ஒரு வாரமாய் உங்களுக்கெல்லாம் ஜாலியாய் இருந்திருக்கும், என்னுடய தொல்லையில்லாமல். எப்போதும் நல்லதே நடந்திட்டிருந்தா போரடிக்கும், அதனால நான் திரும்ப வந்திட்டேன்.
ஒரு திரைப்பட டிஸ்கஷனுக்காக என் நண்பர்கள் குழாமுடன் ஏதாவது வெளியூர் போகலாமென முடிவெடுத்து, என் புரொடியூசரிடம் சொல்ல, அவர் கொடைக்கானலை சொன்னார் அடிக்கிற வெய்யிலுக்கு கொடைக்கானல் பேரை சொன்னாலே குளிருதுல்ல என்று குளீரடிக்க, கிளம்பினோம். புதன் இரவு. அற்புதமான பஸ் பயணம். போகிற வழியில், நர்சிம், முரளிகண்ணன், தண்டோரா, ரமேஷ் வைத்யா எலோரும் பேசினார்கள். அதிகாலை தேனியில் இறக்கி விட்டார்கள். அங்கே அருகே ஒரு ஓட்டலில் டபுள் ஏசி போட்ட ரூமில் போய் செட்டில் ஆனோம். காலையில் ஒரு ஒன்பது மணிக்கு ஒரு காரை அனுப்பி வைத்தார் தயாரிப்பாளர். “இன்று ஒரு லொக்கேஷனை பார்க்க போகிறோம்.” நாளை தான் கொடைக்கானல் என்றார்.
போகிற வழியில் செவ்வெளனி வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவை. இம்மாதிரியான சுவை இருபது ரூபாய் கொடுத்து சென்னையில் குடிக்கும் இளனியில் வந்ததில்லை. இளனி 5 ரூபாய். அந்த கடைக்காரர் அன்று தான் முதன் முதலில் வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு இருபது இளனியுடன் அத்தனையும் காலி.
சின்னமனூரிலிருந்து கொஞ்சம் தூரம் போனபிறகு ஒரு சின்ன ரோடு போனது. போகப் போக, பாதை கரடு முரடானது. வழியில் பாரஸ்ட் செக் போஸ்டில் அரசு பர்மீஷன் வாங்கியிருந்ததால், சுலபமாய் போக முடிந்தது. மேலே ஏற, ஏற, பாதை மோசமாகிக் கொண்டே போனது. மெல்ல், மெல்ல, தேனியின் வெய்யில் குறைந்து சிலுசிலுவென காற்றடிக்க, குலுங்கி, குழுன்கி மெதுவாய் முன்னேறியது வண்டி. இவ்வளவு கஷ்டப்ப்பட்டு மலையேறி என்னத்தை பார்க்க போறோம்னு மனசுள் ஓடிக் கொண்டிருந்த்து. போகிற வழியில் நடு காட்டில் ஒரு சின்ன ஆளில்லாத சர்ச்.. அழகாய் இருந்த்து.
அரை மணி நேர பயணத்தில் வண்டி ஓர் இடத்தில் இற்ங்கி பார்ததவுடன், இயற்கை நமக்கு வழங்கியுள்ள அழகை வர்ணிக்க வார்ததைளே இல்லை. அந்த இடத்திற்கு வைத்திருந்த பேர் மிக சரியானது எனறே சொல்ல வேண்டும். “மேகமலை” நிஜமாகவே மேகங்கள் மலையோடு கொஞ்சி விளையாடி கொண்டிருந்தது. பல சமயங்களில் சில்லென்னு நம்மை கடந்து சென்றது, சிலிர்ப்பூட்டியது. அங்கே ஒரு அணையிருந்தது. ஆனால் தண்ணீர் இல்லை. மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறது மேகமலை.
அங்கே ஒரு அரசு கெஸ்ட் அவுஸ், ஒரு ஒயின் ஷாப், ஒரே ஒரு உனவகம்.”ண”வுகு பதிலாய் “ன”. போகும் போதே ஒரு இரண்டு கிலோ சிக்கன் வாங்கி போய் கொடுத்துவிட்டோமானால். ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் அற்புதமான லோக்கல் சாப்பாடு சிக்கனோடு. அந்த குளிரில் சூடாக.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. சும்மா அதிருமில்ல..
