வால்மீகி - திரைவிமர்சனம்
திருடனாய் இருந்த வால்மீகி பின்னர் திருந்தி இராமாயணம் எழுதினார் அந்த வால்மீகி.. சென்னையின் பிக்பாக்கெட்டான பாண்டி தன் காதலியின் நினைவாய் தன் வாழ்கையை மாற்றி எழுதிக் கொள்கிறான் இந்த வால்மீகி.
வர வர தமிழ் சினிமாவில் படித்த பெண்கள் எல்லாம், ரவுடி, பிக்பாக்கெட், விபசாரம் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கியைதான் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பது தவறில்லை ஆனால் அவர்கள் எதனால் காதல் வயப்படுகிறார்கள் என்று காட்சிப்படுத்த தவறுகிறார்கள். அந்த தவறை தன் மோசமான திரைக்கதையினாலும், மேக்கிங்கினாலும் சொதப்பி எடுத்திருக்கிறார்கள்.
பாண்டி என்பவன் சென்னையின் ப்ரொபஷனல் பிக்பாக்கெட், ஹீரோயின் வந்தனா ஒரு பணக்கார ஷோஷியல் கான்ஷியஸ் உள்ள, குழந்தைகளை காதலிக்கும், ப்ளே ஸ்கூல் நடத்தும் பெண், இப்படி ஒரு கேரக்டரை வைத்துவிட்டு, ஆங்காங்கே பார்க்கும், பிச்சைக்காரன், அனாதை சிறுவர்களை பாராட்டி சீராட்டினால், நடு ரோடில் பிக்பாக்கெட் அடிக்கும் பாண்டியை காதலிப்பதற்கு காரணம் கேட்க முடியாதில்லையா..? படத்தின் இன்னொரு கதாநாயகியாக வரும் பூக்கடை கனகாவுக்கு பாண்டியின் மேல் வரும் காதலுக்கான அழுத்தமான காரண காட்சிகள் கூட, கதாநாயகி வந்தனா பாண்டியின் மேல் காதல் கொள்ள வைத்திருக்கும் காட்சிகளில் இல்லை. சும்மா குளத்திலிருந்து காப்பாற்றினாலே அவன் நல்லவனாகிவிடுவானா.? அவனின் எந்த குணங்களை வைத்து அவன் நல்லவன் என்று முடிவுக்கு வருகிறாள் வந்தனா. இம்மாதிரியான படத்துக்கு மிக அழுத்தமான லவ் டிராக் வேண்டும், அப்போதுதான் இருவரின் பிரச்சனைகளின் வலி பார்க்கும் பார்வையாளனுக்கு புரியும். அவனும் உருக ஆரம்பிப்பான்.
அதே போல் பாண்டியினால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணை ஒரு லோக்கல் விபசாரியாய் பார்த்தவுடன் பாண்டி மனசு மாறுவது எல்லாம் டிராமா. சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வந்து ஏமாந்தவள், ஸ்லம் விபசாரியாய் மாறும் அந்த நிகழ்வுகள் நம்மை எவ்வளவு பாதிக்க வேண்டும்? வந்தனாவின் பேரை பாண்டியின் மார்பில் பச்சை குத்தியிருப்பதை பார்த்து தன் காதல் தோல்வியை உணரும் கனகாவுக்கு காட்சி வைத்த இயக்குனர், அந்த பெயரை படத்தின் க்ளைமாக்ஸில் வந்தனா குறிப்பிட்டு இது தான் நீ கண்டிப்பா மாறுவேன்னு நம்பிக்கை கொடுத்திச்சு என்று சொல்கிறார். இந்த காட்சிக்கு முன்னால் அவன் தன் பெயரை பச்சை குத்தியிருப்ப்பதை எப்போது பார்த்தாள்?. அவள் பார்க்கும் காட்சி வைத்திருந்தால்,வந்தனா பாண்டியின் மேல் வைத்திருக்கும் காதலுக்கு இன்னும் அழுத்தம் கூடியிருக்காதா.? பாண்டியை எதுக்காக போலீஸ் அடையாள அணிவகுப்பு செய்கிறார்கள்? அதுவும் வந்தனாவுக்காக.? போலீஸ் சொல்வது பீரோ புல்லிங் விஷயத்துக்காக என்று, அப்படி ஒரு விஷயமே வந்தனாவின் வீட்டில் நடை பெறவில்லையே.? இண்டர்வெல் விடவேண்டுமே என்று இப்படி ஒரு தடாலடி காட்சியா.? ப்ளாஷ் பேக்கில் வ்ந்தனாவின் செயினை திருடிய திருடன் பல வருடஙக்ள் கழித்து அதை விற்கும் போது மாட்டிக் கொண்டு பாண்டி நடத்தும் வால்மீகி இல்லத்துக்கு வருவது எல்லாம் லாஜிக் இடி என்றால் அது மிகையாகாது.
