Thottal Thodarum

Jul 8, 2009

Oy – Telugu Film Review

oyreview
நாமெல்லாம் அஞ்சலி பாப்பாவாக பார்த்த ஷாம்லி இப்போது குமரி ஆகி நடிக்த முதல் படம். சித்தார்த், ஷாம்லி, யுவன் என்று ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை கெடுக்கவில்லை என்றுதான் சொல்ல் வேண்டும்.

அடுத்த செகண்ட் வாழ்க்கையின் என்ன வேண்டுமானும் நடக்கலாம் அதனால் அந்த நிமிட சந்தோஷத்தை மட்டுமே கொண்டாடும், பணக்கார உதய்க்கும். எதையும் தன் வாழ்நாள் முழுவதும் கூடவே வரவேண்டும் என்று நினைக்கும் மிஸ். பெர்பெக்ட் ஹீரோயின். அவளுக்கு எல்லாமே அவள் மட்டும்தான். தான் தன் உலகம், தன் நம்பிக்கை, என்று உழலும் சந்தியாவுக்கும் இடையே நடக்கும் கதைதான். ஒய்…
www.nkdreams.com

2009 புத்தாண்டின் போது ஆரம்பிக்கிறது படம். சந்தியாவை எத்தேசையாய் பப்பில் பார்க்க, அவளிடம் பேச போக, அவள் அவனை பற்றி டீடெய்ல் எல்லாம் கேட்டுவிட்டு, உனக்கும் எனக்கும் ஒத்துவராது.. ஏன்னா.. என்னோட நம்பர் 5, உனக்கு 7 அதுனால குட்பைன்னு சொல்லிட்டு போக, அவளை துறத்தி, துறத்து என்று துறத்துகிறான் உதய். அவள் வீட்டிலேயே தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பதாய் சொல்லி பேயிங் கெஸ்ட்டாய் வந்து சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் காதலை சொல்கிறான். அதே நாளில் அவளுக்கு கேன்சர் என்று தெரியவருகிறது.  அதை அவளுக்கு தெரியாமல், அவளின் க்டைசி நாட்களை எவ்வாறு கழிக்கிறான்
www.nkdreams.com

சித்தார்தின் இளமை துள்ளும் நடிப்பு படத்திக்கு மிகப் பெரிய பலம். மிக இயல்பாய் நடிக்கிறார்.  கதாநாயகியாய் ஷாம்லி.. நம பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார்.  அவருடய நடிப்பும் மிக இயல்பு..  ஆனால் கொஞ்சம் குண்டாயிருக்கிறார். காமெடிக்கு சுனிலும், கிருஷ்ணுடுவும். இருக்கிறார்கள்.. கிருஷ்ணுடு ஸ்கோர் செய்கிறார். நம்ம ஊரு நெப்போலியன் வருகிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் விஜய் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு. முக்கியமாய் அந்த கடலோர வீடும், கடற்கரையும், நைட் எபக்டில் வரும் காட்சிகளும், ஸோ.. ரொமாண்டிக்..

யுவனின் பிண்ணனி இசை படத்திற்கு அடுத்த பலம் என்றே சொல்ல வேண்டும்..  பாடல்கள் சில துள்ளுகிறது, சில நம்மை மெலடியில் கிறக்குகிறது.
www.nkdreams.com

