நல்ல அலசல்!

இந்த வெற்றியை காங்கரஸ் திமுகாவே எதிர் பார்க்காதது .

butterfly Surya said...

மலர், இந்த வெற்றியை திமுக இன்னும் அதிகமாக எதிர்பார்த்தது. அதாவது 30 சீட் கிடைக்கும் என்று.

என் தேர்தல் கணிப்புகள் இந்த பதிவை பார்க்கவும்.

தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

Anonymous said...

//குடும்ப அரசியலை முன்வைத்து இங்கேயிருக்கும் முண்ணனி அரசியல் தலைவர்கள் யாருக்கும் பேச தகுதியில்லை ஜெயலலிதா உள்பட./

vikoo??


Dr.Sintok

Shabeer said...

சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட். இந்த முடிவு நிச்சயமாய் அவர்கள் செய்யும் அரசியல் தில்லாலங்கடிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது. மம்மி எலக்‌ஷன் முடிந்ததும் எட்டி ஒதைத்தாலும், சகோதரி உதைத்த இடத்தை தடவி விட்டு கொண்டு, இருந்தாக வேண்டும் இல்லைன்னா பமக என்றொரு கட்சி காணாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
Doctor? Dog Turrruuu.

Ashok D said...

வண்ணத்து பூச்சியார் கணிப்ப பாத்துட்டு பேஜார் ஆயிட்டேன் தலைவரே.
இனி ’சிறந்த தேர்தல் கணிப்பாளர்’ பட்டத்தை அவருக்கு கொடுக்கலாம்.

கலையரசன் said...

//கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள்//

ண்ணே..நல்லவேழ, பமக வறழல...

(நா சத்தியமா குச்சிட்டு எழுதலேணே)

வால்பையன் said...

மாப்பு வச்சிட்டாங்களே ஆப்பு!

அது ஒரு கனாக் காலம் said...

தி.மு.க ஜெயிப்பதற்கு முக்கிய காரணம், விஜயகாந்த் ...நிறய பேர் முன்பே சொன்னது போல், கொடுத்த வேலையை கச்சிதமா முடிச்சிருகார் ( ஓட்டை பிரித்து )- அதற்கான ஊதியத்தையும் வாங்கியாச்சு.

அதை விட முக்கிய காரணம், ஜெயலலிதாவின் போக்கு, கூட்டணி தலைவர்களை எல்லாம் பார்த்தாரா என்று கூட சந்தேகம், மக்கள் கூட வந்து, அவர்களின் குறைகளை கேட்டு, சில பேருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து... நிறைய போட்டோ ஆப்ஸ் ஏற்படித்திக்கொண்டு, ...இப்படி நிறைய குறை பாடுகள் அம்மாதிமுக வில.

நீங்கள் சொனதும் சரி தான், ஆட்சியில் பெரிய குறை இல்லை, மின்-வெட்டை தவிர்த்து.

எட்வின் said...

நல்லா சொல்லியிருக்கீங்க...

அப்துல்மாலிக் said...

நல்ல அலசல் ரிப்போர்ட்

விஜயகாந்தின் காய் நகர்த்தல் பிரமாதம், நிறைய இடங்களின் பாதிப்புக்கு இதுவும் ஒரு காரனம்

மக்கள் ரெண்டு கட்சி தவிர்த்து மூன்றாவதை எதிர்ப்பார்க்கிரார்கள்

சுந்தர் said...

// People need a change என்பதற்கு ஒரளவேனும் ப்ரூஃப்.//
விஜயகாந்துக்கு விழுற ஓட்டு, அவரு தனியா நின்ன மட்டும்தான் கிடைக்கும், கூட்டணி அதுவும் , திமுக , அதிமுக வோட வச்சா ஓட்டு வங்கி அம்பேல் ஆகும்.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல அலசல். நானும் என் லெவலுக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன் தலைவா.. பாருங்க

KATHIR = RAY said...

electronic machine la program panni vaichttu aalung katchi easy jeyklam + naveen chawla support. example Sivagangai result.

DMK kootanila avanga manasatchia thottu solla sollunga nejama jeyachangalannu. makkal potta vote emathittanga. kadavul pathutu irukkar nichayam ithukku avanga vilai kodukka vendi irukkum

Thamira said...

இந்த தேர்தல் முடிவுகளில் திமுகவின் வெற்றியை விட சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட். //

சர்வ நிச்சயமாக.! எனக்கும் இதுதான் உச்ச பட்ச மகிழ்ச்சி.!

அத்திரி said...

தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் கேபிள் வாழ்க
டிஸ்கி ஹிஹிஹி-

மணிஜி said...

ஆற்காட்டார்???
வீரபாண்டியார்????
லக்கிலுக்கார்?????
அண்ணன் கேபிளார்???????????????????????????????????????????????????????

ramalingam said...

ஸ்பாய்லர்
கேப்டன்
அடுத்த தேர்தலில்
திமுகவைக்
கொதிக்க வைக்கும்
பாய்லர்!

Prabhu said...

ஏதோ குதிரை பேரம் நடக்காத வரைக்கும் சந்தோஷம் தான்.

Cable சங்கர் said...

நன்றி ஜமால், கலீல். உங்களுடய வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

/இந்த முறை தமிழகத்தில் பதிவான 5% எக்ஸ்ட்ரா வோட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளியிருக்கிறார். People need a change என்பதற்கு ஒரளவேனும் ப்ரூஃப்//

ஆமாம் வித்யா மக்கள் மாற்றம் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தான் தெரிகிறது.

