அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.
செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.
இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.
பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.
சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.
நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.
சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.
சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.
இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.
ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.
துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.
இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
62 comments:
//கேபிள் இலக்கியவாதி ஆயிட்டாருப்பா...
கூலிக்கு மாரடித்தல்,ஒப்புக்கு ஒப்பாரி..இப்படி சிலதையும் எழுதியிருக்கலாம்...
தலைவா,
ஏன் அதிர்ச்சி தரும் இடுகை ??? நீங்களா அல்லது போலி கேபிள் சங்கர் யாராவதா... நன்றாக இருந்தது.
ஸ்ரீ....
அவ்வ்வ்வ்வ்வ் :(((
இந்த இடுகைக்கு இப்படிதான் பின்னூட்டம் போட முடியும்.
என்னாச்சு தலைவரே..?
என்னாது இது... அக்கம்பக்கம் யாரும் அப்பீட்டு ஆகிட்டாங்களா... ராத்திரி வைச்ச ஒப்பாரி சத்தத்தில தூக்கம் கெட்டு எழுதினீங்களா...
ஆனாலும்,உங்க ஆராய்ச்சி நல்லாருக்கு.
என்னமோ ஆகிருச்சு....நேத்து கூட நல்லாதானே பேசிட்டிருந்தீங்க......சாவு வூட்டுக்கு போனாலும் உங்க சினிமா புத்தி போகாதா....எவ எவ எப்புடி அழுவுறா...யாராரு இன்னா மேரி படம் காட்டுறாங்கன்னு கவனிச்சிகினே இருக்கீங்களே.......நீங்க மேலெ சொல்லிகிற விஷயங்களை நானும் நெறய இடத்துல கவனிச்சிருக்கேன்
இலக்கியவியாதி தொத்திருச்சுன்னு நினைக்கிறேன்..!
தல,
பான்பராக்க போட்டுக்கொண்டு பெட்ல இருந்தாஙகளே அவங்க டிக்கெட்
வாங்கிட்டாங்களா?
சங்கர்,
ஆர்ப்பாட்டமில்லாமல் அழுது... சாரி பதித்திருக்கிறீர்கள்.
சிலபேர் அழ திராணியற்று எதோ பறிகொடுத்தாற்போல் கல்லென இருப்பார்கள். எல்லோரும் உன் மனசு என்ன கல்லா, அழவே மாட்டியா? என கேட்கும் தருணத்தில், நெருக்கமான சிலர் அவர்களையே கவனித்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் அழுவார்கள் பாருங்கள், அது தான் உச்சகட்ட அழுகை என்பேன். அழாமல் இருந்து சிலர் மனதளவில் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
மிக நல்ல பதிவு, உங்களின் பதிவிலேயே நிறைய கதைகள் எழுத விஷயங்களை தெளித்திருக்கிறீர்கள். உபயோகிக்க முயற்சிக்கிறேன்.
நிதர்சனம், சினிமா, நகைச்சுவை என பல விதங்களிலும் கலக்குகிறீர்கள்... கற்றுக்கொள்ள இருக்கிறது நிறைய உங்களிடம்...
பிரபாகர்.
அவ்....அவ்....
அழுகைப் பற்றிய ஆராய்ச்சியா... என்ன திடீரென இப்படி ஒரு இடுகை...
முடியலையப்பா (கண்ணில கண்ணீர் வந்திடுச்சு)
என்ன அண்ணா... மீள் பதிவு?
பிரிவின் வலியை மனிதர்கள் தாம் அதிகமாக உணர்கிறார்கள் ..
அழவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே மிருகம் மனிதன் ..
அழுகை கண்ணிரின் பிம்பம் ..
உங்கள் பதிவும் அதையே பிரதிபளிக்கிறது..
//இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்//
எப்பிடி தல கரிட்டா நம்மளபத்தி சொல்லட்ட. எஸ்கேப்பாகி டாஸ்மாக் போய்டுவோம். சாவு எடுக்கரதுக்குள்ள ஆளாளுக்கு ஒரு ஃபூல் உள்ள போய்டும். எடுக்கசொல்ல & reaching to graveyardடு வரைக்கும் நாங்க பன்ற அளம்பல் சத்தியராஜ் கவுண்டமனி கணக்காயிருக்கும்.
அது என்னமோ தலவா நம்ம(எங்க) இனத்தில கல்யாணத்தவிட சாவு சும்மா செம்ம கலக்கலா இருக்கும். அதபத்தி தனி பதிவாவே போடலாம்.
