Thottal Thodarum

Jun 27, 2009

வால்மீகி - திரைவிமர்சனம்

vaalmiki-vikatan-talkies-movies-tamil-cinema-ads

திருடனாய் இருந்த வால்மீகி பின்னர் திருந்தி இராமாயணம் எழுதினார் அந்த வால்மீகி.. சென்னையின் பிக்பாக்கெட்டான பாண்டி தன் காதலியின் நினைவாய் தன் வாழ்கையை மாற்றி எழுதிக் கொள்கிறான் இந்த வால்மீகி.

வர வர தமிழ் சினிமாவில் படித்த பெண்கள் எல்லாம், ரவுடி, பிக்பாக்கெட், விபசாரம் செய்பவன்,  மொள்ளமாறி, முடிச்சவுக்கியைதான் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தவறில்லை ஆனால் அவர்கள் எதனால் காதல் வயப்படுகிறார்கள் என்று காட்சிப்படுத்த தவறுகிறார்கள்.  அந்த தவறை தன் மோசமான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் சொதப்பி எடுத்திருக்கிறார்கள்.
vikadan-talkies-vaalmiki

பாண்டி என்பவன் சென்னையின் ப்ரொபஷனல் பிக்பாக்கெட், ஹீரோயின் வந்தனா ஒரு பணக்கார ஷோஷியல் கான்ஷியஸ் உள்ள, குழந்தைகளை காதலிக்கும், ப்ளே ஸ்கூல் நடத்தும் பெண், இப்படி ஒரு கேரக்டரை வைத்துவிட்டு, ஆங்காங்கே பார்க்கும், பிச்சைக்காரன், அனாதை சிறுவர்களை பாராட்டி சீராட்டினால், நடு ரோடில் பிக்பாக்கெட் அடிக்கும் பாண்டியை காதலிப்பதற்கு  காரணம் கேட்க முடியாதில்லையா..? படத்தின் இன்னொரு கதாநாயகியாக வரும் பூக்கடை கனகாவுக்கு பாண்டியின் மேல் வரும் காதலுக்கான அழுத்தமான காரண காட்சிகள்  கூட, கதாநாயகி வந்தனா பாண்டியின் மேல் காதல் கொள்ள வைத்திருக்கும்  காட்சிகளில் இல்லை. சும்மா குளத்திலிருந்து காப்பாற்றினாலே அவன் நல்லவனாகிவிடுவானா.?  அவனின் எந்த குணங்களை வைத்து  அவன் நல்லவன் என்று முடிவுக்கு வருகிறாள் வந்தனா. இம்மாதிரியான படத்துக்கு மிக அழுத்தமான லவ் டிராக் வேண்டும், அப்போதுதான் இருவரின் பிரச்சனைகளின் வலி பார்க்கும் பார்வையாளனுக்கு புரியும். அவனும் உருக ஆரம்பிப்பான்.
Vaalmiki - Tamil Movie Gallery14

அதே போல் பாண்டியினால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை ஒரு லோக்கல் விபசாரியாய் பார்த்தவுடன் பாண்டி மனசு மாறுவது எல்லாம் டிராமா.  சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வந்து ஏமாந்தவள், ஸ்லம் விபசாரியாய் மாறும் அந்த நிகழ்வுகள் நம்மை எவ்வளவு பாதிக்க வேண்டும்?  வந்தனாவின் பேரை பாண்டியின்  மார்பில் பச்சை குத்தியிருப்பதை பார்த்து தன் காதல் தோல்வியை உணரும் கனகாவுக்கு காட்சி வைத்த இயக்குனர்,  அந்த பெயரை  படத்தின் க்ளைமாக்ஸில் வந்தனா  குறிப்பிட்டு இது தான் நீ கண்டிப்பா மாறுவேன்னு நம்பிக்கை கொடுத்திச்சு என்று சொல்கிறார். இந்த காட்சிக்கு முன்னால் அவன் தன்  பெயரை பச்சை குத்தியிருப்ப்பதை எப்போது பார்த்தாள்?. அவள் பார்க்கும் காட்சி வைத்திருந்தால்,வந்தனா  பாண்டியின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு இன்னும் அழுத்தம் கூடியிருக்காதா.? பாண்டியை எதுக்காக போலீஸ் அடையாள அணிவகுப்பு செய்கிறார்கள்? அதுவும் வந்தனாவுக்காக.?  போலீஸ் சொல்வது பீரோ புல்லிங் விஷயத்துக்காக என்று, அப்படி ஒரு விஷயமே வந்தனாவின் வீட்டில் நடை பெறவில்லையே.?  இண்டர்வெல் விடவேண்டுமே என்று இப்படி ஒரு தடாலடி காட்சியா.?  ப்ளாஷ் பேக்கில் வ்ந்தனாவின் செயினை திருடிய திருடன் பல வருடஙக்ள் கழித்து அதை விற்கும் போது மாட்டிக் கொண்டு பாண்டி நடத்தும் வால்மீகி இல்லத்துக்கு வருவது எல்லாம் லாஜிக் இடி என்றால் அது மிகையாகாது.
Valmiki stills (4)

ஒரு காலத்தில் ப்ளஸாக இருந்த இளையராஜா இந்த படத்துக்கும் மிகப்பெரிய மைனஸ் ஆகிவிட்டார். அவர் பாட்டுக்கு தன் வேலையுண்டு, அவர் ரூமுண்டு என்று இருந்தவரை கூப்பிட்டால் இப்படிதான் நடக்கும். சரி பாடல்களில் தான் அரத பழய வாசனை என்றர்ல். பிண்ணனி இசை.. ம்ஹூம்.

