கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெரிய ரவுடியை சந்திக்கிறான். அவன் யார் என்று தெரியாமலே அவனை அடித்துவிட, அவனை அழிக்க வில்லன் அலைகிறான். கேட்டு, கேட்டு புளித்து போன கதையாய் தெரிந்தால் அதுக்கு ஒண்ணும் செய்யமுடியாது இதுதான் மலை..மலை திரைப்படத்தின் கதை.
பழனியில் அருண் விஜயும், பிரபுவும் இணைபிரியா சகோதரர்கள், எங்கே தனக்கு கல்யாணம் ஆனால் வருகிறவள் தன் தம்பியை பிரித்துவிடுவாளோ என்று எண்ணி திருமணமே முடிக்காமல் இருக்கும் பாசக்குழம்பு பிரபு. இரண்டு பேரும் பெரும் சண்டியர்கள், பிரபுவுக்கு பழைய சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி, கோயிலுக்கு வரும் வேதிகா வழ்க்கம்போல் ரவுடி ஹீரோவுக்கு ஜோடி, பார்த்த நாலாவ்து சீனில் காதல் செய்கிறார்கள், அவளை தேடி பழனியில் வேலையிழந்த அருண்விஜய், சென்னை வர, வ்ந்த இடத்தில் சென்னையின் நெ.1 தாதா பிரகாஷ்ராஜை சந்திக்க, வழக்கம் போல் முதல் சீனில் சண்டை போடாமல் பத்து சீன் தள்ளி, அதுவும் ஆளுக்கட்சி இடைதேர்தலுக்காக தன் பலத்தை காட்டும் ஊர்வலத்தில் அவர் என்று தெரியாம அருண்விஜய் அடித்துவிட, அவனை கொல்ல துடிக்கிறார் பிரகாஷ்.
கதையில் மிகப்பெரிய டிவிஸ்டாய் பிரகாஷ்ராஜின் இளமைகால நண்பராக பிரபு இருப்பது மட்டும் தான். மற்றபடி, வழக்கமான வில்லத்தனங்கள் செய்து, கஸ்தூரி இறந்து, அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து வில்லனை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ்.
அருண்விஜய்க்கு ஜாதகத்தில் என்ன கோளாறோ தெரியவில்லை. எவ்வளவு படம் நடித்தாலும் ஒன்றும் செல்ப் எடுக்க மாட்டேன்கிறது. பாவம் இம்முறை மாமனார் காசு. காசை காசு என்று பார்க்காமல் செலவு செய்திருக்கிறார்கள். ஒண்ணும் வேலைக்காகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அருண் விஜய் நன்றாக ஆடுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். இவருக்கு தேவை ஒரு நல்ல இயக்குனரும் ஸ்கிரிப்டும்தான் என்று தோன்றுகிறது. சரி அடுத்த படத்தில் பார்ப்போம்.
பிரபு இன்னும் ரெண்டு படத்தில் இம்மாதிரி நடித்தால், போரடித்து போய்விடுவார். நல்ல வேளை இவருக்கும், கஸ்தூரிக்கும் பாட்டு ஏதும் போடவில்லை. நாம் தப்பித்தோம்.
வேதிகாவுக்கு ஒண்ணும் பெரிசாய் ஆடுவது, தண்ணியில் நினைவது தவிர வேறு ஏதும் பெரிய வேலையில்லை. கச்சிதம்.
பிரகாஷ் ராஜ் வழக்கம் போல். வில்லத்தனம் செய்கிறார். எவ்வளவு தான் தெளிவான வில்லனாய் இருந்தாலும், க்ளைமக்ஸில் எல்லா வில்லனும் பிரி கேஜி ரேஞ்சுக்கே யோசிக்கிறார்கள்?.
