Thottal Thodarum

Jul 28, 2009

நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்

Teizo_Group_by_silver_heart_tidus
என்னுடய ஆபீஸுக்கு அருகில் ஆண், பெண், இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று இருக்கிறது.. கல்லூரிக்கு  இரண்டு கட்டிடங்களுக்கு முன் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அந்த கல்லூரி வருவதற்கு முன் அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பலே இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை,  ஜகத்ஜோதியாய் கும்பல். கோயிலுக்கு காலேஜ் போகும் முன் பெண்கள் தினமும் வர, அதனால் அவர்களை தொடரும் பையன்களும் வர, இதற்கு நடுவில் காதலர்களுக்கு உதவும் ஆஞ்சநேயர் என்று புரளி கிளம்பிவிட, ஆஞ்சநேயருக்கு கொண்ட்டாட்டம் தான்.

தினமும், காலையிலும், மாலையிலும் கொத்து, கொத்தாக ஐஸ்கேண்டி பெண்கள் வருவதை, அவர்கள் என் ஆபீஸை கிராஸ் செய்வதை ஆபீஸ் ஜன்னலிலிருந்து பார்க்க, அக்னி நட்சத்திரத்திலும், இமாலய குளிர்ச்சியாயிருக்கும். அப்படி என்னதான் பேசுவார்கள், அவ்வளவு சிரிக்க, சிரிக்க, பின் தொடரும் பைன்களுக்கு லேசாய் சிக்னல் காட்டும் பெண், அதை பெருமையாய் தன் தோழிகளிடம் கிசுகிசுக்கும் பெண், போகிற போக்கில துரிதமாய் கட்டைவிரலில் புயல் வேக SMS அனுப்பும் பெண், எதை பற்றியும் கவலை படாமல் புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு, நடக்கும் பெண், கும்பலாய் போகும் தைரியத்தில் பையன்களை கலாய்க்கும் பெண்கள்,  பைக்கில் போகும் பையன்களை வழிமறித்து நிறுத்தி, அவன் பின்னால் அசால்டாய் ஏறி உட்கார்ந்து செல்லும் ஜீன்ஸ், குர்தா பெண்,    சல்வார் துப்பட்டாவாய் இருந்தாலும், டி.ஷர்ட்டாய் இருந்தாலும் ,அடிக்கொரு முறை தன் மார்பை பார்த்து இழுத்துவிட்டு கொள்ளும் பெண்கள் என்று எங்கும் பெண்கள். பெண்கள்.. பெண்கள்.. முதலாளியாய் இருப்பதால் கொஞ்சம் நாசூக்காகத் தான்  பார்ப்பேன்.

ஆனால் என் ஆபீஸில் அக்கவுண்ட் செக்‌ஷன் க்ளார்க்காக இருக்கும் வெஙக்டேஷுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை. இந்த காலேஜ் வந்ததிலிருந்து, ஒரு நாள் கூட 10 மணி ஆபீஸுக்கு சரியான டைமில் வராதவன். இப்போதெல்லாம் சரியாய் எட்டரை மணிக்கு ஆபீஸ் வாசலில் வந்து நின்று விடுகிறான்  காலேஜுக்கு எதிர்தார் போல் இருக்கும்  பெட்டிக் கடையில் ஒரு சிகரெட்டையும், டீயையும் வைத்துக் கொண்டு தம் அடிப்பதை போல நின்று, நிதானமாய் பார்த்துவிட்டுதான் வருவான். திரும்பி வரும் போது தேன் குடித்த நரி போலிருப்பான். அவனுக்கு வயது வந்த ஒரு பெண் இருக்கிறாள்.

