படம் ஆரம்பத்தில் தன் நண்பர் கதிரவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைகதை என்கிறார் பா.விஜய். ஆனால் படம் ரிதுபர்னோ கோஷின், ஐஸ்வர்யா, அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த ரெயின் கோட் மறுபதிப்பு போல் இருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன மாறுதல்களுடன். அந்த படமே ஓஹென்றியின் ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
தேசிய விருது பெற்ற கவிஞர் ஹரித்துவாரில் தன் பழைய காதலியை ஒரு மழை நாளில் பார்க்க போகிறார். வீட்டிற்கு வந்தவரை வாய் நிறைய வரவேற்று பேசியபடி தான் தன் வாழ்கையை பற்றியே அவனின் காதலி பேசிக் கொண்டிருக்க, இவனின் இன்றைய கவிஞர், தேசியவிருது பற்றி கொஞ்சம் கூட அறியாதவளாய் இருக்க, ஒரு நேரத்தில் அவள் காய்கறி வாங்க போயிருக்கும் போது, வரும் ஒருவர் அவளின் கணவன் பெரிய டைமண்ட் வியாபாரியாய் இருந்ததாகவும், வியாபரத்தில் லாஸ் ஆனதால் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டதால், மிகப்பெரிய கடனில் அவள் இருப்பதாகவும், இந்த வீடும் அவளும்தான் பாக்கி அவளை எடுத்து கொண்டு, சின்ன வீடாய் வைத்து கொள்கிறேன் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்று சொல்லிவிட்டு சொல்ல, தன் காதலியின் அவலவாழ்வு தெரிந்து தன் தேசியவிருதையும், பதக்கத்தையும், ஒரு ப்ளாங் செக்கையும் வைத்து விட்டு போகிறான். அவளிடம் அவளை ஏற்றுக் கொள்ள மனமிருந்தும் சொல்லாமல். இந்த கதையினிடையே, சேட்டு பெண்ணான அவளூக்கும், சுத்த தமிழரான கதிரவனுக்கும் எவ்வாறு காதல் உருவானது, அது தோற்றது என்பதை சொல்கிறார்கள். முடிவு.. அரத பழசு.
ரெயின் கோட் படமே கொஞ்சம் ஸ்லோவாகத்தான் போகும். இதில் மகா ஸ்லோ. அதிலும் விஜய்க்கு, முகம் முழுவதும் மேக்கப் போட்டு ஒரு மாதிரி மையமாய் பார்த்தபடி ஹைஸ்பீடிலேயே (ஸ்லோமோஷனுக்கு டெக்னிகல் வேர்ட்) ரியாக்ஷன் செய்கிறார். சேட்டு பெண்ணுக்கு தமிழ் கவிதைகள் மேல் எப்படி காதல் வந்தது?.. சேட்டு பெண்ணுக்கு, அவள் வீட்டின் மாடியில் தங்கியிருக்கும் தமிழ் இளைஞனுக்கும் அவ்வளவு எளிதாகவா காதல்மலரும். படத்தின் மிகப்பெரிய மைனஸ்.. பா.விஜயின் திரைக்கதையும், நடிப்பும் தான். பல இடங்களில் முடியல.. ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. நின்னு கொல்லுது.
கவிஞர் தான் பெரிய கவிஞர் என்று உறுதிபடுத்துவதற்காக, பல காட்சிகளில் வசனத்துக்கு பதிலாய் கவிதை சொல்வது போல் வைத்திருக்கிறார். அதில் கல்லூரி காட்சியில் வரும் ஹீரோயின் பெயர் அ என்று சொன்னதை வைத்து, ஒரு கவிதை சொல்லும் இடம் அருமை. நிறைய இடஙக்ளில் வருவதால் அதுவும் போரடிக்கிறது. அதே போல் அந்த கம்யூனிஸ்ட் போராட்டம், போலீஸ், என்று ஹீரோயின் திருமணத்தின் போது இல்லாதிருக்க வைத்த காட்சிகளாகவே தெரிகிறது. திருமணத்தின் முன் கதாநாயகி நான் போவதற்கு முன் தன்னையே எடுத்து கொள்ள சொல்லும் காட்சியில்.. அப்பா வாங்கி கொடுத்தாருன்னு பிடிக்காத பொம்மையோட விளையாட போற் குழந்தையிடம் எப்படி என்று கேட்கும் வசனம் நன்றாக இருந்தாலும், சிச்சுவேஷம் செம காமெடி.