கஞ்சா கருப்பு, சந்தானம், ஆர்த்தி என்று கும்பலாகவும், தனியாகவும் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். இதில் கொஞ்சமாச்சும் ஓகே ஆகிறவர் சந்தானம்தான். கஞ்சா கருப்பு மீண்டும் தனியாய் செல்ஃப் எடுக்க மாட்டார் என்பதை நிருபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, சண்டைகாட்சிகள் எல்லாமே சரியாய் இருந்தும் விழலுக்கு இறைத்த நீர். மணிசர்மாவின் இசை ரொம்பவே கொல்டி வாடை. ஏ.வெங்கடேஷின் வழக்கமான பார்முலா படம். பிரபு, பிரகாஷ்ராஜ் மேட்டரை தவிர தப்பித்தவறி ஏதுவும் வித்யாசமாய் செய்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்து அதில் வெற்றி அடைந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மலை.. மலை. – சி.ஜி. (Computer Graphics)
போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
60 comments:
show mudinchi vanthu udane pathiva?? mani mid nite 1 aakuthu ange.....
inthe mokkai padathukellam ivlo kashtapattu pathivu podureenga?? :)
/show mudinchi vanthu udane pathiva?? mani mid nite 1 aakuthu ange.....
inthe mokkai padathukellam ivlo kashtapattu pathivu podureenga?? :)//
இல்ல கயல்விழி.. பார்த்து ரெண்டுநாளாச்சு.. நான் வழக்கமா எழுதற நேரம்தான். முதல் வருகைன்னு நினைக்கிறேன்.மிக்க நன்றி..
முதல் வருகை எல்லாம் இல்ல...எப்பவும் வர்றது தான்....முதல் பின்னூட்டம்... :P
/முதல் வருகை எல்லாம் இல்ல...எப்பவும் வர்றது தான்....முதல் பின்னூட்டம்... :P
//
அப்ப அதுக்கு நன்றி.. :)
அப்ப தேராது
பாவம் அருண்விஜய் .....
நீங்களாவது சொல்லக்கூடாது ....
பாஸ் படம் நல்லாத்தான் இருக்கு. ஓபன் டாக் கூட பாசிடிவ் தான்
இதுவும் புடுகிச்த? நல்ல வேலை, உங்கள் விமர்சம் வந்த பிறகு பாக்கலாம் என்று இருந்தேன். நன்றி தலை. 3 மணி நேரம் மிச்சம்.
வேதிகாவவோட பங்களிப்பைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாமே.. ;-)
//பாவம் இம்முறை மாமனார் காசு. காசை காசு என்று பார்க்காமல் செலவு செய்திருக்கிறார்கள்//
நமக்கும் இப்படி ஒரு மாமனார் கிடைக்கனுமே....:)
சில மாதங்களாக உங்கள் பதிவை படித்துதான் அந்த படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்றேன்...
சமிப காலமாக தாமிழில் மொக்கை படமாதான் வருதொ?
இந்த மாத சுதந்திர தினத்துக்காவது நல்ல படம் வருமா.....:(
உங்களிடம் இருந்து ஒரு கலக்கள் தமிழ் படத்தின் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்...
Same old blood...Vithyasama ethuvum think panna matangala????
//சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி, //
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ச**னதை நீங்கள் பார்த்தீர்களா? ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது
//பாசக்குழம்பு பிரபு.//
வார்த்தை பிரயோகம் சூப்பர்
//இவருக்கு தேவை ஒரு நல்ல இயக்குனரும் ஸ்கிரிப்டும்தான் என்று தோன்றுகிறது.//
அப்புறம் நீங்க என்ன சார் இன்னும் வெயிட் பண்ணிகிட்டு கெளம்புங்க உங்க ஸ்கிரிப்ட் கட்ட தூக்கிகிட்டு.
//ஆடுவது, தண்ணியில் நினைவது தவிர வேறு ஏதும் பெரிய வேலையில்லை. கச்சிதம்.//
அப்போ நமக்கு வீட்டுக்கு வந்தப்புறம் நிறைய வேலை இருக்கும் போல
//பழைய சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி//
//பார்த்த நாலாவ்து சீனில் காதல் செய்கிறார்கள்//
//தெரியாம அருண்விஜய் அடித்துவிட, அவனை கொல்ல துடிக்கிறார் பிரகாஷ்//
//அண்ணனும் தம்பியுமாய் சேர்ந்து வில்லனை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ்//
//க்ளைமக்ஸில் எல்லா வில்லனும் பிரி கேஜி ரேஞ்சுக்கே யோசிக்கிறார்கள்?//
சங்கர் அண்ணே,
ஒரு படம் ஊத்திக்க மேல இருக்கறதுல ரெண்டு பாய்ன்டே போதும்...