அங்கிருந்து “தூவானம்” என்கிற் இடத்திற்கு போனோம். அதுவும் ஒரு அணைகட்டுதான். ஆனால் ஒரு பக்கம், சிவந்த மண்ணுடம் ஓடு தண்ணீரும், நடுவே பிரமிப்பான அணைகட்டும், அடுத்த பக்கம் குறைந்த அளவு தண்ணீருடன் ஓடி தடாலென்று ஒரு பள்ளத்தாகிற்கு விழும் அருவியும், ஒரு கணம் முழு தண்ணீருடன் பார்த்தால் “அப்பொகலிப்டோ:” படத்தில் வரும் அருவியை ஞாபகபடுத்தியது.. மிகவும் ரிஸ்கான அந்த பாதையில் இறங்கி நடந்து, மெல்ல அந்த அருவி விழும் பாதாளத்தை பார்க்க, முயன்று, கிட்டே போக, காற்று என்னை மேலும் இழுக்க, போன் அடித்தது, கூட வந்த நண்பர் ஒருவர் “அண்ணே இன்னும் ரெண்டடி நகந்தீங்கண்ணா.. நீங்க கீழே போக வேண்டாம் காத்தே உங்களை இழுத்துக்கும். மரியாதையா வந்திருங்க. ஊருல அண்ணி புள்ளைங்களை திரும்ப பார்க்க வேணாமா? என்று கேட்டதும்தான் தெரிந்தது, நான் எவ்வளவு பெரிய ஆபத்திலிருக்கிறேன். என்று. கர்சீப்பை கையிலிருந்து உருவிக் கொண்டு தானே சர்ரென்று பாதாளத்திற்கு இழுத்து சென்றதை பார்த்த பின் நான் எஸ்கேப். தண்ணீர் விழும் காலத்தில் தண்ணீர் விழுந்து, அப்போது கீழேயிருந்து எழும்பும் காற்றானது விழும் தண்ணீரை மேலே உந்தி தள்ள, கீழேயிருந்து மேல் நோக்கி வரும் தண்ணீர் மழை போல் பொழியுமாம். அதனால் தன் இந்த இடத்திற்கு பேர் தூவானம். என்கிறார்கள் .சில இடங்களை பார்க்கும் போது வெளிநாடு என்று சொன்னால் நிச்சயமாய் நம்புவார்கள்.
பசுமையும், தனிமையும், இயற்கை அழகும், இன்னும் மக்களால் பொல்யூட் ஆகாத மேகமலை, தூவானம் இடங்களை பார்க்கும் போது சென்னையின் வெயிலிலிருந்து ஒரு அற்புதமான சுகானுபவத்துடன் ஆரம்பித்தது எங்கள் பயணம்.
மேலே சில படங்கள், அவ்வ்ளவு தெளிவில்லாமல் இருந்தால் கேமரா குற்றமில்லை, நல்ல கேமரா எடுத்து போகாத என் குற்றம்தான். என்னுடய் மொபைல் கேமராவில் எடுக்கப்பட்டது. மேலும் பயணக் கட்டுரை தொடரும்…
Post a Comment
52 comments:
மீ தி பார்ஸ்ட் ....
பத்து நாள் விடுமுறையை அடுத்து பதிவுலகம் திரும்பிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.... !!
(தலைவா போகும்போது வேற நல்ல படத்தை போட்டிருக்க கூடாதா...நீங்க பதிவு போட்டுருக்கீங்கலானு தினமும் வந்து வந்து இந்த இத்து போன ராகவன் படத்து மூஞ்சில முழிக்க வேண்டியதா போயிடுச்சு )
வாங்க வாங்க.
இப்போதான் தண்டோராவும் நீங்க இல்லாம கிக்கே இல்லைனு போட்டிருந்தார்.
பயணக்கட்டுரை தூள் :-)
தொடரவும்!