மிகவும் பாரட்டபட வேண்டியவர் இயக்குனர் அனந்த ரங்கா.. அதிலும் அவர் முதல் பாதியில்   ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சியாகட்டும், அந்த பப்பில் ஹீரோவின் பிறந்த நாளுக்காக, அவனை தூக்கி போட, அப்போது முதல் ப்ளோரில் ஹீரோயினை பார்க்கும், காட்சியாகட்டும், உதய் தன் காதலை வெளீப்படுத்தும் பர்த்டே காட்சியாகட்டும், மனுசன் பின்னியெடுத்திருக்கிறார். செகண்ட் ஆஃபில் வரும் காசி காட்சிகள் கொஞ்சம் டிராகிங் என்றாலும்.. கதாநாயகி இறந்துவிடுவாள் என்று சொல்லிவிட்டு, நம்மை கடைசி வரை உட்கார வைத்துவிடுகிறார். இயக்குனர். அதே போல் கதாநாயகி சந்தியா, க்ளைமாக்ஸில் தன் வாயால் ஐ லவ் யூ என்று சொல்ல, உதயின் பர்த்டே அன்று தன்னை வெளிப்படுத்தி, அவனை போலவே 12 கிப்டுகளை கொடுத்து, கடைசியாய் வாழ்நாள் பூராவும் அவனோடு தன் வாழ்க்கக யை கொடுக்க ஆசையாயிருக்கு, என்று சொல்லும் இடத்தில் மனம் கரையத்தான் செய்கிறது. பல இடங்களில் வசனங்கள் அருமை. சில இடங்களில் ஸோ… ஸோ..

மணிரத்னத்தின் கீதாஞ்சலி ஞாபகமும், A Millionare’s First love என்கிற கொரியன் படமும் ஆங்காங்கே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

Oy-  A Nice Feeling

Technorati Tags: ,

Post a Comment

62 comments:

VISA said...

நாக்கு தெலுகு தெல்லேது. அதாவது எனக்கு தெலுங்கு தெரியாது இருந்த போதும் உங்கள் விமர்சனத்திலிருந்து அந்த திரைப்படத்தின் கருவும் நகர்த்தி சென்ற விதமும் நேர்த்தியாய் இருக்குமென புரிகிறது. நிறைய அடி தடி சண்டைகள் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன். எனவே இளைய தளபதி ரீமேக்கில் உருவாக வாய்ப்பில்லை. ஏதாவது புண்ணியவான் ரீமேக் செய்தால் பார்ப்போம். அப்புறம் தெலுகு படம் எல்லாம் இப்படி நல்ல எடுக்க ஆரம்பிச்சுட்டான்க்களா???

Prabhu said...

இந்தப் படத்தையும் ரிமேக் செய்வாங்களா?
சித்தார்த் படம் எல்லாத்துக்கும் ரீமேக் பொடன்சியல் ஜாஸ்தியா இருக்கே! நிறைய ஃபீல் குட் மூவிஸா நடிக்கிறார்!

Cable சங்கர் said...

/நாக்கு தெலுகு தெல்லேது. அதாவது எனக்கு தெலுங்கு தெரியாது இருந்த போதும் உங்கள் விமர்சனத்திலிருந்து அந்த திரைப்படத்தின் கருவும் நகர்த்தி சென்ற விதமும் நேர்த்தியாய் இருக்குமென புரிகிறது. நிறைய அடி தடி சண்டைகள் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன். எனவே இளைய தளபதி ரீமேக்கில் உருவாக வாய்ப்பில்லை. ஏதாவது புண்ணியவான் ரீமேக் செய்தால் பார்ப்போம். அப்புறம் தெலுகு படம் எல்லாம் இப்படி நல்ல எடுக்க ஆரம்பிச்சுட்டான்க்களா??//

இப்போதெல்லாம் நிறைய நல்ல படங்கள் தெலுங்கில் வர ஆரம்பித்துவிட்டது. விசா..

Prabhu said...

அது என்ன oy?

Cable சங்கர் said...

/இந்தப் படத்தையும் ரிமேக் செய்வாங்களா?
சித்தார்த் படம் எல்லாத்துக்கும் ரீமேக் பொடன்சியல் ஜாஸ்தியா இருக்கே! நிறைய ஃபீல் குட் மூவிஸா நடிக்கிறார்//

ஆமாம் பப்பு.. ஆனால் தமிழுக்கு கொஞ்சம் ஸ்கூட்ரனைஸ் செய்ய வேண்டும்.

Cable சங்கர் said...

