சென்ற மாத கடைசியில் வெளியான தோரணை யோட ரிசல்ட் ஒண்ணும் சொல்லிக்கும்படியா இல்லை. ஐ.பி.எல்., டி20 கப், எல்லாம் முடிஞ்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் திற்ந்திருச்சு. சரி இந்த மாச வந்த படஙக்ளை பத்தி பார்ப்போம்
மாயாண்டி குடும்பத்தார்.
மாயாஜால் ஓனர் பொண்ணு அனிதா உதிப் இயக்கி வெளிவந்த படம். படத்தோட பாடல்கள் இளைஞர்களை உள்ளே இழுத்தது என்னவோ உண்மைதான். அதுவும் மல்ட்டி ப்ளக்கில் மட்டுமே கும்பல் இருந்தது. ஆனால் அந்த ஆடியன்ஸ் எதிர்பார்ப்பையும் திருப்ப்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.
வழக்கம் போல் சன் டிவியின் மூளை மழுக்கும் விளம்பரத்தினால் பெரிய ஓப்பனிங் இல்லையென்றாலும், திரும்ப, திரும்ப வரும் விளம்பரத்தினால் சொற்ப கூட்டம் கூடுகிறது. ஆவ்ரேஜ் .
இந்த படத்தை பத்தி ஏதும் சொல்ல வேணாம். ஏன்னா படம் ஒண்ணு வந்தது பெரும்பாலான பேருக்கு தெரியாது.
விளம்பரம் எல்லா நல்லாத்தன் இருந்திச்சு.. நிதின் சத்யாவின் சில ஒன் லைனர்களை தவிர.. பெரிசா எதுவுமில்ல.. வெரி புவர்.. ஓப்பனிங்..
மாச கடைசியில ரிலீஸாகியிருக்கு.. இப்ப வரைக்கும் படத்தோட மவுத்டாக் நல்லாவே இருக்கு.. ஒரு சூப்பர் ஹிட்டுக்கான அறிகுறி தெரியுது.
விகடனிலிருந்து பெரிதும் எதிர்பர்க்கபட்ட படம், இதுவும் மாச கடைசியில ரிலீஸாயிருக்கு. ஆனா மவுத் டாக் சொல்லிக் கொள்ளும்படியா இல்ல.. ரொம்பவே சுமாரான ஓபனிங்க் செங்கல்பட்டு ஏரியா ஒரு சில தியேட்டர்களில்.. நாலு ஷோக்கும் சேர்த்து 280 டிக்கெட் போச்சு. விகடனுக்கு ஒரு டிஸ்ஸாஸ்டர் தோல்வி படத்துக்குகான அறிகுறி.. ஆனா விகடன் மட்டும் 41 மார்கு கொடுத்திருக்கு.. இன்னொரு சன் டிவீயா விகடன் மாறுது..
மொத்தத்தில் சென்ற மாதம் ஆவரேஜான பசஙக்.. இந்த மாசமும் தொடருது, புதிய ஹிட்டுக்கான எல்லா அறிகுறிகளுடன் நாடோடிகள் .. டோண்ட் மிஸ்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
39 comments:
அண்ணே,
மவுத் டாக் னா இன்னா?
போட்டி கதை படிச்சிட்டு.. அத பத்தி பின்னூட்டம் கூட போடலன்னா.. உங்களுக்கு சொல்ல மாட்டேன்.. :)
என்ன வால்மீக்கு 41 மார்க்கா? முடியல்ல. விகடனின் நடுநிலை எங்கே போயிற்று.
\\ஆனா விகடன் மட்டும் 41 மார்கு கொடுத்திருக்கு.. இன்னொரு சன் டிவீயா விகடன் மாறுது..\\
என்னாங்க இது
எல்லாம் லேட்டஸ்ட்டு மேட்டரா போட்டுட்டு
இது மட்டும் ...
/என்ன வால்மீக்கு 41 மார்க்கா? முடியல்ல. விகடனின் நடுநிலை எங்கே போயிற்று//
விகடன் வியாபாரியாகி பல வருஷமாயிருச்சு..
/என்னாங்க இது
எல்லாம் லேட்டஸ்ட்டு மேட்டரா போட்டுட்டு
இது மட்டும் ...//
:(???
நாடோடிகள் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் மத்தது எல்லாம் குப்பை .சசிகுமார் ஒரு நடிகராகவும் வெற்றி பெற்று விட்டார்
என்னதான் விளம்பரம் பண்ணாலும், சரக்கு நல்லா இருந்தா மட்டும்தான் , படம் ஓடும்.
அண்ணே நம்ம படமும் இன்னிக்கு ரிலீஸ்..ஹி...ஹீ.ஹீ
இங்கு இன்றுதான் நாடோடிகள் ரிலீஸ் பார்க்கனும்!
\\\தண்டோரா said...
