அன்பான சேரன் அவர்களுக்கு,
உங்களது இயக்கத்தில் வந்த படங்களை ரசித்து பார்த்து வந்த ரசிகன் எழுதுவது. மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும்.
கொஞ்சம் யோசித்து பார்த்தால் படத்தில் உங்கள் மகனாய் வரும் ஆர்யன் ராஜேசை ப்ளாஷ் பேக் ஹீரோவாக்கி விட்டிருந்தால் அட்லீஸ்ட் தெலுங்கிலாவது டப்பிங் ரைட்ஸ் போயிருக்கும். அது சரி கதைக்கு வருவோம். பழைய ட்ரங்க் பெட்டியில் இறந்து போன அப்பாவின் பழைய பொக்கிஷமாய் கருதும் கடிதங்களை, மகன் படித்துபார்க்க, அவரின் காதல் கதை 1970களில் விரிகிறது.
உங்களின் தந்தை உடல் நலமில்லாமல் இருக்கும் போது பக்கத்து கட்டிலில் வந்து சேரும் வயதான பெண்ணின் மகளான நதிரா என்கிற முஸ்லிம் பெண்ணின் இலக்கிய அறிவை பார்த்தும், அழகை பார்த்தும் இன்ஸ்பயர் ஆகி அவளுக்கு ஒரு கடிதம் எழுதப்போக, அது தொடந்து காதாலாவது கவிதையே. அதற்கான கடிதங்களை வடித்தவர்களை பாராட்டியே தீரவேண்டும். கடிதம் எழுதும் பழக்கமே வழக்கொழிந்து போய்விட்ட இந்நாளில் அந்த கடிதத்திற்காக காத்திருக்கும் வலி உணர்ந்தாலே புரியும். அவளை தேடி மீண்டும் காரைக்கால் வரும் காட்சியின் நடுவில் ஒரு முஸ்ஸிம் கும்பல் இன்னொரு முஸ்ஸிம் இளைஞரை கத்தியால் குத்தி கொல்கிறது. சரி நீங்கள் அதை வைத்து ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்து தொங்கி போய் சரிந்து உட்கார்ந்திருந்த என்னை போன்ற ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தால், மீண்டும் தொபுகடீர் என்று சரிந்து விழ வேண்டி இருக்கிறது.
இப்படி எழுந்து, எழுந்து விழும் வலுவில்லாத சவலைப்பிள்ளை திரைக்கதையில், திருப்பமாய் நீங்கள் நினைத்த காட்சிகள் எல்லாம் 1970களிலேயே வந்து விட்டது. ஓ. சாரி.. இந்த கதை 70களில் நடப்பதுதானே. அப்ப சரிதான்.
அதன் பிறகு கதையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு நதிராவுக்கு என்ன ஆயிற்று என்பதுதான் . அதை ராஜேஷ் தேடி கண்டுபிடித்து உங்களின் முகவரியில்லா நதிராவுக்கான கடிதங்களை கொடுக்கும் காட்சி கண்களில் நீரை வரவழைத்தது. ஆனால் இந்த ஒரு காட்சியை காண மூன்று மணி நேரம் பொறுமை காக்க வேண்டுமென்பது. அதுவும் காசு கொடுத்து என்பது கொஞ்சம் ஓவரே. இந்த காட்சிக்கு பிறகு வரும் நதிரா திருமணம் செய்யாமலே இருந்திருக்கிறார் என்கிற விளக்க வியாக்யானமெல்லாம் ஏறவேயில்லை. காட்சிகளிலும் சரி. டெக்னிகலாய் வாய்ஸ் ஓவர்லாப்பும் மிக மெலிதாய்தான் கேட்கிறது. நதிராதான் வேறு ஊருக்கு மாற்றி போய்விடுகிறார். ஆனால் சேரன்(நீங்கள்) அதே ஊரில் அதே அட்ரஸில்தானே இருக்கிறீர்கள். நதிராவின் காதல் உண்மையாக இருந்திருந்தால் யார் மூல்மாவது, ஏன் நதிராவுக்கு உதவும் தோழியின் மூலமாவது உங்களுக்கு தகவல் சொல்லியிருக்க முடியுமே?. இம்மாதிரியான் கேள்விகள் ஏன் எழுகிறது என்றால் படம் ரொம்ப போரடிப்பதால் தான் இதையெல்லாம் கவனிக்க் வேண்டியிருக்கிறது.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. எனக்கு தெரிந்து உஙகளது படத்தில் ஒரு சிறந்த ஒளிப்பதிவை இந்த படத்தில் காண்கிறேன். அதே போல் சபேஷ் முரளியின் பாடல்களில் நிலா அது வானம் காற்று என்ற பாடலை தவிர எதுவும் தேறவில்லை என்றுதான் சொலல் வேண்டும். வைரபாலனின் கலை இயக்கம் குறிப்பிடதக்கதாய் அமைந்திருப்பது உங்களுக்கு பலம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த கால காதலை சொல்ல ராஜேஷ், அவனின் காத்லியுடன் ஏற்படும் சம்பாஷணைகளை வைத்து பார்த்தால் நீங்கள் யூத்தாக ஃபீல் செய்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. கதாநாயகியின் முகத்தை பார்பதற்கு முழுநிலவை காட்ட மாட்டாயா என்பது போன்ற புராண இலக்கிய வசனங்கள் எதற்கு. ஏதோ 300 வருஷத்து பீரியட் பிலிம் போன்ற எண்ணம் வந்துவிட்டதோ உங்களுக்கு. அதே போல் நதிராவின் அப்பா கல்யாணத்துக்கு சரி என்று ஒத்துக் கொள்வதெல்லாம் உட்டாலக்கடி என்பது இப்போது படம் பார்க்கும் 2 வயது குழந்தை கூட சொல்லிவிடும்.
படத்தின் நல்லாருக்கு என்பதற்கான காட்சிகளே இலலியா? என்று நீங்கள் என்னிடம் கேட்பது தெரிகிறது. இருக்கிறது. நிலா பாடலில் வரும் மாண்டேஜ் காட்சிகள், பத்மபிரியாவின் அழகு முகத்தின் க்ளோசப்புகள், நீங்கள் அனுப்பும் காதல் கடிதங்கள் மேல் சாப்பா குத்தும் போது வரும் சின்ன ஒலிப்பதிவின் வலி. தன்னுடய கடிதம் தன் காதலியிடம் ஒழுங்காய் போய் சேருகிறதா என்று போஸ்ட் பாக்ஸிலிருந்து போஸ்ட் ஆபீஸ் வரை தொடரும் காட்சி, ஆர்யன் ராஜேஷ் தன்னுடய நம்பரை நண்பரிடம் சொல்லும் போது அவரின் காதலி அவருக்கு முன்பே முணுமுணுப்பாய் சொல்வது ஒளிப்பதிவு, அந்த காதல் கடிதங்கள். மற்றும் நீங்கள் வராத நடிக்காத கடைசி காட்சிகள். மட்டுமே.