ஆனால் அதற்கு இளையராஜாவை குறை சொல்ல கூடாது. பிண்ணனி இசை அமைக்க அதற்கான புட்டேஜூகளை கொடுக்க வேண்டியது இயக்குனரின் கிரியேட்டிவிட்டியை சார்ந்தது. அது இப்படத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல இடங்களில் உணர்வுகளை வெளிபடுத்த வேண்டிய காட்சிகளையெல்லாம் விஷூவலாக எக்ஸ்டெண்ட் செய்யாமல், கட் டூ கட் போயிருப்பது மேக்கிங் குறைகள்.

ஒளிப்பதிவாளர் அழகப்பன் நல்ல டெக்னீஷியன் தான்  ஆனால் எண்டஹ் ஒரு நல்ல டெக்னீஷியன்களுக்கும் நல்ல புரிதல் உள்ள ஆள் இயங்க தேவை. அந்த குறை படம் பூராவும் தெரிகிறது. இப்படி குறையாய் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். முடியல.

தப்பான இடங்கலில் பாடல்களின் ப்ளேஸ்மெண்ட், வீக்கான டயலாக், விஷூவல் மேக்கிங்  என்று  பல சொதப்பல்கள். மிக அழகாய் சொல்ல வேண்டிய ஒரு காதல் கதையை மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் அனந்த நாராயணன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பாண்டியாய் வரும் அகிலுக்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. உருவம் ஒத்துழைத்ததனால் பெரிய குறைகள் தெரியவில்லை. வந்தனாவக வரும் மீரா நந்தன் அழகாய் இருக்கிறார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னொரு கதாநாயகி.. நன்றாக நடிக்கிறார். அஜயன் பாலா இன்னும் இம்மாதிரியான கேரடர்களில் தொடர்ந்து நடித்தால் மிக விரைவில் லோக்கல் ரவுடி கேங் ஆளாகிவிடுவார். உஙக் ரேஞ்சே வேற தலைவா. சீக்கிரம் படம் பண்ணுங்க.

பாராட்ட வார்தைகளேயில்லையா என்றால் ம்..ம்.. அது கூட இருக்கிறது. முக்கியமாய் வந்தனாவின் ஸ்கூல் ஆனியுவல் டே அன்று மழலைகள் செய்யும் கண்ணபர் நாடக கூத்து இருக்கிறதே. கொள்ளை அழகு. அதே போல் தன்னை ஆணாய் வரித்து கொண்டு வாழும் பெண் திருடி, வந்தனாவின் பையை திருடிக் கொண்டு போன அடுத்த சில மணி நேரங்களில் தன் நெட்வொர்க் மூலம் கண்டுபிடித்து கொடுப்பது புதுசில்லை என்றாலும் இண்ட்ரஸ்டிங். க்ளைமாக்ஸ் வரும்போதாவது படம் சுறுசுறுப்பாவது என்று மிக சில காட்சிகளே இவ்வளவு புலம்பல்களும் விகடனிலிருந்து இன்னொரு சொதப்பல் வந்திருச்சேன்னு மனசுக்குள்ள வர்ற காண்டுலதான். பிரிஞ்சிக்க.. விகடன் தாத்தா..

வால்மீகி -  என்னத்தை சொல்றது.. ம்ஹூம்….?????

டிஸ்கி:

விகடனில் குறைந்தது இதுவரை 300 உதவி இயக்குனர்களிடமாவது கதை கேட்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதிலும் இவர்கள் செலக்ட் செய்த கதைகளை குறைந்தது ஒரு வருடத்துக்கு, ஆளாளுக்கு மாற்றி, மாற்றி, கேட்டு,  கரெக்‌ஷன் செய்து செப்பனிட்டு சுமார் பணிரெண்டு முதல் பதினேழு முறையாவது பல பேர்களிடம் கதை சொல்லி ஓகே ஆன பிறகும் கதை கேட்டுதான் படமெடுக்கிறார்கள். அப்படி பல முறை கேட்டு ஓகே செய்யப்பட்ட கதைதான் இப்படம்.  பதினேழு பேர் கேட்டும் இவ்வள்வு ஓட்டைகள் தெரியவில்லை என்றால் என்னத்தை கதை கேட்டு, .. அடப் போங்கப்பா.. ஒரு படத்தின் ஹிட், தோல்வி முன்னமே தெரிந்து விட்டால் எல்லோருமே ஹிட் படம் தான் கொடுப்பார்கள்.  இந்த ரிஸ்க் தான் இந்த துறையின் அழகே.  ஆனா அந்த ரிஸ்கையே ரஸ்கு சாப்புடுற மாதிரி விகடனில் இருந்த இம்மாதிரியான் படம் வருவதை ஏற்க முடியவில்லை. இந்த கதையை முதலில் செய்வதாய் இருந்தவர் லிங்குசாமி

சமீபத்தில் இவர்களிடமிருந்து செலக்ட் ஆகாமல் வெளியே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்க பட்டு ஹிட்டான படம் பசங்க்..  ப்ளாப் படம் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். இன்னொரு படம் இப்போது தயாரிப்பிலிருக்கிறது..

ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 26, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்

nadodi

காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள்? இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா..? அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் மாஜி எம்.பியின் மகன் சரவணன், அவன் ஒரு பணக்கார ஏரியா பெரிய ஆளான ஒருவரின் பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல் தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க் எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட நண்பர்களின் கதி..? வலிக்க, வலிக்க, உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.

abinaya

ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக ஆரம்பித்தாலும், எல்லா கேரக்டர்களை அறிமுகபடுத்தியதும் படம் பரபரவென சூடு கிளப்புகிறது. காதல் ஜோடிகளூக்கு திருமணம் செய்து வைக்க அலையும் காட்சியில் திரை தகிக்கிறது. அட இண்டர்வெல்லிலேயே கதை முடிந்த மாதிரி இருக்கிறதே, இனிமேல் என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்க வைத்ததை சரியாய் காட்சி படுத்தி நெத்தி அடி அடித்திருக்கிறார்கள்.

சசி தனக்காக நண்பர்கள் இருவரின் உடல் பாதிப்பு அடைந்ததி நினைத்து குமுறும் காட்சியில் மிக அருமையாய் நடித்திருக்கிறார். ரொம்பவும் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறார்,  மாமாவிடம் அவ்வப்போது “உஙக் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்வது, மாமன் மகளை பிரியும் போதும் சொல்வது டைரக்டர் பஞ்ச். படத்தில் மிளிர்பவர் பரணி, முதல் பாதியில் கலகலப்புக்கு பயன்படுபவர், பின் பாதியில் கோபம், துக்கம், ஆவேசம் என்று பின்னுகிறார்.  சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு.  சோ…ஸ்வீவீட். விஜய்க்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண வழியில்லை. அவரின் காதலியாய் வரும் சசியின் தங்கை கேரக்டர், அப்பா இயக்குனர் ராஜா, நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ,  வில்லன் ஜெயபிரகாஷின் முதல் மாப்பிள்ளை, உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளும் கஞ்சா கருப்பு, ஆ.. ஊவென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று, பயமுறுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஹீரோயின் அப்பா,  என்று பல புது முகங்களும், பழைய முகங்களூம் தஙக்ள் பங்கை  நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. அதிலும்  அந்த திருமண சேசிங் காட்சி சூப்பர்ப் கதிர். அதே போல் எடிட்டிங்கும், சுந்தர் சி பாபுவின் இசையில் வரும் சம்போ.. சம்போ பாட்லும் நம்மை உசுப்பேற்றுகிறது.

நண்பனின் காதலுக்கும், தன் தங்கையின் காதலுக்கும், அவவளவு போராடும் சசி ஏன் தன் காதலுக்கு அவ்வளவு போராடவில்லை.? இரண்டாவது பாதியில் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், தங்களை பற்றி, தங்கள் குடும்பத்தை பற்றி கவலை படாமல் நண்பர்களின் காதலுக்கு துணை போகும் இளைஞர்களுக்கு  சரியான உண்மைகளை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் பரபரக்கும் திரைக்கதையும், பின் பகுதியில் அந்த பரபரப்புகு ஈடான மிதமான நிதர்சன நிகழ்வுகளால் சமுத்திரகனி தன் மூன்றாவது  முயற்சியில் நம் மனதில் நிற்கிறார்.

நாடோடிகள் – ராஜபாட்டையில்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

முத்திரை - திரைவிமர்சனம்

Muthirai

டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ஸ்ரீநாத, யுவன், என்று கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி.  கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதிக்காமல் போய்விட்டார்கள்.

இரண்டு ஸ்மால் டைம் திருடர்கள், ஒருவன் ஹைடெக், இன்னொருவன் லோக்கல் பிக்பாக்கட், இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.  ஹைடெக் லஷ்மிராயையும், நிதின் மஞ்சரியையும், காதலிக்கிறார்கள். அவர்களின் ப்ளாட்டில் வசிக்கும் சேத்தனிடம் ஒரு அரசியல் கொலை ரகசியம்  மாட்ட அவனிடமிருக்கும் ரகசியம் அடங்கிய  லேப்டாப் இவர்களிடம் மாட்டுகிறது. ஒரு பக்கம், போலீஸ், இவர்களை துரத்த, மறுபக்கம், வில்ல்ன் பார்ட்டிகள் துரத்த, என்று மாறி, மாறி ஓடுகிறார்கள். திடீரென திரும்பி நிற்கிறார்கள்.  அதற்கு அப்புறம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

4-281-10695

பரபரப்பாக சொல்ல வேண்டிய கதை. படு சொதப்பலாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் முதல் பாதியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள்,  என்று ஒரே உட்டாலக்கடி, இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள வைத்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் டூமச்சாய், ஏதோ முடிக்க வேண்டும் என்ற அவரசம் தெரிகிறது.