அன்றும் அப்படித்தான் அவன் வழக்கம் போல் வாசலில் தம் அடித்தபடி நிற்பதை பார்த்த நான் மனசுக்குள் சிரித்தபடி காரை பார்க்கிங் செய்தேன். அப்போது என் ஆபீஸில் வேலை பார்க்கும் இரண்டு பெண் ஊழியர்கள், வெங்கடேஷை கடை வாசலில்  நிற்பதை பார்த்துவிட்டு, ஒரு மாதிரியாய் சிரித்து கொண்டு, என்னை கிராஸ் செய்தப்டி,

“வெங்கடேஷ் சாரை பாரு என்ன சந்தோஷமா சைட் அடிச்சிட்டு இருக்காரு.. அவரு பாக்குற பொண்ணுங்க வயசில அவருக்கே ஒரு பொண்ணு இருக்குதே.. அந்த பொண்ணுங்கள பாத்தா தன் பொண்ணு நினைப்பு வராது..?” என்று பக்கத்திலிருந்தவளை பார்த்து கேட்க,

“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்



நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

45 comments:

Raj said...

ம்ஹூம்...வயசு பொண்ணு, அதுவும் காலேஜ் படிக்கற பொண்ணு இருக்கிற அப்பாக்கள்....நிச்சயமா நீங்க எழு்தி இருக்கிற அளவுக்கு மோசம் இல்ல!

Cable சங்கர் said...

/ம்ஹூம்...வயசு பொண்ணு, அதுவும் காலேஜ் படிக்கற பொண்ணு இருக்கிற அப்பாக்கள்....நிச்சயமா நீங்க எழு்தி இருக்கிற அளவுக்கு மோசம் இல்ல//

இவ்வளவு வெளிப்படையாய் இல்லாட்டாலும் உள்ளுக்குள்ளே.. :)

Raju said...

நிதர்சனம்தான்.

தராசு said...

அண்ணே,

to be honest, Lemon Tree யும் டக்கீலாவும் மாதிரி இல்லண்ணே. அந்தக் கதைய ஒரு ஐந்து முறையாவது வாசித்திருப்பேன். அந்த நிகோடின் ஒட்டிய சுவர்கள் போன்ற வர்ணனைகளுக்குமுன் இது ஒண்ணுமேயில்ல.

Cable சங்கர் said...

//நிதர்சனம்தான்.


நன்றி டக்ளஸ்

Cable சங்கர் said...

/அண்ணே,

to be honest, Lemon Tree யும் டக்கீலாவும் மாதிரி இல்லண்ணே. அந்தக் கதைய ஒரு ஐந்து முறையாவது வாசித்திருப்பேன். அந்த நிகோடின் ஒட்டிய சுவர்கள் போன்ற வர்ணனைகளுக்குமுன் இது ஒண்ணுமேயில்ல//

ஒரு பக்கம் இந்த கதை உங்க மன்சை தொடலைன்னாலும் அந்த கதை இந்த அளவுக்கு பாதிச்சதை நினைத்து சந்தோஷப்படுறேன்ணே.. மிக்க நன்றி.

நையாண்டி நைனா said...

அண்ணே...
கருத்து நிதர்சனம்.
இந்த தடவை கதை சொல்லும்பாங்கில் அழுத்தம் குறைவு.

நையாண்டி நைனா said...

ஆனா இன்னும் நிதர்சனம் என்ன அப்படின்னு பார்த்தா....
பெண்கள் அப்படி பேச மாட்டார்கள்.
"கல்யாண வயசிலே பொண்ணு இருந்தாலும், இந்த ஆளு ஸ்மார்ட்டு, உள்ளே இருக்காரே மொதலாளி அவரு யங்கா இருந்தாலும் ரசனை இல்லாத ஜென்மம்" என்றே சொல்வார்கள்

Cable சங்கர் said...

/அண்ணே...
கருத்து நிதர்சனம்.
இந்த தடவை கதை சொல்லும்பாங்கில் அழுத்தம் குறைவு//
ஒரு பக்க கதையாய் ஆரம்பித்தது அதனால்தான் கொஞ்சம் டெப்த் குறைச்சல்.. நல்ல அலசல் நைனா..

Cable சங்கர் said...