இயக்குனர் சேரன் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் தயை கூர்ந்து தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இனிமேலாவது உங்களுக்காக கதை தேடாமல் வேறு நலல் நடிகரை வைத்து நல்ல படைப்புகளை கொடுக்க பாருங்கள்.
இப்படிக்கு
நிச்சயமாய் அடுத்த படத்திலாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்
டிஸ்கி
கொரியன் படமான க்ளாசிக்கின் ஆரதழுவல் என்று நண்பர் சொன்னார் நான் இன்னும் பார்க்கவில்லை.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
121 comments:
நடிகர் சேரன் மீது உங்களுக்கென்ன அவ்வளவு கோபம் ?
நல்ல வேலை தப்பிதேன்....
கேபிள் சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு ஜனரஞ்சக பதிவெழுதுற நீங்க மூணுலட்ச்சம் ஹிட்ஸ் வந்த உங்க பதிவுல இந்த மாதிரி ஹாட்டு ஸ்பாட்டுன்னு ஒரு பகுதி தேவையில்லாம ஏன் சார் சக பெண் பதிவர்கள் தங்கள் பதிவுக்கு வந்து திடீர்ன்னு சிறு முகச்சுளிவு அல்லது மனதிற்க்குள்ளே திட்டுவாங்களே சார்
சிலரோட அற்ப சந்தொசங்களுக்கு பலரோட வசவுகளை நீங்க வாங்கிக்க வேணாம் சார் எனக்கு பிடிச்ச பதிவர்களில் நீங்களும் ஒருத்தர் அப்படி என்னோட ஆஸ்தான பதிவரை கூட இருக்குற நண்பிகளோ நண்பர்களோ எங்கிட்ட உங்களப்பத்தி திட்டும்போது கஷ்டமா இருக்கு சார்
தப்பா எதும் சொல்லிருந்தா மனிச்சுக்கோங்க சார்
நீங்க பதிவு எழுதுறதுக்குள்ள பொக்கிஷம் பாக்கனும்னு இருந்தேன்.... இனி எங்க பாக்கறது... மாய கண்ணாடி ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்களே... ஆட்டோக்ராப் ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்....
வணக்கம் Cable Sankar
என்ன உண்மையா,
”மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? ”கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும்”
நிச்சயமான உண்மை, சேரன் போன்ற இயக்குனர்கள் தோற்க சூடாது என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது
ஏன் இந்த கொல வெறி யூத்து??
நேரம் கிடைக்கும் பொது நம்ம வீட்டுக்கும் வந்து கருத்து சொல்லிட்டு போங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஆவ்வ்வ்வ்வ்வ்
எக்ஸ்பெட்டேஷ்ன் லிஸ்ட்டில் இருந்த படம் சார்..இதுவுமா?
நல்ல வேளை,சொன்னீங்க.. நான் தப்பிச்சேன்.. மீ தி எஸ்கேப்பு..
அன்பு அண்ணா,
பொக்கிஷம் விமர்சனத்தை ஆவலாய் எதிர்பார்த்திருக்க, அதிகாலை சட்டெனெ ஏதோ கனவின் பின் விழித்து கணனியை கை தடவ, கண்டேன் உமது கடிததத்தை விமர்சனமாய்.
எனது பார்வையில் சேரன் ஒரு நல்ல இயக்குனர், அவர் நடிக்காத வரையில். இந்த கருத்தினையே நீங்கள் வலுவாய் வற்புறுத்தியது சந்தோஷத்தை அதிகரித்தது.
குறைகளை நமக்கு மிகவும் பிடித்தவர்களிடம் காணும்போது நிறைய வருத்தமாயிருக்கும். அந்த வகையில் சேரன் மூலம் மிகுந்த வருத்தமும், நிறைகளால் அதீத சந்தோஷம் கிடைக்கும், அது தங்களின் தெளிவான நேர்மையான விமர்சனம் மூலமும் கலந்து வித்தியாசமாய் பெற்றிருக்கிறேன்.
என்ன சொல்ல, ஒவ்வொரு முறையும் உங்களை பாராட்டுவதால் படிப்பவர்களுக்கும் ஒருவித சலிப்பு ஏற்படும் என்பதால் இத்தோடு விடுகிறேன்.
இருப்பினும், சொதப்பலையும் பார்த்துதான் ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது.
உங்களுக்கும் வலைஞர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். தாய் மண்ணே வணக்கம்.
பிரபாகர்.
Neengal solli iruppathu 100% sari sankar. Cheran is a good director and not an actor.
BTW Pokkisham release aayiducha? illa preview pathingala?
//Neengal solli iruppathu 100% sari sankar. Cheran is a good director and not an actor.
BTW Pokkisham release aayiducha? illa preview pathingala?//
முத்து,
அண்ணன் சொந்த காசில சோகத்த தேடிக்கிறதாலதான் ரொம்பவும் துணிச்சலா புலம்பறாப்ல... அண்ணா, சாரி உங்க வேலைய நான் செஞ்சிட்டேன்...
பிரபாகர்.
நீங்க மாறுபட்டு நிக்கிறீங்கண்ணே...
நீங்க மாறுபட்டு நிக்கிறீங்கண்ணே...
ayyo ennoda 380 booking pochchaaaa. Im cryingggggggggggggggggggggggggg
நடிகராக சேரன் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார்.
திரைக்கதையும் சொதப்பல் என்றால்?
கோவிந்தோவா?
Sankar, Just arrived in chennai, thought of watching the movie in theater..thanks....you saved me from 3 hours of sorrow as well as threat of swine flue as well.
/
நதிராதான் வேறு ஊருக்கு மாற்றி போய்விடுகிறார். ஆனால் சேரன்(நீங்கள்) அதே ஊரில் அதே அட்ரஸில்தானே இருக்கிறீர்கள். நதிராவின் காதல் உண்மையாக இருந்திருந்தால் யார் மூல்மாவது, ஏன் நதிராவுக்கு உதவும் தோழியின் மூலமாவது உங்களுக்கு தகவல் சொல்லியிருக்க முடியுமே?. இம்மாதிரியான் கேள்விகள் ஏன் எழுகிறது என்றால் படம் ரொம்ப போரடிப்பதால் தான் இதையெல்லாம் கவனிக்க் வேண்டியிருக்கிறது.
/
avvvvvvvvv
Escape ஆகிடுடா சிவா
:))
ஒவ்வொரு ரசிகனின் கடிதம் சங்கர் சார் சேரனை இப்படி நடிக்க தூண்டியது யார் என்று உங்களுக்கு தெரியும் தானே அது தான் தமிழ் சினிமா நல்ல திறமைசாலிகளை மழுங்க வைத்துவிடுவார்கள் .இன்னும் பல நல்ல இயக்குனர்குளும் சில நடிகர்களால் இப்போது நடிக்க வந்துவிட்டனர் என்பது சற்று வருத்தமே .
நண்பர் ஒருவர் ஹாட் ஸ்போட் பற்றி பின்னோடமிடிருந்தார் அதை பற்றிய என் கருத்து வேறு இருந்தாலும் அவர் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஹாட் ஸ்போட் ஐ இன்னும் கீழ இறக்கி விடுங்கள் feedjit இருக்கும் இடத்தில அதை இறக்கி விடுங்கள் .
