இளையராஜாவின் இசையில், வேணுவின் ஒளிப்பதிவில், கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதையில்,பெங்களூரில் நடந்த இரண்டு தாதாக்களுக்கிடையே ஆன சண்டையை மிக இயல்பாக, ஊடே ஒரு காதல் கதையையும் கொடுத்து , ஒரு இடத்தில் கூட ரத்தம் சிந்தாமல் மிரட்டியிருக்கிறார்கள். இந்த ஆதினகளு டீன் என்றால் மிகையாகாது.
அக்னி ஸ்ரீதரின் நண்பன் சேத்தன் ஒரு பெண்ணை காதலிக்க, அதை தடுக்க அவனின் அப்பா பெங்களூரின் பெரிய டானான கொத்தவால் ராமசந்திராவின் உதவியியை நாடியிருக்க, கொத்தவால் சேத்தனையும், அவனின் காதலியையும் மிரட்ட, வேறு வழியில்லாமல் அவனுக்கு எதிரியான இன்னொரு டான் ஆன ஜெயராஜிடம் அடைக்கலமாகிறார்கள்.
ஒரு பக்கம் கொத்தவாலின் சாம்ராஜ்யத்தை ஒழிக்க துடிக்கும் ஜெயராஜ், கொத்தவாலுக்கு உதவியாய் இருப்பது மாதிரியான நடவடிக்கைகளுடன், அவனை பழிவாங்க கொல்ல துடிக்கும் அதுல் குல்கர்னியும், அவனைது நண்பர்களும்.
கொத்தவால் உயிருடன் இருந்தால் தன் காதல் ஜெயிக்காது என்பதால், ஜெயராஜ், அதுலுடன் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சம் சேத்தனும் கிரிமினலாகுவது என்று மிக இயல்பான திரைக்கதையும், அளவான வசனங்களுடன் . ஒரு காட்சியில் கூட மிகப்பெரிய வன்முறையோ, ரத்தகளரியோ இல்லாமல், கேமரா கோணங்களிலும், பிண்ணனி இசையிலும், பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்
அதுல அக்னிஹோத்திரி, ஆஷிஷ்வித்யார்தி, புதுமுகம் சேத்தன், அர்சனா, ஷரத் ஆகியோரின் நடிப்பு மிகையில்லாத கேரக்டர் உணர்ந்த சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் பிண்ணனி இசை அருமை என்று சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல். ஷிகிகாலி என்கிற பாடலை அவரே பாடியிருக்கிறார் அருமையான மெலடி. அதே போல் கேமராமேன் வேணுவின் ஒளிப்பதிவு, சடசடவென மாறும் எடிட்டிங் இல்லாமல் அருமையான கேமரா கோணங்கள் மற்றும் லைட்டிங்கிலும் நான் இருக்கிறேன் என்கிறார்.
கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதை எங்கும் தொய்யாமல் பரபரப்பான காட்சிகளோடு பறக்கிறது. இயக்குனர் சைதன்யாவை இவ்வளவு அருமையான படத்தை கொடுத்ததற்காக பாராட்டியே ஆகவேண்டும்.
டிஸ்கி
கன்னடத்தில் இவ்வளவு குவாலிட்டியான படம் பார்த்து வருஷங்களாகிவிட்டது.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
37 comments:
குற்றால அருவியில குளிச்சாலும் அடங்காது..
படம் எப்படி இருந்தாலும் கேபிளாரின் விமர்சனம் சூப்பர்னு சொல்றதும் மேல சொல்லியிருக்குற மாதிரிதான்...
கலக்குறீங்க தல...
பிரபாகர்.
:)
அண்ணே... இந்த சீன, குப்பாரியான், டென்டுகோ மொழி படம்லாம் இங்கே வர வச்சிரலாமாண்ணே
விமர்சனம் நன்று !
ஆ தினகளு - அந்த நாட்கள் !
வணக்கம் சார். அன்பிலும் பண்பிலும் சிறந்த தங்களுக்கு் எனதன்பை உரித்தாக்கும் விதமாக தங்களுக்கென ஒரு பரிசினை அளிக்க முன்வந்துள்ளேன். எனது http://balasee.blogspot.com/ முகவிரியில் பெற்றுக்கொள்ளவும். இதை வழங்க எனக்கு தகுதி இருக்கிறதா என்பதை நான் அறியேன். இருப்பினும் நான் ரசித்த உள்ளங்களுக்கு இதை பகிர்ந்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி.
விமர்சனத்துக்கு நன்றி கேபிள் சார்
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடித்து இருந்தது. சிகி காலி பாட்டு சான்சே இல்லை சூப்பர் மெலோடி.
இளையராஜாவிற்க்கு கன்னடத்தில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது
ரைட்டு,
கிரிஷ் கர்னாட் - ரசிக்கத் தகுந்தவர்
எங்கள் அண்ணன் பலமொழி வித்தகர்
கேபிள் சங்கர் வாழ்க.....
இது மாதிரியான எந்த மொழியில் எடுத்தாலும் வரவேற்க்க பட வேண்டியட்தே.. அய்யையோ எல்லாரும் நல்ல சினிமா எடுக்க ஆரம்பிஞ்சுட்டா நாங்க யார கேலி பண்ணி பதிவு போடறது
i love that Ilayaraja song :
sihi gali, sihi gali, sahi hakida mansinali
Ilayaraja and Nandita both rocked in that song.Girish Garnard is back with bang in films.This Ranga Shakara man is pride of kannadigaas..
Ilayaraja - Great music director kannada ever got..
கன்னடம் தான் எழுதாம இருந்தீங்க. அதுவும் எழுதியாச்சா?
