நீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா..? பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா..? அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும். ,Logic, அது இது என்று பேசுபவராய் இருந்தால் வேறு வேலை பார்த்து கொள்ளவும்.
அப்பன் ஒரு ரவுடி என்பதால் அவனிடமிருந்து பிரிந்து தன் மகனை ஒரு நல்லவனாய் வளர்க்க பாடு ப்டும் தாய். அப்பன் ரவுடிதனத்தை அப்படியே உரித்து வைத்து தவறு செய்த ஆசிரியரை அடித்து கொல்ல துடிக்கும், பதினோராம் வகுப்பு படிக்கும் மகன், மகனை தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் தந்தை. இங்கிருந்தால் பையன் கெட்டு விடுவான் என்று ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூலில் அவனை சேர்க்கிறாள். அவன் அங்கு போய் கோபப்படக்கூடாது, எந்த விதமான சண்டை சச்சரவுகளீலும் ஈடுபட கூடாது என்று சொல்லி அப்படி போனால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்பதை சொன்னதால், போய் சேர்ந்த் ஸ்கூலில் நடக்கும், ரேகிங் அநியாயங்கள் அனைத்துக்கும் கடைசி வரை பொறுமை காக்கிறான். ஒரு கட்டத்தில் தன் நண்பனையே அவர்கள் கொன்றது அவனுக்கு தெரிய வர, என்ன என்பது தான் க்ளைமாக்ஸ்.
Teen Age ஹீரோ சூரியாவாக வரும் சஞ்சீவ், சரியாய் Suit ஆகிறார். நடிக்கவும் செய்கிறார். கதாநாயகியாய் வரும் ரியா பூங்கொடியை பற்றி ஒன்றும் சொல்லமுடியலை. ஏன் தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள்? அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம். சூரியாவின் நண்பனாய் வரும் குண்டு பையன் BOBO SASI முதலில், பார்பதற்கு கொஞ்சம் Irritating ஆக இருந்தாலும், போகப் போக தன் Oneliner Dialougeகினால் நம் மனதை ஆக்கிரமிக்கிறார். வில்லனாக வரும் நண்பர்கள் பற்றி குறையொன்ருமில்லை.
படத்தில் பாராட்ட பட வேண்டிய இருவர் Cameraman, Music Director தான். தியேட்டருக்கு மக்களை கூட்டி வந்தவர் இசையமைப்பாளர். நம்மை உட்கார வைத்தவர் கேமராமேன்.. படத்தில் நடித்தும், இசையமைத்தும், தன்னை படம் பூராவும் நிறைத்திருக்கிறார் BOBOSASI மனசெல்லாம், HIPHOP, பாடல்கள் Youthfull. நல்ல அருமையான டாப் ஆங்கிள் ஷாட்டுகள், பசுமையான பிண்ணனி, இயல்பான லைட்டிங் என்று பின்னி எடுத்திருக்கிறார்
இயக்குனர் அனிதா பார்த்த இங்கிலிஷ் படத்தில் வரும் அமெரிக்க ரெஷிடென்ஷியல் ஸ்கூலில் நடந்த விஷயங்களை அப்படியே தமிழ் படுத்தியிருக்கிறார். அதனால் எங்கே இந்த மாதிரி ஸ்கூல் இருக்கிறது. இப்பெடியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி படம் ஓடும் இரண்டு மணி நேரமும் வந்து கொண்டேயிருபதை மறுக்க முடியாது. அதையும் மீறி ஓரளவுக்கு Interesting திரைக்கதையினால் தப்பிக்கிறார். டீன் ஏஜ் பையன் ஒருவன் மூன்று கொலைகள் செய்வதை சர்வ சாதாரணமாய் காட்டி ஏற்று கொள்வதாயிருக்காது என்று அதற்கு ஒரு Peotic Justice கொடுக்க முயன்றிருக்கிறார். ஆங்காங்கே தமிழ் பட அம்மா Sentimentஐ உள்ளே நுழைக்க முயற்சித்து படத்திற்கு மேலும் காமெடியை கூட்டுகிறார். Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.
குளிர் 100 - Slightly Suffocating…
டிஸ்கி
இந்த படத்திற்கு இளைஞர்கள் படையெடுத்து வந்திருந்தார்கள். நேற்று சத்யம், ஐநாக்ஸ் ஆகிய இரண்டு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்.. வந்திருந்த யூத்கள் வரும் காமெடி காட்சிகளுக்கு சிரித்த்தும், போபோ சாகும் போது உச் கொட்டியதும், இதையெல்லாம் பார்க்கும்போது, எங்களை போன்ற ஹிப்ஹாப் யூத்துகளுக்கு பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)
Post a Comment
44 comments:
பர்ஸ்ட் பர்ஸ்ட் பர்ஸ்ட் இருங்க படிச்சிட்டு வரேன்
அய்யோ நான் செகண்டு
விமர்சனம் சூப்பர் தல.....