Cable சங்கர் said...

//டிஸ்கி அக்மார்க் கேபிள் டச், சரி என்ன சர்வம் புட்டுக்கிச்சாமே

//

ஹி..ஹி.. ஆமாம் அக்னி.. சர்வம்- கர்மம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்.

Cable சங்கர் said...

//பா.ம.க.வின் மதுவிலக்கு தமிழ்நாட்டுக்குள் மட்டும் தான் புதுவையில் அவர்கள் அடக்கி வாசிக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் தெரியுமா//

பாண்டிக்கு வருமானம் வருவதே அதை வைத்துதான் அதில் கை வைத்தால் அவ்வளவுதான்.. அதனால் தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கார்க்கி, மின்னுதுமின்னல், ஜூர்கேன்

Cable சங்கர் said...

//மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html
//

அப்படியே ஆடி போய்ட்டேன் தலைவரே.. மகா துல்லியமான கணிப்பு.. கலக்கிட்டீங்க..

Cable சங்கர் said...

//இன்று பங்கு சந்தை ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டிக்கிறது. மும்பை சந்தை 1300 புள்ளிகளுக்கும் மெல் சென்றுவிட்டது. தேசிய சந்தை 500 புள்ள்களுக்கு மேல். இனி எல்லாம் சுகமே. :))

ஜெய் ஹோ.//

ஆமாம் இந்த நிலைப்பாட்டுக்காகத்தான் இந்தியா முழுவதும் ஒரு நிலையான ஆட்சியை தருவதற்காக காங்கிரஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்செய்காந்தி, அப்துல்லாண்ணே.. முரளிகண்ணன். அவர்களுக்கு

Cable சங்கர் said...

//திமுககாரன் கருப்பு சிவப்பு துண்டு போட்டு நடமாட ஆரம்பித்ததே கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின் தான்.

எலிக்கறி சாப்பிட்டவனை சோறு பொங்கிச் சாப்பிட வைத்தார் கலைஞர். தமிழன் நன்றி விசுவாசம் மிகுந்தவன்//
:) ஆமாம் லக்கி லுக்

Cable சங்கர் said...

//நல்ல அலசல் தல. டிஸ்கியும் சேத்துத்தான்.

//

நன்றி நர்சிம்.. அதுசரி அடுத்த பின்னூட்டத்தில் நீங்கள் போட்ட ம் க்கு என்ன அர்த்தம்?

Cable சங்கர் said...

நன்றி.. ஷண்முகப்ரியன் சார், தீப்பெட்டி, மயில் அனானி,

Cable சங்கர் said...

நன்றி அசோக், வண்ணத்துபூச்சியார் ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//vikoo??


Dr.Sintok//

வைகோவையெல்லாம் இப்ப அரசியல்வாதியா சேர்த்துக்கிறது இல்ல.. சிண்டாக். பாவம் அவரு..

Cable சங்கர் said...

நன்றி ஷபீர், வால்பையன், கலையரசன், அதுஒரு கனாகாலம், எட்வின், அபுஅப்சர், தேனிசுந்தர்., ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

//electronic machine la program panni vaichttu aalung katchi easy jeyklam + naveen chawla support. example Sivagangai result.

DMK kootanila avanga manasatchia thottu solla sollunga nejama jeyachangalannu. makkal potta vote emathittanga. kadavul pathutu irukkar nichayam ithukku avanga vilai kodukka vendi irukkum//

தலைவரே.. உங்க தலைவி ஜெ மாதிரியே பேசறீங்களே.. இந்தியாவிலேயே எலக்ட்ரானிக் ஓட்டிங்க்ல தில்லுமுல்லுன்னு சொல்ற ஒரே தலைவி.. நம்ம ஜெ தான். வேற எந்த கட்சி தலைவரும் இப்படி சொன்னது இல்லை..கதிர்

Cable சங்கர் said...

//சர்வ நிச்சயமாக.! எனக்கும் இதுதான் உச்ச பட்ச மகிழ்ச்சி.!//
இதை கொண்டாடணுமே ஆதி.. ஏற்கனவே ஒண்ணு பாக்கி இருக்கு.???

Cable சங்கர் said...

///தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் கேபிள் வாழ்க
டிஸ்கி ஹிஹிஹி//

ஆமாம் நான் கொ.ப.சேதான் என்னங்கிறீங்க இப்ப..?

Cable சங்கர் said...

//ஆற்காட்டார்???
வீரபாண்டியார்????
லக்கிலுக்கார்?????
அண்ணன் கேபிளார்???????????????????????????????????????????????????????//

இவ்வளவு கொஸ்டீன் மார்க்குக்கு என்ன அர்த்தம்.. நான் சின்ன பையன் ஒண்ணும் பிரியலையே தண்டோரா..?

Cable சங்கர் said...

//ஸ்பாய்லர்
கேப்டன்
அடுத்த தேர்தலில்
திமுகவைக்
கொதிக்க வைக்கும்
பாய்லர்!

10:08 PM

//

ஆகா. கவித..கவித.. அருமை ராமலிங்கம்

Cable சங்கர் said...

//ஏதோ குதிரை பேரம் நடக்காத வரைக்கும் சந்தோஷம் தான்.

7:54 AM

//

அரசியல் இதெல்லாம் சகஜமப்பா..