Thottal Thodarum

Jul 11, 2009

வாமனன் - திரைவிமர்சனம்

vamanan-photos
சுப்ரமணியபுரம் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் வாமனன். படம் வெளிவருவதற்கு முன்னாலேயே தான் நடிக்கும் படங்களில் இந்த படம் ஒன்றுதான் நல்ல படம் என்று அறிக்கை விட்டு மாட்டிக் கொண்ட படம். ஒரு திரில்லர் வகை படம்.

பிகினி உடையில் லட்சுமிராயை ரிமோட் கண்ட்ரோல் ஹெலி கேமரா மூலம் படமெடுத்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். திடீரென்று ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆகி பக்கத்தில் உள்ள ஒரு கார்டனில் மரத்தில் மாட்டி கொண்டுவிட, அங்கே வருங்கால முதல்மைச்சராய் வர இருக்கும் டெல்லி டகணேஷை, சம்பத்ராஜ் ஒரே ஒரு ஆளுடன் கொலை செய்கிறார் அது அந்த டேப்பில் ரிக்கார்ட் ஆக, அந்த டேப்பை தேடி போலீஸும், அமைச்சரும் அலைய, அந்த டேப் லட்சுமிராயிடம் இருப்பதாய் போலீஸும், அமைச்சரின் ரவுடிகளும் அலைய, ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்கிறார்கள். சினிமாவில் நடித்து பெரிய ஆளாகவேண்டும் என்று சென்னைக்கு வரும் ஜெய் இந்த களேபரத்தில் மாட்டிக் கொள்ள, டேப் இவனிடம் மாட்டிக் கொள்ள,  லஷ்மிராயின் கொலையில் பழி இவன் மீது வந்து ஓட, போலீஸ் துரத்த, ஒரு முறை திரும்பி பார்த்து எதிர்த்து, எவ்வாறு சூழ்ச்சியிலிருந்து வெல்கிறான் என்பதை, பரபரப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
vamanan

ஜெய் அப்படியே விஜய் போல நடிப்பதற்கு முயற்சி செய்கிறார். நடப்பது, சிரிப்பது, நடிப்பது.(????), என்று சாரி ஜெய் நீங்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் நீங்கள் நடித்த கேரக்டர்களோடு ஒன்றி நடித்ததால் தான் பெயர் பெற்றீர்கள். 

புதுமுகம் பிரியா குட்டி அஞ்சு போல இருக்கிறார். பாடல்களில் ஆடுவது, அவ்வப்போது ஜெய்யுடன் நடப்பதை தவிர பெரிசாய் வேறெதும் இல்லை. அவரின் அம்மா ஊர்வசி.. இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் வெகுளி, அம்மாவாய் வந்து நம் உயிரை எடுப்பார். எரிச்சலாய் இருக்கிறது.

முதல் பாதியில் சந்தானமும், ஜெய்யும், படத்தை கலகலப்பாய் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார்கள். லஷ்மிராய், சம்பத்ராஜ், தலைவாசல் விஜய், ரஹ்மான், ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள்.

அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஆரம்ப காட்சியில் ஆரவாரமாய் ஆரப்ம்பித்து, க்ளைமாக்ஸில் ஓய்ந்து போய்விட்டது.  ஒரு வேளை அவரது அஸிஸ்டெண்ட் யாராவது எடுத்தார்களா..? vaamanan-se9-2008_3

யுவனின் இசை படத்தில் மிகப்பெரிய லெட்டவுன்..  ஆனால் பிண்ணனி இசையில் நான் இருக்கிறேன் என்று ஆஜராகிரார்.