டேனியல் பாலாஜியை சட்டென்று ஹீரோவாக ஏற்று கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அவரது டயலாக் டெலிவரி இன்னும் வேட்டையாடு விளையாடுவை ஞாபகபடுத்துகிறது. நிதின் சத்யா கொஞம் இயல்பாய் இருக்கிறார். இடையிடையே ஒன்லைனர்களில் மிளிர்கிறார். லஷ்மிராய் ராக்கி சவந்துக்கு போட்டியாய் சும்மா பின்னி எடுக்கிறார். அவருக்கு வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள், தாலி செண்டிமெண்ட் எல்லாஒம் படு அமெச்சூர்.  மஞ்சரி தொலிப்ரேமா என்கிறா தெலுங்கு பட ஹீரோயினை ஞாபகபடுத்துகிறார். நடிக்கிறேன் என்று நம்மையும் படுத்துகிறார். நிதினை சிபிஐ ஆபிசர் என்று நம்புவது காமெடியாய் இருந்தாலும், ஒரு ராணுவ ஆபிசரின் பெண் இப்படி நம்புவது நம்பும்படியாய் இல்லை.
untitled-19-copy

இசை யுவன் சங்கர் ராஜாவாம். சொன்னாத்தான் தெரியுது. இந்த வருட்த்திய ஒர்ஸ்ட் ஆல்பம் ய்வனுக்கு இதுவாகத்தான் இருக்கும்.சலீமின் ஒளிப்பதிவு ஆங்காங்கே மிரளவும், ஆங்காங்கே திரளவும், காட்டியிருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீநாத், கதை, திரைக்கதை, கிரியேட்டிவ் டைரக்‌ஷன் செய்திருக்கும் அனீசின் சொதப்பல் திரைக்கதையால் இவர் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்சி அமைப்புகளிலாகட்டும், மேக்கிங்கில் ஆகட்டும் பழைய ஹிந்தி படஙக்ளை பார்க்கும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ராத்திரியோடு ராத்திரியாக வீட்டை விட்டு ஒடும் நால்வரும், அடுத்த அடுத்த காட்சிகளில் புது , புது காஸ்டியூமில் அலைவது, பொட்டை காட்டில் லாப்டாபிலிருந்து, இண்டெர்நெட் கனைக்ட் செய்வது, ஏதோ பக்கத்து பேட்டை வஸ்தாதை மிரட்டுவதுவ் போல் கமிஷனரை மிரட்டுவது எல்லாம் ஓவர். க்ளைமாக்ஸ் சீனில் காட்டில் ஒளிந்திருக்கும் ஹீரோக்கள், திடீரென ஸ்போர்ட்ஸ் காரில் வந்திற்ங்குவது,  ஹனீபா, லஷ்மிராய், டேனியல் பாலாஜி  டிராக் படு சொதப்பல். அனீசின் இடையூறு இல்லாதிருந்தால் நிச்சயம் ஸ்ரீநாத முத்திரை பதித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

முத்திரை மாத்திரை எடுத்து செல்லவும்.

Jun 25, 2009

வந்திட்டோமில்ல…

ஒரு வாரமாய் உங்களுக்கெல்லாம் ஜாலியாய் இருந்திருக்கும், என்னுடய தொல்லையில்லாமல். எப்போதும் நல்லதே நடந்திட்டிருந்தா போரடிக்கும், அதனால நான் திரும்ப வந்திட்டேன்.

Image0183

ஒரு திரைப்பட டிஸ்கஷனுக்காக என் நண்பர்கள் குழாமுடன் ஏதாவது வெளியூர் போகலாமென  முடிவெடுத்து, என் புரொடியூசரிடம் சொல்ல, அவர் கொடைக்கானலை சொன்னார் அடிக்கிற வெய்யிலுக்கு கொடைக்கானல் பேரை சொன்னாலே குளிருதுல்ல என்று குளீரடிக்க, கிளம்பினோம். புதன் இரவு. அற்புதமான பஸ் பயணம். போகிற வழியில், நர்சிம், முரளிகண்ணன், தண்டோரா, ரமேஷ் வைத்யா எலோரும் பேசினார்கள். அதிகாலை தேனியில் இறக்கி விட்டார்கள். அங்கே அருகே ஒரு ஓட்டலில் டபுள் ஏசி போட்ட ரூமில் போய் செட்டில் ஆனோம். காலையில் ஒரு ஒன்பது மணிக்கு ஒரு காரை அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். “இன்று ஒரு லொக்கேஷனை பார்க்க போகிறோம்.” நாளை தான் கொடைக்கானல் என்றார்.

Image0184

போகிற வழியில் செவ்வெளனி வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவை. இம்மாதிரியான சுவை இருபது ரூபாய் கொடுத்து சென்னையில் குடிக்கும் இளனியில் வந்ததில்லை. இளனி 5 ரூபாய். அந்த கடைக்காரர் அன்று தான் முதன் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு  இருபது இளனியுடன் அத்தனையும் காலி.

Image0185

சின்னமனூரிலிருந்து கொஞ்சம் தூரம் போனபிறகு ஒரு சின்ன ரோடு போனது. போகப் போக, பாதை கரடு முரடானது. வழியில் பாரஸ்ட் செக் போஸ்டில் அரசு பர்மீஷன் வாங்கியிருந்ததால், சுலபமாய் போக முடிந்தது. மேலே ஏற, ஏற, பாதை மோசமாகிக் கொண்டே போனது. மெல்ல், மெல்ல, தேனியின் வெய்யில் குறைந்து சிலுசிலுவென காற்றடிக்க, குலுங்கி, குழுன்கி மெதுவாய் முன்னேறியது வண்டி. இவ்வளவு கஷ்டப்ப்பட்டு மலையேறி என்னத்தை பார்க்க போறோம்னு மனசுள் ஓடிக் கொண்டிருந்த்து. போகிற வழியில் நடு காட்டில் ஒரு சின்ன ஆளில்லாத சர்ச்..  அழகாய் இருந்த்து.