ஒரு காலத்தில் ப்ளஸாக இருந்த இளையராஜா இந்த படத்துக்கும் மிகப்பெரிய மைனஸ் ஆகிவிட்டார். அவர் பாட்டுக்கு தன் வேலையுண்டு, அவர் ரூமுண்டு என்று இருந்தவரை கூப்பிட்டால் இப்படிதான் நடக்கும். சரி பாடல்களில் தான் அரத பழய வாசனை என்றர்ல். பிண்ணனி இசை.. ம்ஹூம்.
ஆனால் அதற்கு இளையராஜாவை குறை சொல்ல கூடாது. பிண்ணனி இசை அமைக்க அதற்கான புட்டேஜூகளை கொடுக்க வேண்டியது இயக்குனரின் கிரியேட்டிவிட்டியை சார்ந்தது. அது இப்படத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல இடங்களில் உணர்வுகளை வெளிபடுத்த வேண்டிய காட்சிகளையெல்லாம் விஷூவலாக எக்ஸ்டெண்ட் செய்யாமல், கட் டூ கட் போயிருப்பது மேக்கிங் குறைகள்.
ஒளிப்பதிவாளர் அழகப்பன் நல்ல டெக்னீஷியன் தான் ஆனால் எண்டஹ் ஒரு நல்ல டெக்னீஷியன்களுக்கும் நல்ல புரிதல் உள்ள ஆள் இயங்க தேவை. அந்த குறை படம் பூராவும் தெரிகிறது. இப்படி குறையாய் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம். முடியல.
தப்பான இடங்கலில் பாடல்களின் ப்ளேஸ்மெண்ட், வீக்கான டயலாக், விஷூவல் மேக்கிங் என்று பல சொதப்பல்கள். மிக அழகாய் சொல்ல வேண்டிய ஒரு காதல் கதையை மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர் அனந்த நாராயணன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
பாண்டியாய் வரும் அகிலுக்கு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. உருவம் ஒத்துழைத்ததனால் பெரிய குறைகள் தெரியவில்லை. வந்தனாவக வரும் மீரா நந்தன் அழகாய் இருக்கிறார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்னொரு கதாநாயகி.. நன்றாக நடிக்கிறார். அஜயன் பாலா இன்னும் இம்மாதிரியான கேரடர்களில் தொடர்ந்து நடித்தால் மிக விரைவில் லோக்கல் ரவுடி கேங் ஆளாகிவிடுவார். உஙக் ரேஞ்சே வேற தலைவா. சீக்கிரம் படம் பண்ணுங்க.
பாராட்ட வார்தைகளேயில்லையா என்றால் ம்..ம்.. அது கூட இருக்கிறது. முக்கியமாய் வந்தனாவின் ஸ்கூல் ஆனியுவல் டே அன்று மழலைகள் செய்யும் கண்ணபர் நாடக கூத்து இருக்கிறதே. கொள்ளை அழகு. அதே போல் தன்னை ஆணாய் வரித்து கொண்டு வாழும் பெண் திருடி, வந்தனாவின் பையை திருடிக் கொண்டு போன அடுத்த சில மணி நேரங்களில் தன் நெட்வொர்க் மூலம் கண்டுபிடித்து கொடுப்பது புதுசில்லை என்றாலும் இண்ட்ரஸ்டிங். க்ளைமாக்ஸ் வரும்போதாவது படம் சுறுசுறுப்பாவது என்று மிக சில காட்சிகளே இவ்வளவு புலம்பல்களும் விகடனிலிருந்து இன்னொரு சொதப்பல் வந்திருச்சேன்னு மனசுக்குள்ள வர்ற காண்டுலதான். பிரிஞ்சிக்க.. விகடன் தாத்தா..
வால்மீகி - என்னத்தை சொல்றது.. ம்ஹூம்….?????