ஸ்ரீதேவிகாவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. காதலியாய் வரும் போதை விட, இனொருவன் மனைவியாய் தான் நன்றாக இருப்பதாய் நாடகமாடும் கேரக்டரில் மின்னுகிறார். க்ளைமாக்ஸில் தாஜ்மகாலில் விஜ்யின் காலடியில் அவர் பேசும் வசனங்கள் கண்ணாம்பா காலம்
என்ன தான் பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.
பாடல்கள் ஏராளம். கவிஞர் படமல்லவா. ஆனா முடியல.. க்ளைமாக்ஸ் எஸ்.பி.பி.. பாடல் மட்டும் இதம்.
ஒளிப்பதிவு, இயக்கம், ஜீவன்.. இவர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்கும் மயில் படத்துக்காக காத்திருக்கும் வேளையில் என்ன கஷ்டமோ தெரியவில்லை.. நிறைய இடங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். ஆனால் அருமையான ஒளிப்பதிவு. அதில் குறையொன்றுமில்லை. நடிக்கவும் செய்திருக்கிறார். ஹீரோவின் டெல்லி நண்பராய். ஆனால் இவர்கள் தமிழ் பற்றி பேசும் போது.. ஆங்காங்கே தமில், என்று ழகரத்தின் மேன்மையை சொல்லும் காட்ட்சியை வைத்தும் டப்பிங்கிலாவது சரி செய்திருக்கலாம்.
ஞாபகங்கள் – பழசு.. அரத பழசு
Post a Comment
65 comments:
படம் படுதுடுச்சா....
அட கடவுளே....
இன்னிக்கு நைட் 50 ரூபா மிச்சம்.... தேங்க்ஸ் தலைவா
இன்னொரு தபா:
அண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே.
அடடா! ரெயின்கோட் ரொம்ப நல்லா இருந்ததே .. பிடிச்சிதே ...
ம்ம்....!
மறந்து விடுவோம்...
நல்ல வேளை.....
இன்று நான் இந்த படத்துக்கு போகலாம்ன்னு இருந்தேன் .....
நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா???
கடவுள் சார் நீங்க .............
/இன்னிக்கு நைட் 50 ரூபா மிச்சம்.... தேங்க்ஸ் தலைவா
//
ஒழுங்கு மரியாதையா.. அந்த பணத்தை என் அக்கவுண்டுல போடு.. சுகுமார்.. அடுத்த படம் பாக்க்றதுக்கு பைனான்ஸ் கம்மியாயிருக்கு.
/இன்னொரு தபா:
அண்ணே, நீங்க ரொம்ப நல்லவருண்ணே.
//
நன்றி ஒரு காசு..
/அடடா! ரெயின்கோட் ரொம்ப நல்லா இருந்ததே .. பிடிச்சிதே ..//
ரெயின்கோட் கவிதை.. இது.. >>???
/மறந்து விடுவோம்..//
வேற வழி...
/நல்ல வேளை.....
இன்று நான் இந்த படத்துக்கு போகலாம்ன்னு இருந்தேன் .....
நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா???
கடவுள் சார் நீங்க .............
//
நான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாலும்.. நாலு பேருக்கு நல்லது செய்ய இது ஒண்னும் கஷ்டமில்ல மாயாவி..
எனக்கு பா.விஜய் நடிகிரார்னு சொன்ன உடனே
படத்தை பாக்க கூடாது அப்படின்னு முடிவு
எடுத்துட்டேன்.....