Image0186

அரை மணி நேர பயணத்தில் வண்டி ஓர் இடத்தில் இற்ங்கி பார்ததவுடன்,  இயற்கை நமக்கு வழங்கியுள்ள அழகை வர்ணிக்க வார்ததைளே இல்லை. அந்த இடத்திற்கு வைத்திருந்த பேர் மிக சரியானது எனறே சொல்ல வேண்டும். “மேகமலை”  நிஜமாகவே மேகங்கள் மலையோடு கொஞ்சி விளையாடி கொண்டிருந்தது.  பல சமயங்களில் சில்லென்னு நம்மை  கடந்து சென்றது, சிலிர்ப்பூட்டியது.  அங்கே ஒரு அணையிருந்தது. ஆனால்  தண்ணீர் இல்லை. மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறது மேகமலை.

Image0187

அங்கே ஒரு அரசு கெஸ்ட் அவுஸ், ஒரு ஒயின் ஷாப், ஒரே ஒரு உனவகம்.”ண”வுகு பதிலாய் “ன”. போகும் போதே ஒரு இரண்டு கிலோ சிக்கன் வாங்கி போய் கொடுத்துவிட்டோமானால். ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் அற்புதமான லோக்கல் சாப்பாடு சிக்கனோடு. அந்த குளிரில் சூடாக.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. சும்மா அதிருமில்ல..

Image0188

அங்கிருந்து “தூவானம்” என்கிற் இடத்திற்கு போனோம்.  அதுவும் ஒரு அணைகட்டுதான். ஆனால் ஒரு பக்கம், சிவந்த மண்ணுடம் ஓடு தண்ணீரும், நடுவே பிரமிப்பான அணைகட்டும், அடுத்த பக்கம்  குறைந்த அளவு தண்ணீருடன் ஓடி தடாலென்று ஒரு பள்ளத்தாகிற்கு விழும் அருவியும், ஒரு கணம் முழு தண்ணீருடன் பார்த்தால் “அப்பொகலிப்டோ:” படத்தில் வரும் அருவியை ஞாபகபடுத்தியது.. மிகவும் ரிஸ்கான அந்த பாதையில் இறங்கி நடந்து, மெல்ல அந்த அருவி விழும் பாதாளத்தை பார்க்க, முயன்று, கிட்டே போக, காற்று என்னை மேலும் இழுக்க, போன் அடித்தது, கூட வந்த நண்பர் ஒருவர் “அண்ணே இன்னும் ரெண்டடி நகந்தீங்கண்ணா.. நீங்க கீழே போக வேண்டாம் காத்தே உங்களை இழுத்துக்கும். மரியாதையா வந்திருங்க. ஊருல அண்ணி புள்ளைங்களை திரும்ப பார்க்க வேணாமா? என்று கேட்டதும்தான் தெரிந்தது, நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருக்கிறேன். என்று. கர்சீப்பை கையிலிருந்து உருவிக் கொண்டு தானே சர்ரென்று  பாதாளத்திற்கு இழுத்து சென்றதை பார்த்த பின் நான் எஸ்கேப். தண்ணீர் விழும் காலத்தில்  தண்ணீர் விழுந்து, அப்போது கீழேயிருந்து எழும்பும் காற்றானது விழும் தண்ணீரை மேலே உந்தி தள்ள, கீழேயிருந்து மேல் நோக்கி வரும் தண்ணீர்  மழை போல் பொழியுமாம். அதனால் தன் இந்த இடத்திற்கு பேர் தூவானம். என்கிறார்கள் .சில இடங்களை பார்க்கும் போது வெளிநாடு என்று சொன்னால் நிச்சயமாய் நம்புவார்கள்.

Image0189 Image0190

பசுமையும், தனிமையும், இயற்கை அழகும், இன்னும் மக்களால் பொல்யூட் ஆகாத மேகமலை, தூவானம் இடங்களை பார்க்கும் போது சென்னையின் வெயிலிலிருந்து ஒரு அற்புதமான சுகானுபவத்துடன் ஆரம்பித்தது எங்கள் பயணம்.

Image0191 Image0192

Image0193 Image0194

Image0195 Image0196 Image0197 Image0200

Image0201 Image0202

  Image0198

 

மேலே சில படங்கள், அவ்வ்ளவு தெளிவில்லாமல் இருந்தால் கேமரா குற்றமில்லை, நல்ல கேமரா எடுத்து போகாத  என் குற்றம்தான். என்னுடய் மொபைல் கேமராவில் எடுக்கப்பட்டது. மேலும் பயணக் கட்டுரை தொடரும்…Image0199

 

Jun 17, 2009

ராகவன் -திரைவிமர்சனம்

ragavan_m

செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.

ragavan-stills14

சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ்.

ragavan-wallpaper05

ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை.  படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண்  மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான்? சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான்? அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான்? ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே? போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.

ragavan-wallpaper04

அவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின் இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.

ராகவன் -  எஸ்கேப்.

டிஸ்கி

பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே  கசமுசா..  இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.

