மாசிலாமணி – திரை விமர்சனம்.
புதிதாய் வேறு படங்கள் ஐ.சி.சி மேட்ச் காரணமாய் வெளியிடபடாமல் இருக்க, இந்த நேரத்தில், சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் வந்திருக்கும் வழக்கமான படம் தான் மாசிலாமணி.
ஹீரோ ஒரு லோகிளாஸ் காலனியில் இருப்பவன், காலேஜ் மாணவனாம், அந்த காலனியே அவனை பாட்ஷா ரேஞ்சுக்கு மதிக்கிறதாம் அவர்களின் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் அவன் சுனைனாவை கண்டதும் காதலிக்கிரான், அவளின் பார்வையில் இவன் செய்யும் விஷயங்கள் எல்லாம் ரவுடியாய் தெரிய வர, அவனை வெறுக்கிறார் சுனைனா.. சுனைனாவை மணக்க, அவரின் வீட்டிற்கு மணி என்கிற பெயரில் சென்று அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாருடைய அன்பையும் வென்று, சுனைனாவின் காதலை வெல்கிறான் மணி என்கிற மாசி என்கிற மாசிலாமணி. இதற்கு நடுவில் ஒரு வில்லன் போலீஸ் ரூபத்தில் வர, அவனிடம் முடிஞ்சா நான் மணியா, இல்ல மாசியா புருவ் பண்ணிக்கன்னு சவால் வேற, க்ளைமாக்ஸூல சுனைனாவுக்கு மணியும், மாசியும் ஒண்ணுதான் தெரிஞ்சிச்சா, அவங்க காதல் என்னாவாச்சுங்கிறதுதான் கதை.
சொல்லும் போது அட பரவாயில்லையேன்னு நினைப்போம் ஆனா படம் முழுசா பாக்க முடியல . பல படங்களில் பார்த்த அரத பழசான சீன்கள், காமெடி பண்ணுகிறேன். நம்மை கிச்சு, கிச்சு, கூட மூட்டாத காட்சிகள் என்று நோகடிக்கிறார்கள்.
நகுல் நடிக்கிறேன் பேர்வழி என்று குஷ்டம் வந்தவன் போல் கையை வாயின் அருகில வைத்து கொண்டு அழும் காட்சிகள் கோரம். முகத்தில் எக்ஸ்ப்ரெஷன் என்பது கிலோ என்ன விலை என்று கேட்பார் போலிருக்கு. அதிலும் அவர் பேசும் தமிழ்.. என்ன கொடுமைடா சாமீ..
சுனைனா.. ரொம்ப சொன்னைண்னா.. சப்பி போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். முன் பல் வேறு தனியா தெரியுதா..? டாம் அண்ட் ஜெரி, ஜெர்ரி எலி ஞாபகம் வருது. க்ளைமாக்ஸுல அவர் பேசுற நீண்ட வசன் காட்சியில் என்னா உணர்ச்சி, என்னா ஒரு ஆக்ஸன்..?
காமெடி என்கிற பெயரில் சந்தானம், அண்ட் கோ வழக்கம் போல் சந்தானம் பேசிக் கொண்டே இருக்கிறார். ப்ரேமில் அவர் இல்லாவிட்டாலும் டப்பிங்கில் வாய் ஓவர்லாப்பிலேயே பேசி கொண்டிருக்கிறார். சொல்லி கொள்ளும் படியாய் இருக்கும் ஒரே நல்ல காமெடி ட்ராக் எம்.எஸ். பாஸ்கரின் ட்ராக்தான் தனியொரு மனிதராய் காமெடி செய்திருக்கிறார். கூட கருணாஸ் வந்தாலும் அவரும் தன் பாட்டுக்கு பேசி கொண்டேயிருக்கிறார்.
கேமராவை அங்கும் இங்கும், ஆட்ட்டியபடி படமெடுத்தால் பரபரப்பான காட்சியை காட்டுகிறோம் என்று இவருக்கு யார் சொல்லி கொடுத்தது. அவன் தலையில் இடிவிழ. கண்ணெல்லாம் வலிக்குது.