அண்ணே நம்ம படமும் இன்னிக்கு ரிலீஸ்..ஹி...ஹீ.ஹீ\\
அது என்ன படம்
//விகடனுக்கு ஒரு டிஸ்ஸாஸ்டர் தோல்வி படத்துக்குகான அறிகுறி.. ஆனா விகடன் மட்டும் 41 மார்கு கொடுத்திருக்கு.. இன்னொரு சன் டிவீயா விகடன் மாறுது..//
முதலாளிவர்க்கம் என்றும் ஒரே மாதிரி தான்!
//இந்த படத்தை பத்தி ஏதும் சொல்ல வேணாம். ஏன்னா படம் ஒண்ணு வந்தது பெரும்பாலான பேருக்கு தெரியாது.//
சூப்பர் கேபிள் சார்
நான் மிகவும் ரசித்த வரிகள் :):):):)
41?
இவய்ங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்!
கழுதை, காசுபணம்னு வந்தா தரமாவது, நடுநிலையாவது!
மேட்டர விட, போட்டோஸ்தான் அதிகம்.ஒருவேளை எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டதனாலயோ....?
தலை..
இன்னிக்கு காலைல தி.நகர்ல 3 - 4 புதுப்படம் போஸ்டர் பார்த்தேன்.
உடனே உங்க நினைப்பு தான் வந்தது..
தல,
உங்க படம் சீக்கிரம் வரணும்னு வேண்டிக்கறேன்.
ஆனா விமர்சனம் நான்தான் எழுதுவேன்.
அப்புறம்... அது என்ன ‘மவுத்வாக்‘
பதிவுல உங்க ஜோக் போடுவீங்களே அதுமாதிரியா.
இப்படி யெல்லாம் போன யாரு சினிமா பார்க்க வருவாங்க?
\\இன்னொரு சன் டிவீயா விகடன் மாறுது\\
அப்ப தானே கொஞ்சம் கூட்டமாவது வரும்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
Sankar, Nice work. Cinesouth.com giving "Hit" verdict to Masilamani?????
இன்னும் எவ்ளோ இருக்கு பாஸ்...
தயாநிதி மாறன் சன் ,சன் pictures- ல கலக்குற காலம் வரும்.
அன்னிக்கு தான் இருக்கு எல்லோருக்கும் ...haha
/நாடோடிகள் கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் மத்தது எல்லாம் குப்பை .சசிகுமார் ஒரு நடிகராகவும் வெற்றி பெற்று விட்டார்
//
ஆமாம் ஆனந்தன்.. நிச்சயமாய் பாருஙகள்
/என்னதான் விளம்பரம் பண்ணாலும், சரக்கு நல்லா இருந்தா மட்டும்தான் , படம் ஓடும்.
//
அது உண்மைதான் சுந்தர்.. தொடர் விளம்பரத்தினால் ஒரு வேளை நல்லாருக்குமோன்னு நினைச்சிட்டு.. போய் பாக்கிறவஙக்ளை காப்பாத்ததான்.
/அண்ணே நம்ம படமும் இன்னிக்கு ரிலீஸ்..ஹி...ஹீ.ஹீ//
வாழ்த்துக்கள் தண்டோராண்னே..
//இங்கு இன்றுதான் நாடோடிகள் ரிலீஸ் பார்க்கனும்//
மிஸ் பண்ணாம பாருஙக்.. குசும்பன்.
/அது என்ன படம்//
அண்ணன் தண்டோரா.. இயக்கிய குறும்படம் சீயர்ஸ்..அன்பு
/முதலாளிவர்க்கம் என்றும் ஒரே மாதிரி தான்//
ஆனால் விகடன் இப்படி நடுநிலை மாறும் என்று ஏற்க மனமில்ல வாலு..
நன்றி சங்கி மங்கி..
ஆமாம் பப்பு.. இவஙக் எப்பவுமே இப்படித்தான்..
/தல,
உங்க படம் சீக்கிரம் வரணும்னு வேண்டிக்கறேன்.
ஆனா விமர்சனம் நான்தான் எழுதுவேன்.
அப்புறம்... அது என்ன ‘மவுத்வாக்‘
பதிவுல உங்க ஜோக் போடுவீங்களே அதுமாதிரியா.
1//
நானும் அந்த முயற்சியிலதான் இருக்கேன்.. ஆனா என் படத்தை விமர்சனம் பண்ணி கிழிக்கிறதுக்கு நிறைய பேர் கிளம்பியிருக்காஙக் போலருக்கு.. அகநாழிகை.. முடிந்தவரை நல்ல படமாய் கொடுக்க முயற்சிக்கிறேன்.
/மேட்டர விட, போட்டோஸ்தான் அதிகம்.ஒருவேளை எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டதனாலயோ....//
என்ன இருக்கு எழுதறதுக்கு. .?டக்ளஸ்
நன்றி வண்ணத்துபூச்சியாரே.. காலம் வரும் தலைவரே..
