Thottal Thodarum

Jul 18, 2009

வைகை - திரைவிமர்சனம்

vaigai-stills02

புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன். 90% சொதப்பியிருப்பார்க்ள். இயக்குனரோ, அல்லது நடித்த நடிகர், நடிகைகளோ.. மேலும் சொதப்பி ஏண்டா பார்த்தோம்னு ஆக்கிருவாங்க..  இதே எதிர்பார்போடு போன இந்த படம் ஒரு அழகான ஆச்சர்யம்.

வழக்கமான் கிராமத்து பெரிய மனுஷன் பையன், எதிர்வீட்டு தபால்காரர் பொண்ணு, அப்பா சாப்டான ஆனா ஆளையே போட்டு தள்ளுற வில்லன். தன் காதல் விஷயம் தெரிஞ்சு தன் காதலியை போட்டு தள்ளிருவாரோன்னு பயந்து அவளை கூட்டிட்டி ஓடி போய், இரண்டு பேரும் விஷம் குடிச்சிட்டு, ஒருத்தர் சாவை இன்னொருத்தர் பார்க்க கூடாதுன்னு, எதிர், எதிர் ரயிலில் போய் விடுகிறார்கள். ஹீரோவின் ஆட்கள் அவரை ஆபத்தான கட்டத்தில் காப்பாற்றிவிட.. ஹிரோயினுக்கு என்ன ஆச்சு? அதற்கப்புறமான கதையை இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார்கள்.
13

பாலா +2 பைல் ஆகி ஊரை சுற்றி திரியும் வளரும் இளைஞன். விசாகா ,பாலா இருவருக்குமான காதல் காட்சிகள் புதுசாய் இல்லாவிட்டாலும், போரடிக்கவில்லை. என்ன ரஜினிகாந்த படத்தில் அவரை இளமையாய் காட்ட அவரை விட “இளமையான” ஆட்களை அவர் நண்பர்களாய் வருவதை போல், கொஞ்சம் பெரிய ஆள், சின்ன பையன் போன்ற ஒருவன் என்று அவர்கள் கூடயே திரிவது, கிராமத்து திருவிழா, அதில் வரும் பாட்டு என்று வழக்கமான சேம் ப்ளட்.

பாலா காதல் காட்சிகளில் இயல்பாய் இருக்கிறார். அழும் காட்சியில் அவரை பார்த்து நமக்கு அழுகை வருகிறது. அவரின் நடிப்பை பார்த்து. Long way to Go..

விசாகா.. கொஞ்சம் முத்தின முகமாய் இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்துவிடுகிறார். தலைவாசல் விஜய் வழக்கம் போல் ஒரு படத்தில் நடிக்க சொன்னால் இரண்டு படத்துக்கு நடித்திருக்கிறார். அப்பாவாக வரும் மளையாள நடிகர் ஒகே.
vaigai-hot-song-shoot9

சபேஷ் முரளியின் இசையில் இரண்டு பாடல்கள் ஒகே ரகம். ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை ரீமிக்ஸ் செய்யாமல் அப்படியே யூஸ் செய்திருக்கிறார்கள். பாடல் காட்சியையும் கிட்டத்தட்ட அப்படியே சூட் செய்திருக்கிறார்கள். பேசாமல் அந்த பாடலின் காட்சியையே போட்டிருக்க்லாம்.

இயக்குனர் சுந்திரபாண்டிக்கு முதல் படம். நிச்சயமாய் ஒரு இயல்பான காதல் கதையை  சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார். பல் இடங்களில் மதுரைக்கார குசும்பு வசனங்கள் எட்டி பார்க்கிறா இடங்க்ளில் ஏனே தெரியவில்லை மக்களிடம் எடுபடவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு சின்ன ‘lump” நம் தொண்டையில் நிற்பது நிஜம். அதற்காக தமிழ்லில் ஒரு உலக்சினிமா என்று விளம்பரபடுத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க…

வைகை-  ஓடும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

39 comments:

Sukumar said...

