சிந்தனை செய் படத்தின் விளம்பர டிசைன்களில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை என்றுதான் சொலல் வேண்டும்.
படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் முன்னுக்கு பின், பின்னுக்கு முன் என்று போய் வந்தாலும், சில நிமிடங்களில் செட்டிலாகிவிடுகிறார்கள். பரபரவென சுறுசுறுவென எரியும் மத்தாப்பூ போல போகிறது படம். இடைவேளை பாங்க் கொள்ளையின் போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பிறகு இரண்டாவது பாதியில், யுவனின் துரோகம் இன்னும் உச்சபட்ட அட்லிரினை ஏற்றி விட .க்ளைமாக்ஸ்.
புதிய நடிகர் கம் இயக்குனர் யுவன் கொஞ்சம் முத்தின மூகமாய் இருக்கிறார். அவ்வப்போது நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவரின் நண்பராய் வரும் பாலா, சிபி, ச்ஷான்ந், ஆகியோரின் நடிப்பு கச்சிதம். பாலாவும், யுவனும் அயிட்டம் வீட்டிற்கு போய் மேட்டர் முடித்துவிட்டு, செக் கொடுப்பது செம ரகளை. அதே போல பாரிலும், போலீஸ் ஸ்டேஷனிலும் மயில் சாமியின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் அருமை. மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்திருக்கிறார்.
படத்திற்கு முக்கிய கதாநாயகர்கள் கேமரா மேனும், எடிட்டரும் தான், புகுந்து விளையாடியிருக்கிறார்கள். பேக் ரவுண்ட் கலர் காம்பினேஷன்கள், களத்திற்கு ஏற்றார் போல் டோன்களும், ஸ்டைலிஷான கட்டிங்கும் படத்தின் தரத்தை ஒரு படி மேலே ஏற்றுகிறது என்றே சொல்ல வேண்டும்,
தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம், ஆரம்பத்தி வரும் காதல் தண்டபாணி கேரக்டர் மொத்த படத்துக்கே தேவையில்லாத கேரக்டர். அதே போல கதாநாயகியின் காதல் ட்ராக் டப்பு டிப்பென பரப்பதால் பெரிதாய் ஏறாமல் போகிறது. கதாநாயகனை ஏன் ஆண்மையில்லாதவனை போல காட்ட வேண்டிய அவசியம் என்ன? அதே போல் அவன் மேல் பரிதாபம் ஏற்பட வேண்டும், அவன் ஒரு ஏமாளி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக மொக்கை சீன்களை வைத்திருப்பது வேகத்தை குறைப்பதாகவே உள்ளது.
ஹீரோவின் கேரக்டரில் கொஞ்சமும், திரைக்கதையில் கொஞ்சமும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும்.தமிழில் இது மாதிரியான கல்ட் படங்கள், திரில்லர் வகை படங்கள் அவ்வளவாக வந்ததில்லை.. அந்த வகையில் இது வித்யாசமான படமே.
சிந்தனை செய – பார்க்கலாம்
டிஸ்கி
my sassy girl, லவ் ட்ராக்குக்கும், ஹிந்தி jonny gaddarஐயும் ஒன்றாய் போட்டு கலக்கி, கதையின் பின்புலத்தை மாற்றி ஒரு புது கலரில் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் கலக்கலில் கொஞ்சம் கான்சண்ட்ரேட் செய்திருக்கலாம்.
போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
50 comments:
சங்கர்,
படத்தினை பார்க்கலாம்போலிருக்கிறது....
அருமையான விமர்சனம், நிறைகளையும் குரைகளையும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்..
பிரபாகர்.
ஒரு anonymous படத்துக்கு உங்ககிட்ட நல்ல விமர்சனம் வந்திருக்கறது இந்த படத்துக்கு தான்.
படம் பாக்கலாமுன்னு சொல்லீட்டிங்க...
வீட்டுக்கு வரேன்.. அப்படியே காசும் குடுத்துடுங்க!!
நீங்கள் சொன்னா சரியாதான் இருக்கும்?!
தல,
ஒரு வழியா நல்ல சர்டிபிகேட் குடுத்திட்டீங்க.