மிக அழகாய் சீட்டு நுனிக்கு கொண்டு போக வைக்கக் கூடிய கதைதான். மீடியோகர் திரைக்கதையால் தொய்ந்து போய்விட்டது. ரஹ்மான் கேரக்டர் ஒரு பிஷ்ஷியான கேரக்டர்.  முதல் பாதியில் காமெடியால் சமாளித்திருக்கும் இயக்குனர் இரண்டாவது பாதியில் திடீரென்று என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நேரம் அலைபாய்ந்து விட்டு, க்ளைமாக்ஸுக்கு வருகிறார். படத்தின் உச்சபட்ச டிவிஸ்டுகளும், டர்ன்களும் கடைசி 20 நிமிடங்களில் வருகிறது. அந்த பீகார் கும்பல் மேட்டரை எதற்காக கடைசி வரை கொண்டு வருக்கிரார் என்று யோசித்து கொண்டிருந்த போது, க்ளைமாக்ஸில் புத்திசாலிதனமாய் நுழைத்திருக்கிறார் இயக்குனர். அதே போல் ஜெய் தன் காதலை சொல்லும் மணல் ஓவியக் காட்சி கவிதை. கொஞ்சம் திரைக்கதையில் மெனகெட்டிருந்தால் ஒரு நல்ல திரில்லர் கிடைத்திருக்கும்.

வாமனன் –  டார்கெட் மிஸ்..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

56 comments:

Arun Kumar said...

விமர்சனத்துக்கு நன்றி
ஜெய் நல்ல வளர வேண்டிய நடிகர் இந்த படம் அவருடைய தவறுகளை திருத்தி கொள்ள கூடிய வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடா தப்பிச்சேன் சங்கர். நான் வாமணன் அல்லது ICE AGE 3 போகனும்னு நினச்சேன். வாமணன் அவுட்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடா தப்பிச்சேன் சங்கர். நான் வாமணன் அல்லது ICE AGE 3 போகனும்னு நினச்சேன். வாமணன் அவுட்டா?

VISA said...

வணக்கம் அண்ணே. நல்ல விமர்சனம். முதலில் நம் ஆட்களிடம் நல்ல கதை இல்லை. அப்படியே ஒரு கதை கிடைத்தாலும் திரைக்கதை என்ற பெயரில் அதை கந்தலாக்கி விடுகிறார்கள். பிறகு புதிதாய் வரும் நடிகர்கள் எப்போதும் விஜய் ரஜினி போல் நடிப்பதும் அவர்களை போல் ஆக நினைப்பதும் ஒரு மிக பெரிய சாபக்கேடு. அப்படி நடித்து (நடித்து என்று சொல்ல இயலாது) எனக்கு அறவே பிடிக்காமல் போனது பி.வாசுவின் மகன். அதை தொடர்ந்து நிறைய பேர். முதலில் கதா பாத்திரத்துக்கு ஏற்ற நாடிப்பை வெளிப்படுத்த வேண்டும். சினிமாவிலிருந்து பாப்புளாரிட்டி தேடி தையல் மெஷின் கொடுத்து எப்படியாவது அரசியலில் புகலாம் என்ற எண்ணம் இல்லாதவர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. நான் கேட்டுக்கொள்வதெல்லாம் உன்னதமான சினிமாவில் நடிக்க பணியாற்ற உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதர்கு மனசாட்சியோடு பணியாற்றுங்கள். அவ்வளவே.
உங்களின் விமர்சங்கள் மிகவும் கூர்மையாக இருப்பது சிறப்பு. மேலும் வரிகளின் அழகு. ரொம்ப சூப்பர்.

Cable சங்கர் said...

//அப்பாடா தப்பிச்சேன் சங்கர். நான் வாமணன் அல்லது ICE AGE 3 போகனும்னு நினச்சேன். வாமணன் அவுட்டா?//

ramesh.. நேத்து பின்னூட்டத்தில ஏதோ.. பயமில்லாதவ்ன் ப்ளாக்குன்னு சொல்லியிருந்தீங்களே அது என்ன..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://bayamillaathavan.blogspot.com/

இந்த blog ல போய் பாருங்க சங்கர். உங்களுக்கு பிடித்த BLOG எது ? அப்படின்னு ஒரு ஓட்டு லிஸ்ட் இருந்தது. அததான் சொன்னேன்.

tamilish ல என்னோட பதிவ add பண்ணுவது எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://bayamillaathavan.blogspot.com/

இந்த blog ல போய் பாருங்க சங்கர். உங்களுக்கு பிடித்த BLOG எது ? அப்படின்னு ஒரு ஓட்டு லிஸ்ட் இருந்தது. அததான் சொன்னேன்.

tamilish ல என்னோட பதிவ add பண்ணுவது எப்படி?