உங்களை நினைச்சா பாவமா இருக்கு, சொந்த காசில படம் பாத்துட்டு ஆபத்பாந்தவனா எங்களையெல்லாம் காப்பத்துறீங்களே அத நினைச்சி...
தேங்க்ஸ் அண்ணா...
பிரபாகர்.
பில்ட் அப் கொஞ்சம் ஓவராக இருந்ததே ஷங்கர்இந்த படத்துக்கு ? இதுவும் ஊத்திகிச்சா? அருண் விஜய் அம்புட்டு தான். அவர் ஆரம்பத்தில் இருந்தே வருத்தி கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களாக நல்ல தேர்ந்த கதையா எடுத்து நடித்திருக்கலாம் , காத்திருந்து மசாலாவில் விழுந்தால் இப்படிதான்.
/அப்ப தேராது//
சந்தேகம்தான்.. அக்னி..
/பாவம் அருண்விஜய் .....
நீங்களாவது சொல்லக்கூடாது ....
//
வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.
/பாஸ் படம் நல்லாத்தான் இருக்கு. ஓபன் டாக் கூட பாசிடிவ் தான்
//
படம் உங்களுக்கு பிடிச்சிருக்கா ரமேஷ்.. டாக்கெல்லாம் ஒண்னும்மில்ல.. நான் பார்த்த கமலா தியேட்டரில் மொத்தமாய் 100 பேர் கூட இல்லை..
/இதுவும் புடுகிச்த? நல்ல வேலை, உங்கள் விமர்சம் வந்த பிறகு பாக்கலாம் என்று இருந்தேன். நன்றி தலை. 3 மணி நேரம் மிச்சம்.//
பழைய மசாலா படத்தை புது ஆர்டிஸ்ட் வைத்து பார்கக் விருப்பமென்றால் போங்க..
/வேதிகாவவோட பங்களிப்பைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லிருக்கலாமே.. ;-)
//
இதுக்கு மேல சொல்ல ஏதுமில்லை.. வேணும்னா பாத்துட்டு சொல்லுங்க..:)
/நமக்கும் இப்படி ஒரு மாமனார் கிடைக்கனுமே....:)//
எனக்கும் அதே மாதிரி வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
//சில மாதங்களாக உங்கள் பதிவை படித்துதான் அந்த படத்தை பார்ப்பதா இல்லையா என்று முடிவு செய்றேன்...
சமிப காலமாக தாமிழில் மொக்கை படமாதான் வருதொ?//
சிந்தனை செய் படம் பார்க்கலாம் சிண்டாக்
//இந்த மாத சுதந்திர தினத்துக்காவது நல்ல படம் வருமா.....:(//
வரணும் இல்லாட்டி தமிழ் சினிமாவின்
நிலை கொஞ்சம் கவலைக்கிடம்தான்.
உங்களிடம் இருந்து ஒரு கலக்கள் தமிழ் படத்தின் விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன்...
//
/Same old blood...Vithyasama ethuvum think panna matangala????//
புதுசா எதுவும் பண்ணமுடியாது முத்து.. புதுசா வேணும்னா பிரசண்ட் பண்ணலாம்.
/இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ச**னதை நீங்கள் பார்த்தீர்களா? ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது//
நீங்க வேணும்னா படததில பாருங்க..விசா
/வார்த்தை பிரயோகம் சூப்பர்//
நன்றி விசா
/அப்புறம் நீங்க என்ன சார் இன்னும் வெயிட் பண்ணிகிட்டு கெளம்புங்க உங்க ஸ்கிரிப்ட் கட்ட தூக்கிகிட்டு.//
பார்க்கலாம்
//ஆடுவது, தண்ணியில் நினைவது தவிர வேறு ஏதும் பெரிய வேலையில்லை. கச்சிதம்.//
அப்போ நமக்கு வீட்டுக்கு வந்தப்புறம் நிறைய வேலை இருக்கும் போல
//
:)
/சங்கர் அண்ணே,
ஒரு படம் ஊத்திக்க மேல இருக்கறதுல ரெண்டு பாய்ன்டே போதும்...