டிஸ்கி:
விகடனில் குறைந்தது இதுவரை 300 உதவி இயக்குனர்களிடமாவது கதை கேட்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதிலும் இவர்கள் செலக்ட் செய்த கதைகளை குறைந்தது ஒரு வருடத்துக்கு, ஆளாளுக்கு மாற்றி, மாற்றி, கேட்டு, கரெக்ஷன் செய்து செப்பனிட்டு சுமார் பணிரெண்டு முதல் பதினேழு முறையாவது பல பேர்களிடம் கதை சொல்லி ஓகே ஆன பிறகும் கதை கேட்டுதான் படமெடுக்கிறார்கள். அப்படி பல முறை கேட்டு ஓகே செய்யப்பட்ட கதைதான் இப்படம். பதினேழு பேர் கேட்டும் இவ்வள்வு ஓட்டைகள் தெரியவில்லை என்றால் என்னத்தை கதை கேட்டு, .. அடப் போங்கப்பா.. ஒரு படத்தின் ஹிட், தோல்வி முன்னமே தெரிந்து விட்டால் எல்லோருமே ஹிட் படம் தான் கொடுப்பார்கள். இந்த ரிஸ்க் தான் இந்த துறையின் அழகே. ஆனா அந்த ரிஸ்கையே ரஸ்கு சாப்புடுற மாதிரி விகடனில் இருந்த இம்மாதிரியான் படம் வருவதை ஏற்க முடியவில்லை. இந்த கதையை முதலில் செய்வதாய் இருந்தவர் லிங்குசாமி
சமீபத்தில் இவர்களிடமிருந்து செலக்ட் ஆகாமல் வெளியே வேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்க பட்டு ஹிட்டான படம் பசங்க்.. ப்ளாப் படம் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். இன்னொரு படம் இப்போது தயாரிப்பிலிருக்கிறது..
ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஒரு கதையை நிறைய பேர் கேட்டு திருத்தினால் இப்படிதான் ஆகும். அதுவும் உலக சினிமாக்கள் பார்த்த ஆத்மாக்கள் கேட்டால் இந்த கதிதான்.
இந்த கதையை மற்ற தயாரிப்பாளர் எடுத்திருந்தால் விகடன் கிழித்திருக்கும். அவர்கள் தயாரிப்பு. மதிப்பெண் வழக்கம்போல் 40-க்கு மேல்தான் இருக்கும்.
மிக நேர்மையான விமர்சனம். இளையராஜா பற்றி...வேண்டாம்பா... எனக்கெதுக்கு வம்பு.
அதானே.. Too many cooks spoil the soup...
இது தெரியாதா விகடனுக்கு..??
என்னவோ போங்க..
சன் டீவியின் டாப் டென்ல
மாசிலாமணி
வால்மீகி ..
இன்னும் இரண்டு மாசம் ஒடும்.
அதானே.. Too many cooks spoil the soup...
இது தெரியாதா விகடனுக்கு..??
என்னவோ போங்க..
சன் டீவியின் டாப் டென்ல
மாசிலாமணி
வால்மீகி ..
இன்னும் இரண்டு மாசம் ஒடும்.
கன்னாபின்னான்னு பதிவுகளைப் படிச்சு ரொம்ப கெட்டுபோயிருக்கீங்க.
அப்போ பாக்க வேண்டாம்..
Please advise me.
Gadget ல் எந்த மாற்றமுமில்லாமல் templates யை மாற்றுவது எப்படி.
மிக மிகச் சரி,ஷங்கர்.
மாசிலாமணி அனுபவம் ..
:)))
தங்களின் அதிமேதவிதனத்தை விமர்சனங்களின் மூலம் தெரிவித்துவிட்டு படம் எடுக்கும்போது என் சார் இப்படி சொதப்பறாங்க?
//ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.
///
நீங்களாவது நல்ல படமா எடுப்பீங்கன்னு நம்புகிறோம்
நீ இன்னும் அங்கே கதை சொல்லாதது இன்னும் அழகு.
-எதிர்பார்க்கணும் அண்ணே... என்ன பெரிய விகடன் ...? சினிமா ன்ற சக்தி முன்னாடி எல்லோரும் தூசுதான்.
வெற்றியை யாராலும் கணிக்க முடியாது ன்றதுக்கு சரியான உதாரணம்.
:-((((
மற்ற இயக்குநர்கள் அலையும் அலைச்சலையும், மன உளைச்சலையும் பார்த்துதான். நொந்தகுமாரன்.
அப்போ பாக்க வேண்டாம்..//
அதை நீங்க முடிவு பண்ணிக்கங்க..
Please advise me.
