Dasvidaniya - Hindi Film Review

தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.

அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது.

அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்து விதமான் ஆசைகளை அடைய விழைகிறான்.
ஓருவன் தன்னுடய் சாவை ஒப்பாரி வைக்காமல் கொஞ்சம் சர்ரியலிஸ்டிக் காமெடியுடன் இயல்பாய் தர முடியுமா..? என்று கேட்டால் இதோ.. தஸ்விதானியா.
விந்ய் பதக்கின் நடிப்புக்கு மீண்டும் ஓரு மைல்கல். மனுசன் சும்மா பிச்சி உதறியிருக்கார்.. அவருடய டயலாக் டெலிவரியும்,பாடி லேங்குவேஜூம் பகுத் அச்சா ஹே.. அதிலும் அவருடய் முன்னால் காதலியிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல ’டம் சராப்ஸ்’ விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் சிம்பிளி சூப்பர்ப்.. காதலி நேகா தன் பங்குக்கு நன்றாகவே நடித்துள்ளார்.
அதன் பிற்கு வரும் ரஷ்ய காதலி.. ஓரு காட்சியிலும் அவள் பேசும் பேச்சுக்கு சப்டைட்டில் போடாமலேயே அவர் பேசுவது நமக்கு புரிகிறது.. அது சரி காதலுக்கும், காமத்துக்கும் பாஷை ஏது..

ராப் ரையினரின் “த பக்கெட் லிஸ்ட்” , மற்றும் வெயின் வாங்ஸின் “லாஸ்ட் ஹாலிடே”யை ஞாபகபடுத்தினாலும் இயக்குனர் சஷான்ந்த் ஷா பாராட்டபட வேண்டியவர்.
மேலும் படத்தை பற்றி நிறைய சொன்னால் படத்தை ரசிக்க முடியாது..
அதனால் டிவிடியிலோ.. ஏதாவது ஹிந்தி சேனலிலோ.. கண்டு மகிழ்க...
DASVIDANIYA
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
==========
சங்கர்.. வீடியோ எப்ப அப்லோட் பண்ணுறீங்க..??
Present Sir.
நம்ம கடையாண்ட வந்தீங்கன்னா... உங்கள டரியாலாக்குற விருந்து ஒன்னு இருக்கு.
//// எங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா. இதுக்கு போயி அலட்டிகலாமா..???
சொல்றது யாரு.. எங்க ஊர் கஜினி..
செய்திருக்கிறார்களா சங்கர்?
மரணத்தைத்தான் எத்தனை விதமாக நாடகமாக்கி இருக்கிறார்கள்.
மனிதர்களின் தீராத காதல் மரணத்தோடுதான்.
படம் பார்த்து விட்டு உங்களுக்குச் சொல்கிறேன்,ஷங்கர்
வாழுற நாள இன்னும் சந்தோசம வாழனும்.
நல்ல படங்கள நல்ல விதமா காப்பி அடிக்குறது தப்பில்லங்கண்னா
டக்ளஸ்....... said...
37 வயசானா, அவரு இளைஞனா அண்ணே...?
*/
யோவ் டக்கு... உனக்கு அண்ணன் வாயை புடுங்கலைன்னா தூக்கமே வராதே...
37 வயசானா இளைஞன் தான், 57 வயசானா தான் யூத்து...
இப்ப உன்னோட சந்தேகம் தீர்ந்துச்சா...
பேசாமே உக்காந்து படம் பாரு.
பார்க்க வேண்டிய படம் போல் இருக்கு....
பார்த்து விட வேண்டியது தான்
வீடியோ இன்னமும் கையில் கிடைக்கவில்லை. பாலா.. அநேகமா இன்னும் ரெண்டு நாளில்
Present Sir.
நம்ம கடையாண்ட வந்தீங்கன்னா... உங்கள டரியாலாக்குற விருந்து ஒன்னு இருக்கு//
நைனா.. உன் பக்கத்துக்கு வரவே பயமாருக்கு இல்ல.. கூச்சமாயிருக்கு..
செய்திருக்கிறார்களா சங்கர்?
11:21 AM//
ஐ.. அஸ்கு..புஸ்கு..
மரணத்தைத்தான் எத்தனை விதமாக நாடகமாக்கி இருக்கிறார்கள்.
மனிதர்களின் தீராத காதல் மரணத்தோடுதான்.
படம் பார்த்து விட்டு உங்களுக்குச் சொல்கிறேன்,ஷங்கர்
//
கண்டிப்பாக பாருங்கள் சார்..
பின்னே.. நீங்களெல்லாம் சின்ன பசங்க.. நாங்க் எல்லாம் இளைஞர்கள்:)
வாழுற நாள இன்னும் சந்தோசம வாழனும்.
நல்ல படங்கள நல்ல விதமா காப்பி அடிக்குறது தப்பில்லங்கண்னா
3:10 PM//
அப்படி சொல்லுங்க வெட்டி வேலு..
வினோத் கவுதம் சொல்வதும் சரிதான்.
கண்டுபிடிசிட்டருய்யா. இந்தபதிவே பழசுதான்..
பார்க்க வேண்டிய படம் போல் இருக்கு....
பார்த்து விட வேண்டியது தான்
//
நன்றி மாயாவி..
ஏதாவது தமிழ் பட இயக்குனரிடம் பணிபுரிந்து விட்டு
படம் இயக்கலாம் நீங்கள் !
இல்லை நிறைய பணம் இருந்தால் உடனே இயக்குநராகி விடுங்கள்
தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல கலைஞன் கிடைப்பான்
ஏதாவது தமிழ் பட இயக்குனரிடம் பணிபுரிந்து விட்டு
படம் இயக்கலாம் நீங்கள் !
இல்லை நிறைய பணம் இருந்தால் உடனே இயக்குநராகி விடுங்கள்
தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல கலைஞன் கிடைப்பான்
8:49 AM//
நன்றி தமிழ் ராஜா.. நான் ஏற்கனவே 90க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், சுமார் 85 திரைபடஙக்ளில் நடித்தும், இரண்டு டிவி சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி, ஒரு திரைபடத்திற்கு திரைக்கதை, மற்றொரு திரைபடத்திற்கு வசனமும், இதை தவிர மூன்று குறும்படஙக்ளை இயக்கியும் உள்ளேன்.
பொய் சொல்லாதிங்க!!
'தஸ்விதானியா' என்றால் 'GOOD BYE' என்று ஆங்கிலத்தில் பொருள் கொள்ளக்கூடிய 'ரஷ்ய' மொழிச்சொல். 'PAKKA' என்றும் சொல்லலாம்.
நான் ரஷ்யாவில் 6 வருடம் அம்மொழி கற்று பேசி வாழ்ந்துள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,
பாலா!!