இசையெனும் “ராஜ” வெள்ளம்-2
இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன்.
சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம்.
சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம்.
பல்லவி- அனுபல்லவி
மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க ஒரு மினி இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள். சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள். அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என்னை தொட்டு “ என்று ஒரு பாடலாகவே இசையமைத்திருப்பார். இந்த படத்தில் படம் நெடுகிலும் ஒர் அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசையை ராஜாவும், மணியும் கன்னட திரையுலகத்திற்கு அறிமுகபடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.
மெளனராகம்
இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன். ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும் கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில் அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.
மெளனராகம்
இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன். ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும் கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில் அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.
இதயத்தை திருடாதே
இதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் முழுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா. நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி த
ங்கை, அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, அவனின் வீட்டு கதவை திறக்க, அவளுக்கு முன்னால் பனிபுகை மெல்ல, தரையில் ஊர்ந்து போய், எழும்பி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாகார்ஜுனின் முதுகில் தொட, அவர் திரும்பி பார்க்கும் வரையான காட்சியில் ராஜாவின் பிண்ணனி இசைக்காக, அந்த காட்சி எடுக்கப்ட்டதா, அல்லது காட்சிக்காக இசையமைக்கபட்டதா? என்று கேட்கும் வண்ணம் இரண்டு பேரும் உழைத்திருப்பார்கள்.
இதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் முழுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா. நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி த
மேலும் மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை பற்றி பேச நிறைய இருப்பதால் அடுத்த வியாழன் சந்திபோம். அதுவரை உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்… கேபிள் சங்கர்
முந்தைய பதிவு
இசையெனும் “ராஜ” வெள்ளம்
முந்தைய பதிவு
இசையெனும் “ராஜ” வெள்ளம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அதுலயும் மௌனராகம் சான்சே இல்ல....கார்த்திக் வரும்போதெல்லாம் நம்மளும் குஷி ஆகிடுவோம் அந்த மியூசிக் கினால் ....
பேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.
”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்."இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.
அற்புதம்.
இனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா ?
Krish
இந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது....
Song i like very much Picture + Songs, really nice .
மவுனராகத்தில் கார்த்திக் வரும் பகுதியில் வரும்பிண்ணனி இசை ராஜாவின் மேதமை வெளிப்பட்ட இடம்.துள்ள்ளலோடு கார்த்திக் திரியும் காட்சிகளுக்கு சேர்க்கப்பட்டிருக்கும் பிண்ணனி இசையில் மிக மெல்லிய சோகம் வெளிப்படும் வண்ணம் அமைத்திருப்பார். மகிழ்வும் சோகமும் கலந்த பியானோ ஒலிகொண்ட பிண்ணனி இசைக்கோர்ப்பு அந்த காட்சிகள் முழுவதும் இறுக்கத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
விடுபட்ட சில முக்கிய இசைக்கோர்ப்புகள் இடம் பெற்ற படங்கள் காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, பன்னீர் புஷ்பங்கள். பூந்தோட்டம்
அதிகம் கவனிக்கப்படாத அருமையான பிண்ணனி இசை கோர்ப்பு அமைந்த படம் காதல்கவிதை திரைப்படம். குறிப்பாக லைப்ரரி காட்சியும், டயானா நினைவிடத்திற்கு முன்பான காட்சியும். இதில் சிறப்பம்சம் என்றால் இந்தப்படம் டிசம்பர் 25 வெளிவந்தது, டிசம்பர் 23ல் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டது. பிண்ணனி இசை கோர்ப்பு நடைபெற்றது டிசம்பர் 21ம் தேதி காலை 9 மணியிலிருந்து 22ம் தேதி காலை 6 மணி வரை.
எனக்கு விபரம் தெரிந்த பிறகு நான் விரும்பிப் பார்த்த படங்கள் 90 சதவீதம் இளையராஜா படங்களே. படம் பார்ப்பதைவிட பிண்ணனி இசையைத்தான் அதிகம் ரசிப்பேன்.
விடிய விடிய பேசலாம் இளையராஜாவின் பிண்ணனி இசையை..
மௌன ராகம், கார்த்திக் காட்சிகளின் இசை ஒரு அதி அற்புத அனுபவம். அந்தப் படத்து டைட்டில் கார்டு இசையே நம்மள பிடிச்சி உக்காத்தி வச்சிருமே
கேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்......
