90களில் சேனல் வீ யை பிரபலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர். அப்போதே மிக பெரிய ஹிட்.. அதை தொடர்ந்து படமாய் வெளீவந்திருக்கிறது.
முருகன் ஒரு இந்தியன் அதிலும் சவுத் இந்தியன் Cow களை காப்பாற்றும் Cowboy. ரைஸ் ப்ளேட் ரெட்டி என்பவன் ஊரில் உள்ள எல்லா சைவ உணவகங்களையும் தன்னுடய கவுபாய் கூட்டத்தை வைத்து, மிரட்டி எழுதி வாங்கி, அசைவ உணவகங்களாய் மாற்றுகிறான். அதை ஒரு கட்டத்தில் எதிர்த்த குயிக் கன் முருகனுக்கு, ரெட்டிக்கு தக்ராறு வர அதில் குயிக் கன் முருகன் கொல்லப்படுகிறான்.
மேலோகத்துக்கு போகும் கன் முருகன், சித்ரகுப்தனிடம் போராடி தான் போய் தான் உலகை காப்பாற்ற வேண்டுன் என்று சொல்லி மீண்டும் அங்கிருந்து டிரான்ஸ்பர் ஆகி, பூமிக்கு வருகிறான். வரும் போது 2007 ஆண்டு, அப்போது ரெட்டி மேக் தோசா என்று அசைவ தோசையை தயாரித்து உலகையே ஆள நினைக்கிறான். சரியான டேஸ்டான் தோசைக்கான ரிஸிப்பிக்காக அலைகிறான். தோசை மாமிகளை கடத்துகிறான். இதில் ரெட்டியா/ முருகன் இருவரில் யார் வென்றார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
கதையை படிக்கும் போதே தெரிந்திருக்கும். காமெடி செய்வதற்கென்றே எழுதப்பட்டதாய் இருக்கிறது. முதலில் இம்மாதிரியான ஒரு கதையை பார்பதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே படம் பார்க்க போகவும்.
ரசித்து ரசித்து சீன்களில் உழைத்திருக்கிறார்கள். மேலோகத்துக்கு போகும் முருகன் அங்கே லஷ்மியை பார்க்க “ என் வீட்டு கேலண்டரில் இருப்பதை போலவே இருக்கிறார் “ என்பதும், லேட்டஸ்ட் அப்கிரேடட், சித்ரகுப்தனிடன், தன் ப்ளாஷ்பேககி சொல்லி திரும்பவும் பூலோகத்துக்கு திரும்பும் போது, டெர்மினேடர் பாணியில் மேலோகத்திலிருந்து, மின்னலாய் ஐட்டியுடன் வர, ஒரு சிறிய டெக்னிகல் எரர் இன் டிரான்ஸ்பர் என்ற குரல் ஒலித்ததுடன் மற்ற உடைகள் விழுவதும், தங்கும் லாட்ஜின் பெயர் welknown lodge. முருகனைன் அண்ண்னும், தம்பியும், ஒருவரை ஒருவர் பாசம் காட்ட ஆளுக்கொரு துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் சுடுவதும்,
அதை பார்த்து அண்ணி அவர்களின் பாசத்தை கண்டு ஆனந்த கண்ணீர் விடுவது, பழைய காதலியுடன் “ஓ லிட்டில் ப்ளவர்” பாடலை பாடுவதும், முருகனின் அண்ண்ன் தன்னை கொன்றவன் யார் என்று சொல்வதற்கு ப்ளேட்டில் ரைஸ் இருப்பதும், அதில் கொஞ்சம் ரத்தம் ஊற்றி அதை காட்டி சொல்லி காட்டுவதும், பழைய தமிழ் சினிமா காட்சிகளை கிண்டலடிப்பதும், வில்லனின் கீப்பான ரம்பாவிடம், “நீ எப்படி கீப்பானே?’ போன்ற கேட்விகளை கேட்பது, என்று பல சிறு, சிறு காட்சிகளை சொல்லி கொண்டே போகலாம்.
குயிக் கன் முருகனாய் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். கன கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார். வில்லனாய் நாசர், சண்முகராஜன், ராஜு சுந்தரம், ரம்பா, என்று எல்லோருமே சரியாய் செய்திருக்கிறார்கள்
எல்லாவற்றையும் சரியாய் செய்தவர்கள் ஒரு மிக முக்கியமான, விஷயத்தை விட்டு விட்டார்கள். அதனால் பெரிதாய் இம்ப்ரெஸ் பண்ணவில்லை. என்றே சொல்ல வேண்டும்.
Quick Gun Murugan - With Out Soul .. சொல்லிட்டேன் Mind It..