திராவிட(அரசியல் திராவிட இல்ல. மொழி ஆய்வுபடி) மொழிகள் எல்லாத்துலயும் படம் பாத்து விமர்சனம் எழுதிட்டீங்க!
valakkam pola kalakkal vimarshanam
நல்ல படத்தை மொழி வேறுபாடுகள் இன்றி அறிமுகப் படுத்தும் உங்கள் ஆர்வத்திற்குத் தலைவணங்குகிறேன்,ஷங்கர்.
இது கொஞ்சம் பழைய படமாச்சே சங்கர்.. இப்போதான் பாத்தீங்களா?
//குற்றால அருவியில குளிச்சாலும் அடங்காது.//
எது..? வண்ணத்துபூச்சியாரே..?
/படம் எப்படி இருந்தாலும் கேபிளாரின் விமர்சனம் சூப்பர்னு சொல்றதும் மேல சொல்லியிருக்குற மாதிரிதான்...
கலக்குறீங்க தல...
பிரபாகர்//
நன்றி பிரபாகர்.
நன்றி கோவி.கண்ணன்.
/அண்ணே... இந்த சீன, குப்பாரியான், டென்டுகோ மொழி படம்லாம் இங்கே வர வச்சிரலாமாண்ணே
11:14 AM//
வச்சிருவோம் நைனா...
நன்றி அசோக்
நன்றி மதுரைமல்லி..
/விமர்சனத்துக்கு நன்றி கேபிள் சார்
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடித்து இருந்தது. சிகி காலி பாட்டு சான்சே இல்லை சூப்பர் மெலோடி.
இளையராஜாவிற்க்கு கன்னடத்தில் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது
//
சிடிக்கு மிக்க நன்றி அருண்.. இளையராஜாவுக்கு கன்னடத்தில் என்ன உலகம் முழுக்கவே ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது.. அருண்..
/எங்கள் அண்ணன் பலமொழி வித்தகர்
கேபிள் சங்கர் வாழ்க.../
நன்றி ரெட்மகி..
/இது மாதிரியான எந்த மொழியில் எடுத்தாலும் வரவேற்க்க பட வேண்டியட்தே.. அய்யையோ எல்லாரும் நல்ல சினிமா எடுக்க ஆரம்பிஞ்சுட்டா நாங்க யார கேலி பண்ணி பதிவு போடறது//
எதுக்கெல்லாம் கவலைபடறாங்கப்பா..
ஆமாம். வேர்ல்ட் ஆப் ராஜ்கே. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
/கன்னடம் தான் எழுதாம இருந்தீங்க. அதுவும் எழுதியாச்சா?
திராவிட(அரசியல் திராவிட இல்ல. மொழி ஆய்வுபடி) மொழிகள் எல்லாத்துலயும் படம் பாத்து விமர்சனம் எழுதிட்டீங்க!//
ஹி..ஹி.. ஏதோ நம்மாள முடிஞ்சது பப்பு
/நல்ல படத்தை மொழி வேறுபாடுகள் இன்றி அறிமுகப் படுத்தும் உங்கள் ஆர்வத்திற்குத் தலைவணங்குகிறேன்,ஷங்கர்.
//
நன்றி சார்..
/இது கொஞ்சம் பழைய படமாச்சே சங்கர்.. இப்போதான் பாத்தீங்களா?//
ஆமாம் ப்ரசன்னா.. ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் டிவிடி கிடைச்சுது..
2009 ஜீலை மாதத்திற்கான சிறந்த தமிழ் பொழுதுபோக்கு வலைப்பதிவுக்கான விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். விருதுக்கான இமேஜை http://tamilblogawardsinternational.blogspot.com/2009/07/2009.html என்ற லிங்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
சிறந்த வலைப்பதிவர் விருது உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
உங்கள் வலையைப் படித்த போது, நீங்கள் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவரே என்பது புரிகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
http://kgjawarlal.wordpress.com
இது வரை ரொம்ப கன்னடப் படங்கள் பார்த்ததில்லை..பகிர்ந்துகொணடமைக்கு மிக்க
கச்சிதம்
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
/2009 ஜீலை மாதத்திற்கான சிறந்த தமிழ் பொழுதுபோக்கு வலைப்பதிவுக்கான விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். விருதுக்கான இமேஜை http://tamilblogawardsinternational.blogspot.com/2009/07/2009.html என்ற லிங்கிலிருந்து பெ//ற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி
/இது வரை ரொம்ப கன்னடப் படங்கள் பார்த்ததில்லை..பகிர்ந்துகொணடமைக்கு மிக்க
//
நானும் ரொம்ப அதிகம் பார்த்ததில்லை.. நண்பர் ஒருவருடய.. ரெகமெண்டேஷனில் பார்த்தேன்.. அருமை.. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன்.
/சிறந்த வலைப்பதிவர் விருது உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
உங்கள் வலையைப் படித்த போது, நீங்கள் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவரே என்பது புரிகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
http://kgjawarlal.wordpress.com//
நன்றி ஜவார்லால்..
ஒரு நல்ல கன்னட படத்திற்கான அறிமுகம்! நன்றி சங்கர்!
ஒரு சின்ன திருத்தம்: அதுல் அக்னிஹோத்திரி என்பது தவறு. அதுல் குல்கர்னி (ரன் பட வில்லன்) என்று இருக்க வேண்டும்.
/ஒரு சின்ன திருத்தம்: அதுல் அக்னிஹோத்திரி என்பது தவறு. அதுல் குல்கர்னி (ரன் பட வில்லன்) என்று இருக்க வேண்டும்//
நன்றி ஜெகநாதன்.. பிழையை திருத்திவிட்டேன்.. உங்கள் பாராட்டுக்கும், பிழைதிருத்த உதவியதற்கும் மிக்க நன்றி..
Post a Comment