Thottal Thodarum

Sep 8, 2009

மதுரை சம்பவம் – திரை விமர்சனம்

சிறந்த நடிகர் விருது வாங்கும் பிரகாஷ்ராஜுக்கு வாழ்த்துக்கள். விருது படமான காஞ்சிவரம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்.

madurai-01-big



மதுரை ஆட்டு தொட்டி அதை சுற்றி உள்ள பெரிய ஏரியாவையே கட்டி ஆளும் ரவுடி ஆளமரத்தானுக்கும், அவன் ஆதரவிலேயே வளர்ந்து, அவனாலேயே எம்.பி ஆன கட் அவுட் ஆளவந்தானுக்கும் தொழில் போட்டியில் ஆரம்பிக்கிறது கதை. ஆளவந்தானின் தொழிலை முடக்கும் ஆளமரத்தானின் மகன் குட்டி, இருவருக்கும் இடையே புகைந்த பகை ஒரு கட்டத்தில் அடிதடியாகி, ஆளமரத்தானின் மருமகனையே காவு வாங்கிவிட, அவனை கொன்றது ஆளவந்தான் என்று நினைத்து ஆலமரத்தான் நேரிலேயே போய் சுட்டு  கொன்று விட, பிரச்சனை உச்சத்துக்கு வருகிறது.



இதற்கு நடுவில் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராய் வரும் கரோலினுக்கும், குட்டிக்கும் காதல்.  அந்த காதலுக்கு பின் ஒரு அருமையான காதலும் துரோகமும் சேர்ந்த கதை  அமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர். ஆலமரத்தானுக்கு அல்லக்கை போல செயல் படும் கரோலின் அவரை என்கவுண்டர் செய்ய, ப்ரச்சனை இன்னும் உச்சத்துக்கு வர. க்ளைமாக்ஸ் வெடிக்கிறது.



மிக, மிக இயல்பான காட்சிகளுடன், பின்னால் மிசைல்  துரத்தும் வேகத்தில், பரபரப்பான திரைக்கதையில் பறந்திருக்கிறார் இயக்குனர் யுரேகா. படம் முழுவதும், திருப்பங்களும், முடிச்சுகளுமாகவே போகிறது.  கரோலினுக்கு பின் இருக்கும் ஒரு அண்டர்கரண்ட் விஷயம் படத்துக்கு மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் என்றே சொல்ல வேண்டும்.
20Madurai-sambhavam

ஹரிகுமார் நன்றாக ஆடுகிறார். ஒரு பாட்டு வேறு பாடியிருக்கிறார். அழுத்தமாய் அனயாவுக்கு முத்தம் கொடுக்கிறார். அவ்வப்போது ந்டிக்கவும் செய்ய முயற்சி செய்திருக்கிறார். படத்தில் பெரிய மைனஸே இவரது பாடி லேங்குவேஜும், மதுரை ஸ்லாங்கும், பஞ்ச் டைலாக் பேசுவதும் இவர் அடித்தால் குறைந்தது இருபது பேர் கீழே விழுவதும்தான்.  இதை கொஞ்சம் குறைத்திருந்தால்  படம் ஆங்காங்கே விழுவது தவிர்க்க பட்டிருக்கும்.



தூத்துக்குடி கார்திகா ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு, ஆங்காங்கே தென்படுகிறார். இன்ஸ்பெக்டர் கரோலினாக வரும் அனயாவுக்கு அருமையான கேரக்டர். வழக்கமாய் சீரியஸாகவே இருக்கும் அந்த முகத்துக்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்துகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
madurai-sambavam

ஆலமரத்தானாக ராதாரவி. மிகவும் பண்பட்ட நடிப்பு. என்ன இவர் எனன் தான் ரவுடியாக இருந்தாலும் நல்லவராய் காட்ட நாயகன் ரேஞ்சுக்குகான காட்சிகள் கொஞ்சம் ஓவர்.

ஒளிப்பதிவு ஓகே ரகம் ஆலமரத்தானின் மாப்பிள்ளையை துரத்தி கொல்லும் காட்சியில் ஒளிப்பதிவாளருடன், எடிட்டரும் கை கோர்த்து பின்னியிருக்கிறார்கள்.



ஜான்பீட்ட்ரின் இசையில் பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. பிண்ணனி இசையும் அஃதே.பாடல்கள் படத்துக்கு ஸ்பீட் ப்ரேக்கர்கள்தான்.



க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான மசாலா தமிழ் சினிமாவுக்கு புதுசு.

மதுரை சம்பவம் என்கிற பெயருக்கு பதிலாய் எந்த ஊர் பற்றி காட்டியிருந்தாலும் இந்த கதைக்கு பொருந்தும். மதுரையை சுற்றி கதை இருந்தால் ஹிட் என்கிற செண்டிமெண்டோ..?
மதுரை சம்பவம் - செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆயிருச்சிண்ணே..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

31 comments:

thamizhparavai said...

