மலையாள க்ளாஸ்மேட்டை அப்படியே எடுத்திருக்கிறார்கள். கதை களனிலும், மற்றும் சில சின்ன, சின்ன காட்சிகள், கேரக்டர்களில் செய்த மாற்றங்களை தவிர,
பிருதிவிராஜ், ஷக்தி, ப்ரியாமணி மற்றும் பலர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, காலேஜுக்கு திரும்பவும், ஷக்தியின் நினைவு நாளுக்காக ஒன்று கூடுகிறார்கள். கல்லூரி பறவைகளாய் சுற்றி திரிந்தவர்கள், இப்போது குடும்பஸ்தர்களாய் மாறியிருக்க, பிருதிவிராஜும், ப்ரியா மணியும், முன்னாள் காதலர்கள், இந்நாளில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூட முடியாமல் இருக்க, தன் மனம் விட்டு பேச போகும் ப்ரியாமணி, அங்கே காண்பது கிடார் கம்பியினால் கொலை முயற்சியில் மயங்கி கிடக்கும் பிரிதிவியை தான். ஏன் அவரை கொல்ல முயற்சிக்க வேண்டும்? யார் செய்திருப்பார்கள்? கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்திருக்கிறது? ப்ரியாமணிக்கும், ப்ரிதிவிராஜுக்கும் என்ன பிரச்சனை? ஷக்தி எப்படி இறந்தார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு சுவையாய், இன்ட்ரஸ்டாய் சொல்லியிருக்கும் பதில் வெண் திரையில்.
மலையாள திரைக்கதையிலிருந்து பெரிய மாற்றங்கள் ஏதும் செய்துவிடவில்லை. மலையாளத்தில் வேட்டி கட்டி கொண்டு வரும் ப்ரிதிவி, இதில் குத்து பாட்டுக்கு ஆட்டம், ஆடி, பேண்ட் போட்டு கொண்டு வருகிறார். மற்றபடி மலையாளத்தில் இருந்ததை விட கொஞ்சம் அதிக ஸ்லோவாகவே இருக்கிறது முதல் பாதி. திரைக்கதை. தேவையில்லாத பாடல்கள். அதிலும் ஒரு குத்தாட்ட அழகியுடன் வரும் பாடல் மிக சொதப்பல்.
மலையாள படத்தில் வரும் எலக்ஷன் காட்சிகள் அவர்களின் இயல்பான மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டை வைத்து திரைக்கதை பண்ணியிருப்பார்கள். அதுவே மிக பெரிய வலுவாக இருந்தது. ஆனால் அது இங்கே பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை.
ப்ரிதிவிராஜ் வழக்கம் போல நடித்துள்ளார், ப்ரியாமணி உடம்பு போட்டு இருக்கிறார். காலேஜ் பெண்ணுக்கு அவ்வளவாக பொறுந்தவில்லை. இறந்து போகு பிரிதிவியின் நண்பனாக ஷக்தி, பெரிதாய் நடிப்பதற்கு வேலையில்லை என்றாலும், முகம் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பதால் கிடைக்கிற காட்சிகளிலும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை. விஜயின் மேனரிசத்தை விட்டு கொஞ்சம் வெளியே வந்தால் சான்ஸ் இருக்கிறது.
படத்தில் நடிப்பில் கவனிக்க பட வேண்டியவர் கார்த்திக் குமார். பொய் சொல்ல போறோம் கதாநாயகன். இதில் பணக்கார வில்லத்தனமான கேரக்டர். மிக அருமையான பாடி லேங்குவேஜ். கிடைக்கிற கேப்பில் நடிக்கிறார். இவருக்கும் இன்னும் சரியான ப்ரேக் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஷக்தியின் அப்பாவாக பாக்யராஜ். வழக்கமான அப்பாவாக வருகிறார். மலையாளத்தில் கேரள பாக்யராஜ் என்று அழைக்கப்படும் பாலசந்திரமேனன் நடித்திருப்பார். லொல்லு சபா ஜீவா, இளவரசு எல்லோரும் ஓகே. இந்த மனோபாலாவை யாராவது படம் கொடுத்து வேலைய பாக்க சொல்லுங்க.. ஒரே மாதிரி பேசி, நடித்து ரொம்பத்தான் இம்சை படுத்துறாரு.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு தெளிவு. ஆனால் சமீபத்தில் இவ்வளவு மோசமாய் ஒரு புட்பால் மேட்ச் படமாக்கப்பட்டு பார்த்ததில்லை.