/"கல்யாண வயசிலே பொண்ணு இருந்தாலும், இந்த ஆளு ஸ்மார்ட்டு, உள்ளே இருக்காரே மொதலாளி அவரு யங்கா இருந்தாலும் ரசனை இல்லாத ஜென்மம்" என்றே சொல்வார்கள்
//

அப்படி சொன்னா நல்லாத்தான் இருக்கும் எங்க சொல்லுறாளுக.. :)

நாஞ்சில் நாதம் said...

விகடன் ஒரு பக்க கத மாதிரி இருக்குண்ணே

Ashok D said...

;)

நர்சிம் said...

கேபிள் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது...

அடிமன எண்ணங்களை கதையாக சொல்லும் பொழுது..கதைசொல்லியின் அடி மன எண்ணத்தை சொல்வதாக எழுதுவதே வாதத்திற்கும் சரி,லாஜிக்கிற்கும் சரி ஒத்து வரும்.

இது குறித்து விவாதிப்போம்...

Bala said...

//அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்//

என்ன கேபிள் இப்படி எழுதிடிங்க.
நான் இதை வன்மையாய் கண்டிக்கிறேன். நிதர்சன கதையில் நிதர்சனம் குறைவு. நிதர்சனம் சரியை இருந்தால் அந்த வசனம் இப்படி வர வேண்டும்.

"அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை. பேத்தியை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான். அதுவும் காலேஜ் பிகர் என்றால் செம பிகர் தான்".

கலையரசன் said...

ஓ.. இது யூத் ஸ்டோரியா?

மீ த எஸ்கேப்!!

Unknown said...

யோவ் கேபிள், ஏனைய உமக்கு இந்த வேலை. நீர் எமது சங்க உறுபினர்களை அவமானபடுத்துகிறீர். நீர் இப்படி எம்மைப்பற்றி உண்மையை எழுதுன இதுக்கு பிறகு எப்படி ஐய நாங்கள் பெண்களை சைடு அடிக்கிது, உரசுகிறது எல்லாம். பெண்கள் எல்லாம் உஷரானால் நாங்கள் என்ன கல்லையா பொய் உரசுகிறது. இவற்றை மிகவும் வயசான வாலிபர் சங்கம் சார்பாக வன்மையை கண்டிக்கிறேன்.

வீர தளபதி
j k ரித்திஸ் MP
தலைவர், செயலாளர், பொருளாளர், கோ.ப.ச, போசகர், உறுப்பினர்
மிகவும் வயசான வாலிபர் சங்கம்
விவேகனந்தர் தெரு
ராமநாதபுரம்.

ஆண்மை குறையேல்.... said...

வ‌ர‌ வ‌ர‌ கேபிள் வய‌ர் அறுந்து கிட்டு வ‌ருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

ஆண்மை குறையேல்.... said...

வ‌ர‌ வ‌ர‌ கேபிள் வய‌ர் அறுந்து கிட்டு வ‌ருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

Cable சங்கர் said...

/விகடன் ஒரு பக்க கத மாதிரி இருக்குண்ணே
//

கரெக்டா சொன்னீங்க நாஞ்சில் நாதம்

Cable சங்கர் said...

நன்றி அசோக்

Cable சங்கர் said...

//கேபிள் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது...

அடிமன எண்ணங்களை கதையாக சொல்லும் பொழுது..கதைசொல்லியின் அடி மன எண்ணத்தை சொல்வதாக எழுதுவதே வாதத்திற்கும் சரி,லாஜிக்கிற்கும் சரி ஒத்து வரும்.

இது குறித்து விவாதிப்போம்..//

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்னுதான் செஞ்சேன்.

Cable சங்கர் said...

/"அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை. பேத்தியை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான். அதுவும் காலேஜ் பிகர் என்றால் செம பிகர் தான்"//

சரி பண்ணிடறேன் பாலா..:)

Cable சங்கர் said...

/ஓ.. இது யூத் ஸ்டோரியா?

மீ த எஸ்கேப்!!//

haa..haa..haa..

Cable சங்கர் said...