சரிதான் ,அப்போ இந்த படமும் அவுட்டா?
சேரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .
present sir...
Yours, is nice a letter.
தலைவரே.. என்னாது எல்லாத்தையும் இப்டி போட்டு கலாச்சா எப்டி?
படம் பாக்கலாம்ன்னு சொல்லிறீங்களா.. இல்ல.. வேனாம்றீங்களா...
(என் மொபைல தொலைச்சுபுட்டேன்: new no: 9962238002)
However promising the promo stills might be,do not go for a Cheran movie.His downfall started in "Autograph"(A contradiction here.Populace has it that "Autograph" is his best work).IMO "Vetri Kodi kattu" remains his only significant movie."Porkalam" had good intentions."Desiya Geetham" was a Shankar-like project directed by a Thankar Bachan-like guy."Thavamai Thavamirundhu" was mediocre melodrama.And now "Pokkisham" is his epitaph.
Cheran has gone to stone ages of film-making using Time Machine and he has lost the remote control to come back!
RIP Cheran!
www.theumeshblog.blogspot.com
அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.
ipoathaikku attendance.
neraya iruku solrathuku varean.
//கேபிள் சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு ஜனரஞ்சக பதிவெழுதுற நீங்க மூணுலட்ச்சம் ஹிட்ஸ் வந்த உங்க பதிவுல இந்த மாதிரி ஹாட்டு ஸ்பாட்டுன்னு ஒரு பகுதி தேவையில்லாம ஏன் சார் சக பெண் பதிவர்கள் தங்கள் பதிவுக்கு வந்து திடீர்ன்னு சிறு முகச்சுளிவு அல்லது மனதிற்க்குள்ளே திட்டுவாங்களே சார் //
அப்படி யாரும் இன்று திட்டுவதில்லை. பெண்கள் இரசிக்கிறார்கள்.
ஏற்கனவே ரா.தே.சீதையில் தான் ஒரு நடிப்புப்புலி என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் அந்த திக்கித்திக்கி பேசும் காட்சியில் கமலஹாசனே இவரிடம்தான் நடிப்பைக்கற்கவேண்டும். இந்த லட்சணத்தில் மெலிதான காதல் வேறயா? வெளங்கிரும்.
இந்த முத்தல் கேஸுக்காகவே நான் இந்தப்படத்தை பார்ப்பதாக இல்லை.
naan nethuthan "korean Movie First half parthen neenga ungaloda vimrsanathe patha andha padamthan indha padam madri theriudhu
" adhule magal" idhule magan "
dhosaiya theripi pottotaru"
ரைட்டு.
பொக்கிஷம் சேரனுக்கு அல்ல
இந்த படத்தை பாக்காதவங்களுக்கு
பண மற்றும் நேர விரயம் மிச்சம். நன்றி.
ஆவ்வ்வ்வ்வ்வ் பதிவை படிக்கும் பொழுதே தூக்கம் வருதே:) சூப்பர் படமாக இருக்கும் போல!
தாயை கூர்ந்து தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.////
அது தயை கூர்ந்து தலைவரே!
இப்படிக்கு, நக்கீரன் பரம்பரையின் மகள்வழி மிச்சம்!
//நிச்சயமாய் அடுத்த படத்திலாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்
//
ஹீரோவா நடிக்ககூடாது என்ற கோரிக்கைதானே தல
நல்ல ஆணித்தரமான கருத்துக்களை கொண்ட விமர்சனம்.
இது போல படிச்சு நாளாச்சு
voted in tamilish and tamilmanam
உங்கள் ஆதங்கமே எனதும். சேரன் நடிக்காமல் இயக்குனராகவே இருந்தால் மட்டுமே அவரால் வெற்றியடைய முடியும் இல்லெயெனில் .......பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்னதான் செய்ய முடியும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சேரன் மேல் இருந்த ஈர்ப்பால் இன்று இரவு போகலாம் என்றி இருந்தேன்...
ம்ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம் போகமாட்டேன்
மிகவும் சரியான விமர்சனம்
சேரன் நடித்தால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் இயக்குனர்ரோடு நிறுத்திக்(கொல்ல) வேண்டும்.
இன்னும் படம் பார்க்கவில்லை,ஷங்கர். ஆனால் உங்கள் விமர்சனம் எனது ரசனையோடு எப்போதுமே 100% ஒத்துப் போகும்.
படம் பார்த்துவிட்டுப் பேசுகிறேன்.
ஒரு நாள் பொறுத்து பதிவ படிச்சுட்டு தப்பிச்சிருந்திருக்கலாம்.நேத்து சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டு பாதியிலேயே எஸ்கேப்.விதி வலியது.சேரன் மாதிரி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.காசு கொடுத்து படம் பாக்க வரவங்களுக்குன்னு சில உரிமைகளும் சில எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்பதை இவர்கள் ஏன் உணர்வதே. இல்லை? என்ன இலக்கிய தரமோ?என்ன இழவோ?நாசமா போங்கடா!
நான் படம் பாத்துட்டேன் சங்கர்.. எனக்கு படம் பிடித்திருந்தது..
பொக்கிஷம் மீதான உங்கள் விமர்சனத்தைப் பொறுத்தவரையில்..
>> கதாநாயகன் என்பவன் அழகு ததும்பிய மன்மதனாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன??
இன்றிருக்கும் மற்ற கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது, சேரனது முகம் மிகவும் லட்சணமாகவே இருக்கிறது என்பது என் கருத்து..
>> நடிப்பில் வேண்டுமானால் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம்..
ஆனால் மறுபடியும் -> நீங்களே சொல்லுங்கள் .. இப்போதிருக்கும் எந்த ஹீரோ (வெகு சிலரைத்தவிர) நவரசங்களையும் காட்டி நடிக்கிறார் என்று??
//தாயை கூர்ந்து// should be தயை கூர்ந்து
Please remove that Hot spot page because I can't able to view this site in public.
If you not willing to remove this page means at least please put that page in bottom.
It's my request.
//Thirumalai Kandasami said...
//கேபிள் சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு ஜனரஞ்சக பதிவெழுதுற நீங்க மூணுலட்ச்சம் ஹிட்ஸ் வந்த உங்க பதிவுல இந்த மாதிரி ஹாட்டு ஸ்பாட்டுன்னு ஒரு பகுதி தேவையில்லாம ஏன் சார் சக பெண் பதிவர்கள் தங்கள் பதிவுக்கு வந்து திடீர்ன்னு சிறு முகச்சுளிவு அல்லது மனதிற்க்குள்ளே திட்டுவாங்களே சார் //
அப்படி யாரும் இன்று திட்டுவதில்லை. பெண்கள் இரசிக்கிறார்கள்
///
அப்படியா நண்பா
அப்போ உங்க வீட்டு வரவேற்பறையிலோ இல்ல வீட்டின் முகப்பிலோ இது மாதிரி படம் மாட்டிக்கோங்க வீட்டுக்கு வரவங்க எல்லா பெண்களும் ரசிப்பாங்க
வீட்டுக்கு வர்ற் சொந்தக்காரவங்க எண்ணிக்கையாவது கூடும்?!