விஜய் ஆண்டனியின் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட். அல்லா பாடலும், அழகாய் பூத்ததே பாடல் சுகமான ராகம். ஆனால் தப்பான இடத்தில் ப்ளேஸ்மெண்ட். பிண்ணனி இசையில் ஆங்காங்கே தெலுங்கு ஹாப்பிடேஸ் தென்படுகிறது. சன் டிவியின் புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் போடப்பட்டு பாடல்கள் ஹிட்டாக்க படலாம். ஆனால் கேட்டவுடன் நெகிழ வைக்கும் கிளாஸ்மேட்ஸ் ஒரிஜினல் பாட்டு போல இல்லை ஷத்தியின் அறிமுக பாடல்.
இயக்குனர் ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கியிருக்கிறார். இரண்டு மணி நேர படமாய் இருந்தும் ஆரம்பத்தில் நத்தை வேகத்தில்தான் செல்கிறது. வசனங்கள் சில இடங்களில் அபத்தம். . அதிலும் ப்ரியாமணி, ப்ரிதிவி காதல் காட்சி வசனங்கள். புட்பால் மேட்ச் காட்சியில் பேசும் வசனத்தில் பாக்யராஜ் தெரிகிறார். ஒரிஜினல் மலையாளத்தில் ஷக்தியின் கேரக்டர் மேல் ஒரு சாப்ட் கார்னர் வரும் அது இந்த படத்தில் மிஸ்சிங். சன் டிவிக்கு சொல்லிக் கொள்ளுபடியான ஒரு படம்
நினைத்தாலே இனிக்கும் -நினைச்சா இனிக்கும்..
டிஸ்கி:
படம் ஆரம்பித்ததும் மக்கள் டைட்டில் போடும் போது கொஞ்சம், ஆரவாரம் செய்வார்கள் இலலியா? ஆதையும், மொக்கை பாட்டுக்கு முன் வரிசையில் உள்ள ஆடியன்ஸ் சிலரை தியேட்டர் ஸ்கிரீன் மேடையில் ஆடவிட்டு அதையும் ஷூட் செய்து கொண்டார்கள். கமலா தியேட்டரில் சன் டிவிகாரர்கள். நாளைய செய்திகளில் தமிழகம் எங்கும் மக்கள் ஆரவாரம், பாடல்களுக்க்கு தியேட்டரில் நடனம் என்று சன் செய்திகளில் காட்டுவார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)
மலையாள க்ளாஸ்மேட்டின் சூப்பர் ஹிட்டுக்கு முக்கியமான அந்த பாடலின் வீடியோ.
Post a Comment
70 comments:
நமக்கு நாமே திட்டம் - 1
ada pavame
இன்னிக்கு பார்த்துட்டு சொல்றேன்..!
இருந்தாலும் நம்ப பீளிங்க்ச தொட்டுட்டு போகுது, பரவால்ல.
ஆமா, ஆமா, படம் நல்லாத்தான் இருக்குது, நான் Hot Spot ல இருக்கறத சொன்னேன்.
//மளையாள
//
தெரிஞ்சே பண்ண தப்பா இது....
கார்த்திக் குமார் நடிப்பு உண்மையிலே சூப்பர்....
ஆமாம் உங்க ஹாட் ஸ்பாட் என்னை போன்ற
சிறுவர்களின் மனதை கெடுக்கிறது....
இன்னும் கொஞ்சம் நெறைய எதிர் பாக்குறேன்...
//ஆமா, ஆமா, படம் நல்லாத்தான் இருக்குது, நான் Hot Spot ல இருக்கறத சொன்னேன்
//
இது யூத்து :)
//படம் ஆரம்பித்ததும் மக்கள் டைட்டில் போடும் போது கொஞ்சம், ஆரவாரம் செய்வார்கள் இலலியா? ஆதையும், மொக்கை பாட்டுக்கு முன் வரிசையில் உள்ள ஆடியன்ஸ் சிலரை தியேட்டர் ஸ்கிரீன் மேடையில் ஆடவிட்டு அதையும் ஷூட் செய்து கொண்டார்கள். கமலா தியேட்டரில் சன் டிவிகாரர்கள். நாளைய செய்திகளில் தமிழகம் எங்கும் மக்கள் ஆரவாரம், பாடல்களுக்க்கு தியேட்டரில் நடனம் என்று சன் செய்திகளில் காட்டுவார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)//
நச் வரிகள்...