நான் நினைச்சேன் நீங்க "நீ உன்னை அறிந்தால்"
படத்துக்கு போவிங்கன்னு....
//என்ன தான் பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.//
When you pay peanuts, you get monkeys.
பதிவர்கள் சார்பில் “ இரும்பு இதயம் “ பட்டம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ....
மாஸ்கோவில் காவிரி அப்படின்ற பேர்ல பா.விஜய் நடிச்சிட்டு இருந்த படம் இதுதானா, இல்லை அது வேறா கேபிள்?
/பதிவர்கள் சார்பில் “ இரும்பு இதயம் “ பட்டம் வழங்கப்படுகிறது.
//
நன்றி ஸ்ரீ...
/உடனே
படத்தை பாக்க கூடாது அப்படின்னு முடிவு
எடுத்துட்டேன்.....
நான் நினைச்சேன் நீங்க "நீ உன்னை அறிந்தால்"
படத்துக்கு போவிங்கன்னு...//
நானும் தெலுங்கு படம் தான் பாக்க போனேன்.. டிக்கெட் கிடைக்கல... விதி யாரை விட்டது..
//When you pay peanuts, you get monkeys.//
நாட் ஆல் த டைம் இந்தியன்..
/மாஸ்கோவில் காவிரி அப்படின்ற பேர்ல பா.விஜய் நடிச்சிட்டு இருந்த படம் இதுதானா, இல்லை அது வேறா கேபிள்//
மாஸ்கோவின் காவேரி.. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கி, வெளிவர இருக்கும் படம்.. விஜய் ந்டிக்கவிருந்த படம் தாய்காவியம். அது ட்ராப்பானதுனாலதான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டாரு.. பாவம் இவரு கலைஞருக்கு வேண்டப்பட்டதாலே.. ராமநாராயணந்தான் விலைக்கு வாங்கி வெளியிட்டிருக்காரு..
பாவம் பா.விஜய்..
/பாவம் பா.விஜய்.//
என்னைபாத்தா பாவமாயில்லையா..? வண்ணத்துபூச்சியாரே..
இவங்க எல்லாம் படம் எடுத்து முடிச்சிட்டு பாப்பாங்களா, இல்ல விதி விட்ட வழின்னு வெளியிட்டுடுவாங்களா?
//ஹீரோவின் காலருக்குஷாட் ப்ரேக்கில் கர்சீப் வைக்காமல் பாடல்களில் காலர் பூராவும் முகத்தில் இருக்கும் பேன்கேக் தெரிய ஆடுவது கொடூரம்.//
சார் இதெல்லாம் என்னனே தெரியல. ஒருவேளை படம் பார்த்தால்தான் தெரியுமோ? உங்களுக்கே வெளிச்சம்.
ஹைய்யா..
இன்னொரு நூறு ரூபா மிச்சம்..!
வாழ்க கேபிளார்..!
ஞாபகங்கள்-ஞாபகமில்லை
//பல இடங்களில் முடியல.. ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது.//
சூப்பர் கேபிள்ஜி! கலக்கல் வரிகள்!
இப்படி அநியாயமா ஐநூறு டிக்கெட் கம்மியாக்க வெச்சுடீங்களே...
ஞாபகம் இல்லையோ தோழி பாட்டு டி.வில போடும்போதெல்லாம் வீடியோ மோடை ஆஃப் பண்ணிட்டு ஆடியோவை மட்டும்தான் கேட்கறேன்.
கேபிள் ஜீ, உங்களை எவ்வளோ எதிர்பார்த்தேன். கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்க கூடாதா? நேத்து நைட்டு படத்துக்கு கிளம்புறவரைக்கும் உங்க பிளாக்கை பார்த்துகொண்டிருந்தேன். இப்படி பண்ணிடிங்களே தல. இனிமே கொஞ்சம் முன்னாடியே பதிவபோடுங்க
ம் ஹூம், ஒரு படத்தையும் உட்றது கிடையாது, படத்தை போட்ட உடனே அதை கைமா பண்ணி பதிவு போடறது.