/யோவ் கேபிள், ஏனைய உமக்கு இந்த வேலை. நீர் எமது சங்க உறுபினர்களை அவமானபடுத்துகிறீர். நீர் இப்படி எம்மைப்பற்றி உண்மையை எழுதுன இதுக்கு பிறகு எப்படி ஐய நாங்கள் பெண்களை சைடு அடிக்கிது, உரசுகிறது எல்லாம். பெண்கள் எல்லாம் உஷரானால் நாங்கள் என்ன கல்லையா பொய் உரசுகிறது. இவற்றை மிகவும் வயசான வாலிபர் சங்கம் சார்பாக வன்மையை கண்டிக்கிறேன்.

வீர தளபதி
j k ரித்திஸ் MP
தலைவர், செயலாளர், பொருளாளர், கோ.ப.ச, போசகர், உறுப்பினர்
மிகவும் வயசான வாலிபர் சங்கம்
விவேகனந்தர் தெரு
ராமநாதபுரம்.
///

நன்றி கருத்து..

Cable சங்கர் said...

/வ‌ர‌ வ‌ர‌ கேபிள் வய‌ர் அறுந்து கிட்டு வ‌ருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )
//

புரியலையே.. தலைவா..

அத்திரி said...

உண்மையிலே இது யூத்து ஸ்டோரிதான்....................

வயதுக்கு வந்த பெண் உள்ள எந்த அப்பனும் இப்படி அப்பட்டமா சைட் அடிக்கமாட்டாங்கதானே அங்கிள்

VISA said...

//தேன் குடித்த நரி போலிருப்பான்//

ஐய்யா எப்படி இப்படி எல்லாம் தோணுது உங்களுக்கு.???நல்ல கதை.

Prabhu said...

“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்/////

இந்த செண்டர் தீம் ஒன்லைன் ஓ.கே.
ஆனா, கொஞ்சம் வெயிட்டா எழுதிருக்கலாம், நடையில.

nila said...

//“அதெல்லாம் வராது ஜோஸ்னா, நமக்குத்தான் ஒரு பிள்ளைய பார்த்தா, நம்ம புள்ள மாதிரியிருக்கேன்னு தோணும், ஆனா ஆம்பளைக்கு தன் பொண்ணை தவிர எல்லா பொண்ணுங்களும் ‘பிகர்’தான்.” என்றாள்//

உண்மை... ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் என் கல்லூரிப் பேராசிரியருக்கு என் வயதில் இரு மகள்கள்.. ஆனால் அவருக்கு மற்ற பெண்கள் அதுவும் அவரிடம் படிக்கும் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரை தான்.. கல்வி கற்பிக்கும் ஆசானுக்கே இப்படிப் பட்ட புத்தி என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்... எல்லா விஷயத்திலும் சில விதி விளக்குகள் உண்டு.. அதுபோல் இந்த விஷயத்திலும் சில நல்லவர்கள் இருப்பார்கள் என்றுநம்புகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

Cable சங்கர் said...

/வயதுக்கு வந்த பெண் உள்ள எந்த அப்பனும் இப்படி அப்பட்டமா சைட் அடிக்கமாட்டாங்கதானே அங்கிள்
//

நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். அத்திரி.. இளைஞனான என்னை எழுத தூண்டியதே இந்த அங்கிள்களை பார்த்துதான். அத்திரி

Cable சங்கர் said...

/ஐய்யா எப்படி இப்படி எல்லாம் தோணுது உங்களுக்கு.???நல்ல கதை.
//

நன்றி விசா..

Cable சங்கர் said...

//இந்த செண்டர் தீம் ஒன்லைன் ஓ.கே.
ஆனா, கொஞ்சம் வெயிட்டா எழுதிருக்கலாம், நடையில.//

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பப்பு. அடுத்த முறை வேறு ஒரு கதை சொல்லும் முறையில் முயற்சி செய்கிறேன்.

Cable சங்கர் said...

