ஒரு இனிமையான, நெகிழ்வான, உருக்கமான, புத்திசாலிதனமான வசனங்களுடன், ஒரு நல்ல காதல் கதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று நினைத்திருந்த போது பார்த்த படம்தான் லவ் ஆஜ் கல்.
லண்டனில் வேலை பார்க்கும் ஜெய்யும், மீராவும் சந்திக்கிறார்கள், கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளூக்குள் காதல் கொள்கிறார்கள். இப்படியே ஒரு வருடம் போக, மீராவுக்கு அவளுடய் ஆர்கியலாஜில் துறையில் மேலும் சில விஷயங்களுக்காக, அவளுடய துறையில் சாதிப்பதற்காக இந்தியா போக வேண்டுமென்ற நிர்பந்தம் வர, அதே நேரம் ஜெய்யும் தன் கனவு வேலையான ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலையில் சேருவதற்காக காத்திருப்பதால் அவளுடன் வர முடியாது என்று சொல்ல, இருவருக்கும் தங்களது குறிக்கோள்களே இலக்காயிருக்க, இதற்கு வேறு வழியேயில்லை என்று இருவரும் பேசி வைத்து கொண்டு பிரிகிறார்கள். இதற்கு பிரேகிங்கப் பார்ட்டி வேறு கொடுக்கிறார்கள். அதன் பிறகு ஆளுக்கோரு திசையில் பயணப்பட்டாலும், SMS, Internet, phone என்று எல்லா இணைப்புகள் வழியாகவும் தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்க, இந்தியாவில் மீராவுக்கு ஒரு புதிய தொடர்பு கிடைக்க, அங்கே ஜெய்க்கு ஒரு வெளிநாட்டு பெண் கிடைக்க, இங்கே இந்தியாவில் மீராவின் திருமணம் நடை பெறுகிறது. திருமணத்தன்று இருவருக்கும் உள்ளே ததும்பி கொண்டிருக்கும் காதல் மேல வர, க்ளைமாக்ஸ்.. ப்ளாஷ் பேக் ஹீரோயின் அவ்வளவா பேசாவிட்டாலும் அழகு.
படம் பூராவும் சாயிப் அலிகானும், தீபிகா படுகோனும் கேரக்டராய் வாழ்ந்திருக்கிறார்கள். சாயிப் மட்டும் தன்னுடய முகத்தில் தெரியும் வயதை தன் நடிப்பின் மூலம் பாதியாய் குறைத்திருக்கிறார். தீபிகாவுக்கும், சாயிப்புக்கு உள்ள கெமிஸ்ட்ரி.. அருமை. அவர்களிடையே நடைபெறு, நெருக்கமாகட்டும், முத்தங்கள் ஆகட்டும், பின்புறம் தடவுவதாகட்டும், ஒரு காட்சியிலாவது விரசம் தட்ட வேண்டுமே.. ? ம்ஹும். தீபிகா படு க்யூட்.. அவ்வளவு இயல்பாய் இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு கண் கலங்கும் காட்சியில் சூப்பர்ப்.
நட்ராஜ் சுப்ரமணியமின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். அதே போல் பிரீதமின் இசையில் வரும் பாடல்கள்.
படத்தின் மிக அழகான ஹைலைட் ரிஷிகபூரின் இளமை கால காதல் கதையை சினிமாவின் சுதந்திரத்தை பயன்படுத்தி சாயிபை கொண்டே அவரின் மேல் ஒரு ப்ளாஷ்பேக் டிராக்கையும், நிகழ்கால நிகழ்வையும் சுவைபட இணைத்து வைக்கும் திரைக்கதை அருமை. அதன் பிற்கு வசனங்கள் , இவ்வளவு இயல்பாய் வசனங்களை அமைக்க முடியுமா..? அவ்வளவு இயல்பு. ”ஆம் ஆத்மி” க்கு மேங்கோ மனிதன் போன்ற கிண்டல் தொனிக்கும் தற்கால இளைஞர்களின் மனப்போக்கை சொல்லும் வசனங்கள் இயக்குனர் இம்தியாஸ் அலியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. என்ன செகண்ட் ஹாப்பில் கொஞ்சம் எடிட்டிங் வேலையை செய்திருக்கலாம்.
LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்
போஸ்டர் சிறுகதையை படிக்க.. இங்கே அழுத்தவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
47 comments:
//LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்//
சங்கர்,
படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட எண்ணம்...
