மோதி விளையாடு - திரைவிமர்சனம்
இந்தியாவின் மிகப்பெரிய பிஸினெஸ் டைக்கூனின் மகன் அவரது மகனில்லை, அவனுடன் இருக்கும் இன்னொரு இளைஞன் தான் அவரது மகன். எங்கே தன் எதிரிகளால் தன் மகனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதற்காக, பினாமியாய் ஒரு மகனை குழந்தை முதல் வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் வில்லன்கள் அவரது மகனை கொல்ல முற்படும் போது ஒரிஜினல் மகன் இறக்கிறான். ஒரே நாளில் பினாமி மகனின் வாழ்க்கை நடுத்தெருவில். அவனை கொல்ல ஒரு பக்கம் எதிரிகள் அனுப்ப்பிய ஆள், இன்னொரு பக்கம் அவன் கொல்லப்படும் நாளை எதிர்பார்க்கும் பிஸினெஸ்மேன். அவன் எவ்வாறு அந்த மாமலை பிஸினெஸ்மேனுடன் மோதி மீண்டான்? என்பதை சுறுசுறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் சரண்.
வினய் அந்த கோடீஸ்வர மகனின் கேரக்டருக்கு ஆப்டாய் இருக்கிறார். என்ன நடிப்பு எழவுதான் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. சொந்த குரலாய் இருந்தால் முயற்சிக்கு பாராட்டலாம். இனிமேல் தொடந்து பேச வேண்டாம். இந்த ஒரு படமே போதும்.
காஜல் அகர்வாலிடம் துளளல் இருக்கிறது. இளைமையாய் இருக்கிறார். ஆடுகிறார், பாடுகிறார். கொஞ்சம் ஜோதிகா போல எக்ஸ்ட்ரா எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
சந்தானம் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார். தூள் கிளப்புவர் மயில்சாமிதான். என்ன ரியாக்ஷன்கள் மனுசன் பின்னியெடுக்கிறார். பந்தா பணக்காரராய் நடிக்கும் வி.எம்.சி. ஹனிபா தன் முத்திரையை பதிக்கிறார்.
லெஸ்லி- ஹரிஹரன் கூட்டணியில் இரண்டு பாடல்கள் இதம் அதிலும் அந்த பாதி முத்தம் சூப்பர். மோதி விளையாடு பாடலில் இவர்களுடன் தேவாவும் நடித்து பாடியுள்ளார்.
கருணின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாய் அந்த பீச் காட்சிகளிலும், பணக்கார வினயாய் இருக்கும் போது ஒளிபதிவில் இருக்கும் ரிச்னசும், அநே நடு ரோடுக்கு வந்தபின் இருக்கும் லைட்டிங்கும் அருமை. அதே போல் முதல் பாதி எடிட்டரின் இளமை துள்ளலான எடிட்டிங
சுமார் மூன்று வருடஙக்ளுக்கு பிறகு வந்திருக்கும் சரணின் படம். வழக்கமாய் திரைக்கதையில் எக்ஸ்பிரஸ் வேகம் வைக்கும் இவர் இந்த முறை அதை கோட்டைவிட்டிருக்கிறார்.
எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார்கள், இவ்வள்வு அழகான லொக்கேஷனை, ஒவ்வொரு ப்ரேமிலும் பணக்கார களை தெரிகிறது. அதே நேரத்தில் வினய் நடுத்தெருவுக்கு வ்ந்தபின் வரும் லொக்கேஷனும் அதன் பேக்ரவுண்டும் அருமை.
முதல் பாதி காரை டேமேஜ் செய்ததற்காக காஜலை, வினயின் வேலைக்காரியாக்குவது, ஒவ்வொரு வேலைக்கும் அமெள்ண்ட் கழிப்பது என்று ஒரே ஜாலிலோ ஜிம்கானாதான். ஆனால் முக்கியமான் இரண்டாவது பாகத்தில் சரண் படமா இது என்று ஆச்சர்யபட வைக்கிறார் மோசமான திரைகதையினால்.. அவ்வளவு லாஜிக் இல்லாத காட்சிகள், இந்தியாவின் அம்பானி போன்ற ஒருவனை ஒரே நாளில் ஒருவன் நடுத்தெருவுக்கு கொண்டு வர முடியுமா.? வந்திருக்கிறார்கள். ஒரே கற்பனை வரட்சி. படத்தை முடிக்க வேண்டும் என்கிற அவசரம் படத்தில் தெரிகிறது. தன் உயிரை,தன் பொஷிசனை காப்பாற்றி கொள்ள, ஒரு மகா பிஸினெஸ் மேனுடன் மோத வேண்டுமென்றால் எவ்வளவு கடுமையான போராட்டமாய் இருக்கவேண்டும். இருவருக்கு ஏதோ லாலிபாப் கொடுக்கல் வாங்கல் போன்று டீல் செய்திருப்பது கொடுமை.
மோதி விளையாடு – saran Lost his touch
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
//
அத்திரி.. அப்படியே சொன்ன உடனே பாத்திட்டாலும்..??
//
உங்க இஷ்டம்.அன்பு
எனது அலசல் இங்கே...
http://tamilsam.blogspot.com/2009/07/blog-post_24.html
படமும் அப்படித்தான் இருக்கிறது ஆதி..
//// /இந்த படத்தை பாக்கலாமா வேண்டாமா?...........அதை சொல்லுங்க அண்ணே
//
உங்க இஷ்டம்.அன்பு
///////
பட்டும் படாம சொல்லிட்டிங்க... :) அந்த பீல்டுல இருப்பதாலா?
படத்தின் ஒவ்வொரு ஏரியாவிலும் மோதி விளையண்டிருக்கிறீர்கள்
நல்ல விமர்சனம். உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக பார்க்க வேண்டியதுதான்.