நான் யாரையாவது 'அலோ' என்று கூப்பிடுவோம் இல்லையா.. அது போல கூப்பிடு வார்த்தைதான் ஒய்

Jackiesekar said...

தலை பார்க்க வேண்டிய லிஸ்ட்ல இந்த படமும் இருக்கு.... அப்புறம் ஹாட் ஸ்பாட்ல நாம ரெண்டு பேரும் ஒரே படத்தை போட்டு தொலைச்சிருக்கோம்.. இதுக்கு பேருதான் கோ இன்சிடன்ட்ஸ்னு சொல்லுவாங்க....

Cable சங்கர் said...

/தலை பார்க்க வேண்டிய லிஸ்ட்ல இந்த படமும் இருக்கு.... அப்புறம் ஹாட் ஸ்பாட்ல நாம ரெண்டு பேரும் ஒரே படத்தை போட்டு தொலைச்சிருக்கோம்.. இதுக்கு பேருதான் கோ இன்சிடன்ட்ஸ்னு சொல்லுவாங்க..//

ஆமாம் ஜாக்கி.. லிஸ்டுல இந்த படத்தை வச்சிக்கங்க.. அட ஆமாமில்ல.. ரெண்டு பேரும் ஒரே படத்தை போட்டிருக்கோம்..

நாஞ்சில் நாதம் said...

தெலுங்கில் எல்லாம் இப்படி நல்ல எடுக்க ஆரம்பிச்சுட்டான்க்களா?

சங்கர்ஜி எந்த பஷையிலும் படம் வந்தா விடமாட்டீங்க போல

தராசு said...

படிச்சுட்டேன்,

நிதர்சன கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு?????

shortfilmindia.com said...

/படிச்சுட்டேன்,

நிதர்சன கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு?????
//

மூணு கதை ரெடியாயிட்டுருக்குண்ணே..

shortfilmindia.com said...

/சங்கர்ஜி எந்த பஷையிலும் படம் வந்தா விடமாட்டீங்க போல
//

படம் பார்பது என்னுடய Passion. 2நாஞ்சில்

கேபிள் சங்கர்

வினோத் கெளதம் said...

Kalakkal Oy..

Sukumar said...

நல்ல விமர்சனம் ....
அண்ணனும் தம்பியும் இந்த படத்தை எப்படி தமிழ் படுத்தலாம் (தமிழில் படுத்தலாம்) என டிஸ்கஷன் ஆரம்பித்திருப்பார்கள்....

Beski said...

நன்றி.

Anbu said...

Anna HOT SPOT kalakkal

Unknown said...

விமர்சனம் சூப்பர்! பரவாயில்லை படத்தை ஒரு தடவை பார்க்கலாம்.
இதையும் பார்க்க - ஷாமிலி புதிய படங்கள்

Raju said...

\\ஆமாம் ஜாக்கி.. லிஸ்டுல இந்த படத்தை வச்சிக்கங்க.. அட ஆமாமில்ல.. ரெண்டு பேரும் ஒரே படத்தை போட்டிருக்கோம்..\\


\\Anbu said...
Anna HOT SPOT kalakkal\\

ரைட்டு,
நடத்துங்க சாமிகளா..!

Unknown said...

//இந்தப் படத்தையும் ரிமேக் செய்வாங்களா?

ஜெயம் ரவிக்கு அடுத்த படக்கதை ரெடி! ஹி ஹி ஹி!

பாசகி said...

சித்தார்த் கலக்கறாரு...

Cable சங்கர் said...

நன்றி அன்பு..
நன்றி எவனோ ஒருவன்.

Cable சங்கர் said...

/நல்ல விமர்சனம் ....
அண்ணனும் தம்பியும் இந்த படத்தை எப்படி தமிழ் படுத்தலாம் (தமிழில் படுத்தலாம்) என டிஸ்கஷன் ஆரம்பித்திருப்பார்கள்...//

ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு.. சுகுமார். இந்த படமில்ல.. ரவிதேஜா நடிச்ச கிக் படம் தான் அது.

Cable சங்கர் said...