//
Please remove that Hot spot page because I can't able to view this site in public.
If you not willing to remove this page means at least please put that page in bottom.
It's my request. //
அதுக்குள்ள பல்டி அடிச்சுட்டீங்களே ந்ண்பா
/நடிகர் சேரன் மீது உங்களுக்கென்ன அவ்வளவு கோபம் ?
//
நடிகர் சேரன்??????????
/நல்ல வேலை தப்பிதேன்...//
முடிஞ்சா ஒரு நடை போய் பாத்துட்டு வாங்களேன் ஸ்ரீ.. இப்ப ஒரு அரை மணி நேர படம் எடிட் பண்ணிட்டாங்களாம். அது முன்ன விட கொடுமையா இருக்காம்.
/கேபிள் சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு ஜனரஞ்சக பதிவெழுதுற நீங்க மூணுலட்ச்சம் ஹிட்ஸ் வந்த உங்க பதிவுல இந்த மாதிரி ஹாட்டு ஸ்பாட்டுன்னு ஒரு பகுதி தேவையில்லாம ஏன் சார் சக பெண் பதிவர்கள் தங்கள் பதிவுக்கு வந்து திடீர்ன்னு சிறு முகச்சுளிவு அல்லது மனதிற்க்குள்ளே திட்டுவாங்களே சார் //
அவ்வளவு கேவலமான படஙக்ளை நான் தெரிவு செய்ய்வதில்லை. நண்பா..
//சிலரோட அற்ப சந்தொசங்களுக்கு பலரோட வசவுகளை நீங்க வாங்கிக்க வேணாம் சார் எனக்கு பிடிச்ச பதிவர்களில் நீங்களும் ஒருத்தர் அப்படி என்னோட ஆஸ்தான பதிவரை கூட இருக்குற நண்பிகளோ நண்பர்களோ எங்கிட்ட உங்களப்பத்தி திட்டும்போது கஷ்டமா இருக்கு சார்//
செக்ஸ் என்பது அற்பமான விஷயமில்லை என்பது என் கருத்து நண்பா..
//தப்பா எதும் சொல்லிருந்தா மனிச்சுக்கோங்க சார்//
சேச்சே இது தப்பா நினைக்க என்ன இருக்கு வசந்த் உங்க கருத்தை என் மேல் இருக்கும் ஒரு அபிப்பிராயத்தினால் எழுதியிருக்கிறீர்கள்.. அது உங்கள் உரிமையும், கடமை என்றே நினைக்கிறேன். எனக்கு மிக்க சந்தோசம் வசந்த். முடிந்த வரை படங்களின் குவாலிட்டியை பார்த்து போட முயற்சி செய்கிறேன். நன்றி நண்பா. மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
/நீங்க பதிவு எழுதுறதுக்குள்ள பொக்கிஷம் பாக்கனும்னு இருந்தேன்.... இனி எங்க பாக்கறது... மாய கண்ணாடி ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்களே... ஆட்டோக்ராப் ரேஞ்சுக்கு எதிர்பார்த்தேன்...//
அடடா.. தப்பீச்சிட்டீங்களே சுகுமார்...
/நிச்சயமான உண்மை, சேரன் போன்ற இயக்குனர்கள் தோற்க சூடாது என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது
//
ஆமாம் வெட்டிப்பையன்.. அந்த எண்ணத்தினால்தான் இவ்வளவு அழுத்தமான ஒரு கடிதம்
/ஏன் இந்த கொல வெறி யூத்து??
நேரம் கிடைக்கும் பொது நம்ம வீட்டுக்கும் வந்து கருத்து சொல்லிட்டு போங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//
எது கொலவெறி.. படம் பாருங்க.. கண்டிப்பா பாக்கிறேன்
/ஆவ்வ்வ்வ்வ்வ்
எக்ஸ்பெட்டேஷ்ன் லிஸ்ட்டில் இருந்த படம் சார்..இதுவுமா?
//
அக்னி பேசாம லவ் ஆஜ் கல் படம் பாருங்க.. அது சூப்பர்.
/நல்ல வேளை,சொன்னீங்க.. நான் தப்பிச்சேன்.. மீ தி எஸ்கேப்பு//
நன்றி கார்ஸ்பெக்.
/பொக்கிஷம் விமர்சனத்தை ஆவலாய் எதிர்பார்த்திருக்க, அதிகாலை சட்டெனெ ஏதோ கனவின் பின் விழித்து கணனியை கை தடவ, கண்டேன் உமது கடிததத்தை விமர்சனமாய்.
எனது பார்வையில் சேரன் ஒரு நல்ல இயக்குனர், அவர் நடிக்காத வரையில். இந்த கருத்தினையே நீங்கள் வலுவாய் வற்புறுத்தியது சந்தோஷத்தை அதிகரித்தது.
குறைகளை நமக்கு மிகவும் பிடித்தவர்களிடம் காணும்போது நிறைய வருத்தமாயிருக்கும். அந்த வகையில் சேரன் மூலம் மிகுந்த வருத்தமும், நிறைகளால் அதீத சந்தோஷம் கிடைக்கும், அது தங்களின் தெளிவான நேர்மையான விமர்சனம் மூலமும் கலந்து வித்தியாசமாய் பெற்றிருக்கிறேன்.
என்ன சொல்ல, ஒவ்வொரு முறையும் உங்களை பாராட்டுவதால் படிப்பவர்களுக்கும் ஒருவித சலிப்பு ஏற்படும் என்பதால் இத்தோடு விடுகிறேன்.
இருப்பினும், சொதப்பலையும் பார்த்துதான் ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது.
உங்களுக்கும் வலைஞர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். தாய் மண்ணே வணக்கம்.
//
நன்றி பிரபாகர்.. உங்களுக்கு அங்குள்ள இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
//Neengal solli iruppathu 100% sari sankar. Cheran is a good director and not an actor.
BTW Pokkisham release aayiducha? illa preview pathingala?//
நன்றி முத்து. படத்தை ப்ப்ரிவியூ வந்திச்சு தியேட்டலதான் பார்த்தேன்.
/நீங்க மாறுபட்டு நிக்கிறீங்கண்ணே...
//
எதுல பீர்..?
/yyo ennoda 380 booking pochchaaaa. Im cryingggggggggggggggggggggggggg//
ரமேஷ்ங்கிற நல்லவஙக்ள கடவுள் இப்படித்தான் சோதிப்பான்..
/நடிகராக சேரன் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார்.
திரைக்கதையும் சொதப்பல் என்றால்?
கோவிந்தோவா?
//
பாவம் ஜபக்.
/Sankar, Just arrived in chennai, thought of watching the movie in theater..thanks....you saved me from 3 hours of sorrow as well as threat of swine flue as well.//
நன்றி சுபா..உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்..