பிரபாகர்.
எனக்கும் இரண்டாம் பாதி தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.. இன்னும் கொஞ்சம் மெனக்கேட்டு இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்.
இல்லைங்க.. ஸ்டார் மகனாக வாடைகைக்கும் நடிக்கும் கேரக்டர். இந்த பட ட்ராக் வேற.
உங்களுக்கு வேற வேலை இல்லைனா... உங்க வீட்ல AC வேலை செய்யலைனா, உங்களால 50 - 100 வரை தண்டம் அழ முடியும்னா, மொக்கை வாங்கி மரத்து போயிருந்தீங்கன்னா, கட்டாயம் பாருங்க..... இல்லை, சத்தியமா வேணாம்...
விமர்சனம் நன்னாயிட்டுயிருக்கு...
சரன் கொஞ்சம் கிறுக்கு
இது பிரஷாந்த் நடிச்ச "ஸ்டார்" படத்தோட அப்பட்டமான காப்பி
எனக்கு அப்படி தெரிய்வில்லை.. சின்னபயல்.
படத்தின் ஒவ்வொரு ஏரியாவிலும் மோதி விளையண்டிருக்கிறீர்கள்
நல்ல விமர்சனம். உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக பார்க்க வேண்டியதுதான்.
பிரபாகர்.
//
விரைவில் கலைஞர் டிவியில் இருக்கு..
எனக்கும் இரண்டாம் பாதி தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.. இன்னும் கொஞ்சம் மெனக்கேட்டு இருந்தால் படம் வெகு அருமையாக வந்து இருக்கும்//
ஆமாம்.. அருண்குமார்.
//
உங்க இஷ்டம் சஞ்செய்..
உங்களுக்கு வேற வேலை இல்லைனா... உங்க வீட்ல AC வேலை செய்யலைனா, உங்களால 50 - 100 வரை தண்டம் அழ முடியும்னா, மொக்கை வாங்கி மரத்து போயிருந்தீங்கன்னா, கட்டாயம் பாருங்க..... இல்லை, சத்தியமா வேணாம்..//
சஞ்செய்க்கு இந்த பதில் கூட கரெக்டா இருக்கும். நன்றி கார்த்திக் கிருஷ்ணா.. உஙக்ள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
விமர்சனம் நன்னாயிட்டுயிருக்கு...
சரன் கொஞ்சம் கிறுக்கு
//
குற்றாலத்துக்கு போயிருந்தேன். அதான்..
ச்சே!
//
எனக்கு கமலா பிடிக்கவில்லை.. சத்யமை பினபற்றினால் ம்ட்டும் போதாது.. அவர்களோட சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
சரணே அஜித்தை நம்பித்தான் இருக்கிறாரு போலருக்கு. படத்துல சீனுக்கு சீனு அவர் புராணம்தான். மிக்க நன்றி சசிகுமார்..உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
ஒழுங்கா கடைக்கு வந்து படிக்காம என்னைய குத்தம் சொல்ல கூடாது.. நான் தான் பின்னூட்டத்தில ஊருக்கு போறேன்னு சொல்லிட்டுல்ல போனேன்..:(
ச்சே//
ஆமாம் பரிசல்.
உங்க விமர்சனப்படி பாத்தா.... பாக்குற அளவுக்கு இருக்கும்போல இருக்கு.
உங்க விமர்சனப்படி பாத்தா.... பாக்குற அளவுக்கு இருக்கும்போல இருக்கு.
//
அப்படியும் முழுசா சொல்ல முடியாது போலருக்கே.. எவனோ ஒருவன்.
படம் டிவில போடறப்பதான் பாக்கலாம்னு இருக்கேன்
:))
படம் டிவில போடறப்பதான் பாக்கலாம்னு இருக்கேன்
:))//
சிவா நானும் அதை டிரை பண்ணறேன் ஆனால் முடியல.. ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க
//
நீங்க சொன்னா சரிதான் ட்ருத்..
Really u should be appreciated as king of pateince. Deivame
அண்ணே, உங்களுக்கு சூப்பரா தெரிஞ்சிருக்கு.. எனக்கு குழப்பமாயிருக்கு..
முதல் 30 நிமிடம் வரை வினய்யும், யுவாவும் எந்த ஊருல இருக்காங்க? மலேசியாவா? இந்தியாவா? அடையார்ன்னு போர்ட் போட்டு மலேசியாவை காட்டுறாங்க. கார் ஆக்ஸிடண்ட் மலேசியாவுல நடக்குது.. அடுத்த சீனே இந்தியாவுல வருது.. அப்படி இவங்க ரெண்டு பேரும் இந்தியாவுலதான் இருக்காங்கன்னா ஏன் கலாபவன் மணி கூடவே தங்கல?
இதுல இன்னொரு காமெடி என்னன்னா கலாபவன் மணி வரவேற்பரை ஆபிஸ் KLIA ஏர்போர்ட்டை காட்டுறாங்க.. என்ன கொடுமை சார் இது!
இதுல பெரிய காமெடி என்னன்னா மாஹ்ஸா காலேஜ் மாணவர்கள், நர்ஸா வர்றாங்க.. அவங்க யூனிஃபார்மை பார்த்ததுமே தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிச்சேன்.. சரி எனக்கு மட்டும்தான் அது காமெடி சீன்னு பார்த்தா, சுத்தி உட்கார்ந்திருக்கிற எல்லா மக்களும் அந்த கட்டத்தை பார்த்து அப்படிட்தான் சிரிக்கிறாங்க.. என்ன கொடுமை சார் இது!!!!
இப்படி நிறைய சொல்லிகினே போலாம்.. :-(