/ரைட்டு,
நடத்துங்க சாமிகளா..!//

நன்றி டக்ளசூ..

Cable சங்கர் said...

நன்றி மூவி போஸ்டர்

ஆமாம் பாசகி

மேவி... said...

தெலுகு ல நல்ல படம் நிறைய வருது போல் இருக்கு பாஸ் ... எப்படியும் இதை ஜெயம் ரவி நடித்து தமிழ்யில் வர தான் போகிறது .... அப்பொழுது பார்த்து கொள்ளலாம்........

(தமிழ் மசாலா பட ஹீரோகள் கிட்ட இருந்து இந்த கதையை காபாற்ற வேண்டும் முதலில்)

நையாண்டி நைனா said...

/*ஆமாம் ஜாக்கி.. லிஸ்டுல இந்த படத்தை வச்சிக்கங்க.. அட ஆமாமில்ல.. ரெண்டு பேரும் ஒரே படத்தை போட்டிருக்கோம்..*/

இந்த பிள்டப்புலாம் வோணாம் எனக்கு உண்மை தெரிஞ்சி போச்சி...


(வைதேகி காத்திருந்தாள், செந்தில் ஸ்டைலில் படிக்கவும்.)
ஆமா...... அந்த ஊமை வீடு எங்கே இருக்குண்ணே....

Cable சங்கர் said...

/ஆமா...... அந்த ஊமை வீடு எங்கே இருக்குண்ணே...//

உன் நக்கலுக்கு அளவேயில்லையயா.. நைனா..

Cable சங்கர் said...

/தமிழ் மசாலா பட ஹீரோகள் கிட்ட இருந்து இந்த கதையை காபாற்ற வேண்டும் முதலில்)
//

ஏற்கனவே தமிழ் சினிமா உலகம்.. அவர்களிடமிருந்து வெளியே வ்ந்து கொண்டுதானிருக்கிறது.. மாயாவி

Cable சங்கர் said...

நன்றி வினோத் கவுதம்

நர்சிம் said...

நல்லா இருக்கு விமர்சனம் சங்கர்காரு

Arun Kumar said...

விமர்சனத்துக்கு நன்றி சார்
இந்த படம் ஹிட்டாகி விட்டதா?
பெங்களூரில் ஏகப்பட்ட தியேட்டர்களில் ஓடுகிறது.

ஜெட்லி... said...

மொதல்ல இந்த படத்துக்கு டிக்கெட்
கிடைக்காமதான் ஞாபகங்கள் படம்
பார்த்திங்க போல....?

ஷாமிலி தேறுமா?

முரளிகண்ணன் said...

பாபுகாரு

மச்சி விமர்சனம்.


கேபிள்காரு என்று போட்டால் யாரும் நிஜ கேபிள்காரை நினைத்துக் கொள்வார்கள் தானே?

FunScribbler said...

சித்தார்த்தா...அப்ப பாத்தே ஆகனுமே!
onlineல இருக்குமா? எங்க ஆரியாவுல தெலுங்கு படம் போட மாட்டாங்களே!

ஆனா, படத்தின் கதை ரொம்ப பழசா தெரியுதா?

ஷாமினியோட முதல் படம்...தேருமா?

நையாண்டி நைனா said...

ஹாட் ஸ்பாட்டை பார்த்திட்டே இருந்ததாலே... இங்கே என்ன நடக்குன்னு கவனிக்காமே விட்டுட்டேன்.

நையாண்டி நைனா said...

/*ஏன்னா.. என்னோட நம்பர் 5, உனக்கு 7 அதுனால குட்பைன்னு சொல்லிட்டு போக*/

இதுக்கு டீடைலு தேவை...
(மனம் கண்டபடி எண்ணுது....)

நையாண்டி நைனா said...

/*அதே நாளில் அவளுக்கு கேன்சர் என்று தெரியவருகிறது. அதை அவளுக்கு தெரியாமல், அவளின் க்டைசி நாட்களை எவ்வாறு கழிக்கிறான் */

இந்த கேன்சரை, சினிமா...
சாரி... சாரி...