குட் மார்னிங் பாஸ்... ஆபிஸ் திறந்தாச்சா ....

// தலைவாசல் விஜய் வழக்கம் போல் ஒரு படத்தில் நடிக்க சொன்னால் இரண்டு படத்துக்கு நடித்திருக்கிரார் //

இதை போன்ற உங்களது அக்மார்க் கேபிள் முத்திரைகள்தான் விமர்சனங்களுக்கு செர்ரி போல் சுவை ஊட்டுகிறது....

தராசு said...

கிராமத்து படம்ங்கறீங்க, அதுல எங்க இந்த அரை டவுசர், சாரி சாரி கால் டவுசர் போட்ட பாப்பா கைய தோக்கிட்டு நிக்குது. அதப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல.

Cable சங்கர் said...

/இதை போன்ற உங்களது அக்மார்க் கேபிள் முத்திரைகள்தான் விமர்சனங்களுக்கு செர்ரி போல் சுவை ஊட்டுகிறது...//

நன்றி சுகுமார்.

Cable சங்கர் said...

/கிராமத்து படம்ங்கறீங்க, அதுல எங்க இந்த அரை டவுசர், சாரி சாரி கால் டவுசர் போட்ட பாப்பா கைய தோக்கிட்டு நிக்குது. அதப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல//

பாப்பா திருவிசாவுல ஒரு ஆட்டம் போடுது.. ஒன்ணும் சொல்லிக்கிற மாரி இல்லண்ணே..

பிரபாகர் said...

// பேசாமல் அந்த பாடலின் காட்சியையே போட்டிருக்க்லாம்.//
//தலைவாசல் விஜய் வழக்கம் போல் ஒரு படத்தில் நடிக்க சொன்னால் இரண்டு படத்துக்கு நடித்திருக்கிறார்.//
//சின்ன பையன் போன்ற ஒருவன் என்று அவர்கள் கூடயே திரிவது, கிராமத்து திருவிழா, அதில் வரும் பாட்டு என்று வழக்கமான சேம் ப்ளட்/

சங்கர்,

வழக்கமான உங்களின் நையண்டிகளுடன் கலக்கல் விமர்சனம்...

முதலிலெல்லாம் விமர்சனத்துக்க்கு முன்னதாக முதல் ஆளாக படம் பார்த்துவிடுவேன். இப்போதெல்லாம் உங்களின் விமர்சனத்தை படித்து மன உளைச்சல் சிறிதுமின்றி சந்தோஷமாய் இருக்கிறேன்...

உங்களின் பாரபட்சமற்ற நடு நிலை எப்போதும் எனக்கு பிடிக்கும்...

பிரபாகர்.

kishore said...

வைகை நல்ல இருக்குனு தான் எல்லோரும் பேசிகிறாங்க.. அப்படியா?

ஸ்ரீ.... said...

அப்ப ஒருதடவ கண்டிப்பா பார்க்கலாம்னு சொல்றீங்க... OK

ஸ்ரீ....

butterfly Surya said...

Right..

Thanx..

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு போயிருவோம்

:)

Cable சங்கர் said...

/சங்கர்,

வழக்கமான உங்களின் நையண்டிகளுடன் கலக்கல் விமர்சனம்...

முதலிலெல்லாம் விமர்சனத்துக்க்கு முன்னதாக முதல் ஆளாக படம் பார்த்துவிடுவேன். இப்போதெல்லாம் உங்களின் விமர்சனத்தை படித்து மன உளைச்சல் சிறிதுமின்றி சந்தோஷமாய் இருக்கிறேன்...

உங்களின் பாரபட்சமற்ற நடு நிலை எப்போதும் எனக்கு பிடிக்கும்...

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்

Cable சங்கர் said...

/வைகை நல்ல இருக்குனு தான் எல்லோரும் பேசிகிறாங்க.. அப்படியா//
ஒகே கிஷோர்.

Cable சங்கர் said...