நல்லா இருங்கப்பு.
அன்பிற்குரிய பதிவர் கேபிள் சங்கர் பதிவுகளை தொடர்பவர்களே , அண்ணார் கேபிளார் நமக்காக நம் உடல் நலம் கெடாமலும், நம் மன நலம் பாதிக்கப்படாமல் தன்னை வருத்தி,இரவு காட்சி என்று பாராமல்
படம் வெளி வந்தவுடன் ,மொக்கையாய் இருந்தாலும், படம் பார்க்கும் பொழுது முக்கலாய் இருந்தாலும்,முனகலாய் பார்த்து பதிவு போடுகிறார் என்பது வலை உலகம் அறிந்ததே.அண்ணாரின் கலை சேவை தொடர 223 அவரின் பதிவை தொடரும் உள்ளங்கள் ஆளூக்க்கு ரூபாய் 1 வீதம் அனுப்பி நம் சொந்த செலவில் படம் பார்க்க அனுப்பி வைப்போம்.
//ஃபாஸ்ட் பார்வேர்ட் செய்தால் கூட நகர மாட்டேன் என்கிறது. நின்னு கொல்லுது. ////
;;))
நீங்க ரொம்ப நல்லவரு...
வாழ்க உங்கள் சேவை.
அன்பு நித்யன்
ஆஹா படம் மொக்கையா..... அப்ப நிச்சயமா இலங்கையில் release ஆகும், ஆனா சத்தியமா பார்க்க மாட்டேன்
kaveri ganeshயை நான் வழிமொழிகிறேன்.
பாடல்கள் ஏராளம். கவிஞர் படமல்லவா.
"ஆனா முடியல.."
க்ளைமாக்ஸ் எஸ்.பி.பி.. பாடல் மட்டும் இதம்.
பிரமாதம் :)
வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க
எவ்வளவு மொக்கை படம் வந்தாலும் எங்களை உஷார் படுத்திறீங்களே அண்ணே நீங்க ரொம்ப நல்லவரு.
அதுசரி!
உங்களுக்கு ஒரு விருது தரனும் போல , இப்படி பொறுமையா பார்த்து பொறுமையா விமர்சனம் எழுதினத்துக்கு..
தல.... அக்கவுண்டுல 50 ரூபா போடுறதுக்கு பதிலா.
உங்க ad sense விளம்பரத்தை அட் எ டைம் 50 வாட்டி க்ளிக் பண்ணிடவா....?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அண்ணே
வளர்க உம் சேவை ....
நாங்க தப்பிச்சோம்
தலைவா,
எவ்வளோ அடிச்சாலும் தாங்கறீங்களே.. அது எப்படி ?
படம் வெளியாவதற்கு முன்னாலயே உங்க விமர்சனம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
shankar, i respect your courage.
வெளுத்துக்கட்டுங்க !
வெளுத்துக்கட்டுங்க !
பெரிய கவிஞர் என்று உறுதிபடுத்துவதற்காக, பல காட்சிகளில் வசனத்துக்கு பதிலாய் கவிதை சொல்வது போல் வைத்திருக்கிறார்.//
நினைச்சேன்.. இப்படி ஏதாவது இருக்கும்னு..
அண்ணே படம் சூப்பர் அண்ணே...
குதிர பால் குடிக்கிற படத்த சொன்னேன் (கொடுத்து வச்ச குதிர )..
நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா???
கடவுள் சார் நீங்க .............
I like this comments
ஹம் சில படங்களின் டெரயிலர் பார்த்தாலே தெரிந்து விடும் ... சில காட்சிகள் போது ஒரு படத்தின் தரத்தை சொல்லிவிடும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல..