அப்போ பார்க்கலாம்கிறீங்க....!!!!

பீர் | Peer said...

//மதுரையை சுற்றி கதை இருந்தால் ஹிட் என்கிற செண்டிமெண்டோ//

பாசக்கார பயலுக... :)))

சி.வேல் said...

வணக்கம் கேபிள்சங்கர்

நிசமாதான் சொல்றீங்களா,

காமடி இல்லையே

பிரசன்னா கண்ணன் said...

நீங்க சொல்றத வச்சு பாத்தா, ஒரு வாட்டி பாக்கலாம் போலிருக்கே..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்போ படம் ஹிட்டுன்னு சொல்லுங்க‌

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாக்கலாமா வேணாமா?

Raju said...

ஹிட் ஆயிருச்சா..?
இனிமேலும் தடுக்கமுடியாதா மதுரைய..!
என்ன கொடுமை சங்கர்ண்ணே இது..!

Sukumar said...

இடைவேளை வரை பாத்தேன்... நல்லா இருந்துச்சி .. ஆபிஸ் போக வேண்டி இருந்ததால அதுக்கு மேல பாக்க முடியல....
ஹரி குமார் விரைவில் "சூரத்தளபதி" ஆகும் ஆபத்து இருக்கிறது.......

GHOST said...

அண்ணே நிசமாத்தான் சொல்றிங்களா, ஒருவாட்டி பாக்கலாமா

கலையரசன் said...

//ஹரி குமார் விரைவில் "சூரத்தளபதி" ஆகும் ஆபத்து இருக்கிறது//

மக்களுக்கு ரிவீட்டேடடடடடட!!!

Anbu said...

நல்ல விமர்சனம் அண்ணா..

இந்த படத்திற்கான என்னுடைய விமர்சனம்:-


http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_07.html

Ashok D said...

//ஹரி குமார் விரைவில் "சூரத்தளபதி" ஆகும் ஆபத்து இருக்கிறது//

மக்களுக்கு ரிவீட்டேடடடடடட!!!//
எப்டில்லாம் think பண்றாங்கப்பா..

தலவரே... மதரக்கும் தமிழ் சினிமாக்கும் ஏதோ ஒன்னு இருக்கும் போல.

கார்க்கிபவா said...

ஓடுமா? டிரெய்லர்ல ஹரி படுத்துவுது தாங்கல..

தல, நம்ம கடைல உங்கள வச்சு ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. தப்பா நினைசுக்க மாட்டிங்கன்னு ஒரு நம்பிக்கைல..

இது நம்ம ஆளு said...

மதுரை சம்பவம் - செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆயிருச்சிண்ணே..

நல்ல விமர்சனம் அண்ணா..

வாங்க நம்ம பதிவுக்கு விருது

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

நெசமாவே படம் நல்லா இருக்கா???? நான் டிரெய்லர் பார்த்து மெர்சலாகிட்டேன்...

தராசு said...

மதுரயத்தவிர வேற ஊரே இல்லையாண்ணே தமிழ்நாட்ல????

பரிசல்காரன் said...

எப்படிங்க எவ்ளோ அடிவாங்கினாலும் மறுபடி மறுபடி ஓடிப்போய்ப் பார்க்கறீங்க? பாவம்க நீங்க...

க.பாலாசி said...

ம்ம்ம்....படம் நல்லாருக்கா என்னன்னு தெரியல...ஆனா நீங்க சொல்றதா பாத்தா நல்லாதான் இருக்குமோன்னு தோணுது...ம்ம் பாப்போம்....

பின்னோக்கி said...

டிரைலர் பார்த்து ரெண்டு நாளா எனக்கு சோறு தண்ணி எறங்களை.

நீங்க நெசமாத்தான் சொல்றீங்களா ??

மேவி... said...

:)))

:(((((

Thamira said...

படத்தில் பெரிய மைனஸே இவரது பாடி லேங்குவேஜும், மதுரை ஸ்லாங்கும், பஞ்ச் டைலாக் பேசுவதும் இவர் அடித்தால் குறைந்தது இருபது பேர் கீழே விழுவதும்தான்.//

இது யாரு அடுத்த மொக்கைப்பாண்டி? ஒண்ணு ரெண்டு படம் ஹிட்டானாத்தானே இப்பிடி பண்ணுவாங்க.. இப்பல்லாம் வரம்போதே இப்பிடித்தான் பிளான் பண்ணிகிட்டு வர்றாய்ங்களா? நல்லாருங்கடா.. ஊரு விளங்கிரும்.

