சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை. சிறந்த ஸ்கிரிப்ட், நல்ல இயல்பான நடிப்பு, உயர்ந்த புரொடக்ஷன் தரம் எல்லாம் சேர்ந்து ஒரு அருமையான படத்தை தந்திருக்கிறது யாஷ் ராஜ்.
அமெரிக்க 9/11 நிகழ்வுக்கு பிறகு அமெரிக்க உளவு பிரிவான F.B.I, சந்தேகம் என்கிற பெயரில் பல ஆயிரம் பேர்களை கைது செய்து டிடென்ஷ்ன் செண்டரில் வைத்து சித்திரவதை செய்ததையும், அதனால் மன உளைச்சலில் உழன்று திரியும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்க்ளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
ஓமர் ஸ்காலர்ஷிபில் நியூயார்க் யூனிவர்சிட்டியில் வந்த் சேருகிறான். அங்கே மாயாவையும், சாம் என்கிற சமீரை அமெரிக்க இந்தியனான அவனை சந்திக்கிறான். பார்த்தவுடன் மாயாவை ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். மாயா காதலிப்பது சாமை என்று தெரிய வருகிற் அன்று அமெரிக்க 9/11 நிகழ்வுகள் நடக்கிற்து. ஓமர் பிலடெல்பியா சென்றுவிடுகிறான். சில வருடங்கள் பிறகு நியூயார்க் வரும் ஓமரை F.B.I கைது செய்கிறது. அவன் நண்பன் சாமிற்கு இருக்கு தீவிரவாத தொடர்புகளை அண்டர்கவர் ஏஜெண்டாக இருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது. வேறு வழியில்லாமல் நண்பணின் வீட்டுக்கு உளவாளீயாய் நுழைகிறான். மாயாவும், சமீரும் திருமணம் செயது கொண்டு ஒரு பிள்ளையுடன் சந்தோசமாயிருக்க, ஓமர் இருதலை கொள்ளி எறும்பாய் குழம்புகிறான். நிஜமாகவே சமீர் தீவிரவாத செயல்கள் செய்கிறானா.? இல்லையா.? அதற்கான காரணம் என்ன. என்பத் போன்ற பல கேள்விக்கு திரையில் பதில் இருக்கிறது.
படத்திற்கு மிகப் பெரிய பலம் நடிகர்கள், ஓமராக நீல் முகேஷும், மாயாவாக காத்ரீனா கைப்பும், சாம் ஆக ஜான் ஆப்ரஹாம். மிக இயல்பான நீட்டான நடிப்பு.. FBI ஆபீசர் ரோஷனாக இர்பான்கான். மனுசனுக்கு லட்டு மாதிரியான கேரக்டர். பாடி லேங்குவேஜில் அசத்துகிறார். காத்ரீனா அழகோ அழகு.
நியூயார்க்கை மிக அழகாய் ஒரு கேரக்டர் போல உபயோகித்திருக்கிறார்கள் அற்புதமான இதமான ஒளிப்பதிவு. மிக சிறந்த சவுண்ட் மிக்ஸிங். ஆழமான வசனங்கள். என்று பல டிப்பார்ட்மெண்டுகள் திரம்பட வேலை செய்திருக்கிறது.
இயக்குனருக்கு இது இரண்டாவதுபட்ம் முதல் படமான காபூல் எக்ஸ்பிரஸ் பெரிய தோல்வியை சந்தித்தது. இதில் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர். ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், கொஞ்சம் , கொஞ்சமாய் சூடு பிடித்து விடுகிறது திரைக்கதை.
நியூயார்க் – அர்த்தமுள்ள பட விரும்பிகளுக்கு.
Post a Comment
33 comments:
ஹ்ம்ம் ....
நான் கதை வேறு மாதிரி இருக்கும் என்று அல்லவா நினைத்து இருந்தேன் ....
இப்படி போகுதா கதை ???
நல்ல விமர்சனம்
வெரி இன்ட்ரஸ்டிங்... டி.வி.டி. எங்க கிடைக்குது தல...
ஏற்கனவே எடுத்த படமும் post terrorist attackதான், ஆனா வித்தியாசமா ஆப்கானிஸ்தான்ல வச்சு எடுத்திருந்தார்.
சொன்னா நம்ப மாட்டீங்க! இன்னைக்கு தான் சங்கர் இன்னும் இத எழுதலையே, அவர்ட்ட சொல்லனும்னு நெனச்சேன்.
/நான் கதை வேறு மாதிரி இருக்கும் என்று அல்லவா நினைத்து இருந்தேன் ....
இப்படி போகுதா கதை ???
நல்ல விமர்சனம்//
வேற் மாதிரி படம்னு நினைச்சு பாக்காம இருந்திட போறாங்ன்னுதான் இந்த விமர்சனம் மாயாவி.. அப்பாடி நன்றிக்கு பதிலா ஒரு பதில சொல்லிட்டேன் மாயாவிக்கு சந்தோஷமா ..?
ஏற்கனவே எடுத்த படமும் post terrorist attackதான், ஆனா வித்தியாசமா ஆப்கானிஸ்தான்ல வச்சு எடுத்திருந்தார்.//
எனக்கு அந்த படம் அவ்வளவா பிடிக்கல பப்பு..
//சொன்னா நம்ப மாட்டீங்க! இன்னைக்கு தான் சங்கர் இன்னும் இத எழுதலையே, அவர்ட்ட சொல்லனும்னு நெனச்சேன்//
என்னா ஒரு வேவ் லெந்த்.. பபபு..