நல்ல திரைப்பட ரசிகர்களுக்கும், திரையரகில் சென்று பார்த்து சந்தோஷமாய் வரப்போகிறவர்களுக்கும்...
விமர்சனம் மிக அருமை... பார்த்தே ஆக வேண்டும்...
நன்றி சங்கர் அண்ணா...
app...உங்கள மாதிரி யூத்க்கான படம் ன்னு சொல்லுங்க
கதை மொக்கை....
இந்த மதறி மொக்கை கதைகள் பல இந்தியில் வந்துல்லது.....:)))
அது என்ன இந்தி படம்னா வெளி நாட்டில் கண்டிப்பாக எடுத்தாகனுமா....??
இந்த மொக்கை கதையை இந்தியாவிலே எடுத்திருக்களாம்.....
அப்போ நம்மளமாதிரி ஆளுங்க பாக்கற படம்ன்னு சொல்லுங்க.
விமர்சனம் சம்ம யூத்து... தலைவரே!
))))):::::))))))))))
//LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்/
அப்போ காதலித்தவர்களுக்கு? இதுல கல் என்றால் நேற்றா, நாளையா?
/சங்கர்,
படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட எண்ணம்...
நல்ல திரைப்பட ரசிகர்களுக்கும், திரையரகில் சென்று பார்த்து சந்தோஷமாய் வரப்போகிறவர்களுக்கும்...
விமர்சனம் மிக அருமை... பார்த்தே ஆக வேண்டும்...
//
நன்றி பிரபாகர்
/app...உங்கள மாதிரி யூத்க்கான படம் ன்னு சொல்லுங்க
//
ஆமாம் மாயாவி..
/கதை மொக்கை....
இந்த மதறி மொக்கை கதைகள் பல இந்தியில் வந்துல்லது.....:)))
அது என்ன இந்தி படம்னா வெளி நாட்டில் கண்டிப்பாக எடுத்தாகனுமா....??
இந்த மொக்கை கதையை இந்தியாவிலே எடுத்திருக்களாம்....//
இதே மாதிரியான கதை மொக்கையாய் நிறைய வந்திருக்கலாம் சிண்டோக்.. ஆனால் இவர்கள் இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார்கள்.
வெளிநாட்டில் எடுப்பது ஒருவிதமான செலவு குறைச்சல் கூட சிண்டாக்.
/அப்போ நம்மளமாதிரி ஆளுங்க பாக்கற படம்ன்னு சொல்லுங்க.
விமர்சனம் சம்ம யூத்து... தலைவரே//
நன்றி அசோக்
/))))):::::))))))))))//
எதுக்குய்யா இவ்வள்வு பெரிய சிரிப்புபூஊஊஊஊஊஊஊ:)?
/அப்போ காதலித்தவர்களுக்கு? இதுல கல் என்றால் நேற்றா, நாளையா?
//
சில சமயம் ஹிந்தியில் சில வார்த்தைகளுக்கு இடத்தை பொறுத்தி அர்த்தம் வரும். இதில் கல் என்றால் நேற்றும் வரும், நாளை என்றும் வரும்.. கார்க்கி.. ஏதோ என் சிற்ற்றிவுக்கு தெரிந்த ஹிந்தியை சொல்லியிருக்கிறேன். தப்பாயிருந்தால் மாப் கர்தோனா பாய்.
நட்ராஜ் சுப்ரமணியமின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.//////
நம்ம ஊரா?
பரவாயில்ல. ஜப் வீ மெட் பேர கெடுத்துக்குவாருன்னு நெனச்சேன். அது லக் இல்ல போல.
ஆஜ் கல் என்ற வார்த்தைய வரவர என்ற அர்த்தத்துலயும் யூஸ் பண்ணுவாங்கன்னு நெனக்கிறேன். இந்த காலத்து பசங்க.... அப்படின்னு பெருசுங்க இழுக்குறத, ஆஜ் கல் லட்கேன்.... அப்படின்னு ஹிந்தில இழுக்குங்க!
/நட்ராஜ் சுப்ரமணியமின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.////////
இவரு கேமராமேன் மட்டுமல்ல பப்பு. நாளை சக்கரவியூகம், வரப்போற மிளகா படத்தின் ஹீரோவும் கூட..
LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்
விமர்சனம் மிக அருமை...
