Pages

Sep 14, 2009

சிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..

சிறுகதை போட்டி நடத்தி, கடைசியில் எல்லாவற்றையும் படித்து நொந்து போய், இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு பாப்போம்னு நடத்திய சிறுகதை பட்டறை இனிதே ஆரம்பித்தது. வழக்கம் போல காலை பத்து மணிக்கு.

வெறும் பின்னூட்டத்திலும், போனிலும் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல பதிவர்கள், ஒரு நாள் பிரயாண சிரமம் பார்க்காமல் வந்திருந்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
 DSC00289
DSC00291
பேச்சாளர்கள், பாஸ்கர் சக்தி, யுவன் சந்திரசேகர், தேவதாஸ் அவர்கள்

DSC00290
DSC00292

பா.ராகவன், நர்சிம், ஜ்யோவரம் சுந்தர்,  தண்டோரா, கவிஞர் சா. முத்துவேல்,

DSC00295
DSC00296

கல்லாபெட்டி “சிங்காரங்கள்” தாமிரா (எ) ஆதி, முரளிகண்ணன்.

DSC00297

DSC00298

திருப்பூர் பதிவர் சஙக் தலைவர் வெயிலான், குகன் கட்டுரைகள், “கண்ணன்”

DSC00300

DSC00287

பரிசல் கேள்வி கணைகளை தொடுத்த போது, பக்கத்தில் கார்கியுடன்

DSC00302

DSC00307

கூட்டத்தினரின் ஒரு பகுதி, பிரபல பதிவர் கிருஷ்ணகிரி கும்கி

DSC00305

DSC00304

பச்சை கலர் ஜிங்குச்சா.. அகநாழிகை பொன். வாசுதேவன், அண்ணாச்சி வடகரைவேலன்.
DSC00309

DSC00310

அக்னிபார்வை, முரளிகுமார் பத்மநாபன், வெயிலான், முரளிகண்ணன், (இரண்டு பேர் பெயர் சட்டுனு ஞாபகம் வர மாட்டேங்கிறது, தயவு செய்து மன்னித்து, பெயர் சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ள படுகிறார்கள்.

DSC00311

DSC00312
:) நாஞ்சில் நாதம், இரண்டாத்வு போட்டோவில் பின்னாடி உயரமா யாத்ரா

DSC00314

DSC00315

பதிவர், தினேஷ், அண்ணன் பைத்தியக்காரன். மத்த ரெண்டு பேர் தெரிஞ்சா சொல்லுல்ங்க.ப்ளீஸ்

DSC00320

DSC00321

உலகபுகழ் அண்ணன் உண்மைதமிழன், பேச்சாளர் திரு. தேவதாஸ் அவர்கள்

DSC00317

DSC00318

ப்ளூ சட்டை பதிவர் காவேரி கணேஷ், மற்றும் பலர்.

காலையில் போனவுடன் பாஸ்கர் சக்தியின்முதல் செஷன் முடிந்தவுடன், அருமையான காபி, டீ, மற்றும் பிஸ்கெட்டுகளுடன் காபி ப்ரேக் முடிந்தது. மிக இயல்பாக பேசினார், தான் எழுதிய கதைகளை உதாரணமாய் கொண்டு நிறைய விஷயங்கள் வந்திருந்தவர்களுடன் கலந்துரையாடி பதிலளித்தார். நான் கூட “நல்ல கதைன்னா ஏதாவது கருத்து இருக்கணுமா/” என்பது போன்ற என் சிற்றறிவுக்கு எட்டிய கேள்விகளை கேட்டு நானும் ரவுடியானேன்.



அதன் பிறகு யுவன் பேச ஆரம்பித்தார். நேரில் பார்த்தால் தெலுங்கு படஙக்ளில் வரும் சயிண்டிஸ்டு போல இருந்தார். மனுஷன் பேச ஆரம்பித்த அடுத்த நொடி சும்மா, கலகல வென ஓடியது பட்டறை. பேச்சு முழுவதும் ஓடிய மெல்லிய நகைச்சுவை, உறுத்தாமல், ஆனால் ஆணித்தரமாய் சொன்ன பதில்கள் என்று அவரின் முத்திரையை பதித்தார். இதுவரை நான் அவரின் எழுத்துக்களை படித்ததில்லை, இவரின் பேச்சை கேடட் பின்பு படிக்க வேண்டும் என்று தோன்றியது.