எ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி ....
1:37 PM
இளையராஜா, பாசில் கோம்பினசின் சான்சே இல்ல . பூவிழி வாசளிலேவில் வரும் அந்த வீணையின் ஓய்ங் ... நம் உடலின் நரம்புகளையே மீட்டுவது போல் இருக்கும். அப்படி ஒரு த்ரில் . அது போல் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் கண்ணே நவமணியே ... நம்மை அப்படியே ஒரு தாயாக்கி விடும்.
Idhai repeatugiren...
Andha songa radiola kumbakonam thee vibathuppo oliparappinangha..
Appodhu Kanneerai varavalaitha paadal adhu..
Poove poochoodavaa climax lium appadiye...
Krish
தொடங்குவதற்குள் முடிந்ததுபோன்ற உணர்வு...
புள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....
நாயகன்
தளபதி
எதிர்பார்க்கிறேன் :)
கமல், சொன்னது போல ராஜாவைப் போல் பின்னணி இசை அமைக்கும் சிலர் உலகில் வெகுசிலரே.
சொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .
சான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர !
Raja also scored for Mani's only Malayalam film to date, 'UNaru' (starring Mohanlal and Sabitha Anand), which had some great melodies, including a version of the Koomberi mookkan song, "Roja Ondru Mutham Kaetkum Neram'. The BGM was very subtle and extremely effective.
ஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))
பின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))
பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.
பலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது
மிக்க நன்றி இந்தியன் ஷேர் மார்கெட்
நன்றி எஸ்.என்
பேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.
”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்."இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.
//
ராஜ பார்வையின் பிண்ணனி இசை பற்றி கமல் ராஜா காம்பினேஷனில் எழுத போகிறேன்.. நன்றி ரவிஷங்கர் சார்.
அற்புதம்.
இனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா ?
//
கண்ணுக்கு தெரிந்து சான்ஸ் இல்லை
நன்றி ஜீவா
நன்றி வந்தியத்தேவன்
Krish//
சில காட்சிகள் இல்லை யூ. எம்.. கார்த்திக்கின் கேரக்டரே அந்த படத்திலிருந்து வந்ததுதான்.
இந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது..//
ரொம்பவும் பெரிசா இருந்தா படிக்க மாட்டாங்களோன்னு ஒரு நினைப்புலதான் .ஹி..ஹி..
நன்றி துபாய் ராஜா..
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
//
இளையராஜாவின் பிண்ணனி இசைகோர்ப்பு பற்றி எழுத வேண்டுமானால் அவர் இசையமைத்த அத்துனை படங்களிலும் ஏதையாவது செய்திருப்பார்.. நான் இங்கே சொல்வது எல்லாம் சிறந்ததாய் கருதப்படுகிற பட்ங்களுல் சில் .. பாரதிராஜாவின் டிக்,டிக்,டிக், புதிய வார்ப்புகள் எல்லான் என்ன செய்ய..
நன்றி அசோக்.. உங்கள் தொடர் ஆதரவிற்கும், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
கேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்....//
உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க நன்றி ராட் மாதவ்
எ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி //
அது அவருக்கும், இயக்குனருக்கும் உள்ள வேவ்லெந்த்..தான் காரணம்.
//
அதென்னவோ உண்மைதான்.. ஏ.ஆரின் பிண்ண்னி இசை அருமையாய் இருந்தது மணியின் படங்களே..
//
நன்றி அனீஸ்.. உங்கள் ஆர்வத்திற்கு.. மேலும் உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும்.
தொடங்குவதற்குள் முடிந்ததுபோன்ற உணர்வு...
புள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....
//
முயற்சிக்கிறேன் தமிழ் பறவை.. மிக்க நன்றி..
ஆமாம் இளவட்டம்..
அடுத்தவாரம்தான் வ்ரும்..
தளபதி
எதிர்பார்க்கிறேன் :)
//
அடுத்த வாரம் நிச்சயமாய் வருகிறது.. புருனோ..
இதுவும் உண்மைதான் செய்யது.. மிக்க நன்றி
//
:) நன்றி தண்டோரா..
சொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .
சான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர !//
நிச்சயமாய்.. அருப்புக்கோட்டை பாஸ்கர்.. எங்க ரொமப் நாளா ஆளையே காணம்.?