ஏற்கனவே நீங்க யூத்தோ யூத்து ... இதுல சிலு சிலுன்னு கொடைக்கானல் வேற போயிட்டு வந்திருக்கீங்க...
இப்ப பார்க்குறதுக்கு இன்னும் வயசு கொறஞ்சு குழ்ந்தை மாதிரி இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்....
வருக.. வருக..
Welcome Back....
welcome back............:)))))
miss ur post lah mike....
waiting for ur movie reviews.....
கொடைக்கானல் அங்கதான் இருக்கா இன்னும்?
அண்ணன் களம் இறங்கிட்டாரு...
சரவெடிய போடுடா....
டப..டப...டப்...டபட...டப்....டப்...டப்பா...டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டாட்.டப்.......டப்...டபட...டப்.டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டபட...டப்....டப்..டப..டப...டப்...டபட...டப்....டப்...டப்பா...டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டாட்.டப்.......டப்...டபட...டப்.டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டபட...டப்....டப்...டப..டப...டப்...டபட...டப்....டப்...டப்பா...டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டாட்.டப்.......டப்...டபட...டப்.டப்..டுஷ்..டுப்..டுப்....டப்...டபட...டப்....டப்..டுஷ்....டுஷ்....டுஷ்....டுஷ்..
தலைவா,
வந்திட்டீங்களா, எத்தனை நாளைக்குத்தான் அந்த ராகவன் படத்தையே பாத்திட்டிருக்கறது. எப்படியும் இன்று இரவு தொலைபேசலாம் என்று இருந்தேன்.
கொடைகானல் ஜூஊஊஊஊஊப்பர் போல,
உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
என்ன கொடுமை சார் இது.... நாங்க எல்லாம் சென்னை வெயிலில் காய்ந்து கருவாடு ஆகி கொண்டிருக்க வேளையில் நீங்கள் கோடையில் உல்லாசமா... :)
அமர்க்களமாக தொடருங்கள் சங்கர்..... அந்த கடைசி மாலை பொழுது பிண்ணணியில் உங்கள் போட்டோ டாப் டக்கருங்க ;)
ÇómícólógÝ
ஆஹா, மேக மலையா...?
அங்கதான் ஒரு 'அ'ரசியல் பிரபலம் தனது தேர்தல் வெற்றியை கோலாகலமாக கொண்டாடினார்..!
அவரு யாரு தெரியுமா..?
நல்ல அருமையான location.
கண்டிப்பாக திரையில் மிக அழகாக காட்டுவீர்கள். காத்திருக்கிறேன்,
நரம்படி நாராயணன் அவர்களே வருக வருக அந்தத் தொடரில் ஒரு சின்னக்காட்சியில் வந்து பயமுறுத்திப்போட்டீர்கள் ஹிஹிஹி
//அண்ணன் களம் இறங்கிட்டாரு...
சரவெடிய போடுடா....
டப..டப...டப்...டபட...டப்....டப்...
டப்பா...டப்..டுஷ்..டுப்..டு//
Repeate.........
வெய்யக்காலத்துல மலைப்புறங்களில் டூர் போனதுமல்லாமல் பயணக்கட்டுரை வேறயா? நல்லாரும்யா..
Very interesting. Welcome back.
ஹாட் ஸ்பொட் இல இருப்பது உங்க மனைவியின் படமா?
உங்கட மனைவியின் படம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு
இனி மகளின்ட படத்தப் போடுங்க தலைவா
///''ஒரு அரசு கெஸ்ட் அவுஸ், ஒரு ஒயின் ஷாப்,''
ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அற்புதமான லோக்கல் சாப்பாடு சிக்கனோடு. அந்த குளிரில் சூடாக.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. சும்மா அதிருமில்ல.///.
ம்ம்ம் அனுபவிங்க...............;)
உண்மையாவே பதிவு சும்மா குளிருதில்ல! நீங்கள் இல்லாமல் பதிவுலகம் மிக சோர்வாக, நலிந்து, நொந்து இருந்தது, நீங்கள் திரும்பி வந்தது பதிவுலகத்திற்க்கே மீன்உம் ஆக்ஸிசன் கொடுத்து போல் புத்துயிர் பெற்று விட்டது..ஹுஸ்..