தராசு said...

படிச்சாச்சு, படிச்சாச்சு

Cable சங்கர் said...

tamilishல் போய் ரிஜிஸ்டர் செய்து கொண்டு.. ஒவ்வொரு பதிவு போட்ட பின் அதனுடய லிங்க்கை சம்மிட்டு செய்தால் போது ரமேஷ்..

Cable சங்கர் said...

//விமர்சனத்துக்கு நன்றி
ஜெய் நல்ல வளர வேண்டிய நடிகர் இந்த படம் அவருடைய தவறுகளை திருத்தி கொள்ள கூடிய வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது//

அவர் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு . ஆனா பார்ட்டி அதுக்குள்ள பேரை கெடுத்துகிட்டாரு.. அருண்.

Cable சங்கர் said...

//உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதர்கு மனசாட்சியோடு பணியாற்றுங்கள். அவ்வளவே.
உங்களின் விமர்சங்கள் மிகவும் கூர்மையாக இருப்பது சிறப்பு. மேலும் வரிகளின் அழகு. ரொம்ப சூப்பர்.//

முயற்சி செய்கிறேன். விசா.. மிக்க நன்றி உங்கள் விமர்சனத்துக்கு..

Cable சங்கர் said...

நன்றி தராசண்ணே..

ரமேஷ் வைத்யா said...

ரைட்டு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nanri sankar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

bayamillathavan blog paatheengalaa?

தீப்பெட்டி said...

படத்த பாக்கலாமா? வேண்டாமா பாஸ்.. அத சொல்லுங்க..

Jackiesekar said...

நல்ல விமர்சனம் கேபிள்..நன்றி

பிரபாகர் said...

சங்கர்,

விமர்சர்சனத்தில் வழக்கம்போல் கலக்குகிறீர்கள்...

சில பிரபல பத்திரிகைகள் விமர்சனம் எனக்கிற பெயரில் சொதப்பி கடைசியாய் 40+ மார்க் போட்டு வழிவதை பார்க்கும் போது உங்களின் நேர்மையான விமர்சனம் வழக்கம்போல்
கவர்கிறது. நன்றி...

பிரபாகர்....

R.Gopi said...

"தல"

மிக நேர்த்தியான விமர்சனம். உள்ளதை, உள்ளபடியே பதிவு செய்திருக்கிறீர்கள். "ஜெய்" இன்னொரு "விஜய்"யா? ஒருத்தனையே நாட்டுல சமாளிக்க முடியலியே......

"போக்கிரி"க்கு கீழே
"வில்லு"க்கு மேலே.....

இப்படி சொல்லலாமா, இந்த படத்த? எப்படியும் நான் பார்க்க போறதில்ல..... மத்தவங்களுக்காக தான்....

(அடுத்து என்ன படம், "இந்திரா விழா"வா??)

VISA said...

//உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதர்கு மனசாட்சியோடு பணியாற்றுங்கள். அவ்வளவே.
உங்களின் விமர்சங்கள் மிகவும் கூர்மையாக இருப்பது சிறப்பு. மேலும் வரிகளின் அழகு. ரொம்ப சூப்பர்.//
கேபிளாரே...நான் உங்களை என்று பொதுவாக சொன்னேன். அது கேபிளாருக்கு அல்ல. உங்கள் விமர்சங்களை படிக்கிற பொழுதே உங்கள் மனசாட்சி தெரிகிறது. அதுவும் ஹாட் ஸ்பாட்டில் உங்கள் தாராள மனம் அப்பட்டமாய் தெரிகிறது. எனவே அந்த "உங்கள்" பொதுவான உங்கள்.

-------------------

//அவரின் அம்மா ஊர்வசி.. இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் வெகுளி, அம்மாவாய் வந்து நம் உயிரை எடுப்பார். எரிச்சலாய் இருக்கிறது.//
Simple and sharp.
அந்த இடத்தை அடுத்த தலை முறையில் லைலா பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

butterfly Surya said...

ரைட்டு...