திரைவிமர்சனம் கலைஞர் டிவியில் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அம்மாவும் மனைவியும் தயவு செய்து மாத்துங்க என்று கதறாத குறை சீரியல் விட ஸோ ஸ்லோ என்ன செய்ய
நீங்க சொன்ன மாதிரி ஒரு கவிதைக்கு நான் கை தட்டினேன் ஆனா பல இடத்தில் செய்ற்க்கை தனம்
எல்லா கவிதைக்கும் ஆடியன்ஸ் கை தட்டுவது, அவர் இரு கைகளை உயர்த்தி ஒரு கவிதை சொல்லும் போது எல்லாரும் எழுந்து நிற்க்கின்றனர் என்ன கொடுமை சார் இது, சொல்லி வைத்தார் போல் மிக செயற்கை தனம்
நல்ல படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் எழுதுவேன் என்று முடிவு எடுத்து இருப்பதால் நமக்கு வருஷத்துக்கு 10-25 படம் தான் ;)
மேக்கப் மேன் மேல் தப்பு இல்லை அவர் சொல்ல சொல்ல இல்லை சார் இன்னும் போடுங்க என்று சொல்லி இருப்பார் போல அப்பா சாமி கொடுமையான கோள்ஸ் அப் சாட் அதில் அப்படி ஒரு மேக்கப் .. நீங்க நல்லா தானே இருக்கிங்க பேசாமா எதார்த்தமா இருந்து இருக்கலாம் தலைவா..
//இவங்க எல்லாம் படம் எடுத்து முடிச்சிட்டு பாப்பாங்களா, இல்ல விதி விட்ட வழின்னு வெளியிட்டுடுவாங்களா?//
அதை பத்தி சொல்ல முடியாது சிவகுமார்..ஏன் என்றால் அவர்கள் பார்க்கும் போது அதில் இருக்கும் குறைகள் தெரியாது ஏனென்றால் அது அவர்களின் குழந்தை..
//சார் இதெல்லாம் என்னனே தெரியல. ஒருவேளை படம் பார்த்தால்தான் தெரியுமோ? உங்களுக்கே வெளிச்சம்.//
கொஞ்சம் டெக்னிகல் டெர்மா போயிருச்சோ..? சாரி பாலாஜி..
ஒழுங்கு மரியாதையா அந்த 100ரூபாயை என்னிட்ட வந்து கொடுட்துருங்க.. இல்லைன்னா படத்தை போட்டுருவேன். உ.த
நன்றி அன்பு..
//ஞாபகம் இல்லையோ தோழி பாட்டு டி.வில போடும்போதெல்லாம் வீடியோ மோடை ஆஃப் பண்ணிட்டு ஆடியோவை மட்டும்தான் கேட்கறேன்.//
பாட்டு நல்லாத்தான் இருக்கு.. பரிசல். நீஙக் சொன்னா மாதிரி பாக்கத்தான் சகிக்கல..
//கேபிள் ஜீ, உங்களை எவ்வளோ எதிர்பார்த்தேன். கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்க கூடாதா? நேத்து நைட்டு படத்துக்கு கிளம்புறவரைக்கும் உங்க பிளாக்கை பார்த்துகொண்டிருந்தேன். இப்படி பண்ணிடிங்களே தல. இனிமே கொஞ்சம் முன்னாடியே பதிவபோடுங்க//
சாரி முரளீ.. என்னால முடியல..
//ம் ஹூம், ஒரு படத்தையும் உட்றது கிடையாது, படத்தை போட்ட உடனே அதை கைமா பண்ணி பதிவு போடறது.
நல்லா இருங்கப்பு.//
ஏதோ ஒரு சோஷியல் சர்வீஸ் பண்ற நினைப்புலதான் எழுதறேன். அண்ணே.. நம்மால முடிஞ்சது.தராசண்ணே..
நன்றி எவனோ ஒருவன்.