Jun 14, 2009

ஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு

போன வாரம் வியாழன் அன்று ”ஹலோ ஜெயாடிவி” நிகழ்ச்சியில் நேரலையாகவும், மறு ஒளிபரப்பாகவும், நான் பங்கு பெற்ற நேயர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள்.  பல பதிவர்கள் நிகழ்ச்சியில் போன் செய்து கலந்து கொண்டார்கள், பல முயற்சி செய்து, முயற்சி செய்து நொந்து போனதாகவும், சொன்னார்கள். பார்த்தவர்கள்  பாராட்டினார்கள், பலர் வலையேற்ற சொன்னார்கள்.

வழக்கமாய் நான் பங்கு கொள்ளும் பல நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காகவே என்னுடய கணினியில் டிவி டியூனர் கார்ட் வைத்திருக்கிறேன். அந்த சனியன் பிடித்த கார்டு அன்னைக்கு பார்த்து மக்கர் செய்துவிட்டது. (அதானே வேணுங்கிற போது வேலை செய்யாதே.) அந்த கடைசி நேரத்தில், யாரிடம் சொல்லி ரிக்கார்ட் செய்ய என்று ஒன்றும் புரியவிலலை.  மாலை மறு ஒளிபரப்பு வந்த போது கோவை நண்பர் சஞ்செயிடம் சொல்ல, அவர் பதிவர், நண்பர் கும்கியிடம் சொல்லி ரிக்கார்ட் செய்வதாய் சொன்னார்.  அவர் இதற்காக அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து ,வீட்டுக்கு வந்து பதிவு செய்ய ஆரம்பிப்பதற்குள், பத்து நிமிட நிகழ்ச்சி போய்விட்டது. இருந்தாலும் பதிவு செய்து டிவிடியை அனுப்பினார். அந்த அன்பான நெஞ்சுக்கு மிக்க நன்றி.

இதற்குள் தமிழிசை என்றொரு நண்பர் முழு நிகழ்ச்சியையும் வலையேற்றி அதற்கான லிங்க எனக்கு அனுப்பினார். அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதோ அந்த உலக புகழ் நேரலை நிகழ்ச்சி.. ஹி.ஹீ..ஹி




முழுசா..பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நண்பர்களே..


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 13, 2009

மாசிலாமணி – திரை விமர்சனம்.

maasilamani

புதிதாய் வேறு படங்கள்  ஐ.சி.சி மேட்ச் காரணமாய் வெளியிடபடாமல் இருக்க, இந்த நேரத்தில், சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் வந்திருக்கும் வழக்கமான படம் தான் மாசிலாமணி.

ஹீரோ ஒரு லோகிளாஸ் காலனியில் இருப்பவன், காலேஜ் மாணவனாம், அந்த காலனியே அவனை பாட்ஷா ரேஞ்சுக்கு மதிக்கிறதாம் அவர்களின் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் அவன் சுனைனாவை கண்டதும் காதலிக்கிரான், அவளின் பார்வையில் இவன் செய்யும் விஷயங்கள் எல்லாம் ரவுடியாய் தெரிய வர,  அவனை வெறுக்கிறார் சுனைனா.. சுனைனாவை மணக்க, அவரின் வீட்டிற்கு மணி என்கிற பெயரில் சென்று அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருடைய அன்பையும் வென்று, சுனைனாவின் காதலை வெல்கிறான் மணி என்கிற மாசி என்கிற மாசிலாமணி.  இதற்கு நடுவில் ஒரு வில்லன் போலீஸ் ரூபத்தில் வர,  அவனிடம் முடிஞ்சா நான் மணியா, இல்ல மாசியா புருவ் பண்ணிக்கன்னு சவால் வேற, க்ளைமாக்ஸூல சுனைனாவுக்கு மணியும், மாசியும் ஒண்ணுதான் தெரிஞ்சிச்சா, அவங்க காதல் என்னாவாச்சுங்கிறதுதான் கதை.

masilamani-movie-photos-01

சொல்லும் போது அட பரவாயில்லையேன்னு நினைப்போம் ஆனா படம் முழுசா பாக்க முடியல . பல படங்களில் பார்த்த அரத பழசான சீன்கள், காமெடி பண்ணுகிறேன். நம்மை கிச்சு, கிச்சு, கூட மூட்டாத காட்சிகள் என்று நோகடிக்கிறார்கள்.

நகுல் நடிக்கிறேன் பேர்வழி என்று குஷ்டம் வந்தவன் போல் கையை வாயின் அருகில வைத்து கொண்டு அழும் காட்சிகள் கோரம்.  முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் என்பது கிலோ என்ன விலை என்று கேட்பார் போலிருக்கு. அதிலும் அவர் பேசும் தமிழ்.. என்ன கொடுமைடா சாமீ..

masilamani-movie-photos-09

சுனைனா.. ரொம்ப சொன்னைண்னா.. சப்பி போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். முன் பல் வேறு தனியா தெரியுதா..?  டாம் அண்ட் ஜெரி, ஜெர்ரி எலி ஞாபகம் வருது.  க்ளைமாக்ஸுல அவர் பேசுற நீண்ட வசன் காட்சியில் என்னா உணர்ச்சி, என்னா ஒரு ஆக்ஸன்..?