/இப்படி யெல்லாம் போன யாரு சினிமா பார்க்க வருவாங்க//
அது சரி.. அக்னிபார்வை.
அப்ப தானே கொஞ்சம் கூட்டமாவது வரும்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
//
அதுசரிதான் நாஞ்சில் நாதம்.. மிக்க ந்ன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.
//
/Sankar, Nice work. Cinesouth.com giving "Hit" verdict to Masilamani?????//
சுபா.. கமர்ஷியல் வெப்சைட்டுகள் எங்காவது படஙக்ளை ஒழுங்காக விமர்சித்திருக்கிறதா..? அது போல் தான் இதுவும்..
/இன்னும் எவ்ளோ இருக்கு பாஸ்...
தயாநிதி மாறன் சன் ,சன் pictures- ல கலக்குற காலம் வரும்.
அன்னிக்கு தான் இருக்கு எல்லோருக்கும் ...haha
//
ஹா..ஹா...ஹா... நல்ல பின்னூட்டம் பாஸூ
நல்ல அலசல் கேபிள் அண்ணே....
நாளைக்கு என்ன படம்னே?
விகடன் படம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தங்களுடைய படத்திற்கு விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்று விகடனில் வந்த 'வால்மீகி' படத்திற்கு விமர்சனம் எழுதிருந்தேன். இன்று மாலை வரை இருந்த என் விமர்சனம் இரவு 7 மணிக்கு மேல் இல்லை.
சரி கேபிள் சங்கர் நீங்க எப்ப படம் இயக்கப் போறீங்க.
/நல்ல அலசல் கேபிள் அண்ணே....
நாளைக்கு என்ன படம்னே//
இதுவரைக்கும் தெரியல.. ஜெட்லி..
/விகடன் படம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தங்களுடைய படத்திற்கு விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். என்று விகடனில் வந்த 'வால்மீகி' படத்திற்கு விமர்சனம் எழுதிருந்தேன். இன்று மாலை வரை இருந்த என் விமர்சனம் இரவு 7 மணிக்கு மேல் இல்லை.//
இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. ராஜா.. விகடன் என்பது ஒரு மித்.. அதனால் இதையெல்லாம அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது கிடையாது.
/சரி கேபிள் சங்கர் நீங்க எப்ப படம் இயக்கப் போறீங்க//
முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ரமேஷ்.. யாராவது நல்ல புரொடியூசர் இருந்தால் சொல்லவும்.
தகவலுக்கு நன்றி
வால்மீகி படத்தை விகடன் சில மாதங்களாக தொடர்சியாக promote செய்யும் போதே டவுட் ஆக இருந்தது
//தகவலுக்கு நன்றி
வால்மீகி படத்தை விகடன் சில மாதங்களாக தொடர்சியாக promote செய்யும் போதே டவுட் ஆக இருந்தது//
அவர்கள் புரோமோட் செய்வது தவறில்லை.. அருண்.. ஆனால் அந்த திராபை படத்திற்கு 41 மார்க்கு கொடுத்ததுதான் அநியாயம்.
(மா.கு_நீங்கலாக)நல்ல_விமர்சங்கள்_ஆ.வி_எப்பவே_விகடன்_டாக்கீஸ்_ரசிகர்மன்ற_இதழாகிவிட்டது!_இவிங்கைல்லாம்_ரித்தீஷ_கேலி_பண்றாங்க!!_ஆனா_சன்ல_அப்படியெல்லாமில்ல_அன்றுமுதல்_இன்றுவரை_நாங்க_சொல்லுவோம்_நீங்க_கேட்டுக்கனும்!!_கலக்கறீங்க_கேபிள்_சார்!(_Space_Barக்கு_யாரோ_செய்வினை_வைத்துவிட்டார்கள்!!_ஆனா_நாங்க.......எப்பூடி?!@##$
அவர்கள் காசு போட்டு எடுத்த படத்தை அவர்கள் பத்திரிக்கைய உபயோகித்து புரோமோட் செய்கிறார்கள்.... விகடன் மீது இருந்த பாரம்பரிய நேசம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து போயிற்று... இனி அவர்களை சன் டிவி ரேட்டிங்குக்கு இணையாக தான் மதிக்க வேண்டும்.
சங்கரே, மாதம் ஒரு முஐற சினிமாவை பார்வையை விட, 3 மாதம் ஒரு முறை வைத்து கொண்டால், பல ஸ்கூப் நியூஸ்களை, படத்தின் வெற்றி தோல்வி விஷயங்களுடன் சேர்த்து கேட்டு கொள்ள ஏதுவாக இருக்குமே... அப்படி தொடரலாமா ?
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
Post a Comment