உங்களை நினைச்சா பாவமா இருக்கு, சொந்த காசில படம் பாத்துட்டு ஆபத்பாந்தவனா எங்களையெல்லாம் காப்பத்துறீங்களே அத நினைச்சி...
தேங்க்ஸ் அண்ணா...
பிரபாகர்.
//
நன்றி பிரபாகர்
/பில்ட் அப் கொஞ்சம் ஓவராக இருந்ததே ஷங்கர்இந்த படத்துக்கு ? இதுவும் ஊத்திகிச்சா? அருண் விஜய் அம்புட்டு தான். அவர் ஆரம்பத்தில் இருந்தே வருத்தி கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களாக நல்ல தேர்ந்த கதையா எடுத்து நடித்திருக்கலாம் , காத்திருந்து மசாலாவில் விழுந்தால் இப்படிதான்.
//
அவங்க என்னதான் படம் ஹிட்டுன்னு, மாத்தி, மாத்தி சொன்னாலும், ஒடுற தியேட்டர்ல போய் பார்த்தாதானே தெரியும். குறைந்த பட்சமாய் 8 கோடி செலவில் தயாரித்து இருப்பதாய் சொல்லும் தயாரிப்பாள்ர், விளம்பரம், விநியோகம் என்று எல்லாமே அவர் செலவுதான் அப்படி பார்த்தால் சுமார் 10 கோடிக்கு மேல் செலவு ஆக்யிருக்கும். இந்தபடம் வெற்றி படமென்றால் முதல் வாரத்தில் மட்டும் குறைந்த பட்சம் 11/2கோடியாவது மொத்த தமிழ்நாட்டில் வசூல் செய்திருக்க வேண்டும்.
கேபிள்..எப்படித்தான் பொறுமையா இத்தனை படம் பாக்குறீங்களோ?உங்களை சுப்புடுவுடன் ஒப்பிட்டு ஒரு பதிவு படித்தேன்..
/கேபிள்..எப்படித்தான் பொறுமையா இத்தனை படம் பாக்குறீங்களோ?உங்களை சுப்புடுவுடன் ஒப்பிட்டு ஒரு பதிவு படித்தேன்..
//
படம் பார்பது எனக்கு பிடித்தமானதுதான் தண்டோரா.. சுப்புடுவுடன் ஒப்பிட்டா.. ரொம்பத்தான் ஓவராய் இருக்கு.. லிங்க் கொடுங்க..
ம்ம்ம்ம், சரி, அப்புறம்.......
//நீங்க வேணும்னா படததில பாருங்க..விசா//
கஸ்தூரி நெஜமாவே சா.போ.மா ஆயிடிச்சா? என்ன பண்றது? இதை எல்லாம் படத்துல போய் என்னால பாக்க முடியாது. நீங்க சொன்னா சரி தான்.
எல்லாம் டைம் வரணும் கேபிள் சார். நம்ம விக்ரமுக்கு ஒரு சேது மாதிரி அருண் விஜைக்கு ஏதாவது சிக்கும்.
பிரபுவுக்கும் கஸ்துக்கும் பாட்டு போடாத்து ஆறுதல். அதெல்லாம் நம்ம கேப்டன் படத்துல தான் 3 தலைமுறையா இருந்தாலும் எல்லா தலைமுறைக்கும் ஒரு லாலாலா....பாட்டு இருக்கும். விக்ரமன் படம்னா சொல்லவே வேண்டாம்.
அண்ணே நன்றி!
அருணெல்லாம் சப்போர்ட்டிவ் ரோல தான்..
அருணுக்கு அப்புறம் விஜய் சேர்த்தா பெரிய ஆளா வருவாப்புலன்னு சொன்னாங்க?
நல்லா வருவாருருருரு பெரியயய...
///அப்புறம் நீங்க என்ன சார் இன்னும் வெயிட் பண்ணிகிட்டு கெளம்புங்க உங்க ஸ்கிரிப்ட் கட்ட தூக்கிகிட்டு\\\
அவ்வ்வ்வ்வ்வ்வ்
கேபிள்..எப்படித்தான் பொறுமையா இத்தனை படம் பாக்குறீங்களோ?
நல்ல விமர்சனம் ஜி...
ஆமாம் மேல உள்ள ஸ்டில்லில் அருன்விஜயுடன் பிகினி
உடையில் திரும்பி இருப்பது யாரு ஜி?