காமெடி என்கிற பெயரில் சந்தானம், அண்ட் கோ வழக்கம் போல் சந்தானம் பேசிக் கொண்டே இருக்கிறார். ப்ரேமில் அவர் இல்லாவிட்டாலும் டப்பிங்கில் வாய் ஓவர்லாப்பிலேயே பேசி கொண்டிருக்கிறார். சொல்லி கொள்ளும் படியாய் இருக்கும் ஒரே நல்ல காமெடி ட்ராக் எம்.எஸ். பாஸ்கரின் ட்ராக்தான்  தனியொரு மனிதராய் காமெடி செய்திருக்கிறார். கூட கருணாஸ் வந்தாலும் அவரும் தன் பாட்டுக்கு பேசி கொண்டேயிருக்கிறார்.

masilamani-movie-photos-08

கேமராவை அங்கும் இங்கும், ஆட்ட்டியபடி படமெடுத்தால் பரபரப்பான காட்சியை காட்டுகிறோம் என்று இவருக்கு யார் சொல்லி கொடுத்தது. அவன் தலையில் இடிவிழ. கண்ணெல்லாம் வலிக்குது.

இமானின் இசையில் “டோரா..டோரா” பாடல் நன்றாகயிருக்கிறது. கவிதை குண்டர்  பாடிய ஓடி விளையாடு பாடல் பெரிய லெட் டவுன்.

R.N.R. மனோகர் நிறைய டிவி சீரியல்களில், திரைக்கதை வசனம் எழுதியவர். இன்னமும் டிவி சீரியல் மூடிலிருந்து வரவேயில்லை. மாசி, மணி குழப்பத்தை கிரேசிமோகன் அடித்து துவைத்து காயவைத்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. காமெடி என்கிற பெயரில் டெல்லி கணேஷ் வீட்டில்  அவர் அமைத்திருக்கும் காட்சிகள் பக்கா டிவி சீரியல். சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்  அடுத்த காட்சி என்ன வென்று, அவ்வளவு அமெச்சூரான ஐடியாக்கள். மாசியை மணியில்லை என்று நிருபிப்பதற்காக அவரின் அக்கா பெண்ணின்  மீது போலீஸ் ஜீப் ஏற்றி ஆஸ்பிட்டல் கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஒவர். அந்த காட்சியில் மட்டும் வரும் டிவிஸ்ட் ஓகே. masilamani-movie-photos-07

ஆனால் அநியாயமாய்  அந்த காலனியில் யாராவது  ஒண்ணுக்கு போவதானாலும் கூட மாசியை கேட்டு தான் போவது போல வைத்திருக்க்கும் ஹீரோ பில்டப் காட்சிகள் அநியாயம். க்ளைமாக்ஸ் காட்சியில் மாசி  இறந்துவிட்டதாக பொணமாய் படுத்திருப்பதும், ஊரே நடிப்பதும் போன்ற தெலுங்கு படங்களை தூக்கி சாப்பிடும் காட்சிகள். முடியல.  சுனைனா பேசும் வசனங்கள் அதைவிட  பழசிலும் பழசு அரத பழசு.

மாசிலாமணி  -  என்னத்தை சொல்ல. வழக்கம் போல சன் டிவிக்கு மட்டும் சூப்பர் ஹிட் .

Jun 12, 2009

Dasvidaniya - Hindi Film Review


தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.

அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது.

அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்து விதமான் ஆசைகளை அடைய விழைகிறான்.

ஓருவன் தன்னுடய் சாவை ஒப்பாரி வைக்காமல் கொஞ்சம் சர்ரியலிஸ்டிக் காமெடியுடன் இயல்பாய் தர முடியுமா..? என்று கேட்டால் இதோ.. தஸ்விதானியா.

விந்ய் பதக்கின் நடிப்புக்கு மீண்டும் ஓரு மைல்கல். மனுசன் சும்மா பிச்சி உதறியிருக்கார்.. அவருடய டயலாக் டெலிவரியும்,பாடி லேங்குவேஜூம் பகுத் அச்சா ஹே.. அதிலும் அவருடய் முன்னால் காதலியிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல ’டம் சராப்ஸ்’ விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் சிம்பிளி சூப்பர்ப்.. காதலி நேகா தன் பங்குக்கு நன்றாகவே நடித்துள்ளார்.


அதன் பிற்கு வரும் ரஷ்ய காதலி.. ஓரு காட்சியிலும் அவள் பேசும் பேச்சுக்கு சப்டைட்டில் போடாமலேயே அவர் பேசுவது நமக்கு புரிகிறது.. அது சரி காதலுக்கும், காமத்துக்கும் பாஷை ஏது..

ராப் ரையினரின் “த பக்கெட் லிஸ்ட்” , மற்றும் வெயின் வாங்ஸின் “லாஸ்ட் ஹாலிடே”யை ஞாபகபடுத்தினாலும் இயக்குனர் சஷான்ந்த் ஷா பாராட்டபட வேண்டியவர்.
மேலும் படத்தை பற்றி நிறைய சொன்னால் படத்தை ரசிக்க முடியாது..

அதனால் டிவிடியிலோ.. ஏதாவது ஹிந்தி சேனலிலோ.. கண்டு மகிழ்க...

DASVIDANIYA




நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 11, 2009

மீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்கு


காலையில் ஜெயா டிவியில் லைவ்வாக நடந்த ப்ளாக் பற்றிய நேரலை நிகழ்ச்சியை இன்று மாலை 5மணி முதல் 6 மணி வரை ஜெயா ப்ளசில் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள். நம்ம வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவரும் கண்டு, களியுங்கள்

ஜெயாடிவியில் ”நம்ம” பத்தி..