இமானின் இசையில் “டோரா..டோரா” பாடல் நன்றாகயிருக்கிறது. கவிதை குண்டர் பாடிய ஓடி விளையாடு பாடல் பெரிய லெட் டவுன்.
R.N.R. மனோகர் நிறைய டிவி சீரியல்களில், திரைக்கதை வசனம் எழுதியவர். இன்னமும் டிவி சீரியல் மூடிலிருந்து வரவேயில்லை. மாசி, மணி குழப்பத்தை கிரேசிமோகன் அடித்து துவைத்து காயவைத்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. காமெடி என்கிற பெயரில் டெல்லி கணேஷ் வீட்டில் அவர் அமைத்திருக்கும் காட்சிகள் பக்கா டிவி சீரியல். சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்ன வென்று, அவ்வளவு அமெச்சூரான ஐடியாக்கள். மாசியை மணியில்லை என்று நிருபிப்பதற்காக அவரின் அக்கா பெண்ணின் மீது போலீஸ் ஜீப் ஏற்றி ஆஸ்பிட்டல் கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஒவர். அந்த காட்சியில் மட்டும் வரும் டிவிஸ்ட் ஓகே.
ஆனால் அநியாயமாய் அந்த காலனியில் யாராவது ஒண்ணுக்கு போவதானாலும் கூட மாசியை கேட்டு தான் போவது போல வைத்திருக்க்கும் ஹீரோ பில்டப் காட்சிகள் அநியாயம். க்ளைமாக்ஸ் காட்சியில் மாசி இறந்துவிட்டதாக பொணமாய் படுத்திருப்பதும், ஊரே நடிப்பதும் போன்ற தெலுங்கு படங்களை தூக்கி சாப்பிடும் காட்சிகள். முடியல. சுனைனா பேசும் வசனங்கள் அதைவிட பழசிலும் பழசு அரத பழசு.
மாசிலாமணி - என்னத்தை சொல்ல. வழக்கம் போல சன் டிவிக்கு மட்டும் சூப்பர் ஹிட் .
Comments
உங்க கடைசி பன்ச் நாக் அவுட் பன்ச்.
இது உங்க touch. சரியான விமர்சனம்.
ஸ்ரீ....
தல.... ஜெயா டிவி பேட்டியில விமர்சனம் எழுதுவதால உங்களுக்கு எதாவது அச்சுறுத்தல் வருதானு கேட்டாங்கள்ள...... நீங்க இந்த மாதிரி படங்களை பார்ப்பதே உங்களுக்கு பெரிய அச்சுறுத்தல்தான் எங்களுக்கு புரியுது... வாழ்க உங்கள் கலை சேவை....!
விமர்சனம் அருமை..
நல்லாயிருங்க. வேறென்னத்த சொல்ல.
பொறாமையா இருக்கு.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அவுக ரெண்டு பேரும் மெய்யாலுமே லவ்வுகறாகலாமே..
நெசமா தலீவா..?
தொடர்ந்து மசாலா படங்கள் (except அயன்) தோல்விய தழுவினாலும் தம்மிடம் மீடியா பலத்தால் எல்லா குப்பைகளையும் காசாக்கலாம் என்ற
தைரியத்தால் இந்த கதை தொடரும்.
தமிழ் சினிமாவை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைபவர்களிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.
எப்படியோ எங்களையெல்லாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டிருக்கும்
தங்கள் பொறுமைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல.
ரொம்ப நன்றி ... எங்களயெல்லாம் காப்பத்துனதுக்கு ...
Thanks for save us.
இப்ப தெலுங்கு படங்க எப்ப்டி இருக்குன்னு உங்களுக்கே தெரியும்!...
நன்றி அண்ணாத்தே... இந்த விமர்சனத்திற்கும் நம்ம கடையாண்ட வந்து கண்டுகிட்டதுக்கும்..
***************************
உங்க கமன்டை படிக்க தான் பத்து ரூபா கொடுத்து பிரவுசிங்லே உக்காந்து இருக்கேன்.