திரும்பி நிக்கிற மாதிரி ஸ்டில் கிடைக்கிலையா?
படம் ஓடுமா... பாவம்ங்க அருண்.. ரொம்பவே கஷ்டபட்டுடார்..
/ம்ம்ம்ம், சரி, அப்புறம்.....//
:)?
/கஸ்தூரி நெஜமாவே சா.போ.மா ஆயிடிச்சா? என்ன பண்றது? இதை எல்லாம் படத்துல போய் என்னால பாக்க முடியாது. நீங்க சொன்னா சரி தான்.//
அதை நான் வாயால சொலல் முடியாது.. நேர்ல சீ. தியேட்டர்ல போய் பாருங்க விசா
//எல்லாம் டைம் வரணும் கேபிள் சார். நம்ம விக்ரமுக்கு ஒரு சேது மாதிரி அருண் விஜைக்கு ஏதாவது சிக்கும். //
வந்தா நானும் சந்தோஷப்படுவேன்.
//பிரபுவுக்கும் கஸ்துக்கும் பாட்டு போடாத்து ஆறுதல். அதெல்லாம் நம்ம கேப்டன் படத்துல தான் 3 தலைமுறையா இருந்தாலும் எல்லா தலைமுறைக்கும் ஒரு லாலாலா....பாட்டு இருக்கும். விக்ரமன் படம்னா சொல்லவே வேண்டாம்.
//
போடலைன்னு சந்தோஷபட்டிட்டுருக்கேன். இந்த நேரத்தில் விக்ரமனை ஞாபக படுத்துறீங்களே..
/அண்ணே நன்றி//
நன்றி ரிப்பீட்டு எவனோ ஒருவன்.
/அருணெல்லாம் சப்போர்ட்டிவ் ரோல தான்.//
இல்ல கார்க்கி.. நல்ல ஆர்டிஸ்ட் தான் சரியான ஸ்கிரிப்ட் மாட்டின ஒரு கம்பேக் இருக்கு அவருக்கு
/அருணுக்கு அப்புறம் விஜய் சேர்த்தா பெரிய ஆளா வருவாப்புலன்னு சொன்னாங்க?
நல்லா வருவாருருருரு பெரியயய...
//
:)
/அவ்வ்வ்வ்வ்வ்வ்
கேபிள்..எப்படித்தான் பொறுமையா இத்தனை படம் பாக்குறீங்களோ?
//
தண்டோராவுக்கு சொன்ன பதில்தான் நாஞ்சில்நாதம்.
/நல்ல விமர்சனம் ஜி...
ஆமாம் மேல உள்ள ஸ்டில்லில் அருன்விஜயுடன் பிகினி
உடையில் திரும்பி இருப்பது யாரு ஜி?
திரும்பி நிக்கிற மாதிரி ஸ்டில் கிடைக்கிலையா?
//
நன்றி ஜெட்லி.. பிகினி பெண்ணை பார்க்கணும்னா.. அந்த பக்கம் போய் பாருஙக்..:)
ஓடற வாய்ப்பு குறைச்சல்னுதான் தோணுது.. கார்த்திக்
நன்றி அசோக்
//Cable Sankar said...
/நமக்கும் இப்படி ஒரு மாமனார் கிடைக்கனுமே....:)//
எனக்கும் அதே மாதிரி வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.//
இந்த மேட்டர் வீட்ல அண்ணிக்கு தெரியுமா?
உன்ன போல நாலு பேர் போதும்டா... ஓடுற படத்தையும் ஓட விடாம பண்ண...
ஏன்டா இந்த கொல வெறி ... நல்லாதானே போயிட்டிருக்கு
பிரபுவையும், பிரகாஷியும் வேஸ்ட் பண்ணிட்டானுங்களா? இதுக்காகவே டைரக்டரை மொத்தலாம்.
அப்புறம் அருண்விஜய்.? தாடியும், கிடாமீசையும்..
முதல்ல எந்த ஹீரோ மீசையை டிரிம்பண்ணி, ஒழுங்கா ஷேவ் பண்ணியிருக்காரோ அவர் படத்தைத்தான் பார்ப்பது என முடிவு செய்திருக்கிறேன்.