இவன் டிவியில நொங்கு எடுத்துருவேன், பருப்பு கடைஞ்சிருவேன்னு பேசுன வசனம் வரும்போதே.. சுர்னு ஏறுது பாஸ்.! எப்பிடி கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாம இப்பிடி பேசுறாங்க? இதுக்கு ஒரு டைரக்டர் வேற? அவரு இன்னும் எத்தனை படம் ஒலகத்தரத்துல எடுத்தாலும் பாக்க மனசு வருமா? கருமம் புடிச்சவனுங்க..

கோவமே வராத என்னைக்கூட கோவப்பட வச்சிடுறாங்க. ஸாரி பாஸ்.! அந்த மண்டையும் வசனமும் இப்பிடி என்னை பண்ணிடுச்சு.. விட்டா இன்னும் ஏதாச்சும் கெட்டவார்த்தை பேசிடுவேன், போயிட்டுவர்றேன்.

Cable சங்கர் said...

@தமிழ் பறவை

ஓகே

@பீர்
பாசக்கார பயலுவ..தான்.. ஆனால் ரொம்பவே அதை பத்தி திரும்ப, திரும்ப சொல்லி நோண்டி நுங்கெடுத்துட்டானுங்க பீர்.. அநேகமா இனிவரும் காலங்களில் மதுரை, நேட்டிவிட்டி என்று பெரிசாய் சலம்ப முடியாது என்றே தோன்றுகிறது.

Cable சங்கர் said...

@வெட்டிபையன்

நான் தான் படத்தில் இருக்கிற மைனஸை சொல்லிட்டேனேஅதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்..:)

Cable சங்கர் said...

@ஸ்டார்ஜான்
@ப்ரசன்னா
@ரமேஷ்

உங்க இஷ்டம்..:) எதுக்கு ரிஸ்க்..நமக்கு..:)

Cable சங்கர் said...

@ராஜு

ஹிட்டுன்னு கன்பார்ம் பண்ணல.. பட் ஆகிறதுக்கான சான்ஸ் நிறைய இருக்கு ராஜு..

Cable சங்கர் said...

@சுகுமார்

அதை நினைச்சா பயமாத்தான் இருக்கு சுகுமார்..

@கோஸ்ட்
உங்க இஷ்டம்

@கலையரசன்
:)

Cable சங்கர் said...

@அன்பு

படித்துவிட்டேன் அன்பு.. ஆனால் பின்னூட்டம்தான் இடவில்லை. சாரி..

@அசோக்
மதுரைக்கு சினிமாவுக்கு அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு காலத்தில கோவை மாவட்ட கதைகளா வந்திச்சு. அப்ப இருந்த அஸிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம் கோவைகாரஙக்.. இப்ப மதுரைக்காரங்க.. அடுத்து மீண்டும் சிட்டி சப்ஜெக்ட் ஓரு ஓட்டு ஓடப்போவுது பாருங்க

Cable சங்கர் said...

@கார்க்கி
கார்க்கி இதுக்கெல்லாம் கேட்கணுமா..? சும்மா ஜமாயுங்க.. படிச்சிட்டேன் நல்லாருக்கு..

@இது நம்ம ஆளு
மிக்க நன்றி

@அக்கிலீஸ்
ஏற்கனவே எல்லாருக்கு சொன்ன பதில்தான் உஙக் இஷ்டம்..:)

@பரிசல்

என்ன பண்றது பரிசல்... வாழ்கையில கொஞ்சம் ரிஸ்க் எடுத்தே பழகிருச்சு

Cable சங்கர் said...

@பாலாஜி

படத்தின் மைனஸுகளை மீறி.. பரபரப்பான ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்

@டம்பிமேவி
ஸ்மைலி படம் பார்பதற்கு முன்னா..?
அடுத்தது படம் பார்த்த பின்னா..?

@ ஆதி..
இதபார்றா நம்ம ஆதிக்கு கோவம் வந்திருச்சு..

@தராசு..

விடுங்க.. விடுங்கண்ணே.. எல்லாம் கொஞ்ச நாள்தான்..

காரணம் ஆயிரம்™ said...

உதயம் தேட்டருல அரிவாள் கையோட, ‘வந்தீனா வெட்டுவேன்’ங்கிற மாதிரியே நிக்கிது பயபுள்ள.. எப்புடி பாக்குறது தெரியலியே..

காரணம் ஆயிரம்

பீர் | Peer said...

//பாசக்கார பயலுவ..தான்.. ஆனால் ரொம்பவே அதை பத்தி திரும்ப, திரும்ப சொல்லி நோண்டி நுங்கெடுத்துட்டானுங்க பீர்.. அநேகமா இனிவரும் காலங்களில் மதுரை, நேட்டிவிட்டி என்று பெரிசாய் சலம்ப முடியாது என்றே தோன்றுகிறது.//

ட்ரைலர் பார்க்கும் போது எனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது. உங்க விமர்சனம் படிச்சதுக்கு பிறகு தான் ட்ரைலரே பார்ப்பது... :)