நெக்ஸ்ட்..

Raju said...

:)

idhyam said...

"யுவனின் இசை படத்தில் மிகப்பெரிய லெட்டவுன்" லெட்டவுன் என்றால் என்ன? தங்கள் பதிவுகளில் ஆங்கில சொற்களை தமிழில் எழுதும்போது அந்த ஆங்கில சொல்லையும் குறுபிட்டால் நன்றாக இருக்கும்! as usual you save my 100 rupees!

நையாண்டி நைனா said...

வாமணன் - புரட்யூசர் இப்ப கோமணன்.

குடந்தை அன்புமணி said...

விரைவில் கலைஞரின் வெள்ளிப்பரிசில் எதிர்பாருங்கள் வாமனன்.

Rajavel said...

அப்போ இந்த படத்துக்கும் will smith இன் enemy of the states படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படித்தானே

Rajavel said...

அப்போ இந்த படத்துக்கும் will smith இன் enemy of the states படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படித்தானே

Beski said...

நன்றி சார்.
---
//.. தான் நடிக்கும் படங்களில் இந்த படம் ஒன்றுதான் நல்ல படம் என்று...//
நல்ல படமே இப்படியா? அப்போ மத்ததெல்லாம் எப்படி இருக்குமோ!

R.Gopi said...

//ஜெய் அப்படியே விஜய் போல நடிப்பதற்கு முயற்சி செய்கிறார். நடப்பது, சிரிப்பது, நடிப்பது.(????), என்று //

*******

இப்படி சொல்லி, சொல்லியே எங்கள டெர்ரரின் உச்சிக்கே கொண்டு போயிடுவீங்க போல இருக்கே?

நல்லா கெளப்புரீங்கன்னே பீதிய.........

அத்திரி said...

//ஜெய் அப்படியே விஜய் போல நடிப்பதற்கு முயற்சி செய்கிறார். நடப்பது, சிரிப்பது, நடிப்பது...//

ஒரு விஜயவே தாங்க முடியல ..இதுவேறயா

Anonymous said...

என்னன்னே இப்படி புரடியூசரு தலைல மண்ண போடுறீங்க. உங்க விமர்சனத்த படிச்ச யாரும் படத்துக்கு போக மாட்டாங்க போலிருக்கே?

வழிப்போக்கன் said...

appa paravaailannu solluriingga...
:)

Bala said...

nic review. go ahead. i m waiting for ur movie. when u goin 2 direct?
all the best.

Cable சங்கர் said...

நன்றி ரமேஷ்வைத்யா அண்ணே..

Cable சங்கர் said...

/bayamillathavan blog paatheengalaa?//

அதிலே இப்ப அந்த லிங்க் ஏதும் இல்லை ரமேஷ்.

Cable சங்கர் said...

/படத்த பாக்கலாமா? வேண்டாமா பாஸ்.. அத சொல்லுங்க//

அது உங்க இஷ்டம் தீப்பெட்டி..

Cable சங்கர் said...

நன்றி ஜாக்கி சேகர்..
நன்றி எவனோ ஒருவன்.

Cable சங்கர் said...

/சங்கர்,

விமர்சர்சனத்தில் வழக்கம்போல் கலக்குகிறீர்கள்...

சில பிரபல பத்திரிகைகள் விமர்சனம் எனக்கிற பெயரில் சொதப்பி கடைசியாய் 40+ மார்க் போட்டு வழிவதை பார்க்கும் போது உங்களின் நேர்மையான விமர்சனம் வழக்கம்போல்
கவர்கிறது. நன்றி...

பிரபாகர்...//

மிக்க நன்றி பிரபாகர்..

Cable சங்கர் said...

/"தல"

மிக நேர்த்தியான விமர்சனம். உள்ளதை, உள்ளபடியே பதிவு செய்திருக்கிறீர்கள். "ஜெய்" இன்னொரு "விஜய்"யா? ஒருத்தனையே நாட்டுல சமாளிக்க முடியலியே......

"போக்கிரி"க்கு கீழே
"வில்லு"க்கு மேலே.....