/அப்ப ஒருதடவ கண்டிப்பா பார்க்கலாம்னு சொல்றீங்க... OK

ஸ்ரீ...//

ஆமாம் ஸ்ரீ...

Cable சங்கர் said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable சங்கர் said...

/ரைட்டு போயிருவோம்

:)//

போயிட்டு வந்து சொல்லுங்கண்ணே..

Ashok D said...

தல சரியான விமர்சனம்...

ஹீரோ ஒரு நல்ல டான்ஸர் ஆச்சே அத பத்தி ஒன்னும் சொல்லல..
அந்த குட்டி ஜட்டி போட்ட அக்கா படம்(ரகஸியா?) சூப்பருங்கோ

Anbu said...

ரைட்டு போயிருவோம்....

க.பாலாசி said...

சார் நீங்க விமர்சனம் எழுதின பிறகுதான் ஓ..இப்படி ஒரு படம் வந்திக்கான்னே தெரியுதுங்க சார்.

சரி பார்ப்போம் வாய்ப்பிருந்தால்.

உங்கள் கலைச்சேவையை கண்டு மெய்சிலிர்க்கிறேன். நன்றி.

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Venkatesh Kumaravel said...

me the escappu....

ரெட்மகி said...

அண்ணே நீங்க துணை இயக்குனரா ?
ஏனோ தெரியவில்லை இந்த மாதிரியான படங்கள் எங்கள் ஊரில் ரிலீஸ் பண்றதில்லை.
(வேலூர்). ரிலீஸ் ஆன கண்டிப்பா பார்கிறேன் ...

Unknown said...

எனக்கு என்னவோ , ஒரு உண்மை கதையை இன்னும், சுவாரசியப்படுத்தி இருக்கலாம்னு நினைக்கிறேன்....

தேவையில்லாத குத்துபாட்டுக்கள்..
கதைக்கு ஒட்டுல...

அத்திரி said...

good vimarsanam

R.Gopi said...

//என்ன ரஜினிகாந்த படத்தில் அவரை இளமையாய் காட்ட அவரை விட “இளமையான” ஆட்களை அவர் நண்பர்களாய் வருவதை போல்//

aa.....haa...... ingeyumaa???? Thalaivara izhallenna thookkam varaadhaa?

//பேசாமல் அந்த பாடலின் காட்சியையே போட்டிருக்க்லாம்.//


Hmmmmm...... Nadathunga, nadathunga..... Appuram andha OTTA VAAI BHARATI RAJA kitta thittu vaangaradhu yaaru?

//தமிழ்லில் ஒரு உலக்சினிமா என்று விளம்பரபடுத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க…//

Indha maadhiri vilambara paduthunaa innum konjam per theatrekku vara maattaangalaannu thaan!!!

பரிசல்காரன் said...

ரைட்டு தல!

சரவணகுமரன் said...

//புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன்//

ஏன்?

சரவணகுமரன் said...

சார், வெடிகுண்டு முருகேசன் எப்படி இருக்குது?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஊர்சுற்றி said...

அதெல்லாம் சரிங்க....

நம்ம சாம் ஆண்டர்சன் அடுத்து என்ன படம் நடிக்கிறார்ங்க?

Beski said...

ரொம்ப ரொம்ப நன்றிண்ணே! கண்டிப்பா பாத்துர்ரேன்.
---
ஹாரிபாட்டர் விமர்சனத்துக்கு வெய்ட்டிங்ணே. சீக்கிரம் போடுங்க.

kishore said...

waiting for tamil movie "achamundu achamundu " review...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Engal AASAAN Paathaachaa? Padam Eppooodi

Cable சங்கர் said...

/தல சரியான விமர்சனம்...

ஹீரோ ஒரு நல்ல டான்ஸர் ஆச்சே அத பத்தி ஒன்னும் சொல்லல..
அந்த குட்டி ஜட்டி போட்ட அக்கா படம்(ரகஸியா?) சூப்பருங்கோ
//

நன்றி அசோக்.. நம்ம ஒரு விமர்சனம்.. எவ்வளவு விதமான ரசிகர்களை திருப்திபடுத்துது.