அந்த ரெண்டாவது ஸ்டில்ல பத்தி ஒண்ணும் சொல்லல. அது ஒரு மாதிரியிருக்கே.
டவுன்லோட்! ;)
/சங்கர்,
படத்தினை பார்க்கலாம்போலிருக்கிறது....
அருமையான விமர்சனம், நிறைகளையும் குரைகளையும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்..
பிரபாகர்.
//
நன்றி பிரபாகர்
/ஒரு anonymous படத்துக்கு உங்ககிட்ட நல்ல விமர்சனம் வந்திருக்கறது இந்த படத்துக்கு தான்.
//
எப்பவாவது ஒரு முறை தான் இம்மாதிரியான அனானி படங்கள் இம்ப்ரஸ் செய்யும்.. பப்பு
/நீங்கள் சொன்னா சரியாதான் இருக்கும்?//
:_)
/தல,
ஒரு வழியா நல்ல சர்டிபிகேட் குடுத்திட்டீங்க.
அந்த ரெண்டாவது ஸ்டில்ல பத்தி ஒண்ணும் சொல்லல. அது ஒரு மாதிரியிருக்கே//
ஹி..ஹி.. ஒரு கிளூகிளுப்புக்குதான்..
/டவுன்லோட்! ;//
தியேட்டரில் பாருங்க வெங்கிராஜா..
ம். நன்றி.
வசிஷ்டர் வாயால பிரும்ம ரிஷி..
/படம் பாக்கலாமுன்னு சொல்லீட்டிங்க...
வீட்டுக்கு வரேன்.. அப்படியே காசும் குடுத்துடுங்க!//
வாங்க..தாராளமா வீட்டுக்கு வாங்க.. காசு தர்றேன்.. ஆனா இதுக்கு முன்னாடி நான் பார்த்த மொக்க படத்துக்கெல்லாம் நீங்க காசு கொடுக்கணும் சரியா கலையரசன்.
/ம். நன்றி.
வசிஷ்டர் வாயால பிரும்ம ரிஷி.//
தலைவரே.. ஆனாலும் ரொம்பத்தான்.. வேணாம்
//போலீஸ் ஸ்டேஷனிலும் மயில் சாமியின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் அருமை. மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்திருக்கிறார். //
ஆகா.. மயில்சாமிக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சுடுவார் போலருக்கே.
படம் ரிலிஸ் ஆனதே தெரியலையே...
nice விமர்ஸனம்..
இந்த கல்ட் படம்னா என்னா தலைவா??
தலை.. நீங்க சொன்னாதான் எனக்கு ஒ.கே.
இதுக்கு போயி கோவிக்கலாமா..??
முதல் பாதி ஜெட் வேகம் ஜி....
ஆனால் ரெண்டாம் பாதி சொதப்பி விட்டார்கள்....
//கதாநாயகனை ஏன் ஆண்மையில்லாதவனை போல காட்ட வேண்டிய அவசியம் என்ன?//
நீங்கள் கேட்ட கேள்வியும் படத்தின் மிக பெரிய மைனஸ்,
கடைசியில் அவர் தரும் விளக்கம் ஏற்று கொள்வதை இல்லை.
அப்போ என்கிட்டே பணம் இல்ல அதனாலே சுகம் இல்லை
என்பார்........ நீங்கள் சொல்வது போல் தண்டபாணி மற்றும்
காதல் காட்சிகள் வேஸ்ட் ஜி...
//போலீஸ் ஸ்டேஷனிலும் மயில் சாமியின் டயலாக் டெலிவரியும், பாடி லேங்குவேஜும் அருமை. மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்திருக்கிறார்.
அப்போ, நாம இயக்கப்போற படத்துல கண்டிப்பா மயில்சாமி இருப்பார்னு தோணுது..
படம் பாக்க ட்ரை பண்றேன் கேபிள். நச் விமர்சனம்.
ரைட்டு பாத்துரலாம்
சங்கரண்ணா..
///படத்தை பார்க்கலாம் போலிருக்கு. நிறை குறைகளோட நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க/// அப்படீன்னு உங்களைப் பாராட்டுவது எப்படி சரியாகும்.(பார்க்க முதல் காமெண்ட்).