(நீங்க டாக்டரை தனியா இட்டுகினு போக தான் அல்லாரையும் தூர போங்க என்று நினைப்பது போல் கற்பனை செய்து இருக்கிறேன் )
auto vara madiri theriyuthe....
எங்களயெல்லாம் காப்பத்துனதுக்கு!!
Great escape ..
உங்க கடைசி பன்ச் நாக் அவுட் பன்ச்.//
நன்றி முரளி.. ஸ்ரீ..
:)
அன்பு, அகநாழிகை, டக்ளஸ், நர்சிம்.
வண்ணத்து பூச்சியார்,
பிஸ்கோத்துபயல்.
முத்துகுமார்.
பப்பு,
புதுவை சிவா,
எஸ்.ஜி. ரமேஷ்.
மாயாவி..
கீத் குமாரசாமி,
நைனா,
முத்து பாலகிருஷ்ணன்,
கலையரசன்,
வெட்டி வேலு.
repeeeeaatttteeyyy......
எப்படியோ எங்களையெல்லாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டிருக்கும்
தங்கள் பொறுமைக்கும் பதிவிற்கும் நன்றிகள் பல.//
வண்ணத்துப் பூச்சியாரை அப்படியே வழிமொழிகிறேன்.
அதும் நகுல் பேசுற தமிழ் இருக்கே யபா முடியல. என் பொண்டாட்டி என்ன அடிக்காத குறைய படம் முடிஞ்சி வீடு வரைக்கும் திட்டின. . தயவு செய்து யாரும் அந்த படத்துக்கு காசு வேஸ்ட் பண்ணி போய் பார்த்து தொலைகதிங்க .
அதும் நகுல் பேசுற தமிழ் இருக்கே யபா முடியல. என் பொண்டாட்டி என்ன அடிக்காத குறைய படம் முடிஞ்சி வீடு வரைக்கும் திட்டின. . தயவு செய்து யாரும் அந்த படத்துக்கு காசு வேஸ்ட் பண்ணி போய் பார்த்து தொலைகதிங்க .
சிங்கபூர்ல சினிமா பாக்க ரூ.350 ஆகும். போகலாம்முன்னு இருந்தேன். தப்பிச்சேன்.
'அயன்' படம் தயாரிப்பு AVM. Sun இல்லை. Sun Pitures only distribution. சும்மா பேர போட்டுக்கிட்டு ஏமாத்து வேல பண்ணுறான். யாரு கேக்கறது. பாவம் AVM.
காலம் கெட்டவனுக்குத் தான் போல.
இப்படிக்கு,
குமுதம்: ரசிகர்களை எல்லாம் அழைத்து என்ன பேசினீர்கள்?
SA Chandrasekar: தமிழகம் முழுக்க உள்ள விஜயின் ரசிகர்கலியா அழைத்து அவர்களின் விருபத்தை கேட்டிருக்கிறோம். எல்லோரும் அவர்களின் ஆதரவை தெரிவித்தார்கள். வரும் ஜனவரியில் சென்னையில் மாநாடு நடக்கும் பொது மீதியை அறிவிப்போம்.
குமுதம்: விஜயகாந்த் கூட கட்சி ஆரமித்து இப்போது கணிசமான ஓட்டுவங்கியை உருவாகியிருக்கிறார். உங்களுக்கும் ஓட்டு கிடைக்குமா?
SAC: ஏன் இல்லை. தமிழ் நாட்டில் யாரை கேட்டலும் பெண்களின் அதிக செல்வாக்கை பெற்றவர் விஜய். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன் விஜயகாந்தே விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி பயப்படுகிறாரே?
குமுதம்: அவர் பயப்படுகிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
SAC: அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தனது அச்சத்தை வெளிபடுத்தினார் என்று எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இது சும்மா இல்லைங்க. SAC கொடுத்த பெட்டிதான். வேணும்னா இன்னிக்கு குமுதம் வாங்கி இத படிங்க. இப்பவே கண்ணா கேட்டுதே.
எனக்கென்னமோ அவள ரொம்ப பிடிச்சுருக்கு..