பதிவுலக வேந்தே வருக, இதுபோன்ற அற்புதமான பயணக் கட்டுரைகளை அதிகம் தருக. (இனிமே Leave எடுக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க!) :)
ஸ்ரீ....
வாங்க வாங்க..
அக்னி பார்வைக்கே குளிந்துருச்சாம்ல..
நாங்க எல்லாம் என்ன பண்ணுறது..
ஓகே.. ஓகே..
அனர்த்தத்தை ஆரம்பிச்சாச்சா..?
இப்பத்தான் ஒரு வாரமா நிம்மதியா இருந்தோம்..
அதுக்குள்ள திரும்பியாச்சா..?
முருகா..!
/மீ தி பார்ஸ்ட் ....
பத்து நாள் விடுமுறையை அடுத்து பதிவுலகம் திரும்பிய அண்ணன் கேபிள் சங்கர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.... !!//
அதான் வந்திட்டோமில்ல.. பொறவு என்ன...?
/வாங்க வாங்க.
இப்போதான் தண்டோராவும் நீங்க இல்லாம கிக்கே இல்லைனு போட்டிருந்தார்//
நன்றி முரளீ..
நன்றி வண்ணத்துபூச்சியாரே..
நன்றி சிண்டாக்
/கொடைக்கானல் அங்கதான் இருக்கா இன்னும்//
இது மேகமலை போட்டோ.. கொடைக்கானல் பின்னாடி வருது நர்சிம்.
/பயணக்கட்டுரை தூள் :-)
//
நன்றி லக்கிலுக்
/ஏற்கனவே நீங்க யூத்தோ யூத்து ... இதுல சிலு சிலுன்னு கொடைக்கானல் வேற போயிட்டு வந்திருக்கீங்க...
இப்ப பார்க்குறதுக்கு இன்னும் வயசு கொறஞ்சு குழ்ந்தை மாதிரி இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்...//
ஒரு யூத்து மனசு.. ஒரு யூத்துக்குதான் தெரியும்.
/வந்திட்டீங்களா, எத்தனை நாளைக்குத்தான் அந்த ராகவன் படத்தையே பாத்திட்டிருக்கறது. எப்படியும் இன்று இரவு தொலைபேசலாம் என்று இருந்தேன்.
கொடைகானல் ஜூஊஊஊஊஊப்பர் போல,
உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்//
ரொம்ப நன்றிண்ணே.. உஙக் எதிர்பார்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்.
நன்றி ஸ்ரீ..
நன்றி.. டக்ளஸ்.. அப்படித்தான் சொல்றாங்க..
/நல்ல அருமையான location.
கண்டிப்பாக திரையில் மிக அழகாக காட்டுவீர்கள். காத்திருக்கிறேன்//
நன்றி அருண்குமார்..
/வெய்யக்காலத்துல மலைப்புறங்களில் டூர் போனதுமல்லாமல் பயணக்கட்டுரை வேறயா? நல்லாரும்யா.//
என்ன ஒரே புகையற வாசனையா இருக்கு>?
/அமர்க்களமாக தொடருங்கள் சங்கர்..... அந்த கடைசி மாலை பொழுது பிண்ணணியில் உங்கள் போட்டோ டாப் டக்கருங்க ;)//
நன்றி ரபீக் ராஜா.. நல்ல வேளை நம்ம மூஞ்சி.. சரியா தெரியல.. அதனால போட்டோ நல்லாருக்கு.
/நரம்படி நாராயணன் அவர்களே வருக வருக அந்தத் தொடரில் ஒரு சின்னக்காட்சியில் வந்து பயமுறுத்திப்போட்டீர்கள் ஹிஹிஹி
//
அதை பாத்துட்டீங்களா..? ஒரு வாரம் ஜுரத்தில இருந்திருப்பீங்களே..? வ்ந்தியத்தேவன்.
நன்றி அனுஜன்யா..
