முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது.
நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல, அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை அவருடன் விட்டு விட்டு, நண்பர் ஒருவர் கொடுத்திருந்த 1.5லிட்டர் அழைத்ததால், அவசர அவச்ரமாய் வெளியே வந்த போது, நடை பயின்ற பெண் இப்போது நைட்டியில் நடந்து கொண்டிருந்தாள்.
முதல் இரண்டு ரவுண்டுகளை முடித்து சாப்பிடுவதற்காக, வைரமாளிகைக்கு வந்து மல்லிகைபூ பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டு கோழியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, விட்டோம் குற்றாலத்துக்கு வண்டியை.. சுமார் 12 மணிக்கு போய் ரூம் போட்டுவிட்டு உடனடியாய் குளிப்பதற்கு கிளம்பினோம். ஆமாம் நடு இரவு 12 மணிக்கு தான் அப்போது தான் கும்பல் இருக்காது என்று உடன் வந்த ரவி சொன்னார். நேராக பழைய குற்றாலத்துக்கு போய் அங்கே கொஞ்சம் தொண்டையை நினைத்து கொண்டு, சோவென கொட்டும் அருவியில் போய் நின்றவுடன், உடலெல்லாம் சில்லிப்பு பரவி, ஊளே போயிருந்த அதுவும், வெளியே மேலிருந்த கொட்டிய இதுவும், சேர்ந்து உடலை ஒரு விதிர்ப்பு விதிர்க்க, குளிர் உடலை உலுக்க, அதை அடக்க, குடு குடுவென அருவிக்குள் ஓடி நின்றவுடன், சில நொடிகளில் குளிர் விட்டு போக, தலை மேல் தடதடவென் கொட்டும் அருவி மனதை உற்சாகபடுத்த குற்றாலம்.
விடிய விடிய 1.5லிட்டர் காலியாகும் வரை பழைய அருவியிலும், மெயின் பால்சிலும் குளிக்க, எண்ணெய் தேய்த்து வ்ந்த ஆட்கள் எல்லாம் அருவில் குளித்துதான் உடலில் உள்ள எண்ணெய் போகிறது என்று நினைத்தால் அது கற்பனை.. இவர்கள் குளிக்கிறேன் பேர்விழி என்று உள்ளே புகுந்து நம் உடலில் தடவி விட்டு போவது தான் நிஜம். வந்தவர்கள் பார்க்கும் போது நானெல்லாம் நாகேஷ் என்று தோன்றியது.
அடுத்த நாள் பாலாறு என்கிற் இடத்திற்கு போனோம். கேரளாவின் பார்டரில் இருக்கிறது. அங்கே செக் போஸ்ட் ஆட்கள், தமிழ்ர்களை நடத்திய விதம் மிக கொடுமை, அங்கே கொஞ்ச்ம் போராட்டம். பின்பு, பாலாறு.. ஆது ஆறு கிடையாது பாலருவி.. சுமார் 70-80 அடி உயரத்திலிருந்து வெறி கொண்டு விழும், காட்டருவி.. பதினெட்டு வயது பெண்ணின் மோகமும், காமமும் ஒரு சேர்ந்த வெறி கொண்ட முட்டல் போல, மூச்சு முட்டும், வேகம், வேகத்தில் நம்மை தூக்கி வெளியே போடும் உந்தல். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.
அதே போல் அன்று இரவு குற்றாலத்தில் ஒரு இட்லி கடை நடத்தும் நெகு நெகு பெண், ஐம்பது பேர் வ்ந்தாலும் தனியாளாய் நின்று இட்லி தோசை என்று ஆர்டர் எடுத்து, கடை நடத்திய விதத்தை பார்பதே அழகு.வ்
அடுத்த நாள் திருநெல்வேலிக்கு வந்து வழ்க்கம் போல் திருநெல்வேலி அல்வா வாங்கி கொண்டு, ரயிலேறினேன். ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண், அவளுக்கு சம்மந்தமேயில்லாமல், ஜீன்ஸு, டீச்ர்ட்டும் தலையில் நல்ல மல்லிகைபூவும், எண்ணைய் தேய்த்து, பின்னல் வேறு போட்டிருந்தாள். இதுக்கு அவள் சுங்குடி சேலை கட்டி வந்திருக்கலாம்.
இவ்வளவு தூரம் போய் பார்டர் கடைக்கு போகாமல் வந்தது கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது
தயவு செய்து யாரும் குருவாயூர் ரயிலில் ஏறிவிடாதீர்கள்., யாராவது முதுகு சொறிய கை தூக்கினால் கூட நிறுத்திவிடுகிறார்கள். குற்றாலத்தின் சந்தோஷத்தை, இந்த ரயில் பயணம் கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.
குற்றாலம் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்
நிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
44 comments:
குற்றாலம் திருப்தியில்லையா..