/avvvvvvvvv
Escape ஆகிடுடா சிவா
:))
//
:)))))
/ஒவ்வொரு ரசிகனின் கடிதம் சங்கர் சார் சேரனை இப்படி நடிக்க தூண்டியது யார் என்று உங்களுக்கு தெரியும் தானே அது தான் தமிழ் சினிமா நல்ல திறமைசாலிகளை மழுங்க வைத்துவிடுவார்கள் .இன்னும் பல நல்ல இயக்குனர்குளும் சில நடிகர்களால் இப்போது நடிக்க வந்துவிட்டனர் என்பது சற்று வருத்தமே .
நண்பர் ஒருவர் ஹாட் ஸ்போட் பற்றி பின்னோடமிடிருந்தார் அதை பற்றிய என் கருத்து வேறு இருந்தாலும் அவர் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஹாட் ஸ்போட் ஐ இன்னும் கீழ இறக்கி விடுங்கள் feedjit இருக்கும் இடத்தில அதை இறக்கி விடுங்கள் .
//
நடிகர்கள் கால்ஷீட் கொடுக்காததால் தாஙக்ள் நடிகக் வந்ததாய் சொல்வதெல்லாம் உட்டாலக்கடி.. அப்படி அந்த படத்திற்கு அவர்கள் நடித்திருந்தால் நல்ல இயக்குனராய் இருந்திருந்தால் அடுத்த படத்திற்கு கேரக்டருக்கு ஏற்ற நடிகராய் அல்லவா போட்டிருக்க வேண்டும். ஸ்கிரின் ப்ரெசென்ஸில் கிடைக்கும் புகழ் இயக்கும் போது கிடைக்கும் புகழும், காசும் மிக அதிகம் ஜோ..
/சரிதான் ,அப்போ இந்த படமும் அவுட்டா?
சேரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .
//
:(
/present sir...
Yours, is nice a letter.//
என்ன நைனா என்ன ஆச்சு இவ்வூளூண்டு பின்னூட்டம், படம் பாத்திட்டீங்களா..?
/தலைவரே.. என்னாது எல்லாத்தையும் இப்டி போட்டு கலாச்சா எப்டி?
படம் பாக்கலாம்ன்னு சொல்லிறீங்களா.. இல்ல.. வேனாம்றீங்களா...
(என் மொபைல தொலைச்சுபுட்டேன்: new no: 9962238002)
//
அது உங்க இஷ்டம் அசோக்.. ஆப்பை நாமே வாங்கி சொருகிறதுன்னா ரொம்ப பிடிக்குமோ..? எந்த கடையில் தொலைச்சீங்க..
/However promising the promo stills might be,do not go for a Cheran movie.His downfall started in "Autograph"(A contradiction here.Populace has it that "Autograph" is his best work).IMO "Vetri Kodi kattu" remains his only significant movie."Porkalam" had good intentions."Desiya Geetham" was a Shankar-like project directed by a Thankar Bachan-like guy."Thavamai Thavamirundhu" was mediocre melodrama.And now "Pokkisham" is his epitaph.
Cheran has gone to stone ages of film-making using Time Machine and he has lost the remote control to come back!
RIP Cheran!
www.theumeshblog.blogspot.com//
எனக்கும் தவமாய் தவமிருந்து அவ்வளவாய் ஈர்க்கவில்லை. டிவி சீரியல் போல இருந்தது. முதல் வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி
/அரசியல்வாதிகளும் சரி, சினிமாக்காரர்களும் சரி தங்கள் இமேஜ் குறையும் போது எடுக்கும் அவதாரம் தான் மத அடிப்படையிலான சமூக சிந்தனைகள்.இதில் சேரனும் விதிவிலக்கல்ல.இதில் சேரன் காதலையும் வாழவைக்கவில்லை.மதநல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. ஒன்று செய்திருக்கலாம். இந்த படப்பெட்டியையும் பொக்கிஷமாக நினைத்து மூடியே வைத்து சென்றுவிட்டால் 40வருடம் கழித்து போலி மததீவிரவாதமும், போலி அரசியல், சினிமா(தீவிர)வாதிகளும் இல்லாத மனித நேயம் மிக்க உலகில் இந்த படம் வருங்கால காமடியாக அமைந்திருக்கும்.//
எனக்கென்னவோ நீங்கள் சொல்வது போல் தோன்றவில்லை ஷாஜகான்.. ஏனென்றால் காதல் என்பது மதம்\,ஜாதி எல்லாவற்றையும் தாண்டி ஏற்படுவது.. அது மனித உணர்வுகளின் முக்கிய ஆதாரம்.
/poathaikku attendance.
neraya iruku solrathuku varean.//
வாங்க விசா..
/அப்படி யாரும் இன்று திட்டுவதில்லை. பெண்கள் இரசிக்கிறார்கள்.
//
:)
/ஏற்கனவே ரா.தே.சீதையில் தான் ஒரு நடிப்புப்புலி என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் அந்த திக்கித்திக்கி பேசும் காட்சியில் கமலஹாசனே இவரிடம்தான் நடிப்பைக்கற்கவேண்டும். இந்த லட்சணத்தில் மெலிதான காதல் வேறயா? வெளங்கிரும்.
இந்த முத்தல் கேஸுக்காகவே நான் இந்தப்படத்தை பார்ப்பதாக இல்லை//
எப்படியும் சேரன் படத்தை பார்க்க போறதில்லை.. அதுக்கு ஒரு காரணம் வேற ஏறியாச்சு.. ரைட்டு..
.naan nethuthan "korean Movie First half parthen neenga ungaloda vimrsanathe patha andha padamthan indha padam madri theriudhu
" adhule magal" idhule magan "
dhosaiya theripi pottotaru"//
ஆமாம் பிஸ்கோத்து.. நான் இன்னும் முழுசா பாத்து முடிக்கல.. அதுனால்தான் சொலல்ல்.. இருந்தாலும் அந்தபடத்தில் இருந்த உணர்வு இந்த படத்தில் கொஞ்சம் கூட இல்லை பிஸ்கோத்து.
/ரைட்டு.//
நன்றி தராசண்ணே
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி அறிவிலி.
/ஆவ்வ்வ்வ்வ்வ் பதிவை படிக்கும் பொழுதே தூக்கம் வருதே:) சூப்பர் படமாக இருக்கும் போல//
பதிவு போரடிக்குது என்பதை உள்குத்தாய் சொன்னதை வன்மையாய் கண்டிக்கிறேன். குசும்பரே..
/அது தயை கூர்ந்து தலைவரே!
இப்படிக்கு, நக்கீரன் பரம்பரையின் மகள்வழி மிச்சம்!
//
யோவ் அவனவன் படம் பாத்துட்டு நாலு பேருக்கு நலல்து பண்ண அவசர அவசரமா ப்திவி போட்டு காப்பாத்தினா.. குத்தம் கொறை பாத்திட்டு.. இருந்தாலும் மாத்திட்டேன் நக்கீரரே.
/ஹீரோவா நடிக்ககூடாது என்ற கோரிக்கைதானே தல//
முடிந்தால் நலல திரைக்கதையோடு ஒரு படத்தையும் சேர்த்துதான் அபு
/நல்ல ஆணித்தரமான கருத்துக்களை கொண்ட விமர்சனம்.