வேதிகாவுக்கு ஒண்ணும் பெரிசாய் ஆடுவது, தண்ணியில் நினைவது தவிர வேறு ஏதும் பெரிய வேலையில்லை. கச்சிதம்./////
அதுவா முக்கியம். எனக்கென்னவோ வேதிகா அழகுன்னு படுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
////முதல்ல எந்த ஹீரோ மீசையை டிரிம்பண்ணி, ஒழுங்கா ஷேவ் பண்ணியிருக்காரோ அவர் படத்தைத்தான் பார்ப்பது என முடிவு செய்திருக்கிறேன்./////
ஆதியை வழி மொழிகிறேன்.
ஹாட் ஸ்பாட்ல இருக்குறது கிழவி மாதிரி இருக்கு மாத்துங்க பாஸ்!
பாத்தேன். எனக்கு பிடிச்சிருந்தது.
/இந்த மேட்டர் வீட்ல அண்ணிக்கு தெரியுமா//
அண்ணி கிட்ட தான் முதல்ல சொன்னேன்.
//
உன்ன போல நாலு பேர் போதும்டா... ஓடுற படத்தையும் ஓட விடாம பண்ண...
ஏன்டா இந்த கொல வெறி ... நல்லாதானே போயிட்டிருக்கு
//
என்னடா ரவிகுமார்.. நான் நல்லாருக்குன்னு சொல்ற படம்மெலலம்டா நல்லாவாடா ஓடியிருகுடா.. நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் ஓடுற படம் ஓடும்டா ரவிகுமார்..
/முதல்ல எந்த ஹீரோ மீசையை டிரிம்பண்ணி, ஒழுங்கா ஷேவ் பண்ணியிருக்காரோ அவர் படத்தைத்தான் பார்ப்பது என முடிவு செய்திருக்கிறேன்.//
:)
/அதுவா முக்கியம். எனக்கென்னவோ வேதிகா அழகுன்னு படுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?//
பின்ன பிடிக்காம போகுமா.? என்னா பாஸூ ஒரு யூத் டேஸ்ட் யூத்துக்கு தெரியாதா..?
/ஹாட் ஸ்பாட்ல இருக்குறது கிழவி மாதிரி இருக்கு மாத்துங்க பாஸ்!
//
அது டெமிமூர் கெழவி மாறியிருக்கா..?
ம்ஹூம்
/பாத்தேன். எனக்கு பிடிச்சிருந்தது.//
ரைட்டு அப்ப ஓகே..ரமேஷ்
/
எல்லாமே சரியாய் இருந்தும் விழலுக்கு இறைத்த நீர்.
/
ரைட்டு!
:(
முன்னணி பத்திரிகையில் வெளிவரும் திரைவிமர்சனம் போல் இருக்கிறது உங்களின் திரைவிமர்சனம். கோடம்பாக்கத்தில் புதிய இதுவரை வெளிவராத காட்சியமைப்புகளோடு பல கதைகளோடு நிறைய பேர்கள் சுற்றுகிறார்கள் ஆனால் பழைய புளித்துப்போன காட்சியமைப்புகளோடு இருக்கும் கதைகளைத்தான் பட்மெடுக்கிறார்கள் என்ன செய்வது பார்த்துதொலைக்கவேண்டியது நம் தலையெழுத்தென்று சிலர் படம் பார்க்கச்செல்வதை நாம் எப்படி தடுக்க முடியும்.
நன்றி மங்களூர் சிவா..
/கோடம்பாக்கத்தில் புதிய இதுவரை வெளிவராத காட்சியமைப்புகளோடு பல கதைகளோடு நிறைய பேர்கள் சுற்றுகிறார்கள் ஆனால் பழைய புளித்துப்போன காட்சியமைப்புகளோடு இருக்கும் கதைகளைத்தான் பட்மெடுக்கிறார்கள் என்ன செய்வது பார்த்துதொலைக்கவேண்டியது நம் தலையெழுத்தென்று சிலர் படம் பார்க்கச்செல்வதை நாம் எப்படி தடுக்க முடியும்.
//
:)
மிக்க நன்றி இடைவெளிகள் உங்கள் பின்னூட்டத்திற்கும், முதல் வருகைக்கும்..
Post a Comment