ரசிகர்கள் ”விரும்பும்” தமிழ் சினிமாவின் பத்து.
1. படம் வெளியாகுறதுக்கு முந்தி விகடன்ல, வித்யாசமான ஒரு தமிழ் சினிமாவ கொடுக்க முயற்சி செஞ்சிருக்கோம்னு அந்த டைரக்டர் சொல்வாரே அது பிடிக்கும்
2. படம் ரிலீஸாகி பத்து நாள்ல உலக தொலைகாட்சியில் முதல் முறையா சூப்பர் ஹிட் படம்னு வந்ததும், வேற பேட்டியில புரொடியூசர் சரியா சப்போர்ட் பண்ணலன்னு டைரக்டரும், டைரக்டர் சரியா சப்போர்ட் பண்ணலைன்னு புரொடியூசரும் பேட்டி கொடுப்பாங்களே அது பிடிக்கும்
3. மல்லாக்க படுத்து யோசிச்சாவது விஷாலுக்கோ, விஜய்க்கோ, ஒரு கேனத்தனமான ஓப்பனிங் சீனை பிடிச்சு அதை வச்சி பில்டப் செஞ்சி கால்ஷீட் வாங்கிட்டு, படத்துல பாக்கயில காரி துப்புற மாதிரி வர்ற ஓப்பனிங் சீன் இருக்கு பாருங்க அது பிடிக்கும்
4. படத்தில விதவையோ, அல்லது கல்யாணமான பொண்ணை ஹீரோ லவ் பண்ணுறாருன்னா அவளோட புருஷன் ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு, முந்தி ஆக்ஸிடெண்டுலேயோ, பாம்பு கடிச்சோ, இல்லாட்டி தும்மியாச்சும், இப்படி ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி சாகடிச்சு, கதாநாயகி கற்பை, ஹீரோவுக்காக காப்பாத்திறீங்க பாருங்க அது ரொம்ப பிடிக்கும்
5. என்னதான் சொதப்பல் படம் எடுத்தாலும், இந்த சன் டிவி அவங்க படம் தான் ஊர் உலகத்தில நல்ல ஓடுற மாதிரி அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா மிரட்டறதும், விகடனும் தன் பங்குக்கு, நல்ல படத்துக்கெல்லாம் 40 மார்கு க்கொடுத்துட்டு, அவஙக் மொக்கை படத்துக்கு 45 கொடுப்பது பிடிக்கும்
6. எல்லா படத்திலேயும் ஹீரோயின், மொக்கை ஹீரோவை லவ் பண்ணவேண்டிய கட்டாயத்தில இருக்கிறதால, முழு லூசாவே காட்டுறது பிடிக்கும்.
7. பெரிய பட்ஜெட் படம்னா கடைசி பத்து நிமிஷம், ஏகே47, டாங்கி, புல்டோசர்னு இந்திய ராணுவமே பாக்காத தளவாடஙக்ளை வச்சு ரத்தகளரியா ஒரு பைட் சீன் காட்டூவீங்க பாருங்க அது பிடிக்கும்
8. என்ன தான் விஜய், அஜித் போன்றவர்களின் படங்கள் சொதப்பினாலும், அடுத்த படம் வரும் போது, அவங்க டீவியில், ரோடியோல, பேப்பர்லன்னு சமூக சேவை, அரசியல்னு ரஜினிய பாலோ பண்ணி பேட்டி கொடுக்கிறது பிடிக்கும்
9. இப்படி அசராம நீஙக்ளும் படமெடுத்திட்டிருக்க,’கே’ல ஆரம்பிச்சு “ர்”ல முடியற பெயருள்ள ஒருத்தர் அசராம தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, ப்ரெஞ்சு, இடாலி, கொரியா, இங்கிலிசு,ன்னு உலக மொழியில வர்ற படத்தையெல்லாம் பார்த்து விமர்சனம் எழுதற் அவரை பிடிக்கும். (பாவம் சீக்கிரம் அவருக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி)
10. இப்படி பிடிக்குற விஷயஙக்ள் நிறைய இருந்தாலும், இன்னும் நல்ல சினிமா வரும்ங்கிற நம்பிக்கையில படம் பாத்துட்டு இருக்கிற் நம்மளை போல ரசிகர்களை ரொம்பவே பிடிக்கும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
:)
ஆனால், இதை எல்லாம் தகர்த்தெறியவரும் உங்களுடைய சினிமாவுக்காக வெய்டிங்...