டிஸ்கி:
90களில் பிரபலமான குயிக் கன் முருகனின் வி சேனல் புட்டேஜ்.. உங்கள் பார்வைக்காக..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
42 comments:
Mind it....:)
Comedy Special
படம் லாஜிக் இல்லாத மேஜிக் வாத்யாரே. அட்லீஸ்ட் இதுல மேஜிக் ஆவாது இருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் கண்டுக்கப் படாது. ‘கந்தசாமி’க்கெல்லாம் இந்த படம் எவ்வளவோ பெட்டர்னு நினைக்கிறேன். ஓட்டு போட்டாச்சு...
ம்ம்ம்ம்ம்...அப்போ காமெடியும் நல்லா இல்லையாண்ணே?
\\ஒரு மிக முக்கியமான, விஷயத்தை விட்டு விட்டார்கள். அதனால் பெரிதாய் இம்ப்ரெஸ் பண்ணவில்லை. என்றே சொல்ல வேண்டும்\\
எதை கேபிள்ஜி
புரியலையே.
ஆன்மா இல்லை என்கிறீர்களா?
இதே மாதிரி நாம நார்த் இண்டியன் கௌபாய்னு படமெடுத்தா மிஷ்ராக்களும், ஷர்மாக்களும் சும்மா இருப்பாய்ங்களா? அடிப்படையில் நம் சினிமாவையும் (ரசனையையும்), அறிவையுமே கேலி செய்ததை நம்மை விட்டே விமர்சனம் செய்ய வைப்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. எரிச்சல் வருகிறது.
sooperuuuuuuuuuuuuuuuuuu
/ஆன்மா இல்லை என்கிறீர்களா?//
ஒரு திரைபடத்துக்கான ஆன்மா திரைக்கதை.. மொட்டையாக விட்டது மற்றவர்கள் கண்டுபிடித்து பின்னூட்டமிடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் முரளி.
ரம்பா படம் எங்கய்யா?
//முதலில் இம்மாதிரியான ஒரு கதையை பார்பதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே படம் பார்க்க போகவும். //
இதென்ன குருவி, வில்லுவ விட கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா????
வெள்ளிகிழமையானா வீட்டுல கும்னு,கம்னு குந்தியிருக்காம நமக்காக படம் பார்த்து கத சொல்லும் கேபிளார்க்கு டாக்டர் பட்டம் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது
கேபிள் ஜீ இதே டீம் "தி குட், பேட் அன்ட் தி இட்லி " என்கிற அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டது. "திறந்த வானமே கூரையாக..., ... நான்தான் முருகன், குயிக் கன் முருகன்." டயலாக் சூப்பரு...
இதை காமெடி படமுன்னு தெரியாமையே நடிச்சாராம் ராஜேந்திர பிரசாத்!! இது எப்டி இருக்கு?
இஃகி, இஃகி...
படம் கொஞ்சம் ஜாலியா போகும் போலிருக்கு..
அண்ணா, பார்க்கலாமா வேண்டாமா? ஏன்னா, கந்தசாமி'ல வாங்குன அடியே இன்னும் வலிக்குது :)
இந்தப் படம் சூப்பருக்கு சூப்பர் படம்...,
doopakkur hero -kku ithu evlovo better
தராசு said...
இதென்ன குருவி, வில்லுவ விட கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா????
// அப்பிடிலாம் இருக்க வாய்ப்பேயில்லண்ணே..
நிச்சயம் பார்த்திடவேண்டியது தான்.
கட்டாயம் படிக்கவும்:
http://sirippupolice.blogspot.com/2009/08/blog-post_29.html
நன்றி முத்துகுமார்
நன்றி மூவி போஸ்டர்
.படம் லாஜிக் இல்லாத மேஜிக் வாத்யாரே. அட்லீஸ்ட் இதுல மேஜிக் ஆவாது இருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் கண்டுக்கப் படாது. ‘கந்தசாமி’க்கெல்லாம் இந்த படம் எவ்வளவோ பெட்டர்னு நினைக்கிறேன். ஓட்டு போட்டாச்சு...
//
அப்படியும் சொல்ல முடியாது..
/ம்ம்ம்ம்ம்...அப்போ காமெடியும் நல்லா இல்லையாண்ணே?
//
:(
/இதே மாதிரி நாம நார்த் இண்டியன் கௌபாய்னு படமெடுத்தா மிஷ்ராக்களும், ஷர்மாக்களும் சும்மா இருப்பாய்ங்களா? அடிப்படையில் நம் சினிமாவையும் (ரசனையையும்), அறிவையுமே கேலி செய்ததை நம்மை விட்டே விமர்சனம் செய்ய வைப்பது அவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. எரிச்சல் வருகிறது.