இது போல படிச்சு நாளாச்சு
voted in tamilish and tamilmanam//
மிக்க நன்றி கார்த்திகேயனும் அறிவுதேடலும்.. உங்கள் ஓட்டுக்கும் சேர்த்து.. நீங்க ரெண்டு பேரா..:)
/உங்கள் ஆதங்கமே எனதும். சேரன் நடிக்காமல் இயக்குனராகவே இருந்தால் மட்டுமே அவரால் வெற்றியடைய முடியும் இல்லெயெனில் .......பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்னதான் செய்ய முடியும்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
//
:(
/சேரன் மேல் இருந்த ஈர்ப்பால் இன்று இரவு போகலாம் என்றி இருந்தேன்...
ம்ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம் போகமாட்டேன்
//
போய்தான்பாருங்களேன்.. :)
/மிகவும் சரியான விமர்சனம்
சேரன் நடித்தால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் இயக்குனர்ரோடு நிறுத்திக்(கொல்ல) வேண்டும்.
//
(கொல்ல..?????)
/இன்னும் படம் பார்க்கவில்லை,ஷங்கர். ஆனால் உங்கள் விமர்சனம் எனது ரசனையோடு எப்போதுமே 100% ஒத்துப் போகும்.
படம் பார்த்துவிட்டுப் பேசுகிறேன்.
//
நிச்சயம் ஷண்முகப்பிரியன் சார்..
/ஒரு நாள் பொறுத்து பதிவ படிச்சுட்டு தப்பிச்சிருந்திருக்கலாம்.நேத்து சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டு பாதியிலேயே எஸ்கேப்.விதி வலியது.சேரன் மாதிரி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.காசு கொடுத்து படம் பாக்க வரவங்களுக்குன்னு சில உரிமைகளும் சில எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்பதை இவர்கள் ஏன் உணர்வதே. இல்லை? என்ன இலக்கிய தரமோ?என்ன இழவோ?நாசமா போங்கடா!
9:41 PM//
போங்கடா.. நீங்களும் உங்க இலக்கியமும்....
/நான் படம் பாத்துட்டேன் சங்கர்.. எனக்கு படம் பிடித்திருந்தது..//
ஒவ்வொருவருக்கு ஒருவிதமான ரச்னை..
//பொக்கிஷம் மீதான உங்கள் விமர்சனத்தைப் பொறுத்தவரையில்..
>> கதாநாயகன் என்பவன் அழகு ததும்பிய மன்மதனாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன??
இன்றிருக்கும் மற்ற கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது, சேரனது முகம் மிகவும் லட்சணமாகவே இருக்கிறது என்பது என் கருத்து..//
கதாநாயகன் என்பவன் மன்மதனாக இருக்க வேண்டியதில்லை. ஒரு இருபத்திஐந்து வயது இளைஞனின் காதலை ஒரு நாற்பது வயது முகத்தில் பார்த்தால் ஏதோ ஒன்று குறைகிறது.. அதுமட்டுமில்லாமல் ஏன் அந்த கேரக்டருக்கு ஒரு இளைஞனை போட்டிருக்க கூடாது போட்டிருந்தால் அந்த உணர்வு கரெக்டாக மக்களிடம் சென்று அடைந்திருக்கும். உதாரணமாய் பத்மபிரியாவின் இடத்தில் சரோஜாதேவியை நினைத்துபாருங்கள்.
>> நடிப்பில் வேண்டுமானால் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம்..
ஆனால் மறுபடியும் -> நீங்களே சொல்லுங்கள் .. இப்போதிருக்கும் எந்த ஹீரோ (வெகு சிலரைத்தவிர) நவரசங்களையும் காட்டி நடிக்கிறார் என்று??
//
நீங்க மேலே சொன்னது காமெடிதானே..?
உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி திருமலை கந்தசாமி..
சங்கர்,
முதன் முறையாக உங்கள் விமர்ச்னத்தைப் படிக்காமல் பொக்கிஷத்தைப் பார்த்து விட்டேன்...
அது எவ்வளவு பெரிய தவறென்று படம் ஆரம்பித்து அரை மணியிலேயே தெரிந்து விட்டது...
பொக்கிஷம் படத்தின் உங்கள் விமர்சனம் நம்பர் 1.
நிறைகுறைகளை அருமையாக கருத்திட்டது அழகு!
மீண்டும் மீண்டும் என்னை காப்பாற்றும் அன்பு யூத்து கேபிளாரே வாழ்க
பொக்கிஷம் படம் ரிலீஸ் என்று கேட்டவுடன் நீங்க விமர்சனம் எப்படி எழுதிருப்பீங்க என்று ஓடோடி வந்தேன்.
நல்ல படமாய் இருக்கும் என நினைத்தால் மிக ஏமாற்றமாய் இருக்கிறது.:(
/சங்கர்,
முதன் முறையாக உங்கள் விமர்ச்னத்தைப் படிக்காமல் பொக்கிஷத்தைப் பார்த்து விட்டேன்...
அது எவ்வளவு பெரிய தவறென்று படம் ஆரம்பித்து அரை மணியிலேயே தெரிந்து விட்டது...
//
பரவாயில்லை அதனால்தானே நீங்கள் எனக்கு முதல் முறையாய் பின்னூட்டமிட்டீர்கள்.. சேரனுக்கு நன்றி..
/பொக்கிஷம் படத்தின் உங்கள் விமர்சனம் நம்பர் 1.
நிறைகுறைகளை அருமையாக கருத்திட்டது அழகு!
//
மிக்க நன்றி செந்தில்வேலன்
/மீண்டும் மீண்டும் என்னை காப்பாற்றும் அன்பு யூத்து கேபிளாரே வாழ்க
//
:_)
/பொக்கிஷம் படம் ரிலீஸ் என்று கேட்டவுடன் நீங்க விமர்சனம் எப்படி எழுதிருப்பீங்க என்று ஓடோடி வந்தேன்.
நல்ல படமாய் இருக்கும் என நினைத்தால் மிக ஏமாற்றமாய் இருக்கிறது.:(
//
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.
படம் பாதித்தது முதல் வரியிலேயே தெரிகிறது
//உங்கள் இயக்கிய படங்களை... //
நீங்கள் இயக்கிய படங்களை
Why Blood. Same Blood. நானும் என் நண்பர்களைக் கூட்டிட்டு போய் செம அடி வாங்கினேன். பேசாம கலைஞர் டிவி ல பாண்டி படம் பார்த்திருக்கலாம். சேரன் இந்த படத்தை பொக்கிஷமா வீட்லயே வச்சிருந்தா நாமெல்லாம் தப்பிச்சிருக்கலாம்.
சங்கர் சார் , இந்த விமர்சனத்தில் சிலது எனக்கு உடன்பாடு இல்லை. சிலதை மறுக்கவும் முடியவில்லை. இந்த படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து இருந்தால் ஒரு வேலை தன்னை போல நடிக முடியாது என்று நினைத்துவிட்டார் போல சேரன்.