ஏனென்றால்.. படத்தைப் பார்க்காம நீங்க நிறை குறை எல்லாம் சரியாதான் சொல்லியிருக்கீங்கன்னு எப்புடிதான் கண்டுபிடிக்கிறாங்களோ...
/ஆகா.. மயில்சாமிக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சுடுவார் போலருக்கே.
//
நிச்சயமாய் பாலாஜி..
/படம் ரிலிஸ் ஆனதே தெரியலையே...
nice விமர்ஸனம்..
இந்த கல்ட் படம்னா என்னா தலைவா??
//
நன்றி அசோக்.. கல்ட் என்றால் ஒரு விதமான வழக்கத்துக்கு மாறான..ஒரு படம் என்பது சினிமா மொழி..
/தலை.. நீங்க சொன்னாதான் எனக்கு ஒ.கே.
இதுக்கு போயி கோவிக்கலாமா..??//
தலைவரே.. உங்களை போய் கோவிச்சிக்க முடியுமா..? சும்மா சொன்னேன்.
/முதல் பாதி ஜெட் வேகம் ஜி....
ஆனால் ரெண்டாம் பாதி சொதப்பி விட்டார்கள்....
//கதாநாயகனை ஏன் ஆண்மையில்லாதவனை போல காட்ட வேண்டிய அவசியம் என்ன?//
நீங்கள் கேட்ட கேள்வியும் படத்தின் மிக பெரிய மைனஸ்,
கடைசியில் அவர் தரும் விளக்கம் ஏற்று கொள்வதை இல்லை.
அப்போ என்கிட்டே பணம் இல்ல அதனாலே சுகம் இல்லை
என்பார்........ நீங்கள் சொல்வது போல் தண்டபாணி மற்றும்
காதல் காட்சிகள் வேஸ்ட் ஜி..//
எனக்கு செகண்ட் ஹாப் ஒன்றும் சொதப்பியதாய் தெரியவில்லை. ஜெட்லி.. கொஞ்சம் திரைக்கதையை முடிக்க, ஒரிஜினலிலிருந்து வேறு ட்ராஅக் எடுத்திருந்ததால் குழம்பிவிட்டார்கள். என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு இரண்டாம் பாதி ஏதோ ஆங்கில படத்தில் பார்த்தது
போல் பிரமை.... வேறு ஒன்றும் இல்லை.
சரி படம் ஓடுமா?... உங்கள் கருத்து ஜி?
எனக்கு இரண்டாம் பாதி ஏதோ ஆங்கில படத்தில் பார்த்தது
போல் பிரமை.... வேறு ஒன்றும் இல்லை.
சரி படம் ஓடுமா?... உங்கள் கருத்து ஜி?
/எனக்கு இரண்டாம் பாதி ஏதோ ஆங்கில படத்தில் பார்த்தது
போல் பிரமை.... வேறு ஒன்றும் இல்லை.
சரி படம் ஓடுமா?... உங்கள் கருத்து ஜி?
//
அதான் டிஸ்கியில் சொல்லியிருக்கிறேனே.. எந்த படம் என்று. மக்களுக்கு இந்த படம் வெளியானதே தெரியவில்லை.. அப்படி தெரிந்து உள்ளே வந்தால் கண்டிப்பாய் ஒரு டீசெண்டான வெற்றி காத்திருக்கு ஜெட்லி
/படம் பாக்க ட்ரை பண்றேன் கேபிள். நச் விமர்சனம்//
பாத்துட்டு சொல்லுங்க சம்பத்
/ரைட்டு பாத்துரலாம்/
ஒகே.. ரைட்டு அத்திரி
ஏனென்றால்.. படத்தைப் பார்க்காம நீங்க நிறை குறை எல்லாம் சரியாதான் சொல்லியிருக்கீங்கன்னு எப்புடிதான்
கண்டுபிடிக்கிறாங்களோ..
எல்லாம் ஒரு நம்பிக்கையிலதான் கீத்
கேபிள் சஙக்ர்
tamil hot actress new sex pictures http://actresshotpix.blogspot.com/
சிந்தனை செய – பார்க்கலாம்
நன்றி
வழக்கம் போல நல்ல அறிமுகம்.படம் பார்த்து விட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்,ஷங்கர்.