/உண்மை... ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் என் கல்லூரிப் பேராசிரியருக்கு என் வயதில் இரு மகள்கள்.. ஆனால் அவருக்கு மற்ற பெண்கள் அதுவும் அவரிடம் படிக்கும் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரை தான்.. கல்வி கற்பிக்கும் ஆசானுக்கே இப்படிப் பட்ட புத்தி என்றால் மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்... எல்லா விஷயத்திலும் சில விதி விளக்குகள் உண்டு.. அதுபோல் இந்த விஷயத்திலும் சில நல்லவர்கள் இருப்பார்கள் என்றுநம்புகிறேன்
//

நீங்கள் சொல்வது போல் சில பேர் இருந்தாலும், நிறைய நல்லவர்கள் இருக்கிறார்க்ள் நிலா.. இது ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட கதை.. வைஸ் வர்ஸாவாக யோசித்தால் இன்னொரு கதை கூட இருக்கிறது.. ஆனால் இதுவும் ஒரு நிதர்சன உண்மைதான் என்பது உங்களது பின்னூட்டத்தில் தெரிகிறது. மிக்க நன்றி நிலா.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

பிரசன்னா கண்ணன் said...

/வ‌ர‌ வ‌ர‌ கேபிள் வய‌ர் அறுந்து கிட்டு வ‌ருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

//புரியலையே.. தலைவா..

எனக்கு புரிஞ்சுருச்சு, எனக்கு புரிஞ்சுருச்சு.. :-)
சங்கர் அண்ணா - பாத்துக்கோங்க.. அவ்வளோதான்.. சொல்லிட்டேன் ..

ஆண்மை குறையேல்.... said...

/வ‌ர‌ வ‌ர‌ கேபிள் வய‌ர் அறுந்து கிட்டு வ‌ருதோ? ( புரியும்னு நெனைக்கிறேன் )

//புரியலையே.. தலைவா..

விவேக் காமெடி போல‌ தான்...ச‌ர‌க்கு க‌ம்மி ஆகுற‌ மாதிரி தோணுது...பாத்துக்கோங்க‌...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Cable சங்கர் said...

/விவேக் காமெடி போல‌ தான்...ச‌ர‌க்கு க‌ம்மி ஆகுற‌ மாதிரி தோணுது...பாத்துக்கோங்க‌..//

கவனிச்சிருவோம்.. மசசான்..

Cable சங்கர் said...

/விவேக் காமெடி போல‌ தான்...ச‌ர‌க்கு க‌ம்மி ஆகுற‌ மாதிரி தோணுது...பாத்துக்கோங்க‌..//

கவனிச்சிருவோம்.. மசசான்..

மங்களூர் சிவா said...

கதை நல்லா இருக்கு.

Cable சங்கர் said...

/கதை நல்லா இருக்கு.///

நன்றி மங்களூர் சிவா

அகநாழிகை said...

கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீங்க கூறியிருக்கற விஷயத்தை பொது மனப்புத்தியோட சொல்லியிருக்கீங்க.
காதல், காமம், பாசம் எல்லாமே ஒரு வகையான உணர்வுதான். இதில் வயதுக்கு இடமில்லை என்பது என் கருத்து.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

shortfilmindia.com said...

/கேபிள்ஜி,
கதை நல்லா சொல்லியிருக்கீங்க.
கதையில் நீங்க கூறியிருக்கற விஷயத்தை பொது மனப்புத்தியோட சொல்லியிருக்கீங்க.
காதல், காமம், பாசம் எல்லாமே ஒரு வகையான உணர்வுதான். இதில் வயதுக்கு இடமில்லை என்பது என் கருத்து.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//

நன்றி வாசு.. நீங்கள் சொவது சரிதான் இந்த உணர்வுகளுக்கு வயது ஒரு பெரிய விஷயமில்லை என்பது உண்மைதான்.

Thamira said...

நல்லாருந்தது. அந்த ஓனர் (தன்னிலை) கேரக்டரை கட் பண்ணிருந்திருந்தா இன்னும் சுருக்கா இருந்திருக்கும்.