சன் டீவீ அவங்க பட விளம்பரத்தை 5 சேனலிலும் 10 நிமிடத்திற்கு ஒரு தடவை போட்டு டார்சர் பண்றாங்க. அதனாலேயே சன் பிக்சர்ஸ் படம் எல்லாம் ஃப்ளாப் ஆகணும்னு தோணுது.
னைத்தாலே கொதிக்கும் ன்னு பெயர் வைத்து இருக்கலாம் போல.
ப்ரியா மணிக்காக டவுன் லோஅது செய்யலாமா அல்லது வேண்டாமா
ஜிஎன்.ரங்கராஜன் வீடு அபிராமபுரத்தில் இருந்தது.கால் தேய நடந்திருப்பேன்.உதவி இயக்குனராவதற்கு
அண்ணன் அப்துல்லாவின் பாட்டைப் பாராட்டி ஒரு வரி எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்....ஹூம்....
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
படம் ஆரம்பித்ததும் மக்கள் டைட்டில் போடும் போது கொஞ்சம், ஆரவாரம் செய்வார்கள் இலலியா? ஆதையும், மொக்கை பாட்டுக்கு முன் வரிசையில் உள்ள ஆடியன்ஸ் சிலரை தியேட்டர் ஸ்கிரீன் மேடையில் ஆடவிட்டு அதையும் ஷூட் செய்து கொண்டார்கள். கமலா தியேட்டரில் சன் டிவிகாரர்கள். நாளைய செய்திகளில் தமிழகம் எங்கும் மக்கள் ஆரவாரம், பாடல்களுக்க்கு தியேட்டரில் நடனம் என்று சன் செய்திகளில் காட்டுவார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)///
வாராவாரம் எல்லா மொக்கை படங்களும் பார்த்துட்டு விமர்சனம் எழுதி எங்களை காப்பத்துரீங்களே உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
இந்தவாட்டி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அதை சரி செய்யவும்.
//மளையாள படத்தில் வரும் எலக்ஷன் காட்சிகள்//-- மலையாள
//நினைத்தாலே இனிக்கும் – திரைவிமர்ச்னம்// -- திரைவிமர்சனம்
அண்ணன் அப்துல்லா பாடிய பாட்டைப் பற்றி இப்படி சொல்லாம விட்டுடீங்களே...
குழப்பிட்டீங்க தலைவரே...
//என்பது போன்ற பல கேள்விகளுக்கு சுவையாய், இன்ட்ரஸ்டாய் சொல்லியிருக்கும் பதில் வெண் திரையில்.//
இவ்வளவு தெளிவா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, கீழே எல்லாம் போட்டு வாங்குறீங்க படத்தை...
என் புரிதலில் படம் சுமார் ஆக இருக்கும் என நினைக்கிறேன்...
நானும் நேற்று 12 மணிக்காட்சி கமலாவில்தான் பார்த்தேன்.ஆனால் உங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
வழக்கம் போல உங்கள் விமர்சனம் 100% என் ரசனையுடன் ஒத்துப் போகிறது,ஷங்கர்.
\\அண்ணன் அப்துல்லாவின் பாட்டைப் பாராட்டி ஒரு வரி எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்....ஹூம்....\\
அது சொல்ல சொல்ல இனிக்குமாச்சே..!
நவ்தீப் படம்.
//படம் ஆரம்பித்ததும் மக்கள் டைட்டில் போடும் போது கொஞ்சம், ஆரவாரம் செய்வார்கள் இலலியா? ஆதையும், மொக்கை பாட்டுக்கு முன் வரிசையில் உள்ள ஆடியன்ஸ் சிலரை தியேட்டர் ஸ்கிரீன் மேடையில் ஆடவிட்டு அதையும் ஷூட் செய்து கொண்டார்கள். கமலா தியேட்டரில் சன் டிவிகாரர்கள். நாளைய செய்திகளில் தமிழகம் எங்கும் மக்கள் ஆரவாரம், பாடல்களுக்க்கு தியேட்டரில் நடனம் என்று சன் செய்திகளில் காட்டுவார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)
///
oh my god ...