(மீள் பதிவுன்னு புரியுதுப்பா)
அழுகையிலும் அழுத்தமான பதிவு.
Why feelings... ??
கடைசியா சொன்னது
பிதாமகன் அழுகை ....
ஏன் இந்த கொலை வெறி?
அழுகை உங்கள் மனதை லேசாக்கும், கண்ணிர் உங்கள் கண்களை சுத்தப்படுத்தும்....
உங்ககிட்ட சீரியஸ் மேட்டர் கேட்டது தப்பு தாண்ணே. நீ வழக்கமா அடிக்கிற சரக்கு அழகு. இது வேணாண்ணே.
டக்கீலா கதை டக்கரு அண்ணே. அதை அப்படியே மைண்டைன் பண்ணி போய்ட்டேயிறு
சிறப்பான பதிவு.
//சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.
சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு//
பார்த்திருக்கிறேன்.
ஏன் இப்பூடி முடியல..../ஆமா சிரித்தால் சிரிப்பேன்னு ஒரு படம் வந்துருக்காமே யாரும் உங்களுக்கு tikcet தரலியா இல்ல
///////துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.
இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..\\\\\\\\\
இந்த அனுபவம் எனக்கு உண்டு
இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..//
ஆண்கள் மயானம் வரை போகும் பாக்கியம் பெற்றவர்கள். இறந்த உடலை எடுத்துக்கொண்டு கிளம்பியதும் அந்த வீட்டுப் பெண்கள் வீதியில் விழுந்து நமஸ்கரித்து அழும் அழுகை... அக்கம்பக்கத்துக்காரர்களையும் அழவைத்துவிடும்.
உங்க பதிவு நல்லா இருக்கு
அண்ணே மீள் பதிவா
நல்லாதான் அழுதீங்க போங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///கேபிள் இலக்கியவாதி ஆயிட்டாருப்பா...
கூலிக்கு மாரடித்தல்,ஒப்புக்கு ஒப்பாரி..இப்படி சிலதையும் எழுதியிருக்கலாம்..//
ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாஙக்..
/தலைவா,
ஏன் அதிர்ச்சி தரும் இடுகை ??? நீங்களா அல்லது போலி கேபிள் சங்கர் யாராவதா... நன்றாக இருந்தது.
//
ஏன் ஒரிஜினல் எல்லாம் இப்படி எழுதமாட்டாரா..?
/அவ்வ்வ்வ்வ்வ் :(((
இந்த இடுகைக்கு இப்படிதான் பின்னூட்டம் போட முடியும்//
:(
/என்னாச்சு தலைவரே..//
ஏன் டக்ளஸ்.. என்னாச்சு..?
/என்னாது இது... அக்கம்பக்கம் யாரும் அப்பீட்டு ஆகிட்டாங்களா... ராத்திரி வைச்ச ஒப்பாரி சத்தத்தில தூக்கம் கெட்டு எழுதினீங்களா...
ஆனாலும்,உங்க ஆராய்ச்சி நல்லாருக்கு//
நன்றி குடந்தை மணி.. பக்கத்துல எதும் சாவு விழல..
/என்னமோ ஆகிருச்சு....நேத்து கூட நல்லாதானே பேசிட்டிருந்தீங்க......சாவு வூட்டுக்கு போனாலும் உங்க சினிமா புத்தி போகாதா....எவ எவ எப்புடி அழுவுறா...யாராரு இன்னா மேரி படம் காட்டுறாங்கன்னு கவனிச்சிகினே இருக்கீங்களே.......நீங்க மேலெ சொல்லிகிற விஷயங்களை நானும் நெறய இடத்துல கவனிச்சிருக்கேன்
//
எல்லாம் ஒரு அப்ஷர்வேஷந்தானே ராஜ்..
/இலக்கியவியாதி தொத்திருச்சுன்னு நினைக்கிறேன்..!//
நீங்க ஒருத்தர் தான் பாக்கி... உ.த.
/தல,
பான்பராக்க போட்டுக்கொண்டு பெட்ல இருந்தாஙகளே அவங்க டிக்கெட்
வாங்கிட்டாங்களா//
என்னா ரவிஷங்கர்.. அவங்கள பத்தி எனக்கு என்ன தெரியும்.
/சங்கர்,
ஆர்ப்பாட்டமில்லாமல் அழுது... சாரி பதித்திருக்கிறீர்கள்.
