Quick Gun Murugan
90களில் சேனல் வீ யை பிரபலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர். அப்போதே மிக பெரிய ஹிட்.. அதை தொடர்ந்து படமாய் வெளீவந்திருக்கிறது. முருகன் ஒரு இந்தியன் அதிலும் சவுத் இந்தியன் Cow களை காப்பாற்றும் Cowboy. ரைஸ் ப்ளேட் ரெட்டி என்பவன் ஊரில் உள்ள எல்லா சைவ உணவகங்களையும் தன்னுடய கவுபாய் கூட்டத்தை வைத்து, மிரட்டி எழுதி வாங்கி, அசைவ உணவகங்களாய் மாற்றுகிறான். அதை ஒரு கட்டத்தில் எதிர்த்த குயிக் கன் முருகனுக்கு, ரெட்டிக்கு தக்ராறு வர அதில் குயிக் கன் முருகன் கொல்லப்படுகிறான். மேலோகத்துக்கு போகும் கன் முருகன், சித்ரகுப்தனிடம் போராடி தான் போய் தான் உலகை காப்பாற்ற வேண்டுன் என்று சொல்லி மீண்டும் அங்கிருந்து டிரான்ஸ்பர் ஆகி, பூமிக்கு வருகிறான். வரும் போது 2007 ஆண்டு, அப்போது ரெட்டி மேக் தோசா என்று அசைவ தோசையை தயாரித்து உலகையே ஆள நினைக்கிறான். சரியான டேஸ்டான் தோசைக்கான ரிஸிப்பிக்காக அலைகிறான். தோசை மாமிகளை கடத்துகிறான். இதில் ரெட்டியா/ முருகன் இருவரில் யார் வென்றார்கள் என்பது க்ளைமாக்ஸ். கதையை படிக்கும் போதே தெரிந்திருக்கும். காமெடி செய்வதற்கென்றே எழுதப்பட்டதாய் இருக்கிறது. முதலில் ...