தலைவரே.. விமர்சனத்தில ஏதோ ஒன்னு கொறையுது...
அந்த மலையாளப்பாட்டு செம்ம மெலோடி.. தல.. நன்றி..
தலைவரே.முந்தைய கமெண்டிற்கு ஒரு திருத்தம்..அவர் கே.ரங்கராஜ்
அப்போ படம் டி.வி.டி., வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்றீங்க.
அண்ணா,
களத்துக்கு வந்துட்டோம்ல...
உங்க விமர்சனத்த பாத்துட்டு படத்த பாக்கலாம்னு முடிவு செஞ்சாலும் சன் டி.வி விளம்பரத்த பாத்துட்டு சூடு பட்ட பூனையால்ல இருக்கோம்...
நிறை குறைகளை மிக அழகா அலசியிருக்கீங்க...
பிரபாகர்.
/
டிஸ்கி:
படம் ஆரம்பித்ததும் மக்கள் டைட்டில் போடும் போது கொஞ்சம், ஆரவாரம் செய்வார்கள் இலலியா? ஆதையும், மொக்கை பாட்டுக்கு முன் வரிசையில் உள்ள ஆடியன்ஸ் சிலரை தியேட்டர் ஸ்கிரீன் மேடையில் ஆடவிட்டு அதையும் ஷூட் செய்து கொண்டார்கள். கமலா தியேட்டரில் சன் டிவிகாரர்கள். நாளைய செய்திகளில் தமிழகம் எங்கும் மக்கள் ஆரவாரம், பாடல்களுக்க்கு தியேட்டரில் நடனம் என்று சன் செய்திகளில் காட்டுவார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)
/
haa haa
:)))))))))))))
//சமீபத்தில் இவ்வளவு மோசமாய் ஒரு புட்பால் மேட்ச் படமாக்கப்பட்டு பார்த்ததில்லை. //
ஆஆங்க! அதிலயும் பிரித்விராஜ் கோல் போடுறமாதிரி அமைச்சிருக்கிற காட்சி - எங்கூரு தெருவில கூட இதவிட அருமையா கால்பந்து விளையாடுவாங்க!
//மலையாளத்தில் ஷக்தியின் கேரக்டர் மேல் ஒரு சாப்ட் கார்னர் வரும் அது இந்த படத்தில் மிஸ்சிங்.//
அருமை அருமை. மிகச் சரியான விமர்சனம். அதற்குக் காரணம் முதல்பாதியில் சொல்லப்படாமல் போன அவர்களின் நட்பு மற்றும் கல்லூரி சம்பவங்கள்.
பாத்துடலாம் பாஸ்.!
அப்புறம் அந்த டிஸ்கி நல்லாருந்தது.
நன்றி!
மலையாள கிளாஸ்மேட் சூப்பர் சூப்பர்
ரிலீஸ் ஆன முதல் நாளே இந்த படத்தை திரையரங்கில் பார்த்தேன்.... மதிய காட்சி கூட்டத்தை பார்த்து ஏமாந்து மாலை 6.00 மணிக்காட்சி சென்று நானும் ஏமாந்தேன்!!!!![:D]
//ஆனாலும் அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :) //
என்ன பண்ணுவாங்க காசு குடுத்து படத்த வாங்கிட்டு சும்மா இருக்க முடியாதுல.. கொலைவெறி பிடிக்குற வரைக்கும் இவங்க டிரைலர் போட்டு மக்கள கடுப்பு ஏத்துவாங்க.
ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லலாம் இவங்க வாங்குன படம் எல்லாம் கண்டிபாக 50 நாட்கள் ஓடி விடுகிறது, இல்ல இல்ல ஒட்டி விடுறாங்க. சன் டிவி மாதுரி ஒரு பவர் புல் மீடியா இருந்தா சாம் அன்டேர்சன் நடிச்ச படம் கூட பிச்சிக்கிட்டு ஓடிடும்.