“தண்ணீர்” திருப்தி.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
எச்சரிக்கை:
அவரை போன்று ”யூத்து”கள் மட்டும் இங்குள்ள கேபிளாரின் படத்தை கிளிக்கவும்..
http://mynandavanam.blogspot.com
/இவ்வளவு தூரம் போய் பார்டர் கடைக்கு போகாமல் வந்தது கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது//
கேபிள்..நா போயிட்டு வந்தேன்..ஒரு 1/2,1 முழு நாட்டுக்கோழி..சூப்பரப்பு...
இரண்டு பாகமும் இள்ளம் பொண்ணுங்களை பத்திதான்!!!!
கலக்கல் நடையில் செம ப.க.
கேபிள் சார்...மதுரை வழியாக வந்திருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ருசி பார்த்திருக்கலாம்...மிஸ் பண்ணிட்டீங்களே :((((
நானும் போன வாரம் தான் குற்றாலம் போயிடு வந்தேன்...பாலருவி போலாம்னு பாத்தா எங்க வண்டி பெர்மிட் இல்லன்னு சொல்லிட்டாரு ஓட்டுனர்.....அதனால அப்படியே வண்டியே அகஸ்தியர் அருவிக்கு திருப்பிட்டோம்...அந்த அருவி பாபநாசம் பக்கத்துல இருக்கு...சும்மா அகஸ்தியர் கணக்கா இருந்தாலும் கொட்டுற தண்ணி இடி ப்மாதிரி விழும்...
I was waiting for the next post. part 2 vanthaachaa? super. padichitu solrean...
ஃபர்ஸ்ட் போட்டாவை சாச்சி எடுத்துடீங்க..
நேராவா எடுத்திருக்கலாம்!!
இதுக்குதான் ஜாக்கியை கூப்பிட்டுட்டு போகனுமுங்குறது..
:-)
//அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று //
//அதே போய் அன்று இரவு குற்றாலத்தில் ஒரு இட்லி கடை நடத்தும் நெகு நெகு பெண்//
//ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண்,//
அது எப்படிண்ணே, நீங்க போற இடத்துலெல்லாம் இந்த மாதிரியே இருக்கு.... உங்களுக்கு என்ன ராசி?????
/குற்றாலம் திருப்தியில்லையா..
“தண்ணீர்” திருப்தி.
பிறந்த நாள் வாழ்த்துகள்.
எச்சரிக்கை:
அவரை போன்று ”யூத்து”கள் மட்டும் இங்குள்ள கேபிளாரின் படத்தை கிளிக்கவும்..
http://mynandavanam.blogspot.com
குற்றாலம் எல்லாம் திருப்ப்தியாய்தான் இருந்தது.. வண்ணத்துபூச்சியாரே.. அந்த ரயில் தான் இம்சை படுத்தி விட்டது.
பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. அந்த படம் ம்ம்..ஹி..ஹி.. ந்ல்லாத்தானிருக்கு..
//கேபிள்..நா போயிட்டு வந்தேன்..ஒரு 1/2,1 முழு நாட்டுக்கோழி..சூப்பரப்பு..//
யோவ்.. சும்மா வெறுப்பேத்தாதய்யா...
/இரண்டு பாகமும் இள்ளம் பொண்ணுங்களை பத்திதான்!!!//
என் பார்வையில பார்த்த்தை பத்தி தானே எழுத முடியும் உலகநாதன்.
/கலக்கல் நடையில் செம ப.க//
நன்றி நர்சிம்’
/கேபிள் சார்...மதுரை வழியாக வந்திருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ருசி பார்த்திருக்கலாம்...மிஸ் பண்ணிட்டீங்களே :((((
நானும் போன வாரம் தான் குற்றாலம் போயிடு வந்தேன்...பாலருவி போலாம்னு பாத்தா எங்க வண்டி பெர்மிட் இல்லன்னு சொல்லிட்டாரு ஓட்டுனர்.....அதனால அப்படியே வண்டியே அகஸ்தியர் அருவிக்கு திருப்பிட்டோம்...அந்த அருவி பாபநாசம் பக்கத்துல இருக்கு...சும்மா அகஸ்தியர் கணக்கா இருந்தாலும் கொட்டுற தண்ணி இடி ப்மாதிரி விழும்...
.//
பால்கோவா டிரைனில் சாப்பிட்டு விட்டேன். அடுத்த டிரிப் அகஸ்தியர் பால்ஸ் போகணும். கமல்
was waiting for the next post. part 2 vanthaachaa? super. padichitu solrean...//
சொல்லுங்க விசா..
/ஃபர்ஸ்ட் போட்டாவை சாச்சி எடுத்துடீங்க..
நேராவா எடுத்திருக்கலாம்!!
