Thottal Thodarum

Sep 25, 2009

சினிமா வியாபாரம் -6

நான்கு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய, சக பதிவர்கள், வாசகர்களுக்கு, நன்றி.. நன்றி..நன்றியோ.. நன்றி..

எம்.ஜி.(Minimum Guarentee)

மினிமம் கேரண்டி என்றால் குறைந்தபட்ச உத்திரவாதம் என்று வைத்து கொள்ளலாம். அதாவது குத்து மதிப்பாய் ஒரு படத்தை அதன் நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களை வைத்து, இதற்கு முன் அந்த நடிகர், நடிகை நடித்த படஙக்ளின் வசூல் போன்ற எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த படம் இவ்வளவு வசூல் செய்யும் என்ற அனுமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை பேசுவது.

நாங்கள் துள்ளுவதோ இளமை என்கிற படத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் சென்னை மாநகர உரிமைக்கு ஐந்து லட்சம் எம்.ஜி. கேட்டார்கள், நாங்களோ அவுட்ரைட்டாக கேட்டோம். அப்படத்தை எம்.ஜியில் எடுத்திருந்தால். படத்தின் வசூல் ஐந்து லட்சம் வரும் வரை நாம் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கு தொகையும் தர தேவையில்லை. அதே நேரம் அப்படம் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி வசூலை பிரித்து கொள்வார்கள். ஒரு வேளை அப்படம் ஐந்து லட்சம் வசூல் வரவில்லை என்றால் தயாரிப்பாளரை எந்த விதத்திலும் பாதிக்காது. விநியோகஸ்தர்களைதான் பாதிக்கும்.

அதே படத்தின் உரிமையை எங்களுடய நண்பர் வேறொருவர் சென்னை உரிமையை எம்.ஜி என்கிற விதத்தில் வாங்கினார். படம் சுமார் பதினாறு லட்சம் வசூல் செய்தது என்றார்கள். அந்த வகையில் மீதம் உள்ள பதினோரு லட்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவீதத்தை அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தப்படி விநியோகஸ்தர் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி பகிர்ந்து கொடுக்காத, கணக்கு மட்டுமே காட்டும் விநியோகஸ்தர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதனால் தான் தயாரிப்பாளர்கள் படம் வெளீவருவதற்கு முன்னமே முடிந்தவரை அறுவடை செய்துவிடுவார்கள். பின்னால் அவர்களுக்கு ஏதும் தேறாது என்பதால்.

மிகப்பெரிய ஹிட் படமான உள்ளத்தை அள்ளித்தா திரைபடத்தின் தயாரிப்பாளர் சம்பாதித்ததை விட, அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் சம்பாதித்தது இரண்டு மடங்கு என்றால் அது மிகையாகாது. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, சுந்தர்.சியின் இயக்கம், மீடியம் பட்ஜெட், காமெடி படம் என்கிற அளவிலேதான் அந்த படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே அபிப்ராயம் இருந்தது. அதனால் பல ஏரியாக்கள் அவுட்ரைட் முறையிலேயே விற்றால் போதும் என்று விற்றார்கள். படம் வெளியாகி முதல் இரண்டு வாரங்களுக்கு பெரிதாய் ஒன்றும் ஓடவில்லை. ஆனால் அதன் பிறகு படம் பிக்கம் ஆகி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனால் மிகவும் லாபமடைந்தவர்கள் விநியோகஸ்தர்களே..

இதே நிலைமைதான் சேது படத்திற்கும், படம் மிகப்பெரிய ஹிட் என்றாலும் அதனால் தயாரிப்பாளருக்கு லாபம் ஒன்றும் பெரிதாய் கிடையாது.. என்ன இந்த ஒரு படம் ஹிட் தயாரிப்பினால், அடுத்த படம் தயாரித்தால் மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்க முடியும். அது கூட உடனடியாய் தயாரித்தால்தான். இல்லாவிட்டால் வெற்றிகள் மறக்கபடும். சேது தயாரிப்பாளர் அடுத்த படம் தயாரிப்பதற்கு சில வருடங்கள் ஆனது. அவர் அடுத்து தயாரித்த படம் கும்மாளம் அது ஒரு தோல்விபடமாய் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திலும் அவரால் பெரிய அளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை.. ஏனென்றால் அவர் சேதுவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து தயாரித்ததினாலும்தான். அதே போல் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள வசூல் ஒப்பந்தம் வேறு. அதை பற்றி பிறகு பார்ப்போம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

32 comments:

சிவகுமார் said...

Nanathan First . ....

வரதராஜலு .பூ said...

நான்தான் ஸகேண்ட்

வரதராஜலு .பூ said...

தொடர் நல்லா போவுது கேபிள் சங்கர் சார். வாரமிருமுறை இத்தொடரை எழுதுங்களேன்.

நையாண்டி நைனா said...

Naan moonaavathu....

தராசு said...

நான்கு லட்சம் - வாழ்த்துக்கள்

தொடர் - ஜூப்பர்.

ஹாட் ஸ்பாட் இல்லாத டெம்ப்ளேட் - வன்மையான கண்டனங்கள்.

butterfly Surya said...

வியாபாரம் நல்லா கல்லா கட்டுது..

தொடருங்கள்.

தராசு said... ஹாட் ஸ்பாட் இல்லாத டெம்ப்ளேட் -வன்மையான கண்டனங்கள்.////// கேபிள் யூத் இல்லை.. இல்லை..

யோ வொய்ஸ் (யோகா) said...

ஓவரா நன்றி சொல்லுறீங்க அரசியல்க்கு வர போறீங்களோ?

ராஜன் said...

//விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி //

//விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள வசூல் ஒப்பந்தம் //

இது மாதிரி இன்னும் எத்தனை ஒப்பந்தம் இருக்கு...?

கதாநாயகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கிடையே ஒப்பந்தம்... இது மாதிரி....

நான்கு லட்சம் Hits - வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே. 4 லட்சத்திற்கு வாழ்த்துகள். இந்தியாவில் இருந்திருந்தா இதுக்காக ஒரு பார்ட்டி கேட்டு வாங்கியிருப்பேன்.

சினிமா வியாபரம் பற்றிய இடுகை ரொம்ப நல்லா போயிகிட்டு இருக்குங்க.

யாசவி said...

informative

:)

Beski said...

நன்றி.
வாழ்த்துக்கள்.

ஜெட்லி... said...
This comment has been removed by the author.
ஜெட்லி... said...

அண்ணே உள்ளதை அள்ளித்தா வெற்றிக்கு யார் காரணம்?

ரம்பாவா? இல்லை அடியில் ஓடிய மின்விசிறியா?

Sukumar said...

Congratz for 4 Lakhs Hits Boss....!!! Keep ROcking....!!!

வந்தியத்தேவன் said...

நான்கு லட்சம் ஹிட்டுகளுக்கு வாழ்த்துக்கள்.

Prabhu said...

நீங்க பல லட்சம் பாத்தவர் போலயே!

தலைவா நமக்கும் பைனான்ஸ் செய்யுங்க!

என்.கே.அஷோக்பரன் said...

தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கின்றேன் -பதிவையும் அழைப்பையும் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_25.html

என்.கே.அஷோக்பரன் said...

தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கின்றேன் -பதிவையும் அழைப்பையும் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_25.html

Raj said...

ரைட்டு!

Raj said...

ரைட்டு!

க.பாலாசி said...

பேசுறதுக்கு நிறைய மேட்டர் இருக்கு....

எல்லாமே வியாபாரம்...

Karthik said...

இந்தத் தொடரை இனிமேல்தான் படிக்கப்போறேன். முதல்ல இருந்து ஆரம்பிக்கணும். நாலு லட்சம் ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள். :)

ISR Selvakumar said...

விளக்கங்கள் எளிமை!

Ashok D said...

பட்சவுன்ன சோகமாயிட்சு.. தலவரே

VISA said...

thala super information.
4 lakhs hita apaa thala suthuthungoaaaa.....

Cable சங்கர் said...

@sivakumar
ரைட்டு

@வரதராஜுலு

நன்றி.. முயற்சி செய்கிறேன்

@தாராசு

நன்றிண்ணே.. எல்லாம் உங்கள மாதிரியான தொடர் வாசக, பதிவர்களின் அருளினால்.
போட்டுருவோம் ஹாட் ஸ்பாட்டை
@பட்டர்ப்ளை சூர்யா
அய்ய்ய்யோ.. போட்டுர்றேன்..போட்டுர்றேன்

@யோ
அது ஒண்ணுதன் பாக்கி

2ராஜன்

நன்றி இன்னும் நிறைய இருக்கு தலைவரே.. அதையெல்லாம் வர்ற எபிசோடுல பார்ப்போம்

Cable சங்கர் said...

@இராகவ்ன் நைஜீரியா
நன்றிண்ணே

@யாசவி
மிக்க நன்றி

@எவனோ ஒருவன்
நன்றி

@ஜெட்லி
நல்ல கேள்விய்யா..? தனியா சொல்றேன்
@சுகுமார்
நன்றி

Cable சங்கர் said...

@வந்தியத்தேவன்
நன்றி எல்லாம் உங்கள் ஆதரவினால்

2பப்பு

செஞ்சிட்டா போவுது

@அஷோக் பரன்
நிச்சயமா எழுதறேன்

@ராஜ்

கம்ப்யூட்ட்ர் வந்திருச்சா..

@

Cable சங்கர் said...

@பாலாஜி

ஆமாம் பாலாஜி
நன்றி

@கார்த்திக்
நன்றி முழுக்க படிச்சி கருத்த சொல்லுங்க

2செல்வகுமார்
நன்றி

@அசோக்
ஏன்?
@விசா
நன்றி பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க

மங்களூர் சிவா said...

நான்கு லட்சம் Hits - வாழ்த்துக்கள்.

தொடர் - புதிய தகவல்கள்!

பிச்சைப்பாத்திரம் said...

நண்பரே,

பத்ரி பதிவு மூலமாக இங்கே. இந்தத் தொடர் நன்றாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி சீரியல் போல் சிறிய சிறிய பகுதிகளாக எழுதி ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் போதே 'தொடரும்' போட்டு விடுகிறீர்கள். மாறாக ஒவ்வொரு சப்ஜெக்டை பற்றியும் விரிவாக எழுதி தனி தனிப் பகுதிகளாக போடலாம் என்பது என் விருப்பம்.

இப்படியாக ஒவ்வொருவரும் தாம் சார்ந்திருக்கிற துறைகளைப் பற்றியான நடைமுறை அனுபவங்களை பற்றி எழுதினாலே பல மொக்கைப் பதிவுகள் மறைந்துவிடும். பொதுவாக பார்வையாளன் என்ற கோணத்தில்தான் பெரும்பாலான 'சினிமா' பதிவுகள் எழுதப்படுகின்றன. அது எளிதும் கூட. அதன் பின்னணியில் இயங்கும் வணிக அம்சங்கள், அதன் சிரமங்கள் பற்றி உங்களைப் போன்ற அனுபவமுள்ளவர்கள்தான் எழுத முடியும். தொடருங்கள்.

MoonramKonam Magazine Group said...

fine detailed writing on how business is done and lost in cinema. Thanks for giving us an inside exposure.