//அவங்களோட தொழில் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :)//
வஞ்ச புகழ்ச்சி!!!! விமர்சனம் அருமை. படத்தின் கதையை லீக் செய்யாமல் விமர்சனம் செய்த விதம் அருமை. இப்படி ஏதாவது மலயாள படத்தை சுட்டாவது தமிழில் நல்ல படங்கள் வரட்டும். நல்லவேளை பி. இந்த கதையை சுடவில்லை. பி.வாசுவை சொன்னேன். சந்திரமுகி /குசேலன் சொதப்பல் புகழ் பி. யிடம் படம் சிக்கியிருந்தால் கூட வே ஷக்தி நீங்கள் கிழித்து தொங்கவிட்டிருப்பீர்கள்.
பாத்துடலாம் பாஸ்.!
/நமக்கு நாமே திட்டம் - 1//
:)
@டம்பிமேவி
எதுக்கு ?
@உண்மை தமிழன்
சரி.. உங்க தலைவிதி யாரை விட்டது.
/இருந்தாலும் நம்ப பீளிங்க்ச தொட்டுட்டு போகுது, பரவால்ல//
அவ்வளவு பிடிச்சிருக்கா புலிகேசி
/ஆமா, ஆமா, படம் நல்லாத்தான் இருக்குது, நான் Hot Spot ல இருக்கறத சொன்னேன்//
நாமெல்லாம் யூத்துண்ணே..:)
/கார்த்திக் குமார் நடிப்பு உண்மையிலே சூப்பர்....//
ஆமாம் ஜெட்லி
//ஆமாம் உங்க ஹாட் ஸ்பாட் என்னை போன்ற
சிறுவர்களின் மனதை கெடுக்கிறது....
இன்னும் கொஞ்சம் நெறைய எதிர் பாக்குறேன்//
உங்க ஆதரவு என்னை ரொம்பவே உற்சாகபடுத்துது.
/சன் டீவீ அவங்க பட விளம்பரத்தை 5 சேனலிலும் 10 நிமிடத்திற்கு ஒரு தடவை போட்டு டார்சர் பண்றாங்க. அதனாலேயே சன் பிக்சர்ஸ் படம் எல்லாம் ஃப்ளாப் ஆகணும்னு தோணுது.
//
ஆனால் சந்துரு அதுதான் தியேட்ட்ருக்கு ஆட்களை கூட்டி வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.
/ப்ரியா மணிக்காக டவுன் லோஅது செய்யலாமா அல்லது வேண்டாமா
//
முடிந்தால் மலையாள் படத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
/அண்ணன் அப்துல்லாவின் பாட்டைப் பாராட்டி ஒரு வரி எழுதாததால் வெளிநடப்பு செய்கிறேன்....ஹூம்.//
மகேஷ், இராகவன் அண்ணன்களே.. இனிக்கும்னு பேர் வந்தாலே அது அப்துல்லாண்ணே பாடின படம்னு நினைச்சிடறதா.. அது சொல்ல சொல்ல இனிக்கும்னே..
/வாராவாரம் எல்லா மொக்கை படங்களும் பார்த்துட்டு விமர்சனம் எழுதி எங்களை காப்பத்துரீங்களே உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
இந்தவாட்டி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அதை சரி செய்யவும். //
மன்னிக்கவும் ரமேஷ்.. சரி செய்துவிட்டேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை..
/இவ்வளவு தெளிவா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, கீழே எல்லாம் போட்டு வாங்குறீங்க படத்தை...
என் புரிதலில் படம் சுமார் ஆக இருக்கும் என நினைக்கிறேன்...
//
அண்ணே அங்கதானே இருக்கு உள்குத்து.. நீங்க சரியா புரிஞ்சிட்டீங்க.. :) உள்குத்தை..
/நானும் நேற்று 12 மணிக்காட்சி கமலாவில்தான் பார்த்தேன்.ஆனால் உங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
வழக்கம் போல உங்கள் விமர்சனம் 100% என் ரசனையுடன் ஒத்துப் போகிறது,ஷங்கர்.
//
அஹா.. மிஸ் பண்ணிட்டேனே சார்.. உங்களை..
/oh my god ..//
எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி.. அக்னி.. அதான் நீஙக் எஸ்கேப் ஆயிட்டீங்களே.பெங்களூரூவுக்கு.. அங்கு இருக்கும் பெண்களை எல்லாம் கேட்டதாய் சொல்லவும்
/தலைவரே.. விமர்சனத்தில ஏதோ ஒன்னு கொறையுது...
