Thottal Thodarum

Sep 30, 2009

சன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி


இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது.

பரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை..? அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..?

இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு பிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..

ஆனால் சுபாஷினால் பட்ட அவமானம் மட்டும் ஆறவேயில்லை..கலாநிதிக்கு.. காத்திருந்தார். தங்களது சுமங்கலி கேபிள் விஷன் ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில், சென்னையில் அப்போது இருந்த எம்.எஸ்.ஓ எனப்படும் மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் என்று இருந்தவர்களில் முக்கியமான நிறுவனமாயிருந்தது ஜீ டிவியின் சகோதர கம்பெனியான சிட்டி கேபிள்.. மற்றும் ஏ.எம்.என்.. தங்களது கம்பெனி ஆரம்பிக்கப் பட்டவுடன் முதல் களபலியாய் சன் போட்டது சிட்டி கேபிளைதான். அதன் பிறகு தமிழ் நாட்டில் அவர்களின் நிறுவனத்துக்கான அறிகுறி ஏதுமில்லை.

2001ல் ஜீ தனது தமிழ் சேனல் ஆசையை பாரதி என்று ஆரம்பிக்க, ஆரம்பித்த சில காலங்களிலேயே மூடுவிழா நடத்தினார்கள். அதற்கும் பல காரணங்கள் பிண்ணனியில் இருக்கிறது. பிறகு அவர்கள் தமிழில் சேனல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் தங்களுடய பலத்தை வைத்து தள்ளிப்போட வைத்த விஷயமும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் ஜீ இந்திய பிராந்திய மொழிகளில் கவனம் கொள்ள ஆரம்பிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும் ஆரம்பிக்க, தமிழிலும் காலூன்ற மட்டும் வருடங்கள் ஆனது என்னவோ நிஜம்..

இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தில் பிரபலமான எம்.எஸ்.ஓவான ஆர்.பி.ஜி தங்களுடய நெட்வொர்கை விற்கபோவதாய் தெரிய, அந்த நேரத்தில் பெங்காலி சேனல் ஆரம்பிக்க முஸ்தீப்புடன் இருந்த சன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அதை வாங்கி தங்களது சேனலை நிலைநாட்டிக் கொள்ள நினைத்திருந்த போது ஜீயும் தனது பெங்காலி சேனலை ஆரம்பிக்கவிருந்தது.எப்படி சன் தெற்கு பிராந்திய மொழிகளில் முதன்மையாய் இருந்ததோ, அதே போல் ஜீ மற்ற ஏரியாக்களின் பிராந்திய மொழிகளில் நம்பர் ஒன்னாக இருந்த நேரம். வேறு சேனல்களூம் இல்லாத நிலையில் புதிய ஸ்டாராங் எண்ட்ரியான சன்னை உள்ளே அனுமதிக்க மனமில்லாமல், போட்டி போட்டுக் கொண்டு, தங்களுடய அரசியல், பண பலம் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஆர்.பி.ஜியை கைபற்றியது.. அதன் பின் சன்னின் பெங்காலி சேனல் கனவு தள்ளிப்போடப்பட்டது.

இந்த தொழில் போட்டியில் உள்ளே ஓடும் வன்மம் தான் இப்போது வெளிவந்திருக்கிறது.. தமிழில் ஜீதமிழ் ஆரம்பித்த நேரம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடுமபத்திற்கும் இடையே லடாய் இருந்த நேரம்.. அதனால் அப்போது அரசின் ஆதரவோடு இருந்த எம்.எஸ்.ஓவில் உடனடியாய் கிட்டத்தட்ட ப்ரைம்பேண்டில் அலாட்மெண்டும், செட்டாப் பாக்ஸுகளில் பிரதானமும் கிடைக்க, சில மாதங்கள் மக்களிடையே தெரிந்து கொஞ்சம், கொஞ்சமாய் ரீச் ஆக ஆரம்பிக்க, அந்த நேரத்தில் எஸ்.ஸி.வியிலும் அவர்களின் சேனலை தெரியவைக்க அலைய வைத்தது.

பின்பு கண்கள் பனித்து, இதயம் இனித்தவுடன், மீண்டும் தன் முழு கட்டுப்பாட்டை எடுத்த எஸ்.ஸி.வி.. முன்னாள் அரசு ஆதரவு எம்.எஸ்.ஓவை தூக்கிவிட்டு.. தன் முழு வீச்சை பரப்பியது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் தன்னுடய நெட்வொர்கை வைத்திருக்கும் எஸ்.சி.வி.. தன்னுடய நெட்வொர்க்கில் ஒரு சேனலை ஒளிபரப்ப, கேரேஜ் பீஸ் என்று ஒரு தொகையை வாங்கிக் கொண்டுதான் ஒளிபரப்பும். இதுதான் எல்லா எம்.எஸ்.ஓக்களும் செய்வார்கள்.. அவர்களின் தொழில் லாபமே இந்த் கேரேஜ் பீஸிலிருந்துதான். உலகம் பூராவுமே இதுதான் நடைமுறை.. டிடி.எச்சுக்கு இதே நடைமுறைதான்.

வருடத்துக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து தமிழகம் எங்கும் உள்ள தங்களது நெட்வொர்க்கில் ஒளீபரப்ப ஒப்பந்தம் போட்டது ஜீ. ஆனால் ப்ரைம்பேண்ட்டில் இல்லாததால்.. அவர்களுக்கான ரீச் இல்லை.. அதுமட்டுமில்லாமல் சென்னையில் செட்டாப் பாக்ஸ் முறையில் இருப்பவர்கள் டிஜிட்டலில் வரும் சிக்னலில் உள்ள சேனலகளை பார்ப்பார்களே தவிர, அனலாகில் உள்ள சேனல்களை மாற்றி பார்ப்பதில்லை.. எனவே.. வேறு வழியில்லாமல் ஜீ தங்களது சேனலின் நிலைப்பாட்டை தகக வைத்துக் கொள்ள பணிந்து போய் தங்களது சூப்பர் ஹிட் தமிழ் பட உரிமையை சன்னுடன் ஷேர் செய்ய முடிவு செய்தது.. படம் ஒளிப்பரப்பான அடுத்த நாள் ஜீதமிழ் சன் நெட்வொர்க்கில் டிஜிட்டல் நெட்வொர்க்கில் வந்துவிட்டது.

இப்போதைக்கு ஜீ பணிந்தது போல் இருந்தாலும், பின்னால் பாய்வதற்கும் தயாராய் இருக்கும் என்றே தோன்றுகிறது..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 29, 2009

கொத்து பரோட்டா -29/09/09

நேற்று சன் டிவியிலும், ஜீதமிழ் சேனலிலும் சுப்ரமணீயபுரம் படத்தை ஒளிபரப்பினார்கள். எனக்கு தெரிந்த தகவல்களின்படி அந்த படத்தின் உரிமை ஜீதமிழ் சேனலே சுமார்45 லட்சத்துக்கு வாங்கியதாய் சொன்னார்கள். ஆனால் எப்படி ஒரே நாளில் அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் ஒளிபரப்ப முடியும்? இதன் பின்னால் உள்ள உள்குத்து என்ன என்றே புரியவில்லை.. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று விளம்பர படுத்தும் காலம் போய், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் இரண்டு சேனல்களில் என்று விளம்பர படுத்தும் காலம் போலிருக்கிறது.
*************************************************************************************
செவிக்கினிமை
ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்..

அதே போல் அவரின் இளவல் யுவனின் இசையில் “யோகி” படத்தில் வரும் தீம் மீயூசிக் இசை தொகுப்பில் வரும் சாரங்கி.. ம்ம்ம்.. நெகிழ வைக்கிறது.. ஸ்பெல்பவுண்ட்..
************************************************************************************
சாப்பாட்டு கடை
மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே ஒரு சோறு என்றொரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது.. மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் எந்த ரெஸ்டாரண்டிலும் பார்க்கவில்லை. ஒரு ப்ளெயின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்து ஒரு ஐந்து நிமிடத்தில் சீரக சம்பா பிரியாணியும், சின்ன சின்ன பீஸாய் சுக்கா பீஸை மசாலாவில் பிரட்டி எண்ணையில்லாமல் காரம், மணத்தோடு.. ம்ம்ம்.. டிவைன்..
*************************************************************************************
குறும்படம்
இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து வைத்திருந்தேன். நண்பர் பதிவர் கே.ஆர்.பி.செந்திலும் இதை ரிகமெண்ட் செய்தார்.. மிக வித்யாசமாய் உருவாக்கப்பட்ட படம்.. பாருங்களேன்.

*************************************************************************************
ஏஜோக்
ஒரு பெண் அவளது காதலனுடன் செக்ஸ் முடிந்து படுத்திருக்க, அவன் அவளது கணவனது நெருங்கிய நண்பன். அப்போது போன் அடிக்க, பெண் போனை எடுத்து பேசுகிறாள்.. “ஓ...அப்படியா..?” “நல்லது” “அப்ப நலலா சந்தோஷமா எஞாய் பண்ணுறீங்கன்னு சொல்லுங்க்” “ நைட் ஆகுமா” “ஓகே பரவாயில்லை” “நல்லா ஜாலியா இருந்துட்டு வாங்க” என்று தொடந்து பேசிவிட்டு போனை வைத்து விட ஆர்வம் தாங்காமல் காதலன், “யார் போன்ல?” என்று கேட்க, அவள் “ வேறு யாருமில்லை. என் புருஷந்தான்.. நீங்களும் அவரும் ஜாலியா மகாபலிபுரம் பீச்சில குளிச்சிட்டு இருக்கிறதா சொன்னாரு. அதான் ஜாலியா இருங்கன்னு சொன்னேன்” என்றாள்.

ஜோக்
நண்பர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருக்க, அவர் வீட்டுக்கு சென்றான். விருந்தளித்தவர் ஒவ்வொரு முறையும் அவரின் மனைவியை, ‘ஹனி” “டியர்’ “ஸ்வீட் ஹார்ட்” என்று செல்லம் கொஞ்சியே அழைப்பதை பார்த்துவிட்டு.. “ திருமணமாகி இவ்வளவு வருஷம் கழித்தும் இவ்வளவு அன்போடு, செல்லமாய் அழைக்கிறீர்களே..? அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆச்சர்யபட, “அவளுடய பேர் மறந்துவிட்டது் அதனால்தான் அப்படி கூப்பிடுகிறேன் என்றார்.
*************************************************************************************
இன்று ஒரு தகவல்
ஊர் இருக்கும், ஆனா வீடு இருக்காது, கடல் இருக்கும் ஆனா தண்ணியிருக்காது அது என்ன..?
வேர்ல்ட் மேப்

ங்கொய்யால.. யார்ரா அவன்..?
*************************************************************************************
இந்த வார கவிதை..???
காதல் v/s நட்பு

காதலைவிட
பெரியது நட்பு
என்கிறார்கள்,
அட முட்டாள்களே
நட்பு என்றாலே
வேறு ஒருவரின் மீது
செலுத்தும் அன்புதானே..!
*************************************************************************************

டிஸ்கி: நானும் ஒரு கவிதை உருப்படியா எழுதுற வரைக்கும் இந்த இம்சை தொடரும்..

Sep 28, 2009

”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு

DSC00333 DSC00334


சில மாதங்களுக்கு பிறகு பதிவர் சந்திப்பு நேற்று நடந்தது.அலைகடலென திரண்டு வாரீர் என்று சொன்னது.. அடை மழை என்று புரிஞ்சிடுச்சு போலருக்கும் கூட ஆரம்பித்து ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் மழை பிச்சிகிச்சு. இருந்த ஓரே மரத்தின் அடியில் ஆயிரம் பேர். தொப்பலாய் நினைந்தபடி, இதற்கு பேசாமல் மழையிலேயே நின்றிருக்கலாம்.

மீண்டும் மழை நின்றவுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.. பதிவர் முரளிகண்ணன் அண்ணன் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு, சிறுகதை பட்ட்றை, சிறுகதை போட்டி ஆகியவற்றை சிறப்பாக நடத்தியதற்காக நன்றியும், சிங்கை நாதனுக்கு சென்னையில் இருந்து நிறைய பதிவர்கள் உதவியதற்காகவும், அதை முன்னிருந்து ஒருமுனை படுத்திய நர்சிமுக்கும், புதியதலைமுறை வார இதழில் பதிவுலகிலிருந்து பத்திரிக்கையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும், அதிஷா,லக்கிலுக் ஆகியோரை பாராட்டியும், அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்குள் வந்தமைக்காகவும், நான்கு லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியதற்காகவும் எனக்கும் ஒரு வாழ்த்தும், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆரம்பிக்கும் “அகநாழிகை” இதழ் வெற்றி பெற வாழ்த்தியும் ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கும் போது அவர் பின்னால் மேகங்கள் திரண்டன, இடி இடித்தது..


வ்ந்திருந்த பதிவர்கள் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டார்கள். பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டதது மகிழ்ச்சியாகவே இருந்தது. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அடை மழை பெய்ய..மீண்டும் அதே மரம், ஆயிரம் பேர், தொப்பலாய்.. அரை மணி நேரம் கழித்து நண்பர் அதியமான் சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் நிற்க, வழ்க்கப்படி டீக்கடையில் தொடர்ந்தது.


பீச்சுல பதிவர் சந்திப்பு வச்சா மழை வருது. அதனால ஏதாவது ஒரு க்ளோஸ்டு இடத்தில் அடுத்த சந்திப்பை நடத்தலாமா என்று ஒரு யோசனை. உங்களீன் மேலான ஐடியாக்களை அள்ளி விடுங்கள்.
DSC00327 DSC00328
ஊர்சுற்றியும், மழை வருமோ என்ற கவலையுடன் அதிஷா, ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம்

DSC00329 DSC00330
ஆருடம் சொன்ன அதியமான், எவனோ ஒருவன், வெங்கிராஜா, நிலாரசிகன்

DSC00331 DSC00332
நிலாரசிகன்,அடலேறு ராஜராஜன்
DSC00335 DSC00336

மேங்கங்கள் புடைசூழ முரளிகண்ணன், மணிஜி (எ)தண்டோரா, காவேரிகணேஷ்
DSC00337 DSC00338

எவனோ ஒருவன், நிலாரசிகன், சரவணன், முரளிகண்ணன்


DSC00339 DSC00340

பதிவர் ஜனா, வந்திருந்த ஒரே பெண் பதிவர் அமுதா கிருஷ்ணன்,
DSC00342 DSC00343
முதல் மழையில் நினைந்த காந்தியும், கே.ரவிஷங்கரும்


DSC00345 DSC00346


அகநாழிகை பொன்.வாசுதேவன், டம்பிமேவி, காவேரி கணேஷ்.

இவர்களை தவிர போட்டோவில் அகப்படாத டோண்டு, டாக்டர் புருனோ, சுகுணாதிவாகர், நர்சிம், பைத்தியக்காரன், பட்டர்ப்ளைசூர்யா, வளர், ஆகியோரை தவிர மழையில் பார்க்க முடியாமல் போன இன்னும் சில பதிவர்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்ப்போம்.

டிஸ்கி:

விட்டு போனவஙக் கோச்சிக்காம சொன்னீங்கன்னா சேர்த்துடலாம்.

Sep 25, 2009

திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும், அலெக்ஸா ரேங்கிங்கில் 93,714 கொடுத்த அன்பு சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ..


ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை..

ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது.

அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இயல்பான ஸ்லாப்ஸ்டிக் காமெடி.. குழந்தையின் தாய் தகப்பனை தேடி பிடிகக் அலைய, காணாமல் போனவள் ஒரு டுபாக்கூராய் இருக்க, அவள் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்க, ஒரு பக்கம் ஒரிஜினல் அப்பா அம்மா அலைய, அக்ரிமெண்ட் கிடைககாமல் மெளலி டென்ஷனாகி இருக்க, அவரிடம் உண்மையை சொல்லாமல் காரிய முடிக்க முயலும் ரூபா, அஜ்மல் ஜோடி, இதற்குள் அவர்களுக்குள் உண்டாகும் காதல். என்று ஒரே ஜாலிதான்.

அஜ்மலுக்கு மிக இயல்பாய் காமெடி வருகிறது.. பொறுப்பில்லாத ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். அதே போல் ரூபா மஞ்சரி. முதல் காட்சிகளில் பார்க்கும் போது சுமாராய் இருப்பவர், படம் முடியும் போது அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. அவ்வளவு இயல்பான கேர்ள் நெக்ஸ்ட் டோர் இம்பாக்ட்.. இவருக்கும் ரியாக்‌ஷன்கள் இயல்பாய் வந்து உட்காருகிறது.

மெளலி தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிருபித்து காட்டுகிறார். டென்ஷனான நேரட்த்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள், ஆளை தவிர பேரை எப்போதுமே மாற்றி, மாற்றி சொல்லும் அவரின் கேரக்டர் அருமை.

தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர்.. அருமையான பேக்ரவுண்ட் கலர்ஸ், துல்லியமான ஒளிப்பதிவு என்று கலக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் பாடல்கள் ஓகே. ஜில்லுனு வீசும் பூங்காற்று பாடல் மட்டும் நல்ல மெலடி.

கதை, திரைகதை,வசனம், எழுதி இயக்கி இருக்கும். ஜே.எஸ்.நந்தினிக்கு முதல் படம்.. பார்த்தால் தெரியவில்லை. மிக இயல்பான டயலாக்குகள், ஒன்லைனர்கள், ஆர்டிஸ்டுகளிடம் வேலை வாங்கியிருக்கும் பாங்கை பார்த்தால் நிச்சயம் தெரியவில்லை.. ஆரம்பித்த முதல் பத்து நிமிஷத்துக்கு வழக்கம் போல இரண்டு பேருக்கான ஈகோ க்ளாஷ் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, குழந்தையை கொண்டு வந்து திருப்பத்தை ஏற்படுத்தி, அதற்கப்புறம் ஸ்பீடுதான்.

ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை தொங்கினாலும் பின்னால் வரும் சில காட்சிகள் அதை ஈடு கொடுத்து சரி செய்து விடுகிறார். குழந்தை திருடி நர்ஸை தர்ட் டிகிரி மெத்தடில் விசாரிக்கும் காட்சி செம ரகளை.. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமெடி கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டார். அந்த குழந்தைக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள் .. ஸோ... ஸோ.. ஸ்வீட்..

திரு திரு துறு..துறு...- Go For It…

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

சினிமா வியாபாரம் -6

நான்கு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய, சக பதிவர்கள், வாசகர்களுக்கு, நன்றி.. நன்றி..நன்றியோ.. நன்றி..

எம்.ஜி.(Minimum Guarentee)

மினிமம் கேரண்டி என்றால் குறைந்தபட்ச உத்திரவாதம் என்று வைத்து கொள்ளலாம். அதாவது குத்து மதிப்பாய் ஒரு படத்தை அதன் நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களை வைத்து, இதற்கு முன் அந்த நடிகர், நடிகை நடித்த படஙக்ளின் வசூல் போன்ற எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த படம் இவ்வளவு வசூல் செய்யும் என்ற அனுமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை பேசுவது.

நாங்கள் துள்ளுவதோ இளமை என்கிற படத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் சென்னை மாநகர உரிமைக்கு ஐந்து லட்சம் எம்.ஜி. கேட்டார்கள், நாங்களோ அவுட்ரைட்டாக கேட்டோம். அப்படத்தை எம்.ஜியில் எடுத்திருந்தால். படத்தின் வசூல் ஐந்து லட்சம் வரும் வரை நாம் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கு தொகையும் தர தேவையில்லை. அதே நேரம் அப்படம் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி வசூலை பிரித்து கொள்வார்கள். ஒரு வேளை அப்படம் ஐந்து லட்சம் வசூல் வரவில்லை என்றால் தயாரிப்பாளரை எந்த விதத்திலும் பாதிக்காது. விநியோகஸ்தர்களைதான் பாதிக்கும்.

அதே படத்தின் உரிமையை எங்களுடய நண்பர் வேறொருவர் சென்னை உரிமையை எம்.ஜி என்கிற விதத்தில் வாங்கினார். படம் சுமார் பதினாறு லட்சம் வசூல் செய்தது என்றார்கள். அந்த வகையில் மீதம் உள்ள பதினோரு லட்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவீதத்தை அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தப்படி விநியோகஸ்தர் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி பகிர்ந்து கொடுக்காத, கணக்கு மட்டுமே காட்டும் விநியோகஸ்தர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதனால் தான் தயாரிப்பாளர்கள் படம் வெளீவருவதற்கு முன்னமே முடிந்தவரை அறுவடை செய்துவிடுவார்கள். பின்னால் அவர்களுக்கு ஏதும் தேறாது என்பதால்.

மிகப்பெரிய ஹிட் படமான உள்ளத்தை அள்ளித்தா திரைபடத்தின் தயாரிப்பாளர் சம்பாதித்ததை விட, அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் சம்பாதித்தது இரண்டு மடங்கு என்றால் அது மிகையாகாது. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, சுந்தர்.சியின் இயக்கம், மீடியம் பட்ஜெட், காமெடி படம் என்கிற அளவிலேதான் அந்த படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே அபிப்ராயம் இருந்தது. அதனால் பல ஏரியாக்கள் அவுட்ரைட் முறையிலேயே விற்றால் போதும் என்று விற்றார்கள். படம் வெளியாகி முதல் இரண்டு வாரங்களுக்கு பெரிதாய் ஒன்றும் ஓடவில்லை. ஆனால் அதன் பிறகு படம் பிக்கம் ஆகி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனால் மிகவும் லாபமடைந்தவர்கள் விநியோகஸ்தர்களே..

இதே நிலைமைதான் சேது படத்திற்கும், படம் மிகப்பெரிய ஹிட் என்றாலும் அதனால் தயாரிப்பாளருக்கு லாபம் ஒன்றும் பெரிதாய் கிடையாது.. என்ன இந்த ஒரு படம் ஹிட் தயாரிப்பினால், அடுத்த படம் தயாரித்தால் மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்க முடியும். அது கூட உடனடியாய் தயாரித்தால்தான். இல்லாவிட்டால் வெற்றிகள் மறக்கபடும். சேது தயாரிப்பாளர் அடுத்த படம் தயாரிப்பதற்கு சில வருடங்கள் ஆனது. அவர் அடுத்து தயாரித்த படம் கும்மாளம் அது ஒரு தோல்விபடமாய் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திலும் அவரால் பெரிய அளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை.. ஏனென்றால் அவர் சேதுவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து தயாரித்ததினாலும்தான். அதே போல் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள வசூல் ஒப்பந்தம் வேறு. அதை பற்றி பிறகு பார்ப்போம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 24, 2009

District-9 (2009)



டிவிடியை சும்மா போட்டு பிரிண்ட் செக் செய்வோம் என்று போட்ட அடுத்த செகண்ட் என்னையும் அறியாமல் படத்துக்குள் இழுத்து சென்றது. District9.

1982 சவுத் ஆப்பிரிககவில் ஜோகன்ஸ்பெர்கில் ஒரு விண்கலம் வந்து நிற்கிறது.. அதனுள் தலைவனில்லாத, ஆயிரக்கணக்கான, ஏலியன்கள் உடல்நலமில்லாமலும், சத்தில்லமலும் மயங்கி போய் இருக்க, அவர்களை விண்கலத்திலிருந்து கீழிறக்கி, District 9 என்கிற ஒரு அகதிகள் முகாமை ஏற்படுத்துகிறது அரசு. சில ஆயிரங்களில் வந்த ஏலியன்கள் இப்போது பல்கி, பெருகி, 1.5 மில்லியனாக வளர்ந்து ஒரு ஏலியன் ஸ்லம்மாகவே இருக்கிறது

MNU என்கிற மல்டி நேஷனல் யுனைட்டெட் என்கிற தனியா ராணுவ நிறுவனம்தான் இவர்களை கட்டுபடுத்துகிறது. ஒரு கட்டத்தில் இவர்களையெல்லாம் டிஸ்ட்ரிக்ட் 9லிருந்து புதிதாய் ஊருக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள டிஸ்ட்ரிக்ட் 10க்கு மாற்ற முடிவு செய்கிறது நிறுவனம்.. அதற்காக அவர்களுக்கு எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்க போகும் ஒரு அதிகாரியாய் பொறுப்பேற்கிறார். விக்கூஸ்..

அங்கு ஒவ்வொருவருக்காக எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்கப் போகும் போது பல ஏலியன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில் கிரிஸ்டோப்ர் என்று அழைக்கப்படும் ஒரு ஏலியன், இந்த பூமியிலிருந்து தன் தாய் கப்பலை இயக்க பல லிட்டர் விஷய்ங்களீலிருந்து ,சொட்டு சொட்டாய் இருபது வருடங்கள் போராடி தயார் செய்திருந்த விமான எரிபொருளை, விக்கூஸ் கைபற்றுகிறார். அதை ஒரு முறை திறந்து பார்க்கும் போது, அந்த திரவம் அவரின் முகத்தில் பட்டு, அவர் நோய் வாய் படுகிறார். அவரின் உடலில் உள்ள டி.என்.ஏவும், அந்த் திரவமும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவரும் ஒரு ஏலியனாய் மாறுகிறார்.

முதல் அவரது கை மட்டும் ஏலியன் போல் உருமாற.. அவரை வைத்து அவரது நிறுவனமே டெஸ்ட் செய்ய ஆரம்பிக்க, அங்கிருந்து தப்பி ஓடி வேறு வழியில்லாமல், டிஸ்ட்ரிக்ட்9ல் ஒளிந்து கொள்கிறார். அப்போது அவருக்கும், கிரிஸ்டோபர் என்று அழைக்கப்படும் ஏலியனுக்கும் நட்பு ஏற்பட்டு, அவரின் மாற்றத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் அதற்கு அந்த திரவம் தேவை என்று கூற, அவரும் ஏலியனும் சேர்ந்து தன் அலுவலகத்திலிருந்து அந்த திரவத்தை கடத்தி வந்து தாய் களத்துடன் இணைக்கும் சிறுகலத்தை கிளப்ப, அந்த கலத்தை ராணுவம் சுட்டு வீழ்த்த, தாய் விண்கலத்திலிருந்து விழுந்த ரோபாட்டும் உயிர்பெற அதனுள் அமர்ந்து ஹீரோவும், ஏலியனும் போராட, கீழே விழுந்த சிறு கலத்தை கிரிஸ்டோபரின் பையன் சின்ன ஏலியன் இயக்கி கிளப்ப, நிசசயமாய் மூன்று வருடஙக்ளுக்குள் தான் திரும்பி வ்ந்து அவனை முழு மனிதனாக்குவேன் என்று சத்தியம் செய்து விட்டு செல்கிறது.

கிரிச்டொபர்.. தாய் கலத்துடன் இணைந்த சிறு கலம் கிளம்பி செல்ல, நாடே சந்தோசப்பட, டிஸ்ட்ரிக்ட் 9 அங்கிருந்து இடம் பெயர்ந்து டிஸ்ட்ரிக்ட் 10ல் இருக்க, இப்போது அங்கே 2.5மில்லியன் ஏலியன் வாழ்ந்து வருகிறதாய் டீவி செய்திகள் சொல்ல,

விக்கூஸ் இறந்து விட்டதாய் அவரின் மனைவியிடம் சொலல்ப்பட, ஆனாலும் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாவை பார்த்து தன் கணவன் இன்னும் இறக்கவில்லை என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ, இங்கெ டிஸ்ட்ரிக்ட்10ல் ஒரு ஏலியன் கீழே கிடக்கும் குப்பை சத்தையிலிருந்து ஒரு ரோஜாப்பூ போன்ற விஷயத்தை உருவாக்கி அதை பார்த்து கொண்டிருந்தது.. அது விக்கூஸ்..

வழக்கமாய் வரும் ஏலியன் படஙக்ள் போல் அல்லாமல், அவர்களுக்கு ஏதும் ஸ்பெஷல் சக்தி ஏதுமில்லாமல். வாழ்விழந்து அகதிகளாய் வாழும் மனிதர்களின் நிலை போன்ற ஒரு வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். அகதிகளின் முகாம், அங்கே அவர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள், மனித மாமிசம், மற்றும் ஏலியன் மாமிசம் சாப்பிடும் மனிதர்கள், அங்கே ஏலியன்களை உபயோகப்படுத்தும் கேங்க்ஸ்ட்ர்கள், மாபியா கும்பல்கள், ஏலியன்களை வைத்து டெஸ்ட் செய்யும் எம்.என்.யூ. என்று குட்டி, குட்டியாய் கதை சொல்கிறார்கள் டாக்குமெண்டரி பாணியில்.

ஏலியன்களின் உருவ அமைப்பு வேண்டுமானால் பயங்கரமாய் இருக்கலாம்.. ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் படத்தின் கேரக்டர்களாகவே மாறி விடுகிறது. ஒரே மாதிரியிருக்கும் ஏலியன்ங்களில் எது கிரிஸ்டோபர் எது வேறு ஏலியன் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு ஒன்றிவிடுகிறோம். அவ்வளவு தத்ரூபம்.

ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, மேக்கிங் என்று வழக்கமான விஷயஙக்ளிலிருந்து மாறுபட முயற்சி செய்திருக்கிறார்கள். ஏலியன்களின் பிரச்சனைகளூடே ஏலியனாய் மாறி கொண்டிருக்கும் மனிதனின் பிரச்சனையும், ஒரு சேர ஓட, உருக்கம்.

District -9 – Not To Miss..


டிஸ்கி
ஏலியனை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கும் நைஜீரியாவிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதாம். படத்தை எடுத்த சோனி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று.. ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா.. ?

சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 23, 2009

சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு

சென்னை பதிவர் சந்திப்பு நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது பதிவர்கள், உலக சினிமா கூட்டம், சிறுகதை பட்டறை என்று சந்தித்து கொண்டாலும், வழக்கமான சந்திப்பு நடந்து நாளாகிவிட்டதால், நிறைய புது பதிவர்கள் வந்திருப்பதாலும், பதிவர் சந்திப்பில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நிறைய விஷயங்கள் இருப்பதாலும், பதிவர் சந்திப்பு நடத்துமாறு பல புதிய பதிவர்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க..

வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்(MERINA BEACH GANDHI STATUE BACK SIDE) மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது.

புதிய பதிவர்கள்,பழம் பெரும் பதிவர்கள், மீடியம் பதிவர்கள் என்று அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். மேல் விபரஙக்ளுக்கு

லக்கிலுக்9841354308
அதிஷா 9884881824
கேபிள் சங்கர் 9840332666
முரளி கண்ணன் 9444884964
நர்சிம் 9841888663
மணிஜி 9340089989

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 22, 2009

மதுரை- தேனி – திரை விமர்சனம்

Madurai_2_Theni_ _7_

மதுரையிலிருந்து தேனிக்கு செல்லும் பஸ்ஸில் நடக்கும் ஒரு நாள் கதை. அட போட வைக்கும் லைன் தான்.  வாத்யார் வேலை கிடைத்து தேனிக்கு முன் உள்ள ஒரு கிராமத்தில் வேலையில் சேருவதற்காக மதுரையிலிருந்து தேனிக்கு செல்கிறான் ஹீரோ.

பஸ்ஸ்டாண்டில் ஹீரோயினை பஸ் ரிவர்ஸ் எடுக்கும் போது நடக்கவிருந்த விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். உடனே அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். பஸ் மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக, தேனி போவதற்குள் அவன், அவளிடம் காதலை சொன்னானா இல்லையா.. என்பது தான் படம்.
Madurai_2_Theni_ _12_


கதையின் லைன் சொல்லும் போது இண்ட்ரஸ்டாக இருந்தாலும், நிகழும் சம்பவஙக்ள் சுவாரஸ்யமாய் இல்லை. ஆனா.. ஊனா என்றால் காமெடி செய்கிறேன் என்று நெல்லை சிவா, முத்துக்காளை, படத்தில் வரும் ரஜினி ரசிக கண்டக்டர், என்று எல்லோரும் காமெடியாய் தான் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் சிரிப்புதான் வர மாட்டேன் என்கிறது.



ஹீரோவை, ஹீரோயின் காதலிக்க, அவனை புத்திசாலியாகவும், நல்லவனாகவும் காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், காமெடியின் உச்சம். ஒரு பெரிய ஊர் கூட்டம் பஸ்ஸை மரித்து குடிநீருக்காக போராட, யார் சொல்லியும் கேட்காதவர்கள், ஹீரோ வந்து ஒரு பத்து நிமிஷம் பேசினவுடன், அதுவும் பெரிய ஐடியா ஏதும் கொடுக்கவில்லை,இங்கே போராடுவதை விட, அரசாஙக் அதிகாரிகளிடம், எம்.எல்.ஏவிடம் போய் போராடுங்கள் என்று சொல்கிறார். அடப்போங்கப்பா.Madurai_2_Theni_ _40_



படத்தில் ஒரு திருப்பமான விஷயமே ஹீரோயினிடம், தான் அவளை காதலிப்பதாய் சொல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள கேட்பது. பின்பு அவள் ஊரில் போய் தேடி அவளீன் தகப்பனிடம் பெண் கேட்டு, பிரச்சனை பஞ்சாயத்து வரை வந்து களேபரமாகி, ஒரு நாள் காதல் கல்யாணத்தில் முடிகிறது.



கடைசி பத்து நிமிஷங்களில் தான் கதையே சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஹீரோவுக்கு நடிக்க இன்னும் கொஞ்சம் வருஷங்கள் ஆகலாம். ஹீரோயின் பரவாயில்லை.. ஆனால் கிராமத்து பெண்ணான அவருக்கும் மேக்கப்பை அப்பி விட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ச் காட்சியில் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் சிரியல் வகை.
 Madurai_2_Theni_ _43_


ப்டத்தில் பாராட்ட படவேண்டிய ஒரு விஷயம் ஒளிப்பதிவு. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதிலும் உயர்நிலை கேமரா இல்லாமல். HDV SONY 270யில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருமையான ஒளிப்பதிவு.. வெயில் ப்ளீச், இல்லை, அருமையான பிண்ணனி கலர் காம்பினேஷனில்.. கண்க்ளை பதம் பார்க்காத ஒளிப்பதிவு.



கும்பல், கும்பலாய் பேசுவது, எல்லோரும் வந்திட்டாங்கய், போயிட்டாய்ங்க, என்று ஒரே சமயத்தில் பேசுவதும், ஓலை பாயில் ஒன்னுக்கிருந்தார் போல சள சளவென பேசிக் கொண்டிருக்கும் ஒரு அம்மாவையோ.. கிழவியையொ வைத்து பேச விட்டால் லைவாக படமெடுப்பதாய் அர்த்தமில்லை. இன்னொன்றை விட்டு விட்டேன். நடு நடுவே பழைய இளையராஜாவின் பாடல்களை பிண்ணனியில் ஓட விட்டுவிட்டால் போதுமா..? அது காட்சிகு என்ன விதத்தில் உதவுகிறது என்றே தெரியவில்லை.



இம்மாதிரியான படங்களுக்கு திரைக்கதை ரொம்ப முக்கியம். அது இல்லாததால் முதல் பாதி முழுவதும் போர் அடிக்கிறது. இரண்டாவது பாதியிலும் போர் அடிக்கிறது. அதுவும் தாலிக்கு பதிலாய் அரணாக்கயிறை கழுத்தில் கட்டுவதெல்லாம் புதுமை என்று சொல்லி.. முடியலாடா சாமி



மதுரை – தேனி – பஸ் ஸ்டார்டே ஆவல



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 20, 2009

கண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.



கண்ணுக்குள்ளே திரைப்படத்தின் இயக்குனர் திரு. லேனா மூவேந்தருடன் ஒரு பேட்டி..

உங்க படத்தை பற்றி சொல்லுங்க?
ஒரு நல்ல படத்தை, வித்யாசமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை, மனதை வருடும் காட்சிகளோடு, எல்லாத்துக்கும் மேல ராஜா சாரோட இசையோடு கொடுத்திருக்கிறேன்ற, சந்தோஷத்தில இருக்கேன்.. வர்ற 25ஆம் தேதி ரிலீஸ்..

உங்க கதாநாயகனை பற்றி..?
கதாநாயகனா கும்மாளம் படத்தில் நடிச்ச மிதுன் நடிச்சிருக்கார். இவரு கிட்ட முதல்ல கதை சொல்லப் போகும் போது, நான் சொன்ன முத விஷயம்.. “சார்.. படத்துல பஞ்ச் டையலாக் கிடையாது, பில்டப் கிடையாது.. ஃபைட் கிடையாது.. ஏன்.. படத்தோட ஆரம்பத்துல முத 20 நிமிஷம் உங்களுக்கு டயலாக்கே கிடையாது.” இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா. ஏற்கனவே ஒரு ஹீரோ கிட்ட நான் கதை சொன்ன போது இதெல்லாம் இல்லைன்னு சொன்னாரு.. அதனால் தான் முதல்லேயே உங்க கிட்ட சொல்றேன். என்றவுடன்.. பரவாயில்லை சொல்ல்லுங்கனு சொன்னாரு. கதை கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்து ஒப்பு கொண்டார். இந்த படம் மூலம் மிதுன் நிச்சயமாய் தமிழ் சினிமாவில் பேசப்படக்கூடிய நடிகராய் இருப்பார்.

உங்க கதாநாயகிகள்..?
அனு என்கிற கேரள வரவு. மிகவும் குடும்ப பாங்கான, பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கேரக்டர்.. நன்றாக நடித்திருக்கிறார்.

இன்னொரு ஹிரோயின் அபர்ணா.. இதுவரை நீங்க யாரும் பாக்காத ஒரு கோணத்தில அவஙக் கலக்கியிருக்காங்க.. அவ்வ்ளவு பாந்தமான நடிப்பை கொடுத்திருக்காங்க.. இந்த படத்தின் மூலமா அவங்க நடிப்பு பேசப்படும் என்று உறுதியாயிருக்கிறேன்.

ராஜா சாருடன் ..?
இந்த கதை ரெடி பண்ணிய உடனேயே.. இசை சம்மந்தப்பட்ட படம்,வேற இதுக்கு ராஜா சார்தான் தவிர வேற யாரு மனசுல வருவார் சொல்லுங்க.. முதல்ல அவர்கிட்ட அட்வான்ஸ் கொடுக்க போன போது வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. முதல்ல கதை சொல்லுங்க, அப்புறம் எல்லாம்னு சொன்னவுடனே.. கதைய கேட்டாரு.. கேட்டவுடனே.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. “நீங்க சொன்ன மாதிரியே படம் பண்ணிடுங்க்.. நான் தான் மியூசிக்” என்றதும்.. என்க்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு.. படத்தோட வெற்றிக்கு ராஜா சாரோட பாடல்களும் பிண்ணனி இசையும் மிகப் பெரிய காரணமா இருக்கும்.

எனக்கு தெரிந்து கோடம்பாக்கத்துல இருக்கிற உதவி இயக்குனர்கள் அத்துனை பேரின் மனசிலும் ஒரு படமாவது அவரோட ஒர்க் பண்ண்னும்ங்கிற ஆசை நிச்சயமா இருக்கும்.

படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்து உங்களுக்கு வந்த பீட்பேக்?
சென்சார்ல படம் பார்த்துட்டு அவங்க சொன்னது.. ரொமப் நாள் ஆச்சு இந்தமாதிரி ஒரு நீட் அண்ட் க்ளீன் ப்டம் பாத்துன்னு சொன்னாங்க.. குடும்பத்தோட பார்க்ககூடிய ஒரு படமா வந்திருக்குனு சொன்னாங்க.. க்ளைமாக்ஸ் மனசை உருக்கிருச்சினு கண்கலங்கி பாராட்டினாங்க.... அதுதான் என்னோட லட்சியமும், கூட,, ஒரு வன்முறையில்லாத, மசாலாத்தனம் இல்லாத, இயல்பான ஒரு கதையை அதோட ஓட்டத்தோட தரணுங்கிறதுதான் என்னோட ஆசை.. அதே போல தமிழக மக்கள் நல்ல படங்களை வரவேற்க என்னைக்குமே தயங்க மாட்டாங்க.. அநத நம்பிக்கையில் மக்களின் கண்களின் வழியா மனசுக்கு போக முயற்சி செஞ்சிருக்கேன்.. என் கண்ணுக்குள்ளே படம் மூலமா.. நன்றி..

Sep 19, 2009

சொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்


காதலுக்கு புது டெபனிஷன் கொடுத்திருக்கும் படம். காதல் ஒரு முறைதான் வரும், காதலுக்காக உயிரையே கொடுக்கணும், போன்ற விஷயங்களையே சொல்லி வந்த சினிமாக்களின் மத்தியில், காதல் என்பது ஒரு நல்ல உணர்வு, இன்று ஒரு பெண்ணை பார்க்கிறோம், அது தோல்வியாகிவிட்டால் நாளை வேறு ஒரு பெண்ணை பார்த்தால் காதலிக்க மாட்டோமா..? அது தானே நிதர்சனமான வாழ்க்கை என்பதை இந்த கால இளைஞர்களின் பார்வையில் ஒரு யூத் பெஸ்டிவலே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

நவ்தீப், அபினவ், சத்யன், மற்றும் சில நண்பர்கள் ஒன்றாய் கூடும் டீக்கடையின் எதிர்வீட்டில் பம்பாயிலிருந்து ஒரு பெண் வருகிறாள்., பார்த்தவுடன் சட்டென நவ்தீப்புடன் ஒட்டிக் கொள்கிறாள்.. சென்னையை சுற்றி காட்ட சொல்கிறாள், கனவில் கூட வந்தாய் என்கிறாள், அவளின் காதலை சொல்லும் நவ்தீபபை, நிராகரிக்கிறாள். தான அவ்விதமாய் பழகவில்லை.. ஒரு நண்பியாகத்தான் பழகினேன் என்று சொல்லி விலகுகிறாள். நவ்தீப்பும் காதலை மென்று முழுங்கி நிற்க,

அடுத்து அடுத்து அவன் சந்திக்கும், பெண்கள் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவனை நிராகரிக்க, இப்படி போகும் வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு காதல் அவனுக்கு மல்லிகா கபூர் மூலம் அமைய வாழ்க்கை சந்தோச்மாய் போகும் நேரத்தில் மதுமிதாவால் அவனின் காதல் குலைய, க்ளைமாக்ஸ்.

படம் பூராவும் வசனங்கள் பளிச்.. பளிச்..

“பறவைக்கு ரெக்கையும், மனுஷனுக்கு மனசையும் கடவுள் எதுக்குடா கொடுத்திருக்கான்..? பறக்குறதுக்குதானே..?”

“பறக்கட்டும் ஆனா அவன் என் காசுல இல்ல பறக்குறான்”

“எது உன் காசு..? எப்ப நீ மிச்சம் வச்சிட்டியோ. அப்பவே அது உன் காசில்லை..”

படு ஸமார்ட்டான, ஷார்பான வசனங்கள்.

படத்தின் இன்னொரு முக்கியமான அதிரடியான கேரக்டர் பிரகாஷ்ராஜ்.. சும்மா அதகள படுத்துகிறார். அவருக்கு ஒருவர் மாலை போட்டு விட்டால் அது சரியோ, தப்போ அவருக்காக போராடும் தாதா.. மனுஷன் கலக்குகிறார்.. படத்தில் பாருங்கள் நீங்கள் அவரின் கேரக்டரை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதுவும் அவரின் சின்ன பையன் அவருக்கே மாலை போடும் காட்சி.. சூப்பர்.

நவ்தீப், மிக அழகாய் புரிதலுடன் நடித்திருக்கிறார், அபினவ் சரியாய் அந்த பாத்திரத்துக்கு பொருந்தியிருக்கிறார். சத்யன் தனியாய் செய்யும் காமெடிகளை விட, சீன்களுக்கு நடுவில் அவர் பேசும் கமெண்டுகள் சூப்பர். ஹீரோயின்களில் மதுமிதா மட்டுமே பாஸ் ஆகிறார்..நடிப்பில்.மற்றவர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றே சொலல் வேண்டும்.

ஆர்தர்வில்சனின் ஒளிப்பதிவு நச்.. முள்ளே முள்ளே பாடல் காட்சியில் கண்களுக்கு ஜில்.. அதே போல் கிரவுண்டில் நட்க்கும் சண்டை காட்சியும், தண்ணீர் தெரித்து ஓடும் காட்சியும் அருமை.

படத்தில் இசை ஒரு ப்ளஸ்பாயிண்ட்.. மூன்று பாடல்கள் அருமையாய் இருக்கிறது.. முக்கியமாய் ”முள்ளே.. முள்ளே..காதல் முள்ளே” ‘காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா” ”ராஜாதிராஜா இல்ல” பாடல்களும், படமெடுத்தவிதமும் அருமை. பாடல்களுக்கு எழுந்துபோகும் காலத்தில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் அப்துல்லா.. புதிய பாடலாசிரியர் தங்கம் மூர்த்தி “அச்சம், வெட்கம்” என்ற பாடலின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட பேவரேட் “முள்ளே.. முள்ளே” பிண்ணனி இசையும் ஆப்ட்.

படம் முழுவதும் பளீரிடும் வசனங்கள், பரபரவென ஓடும் காட்சிகள், இன்றைய இளைஞர்களின் மனக் கண்ணாடியாய் நவ்தீப், அபினவ், மதுமிதா, பம்பாய் பெண், டான்சர், மல்லிகா கபூர் கேரக்டர்களின் மூலம் இயல்பாய் வெளிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் முரளி அப்பாஸ். அபினவ், மதுமிதா காதல் காட்சிகள் குட்டி சிறுகதை.. அந்த ஒரு கப் காபி, மேட்டர் அட போட வைக்கிறது.

அதே போல் நவ்தீப்பின் காதல் நிராகரிப்புகளுக்கான காரணங்கள் நச்.. பார்த்தவுடனேயே காதல் வயப்படும் சராசரி இளைஞனாக இருந்தாலும், அவனின் ஆழ்மன உளைச்சலை மதுமிதாவிடம் நவ்தீப்பிடம் கொட்டும் காட்சியில் வசனமும் நடிப்பும் ஆழம்.

பிரகாஷ்ராஜ் கேரக்டரை லைட்டாக சொலல் ஆரம்பித்து, ஏலம் எடுக்கும் சீனில் அமைதியாய் உட்காரவைத்து பில்டப் செய்தே டெரராக காட்டும் காட்சி, என்று பளிச்..பளிச்.. இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் டீவியேட் ஆவதை தவிர்த்திருக்கலாம். இன்டெப்தாக க்ளைமாக்ஸில் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.வழக்கமான காதல் கதையை கொடுக்காமல் காதலை இன்னொரு விதமாய் பார்க்க வைக்கும் கதையை தேர்தெடுத்தற்காக இயக்குனர் முரளி அப்பாஸை பாராட்டியே ஆகவேண்டும்

சொல்ல சொல்ல இனிக்கும் – நிச்சயமாய் இனிக்கும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 18, 2009

உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்



என்னுடய விமர்சனங்களில் எ.வ.த.இ.மா. படம் என்று சில படங்களை சொல்லி எழுதியிருக்கிறேன். அதாவது எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன்.

வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம்.

சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சி வசனம், சூப்பர்ப்.. ஆங்கில வசனங்களின் ஆளுமை ஆங்காங்கே தலைகாட்டினாலும் இயல்பாகவே இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் கீழே யாருக்கும் புரியாது என்று இயல்பாய் வசனம் பேச முடியாமல் தவிப்பது.

நடிப்பு என்று வரும் போது படத்தில் நடித்த, கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் பரத் ரெட்டி, அபியும்,நானும் கணேஷ், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல என்பதால் எதை சொல்லி பாராட்டுவது என்றெ தெரியவில்லை. பல இடங்களில் சின்ன சின்ன உடல் மொழிகளீன் மூலம் அவரின் விருப்பு, வெறுப்புகளை வெளிபடுத்துவதும், க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் காட்சியில் அவரின் செய்கைக்கான ஞாயத்தை சொல்லும் இடம் ஆஹா.. ஸ்பெல்பவுண்ட் என்றால் அது மிகையில்லை.. சமூகத்தின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், இயலாமை, துக்கம், அழுகை, பின்பு அதை மென்று விழுங்கி மீண்டும் ஆளுமையான குரலில் பேசும் அந்த காட்சி அற்புதம். பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதும், ஹாட்ஸ் ஆப் கமல்.

அதே போல் மோகன்லால், மிகவும் சப்டூயூட் ஆக்டிங்.. இவரும் தன்னுடய உணர்வுகளை மிக அழகாய் தன் உடல் மொழியிலேயே வெளிபடுத்துகிறார். சில இடங்களில் அவரை மடக்கும் சீப் செக்கரட்டரி லஷ்மியை எதிர்க்கும் நேரத்தில் காட்டும் கண்ட்ரோல்ட் அரகன்ஸ் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். தன் கீழே வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆர்டர் போடும் போதும், காட்டும் அதிகாரம், பின்பு அவர்களிடம் காட்டும் பரிவை கூட தன்னுடய் குரல் மாடுலேஷனில் வெளிப்படுத்தும் அழகு அருமை.

அதே போல் போலீஸ் ஆபீசராய் வரும் டூயூட்டி பவுண்ட் பரத் ரெட்டியும், அதிரடி போலீஸ் காரனாய் வரும் கணேஷும், சரியாய் பொருந்தியிருக்கிறார்கள்.

முதல்மைச்சரின் வீட்டுக்கு, நம்முடய முதலமைச்சரின் வீட்டையும், குரலுக்கு அவரது குரலை போலவே மிமிக்ரி குரலை உபயோகித்து இருப்பது காண்ட்ரவர்ஸியை உருவாக்கலாம்.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு அருமை. அதிலும், ரெட் ஒன்னின் 4கே துல்லியம் படத்தில் எலலா இடஙக்ளில் தெரிகிறது. படத்தின் மூடுக்கேற்ற ஒளிப்பதிவு.

ஸ்ருதிஹாசனின் பிண்ணனி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஆப்டாக அமைந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் கிடையாது ஆங்காங்கே சின்ன, சின்ன இடங்களில் பிண்ணனி இசையில் ஆர்.ஆராக உபயோகபடுத்தியிருக்கிறார். எங்கெங்கே பிண்ணனி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஸ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தில் கமல், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களால லார்ஜர் தென் லைப் கேரக்டர்களிலேயே பார்த்து பழகி போன மக்களுக்கு இவர்களின் நடிப்பு அப்படியே தோன்றும். ஆனால் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அதையெல்லாம் மறக்கடிக்கும் திரைக்கதையுடன் நாமும் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

ஒரிஜினல் படத்திலிருந்து,க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் சொல்லும் காரணத்தை தவிர பெரிய மாற்றம் எதையும் செய்யாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலெட்டி..

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது.. ஆங்காங்கே.. சின்ன, சின்ன இடங்களில் அதையெல்லாம் பார்த்தால் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று காத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

உன்னை போல் ஒருவன் – நம்மில் ஒருவன்.

எ.வ.த.இ.மா.படம் – ஏ வெட்னெஸ்டே விமர்சனம்

டிஸ்கி:
தயவு செய்து இந்தி படத்தையும், இதையும் கம்பேர் செய்து பார்க்காதீர்கள்.. நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம். நஸ்ரூதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தும் பத்திரிக்கைகளின் பாராட்டுகள் பெற்றாலும் கூட பெரிய அளவில் மக்களீடையே ரீச் ஆகவில்லை.. அதை இம்மாதிரியான பெரிய நடிகர்கள் நடிக்கையில் எல்லோருக்கு ரீச் ஆகும் நல்ல விஷயம் நடக்கிறதால்.. மேலும் நல்ல படங்கள் வரும். கமலை காமன் மேனாக ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறும் விமர்சகர்களுக்காக..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

சினிமா வியாபாரம் - 5

பதிவுலக அண்ணன் அப்துல்லா பாடி வெளிவரும் ”சொல்ல சொல்ல இனிக்கும்” படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

சினிமா வியாபாரம் - அறிமுகம்
சினிமா வியாபாரம் - 1
சினிமா வியாபாரம் - 2
சினிமா வியாபாரம் - 3

சினிமா வியாபாரம் - 4



திரைப்பட விநியோகம்

படம் தயாரானவுடன் ப்ரிவியூ எனப்படும் வியாபார காட்சிகளை திரையிட தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்வார்கள், அதற்கு திரையுலகில் உள்ள முக்கிய விநியோகஸ்தர்கள் எல்லாரையும் அழைத்து தங்களது திரைப்படத்தை காண்பிப்பார்கள். படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள், அல்லது அவர்களது மீடியேட்டர்கள் எனப்படும் இடைநிலை தரகர்கள், படத்தின் விலையை அதில் நடித்த நடிகர், நடிகைகளை வைத்தோ, அல்லது இயக்குனர், மற்றும் டெக்னீஷியன்களின் தரத்தை வைத்தோ, இதற்கு முன்னால் அந்த நடிகரின், இயக்குனரின் படம் ஓடியதை வைத்தோ.. ஏரியா பிஸினெஸ் பேசுவார்கள். பெரும்பாலும் இவர்கள் செய்யும் முடிவுகள் முக்கால் வாசி நேரம் தவறாகவே போயிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் நம்புவார்கள். ஒரு காலத்தில் இவர்களின் அன்பு இம்சையால் படத்துக்கு சம்மந்தமேயில்லாமல் சில்க், அனுராதா, ஏன் ஜெயமாலினி ஆகியோரின் காபரே நடன் காட்சிகள் இணைக்க பட்ட காலம் ஒன்று உண்டு.

பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் நடித்த, இயக்கிய படங்களுக்கு பெரிய போட்டா போட்டி இருப்பதுண்டு, இவர்கள் நடித்த படங்களை வியாபார காட்சிகள் கூட போடாமலேயே வியாபாரம் நடந்துவிடும். ஏனென்றால் அவர்களின் படங்களுக்கு பெரிய ஒப்பனிங் இருக்கும், முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூலை பார்த்துவிடலாம் என்பதால்தான் அது. படத்தை பார்க்காமலேயே பெரிய இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று ஸ்பெகுலேஷனிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அம்மாதிரியான பெரிய படங்கள் வந்த சுவடு தெரியாமல் முதல் வாரத்திலேயே பெட்டிக்குள் போன கதைகளும் உண்டு.

சூர்யா, ஜோதிகாவின் காதல் கிசுகிசு உச்சத்தில் இருந்த நேரம், அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘உயிரிலே கலந்தது”. அதனாலேயே பெரிய எதிர்பார்ப்பு அந்த படத்திற்கு இருந்தது, நானும் என் நண்பர்களும், ஏற்கனவே சேதுவை கண்ணுக்கு தெரிந்து கைவிட்டதால், இப்படத்தின் கதையை முன்பே கேட்டிருந்ததால், நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில், இப்படத்தின் சென்னை நகர உரிமையை கேட்டோம். சென்னை நகர உரிமையை அவுட்ரைட் எனப்படும் முறையில் விலை பேசினோம். ஆறு லட்ச ரூபாய்க்கு ஐந்து பிரதிகளுடன் வியாபாரம் படிந்தது. ஆனால் அந்த படத்தை சென்னை நகரில் வெளியிடுவதற்க்குள் நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும்.. அதைபற்றி பின்னால் சொல்கிறேன். இப்போது விநியோக முறைகளை பற்றி பேசுவோம்.