இப்படி சொல்லலாமா, இந்த படத்த? எப்படியும் நான் பார்க்க போறதில்ல..... மத்தவங்களுக்காக தான்....

(அடுத்து என்ன படம், "இந்திரா விழா"வா??)
//

இருக்கலாம் கோபி இன்னைய வரைக்கு நான் படம் பாக்கல..

Cable சங்கர் said...

/கேபிளாரே...நான் உங்களை என்று பொதுவாக சொன்னேன். அது கேபிளாருக்கு அல்ல. உங்கள் விமர்சங்களை படிக்கிற பொழுதே உங்கள் மனசாட்சி தெரிகிறது. அதுவும் ஹாட் ஸ்பாட்டில் உங்கள் தாராள மனம் அப்பட்டமாய் தெரிகிறது. எனவே அந்த "உங்கள்" பொதுவான உங்கள். //

விசா.. நீங்கள் என்னை குறிப்பிட்டு சொல்லியிருந்தாலும், தவறாய் எடுத்து கொள்ள மாட்டேன். ஏனென்றால் அந்த பொறுப்பு எதிர்காலத்தில் படம் இயக்க போகும் எனக்கு இருக்கு என்பதால்

அதை தவிர என் மனம் ஹாட் ஸ்பாட்டில் தெரிவது..:)

Cable சங்கர் said...

நன்றி வண்ணத்து பூச்சியார்.
நன்றி டக்ளஸ்

Cable சங்கர் said...

/"யுவனின் இசை படத்தில் மிகப்பெரிய லெட்டவுன்" லெட்டவுன் என்றால் என்ன? தங்கள் பதிவுகளில் ஆங்கில சொற்களை தமிழில் எழுதும்போது அந்த ஆங்கில சொல்லையும் குறுபிட்டால் நன்றாக இருக்கும்! as usual you save my 100 rupees!//

லெட்டவுன் என்றால் நம் எதிர்பார்பை விட கீழே என்று அர்த்தம் கொள்ளலாம்.. முயற்சி செய்கிறேன். இதய்ம். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//வாமணன் - புரட்யூசர் இப்ப கோமணன்//

:(

Cable சங்கர் said...

/விரைவில் கலைஞரின் வெள்ளிப்பரிசில் எதிர்பாருங்கள் வாமனன்//

வரலாம். நன்றி குடந்தை அன்புமணீ..

Cable சங்கர் said...

/அப்போ இந்த படத்துக்கும் will smith இன் enemy of the states படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படித்தானே
//

ராஜீவ்.. என்னை பொறுத்த வரை.. இம்மாதிரியான இன்ஸ்ப்ரேஷனோ, அல்லது.. அப்பட்டமான காப்பியோ அதை பற்றி ப்ரச்சனையில்லை.. அதை சொதப்பாமல் இருந்தால் சந்தோஷமே.. இந்த படத்தை பொறுத்த வரை.. சொதப்பிட்டாங்களேன்னு வருத்தம்தான்.

Cable சங்கர் said...

/இப்படி சொல்லி, சொல்லியே எங்கள டெர்ரரின் உச்சிக்கே கொண்டு போயிடுவீங்க போல இருக்கே?

நல்லா கெளப்புரீங்கன்னே பீதிய.........
//

ஒரு ஆபத்து வருதுண்ணா.. நண்பன் உங்களுக்கு சொல்லாம இருப்பாங்களா..?

Cable சங்கர் said...

/ஒரு விஜயவே தாங்க முடியல ..இதுவேறயா//

இருங்க.. இருங்க.. கார்க்கி கிட்ட சொல்லி உங்களுக்கு பின்னூட்டம் போட சொல்றேன்.

Cable சங்கர் said...

/என்னன்னே இப்படி புரடியூசரு தலைல மண்ண போடுறீங்க. உங்க விமர்சனத்த படிச்ச யாரும் படத்துக்கு போக மாட்டாங்க போலிருக்கே?
//

அப்படியில்லைண்ணே.. படம்பாக்கணும்னு நினைக்கிறவங்க. கண்டிப்பா படம் போய் பார்ப்பாங்க..

Cable சங்கர் said...