அப்புறம் அதென்ன இப்பெல்லாம் அடிக்கடி 'நம்மள மாதிரி யூத்து'ன்னு பஞ்ச் அடிச்சிகிட்டே இருக்கீங்க...படம் டைரக்ட் பண்றதா தானே பிளான்....? இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (அப்புறம் உங்க படத்துக்கு நாங்க விமர்சனம் எழுத வேண்டி வரும் சொல்லிபுட்டேன்....)
//நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)//
அண்ணே நீங்க யூத்துதான்.,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுக்காக இப்படியா???
//
குளிர் 100 - Slightly Suffocating…
//
Super...
\\குளிர் 100 - Slightly Suffocating\\
வர வர லைட்ஸ் ஆன் வினோத் ரேஞ்சுக்கு பன்ச் தர்றீங்க.
யூத் சார்,
பேஷியல், பிளீச்சிங் எல்லாம் முடிந்ததா?
வியாழன் நேரடி நிகச்சிக்கு?
//நீங்கள் அதிகம் கேள்வி கேட்காதவரா..? பார்த்த வரை Interesting ஆக இருந்தால் ஓகே என்று நினைப்பவரா..? அப்படியென்றால் குளிர்100 படத்திற்கு செல்லவும்//
அப்போ ஓக்கே.
நீங்க யூத்த இல்லையா என்று வியாழக்கிழமை ஜெயா டிவி பார்த்தால் தெரிந்துபோகும்
//இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (//
அப்படி ஒரு நிலைமைவந்தா.. அதை பத்தி கவலை படறது உங்க வேலையில்ல.. எனக்கென்ன...:)
நன்றி வெண்பூ.
//வர வர லைட்ஸ் ஆன் வினோத் ரேஞ்சுக்கு பன்ச் தர்றீங்க.
யூத் சார்,
பேஷியல், பிளீச்சிங் எல்லாம் முடிந்ததா?
வியாழன் நேரடி நிகச்சிக்கு?
//
இயல்பாவே அழகாயிருக்கிற :) எனக்கு எதுக்கு முரளி பேஷியல், பீளீச்சிங்.. எல்லாம்..?
அப்புறம் அதென்ன இப்பெல்லாம் அடிக்கடி 'நம்மள மாதிரி யூத்து'ன்னு பஞ்ச் அடிச்சிகிட்டே இருக்கீங்க...படம் டைரக்ட் பண்றதா தானே பிளான்....? இல்ல எஸ்.ஜெ. சூர்யா, சேரன் மாதிரி ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு 'காலேஜ் கோயிங்' ரோல் பண்ண போறீங்களா... (அப்புறம் உங்க படத்துக்கு நாங்க விமர்சனம் எழுத வேண்டி வரும் சொல்லிபுட்டேன்....)
repeattu
//Multiplex ஆடியன்ஸை குறிவைத்து எடுத்திருக்கிறார் Mayajaal Owner பொண்ணு.//
ஆஹா இது புது தகவலா இருக்கே! thanks.:)
//குளிர் 100 - Slightly Suffocating…//
sweetly suffocated! லட்டு மாதிரி பசங்க இருக்காங்களே!ஹிஹி...
present sir
ரெண்டு பாட்டு நல்லாருக்கு. படம் பார்க்கனும்.
கேபிள்..கண்ணாடி பவர் கூடிடுச்சு..மாத்தணும்னு சொன்னிங்களே.மாத்தியாச்சா?அப்புறம் மறக்காம டை அடிச்சுட்டு போங்க..இன்னைக்கு உங்க பையனை காலேஜ்ல பார்த்தேன்
Anitha and Uthup are very nice couple to move with.Very sweet persons.If the film succeeds,I will feel personally happy for them.
வணக்கம் அண்ணாச்சி. நல்லாயிருக்கியளா?
யோவ் திரும்ப திரும்ப யூத்து யூத்துன்னு சொல்லி சொல்லியே நீ மாட்டிக்குவ போல இருக்கு...
அண்ணே நீங்க யூத்தான்னே? :-)
அப்ப இது நம்மள மாதிரி யூத்துங்க எல்லாம் பார்க்க வேண்டிய படம்னு சொல்லுங்க
chambersla படம் பார்க்க என்னை அழைக்காத கேபிளார்க்கு எனது சிரியஸான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
/sweetly suffocated! லட்டு மாதிரி பசங்க இருக்காங்களே!ஹிஹி..//
:)
நன்றி நைனா.. விதயா..