AAJ KAL = Nowadays, currently, In this days, தற்காலத்தில், இன்றைய தினங்களில்.
(இதனை ஆஜ், கல் என பிரித்து பொருள் கொள்ள கூடாது)
கேபிள்- விமர்சனத்திற்காக;
மும்பையிலிருந்து
நையாண்டி நைனா.
/*லண்டனில் வேலை பார்க்கும் ஜெய்யும், மீராவும் சந்திக்கிறார்கள், கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளூக்குள் காதல் கொள்கிறார்கள்.*/
ஒரு வருஷம் எல்லாம் ரொம்ப நாளு... நான் லண்டன் போயிருந்தப்ப... ஒன் பார், ஒன் பீர், ஒன் நைட் எல்லாம் ஓவர்.
அண்ணே,
நீங்க எப்பவுமே யூத்து தாண்ணே
/*சாயிப் மட்டும் தன்னுடய முகத்தில் தெரியும் வயதை தன் நடிப்பின் மூலம் பாதியாய் குறைத்திருக்கிறார்.*/
நீங்க யூத்து கதைகளா எழுதி குறைக்குற மாதிரி தானே..??? (இது தான் தண்டோரா அண்ணாத்தே சிரிப்புக்கும் காரணமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்)
/*படம் பூராவும் சாயிப் அலிகானும், தீபிகா படுகோனும் கேரக்டராய் வாழ்ந்திருக்கிறார்கள்.*/
என்னைய வுட்டிருந்தா.... நானெல்லாம்... இன்னும் நல்லா வாழ்ந்திருப்பேன்... ஒ சாரி... நடிச்சிருப்பேன்.
தல.. DVD இருக்கா..??
//நட்ராஜ் சுப்ரமணியமின் ஒளிப்பதிவு அருமையோ அருமை.//
அண்ணே இவருதனே நாளை படத்துல நடிச்ச நட்டு...
இப்போ மிளகா அப்படின்னு ஒரு படத்துல கூட நடிக்கிறாரு
கரெக்ட் ஆ? எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஜி.
கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
நல்லா எழுதி இருக்கீங்க கேபிள்.பார்க்கணும்..
/LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்
விமர்சனம் மிக அருமை...
//
நன்றி கோஸ்ட்..
/LOVE AAJ KAL - காதலிப்பவர்களுக்கும், காதலிக்க போகிறவர்களுக்கும்
விமர்சனம் மிக அருமை...
//
நன்றி கோஸ்ட்..
/AAJ KAL = Nowadays, currently, In this days, தற்காலத்தில், இன்றைய தினங்களில்.
(இதனை ஆஜ், கல் என பிரித்து பொருள் கொள்ள கூடாது)
கேபிள்- விமர்சனத்திற்காக;
மும்பையிலிருந்து
நையாண்டி நைனா.
//
பாருங்க சொல்லிட்டாரு இங்கே பண்டிட் ஹிந்தி நைனாவே.. (ஜூனூன் தமிழில் படிக்கவும்)
/ஒரு வருஷம் எல்லாம் ரொம்ப நாளு... நான் லண்டன் போயிருந்தப்ப... ஒன் பார், ஒன் பீர், ஒன் நைட் எல்லாம் ஓவர்.
//
நைனா நாமெல்லாம் யூத்தோ யூத் நம்ம ஸ்பீடுக்கு வருமா..
/அண்ணே,
நீங்க எப்பவுமே யூத்து தாண்ணே
//
ஹி.ஹி. ஹி..
என்னைய வுட்டிருந்தா.... நானெல்லாம்... இன்னும் நல்லா வாழ்ந்திருப்பேன்... ஒ சாரி... நடிச்சிருப்பேன்//
அதனாலதான் கூப்பிடலையோ..?
/தல.. DVD இருக்கா..?//
அண்ணே சத்யத்துல ஓடுதுண்ணே..
/அண்ணே இவருதனே நாளை படத்துல நடிச்ச நட்டு...
இப்போ மிளகா அப்படின்னு ஒரு படத்துல கூட நடிக்கிறாரு
கரெக்ட் ஆ? எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு ஜி.
கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
//
ஆமாம் ஜெட்லி
/நல்லா எழுதி இருக்கீங்க கேபிள்.பார்க்கணும்.//
பாருங்க நர்சிம்
இது 'கிளாசிக்' அப்படிங்கற கொரிய பட உல்டா. இதே கதைதான் 'பொக்கிஷம்' ங்கற பேச்சும் இருக்கு நைனா!