Cable சங்கர் said...

/சார் நீங்க விமர்சனம் எழுதின பிறகுதான் ஓ..இப்படி ஒரு படம் வந்திக்கான்னே தெரியுதுங்க சார்.

சரி பார்ப்போம் வாய்ப்பிருந்தால்.

உங்கள் கலைச்சேவையை கண்டு மெய்சிலிர்க்கிறேன். நன்றி//

சில சின்ன பட்ஜெட் படங்கள் முக்கிய் ஏரியாக்களில் வெளியாகி சில வாரஙக்ளுக்கு அப்புறம் மற்ற செண்டர்களில் வெளியாகும். உஙக்ள் பாராட்டுக்கு மிக்க் நன்றி பாலாஜி.

போய் பாத்துருங்க அன்பு. மிக்க் நன்றி..

Cable சங்கர் said...

/அண்ணே நீங்க துணை இயக்குனரா ?//

ஆமாம் ரெட்மகி

//ஏனோ தெரியவில்லை இந்த மாதிரியான படங்கள் எங்கள் ஊரில் ரிலீஸ் பண்றதில்லை.
(வேலூர்). ரிலீஸ் ஆன கண்டிப்பா பார்கிறேன் ...//
மேலே பாலாஜிக்கு சொன்ன பதிலில் உங்களுக்கான பின்னூட்டமும் இருக்கிறது ரெட்மகி.

Cable சங்கர் said...

நன்றி அத்திரி..

Cable சங்கர் said...

/எனக்கு என்னவோ , ஒரு உண்மை கதையை இன்னும், சுவாரசியப்படுத்தி இருக்கலாம்னு நினைக்கிறேன்....

தேவையில்லாத குத்துபாட்டுக்கள்..
கதைக்கு ஒட்டுல...//

ஆமாம் பேரரசன்.

Cable சங்கர் said...

//aa.....haa...... ingeyumaa???? Thalaivara izhallenna thookkam varaadhaa?//

சரியான ஒப்பீட்டை சொல்லாம புரியாதில்ல கோபி.

//Hmmmmm...... Nadathunga, nadathunga..... Appuram andha OTTA VAAI BHARATI RAJA kitta thittu vaangaradhu yaaru?//

இதை பர்மீஷன் கேட்டு வாங்கி எடுத்தத பார்த்தா இன்னும் திட்டுவாரு..

//Indha maadhiri vilambara paduthunaa innum konjam per theatrekku vara maattaangalaannu //thaan!!!//

உலக சினிமான்னு போட்டா வர்ற கூட்டம் கூட வராது.. இது புரியல..அவஙக்ளுக்கு

Cable சங்கர் said...

///புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன்//

ஏன்?
//

பெரிய நடிகர்கள் ப்டத்துக்கு ஈஸியாய் படத்தை பற்றிய விஷயங்கள் வெளியே போய் பரப்பிவிடுவார்கள். ஆனால் இம்மாதிரியான் புதிய இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த படத்துக்கு பெரிதாய் கூட்டம் இருக்காது. படம் பார்பவர்களும் மிக குறைந்தவர்களாகவே இருப்பார்கள். அதனால் மவுத்டாக் எனப்படும் மக்கள் விளம்பரம் வெளியே தெரிவதற்குள் படம் தியேட்டரிலிருந்து தூக்கிவிடுவார்கள் அதனால்தான்..

Cable சங்கர் said...

வெடிகுண்டு முருகேசன்,
ஹாரிபாட்டர்..
அச்சமுண்டு, அச்சமுண்டு
விமர்சனஙக்ள் வரிசையில் இருக்கிறது.

எங்கள் ஆசான் சென்னை மாநகரஙக்ளில் ரிலீஸ் ஆகவில்லை. மற்ற் ஊர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.. முடியல என்பது தியேட்டர்காரர்களின் புலம்பல்.