குற்றாலம் -2
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல, அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்ப...