புல்லரிக்க வெச்சுட்டீங்க... பத்து பாய்ன்ட்டயும் பளிச்ச்ன்னு சொல்லி, எத பாராட்டறதுன்னு குழம்ப வெச்சு... கிரேட்.
ஒவ்வொன்ன படிக்கும்போது மெலிதாய் புன்னகை, ஒரு வி.ஐ.பி. யை பத்தி கிசுகிசு (யாருன்னு தெரியறதுக்குள்ள் தலை வெடிச்சுடும் போல இருந்ததுன்னு யாரும் பின்னூட்டம் போடாத அளவிற்கு) படிச்சு வெடி சிரிப்பு...
பிரபாகர்.
என் கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவா?
ஆமாம் நீங்க படம் எடுக்காமலா போகப்போறீங்க, இருங்க கிழிச்சு தோரணம் தொங்க விடறோம்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston
:)//
அண்ணே.. பத்துதான் எழுதணும்னு சொன்னதுனால பத்து எழுதிட்டேன்.. இதுக்காக என்னை பிடிக்காதுனு சொல்லலாமா.?
ஆனால், இதை எல்லாம் தகர்த்தெறியவரும் உங்களுடைய சினிமாவுக்காக வெய்டிங்..//
இதையெல்லாம் ரசிச்சு ஹிட்டாக்குற ஆளுங்க இருக்கிற வரைக்கும் நான் மட்டும் ஏன் தனியா வேற மாதிரி எடுக்கணும்.. நானு அப்படித்தான் எடுப்பேன் பீர்
//
மல்லாக்க படுத்து யோசிச்சாவது விஷாலுக்கோ, விஜய்க்கோ, ஒரு கேனத்தனமான ஓப்பனிங் சீனை பிடிச்சு அதை வச்சி பில்டப் செஞ்சி கால்ஷீட் வாங்கிட்டு, படத்துல பாக்கயில காரி துப்புற மாதிரி வர்ற ஓப்பனிங் சீன் இருக்கு பாருங்க அது பிடிக்கும்
//
சூப்பர் அண்ணே
//
பத்து இல்லை...ஒன்னேஒன்னு எழுதுறதுன்னாகூட அது தல ரித்தீஷைப் பற்றிதான் இருக்கணும்.ஓ.கே.!!
நல்லவேளை நான் மட்டும் பார்த்ததால நீங்க தப்பிச்சீங்க. எங்க சங்கம் பார்த்திருந்தா உங்க கதி என்ன ஆயிருக்கும்??? யோசிங்க :))
வந்துட்டோம்ல..!
நானும் எங்க சங்க பொருளாளரை வழிமொழிந்து 'கே'னா வை க் கண்டிக்கிறேன்.
என்னதான் “மொக்கை” படமாக இருந்தாலும் முதல் நாளே தனியாக பார்த்து விட்டு ....
படத்துல வில்லன் பத்து கொலை பண்ணியிருந்தாலும் கடைசியில நாயகன் கொல்லப்போகும் போது வில்லனோட பொண்ணாட்டி தாலிய காட்டி காப்பாத்துவாளே அதை விட்டுட்டிங்க!
விரும்பும்ல டபுல்கோட் இருக்கும்போதே நெனச்சேன், உள்ள ஏதோ உள்குத்து இருக்கும்னு, சரிதான்.
---
//படத்தில விதவையோ, அல்லது கல்யாணமான பொண்ணை ஹீரோ லவ் பண்ணுறாருன்னா அவளோட புருஷன் ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு, முந்தி ஆக்ஸிடெண்டுலேயோ, பாம்பு கடிச்சோ, இல்லாட்டி தும்மியாச்சும், இப்படி ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி சாகடிச்சு, கதாநாயகி கற்பை, ஹீரோவுக்காக காப்பாத்திறீங்க பாருங்க அது ரொம்ப பிடிக்கும்//
மத்ததெல்லாம் பொதுவா இருக்கு. இது கொஞ்சம் டிபரண்ட்.
பதிவுல விமர்சனம் எழுதுறவரு கரெக்ட்டா?. இனிமே கண்டிப்பா பைத்தியம் புடிக்காது..
இந்த பத்த உங்ககிட்டயிருந்து எதிர்பார்த்து தான்.
நல்லாயிருக்கு
அப்ப இன்னும் அவருக்கு பிடிக்கலையா....? மாசிலாமணி பாத்தப்பவே பிடிசிருக்கனுமே......
டாப் டென் சூப்பர் டென் தல !!