3

மறக்காம பாருங்க.. பேசுங்க.. நண்பர்களே..

டிஸ்கி:

இந்த பதிவுக்கான மேற்படி டிசைனை உடனுக்குடன் அமைத்து கொடுத்த இனிய நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு  நன்றிகள் பல.

Technorati Tags: ,,




சுந்தர் கடை சிறுகதையை படிக்க..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Jun 9, 2009

குளிர் 100 - திரைவிமர்சனம்

kulir_100_degree_tamil_mp3_songs

நீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா..? பார்த்த வரை  Interesting  ஆக  இருந்தால் ஓகே என்று நினைப்பவரா..? அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும். ,Logic, அது இது என்று பேசுபவராய் இருந்தால் வேறு வேலை பார்த்து கொள்ளவும்.

அப்பன் ஒரு ரவுடி என்பதால் அவனிடமிருந்து பிரிந்து தன் மகனை ஒரு நல்லவனாய் வளர்க்க பாடு ப்டும் தாய். அப்பன் ரவுடிதனத்தை  அப்படியே உரித்து வைத்து தவறு செய்த ஆசிரியரை அடித்து கொல்ல துடிக்கும், பதினோராம் வகுப்பு படிக்கும் மகன், மகனை தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் தந்தை. இங்கிருந்தால் பையன் கெட்டு விடுவான் என்று ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூலில் அவனை சேர்க்கிறாள். அவன் அங்கு போய் கோபப்படக்கூடாது, எந்த விதமான சண்டை சச்சரவுகளீலும் ஈடுபட கூடாது என்று சொல்லி அப்படி போனால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்பதை சொன்னதால், போய் சேர்ந்த் ஸ்கூலில் நடக்கும், ரேகிங் அநியாயங்கள் அனைத்துக்கும் கடைசி வரை பொறுமை காக்கிறான். ஒரு கட்டத்தில் தன் நண்பனையே அவர்கள் கொன்றது அவனுக்கு தெரிய வர,  என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.

Kulir 100 Photos_  (6)

Teen Age  ஹீரோ சூரியாவாக வரும் சஞ்சீவ், சரியாய் Suit ஆகிறார். நடிக்கவும் செய்கிறார். கதாநாயகியாய் வரும் ரியா பூங்கொடியை பற்றி ஒன்றும் சொல்லமுடியலை. ஏன்  தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள்? அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம்.  சூரியாவின் நண்பனாய் வரும் குண்டு பையன் BOBO SASI முதலில், பார்பதற்கு கொஞ்சம் Irritating  ஆக  இருந்தாலும், போகப் போக தன் Oneliner Dialougeகினால்  நம்  மனதை ஆக்கிரமிக்கிறார். வில்லனாக வரும் நண்பர்கள் பற்றி குறையொன்ருமில்லை.

kulir-100-degree-_22_

படத்தில் பாராட்ட பட வேண்டிய இருவர் Cameraman, Music Director தான்.  தியேட்டருக்கு மக்களை கூட்டி வந்தவர் இசையமைப்பாளர். நம்மை உட்கார வைத்தவர் கேமராமேன்.. படத்தில் நடித்தும், இசையமைத்தும், தன்னை படம்  பூராவும் நிறைத்திருக்கிறார்  BOBOSASI  மனசெல்லாம், HIPHOP, பாடல்கள் Youthfull. நல்ல அருமையான  டாப் ஆங்கிள் ஷாட்டுகள், பசுமையான பிண்ணனி, இயல்பான லைட்டிங்  என்று பின்னி எடுத்திருக்கிறார் 
Kulir 100 Photos_

இயக்குனர் அனிதா பார்த்த இங்கிலிஷ் படத்தில் வரும் அமெரிக்க ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடந்த  விஷயங்களை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறார். அதனால் எங்கே இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது. இப்பெடியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி படம் ஓடும் இரண்டு மணி நேரமும் வந்து கொண்டேயிருபதை மறுக்க முடியாது. அதையும் மீறி ஓரளவுக்கு Interesting திரைக்கதையினால் தப்பிக்கிறார். டீன் ஏஜ் பையன் ஒருவன் மூன்று கொலைகள் செய்வதை சர்வ சாதாரணமாய் காட்டி ஏற்று கொள்வதாயிருக்காது என்று அதற்கு ஒரு  Peotic Justice  கொடுக்க முயன்றிருக்கிறார். ஆங்காங்கே தமிழ் பட அம்மா Sentimentஐ உள்ளே நுழைக்க முயற்சித்து  படத்திற்கு மேலும் காமெடியை கூட்டுகிறார். Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.

குளிர் 100 -  Slightly Suffocating…

டிஸ்கி

இந்த படத்திற்கு இளைஞர்கள் படையெடுத்து வந்திருந்தார்கள். நேற்று சத்யம், ஐநாக்ஸ் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்..  வந்திருந்த யூத்கள் வரும் காமெடி காட்சிகளுக்கு சிரித்த்தும், போபோ சாகும் போது உச் கொட்டியதும், இதையெல்லாம் பார்க்கும்போது, எங்களை போன்ற ஹிப்ஹாப் யூத்துகளுக்கு  பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)