நீங்க படம்பாக்குற செலவை சேத்து வச்சா சொந்தமா ஒரு படமே எடுத்துறலாம்ணே! அப்படியே நம்ம பிரம்மாண்ட எதிர்பார்ப்பா வந்து குப்பைக்கூடைக்குள் போன "லக்" படத்த பத்தி எப்போ எழுதப்போறிய? அந்தப் படத்த பார்த்த பிறகு தான் நம்ம பிரவீன்காந்தி, பேரரசு போன்றவர்களின் படங்களை எல்லாம் ஆஸ்காருக்கு அனுப்பிவைக்கலாம் போல என்ற எண்ணம் தோன்றியது எனக்கு.
/tamil hot actress new sex pictures http://actresshotpix.blogspot.com///
பார்க்கிறேன் ஹென்றி.. வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி
/வழக்கம் போல நல்ல அறிமுகம்.படம் பார்த்து விட்டு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்,ஷங்கர்.
//
பார்த்துட்டு சொல்லுங்க ஷண்முகப்பிரியன் சார்.
/நீங்க படம்பாக்குற செலவை சேத்து வச்சா சொந்தமா ஒரு படமே எடுத்துறலாம்ணே! அப்படியே நம்ம பிரம்மாண்ட எதிர்பார்ப்பா வந்து குப்பைக்கூடைக்குள் போன "லக்" படத்த பத்தி எப்போ எழுதப்போறிய? அந்தப் படத்த பார்த்த பிறகு தான் நம்ம பிரவீன்காந்தி, பேரரசு போன்றவர்களின் படங்களை எல்லாம் ஆஸ்காருக்கு அனுப்பிவைக்கலாம் போல என்ற எண்ணம் தோன்றியது எனக்கு.
///
ஒரு எழுத்தாளன் எப்படி நல்ல எழுத்தாளனாக நிறைய படிக்க வேண்டுமோ.. அதுபோல ஒரு நல்ல இயக்குனராக வேண்டுமென்றால் படங்கள் பார்கக் வேண்டும் என்பது என் அபிப்ராயம்..
நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் லக் பட விமர்சனம் விரைவில்..
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
/நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
நன்றி ரமேஷ்.. உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
அப்பாடா... இன்னொரு புதுமுக இயக்குநர் படம் ஹிட்டா.... எப்படியோ தமிழ் சினிமா வளர்ந்தா சரி... உங்கள நம்பி படம் பார்க்கிறேன் தல..
/அப்பாடா... இன்னொரு புதுமுக இயக்குநர் படம் ஹிட்டா.... எப்படியோ தமிழ் சினிமா வளர்ந்தா சரி... உங்கள நம்பி படம் பார்க்கிறேன் தல.//
பாருங்க குகன்.. பார்த்துட்டு சொல்லுங்க..
I ll try to see this movie. Thanks Sankar.
அந்த ரெண்டாவது ஸ்டில்.. படத்தில எப்படி?
/ ll try to see this movie. Thanks Sankar//
உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கோலிபையன்.
/அந்த ரெண்டாவது ஸ்டில்.. படத்தில எப்படி?
//
இந்த ஸ்டில்லுல இருக்கிற மாதிரி “நின்னு” விளையாடல.. கார்க்கி :(
விமர்ச்னம் வழக்கம் போல அருமை.
படத்தை பார்த்து விட்டு வந்து உங்கள் விமர்சனம் படிக்கலாம் என்று இருந்தேன்.
படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகமோ?
/விமர்ச்னம் வழக்கம் போல அருமை.
படத்தை பார்த்து விட்டு வந்து உங்கள் விமர்சனம் படிக்கலாம் என்று இருந்தேன்.
படத்தில் வன்முறை கொஞ்சம் அதிகமோ?
//
அப்படியொன்றுமில்லை அருண்.. பாராட்டுக்கு நன்றி
மீ த 50. படம் ஓகே ரகமா? சரி முடிந்தால் பார்க்கலாம்.!
Post a Comment