நான் ரொம்ப நேரமா யோசிச்சு பாத்தும் புடிபடல. அப்பறமாதான் தெரியுது அது கேபில் சங்கர்ன்னு, ஆமாங்க அவர் ரொம்ப நல்லவருங்க. பாவம் இந்த தள்ளாத வயசுலையும் நமக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அவருக்கே தெரியாத மொழி படங்கள கூட உடாம பாத்து நமக்காக கதை சொல்லுராருல்ல.
சான்சு கெடச்சா இப்படியெல்லாமா அடிக்கிறது?
//படத்துல வில்லன் பத்து கொலை பண்ணியிருந்தாலும் கடைசியில நாயகன் கொல்லப்போகும் போது வில்லனோட பொண்ணாட்டி தாலிய காட்டி காப்பாத்துவாளே அதை விட்டுட்டிங்க!//வால்//
இதையும் சேத்துக்கிட்டா நிறைவு பெறும்ன்னு நினைக்கிறேன்
ஒரு மரு, கடா மீசை அப்புறம் ஒரு தலப்பா இத மட்டும் மாறுவேசம்னு போட்டுக்கிட்டு வில்லன் கூட்டத்துக்கு முன்னால ஹீரோ டான்ஸ் ஆடுவாரே அந்த டெக்னிக்க என்னன்னு சொல்ல??
http://kishorejay.blogspot.com/2009/07/blog-post_7842.html
:))))
THALA idhu Thevaiyaa??
டச் பண்ணீட்டீங்க தல..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
(சங்கர் நீங்க படம் எடுக்கும் போது ஜட்டி கழட்டுவது போல மாத்துங்க)
ஸ்ரீ....
எம்.எம்.அப்துல்லா said
//11)தல ஜே.கே.ரித்தீஷ் படம்,சாம் ஆண்டர்சன் படம் இதெல்லாம் பிடிக்கும் என்பதை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்ட கேபிள் சங்கரை எங்களுக்கு பிடிக்காது
:)//
ரிப்பீட்டேய்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston
//
கங்கணம் கட்டிட்டி காத்துட்டு இருப்பீங்க போலருக்கே.. ஸ்ரீராம்.
நல்லவேளை நான் மட்டும் பார்த்ததால நீங்க தப்பிச்சீங்க. எங்க சங்கம் பார்த்திருந்தா உங்க கதி என்ன ஆயிருக்கும்??? யோசிங்க :))
//
ஆமாம்ண்ணே.. தப்பாயிருச்சு.. மன்னிச்சுக்குங்க.. அண்ணன் ரித்தீஷ் வாழ்க.. வாழ்க..
என் கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவா?
//
வாங்க ஒருநாள் பேசுவோம்.. சினிமாகாரனுக்கு கதை பேசுறத தவிர வேற என்ன வேலை..?
நன்றி தராசு.. கண்ண கட்டிச்சுன்னா விட்டுருவோமா ?
நன்றி மாதேவி..
நன்றி நர்சிம்.. ம்.. நீங்க வெளுக்கிறத விடவா..?
அட ஆமாமில்ல.. என்ன செய்யறது.. பத்துதானே எழுதனுமின்னு சொன்னாங்க..வால்பையன்
நன்றி எவனோ ஒருவன்.
ஆனாலும் ரொம்பத்தான்பாராட்டுறீஙக் சிவகுமார்
டாப் டென் சூப்பர் டென் தல !!
//
அவ்வளவு நல்லவா இருக்கு சுகுமார்.
பேரை கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க. ஆனா வயசத்தான் சரியா சொல்லல.. அவரு யூத்து.. எதுக்கும் உங்க ப்ரண்ட்ஸ் லிஸ்டுலேர்ந்து வெளிய வ்நது யோசிங்க..
நன்றி கார்க்கி,
நன்றி அன்பு..
அதான் ஏற்கனவே பயந்து போய் மன்னிப்பு கேட்டுடேனே பாலா..
அந்த மாரி இன்னமுமா படமெடுக்கிறாய்ங்க.. ??
நன்றி மங்களூர் சிவா,
நன்றி அக்பர்,
நன்றி.. அக்னிபார்வை,
நன்றி அபி அப்பா.. நிச்சயமா நான் பிட்டு படம் எடுக்க போறதில்ல..:)
ஏன் கோபி..
நன்றி ஸ்ரீ
நன்றி ரமேஷ்.. மொக்கை மன்னன் பட்டம் எப்ப யாரு கொடுத்தாஙக்..?
நன்றி ஊர்சுற்றி.. என்னப்பா இந்த ரித்திஷ் ஆளுங்களோட மிரட்டல் தாஙக்முடியல.. பேசாம சாம் ஆண்டர்சனை கூப்பிடவேண்டியதுதான்.