//
படத்திலேயும் கொறைஞ்சிதுனால தான் அபப்டி இருக்கு அசோக்
மலையாள பாட்டு நிஜமாவே நல்லாருக்கும்
/தலைவரே.முந்தைய கமெண்டிற்கு ஒரு திருத்தம்..அவர் கே.ரங்கராஜ்
//
ரைட்டு.. ரைட்டு.. விடுங்க அப்படியே போயிட்டே இருங்க..
/அப்போ படம் டி.வி.டி., வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்றீங்க.
//
ஏற்கனவே மலையாள படம் டிவிடி கிடைக்குதுங்க..
அண்ணா,
களத்துக்கு வந்துட்டோம்ல...
உங்க விமர்சனத்த பாத்துட்டு படத்த பாக்கலாம்னு முடிவு செஞ்சாலும் சன் டி.வி விளம்பரத்த பாத்துட்டு சூடு பட்ட பூனையால்ல இருக்கோம்...
நிறை குறைகளை மிக அழகா அலசியிருக்கீங்க...
பிரபாகர்//
வாழ்த்துக்ள் பிரபா.. எல்லாம் நலல்படியா முடிஞ்சிச்சா. ஊர் போய் சேர்ந்திட்டீங்க போலருக்கே.. போன் பண்ணுங்க..
/இது யூத்து :)
//
உஙக்ளுக்கு தெரியுது.. அண்ணே..
/ஆஆங்க! அதிலயும் பிரித்விராஜ் கோல் போடுறமாதிரி அமைச்சிருக்கிற காட்சி - எங்கூரு தெருவில கூட இதவிட அருமையா கால்பந்து விளையாடுவாங்க//
ஹா..ஹா..
ஆமாம் மலையாளத்தில் ஷக்தியின் கேரக்டருக்கு இருந்த ஒரு சாப்ட் கார்னரை மிஸ் பண்ணிவிட்டார்கள். ஊர்சுற்றி
நன்றி ஆதி
நன்றி பழுர் கார்திக்
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி சில்க் சுமிதா
/ரிலீஸ் ஆன முதல் நாளே இந்த படத்தை திரையரங்கில் பார்த்தேன்.... மதிய காட்சி கூட்டத்தை பார்த்து ஏமாந்து மாலை 6.00 மணிக்காட்சி சென்று நானும் ஏமாந்தேன்!!!!![:D]//
இப்படியெல்லாம் ஏமாறப்படாது .. மிக்க நன்றி விஎப் எக்ஸ்.. உங்கள் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும்.
/என்ன பண்ணுவாங்க காசு குடுத்து படத்த வாங்கிட்டு சும்மா இருக்க முடியாதுல.. கொலைவெறி பிடிக்குற வரைக்கும் இவங்க டிரைலர் போட்டு மக்கள கடுப்பு ஏத்துவாங்க.
ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லலாம் இவங்க வாங்குன படம் எல்லாம் கண்டிபாக 50 நாட்கள் ஓடி விடுகிறது, இல்ல இல்ல ஒட்டி விடுறாங்க. சன் டிவி மாதுரி ஒரு பவர் புல் மீடியா இருந்தா சாம் அன்டேர்சன் நடிச்ச படம் கூட பிச்சிக்கிட்டு ஓடிடும்//
அப்படியெலலம் இல்லை ராஜராஜன்.. அவர்களின் தீ, தெனாவெட்டு எல்லாம் ஃபெயிலியர் படஙக்ளே.. ஆரம்ப உற்சாகமெல்லாம் வடிந்து ரஜினி, படமே ஊத்திக் கொள்ளும் போது.. சன் பிக்சர்ஸ் விளம்பரமெல்லாம் ஜுஜுபி..
/வஞ்ச புகழ்ச்சி!!!! விமர்சனம் அருமை. படத்தின் கதையை லீக் செய்யாமல் விமர்சனம் செய்த விதம் அருமை.//
நன்றி விசா.. நீங்க ஷார்ப்..
//மகேஷ், இராகவன் அண்ணன்களே.. இனிக்கும்னு பேர் வந்தாலே அது அப்துல்லாண்ணே பாடின படம்னு நினைச்சிடறதா.. அது சொல்ல சொல்ல இனிக்கும்னே..//
ஹி ஹி .... உங்களுக்குத் தெரிஞ்சுருக்கான்னு டெஸ்ட் பண்ணிப் பாத்தேன்.... ஹி ஹி ஹி
தவறை செய்வது தவறு , தவறி செய்வது சரி.