/appa paravaailannu solluriingga...
:)//

அப்படியும் வச்சிக்கலாம்.வழிப்போக்கன்.

Cable சங்கர் said...

/nic review. go ahead. i m waiting for ur movie. when u goin 2 direct?
all the best.//

விரைவில் நடக்கும் என்கிற நம்பிக்கையுடன்.. காத்திருக்கிறேன். பாலா.

Romeoboy said...

படத்த நானும் பார்த்துட்டேன்ல. ஜெய் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார், அவர் இன்னும் ஆழமாக கதையை கேட்டு டைரக்டர் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும். வளரும் நடிகன் தான் உண்டு நடிப்பு உண்டு என்று இருந்திட கூடாது கொஞ்சம் படத்தின் போக்கையும் பார்க்க வேண்டும். இந்த படத்தின் முதல் பாதி முடிந்த பிறகு கூட திரைகதையில் வேகம் இல்லாதது மிக பெரிய சறுக்கல். கடைசி 20 மட்டும் கொஞ்சம் பர பர சீன் இருப்பதை மறுக்கவும் முடியாது . இயக்குனர் முதல் பாதியை சந்தானம் வைத்து ஓடி விடலாம் என்று நினைத்துவிட்டார் போல்.

Average film with mass advertisement.

Romeoboy said...
This comment has been removed by the author.
ரெட்மகி said...

நான் படம் பாத்தேன் அண்ணே ....
நான் நினைத்தை விட உங்கள் விமர்சனத்தில் காரம் குறைவுதான் ...
இந்த படத்துக்கு இவ்ளோ போதும் என்று விட்டு விட்டீர்களோ...

//
ஜெய்
Dance சுத்தமா வரல...
//

//
தலைவாசல் விஜய் ... போலீஸ் கமிஷனர்

அய்யோ கடவுளே...
//

//
நீயா நானா .... கோபி

பேர கெடுத்து கொண்டார்
//

//
வில்லன்
______________
//

//
திரைகதை

மகா சொதப்பல்
//

//
லாஜிக் சொதப்பல்கள் ஏராளம்
//

துபாய் ராஜா said...

கடந்தவாரம் ஊருக்கு சென்றிருந்த பொழுது ஆசையாக வாமனன் படம் பார்க்க சென்று தலைவலிதாங்க முடியாமல் இடைவேளைக்கு முன்பே எழுந்து ஓடி வந்து விட்டேன்.

இப்படி எல்லாம் லாஜிக் இல்லாமல் படம் எடுத்தால் ஊர்ல இருக்கிற கொஞ்ச நஞ்ச தியேட்டரையும் சீக்கிரம் இழுத்து மூடிடுவாங்க.

Jacks said...

அந்த பீகார் கும்பல் மேட்டரை எதற்காக கடைசி வரை கொண்டு வருக்கிரார் என்று யோசித்து கொண்டிருந்த போது, க்ளைமாக்ஸில் புத்திசாலிதனமாய் நுழைத்திருக்கிறார் இயக்குனர்.

Actually this is a copy from "Enemy Of the State". This was an excellent move starring Will Smith (same role as Jai). They tried to adopt this film for Tamil as Vamanan. It is really sad that you have to think twice before appreciating any of our directors. Don't we have some good directors who believe in team work. Atleast they should have the heart to give credir to the original creater. It looks pathetic to copy the scenes from English movies and under the "Screenplay" they put their own name.

Cable சங்கர் said...

/Actually this is a copy from "Enemy Of the State". This was an excellent move starring Will Smith (same role as Jai). They tried to adopt this film for Tamil as Vamanan. It is really sad that you have to think twice before appreciating any of our directors. Don't we have some good directors who believe in team work. Atleast they should have the heart to give credir to the original creater. It looks pathetic to copy the scenes from English movies and under the "Screenplay" they put their own name.//

jack எனக்கு முன்பே தெரியும் இது எனிமி ஆப்த ஸ்டேட் என்று.. ஆனாலும் அந்த காட்சி அந்த படத்தில் இருந்ததாய் ஞாபகம் இல்லை.. அதனால் தான் குறிப்பிட்டேன்..