காவேரி கணேஷ் அண்ணே.. எப்படியாவது அந்த மாதிரி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சி.. காசை கொடுத்தா உங்களுக்கு புண்ணீயமா போகும்..:)
நன்றி ஜீவன்,
நன்றி நித்யகுமாரன்,
நன்றி ஸ்டாஸ்டிஸ்டிக்.. இலங்கையிலா இருக்கீங்க..?
//நினைச்சேன்.. இப்படி ஏதாவது இருக்கும்னு.//
நீஙக் நினைச்ச படியே இருக்கு ஆதி முடியல..
//நீங்களே சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட பிறகு நான் வைத்து கொள்வேனா???
கடவுள் சார் நீங்க .............
I like this comments//
ஒஹோ.. அவ்வளவு ஆயிருச்சா. ஒரு மொக்க படத்தை ஆகா ஓகோன்னு பாராட்டு உங்கள அந்த படததை பார்க்க வைக்கல.. நான் கேபிள் சங்கர் இல்லை.. :)
வழிமொழிந்ததுக்கு மிக்க் நன்றி..அசோக்
//நல்ல படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் எழுதுவேன் என்று முடிவு எடுத்து இருப்பதால் நமக்கு வருஷத்துக்கு 10-25 படம் தான் ;)//
அப்படி எழுதினா வருஷத்துக்கு மூணு நாலு படம்தான் எழுதமுடியும் சுரேஷ்..
///அண்ணே படம் சூப்பர் அண்ணே...
குதிர பால் குடிக்கிற படத்த சொன்னேன் (கொடுத்து வச்ச குதிர )../
அலோவ்வ்வ்.. அதுஎங்கய்யா பால் குடிக்குது.. நீயா ஏதையாவது கற்பனை செஞ்சிட்டு நான் படம் போட்டேன்னு சொல்றீயே.. அம்மா குதிரைய கொஞ்சுது.. :)
நன்றி இது நம்ம ஆளு.. உங்க பக்கத்துக்கு வந்து போயிட்டேன்..
நன்றி குடந்தை அன்புமணி..
நன்றி முரளி
//அதுசரி!
உங்களுக்கு ஒரு விருது தரனும் போல , இப்படி பொறுமையா பார்த்து பொறுமையா விமர்சனம் எழுதினத்துக்கு..//
கொடுங்கோ.. கொடுங்கோ.. கொடுங்கோ.. யார் விருது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்.. :(
//தல.... அக்கவுண்டுல 50 ரூபா போடுறதுக்கு பதிலா.
உங்க ad sense விளம்பரத்தை அட் எ டைம் 50 வாட்டி க்ளிக் பண்ணிடவா....?//
இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. சரி பண்ணிருங்க.. :0
நன்றி யூர்கேன்
நன்றி சுபா..
//தலைவா,
எவ்வளோ அடிச்சாலும் தாங்கறீங்களே.. அது எப்படி ?
படம் வெளியாவதற்கு முன்னாலயே உங்க விமர்சனம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//
இப்படி எல்லாரும் என்னை நல்லவன்னு சொல்றதுனாலேயே தான் இப்படி வலிக்காம நடிக்கிறேன்.. ஆவ்வ்வ்வ்வ்வ்... முடியல.. நன்றி அகநாழிகை..
நன்றி ரெட்மகி..
ஞாபகம் இல்லையோ தோழி பாட்டை பார்த்துட்டு sorry கேட்டுட்டு படம் பார்க்கலாமானு யோசிச்சுகிட்டிருன்தேன். நல்ல வேளை உங்க விமர்சனம் பார்த்ததால தப்பிச்சுட்டேன். நன்றி நண்பரே.
so........
waste????
:)))
மொக்கை படமெல்லாம் பாக்குறதினால இனிமேல் cable Sankar மொக்கை பட நாயகன் என அழைக்கப் படுவார்.
padu kevalamana padam pola. nalla velai tapinen. teater poha mutalla unga vimarsanam pattatale tapinen.
thnks thalai
Post a Comment