//
ஏன் எதையெடுத்தாலும் சீரியஸாய் எடுக்கிறீர்கள்..? இந்த படத்தில் மும்பை டப்பாவாலாவையும், அமிதாப்பையும், கூட கிண்டலிடித்திருக்கிறார்கள்.. ஐஸ்ட் ஃபார் பன்..
//ரம்பா படம் எங்கய்யா.//
ரம்பா செத்திருச்சு பரிசல்..:(
/இதென்ன குருவி, வில்லுவ விட கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா????
//
அவங்க சீரியஸா படமெடுக்கிறேன் என்று காமெடி பண்ணியிருந்தார்காள்.. இவர்கள் சீரியஸாய் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.
../வெள்ளிகிழமையானா வீட்டுல கும்னு,கம்னு குந்தியிருக்காம நமக்காக படம் பார்த்து கத சொல்லும் கேபிளார்க்கு டாக்டர் பட்டம் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது
//
கொடுங்க கொடுங்க கணேஷ்.. கண்டவஙக்ளெல்லாம் வாங்கும் போது நான் வாங்குனா என்ன..? மிக்க நன்றி
/கேபிள் ஜீ இதே டீம் "தி குட், பேட் அன்ட் தி இட்லி " என்கிற அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டது. "திறந்த வானமே கூரையாக..., ... நான்தான் முருகன், குயிக் கன் முருகன்." டயலாக் சூப்பரு...
//
படம் பூராவுமே டயலாக் ஆங்காங்கே மிளிரும்..
.இஃகி, இஃகி...
படம் கொஞ்சம் ஜாலியா போகும் போலிருக்கு..
//
ஆமாம் இராகவண்..
/கட்டாயம் படிக்கவும்://
படிச்சிட்டேன்.. அதுக்கு அப்புறம்தான் இந்த விமர்சனம் எழுதினேன்..:)
/அண்ணா, பார்க்கலாமா வேண்டாமா? ஏன்னா, கந்தசாமி'ல வாங்குன அடியே இன்னும் வலிக்குது ://
அப்படியெல்லாம் பயந்தா முடியுமா..?
/இந்தப் படம் சூப்பருக்கு சூப்பர் படம்...,
//
ஹா..ஹா.. என்ன உள்குத்து:)
அண்ணன் டிபிசிடியும் இதை இன்று ட்விட்டரில் சொன்னார். நம்மை மதராஸி என்று சொல்வதற்கு ஒப்பாக படம் எடுத்திருக்கிறார்கள் என்று. எல்லாத்தையும் சீரியஸ் ஆக்கல தலைவரே.. நேற்று என்.டி.டி.வியில் கூகுளின் மேனேஜர் எவரோ வந்து பேசினார். ஆர்க்குட்டில் பரபரப்பாக இருக்கும் கம்யூனிட்டிகள் லிஸ்ட் வைத்திருந்தார்.. டாப் டென்னில் தமிழ் சினிமா கம்யூனிட்டி 6-வது இடம். அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. போயும் போயும் தமிழ் சினிமாவா? அதில் பேசக்கூட எவரேனும்/ஏதாவது இருக்கிறதா என்றார்! அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ளவைக்க கூகுள்காரர் படாத பாடு பட்டார். நம்மை ரேசிஸ்ட் பார்வையோடு பார்ப்பது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. இதில் எரிச்சலே அதில் நாசர் நடித்திருப்பது தான்.
/எதை கேபிள்ஜி
புரியலையே.
ஆன்மா இல்லை என்கிறீர்களா?//
ஒரு திரைப்படத்துக்கு ஆத்மா திரைக்கதை முரளி.
/// அப்பிடிலாம் இருக்க வாய்ப்பேயில்லண்ணே//
ஏற்கனவே பதில் சொல்லியிருக்கேன் ஆதி..
நான் ரொம்ப எதிர்பார்த்த படம். கவுத்திட்டாங்க போல இருக்கே...!! :( :(
எப்படியும் பார்க்கத்தான் போறேன், கத்துக்க ஏதாவது இல்லாமலா போகும்
/நான் ரொம்ப எதிர்பார்த்த படம். கவுத்திட்டாங்க போல இருக்கே...!! :( :(
//
ஆமாம் பாலா..
கேபிள் சங்கர்.
.எப்படியும் பார்க்கத்தான் போறேன், கத்துக்க ஏதாவது இல்லாமலா போகும்
//
ரைட்டு முடிவாத்தான்யா இருக்காங்காங்க..
மொதல்ல சாம்பார்... அப்பறந்தான் நீ...
இந்தப் படம் கண்டிப்பா ஹிட்டு... மைண்ட் இட் !!!
சூப்பர் கேபிளாரே...
//இந்தப் படம் கண்டிப்பா ஹிட்டு... மைண்ட் இட் !!!//
இந்த படம் எவ்வளவோ பெட்டர்னு நினைக்கிறேன்....
Post a Comment