//
இரண்டுமே இரண்டு விதமான எக்ஸ்டெண்ட்..
நன்றி சுமேரு.. உங்கள் தகவலுக்கு..
ஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))
பின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))
//
ரொம்ப நன்றி கோபிநாத்..
பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.
பலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது//
அப்ப பதிவு நல்லா இலலின்னு சொல்றீங்க.. உண்மையாகவே பின்னூட்டங்கள் பின்னியெடுக்கிறார்கள்.. மிக்க நன்றி.. எல்லோருக்கும்
லெனின் மணிரத்னத்தின் முதல் படம் பல்லவி அனுபல்லவி.. அது கன்னட படம். அதை இந்த பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. மிக்க நன்றி லெனின் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
ந்ன்றி பப்பு.. உங்கள் தொடர் ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.
Vamsi combination ilayaraja voda hits:
April 1 vidudala -chukkalu chemmana
April 1 vidudala - Okkate asha (idaiyila flute la oru magic panni irupparu)
chettigunda pleadaru-Alli billi ,chalthiga namu gaadi and more.
Malayalam
Poongatinodum (rahman nadichadhu peru theriyala)
Achuvinte amma-yendhu parnjalum.
Latesta oru jayaram padam kooda...
-Krish
Ofcourse, in real sense Tick Tick Tick is the first film of Maniratnam & Kamalhasan's direction. that time his name appear as subramni. Ratnam ayyar is his dad name.
இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்
உங்கள் விளம்பர அளவு
170 pix x 100 pix
GIF Image or JPEG Image
எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்
puthumai@ymail.com
For me the best in Raja-Mani combination is "Anjali" I am waiting for ur views about it on thursday :)
very nice to read.....
saravanan,
kurumbalur.
Raja Sir,,,,,,,,,,, I bow you. I pray God, May Your soul live Longer.
இப்பாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது பாஸ் கிடார். மிக அழகாக உருவாக்கப்பட்ட crotchetகளுடன் இந்தப் பாடலுக்கு நல்ல ஒரு ரிதம் சேர்க்கிறது பாஸ் கிடார். அதே சமயம் இன்டர்லூட்களில் அவை தனியாக ஒரு counter melodyயை இசைக்கிறது. சரணங்களின் நீண்ட ஸ்வரங்களில் உள்ள வெற்றிடத்தை பாஸ் கிடாரின் நளினமான grooveகள் நிரப்புகின்றன. நாம் பொதுவாகக் கேட்டு ரசிக்கும் ‘தேவனின் கோயில் மூடிய நேரம்…’ என்ற மெலடிக்கு ஈடாக, மறைந்திருந்திருந்து இன்னொரு குட்டி ராஜாங்கத்தையே நடத்துகிறது இப்பாடலின் பாஸ்கிடார். இப்பாடலின் மெலடி, பாஸ் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தி வெளியே வரும்போதுதான் அது முழுமையானதொன்றாக, இளையராஜாவால் மட்டுமே செய்யக்கூடிய சாதனைகளில் ஒன்றாக மாறுகிறது.
எந்த அளவிற்கு இந்தப் பாடல் ஒருவரை பாதிக்க முடியும் என்பதை சுகா தன்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்தார். என்னைப் பொருத்தவரை என் இசைக்கனவை நிறைவேற்றிக் கொள்ள என்னைப் பதினேழு வருடங்கள் காத்திருக்க வைத்தது இந்தப் பாடல். அந்தப் பதினேழு வருடங்களும் இப்பாடலைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஒரு கையில் மெலடியும், இன்னொரு கையில் பாஸும் வாசித்தபடிதான் இருந்தேன். என்னைப் போல், சுகாவைப் போல் இன்னும் எத்தனை பேரோ!
- See more at: http://solvanam.com/?p=23134#sthash.yLSwT3Lb.dpuf//-
ஒரு பாடலை ரசித்து மீண்டும் வாசிக்க 18 வருட காலம் பிடிக்கிறது. இசை கருவியை வாசிக்க தெரிந்த வனுக்கு ,,,,,, அப்படி பட்ட இசை அமைத்தவனை (ராஜா ) குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம். இதே வரிகள் ரஹ்மானுக்கும் பொருந்தும்..........Long LIVE ராஜா சார் ................