/பதிவுலக வேந்தே வருக, இதுபோன்ற அற்புதமான பயணக் கட்டுரைகளை அதிகம் தருக. (இனிமே Leave எடுக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க!) :)
ஸ்ரீ..//
அதெப்படி ஸ்ரீ லீவு வுட்டாதானே பயணக்கட்டுரை எழுத முடியும்.
/உண்மையாவே பதிவு சும்மா குளிருதில்ல! நீங்கள் இல்லாமல் பதிவுலகம் மிக சோர்வாக, நலிந்து, நொந்து இருந்தது, நீங்கள் திரும்பி வந்தது பதிவுலகத்திற்க்கே மீன்உம் ஆக்ஸிசன் கொடுத்து போல் புத்துயிர் பெற்று விட்டது..ஹுஸ்..//
ஆனாலும் ரொம்பத்தான் புகழறீங்க.. அக்னிபார்வை.
/ஹாட் ஸ்பொட் இல இருப்பது உங்க மனைவியின் படமா?//
ஆமாம்ணே..
//உங்கட மனைவியின் படம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு
இனி மகளின்ட படத்தப் போடுங்க தலைவா
//
பொறந்தவுடனே சொல்லி அனுப்பறேன். வந்து உங்க மருமகளூக்கு பெயர் வையுங்க.
//வாங்க வாங்க..
அக்னி பார்வைக்கே குளிந்துருச்சாம்ல..
நாங்க எல்லாம் என்ன பண்ணுறது.//
தீப்பெட்டி உடனே அக்னி பார்வைக்கு உஙக் தீப்ப்பெட்டியை அனுப்புங்க...
வெடி வெடிச்சதுக்கு என் கிட்ட காசெல்லாம் கேட்கக்கூடாது நைனா ஹி..ஹி..
நன்றி வசந்த் ஆதிமூலம், ஜீவன்.
வந்தாச்சா? ம்க்கும்
அண்ணே வணக்கம் நல்லாயிருக்கேலா
உங்ககூட பேசினதுலே ரொம்ப சந்தோஷம்
செம ப்ளேஷ்!
நெக்ஸ்டு ப்ளாக்கர்ஸ் மீட்டிங் அங்க தான்!
வாழ்த்துக்களுடன் நானும் மேற்கூரிய அனைத்திலும் இணைகிறேன். (என்ன எழுதுறதுன்னு தெரியல, அதான்) உங்கள பாத்ததுக்கு அப்பறம் கையும் ஓடல, காலும் ஓடல.
அப்போ இந்த இடமெல்லாம் உங்க படத்துல வருது!
நீங்க இல்லாததால இடையிலே புகுந்து..யார் யாரோ விமரிசனம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க..எங்களை காப்பாற்ற உடனே வாங்க..:-))
//நீங்க இல்லாததால இடையிலே புகுந்து..யார் யாரோ விமரிசனம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க..எங்களை காப்பாற்ற உடனே வாங்க..:-))//
நான் சினிமா பற்றி சில இடுகைகள் எழுதியதை இப்படியா போட்டு தாக்குவது
:) :) :) :)
திரும்பி வந்த கேபிளாரை தோரணை படத்தை மற்றுபடியும் பிரெஷ் ஆக ஒரு விமர்சனம் எழுதும்படி மன்றாடிக் "கொல்கிறேன்".
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
இந்தியாவின் மானத்தை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் எப்படி காப்பாற்றினார்?
தலைவா... போட்டோ ‘மௌலி’சார நியாபகப்படுத்துது. ஒருவாரம் உடம்பு சரியில்லை. அதான் பார்க்கமுடியவில்லை. தொடர்புகொள்ளாமைக்கு வருந்துகிறேன்.
படங்கள் அத்தனையும் குளிர்ச்சி.
பயணக்கட்டுரை...!!! இன்னும் ரசிக்கவைக்குதுங்கோ!!
நம்ம ஊருபக்கம்மாவா போனீங்க?
போற வழியில தேனி பெரியகுளம் இடையில லட்சுமிபுரம்ன்னு ஒரு ஊரு பாத்தீங்களா?
கேபிளுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment