சினிமா வியாபாரம் - அறிமுகம்
சினிமா வியாபாரம் - 1
சினிமா வியாபாரம் - 2
சினிமா வியாபாரம் - 3
சினிமா வியாபாரம் - 4
திரைப்பட விநியோகம்
படம் தயாரானவுடன் ப்ரிவியூ எனப்படும் வியாபார காட்சிகளை திரையிட தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்வார்கள், அதற்கு திரையுலகில் உள்ள முக்கிய விநியோகஸ்தர்கள் எல்லாரையும் அழைத்து தங்களது திரைப்படத்தை காண்பிப்பார்கள். படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள், அல்லது அவர்களது மீடியேட்டர்கள் எனப்படும் இடைநிலை தரகர்கள், படத்தின் விலையை அதில் நடித்த நடிகர், நடிகைகளை வைத்தோ, அல்லது இயக்குனர், மற்றும் டெக்னீஷியன்களின் தரத்தை வைத்தோ, இதற்கு முன்னால் அந்த நடிகரின், இயக்குனரின் படம் ஓடியதை வைத்தோ.. ஏரியா பிஸினெஸ் பேசுவார்கள். பெரும்பாலும் இவர்கள் செய்யும் முடிவுகள் முக்கால் வாசி நேரம் தவறாகவே போயிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் நம்புவார்கள். ஒரு காலத்தில் இவர்களின் அன்பு இம்சையால் படத்துக்கு சம்மந்தமேயில்லாமல் சில்க், அனுராதா, ஏன் ஜெயமாலினி ஆகியோரின் காபரே நடன் காட்சிகள் இணைக்க பட்ட காலம் ஒன்று உண்டு.
பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் நடித்த, இயக்கிய படங்களுக்கு பெரிய போட்டா போட்டி இருப்பதுண்டு, இவர்கள் நடித்த படங்களை வியாபார காட்சிகள் கூட போடாமலேயே வியாபாரம் நடந்துவிடும். ஏனென்றால் அவர்களின் படங்களுக்கு பெரிய ஒப்பனிங் இருக்கும், முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூலை பார்த்துவிடலாம் என்பதால்தான் அது. படத்தை பார்க்காமலேயே பெரிய இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று ஸ்பெகுலேஷனிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அம்மாதிரியான பெரிய படங்கள் வந்த சுவடு தெரியாமல் முதல் வாரத்திலேயே பெட்டிக்குள் போன கதைகளும் உண்டு.
சூர்யா, ஜோதிகாவின் காதல் கிசுகிசு உச்சத்தில் இருந்த நேரம், அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘உயிரிலே கலந்தது”. அதனாலேயே பெரிய எதிர்பார்ப்பு அந்த படத்திற்கு இருந்தது, நானும் என் நண்பர்களும், ஏற்கனவே சேதுவை கண்ணுக்கு தெரிந்து கைவிட்டதால், இப்படத்தின் கதையை முன்பே கேட்டிருந்ததால், நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில், இப்படத்தின் சென்னை நகர உரிமையை கேட்டோம். சென்னை நகர உரிமையை அவுட்ரைட் எனப்படும் முறையில் விலை பேசினோம். ஆறு லட்ச ரூபாய்க்கு ஐந்து பிரதிகளுடன் வியாபாரம் படிந்தது. ஆனால் அந்த படத்தை சென்னை நகரில் வெளியிடுவதற்க்குள் நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும்.. அதைபற்றி பின்னால் சொல்கிறேன். இப்போது விநியோக முறைகளை பற்றி பேசுவோம்.
அவுட்ரைட்
சரி அவுட்ரைட் என்றேனே அது என்ன என்று கேட்கிறீர்களா.? அவுட்ரைட் என்றால் நாம் ஒரு தொகைக்கு சென்னை நகருக்கான மொத்த விநியோக உரிமையையும், குறிப்பிட்ட அளவு பிரதிகளுடன் விலை பேசுவது. அதன் பிறகு அந்த படத்தை பொறுத்த வரை சென்னை மாநகர திரையரங்குகளில் வெளியிடும் உரிமை முழுக்க, முழுக்க நமக்கே கொடுத்துவிடுவார்கள், அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளருக்கும் நமக்கும் பெரிதாய் எந்தவிதமான ஒரு பெரிய உடன்பாடும் தேவையிருக்காது. அதாவது, தியேட்டர் புக் செய்து அதற்கான முன்பணம், விளம்பரம், போஸ்டர்கள் போன்ற செலவுகள் சென்னை நகர உரிமையாளரையே சாரும். படத்தின் விலை, தியேட்டர் முன் பணம், விளம்பரம், என்று எல்லா செலவுகளையும் சேர்த்தால் நாம் வாங்கிய விலைக்கு இன்னொரு பங்கு எடுத்து வைக்க வேண்டும். பல சமங்களில் தயாரிப்பாளரும் பேப்பர் விளம்பரங்களில் பங்கு கொள்வதுண்டு.
நாங்கள் உயிரிலே கலந்தது என்கிற படத்தின் சென்னை உரிமையை வாங்கினோம் என்று சொன்னேன் அல்லவா..? ஐந்து பிரதிகளுடன் நாங்கள் வாங்கியது ஆறு லட்ச ரூபாய்க்கு, அதை தவிர நாங்கள் சென்னை நகரின் முக்கிய தியேட்டர்களில் வாடகைக்க்கு எடுத்து இன்றைய தேதியிலிருந்து நாஙகள் இத்தனை, இத்தனை காட்சிகள் படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிடப்போகிறோம் என்று பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வார வாடகையை முன் பணமாய் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் படத்தின் விளம்பர போஸ்டர், ஸ்டில்ஸ் போன்றவற்றை எங்களுக்கு அளிக்க, அதற்கான செலவுகள் எல்லாம் விநியோகஸ்தர்களே செய்ய வேண்டும்.
சென்னை மாநகரை பொறுத்த வரை பெரும்பாலான திரையரங்குகளில் வாடகை முறைதான் நடைமுறையில் இருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸ் கணக்கு வேறு. அதை பற்றி தனியே பேசுவோம். இம்முறையில் நாங்கள் உயிரிலே கலந்தது படத்தை சென்னை மாநகரில் வெளியிட ஆறு லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதை வெளியிட விளம்பரம், திரையரங்குகளின் வாடகை, என்ற வகையில் செலவு செய்து, பதிமூணு லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்த கதை தனி..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
34 comments:
லட்சங்களில் பேசுகுறீர்களே.. பெரியாள்தான் போல இருக்கு .. :-)
உங்களால்தான் சினிமா இண்டஸ்ட்ரிய பத்தி நிறைய தெரிந்து கொள்கிறேன்.
நன்றி கேபிள்.
நாம ஒரு படம் எடுக்கலாமா???
அதற்குள் தொடருமா? என் இவ்வளவு சீக்கிரம் கேபிள் அண்ணா ?
அண்ணே, இன்னும் கொஞ்சம் நீளத்தை கூட்டியிருக்கலாம்.
ரொம்ப வேமா முடிஞ்சுட்ட மாதிரி ஃபிலீங்.
/*பதிவுலக அண்ணன் அப்துல்லா பாடி வெளிவரும் ”சொல்ல சொல்ல இனிக்கும்” படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.*/
அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு ஒரு "பனியன்" வாங்கி கொடுக்க நான் தயாராக உள்ளேன்... ஆகவே அதுவரை அவரது பாடியை பத்திரமாக பாதுகாக்கவும்...என்னிடமே தரவும்.
அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
(அப்புறம் ஒருக்கா பதிவை படிக்க வருவேன்..... ஹி..ஹி...ஹி..)
//அதற்குள் தொடருமா? என் இவ்வளவு சீக்கிரம் கேபிள் அண்ணா ?//
நல்ல படம்னா எப்போ முடியுதுன்னே தெரியக் கூடாது. நல்ல தொடர்னாலும் அதேதான், சரியா அண்ணா? விறுவிறுப்பா இருக்கு, ம், 7 நாள் காத்திருக்கனுமா?
பிரபாகர்.
@prasanna
சினிமாவில் லட்சஙக்ள் எல்லாம் ஜுஜுபி பிரசன்னா
/உங்களால்தான் சினிமா இண்டஸ்ட்ரிய பத்தி நிறைய தெரிந்து கொள்கிறேன்.
நன்றி கேபிள்.
நாம ஒரு படம் எடுக்கலாமா???
/
நன்றி உலகநாதன்.. நிசமாத்தான் கேட்குறீஙக்ளா.? எனககான ஒரு தயாரிப்பாளரைத்தான் தேடிட்டு இருக்கேன்.
/அதற்குள் தொடருமா? என் இவ்வளவு சீக்கிரம் கேபிள் அண்ணா ?
//
கிருஷ்ணா.. ரொம்ப நிறைய விஷய்ஙக்ளை ஓரெடியா கொடுக்க வேணாமினுதான்..
/அண்ணே, இன்னும் கொஞ்சம் நீளத்தை கூட்டியிருக்கலாம்.
ரொம்ப வேமா முடிஞ்சுட்ட மாதிரி ஃபிலீங்.
//
ராஜு.. இந்த மட்டும் ஏண்டா எழுதினேன்னு கேட்க மாட்டாம இருந்திச்சே அதுவே பெரிசு..
/அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு ஒரு "பனியன்" வாங்கி கொடுக்க நான் தயாராக உள்ளேன்... ஆகவே அதுவரை அவரது பாடியை பத்திரமாக பாதுகாக்கவும்...என்னிடமே தரவும்.
அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
(அப்புறம் ஒருக்கா பதிவை படிக்க வருவேன்..... ஹி..ஹி...ஹி..)
9:13 AM//
அலோவ்.. பாடறதுக்கு பாடின்னு சொல்லாம எப்படியா எழுதறது..? உட்காந்துயோசிக்கிறாய்ங்கப்பா..
//நல்ல படம்னா எப்போ முடியுதுன்னே தெரியக் கூடாது. நல்ல தொடர்னாலும் அதேதான், சரியா அண்ணா? விறுவிறுப்பா இருக்கு, ம், 7 நாள் காத்திருக்கனுமா?
பிரபாகர்.
//
தலைவரே ஃபிரியா இருந்தா போன் பண்ணுங்க
வியாபாரம் நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்
தொடர் கலக்கலாத்தான் போகுது, ஆனா பொசுக்குன்னு முடுஞ்சுருது.
அது சரி, இந்த அப்துல்லான்னு ஒருத்தர் இருக்கறாரே, அவரப் பாத்தா கொஞ்சம் எனக்கு போன் ப்ண்ணச் சொல்லுங்க, எப்ப போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறாரு.
////
சூர்யா, ஜோதிகாவின் காதல் கிசுகிசு உச்சத்தில் இருந்த நேரம், அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘உயிரிலே கலந்தது”. அதனாலேயே பெரிய எதிர்பார்ப்பு அந்த படத்திற்கு இருந்தது,
//////
காரில்.. சுற்றிய அனுபவம்..., நாடகம்.காம்..., தேவா.. பின்னணியிசை, சூர்யா-ஜோதிகா.. கட்ட பஞ்சாயத்து.. எல்லாம்.. இன்னும் நினைவு இருக்கு..!!
அது ஒரு கனாக்காலம்...!!! :) :)
தல...இந்த ஹாட் ஸ்பாட் ஜோரு.
அப்புறம்..."பிறகு பார்ப்போம்...பிறகு பார்ப்போம்" அப்படி எழுதறத விட அங்கனன்க்கயே விஷயத்த சொல்லிட்டா எங்களுக்கு ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருக்கும். ஆனா கோர் விஷயத்த கறக்க ரொம்ப வெயிட் பண்ண வேண்டியிருக்கு....ஹீ ஹீ....
/*ஒரு காலத்தில் இவர்களின் அன்பு இம்சையால் படத்துக்கு சம்மந்தமேயில்லாமல் சில்க், அனுராதா, ஏன் ஜெயமாலினி ஆகியோரின் காபரே நடன் காட்சிகள் இணைக்க பட்ட காலம் ஒன்று உண்டு. */
கவலைப்படாதீங்க.... இனி வரும் படங்களில் உங்களின் காபரே நடனம் வைக்க சொல்லிரலாம்.