தென்ன மரம், சின்ன இடத்தில உயரமா வளர்ந்து வருடம் முழுவதும் தேங்காயை கொடுக்கும். ஆனா, மாமரம் இருக்கே பெருசா அகலமா வளர்ந்து வருசத்துக்கு ஒரே ஒரு வாட்டிதான் மாங்காய் கொடுக்கும். ஆனா நாம என்ன செய்வம் எப்பவுமே பயன்தரும் தென்ன மரத்த மறந்துட்டு , மா மரத்த தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடுவோம்.
பின் குறிப்பு :
கதை புரியாதவர்களுக்கு மட்டும். caple sanker - கு அல்ல.
தென்னைமரம் - விக்னேஷ்
மாமரம் -பிரித்விராஜ்
//சன் டிவிக்கு சொல்லிக் கொள்ளுபடியான ஒரு படம் //
நெஜமா உங்களுக்கு அப்படியா பட்டுச்சு? எனக்கு படம் போர்.. சக்தி கேரக்டர் மனசுல நிக்கவே இல்ல!! அந்த கேரக்டர்க்கு நச்சு நாலு சீன் இருந்திருக்கணும்..
ரெண்டு மூணு இடத்துல தான் வசனம் நல்லா இருக்கு..
பிருத்வி வந்தா நல்ல படம்னு நம்புனேன். சொதப்ஸா?
பிரியாமணிலா கலேஜ்கு வந்தா குட்மாரினிங் டீச்சர் சொல்ற மாதிரி இருப்பாங்க! ஸ்டூடண்டா? என்ன கொடும சரவணன் இது!
பிருத்வி வந்தா நல்ல படம்னு நம்புனேன். சொதப்ஸா?
பிரியாமணிலா கலேஜ்கு வந்தா குட்மாரினிங் டீச்சர் சொல்ற மாதிரி இருப்பாங்க! ஸ்டூடண்டா? என்ன கொடும சரவணன் இது!
கேபிள்ஜி.. மலையாள படம் சூப்பர். அந்த பாட்டு என்னோட all time fav.. இது வரை நூறு முறை கேட்டிருப்பேன்...
”இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக” அப்போ பார்த்துகிறேன்...
கேபிள்ஜி.. மலையாள படம் சூப்பர். அந்த பாட்டு மட்டுமல்ல "காற்றாடி கடலின்........" இந்த பாட்டும் சூப்பர்.
நல்லவேளை தியேட்டர் வாசல் வரை போய்விட்டு பின்னர் மனம் மாறி
(மலையாளத்துல ஒரு அஞ்சு தடவைக்கு மேல் பாத்ததால்) ஒரு கிலோ ஆப்பிள் வாங்கிவிட்டு திரும்பினேன்
எப்படியும் ஒரு ஆறு மாசத்துல ”இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக” போட்டுருவாங்க
அப்போ பார்த்துகிறேன்...
உங்க அலசல் நல்லாயிருக்கு
மொக்க படம் பாஸ் .. பாக்யராஜ் நடிப்பு தவிர படத்துல ஏதும் சொல்ற மாதிரி இல்ல.. ப்ரியாமணி கார்த்திக்குமார் ஜீவா எல்லாரும் அங்காங்க வந்து போறாங்க.. கதையோட ஒட்டல
padam avalavu mokaia kapathitinga thala
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
நான் Hot Spot ல இருக்கறத சொன்னேன்.
இன்னும் கொஞ்சம் நெறைய எதிர் பாக்குறேன் Mr.World,Mr.India,Mr. Tamil Nadu and Mr.Chennai யூத்து கேபிள்ஜி
படம் பார்த்துட்டேன் கேபிள்.. என்ன குறைனு தெளிவா சொல்ல தெரியல.. மலையாள படம் மனச தொடுச்சு.. அந்த நடிகர்கள் பலர நா மொத மொதலா பார்த்த போதும் மனசுல ஓட்டினாங்க... இங்க எதோ இடிக்குது.. பல அழகான பூக்கள் ஆனா கோர்வ சரி இல்லைன்னு நெனைகிறேன்..
அந்த மலையாள பாட்டு என்னோட all time favorite..
Post a Comment