அதுக்குள்ளே பாண்டவர் பூமி ( தோழா தோழா பாட்டு ) ஒன் லையின் மறந்துட்டாங்க மக்கள்! ட்ரீட்மென்ட் வேற இல்லே?
/இது 'கிளாசிக்' அப்படிங்கற கொரிய பட உல்டா. இதே கதைதான் 'பொக்கிஷம்' ங்கற பேச்சும் இருக்கு நைனா!//
நான் இன்னும் கிளாசிக் பார்க்க விலலை இருந்தாலும் நல்ல படம்தானே ஆடுமாடு.
/அதுக்குள்ளே பாண்டவர் பூமி ( தோழா தோழா பாட்டு ) ஒன் லையின் மறந்துட்டாங்க மக்கள்! ட்ரீட்மென்ட் வேற இல்லே?
//
இது பாண்டவர் பூமிக்கு இதுக்கு சம்மந்தமில்லை. ஒருவரை ஒருவர் காதலித்துவிட்டு வேறுவொருவரை திருமணம் செய்தால் பாண்டவர் பூமி என்றால் யாரும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்வதாகவோ எடுக்க முடியாது. விஜய்சங்கர்..
ரைட்டு! (கேபிள்ன்னு பேர வச்சுக்கிட்டு இப்பிடி பயாஸ்கோப் காட்டுதே இந்தப்புள்ள!?)
உண்மையில் எனக்கு இந்த படம் பிடிக்கவே இல்லை. இடண்டு வருடம் ஒன்றாக இருந்து, பிறகு ஒரு வருடம் வேறொருவரிடம் இருந்துவிட்டு மீண்டும் (தீபிகாவின் திருமணத்திற்கு பின்) இனைவது ஏதோ மீண்டும் எந்த நேரமும் பிரிந்து விடலாம் என்றே எனக்கு பட்டது.
ஆனால் பழைய காதல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பழைய காதல் ரொமாண்டிக்கா இருந்தது. நினைத்ததை சொல்லிட்டேன் :-)
அழகான உற்சாகமூட்டும் விமர்சனம்,ஷங்கர்.நன்றி.
/ரைட்டு! (கேபிள்ன்னு பேர வச்சுக்கிட்டு இப்பிடி பயாஸ்கோப் காட்டுதே இந்தப்புள்ள!?)
//
:)
/உண்மையில் எனக்கு இந்த படம் பிடிக்கவே இல்லை. இடண்டு வருடம் ஒன்றாக இருந்து, பிறகு ஒரு வருடம் வேறொருவரிடம் இருந்துவிட்டு மீண்டும் (தீபிகாவின் திருமணத்திற்கு பின்) இனைவது ஏதோ மீண்டும் எந்த நேரமும் பிரிந்து விடலாம் என்றே எனக்கு பட்டது.
ஆனால் பழைய காதல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பழைய காதல் ரொமாண்டிக்கா இருந்தது. நினைத்ததை சொல்லிட்டேன் :-)
//
இப்பலெல்லாம் காதல் இப்படித்தானிருக்குனு சொல்லத்தான் வர்றாஙக்.. நீஙக் இன்னும் பாபி காலத்திலேயே இருக்கீங்க..:)
/அழகான உற்சாகமூட்டும் விமர்சனம்,ஷங்கர்.நன்றி//
நன்றி சார். படம் பார்த்துட்டு சொல்லுங்க..
இந்த படத்து டிவிடி வச்சிருக்கீங்களா
/இந்த படத்து டிவிடி வச்சிருக்கீங்களா
//
தியேட்டர்ல போய் பாருங்க..அத்திரி
கடைசியா பாத்த இந்திப்படம் ஹம் ஆப்கே ஹெயின் கோன்னு நினைக்கிறேன். அடுத்து ஒண்ணு பாத்துற வேண்டியதுதான்..
பாத்துற வேண்டியதுதான்.
கேபிள் சங்கர் அவர்களே,
நல்ல சுவையான விமர்சனம்! இன்றுதான் படித்தேன். நான் எழுதிய விமர்சனத்தையும் படித்து விட்டுப் பின்னூட்டம் இடவும்.
http://cinemavirumbi.blogspot.com
http://cinemavirumbi.tamilblogs.com
நன்றி!
சினிமா விரும்பி
Post a Comment