/கேபிள்..கண்ணாடி பவர் கூடிடுச்சு..மாத்தணும்னு சொன்னிங்களே.மாத்தியாச்சா?அப்புறம் மறக்காம டை அடிச்சுட்டு போங்க..இன்னைக்கு உங்க பையனை காலேஜ்ல பார்த்தேன்//
தண்டோரா.. நீஙக் யாருன்னே எனக்கு தெரியாது.. அப்புறம் எப்படி என்னைபத்தி தெரியும்.
நன்றி வசந்த் ஆதிமூலம், ஷண்முகப்பிரியன் சார். மயில்
/யோவ் திரும்ப திரும்ப யூத்து யூத்துன்னு சொல்லி சொல்லியே நீ மாட்டிக்குவ போல இருக்கு..//
அண்ணே ஜாக்கியண்ணே.. நான் உஙக் தம்பிண்ணே..
ஒத்துக்கிட்ட முரளீ க்கு நன்றி..
.அப்ப இது நம்மள மாதிரி யூத்துங்க எல்லாம் பார்க்க வேண்டிய படம்னு சொல்லுங்..
அப்படி சொல்லுங்க தராசு...
/chambersla படம் பார்க்க என்னை அழைக்காத கேபிளார்க்கு எனது சிரியஸான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//
அந்த ஒரிஜினல் படம் பேரு இதானா.. நன்றி அசோக்.
அப்ப இந்த படத்த பாக்க முடியாது..
இப்படி நீங்கள்லாம் யூத்து யூத்துனு சொல்லித்தான், நாட்டுல எங்கள மாதிரி உண்மையான யூத்துக்களுக்கு ரெஸ்பெக்ட்டே போச்சி.
- வயசு கம்மியான யூத் சங்கம்.
அப்ப இந்த படத்த பாக்க முடியாது..
படத்துக்கு நல்ல சட்பிக்கேட் கொடுக்குறீங்க!! பார்த்திரலாம்!
//தமிழ் ச்னிமா ஹீரோயின் எல்லாம் லூசாகவே சித்தரிக்க படுகிறார்கள்? அதிலும் இதில் லூசு தனத்தின் உச்சம்.
//
நான்கூட முதலில் டைரக்டர்கள் ஆண்களாக இருப்பதால் பெண்களை லூசாகக்காட்டி நக்கலடிக்கிறாங்கன்னு நினைத்ததுண்டு. இந்த பட டைரக்டர் ஒரு பெண்மணி. ஒருவேளை நம்பாளுங்க உண்மையத்தான் காட்டுனாய்ங்களோ???
//நடுநடுவே Englishஷில் எழுதியதற்கான காரணம் புரியாதவர்கள் யூத்தில்லை.:)//
:))
அருமையா விமர்சனம் பண்ணுறேங்க :)
உங்கள் விமர்சனம் அருமை...........
சஞ்சீவின் நண்பனாக வரும் பப்லுவின் உண்மையான பெயர் உதயகுமார்
கேபிள் சங்கர் அவர்களே.......
bobo சசி படத்தின் இசை அமைப்பாளர்.
ஏதோ எனக்கு தெரிந்த விவரம் இது....
.இப்படி நீங்கள்லாம் யூத்து யூத்துனு சொல்லித்தான், நாட்டுல எங்கள மாதிரி உண்மையான யூத்துக்களுக்கு ரெஸ்பெக்ட்டே போச்சி.
- வயசு கம்மியான யூத் சங்கம்//
:)
/அப்ப இந்த படத்த பாக்க முடியாது.//
ஏன்..?
முத்துராமலிங்கம்.. நல்ல சர்டிபிகேட் கொடுக்கல.. உஙக் ரிஸ்குன்னு சொல்லியிருக்கேன்.
/நான்கூட முதலில் டைரக்டர்கள் ஆண்களாக இருப்பதால் பெண்களை லூசாகக்காட்டி நக்கலடிக்கிறாங்கன்னு நினைத்ததுண்டு. இந்த பட டைரக்டர் ஒரு பெண்மணி. ஒருவேளை நம்பாளுங்க உண்மையத்தான் காட்டுனாய்ங்களோ??//
:):)
நன்றி சென்ஷி..
நன்றி கார்த்தி..
நன்றி ஜெட்லி..
பாட்ட நம்பி படம் பாக்க போன பாவாத்மாக்கள்ள நானும் ஒருவன். இப்புடி ஒரு படத்த பாக்க போன பிறவில நா ஏதோ பாவம் செஞ்சிருக்கணும். படம் பாத்துட்டு வர்ற வழில தான் பெரிய கோயில். கோயில்ல மண்ணள்ளி வச்ச்ட்டு தான் வந்தேன்.
Post a Comment