இந்த சினிமாவை கேன்சர்.... சாரி... சாரி...

அட ரெண்டும் பின்னி பெனஞ்சி தான் இருக்கு....

இதுக்கு விடிவே இல்லியா....

நையாண்டி நைனா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

/*ஆனால் கொஞ்சம் குண்டாயிருக்கிறார்.*/

விட்டு தள்ளுங்க....
உங்க விமர்சனத்திலே வந்ததாலே...

உங்க ஜோக்கிலே வந்திருந்தா உண்டாயிருப்பார்.

ரெட்மகி said...

நல்ல விமர்சனம் ...
சண்டே டிக்கெட் கிடைக்காம வந்துட்டேன் ... ஆனா siddarth தொடர்ந்து லவ் story-இல் நடிக்கிறார் .. அலுப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது

கிக் தமிழில் ஓடாது என்பது அடியேனின் கருத்து...

நையாண்டி நைனா said...

/*கதாநாயகி இறந்துவிடுவாள் என்று சொல்லிவிட்டு, நம்மை கடைசி வரை உட்கார வைத்துவிடுகிறார்*/

கதாநாயகி துறந்து விட்டா... இன்டெர்வெல் வந்த அஞ்சு நிமிசத்திலே படமும் முடிஞ்சிருதே...

நையாண்டி நைனா said...

/*மணிரத்னத்தின் கீதாஞ்சலி ஞாபகமும், A Millionare’s First love என்கிற கொரியன் படமும் ஆங்காங்கே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. */

Keep The Company secrets.


கோட்டா முடிஞ்சி போச்சி... அப்புறமா அடுத்த பதிவிலே பார்க்கலாம்....

Bala said...

படம் பார்த்த உணர்வை தருதிறது உங்கள் விமர்சனம். இந்தப்படத்தை நெட்ல பார்க்க link இருந்தால் தரவும். உங்கள் புண்ணியத்தில் நல்ல படங்களை பார்க்கும் சந்தர்பம் நமக்கு கிடைத்து உள்ளது

CrazyBugger said...

பாசு டாப் 10 செக்ஸ் படம் சொல்லுங்க மற்றும் review போடுங்க.. சும்மா ஒரே மாதிரி சொல்லி கிட்டு

Cable சங்கர் said...

/நல்லா இருக்கு விமர்சனம் சங்கர்காரு
//

சால சந்தோஷம் நர்சிம்காரு..

Cable சங்கர் said...

/மொதல்ல இந்த படத்துக்கு டிக்கெட்
கிடைக்காமதான் ஞாபகங்கள் படம்
பார்த்திங்க போல....?

ஷாமிலி தேறுமா//

ஆமாம் ஜெட்லி.. இந்த படத்துக்கு ஓகே.. இனிமே வர்ற படத்துல தான் பாக்க்கணும்.

Cable சங்கர் said...

/பாபுகாரு

மச்சி விமர்சனம்.//

மஞ்சிதண்டி...


//கேபிள்காரு என்று போட்டால் யாரும் நிஜ கேபிள்காரை நினைத்துக் கொள்வார்கள் தானே?//

:)

Cable சங்கர் said...

/சித்தார்த்தா...அப்ப பாத்தே ஆகனுமே!
onlineல இருக்குமா? எங்க ஆரியாவுல தெலுங்கு படம் போட மாட்டாங்களே!

ஆனா, படத்தின் கதை ரொம்ப பழசா தெரியுதா?

ஷாமினியோட முதல் படம்...தேருமா?
//

ஆன்லைனில் கிடைக்கும்.. ஆனால் நான் தியேட்டரில் படம் பார்ப்பவன். அதனால் தெரியாது. தமிழ் மாங்கனி..

புதுசா கதை ஏதும் கொடுக்க முடியாது தமிழ்.. சொல்ற விதத்துல தான் ஏதாவது பண்ண முடியும்.