கூட்டம் பிச்சிக்கும்... (தியேட்டர் ஸ்க்ரீனை தான்....ஹி..ஹி..ஹி..)
மேட்டர வுடுனே!
அந்த ஹாட் ஸ்பாட்... ஹி..ஹி... சூப்பரப்புங்க!
அவுக உங்க படத்துல காபரே ஆடுறாகளா?
informative.
அரிய பல தகவல்கள் உங்கள் பதிவில்...ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதற்குள் இவ்வளவு கஷ்டமா?
கலக்குங்க பாஸ்....waiting for Unnaipol oruvan review :)))))))))))))))
எப்ப தொடரும் ?
உள்ளேன் ஐயா...
உன்னை போல் ஒருவன் விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன்...........:)
இந்தி சிறப்பாக இருந்தது....
என்னத்தச் சொல்வது... காசு பண்ணலாம் அப்படின்னு போனா, இருக்குற காசும் போயிடும் போலிருக்கே..
அண்ணே சசிகுமார் அண்ணன் மாதிரி
நீங்களே தயாரிங்க அண்ணே....
அப்படியே என்னையும் உங்க உதவியாளர் ஆக
சேர்த்துக்குங்க.....
யூத்து
போன முறையே நானும் ஆதியும் சொன்னோம், ரொம்ப இழுக்கறீங்கன்னு.
இந்த தொடர் ரொம்ப Informative ஆ இருக்கு, ஆனா ஒரு இடுகையில 4-5 விஷயமாவது சொல்லுங்க, இப்படி ஒவ்வொண்ணா சொன்னா என்னிக்கு முடிக்கறது.
** கண்டிப்பா எனக்கு இந்த தொடர் பிடிச்சிருக்கு, என் கமெண்ட் வேறொறு தொனியில் இருக்குமோன்னு சந்தேகம், அதற்குத்தான் இந்த டிஸ்கி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
@கோஸ்ட்
நன்றி
@தராசு
இனிமே இன்னும் கொஞ்சம் எழுதறேண்ணே..
அப்துல்லாகிட்டேயும் சொல்றேன்ணே..:)
@hollywoodbala
ஆமாம் பாலா சரியான அனுபவங்கள். மறக்க முடியாது.. அந்த அனுபவம் தான் இப்போ சினிமா வியாபாரம் ஆகிறது.
@விசா
புரியுது.. எழுத டைம் கிடைக்க மாட்டேங்குது.. ஹி..ஹி.. அதான்...
@நைனா..
ஏன்யா.. சினிமா நல்லாருக்கிறது உனக்கு பிடிக்கலையா..?
@பப்பு
ஆடுனா நல்லாத்தான் இருக்கும்.. சும்மா கத்தி மாரி இருக்காளே..?ம்ஹும்
@மங்களூர் சிவா
நன்றிங்கோ... கோ..கோ.
@பாலாஜி
பின்ன சினிமான்னா சும்மாவா..?
@கமல்
போட்டாச்சு இல்ல
@தியாவின் பேனா
அடுத்த வெள்ளி :)
@அசோக்
ஓகே அட்டென்டெண்ஸ் போட்டாச்சு
@சிண்டோக்
போட்டாச்சு
@இராகவன் நைஜீரியா
அப்படி இல்லை அண்ணே.. அருமையான தொழில்,சரியா பண்ணனும்
@ஜெட்லி
அவருக்கு பேக்ரவுண்ட் பெரிசுண்ணே.. நாம எல்லாம் பாடில தான் பெரிசு..:)
@ஸ்ரீராம்
இல்ல தலைவா.. வேளை ரொம்ப அதுனால, அது மட்டுமில்லாம..
என்
ஞாபக
படிமங்களிலிருந்து
எடுத்து எழுதும்
வியாபாரம் ஆகையால்.. லேட்டாகிறது/
கவிதையா சொல்றேனாமா..:)
நல்ல தொடர்
present sir
Post a Comment