சிலபேர் அழ திராணியற்று எதோ பறிகொடுத்தாற்போல் கல்லென இருப்பார்கள். எல்லோரும் உன் மனசு என்ன கல்லா, அழவே மாட்டியா? என கேட்கும் தருணத்தில், நெருக்கமான சிலர் அவர்களையே கவனித்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் அழுவார்கள் பாருங்கள், அது தான் உச்சகட்ட அழுகை என்பேன். அழாமல் இருந்து சிலர் மனதளவில் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
மிக நல்ல பதிவு, உங்களின் பதிவிலேயே நிறைய கதைகள் எழுத விஷயங்களை தெளித்திருக்கிறீர்கள். உபயோகிக்க முயற்சிக்கிறேன்.
நிதர்சனம், சினிமா, நகைச்சுவை என பல விதங்களிலும் கலக்குகிறீர்கள்... கற்றுக்கொள்ள இருக்கிறது நிறைய உங்களிடம்...//
மிக்க நன்றி பிரபாகர்.. அப்படி ஒன்றும் பெரிதாய் எனக்கு தெரியாது..
/அவ்....அவ்....
அழுகைப் பற்றிய ஆராய்ச்சியா... என்ன திடீரென இப்படி ஒரு இடுகை...
முடியலையப்பா (கண்ணில கண்ணீர் வந்திடுச்சு)
//
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப இளகின மனசுண்ணே..
/பிரிவின் வலியை மனிதர்கள் தாம் அதிகமாக உணர்கிறார்கள் ..
அழவும் , சிரிக்கவும் தெரிந்த ஒரே மிருகம் மனிதன் ..
அழுகை கண்ணிரின் பிம்பம் ..
உங்கள் பதிவும் அதையே பிரதிபளிக்கிறது//
நன்றி மந்திரன்.
/அழுகையிலும் அழுத்தமான பதிவு.
Why feelings... ??//
சும்மாத்தான் வண்ணத்துபூச்சியாரே..
/ஏன் இந்த கொலை வெறி//
சும்மாத்தான் ஜெய்..
/அழுகை உங்கள் மனதை லேசாக்கும், கண்ணிர் உங்கள் கண்களை சுத்தப்படுத்தும்..//
அழுகையும், கண்ணீரும் வேறு வேறா.. ஐ.. இது கூட நல்லாருக்கு.. பூ..புஷ்பம் மாதிரி.. அக்னி..
/உங்ககிட்ட சீரியஸ் மேட்டர் கேட்டது தப்பு தாண்ணே. நீ வழக்கமா அடிக்கிற சரக்கு அழகு. இது வேணாண்ணே.
//
“:(
/டக்கீலா கதை டக்கரு அண்ணே. அதை அப்படியே மைண்டைன் பண்ணி போய்ட்டேயிறு
//
நன்றி வசந்த ஆதிமூலம்..
/சிறப்பான பதிவு.
//
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.
/ஏன் இப்பூடி முடியல..../ஆமா சிரித்தால் சிரிப்பேன்னு ஒரு படம் வந்துருக்காமே யாரும் உங்களுக்கு tikcet தரலியா இல்ல
//
இல்ல ஷாபி..
/ஆண்கள் மயானம் வரை போகும் பாக்கியம் பெற்றவர்கள். இறந்த உடலை எடுத்துக்கொண்டு கிளம்பியதும் அந்த வீட்டுப் பெண்கள் வீதியில் விழுந்து நமஸ்கரித்து அழும் அழுகை... அக்கம்பக்கத்துக்காரர்களையும் அழவைத்துவிடும்.
உங்க பதிவு நல்லா இருக்கு//
நன்றி புதுகை தென்றல்.. உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்..
ஆமாம் அபு, நைனா.. இது மீள் பதிவுதான்.
தராசண்ணே.. அழுவாதிங்க.. இனிமே இந்த மாதிரி எழுதமாட்டேன்.. அழுவாதீங்க..
Friend,I've opened a new blog.Your suggestions and comments will honor me.Please do chip in.
http://illuminati8.blogspot.com/
அழுகையில் நல்ல சிரிப்பு
மேலோட்டமாக நகைச்சுவை போல் தோன்றினாலும்.. இது ஒரு சீரியஸ் பதிவு. ஒரு சாவு வீட்டின் அத்தனை அம்சங்களையும் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள். மிக அண்மையிலே அனுபவித்ததால் அப்படியே காட்சிகள் கண்முன் விரிகின்றன. வாழ்த்துகள்.