இந்த படத்தை பார்த்த பிறகு எனது பழைய காதலியின் நினைவு இரவு முழுவது எனது மனதை ஆகிரமித்து கொண்டது.
அதை ஒரு பதிவாக போடுகிறேன் படித்து பாருங்கள் ..
/ஒரு வேலை தன்னை போல நடிக முடியாது என்று நினைத்துவிட்டார் போல சேரன்/
ராஜராஜன் கொஞ்சம் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.. சேரன் நடித்திருக்கிறாரா..?
அவரை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..?
கேபிள்,
உங்க நேர்மைய பாராட்டுறேன்.
I like it.
(படிக்கும்போதே சிரிப்பை அடக்க முடியல. சேரனை பார்த்து இப்படி சிரிப்பா சிரிக்க வெச்சுட்டீங்களே)
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
/இந்த படத்தை பார்த்த பிறகு எனது பழைய காதலியின் நினைவு இரவு முழுவது எனது மனதை ஆகிரமித்து கொண்டது. //
அது இம்மாதிரியான படங்களை பார்த்தபின் நிறைய பேருக்கு வருவதுதான். அதற்காக மூண்று மணி நேரம் நோக வேண்டும் என்பதில்லை.
/படம் பாதித்தது முதல் வரியிலேயே தெரிகிறது
//உங்கள் இயக்கிய படங்களை... //
நீங்கள் இயக்கிய படங்களை
//
மாற்றி விட்டேன் இதயம்.. ம்ஹும் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நக்கீரா..:)
.Why Blood. Same Blood. நானும் என் நண்பர்களைக் கூட்டிட்டு போய் செம அடி வாங்கினேன். பேசாம கலைஞர் டிவி ல பாண்டி படம் பார்த்திருக்கலாம். சேரன் இந்த படத்தை பொக்கிஷமா வீட்லயே வச்சிருந்தா நாமெல்லாம் தப்பிச்சிருக்கலாம்.
//
அதான் சொன்னோமில்ல..
நன்றி வணக்கம்.. சும்மா நூறாவது பின்னூட்டட்துக்காக நானே..ஹி..ஹி..
thaதல பிரிச்சு ஒதெறிடீங்க போங்க ..... சேரன் னுக்கு இன்னொரு மாயக்கண்ணாடி தான் இது ....
(பி .கு ...இந்த படத்தோட ஷூட்டிங் நியூ காலேஜ் ல கொஞ்ச நேரம் பாத்தேன் ... (ஆர்யன் ராஜேஷ் மற்றும் ஜோடி ...சம்பந்த பட்ட காட்சிகள்..... அப்போ வே முடியல )
Cherran aadharuvu padhivar iyakkam aarambichuruvaangha pola(Matha padivugalai paatha adhan thonudhu...
iyakkunar cheranai olikka nadigar cherane podhum...
UM.Krish
/கேபிள்,
உங்க நேர்மைய பாராட்டுறேன்.
I like it.
(படிக்கும்போதே சிரிப்பை அடக்க முடியல. சேரனை பார்த்து இப்படி சிரிப்பா சிரிக்க வெச்சுட்டீங்களே)
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//
நன்றி பொன். வாசுதேவன்.
/thaதல பிரிச்சு ஒதெறிடீங்க போங்க ..... சேரன் னுக்கு இன்னொரு மாயக்கண்ணாடி தான் இது ....
(பி .கு ...இந்த படத்தோட ஷூட்டிங் நியூ காலேஜ் ல கொஞ்ச நேரம் பாத்தேன் ... (ஆர்யன் ராஜேஷ் மற்றும் ஜோடி ...சம்பந்த பட்ட காட்சிகள்..... அப்போ வே முடியல )
//
ஷூட்டிங் பார்த்தெல்லாம் சொல்ல முடியாது கலீல்.. முழுசா படம் பார்த்துட்டுதான் சொல்ல முடியும்.
/Cherran aadharuvu padhivar iyakkam aarambichuruvaangha pola(Matha padivugalai paatha adhan thonudhu...
iyakkunar cheranai olikka nadigar cherane podhum...
UM.Krish//
ஆமாம் கிரிஷ்.. நீங்க சொன்னதை ரிப்பீட்டுகிறேன்.
athuvum cheran mel uthattai kadithu oru expression.....enna kodumai. cheran sir venam aluthuduven...
yesterday i saw tis movie ..i think this is a good movie..i didn't accept your way of review..i want to see again this movie..really this movie is a pokkisham...dont give wrong information about this film sir..nice movie pokkisham...dont consider this review..every one should watch this film
/athuvum cheran mel uthattai kadithu oru expression.....enna kodumai. cheran sir venam aluthuduven...//
ரொம்ப பீல் பண்ணிட்டீஙக் போலருக்கு நான் கடவுள்
/yesterday i saw tis movie ..i think this is a good movie..i didn't accept your way of review..i want to see again this movie..really this movie is a pokkisham...dont give wrong information about this film sir..nice movie pokkisham...dont consider this review..every one should watch this film//
அட்லீஸ்ட் எனக்கு தெரிஞ்சு ஒரு நாலஞ்சு பேர் நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.. ஸோ.. நானும் அதையே தான் சொல்றேன். எல்லாரும் படம் பார்த்துட்டு சொல்லுங்க..
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=15876&Itemid=68
read this ....
/http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=15876&Itemid=68
read this ....//
இதெல்லாம் சினிமாவில் சகஜம்.. கதைக்களம். அப்படியானாலும் கிரெடிட் கலை இயக்குனரையே சாரும்..
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் என்று சொல்லி எதற்காக இந்த பில்டப்...சிமபதி.. சினிமாவை பொருத்தவரை, நல்லா இருக்கா, இல்லையா படம் அவ்வளவுதான். அதன் பின்னாடி இருக்கிற கஷ்ட நஷடமெல்லாம் ஆடியன்ஸுக்கு கிடையாது. தலைவா. நோ செண்டிமெண்ட்ஸ்.. சினிமாவில் இருக்கும் எனக்கு வேண்டுமானால் இதெல்லாம் ஓகே..
அப்படி பார்த்தால கமலின் ஹேராமில் அவர்கள் செய்திருந்த கலை வேலை பாடுகளில் சுமார் ஒரு பதினைந்து சதவிதம் உழைத்திருந்தாலே அது அதிகம்.. படத்தில் கேமராமேன், கலை இயக்குனர், ஆகியோர் உழைத்த, உழைப்புக்கு அவர்களுக்கு பெயர் கிடைத்துளளது.. அதில் கொஞ்சமேனும் திரைக்கதையில் உழைத்திருந்தால் சேரனுக்கும் அதே பெருமை வந்திருக்குமே.. பின்னூட்டத்திற்கும் லிங்கிற்கும் மிக்க் நன்றி.. அந்த ஒரிஜினல் பிரிண்ட் அவுட்டே என்னிடம் இருக்கிறது.