இதுக்குதான் ஜாக்கியை கூப்பிட்டுட்டு போகனுமுங்குறது..
:-)//
எனக்கு இந்த மாதிரியான ரஷ்யன் ஆங்கிள் ரொம்ப பிடிக்கும்.. கலையரசன்.
/அது எப்படிண்ணே, நீங்க போற இடத்துலெல்லாம் இந்த மாதிரியே இருக்கு.... உங்களுக்கு என்ன ராசி????//
அது ஒரு மாதிரியான கலை நோக்குடன் பாக்கிறதுதான்.. ஹி..ஹி.
//ஊளே போயிருந்த அதுவும், வெளியே மேலிருந்த கொட்டிய இதுவும்//
என்ன ஒரு நடை....
இந்த படங்கள் உங்கள் மொபைல்லில் இருந்து எடுத்ததா?
என்ன மொபைல் யூஸ் பண்றீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
நைனா... என்ட்ரி... ஸ்டார்ட் மீஜிக்...
எல்லா வர்ணனைகளும் நல்லா இருந்துச்சு.... தல.
//ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண், அவளுக்கு சம்மந்த்மேயில்லாமல், ஜீன்ஸு, டீச்ர்ட்டும் தலையில் நல்ல மல்லிகைபூவும், எண்ணைய் தேய்த்து, பின்னல் வேறு போட்டிருந்தாள்//
இதெல்லாம் கொஞ்சம் கூட டேலியாகாத மேட்டராயிருக்கே...
//தயவு செய்து யாரும் குருவாயூர் ரயிலில் ஏறிவிடாதீர்கள்., யாராவது முதுகு சொறிய கை தூக்கினால் கூட நிறுத்திவிடுகிறார்கள்\\
:))
/என்ன ஒரு நடை....//]]
நன்றி ஜெட்லி
/இந்த படங்கள் உங்கள் மொபைல்லில் இருந்து எடுத்ததா?
என்ன மொபைல் யூஸ் பண்றீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா//
ஆமாம் ஜெட்லி.. என்னுடய் நேக்கியா ஸ்லைட்3600விலிருந்து எடுத்தது.
/நைனா... என்ட்ரி... ஸ்டார்ட் மீஜிக்...
எல்லா வர்ணனைகளும் நல்லா இருந்துச்சு.... தல.//
நன்றி நைனா.. அவ்வளவுதானா..?
/இதெல்லாம் கொஞ்சம் கூட டேலியாகாத மேட்டராயிருக்கே..//
அதனாலதான் இதுக்கு அடுத்த லைன் பாலாஜி..
வருகைக்கும் ஸ்மைலிக்கும் மிக்க நன்றி நாஞ்சில் நாதம்.
Excellent presentation
""யூத்துக்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கலக்கல் நடை
//பதினெட்டு வயது பெண்ணின் மோகமும், காமமும் ஒரு சேர்ந்த வெறி கொண்ட முட்டல் போல, மூச்சு முட்டும், வேகம்//
அருமையான நடை.இருபது வருடங்களாக நான் பார்த்து வரும் குற்றாலம் உங்கள் வார்த்தைகளின் சாரலில் இன்னும் சில்லென்று இருக்கிறது,ஷங்கர்.
guruvayur express pantry service will be excellent
antha french kaariya dela vitathu bejaaru ikithupa....
../Excellent presentation//
மிக்க நன்றி குமார்..உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்,
/""யூத்துக்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//
நன்றி அத்திரி.. இப்ப புரிஞ்சிதா..?
/கலக்கல் நடை//
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
அருமையான நடை.இருபது வருடங்களாக நான் பார்த்து வரும் குற்றாலம் உங்கள் வார்த்தைகளின் சாரலில் இன்னும் சில்லென்று இருக்கிறது,ஷங்கர்.
//
அப்படியா சார்.. உங்கள் பாராட்டு என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது
/guruvayur express pantry service will be excellent//
இப்ப அவ்வளவா சொல்லிக்கிறா மாதிரி இல்லை குப்பன் யாஹு
/antha french kaariya dela vitathu bejaaru ikithupa.//
அவள் பறந்து போனாளே.. விசா..
செகண்ட் பார்ட் சரியில்லயே. பர்ஸ்ட் அளவு இல்ல.
/nice!//
நன்றி மஙக்ளூர் சிவா
/nice!//
நன்றி மஙக்ளூர் சிவா
/செகண்ட் பார்ட் சரியில்லயே. பர்ஸ்ட் அளவு இல்ல.
//
மொத பார்ட்டுல லவ் ஸ்டோரி இருந்திச்சு.. அதான் உஙக்ளுக்கு பிடிச்சிருக்கு.
உங்களை யாரு குருவாயூர்ல வரச்சொன்னது.. அப்ப தேவைதான்.!
Post a Comment