சரி சரி ஜீப்ல உங்களுக்கும் இடம் உண்டு, நீங்க ரவுடிதான் ஒத்துக்குறோம், வழக்கம் போல் காமடிக்கு வாங்க...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
:((((((
/:((((((//
நன்றி மங்களூர் சிவா..
/சரி சரி ஜீப்ல உங்களுக்கும் இடம் உண்டு, நீங்க ரவுடிதான் ஒத்துக்குறோம், வழக்கம் போல் காமடிக்கு வாங்க...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
//
அப்ப இத்தனை நாளா நான் காமெடிதான் எழுதிட்டிருந்தேனா..? :(
நன்றி ஸ்ரீராம்.
/மேலோட்டமாக நகைச்சுவை போல் தோன்றினாலும்.. இது ஒரு சீரியஸ் பதிவு. ஒரு சாவு வீட்டின் அத்தனை அம்சங்களையும் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள். மிக அண்மையிலே அனுபவித்ததால் அப்படியே காட்சிகள் கண்முன் விரிகின்றன. வாழ்த்துகள்//
நன்றி புப்புட்டியான்,...
நன்றி இலுமினாட்டி. பனையூரான்..
நீங்க சொல்றது உண்மைதான் இருந்தாலும் அது பழகி போச்சு . சமீபத்தில் என் தாத்தா பாட்டி இருவரும் அடுத்த அடுத்த நாள் இறந்த போனார்கள்.தாத்தா இறந்தபோது சில கண்ணீர் துளிகள் மட்டும் வந்தது ஏனென்றால் அவ்வளவு நெருக்கம் இல்லை அவ்ர் கூட இந்த வயதில். என் சிறு வயதில் அவரின் செல்லம் நான் இருந்தும் சில துளிகளுடன் அவரை அனுப்பி வைத்தேன் . அன்று இரவு முடியாமல் இருந்த பாட்டியை ஹாஸ்பிட்டலில் கடைசியா நான் பார்த்துட்டு வந்து வீட்டுக்கு வருவதற்குள் இறந்துவிட்டார் அவ்ருக்காக நான் அழுதது அதுவும் கண்ணீர் விட்டு அழுதது எனக்கும் கண்ணீர் வரும் என்று நினைக்க செய்தது.பாட்டிக்கும் எனக்கும் அவ்ளோ நெருக்கம் . நெருக்கத்தில் அழுகை பிளிரிடும் என்பது உண்மை யார் அதை என்ன சொன்னாலும் அழுபவருக்கே தெரியும் அதன் உண்மை.
அருமையான பதிவு!
சங்கர் அண்ணா - துக்க வீட்டுக்கு போய்ட்டு வந்தீங்களா சமீபத்துல?
தலைப்ப "அழுகை" அப்படின்னு வைக்குறதுக்குப் பதிலா "இழவு வீட்டு அழுகை" அப்படின்னு வச்சுருக்கலாம்..
தலைப்ப பாத்துட்டு ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன்.. மன்னிச்சுக்கோங்கண்ணா, சொதப்பிட்டீங்க..
"அழுகை" அப்படின்னு எழுத ஆரம்பிச்சா, சும்மா படிக்குறவன் disturb ஆகுற மாதிரி எழுதவேணாம்..
y serious? :)
நன்றி லதானந்த சார்..
நன்றி சூரியன்..
/சங்கர் அண்ணா - துக்க வீட்டுக்கு போய்ட்டு வந்தீங்களா சமீபத்துல?
தலைப்ப "அழுகை" அப்படின்னு வைக்குறதுக்குப் பதிலா "இழவு வீட்டு அழுகை" அப்படின்னு வச்சுருக்கலாம்..
தலைப்ப பாத்துட்டு ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்சேன்.. மன்னிச்சுக்கோங்கண்ணா, சொதப்பிட்டீங்க..
"அழுகை" அப்படின்னு எழுத ஆரம்பிச்சா, சும்மா படிக்குறவன் disturb ஆகுற மாதிரி எழுதவேணாம்.//
டிஸ்டர்ப் ஆகலையா.. ஒகே ப்ரசன்னா.. இன்னும் கொஞ்சம்சீரியஸா எழுத முயற்சி பண்ணறேன்.. நன்றி..
/y serious? :)//
சும்மாத்தான் விசா..
Post a Comment