/பத்மபிரியாவின் அழகு முகத்தின் க்ளோசப்புகள்/
உங்களப் போய் நல்ல ரசிகன்னு நெனச்சேன் பாரு..அதெப்படி கொங்சம் கூட கூச்சமே இல்லாம எழுதுறீங்க....
இப்படி போட்டு தாக்கிவிட்டீர்களே
/உங்களப் போய் நல்ல ரசிகன்னு நெனச்சேன் பாரு..அதெப்படி கொங்சம் கூட கூச்சமே இல்லாம எழுதுறீங்க...//
அண்ணே இருக்கிறதுல எது அழகா தெரியுதோ அதைத்தானே சொல்ல முடியும்.. பின்ன சேரனையோ, அவஙக் அம்மாவா நடிக்கிற்வஙக்ளையா..? என்ன தலைவா.. நீங்க படம் பாத்திருந்தீங்கன்னா தெரியும் நான் ஏன் சொல்லுறேன்னு..
/இப்படி போட்டு தாக்கிவிட்டீர்களே//
illai புருனோ அப்ப்டி ஒன்றும் பெரிதாய் தாக்கிவிடவில்லை.. லைட்டாய்தான்..
ORIGINAL OF POKKISHAM
http://en.wikipedia.org/wiki/The_Classic
Plot
The film tells the parallel love stories of a mother and daughter. The story of the mother is told partially in flashbacks.
The movie starts in the present day. The daughter, Ji-Hae (Son Ye-jin), is cleaning-up around her house when she comes across a box full of old letters and a diary that detail the story of her mother, Joo-Hee (who is also played by Son Ye-jin). Periodically in the movie, Ji-Hae reads one of these letters, which starts a flashback scene in which the story of the mother is told. These flashbacks are intertwined with Ji-Hae's own story, in which she falls for a fellow student, Sang-Min (Jo In-sung), who is involved with the school theater.
The movie tells the story of both relationships. The mother, Joo-Hee, visits the countryside as a student one summer and meets Joon-Ha (Jo Seung-woo). Together they explore the countryside, playing near a river which they both will always remember as their special place. When a storm starts they take shelter together under a tree, but not before Joo-Hee twists her ankle and is rendered helpless. Joon-Ha carries her on his back and they struggle home, only to be confronted by her angry parents. Before they separate, Joo-Hee gives him a necklace, which he keeps close as a precious reminder of their time together.
Unfortunately, as often happens in affairs of the heart, a third party prevents any deepening of their relationship. Joo-Hee has been promised by her parents as a bride to Tae-Soo, Joon-Ha's friend. But Tae-Soo, a noble friend, finds out about Joo-Hee and Joon-Ha's attraction for each other and helps the two communicate secretly by letting them use his own name in place of Joon-Ha's in their letters. When Tae-Soo's father finds this out, however, he beats Tae-Soo. Tae-Soo tries unsuccessfully to commit suicide so that his two friends can be together.
Meanwhile, in the present, Ji-Hae falls for Sang-Mi in whom her friend Su-Kyeong (Lee Sang-in) is also very interested, but he seems not to notice. Then, in a sweet scene, they take shelter from the rain together under the same tree. He uses his coat to cover both of them and escorts her to where she needs to go. The moment, while magical, does not go anywhere as she feels his help was only due to his generous nature and not from any feelings for her on his part.
Back in the past, Joon-Ha is guilt-ridden over his friend's attempted suicide and Joo-Hee's own guilt. Determined to prevent any more hurt to her, Joon-Ha joins the army and goes to Vietnam. There he loses his eyesight while he tries to retrieve the necklace Joo-Hee had given him. When he returns to Korea, he meets again with Joo-Hee, and, trying to hide his blindness, convinces her he has married in the hope she will move on with her life. Though heart broken that their relationship cannot continue, she does move on and eventually marries Tae-Soo, Joon-Ha's kind friend. After they have been married for several years and have a young daughter (Ji-Hae) Joo-Hee is approached by friends of Joon-Ha, who relate Joon-Ha's last wish: that his ashes be scattered by Joo-Hee in the river, now a reservoir, where they first met. She then finds out that Joon-Ha already had a son the same age as her daughter. The heart-break is too much and she cries.
In the present, Ji-Hae's own story unfolds. Sang-Mi reveals his true feelings for Ji-Hae - feelings that mirror her own. It is also revealed that their taking shelter together during the storm was no accident: he had purposely left his umbrella behind in a shop so that he could join her under the tree. Then, when Ji-Hae pensively reveals her mother's story to him, tears stream down his face. Silently he lifts a necklace from around his neck and places it around hers. It is the necklace that Ji-Hae's mother, Joo-Hee, had given to Joon-Ha when they met. The circle is completed: Joo-Hee's daughter and Joon-Ha's son have fallen in love.
/ORIGINAL OF POKKISHAM
http://en.wikipedia.org/wiki/The_Classic
Plot//
அது தெரிஞ்ச விஷயம்தானே சுதர்..
ஏண்டா எப்ப பார்த்தாலும் எரும சாணிய மூஞ்சில அப்பின மாதிரியே இருக்க .. சேரனுக்கு ரொம்ப பொருந்தும் ..
/ஏண்டா எப்ப பார்த்தாலும் எரும சாணிய மூஞ்சில அப்பின மாதிரியே இருக்க .. சேரனுக்கு ரொம்ப பொருந்தும் .//
ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்.. அவரை அப்படி ஒருமையில் அழைப்பதை விரும்பவில்லை. ராஜேஷ்.. மிக்க நன்றி
/ஏண்டா எப்ப பார்த்தாலும் எரும சாணிய மூஞ்சில அப்பின மாதிரியே இருக்க .. சேரனுக்கு ரொம்ப பொருந்தும் .//
ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்.. அவரை அப்படி ஒருமையில் அழைப்பதை விரும்பவில்லை. ராஜேஷ்.. மிக்க நன்றி
கவுண்டமணி செந்திலை பார்த்து ஒரு படத்துல கேற்பார்.. அது இவருக்கு பொருந்தும் .. sorry if hurts..
சேரன் பொற்காலம் படத்திற்கு பிறகு தேசியகீதம், வெற்றி கொடி கட்டு என்று சமூக பார்வை படம் கொடுத்தார் .. ஆட்டோ கிராப் பிறகு தவமாய் தவம் இருந்து, மாய கண்ணாடி, பொக்கிஷம் என்று பீலிங்க்ஸ் படம் கொடுக்கிறார் .. ஆனால் ஒரு பொற்காலம் தான் , ஒரு ஆட்டோ கிராப் தான் ... வெற்றிக்கு பின் சேரன் மனோநிலை (mindset) மாறுகிறது.. அதுதான் கதையை மாற்ற மாட்டேனென்கிறார்.. அந்த விஷயத்தில் இவர் கொஞ்சம் அமீர் -ஐ கவனித்தால் மாறலாம்.. 3 படம் ( மௌனம் பேசியதே, ராம் , பருத்தி வீரன்) 3 மே வெவ்வேறு சூழல்.. சேரன்னின் அடுத்த படம்மாவது வேறு களம் வேறு சிந்தனை யாய் அமைய வாழ்த்துக்கள் ..
Post a Comment