தல,
ஒரு நல்ல விமர்சனம். இர்ஃபான் கான் சான்ஸே இல்ல. எந்த ரோல் குடுத்தாலும் கலக்குவாரு
/வெரி இன்ட்ரஸ்டிங்... டி.வி.டி. எங்க கிடைக்குது தல...
//
டிவிடி எதுக்கு பக்கதில தியேட்டர்ல ஓடுதே சுகுமார்.
/தல,
ஒரு நல்ல விமர்சனம். இர்ஃபான் கான் சான்ஸே இல்ல. எந்த ரோல் குடுத்தாலும் கலக்குவாரு
//
படம் பாத்திட்டீங்களா அண்ணே..
நான் இர்ஃபானுக்காக படம் பார்த்தேன். மனுஷன் ஏமாற்றவில்லை.
இறுதிக்கட்டத்தில் ஜான் ஆப்ரஹாமின் மகனை வைத்து படத்தின் மெசேஜை சொன்ன விதம் பிடித்திருந்தது.
//சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை.//
DevD?
அண்ணா இன்று சிரித்தால் ரசிப்பேன் மற்றும் ஞாபகங்கள் படம் ரிலிஸ் எப்ப விமர்சனம்..???
நைனா... டேக்கிங் சார்ஜ்...
போடப்போறது... மொக்கை, அதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பான்னு மொனங்காம... ஸ்டார்ட் மீஜிக்....
/*
சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை.
*/
ஆமா... நாம பார்த்ததெல்லாம்... நல்ல திட காத்திரமான பொண்ணுங்களை மட்டுந்தானே.... அவங்களும் அதை நம்பியே காலத்தை ஒட்டிட்டாங்களே...
/*டிடென்ஷ்ன் செண்டரில் வைத்து சித்திரவதை செய்ததையும், */
வில்லு, ஏகன் படம் போட்டும் காட்டுவாங்களோ....?!?!?!
/* போன்ற பல கேள்விக்கு திரையில் பதில் இருக்கிறது. */
நான் பார்த்த எல்லா திரையும் வெள்ளையாதான் சாமி இருந்தது...
இன்னிக்கு ஒரு பிகர் கூட போய் படத்தை பார்த்திடுறேன்...
அண்ணே எனக்கும் ஹிந்தி படம் பாக்கனும்னு ஆசைதான்,
ஆனா தியேட்டர்ல subtitle போட மாட்டங்களே....
நீங்க பழமொழி வித்தகர்ங்க.....
:)
\\அண்ணே எனக்கும் ஹிந்தி படம் பாக்கனும்னு ஆசைதான்,
ஆனா தியேட்டர்ல subtitle போட மாட்டங்களே....
நீங்க பழமொழி வித்தகர்ங்க\\
repeateee
\\அண்ணே எனக்கும் ஹிந்தி படம் பாக்கனும்னு ஆசைதான்,
ஆனா தியேட்டர்ல subtitle போட மாட்டங்களே....
நீங்க பழமொழி வித்தகர்ங்க\\
repeateee
நாடோடிகள் எப்போ?
படத்த உடனே பார்கோணும்
\\அண்ணே எனக்கும் ஹிந்தி படம் பாக்கனும்னு ஆசைதான்,
ஆனா தியேட்டர்ல subtitle போட மாட்டங்களே....
நீங்க பழமொழி வித்தகர்ங்க\\
repeateee repeateee
நல்ல விமர்சனம்
/நான் இர்ஃபானுக்காக படம் பார்த்தேன். மனுஷன் ஏமாற்றவில்லை.
இறுதிக்கட்டத்தில் ஜான் ஆப்ரஹாமின் மகனை வைத்து படத்தின் மெசேஜை சொன்ன விதம் பிடித்திருந்தது//
ஆமாம் பரிசல்..
/நான் இர்ஃபானுக்காக படம் பார்த்தேன். மனுஷன் ஏமாற்றவில்லை.
இறுதிக்கட்டத்தில் ஜான் ஆப்ரஹாமின் மகனை வைத்து படத்தின் மெசேஜை சொன்ன விதம் பிடித்திருந்தது//
ஆமாம் பரிசல்..
எப்படியோ தெரியவில்லை தேவ்டி நான் இன்னும் பார்க்கவிலலை.. இருந்தாலும் அது தேவதாஸின் புதிய வர்ஷன் என்று கேள்விபட்டேன் வெங்கிராஜா..?
/ஆமா... நாம பார்த்ததெல்லாம்... நல்ல திட காத்திரமான பொண்ணுங்களை மட்டுந்தானே.... அவங்களும் அதை நம்பியே காலத்தை ஒட்டிட்டாங்களே..//
அது சரி. ஆரம்பிச்சிட்டான்யா..நம்ம நைனா..
/நான் பார்த்த எல்லா திரையும் வெள்ளையாதான் சாமி இருந்தது...//
எங்க்கூர் தியேட்டர்ல பதில் இருந்திச்சு.. அஙக் இல்லையா..?
/அண்ணே எனக்கும் ஹிந்தி படம் பாக்கனும்னு ஆசைதான்,
ஆனா தியேட்டர்ல subtitle போட மாட்டங்களே....
நீங்க பழமொழி வித்தகர்ங்க.//
ஜெட்லி.. பழமொழி இல்லிண்னே.. பல மொழி..
பாருங்க.. நாஞ்சில்..
நன்றி முரளிகண்ணன். சுகுமார். அப்படின்னா உங்களுக்கு டிவிடியே சரணம்தான்..
'HOT SPOT' padam sema sema HOT machi...
நான் இர்ஃபானுக்காக படம் பார்த்தேன்
Post a Comment