தேரும்னுதான் நினைக்கிறேன். பார்ப்போம்.

Cable சங்கர் said...

/விமர்சனத்துக்கு நன்றி சார்
இந்த படம் ஹிட்டாகி விட்டதா?
பெங்களூரில் ஏகப்பட்ட தியேட்டர்களில் ஓடுகிறது//

ஒரளவுக்கு ஹிட் என்றேதான் சொல்ல வேண்டும்.

Cable சங்கர் said...

/பாசு டாப் 10 செக்ஸ் படம் சொல்லுங்க மற்றும் review போடுங்க.. சும்மா ஒரே மாதிரி சொல்லி கிட்டு
//

இப்ப போட்டு இருக்கிறது என்ன ரெவ்வியூ இல்லையா.. மதுரை மல்லி.??

Cable சங்கர் said...

/ஹாட் ஸ்பாட்டை பார்த்திட்டே இருந்ததாலே... இங்கே என்ன நடக்குன்னு கவனிக்காமே விட்டுட்டேன்//

ஹி..ஹி.. அதுக்குத்தானே போடறது.. நைனா..

Cable சங்கர் said...

/இந்த கேன்சரை, சினிமா...
சாரி... சாரி...

இந்த சினிமாவை கேன்சர்.... சாரி... சாரி...

அட ரெண்டும் பின்னி பெனஞ்சி தான் இருக்கு....

இதுக்கு விடிவே இல்லியா...//

இல்லை நைனா.. முன்பை விட நம் ஊரில் கேன்சரால் இறப்பவர்கள் அதிகம். தமிழ் சினிமாவில் கேன்சர் என்றால் ரத்த புற்று நோய் மற்றும்தான் என்று காட்டியிருப்பதால் அப்படி தோன்றும்.. ஆனால் இநத படத்தில் அப்படியில்ல்

நையாண்டி நைனா said...

where is the detail?

நையாண்டி நைனா said...

ஆமா... டீடைலு எங்கே...??

நையாண்டி நைனா said...

அப்புறம் என்னாலே குழப்பம் வந்திரக்கூடாது அதுக்காக...

பாலாவிற்கும், ரெட் மகிக்கும் நீங்க இன்னும் பதில் சொல்லலே... சொல்லீருங்க.

Cable சங்கர் said...

/விட்டு தள்ளுங்க....
உங்க விமர்சனத்திலே வந்ததாலே...

உங்க ஜோக்கிலே வந்திருந்தா உண்டாயிருப்பார்.
//
என் இமேஜை..?? டேமேஜ் பண்ணாம விட மாட்ட போலிருக்கே..

Cable சங்கர் said...

/நல்ல விமர்சனம் ...
சண்டே டிக்கெட் கிடைக்காம வந்துட்டேன் ... ஆனா siddarth தொடர்ந்து லவ் story-இல் நடிக்கிறார் .. அலுப்பாக இருக்குமோ என்று தோன்றுகிறது

கிக் தமிழில் ஓடாது என்பது அடியேனின் கருத்து//

தமிழ்ல பண்ணா.. கண்டிப்பா எடிட்டர் மோகன் மெனக்கெடுவார்..

Cable சங்கர் said...

/அப்புறம் என்னாலே குழப்பம் வந்திரக்கூடாது அதுக்காக...
//

உங்களால என்ன குழப்பம்.?

kishore said...

நிச்சயம் பாக்குறேன்..

VISA said...

APPURAM HOT SPOT la IRUKURA PADAM KIDAIKUMA DESKTOP LA VACHUKA

Cable சங்கர் said...

/.APPURAM HOT SPOT la IRUKURA PADAM KIDAIKUMA DESKTOP LA VACHUKA//

mail id கொடுங்க.. அனுப்பறேன்.. ஒரு கலா ரசிகனுக்கு இதை விட என்ன உதவ்வி செஞ்சிட முடியும்

Cable சங்கர் said...

நன்றி கிஷோ.. உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.