Gadget ல் எந்த மாற்றமுமில்லாமல் templates யை மாற்றுவது எப்படி//
அப்படி மாற்ற்முடியாது பாலாஜி.. ஆனால் மாற்றுவது எப்படி என்று எனக்கு தொலைபேசுங்கள். சொல்கிறேன்.
தங்களின் அதிமேதவிதனத்தை விமர்சனங்களின் மூலம் தெரிவித்துவிட்டு படம் எடுக்கும்போது என் சார் இப்படி சொதப்பறாங்க? //
அப்படி கிடையாது ஸ்டாடிஸ்டிக்.. விமர்சனம் செய்வதற்கும் ஒரு பரந்த அறிவு வேண்டும். அதை அதிமேதாவிதனம் என்று சொல்லிவிடமுடியாது. எங்கோ தவறு நடக்கிறது. இல்லாவிட்டால் பத்திரிக்கையுலக ஜாம்பவான் விகடனில் இவ்வளவு சொதப்பலான படம் எடுக்க மாட்டார்கள்.
//ஒரு பின் குறிப்பு: நான் இதுவரை அங்கு கதை சொல்ல முயற்சிக்காத ஒரு உதவி இயக்குனன்.
///
நீங்களாவது நல்ல படமா எடுப்பீங்கன்னு நம்புகிறோம்//
அதை நான் சொல்ல முடியாது சார். படம் வாய்ப்பு கிடைத்து, அதை நீங்க் பார்த்து சொல்லணும் ந்ல்ல படமா .. இல்லியான்னு..?
:-((((//
தலைவரே நான் இளையராஜாவின் மிகப்பெரிய வெறியன். மனசு கேட்கலை ரொம்ப ரிப்பீடீஷன்.. போர்..
It's my mobile number: 9003705598. Please give me a missed call then I will call you.
கச கசன்னு குருப் குருப்பா பேசிகிட்டு இல்லாம ஒரு முறையா சின்ன அறிமுகம், பிரபல பதிவர்களின் நறுக் பேச்சுகள், பிரச்சினைகள், அதுக்கான தீர்வு, பழைய பஞ்சாயத்துகள், சில வருத்தங்கள், குறிப்புகள், அப்புறம் கொஞ்சமா விவாதம் ன்னு நடக்க என்னோட விருப்பம், ஆசை. பார்த்து பேசி ஏதாவது பண்ணுங்க. முதன் முறையா நான் பார்த்த.(.? ) கடந்த பதிவர் சந்திப்புல என்ன பண்ணாங்கன்னு என் சிற்றறிவுக்கு இது வரைக்கும் எட்டல. வாழ்த்துகள். ஒரு ப்ரெசென்ட் போட்டுகோங்க என் இடத்திற்கு....
வீணாய் போய்விட்டது.
கரெக்ட் சார்....அதை நான் ஒத்துகொள்கிறேன் , விமர்சனம் எழுத ஒரு பரந்த அறிவு வேண்டும்....
அதுவும் இது மாதிரி படங்களை பார்கிறதுக்கு பெரும் தைரியமும், அதை சகித்துக்கொண்டு விமர்சனம் எழுதுவதற்கு மிகப்பரந்த அறிவும் வேண்டும்...
நான் விமர்சனம் எழுதுற எல்லோரையும் தப்பா சொல்லல்ல ... மற்ற படங்களின் விமர்சனத்தை மட்டும் நடுநிலையாக சொல்லிவிட்டு தங்கள் படங்களை மொக்கையாக எடுப்பதையே சொல்கிறேன்....
//எங்கோ தவறு நடக்கிறது.///
வழிமொழிகிறேன்..
//
என்ன தான் நல்ல படம் எடுத்தாலும்... வெற்றி/ தோல்வி ரசிகன் கையில தான் இருக்கு....!
( SMS, படிக்காதவன் வியாபார ரீதியான வெற்றிக்கு உதாரணம்.)
நல்ல விமர்சனம் தல...
///
try panni parungalen. oru vaelai kidaichiruchuna, unga padathuku nanga vimarsanam ezhuthuvomla.
ஆமாம் பேரரசன்.
நீங்க விமர்சனம் பண்ண ஆசைப்படறதுல தப்பில்ல பப்பு.. நிச்சயமா குறை நிறையெல்லாம் சொல்லி பண்ணுங்க.. ஆனா என்னால ஒரு வருஷன் 20 வாட்டியெல்லாம் கதை சொல்லி அலைய விருப்பமில்ல.
Vikatan Out ?????