அவுட்ரைட்
சரி அவுட்ரைட் என்றேனே அது என்ன என்று கேட்கிறீர்களா.? அவுட்ரைட் என்றால் நாம் ஒரு தொகைக்கு சென்னை நகருக்கான மொத்த விநியோக உரிமையையும், குறிப்பிட்ட அளவு பிரதிகளுடன் விலை பேசுவது. அதன் பிறகு அந்த படத்தை பொறுத்த வரை சென்னை மாநகர திரையரங்குகளில் வெளியிடும் உரிமை முழுக்க, முழுக்க நமக்கே கொடுத்துவிடுவார்கள், அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளருக்கும் நமக்கும் பெரிதாய் எந்தவிதமான ஒரு பெரிய உடன்பாடும் தேவையிருக்காது. அதாவது, தியேட்டர் புக் செய்து அதற்கான முன்பணம், விளம்பரம், போஸ்டர்கள் போன்ற செலவுகள் சென்னை நகர உரிமையாளரையே சாரும். படத்தின் விலை, தியேட்டர் முன் பணம், விளம்பரம், என்று எல்லா செலவுகளையும் சேர்த்தால் நாம் வாங்கிய விலைக்கு இன்னொரு பங்கு எடுத்து வைக்க வேண்டும். பல சமங்களில் தயாரிப்பாளரும் பேப்பர் விளம்பரங்களில் பங்கு கொள்வதுண்டு.

நாங்கள் உயிரிலே கலந்தது என்கிற படத்தின் சென்னை உரிமையை வாங்கினோம் என்று சொன்னேன் அல்லவா..? ஐந்து பிரதிகளுடன் நாங்கள் வாங்கியது ஆறு லட்ச ரூபாய்க்கு, அதை தவிர நாங்கள் சென்னை நகரின் முக்கிய தியேட்டர்களில் வாடகைக்க்கு எடுத்து இன்றைய தேதியிலிருந்து நாஙகள் இத்தனை, இத்தனை காட்சிகள் படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிடப்போகிறோம் என்று பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வார வாடகையை முன் பணமாய் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் படத்தின் விளம்பர போஸ்டர், ஸ்டில்ஸ் போன்றவற்றை எங்களுக்கு அளிக்க, அதற்கான செலவுகள் எல்லாம் விநியோகஸ்தர்களே செய்ய வேண்டும்.

சென்னை மாநகரை பொறுத்த வரை பெரும்பாலான திரையரங்குகளில் வாடகை முறைதான் நடைமுறையில் இருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸ் கணக்கு வேறு. அதை பற்றி தனியே பேசுவோம். இம்முறையில் நாங்கள் உயிரிலே கலந்தது படத்தை சென்னை மாநகரில் வெளியிட ஆறு லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதை வெளியிட விளம்பரம், திரையரங்குகளின் வாடகை, என்ற வகையில் செலவு செய்து, பதிமூணு லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்த கதை தனி..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Sep 17, 2009

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று..

இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய..

சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் கிட்ட போய் சொன்னேன்.. அது கவிதையில்லியாம்.. லைனா டைப் அடிச்சிட்டு எண்டர் பட்டனை தட்டிவிட்டுட்டாராம்.

அப்ப அது கவிதையில்லியானா.. அப்ப எது கவிதைங்கிற ஒரு தேடல் என்னுள் கும்மாளமிட்டது. அனுஜன்யா ஒருத்தர் கவிதை எழுதியிருந்தாரு.. யாரை பார்த்தாலும் அவ்ரை கவிஞர்னு சொல்வதால் சரின்னு படிச்சேன். கடற்கரையில் ஒரு ஒத்த மரம் அப்பிடிங்கிற மாதிரி ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. உடனே அவருக்கு மெயில் அனுப்பிச்சி, அந்த மரம் அவனோட காதலிதானேன்னு கேட்டா..? அப்படியா தோணுது.. வச்சிக்கங்கன்னு சொன்னாரு..என்னாடாது வச்சிக்கங்கன்னு சொல்றாரு..

அப்புறம் தண்டோரா, தண்டோரான்னு ஒருத்தர் எழுதுறாரு.. அப்பப்ப கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸுகிட்டயெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருந்தாரு.. ஒரே ஜாலியா இருக்கும். திடீர்னு கவிஞர்கள் நட்பு ஜாஸ்தியானதுனால கோவம், கோவமா, சீரியஸா எழுதறேன்னு, கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாரு.. பாதி நேரம் படிக்கிறப்ப, ஹாங் ஓவர்ல எழுதினமாதிரியே இருந்திச்சு. புரிஞ்சும், புரியாம..

சரி இவங்களையெல்லாம் விட்டுருவோம்னு.. நம்ம ஜ்யோவ், அகநாழிகை,முத்துவேல், யாத்ரானு படிச்சேன்.. மேலே சொன்னவஙக கவிதையே புரியலைங்கிற போது..
இதை பத்தி சொல்ல என்ன இருக்கு..

சரி இவங்க எல்லாம் கவிஞர்கள்.. நம்ம மாதிரி மொக்கை போடுற ஆளுங்க கவிதை எழுதுறாங்களேன்னு பரிசலை படிச்சேன்.. அவரு கவிதை ஓன்ணு விகடன்ல வந்திச்சி.. நல்லா பெரிசு, பெரிசா.. தெரிஞ்சிச்சி.. கவிதைக்கு அவஙக் போட்ட படம் ரொம்ப நல்லா இருந்திச்சி..

நம்ம அதிஷா கூட எப்பவாச்சும் கவித எழுதும்.. படிச்சதும், ஒரு மாதிரி கில்மாவா ஆயிரும்.. ஆனா அதுகூட கவிதை இல்லினு சொல்றாங்க..

சரி.. லேட்டஸ்டு விஷய்ம்தான் புரியலைனு கம்பர், வள்ளுவர்னு படிக்கலாம், அவங்க தமிழ்ல தானே எழுதியிருப்பாங்கன்னு, நர்சிம் பக்கம் போனா, அதுல அவரு கம்பர் எழுதினாதா சொன்னதெல்லாம் தமிழ்லயே இல்லீங்க.. பின்ன என்னங்க.. எங்கனாச்சும், தமிழ்ல எழுதினதுக்கே விளக்கம் தமிழ்ல எழுதுவாஙக்ளா..?

கவிதையே புரியல இதுல நையாண்டி நைனான்னு ஒருத்தர் எதிர் கவிஜனு போடறாரு.. முதல்ல கவிஜன்னால என்னனு புரிஞ்சிக்கிறதுக்கு கொஞ்ச நாளாயிருச்சு.. அதுசரி.. ஒரிஜினல் கவிதையே பிரியல.. அதுக்கு எதிர் கவிஜ எப்படி பிரியும்..?

பாத்தீங்களா.. வர.. வர.. என் பாசை.. சே.. பாஷையே மாறுது.. செரி.. நமக்கு தான் புரியமாட்டேங்குது போலருக்குனு விட்டூட்டு போலாம்னாலும் முடிய மாட்டேங்குது. கவிதை தெரியலைன்னா நம்ம கூட்டத்தில சேத்துக்க மாட்டேங்கிறாங்க..

அதுனால நானும் கவிஞனாக முடிவு பண்ணி ஒரு கவிதை எழுதினேன்.. எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு போலருக்கு. அதுனால அதை கவிதையே இல்லைன்னு சொல்லிட்டாஙக்.. இருந்தும் விடாம இன்னொரு கவிதை எழுதிட்டேங்க.. இவங்க ஒத்துகிட்டாலும், ஒத்துகிடாட்டாலும், நானும் ஒரு கவிஞன் தானு முடிவு பண்ணி எழுதின கவிதைய, ரமேஷ் வைத்யாகிட்ட சொன்னேன். நெதம் தளும்பினாலும், தளும்பாட்டியும் பேசுறவரு.. ஒரு வாரமா இருக்கியா செத்தியான்னு கூட கேட்க மாடேங்கிறாரு.. ஒரு வேளை அவரை விட நல்லா எழுதிட்டேன்னு காண்டோ..?

என்னுடய லேட்டஸ்ட் கவிதையை தமிழ்கூறும் பதிவுலகத்திற்கு சமர்பிக்கிறேன்.

காத்திருப்பு



காத்திருக்கும் போதும்
எனைக் கொல்கிறாய்
நான்
பிடிக்கும்
சிகரெட்டுகளால்.


டிஸ்கி:
முழுக்க நகைச்சுவைக்காக எழுதபட்டது.. மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..