அதன் பிறகு லஞ்ச் பப்பே. மிக அருமையாய் ஏற்பாடு செய்திருந்தார்கள்,  சாலட்டுகள், ப்ரைட் ரைஸ், கோபி மஞ்சூரியன்,வெஜ்குருமா, டால், நான், பிஷ் பிரை, செட்டிநாடு சிக்கன், ஐஸ்க்ரீம் என்று அதிரிபுதிரி செய்துவிட்டர்கள்.

மதியம் திரு. தேவதாஸ் அருமையாய் பேசினார். பல உலக இலக்கியங்களில் இருந்து எல்லாம் பேசினாராம்.  (அதென்னா பேசினாராம் என்று கேட்பவர்கள் தனியே என் மொபைலுக்கு வரவும்).



கடைசி செஷனாய் வெகுஜன பத்திரிக்கையில் எழுதுவது எப்படி என்று பா.ராகவன் அவர்கள் அருமையான ஸ்லைட் ஷோவுடன் விளக்கினார். மிக இயல்பான நகைச்சுவையோடு வெகுஜனத்துக்கு புரியும் படி. தெளிவக விளக்கினார். தரமணி சிறுகதை ஆசிரியர் பற்றி சொன்னது சூப்பர். அவரிடம் தனியாய் பேசிக் கொண்டிருந்த போது, என்னுடய ப்ளாக்கை பேவரிட்டில் வைத்து படிப்பதாய் சொன்னார். உடனே ஆர்வகுட்டியாய் நான் கூட இரண்டு சிறுகதை எழுதி விகடனில் வந்திருக்கிறது என்று சொன்னேன்.. அவர் நேராக என்னை பார்த்து “அப்படியா.. என்னை ஆபீஸில் வந்து பாரு என்றார்” ரூமுல கூப்ட்டு அடிப்பாரோ...?



விழாவுக்கு வ்ந்தவர்கள் அனைவருக்கும், ராகி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது , ஜெயமோகனின்  “நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் “ என்கிற , டாக்டர். கோ. கேசவனின் தமிழ்ச் சிறுகதைகளின் உருவம், என்கிற புத்தகங்களின் காப்பிகளையும், கதை கதையாம் காரணமாம் என்கிற புத்தகத்தையும் கொடுத்தார்கள்.

பட்டறையின் முடிவில் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் தெரிந்தது, சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்..



இந்த பட்டறையினால் பல பதிவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததும்,   உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் அனுப்பிய துரை, நான், ரமேஷ்சார். என்கிற  கதை பரிசு பெறாவிட்டாலும் நல்ல கதை என்று ஜ்யோவ் பாராட்டியதும்,  ஞாயிற்றுகிழமையை  சந்தோஷ தினமாய்  போனதும் தான்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

49 comments:

  1. are u uploading the pictures from other web albums?
    I am not able to see the pictures. that is why I am asking the above question.

    A Nice Job by Chennai Bloggers.

    ReplyDelete
  2. from windows live writer. why what is the problem/

    ReplyDelete
  3. அண்ணே,

    எந்த கேமராவுல போட்டோ எடுத்தீங்க, ஒண்ணு கூட நல்லால்ல, அதாவது தெளிவா இல்லைன்னு சொல்ல வந்தேன்.

    அது சரி, மத்தியான சாப்பாட்டுக்கப்பூறம் தூக்கமா????

    ReplyDelete
  4. ஏன்ணா இந்த கொலைவெறி? வேற ஃபோட்டோ போடுங்க.. இல்லைனன் எடுத்திடுங்க.. என் ரசிகர்கள் பாய்ஞ்சிட போறாங்க உங்க மேல :))

    ReplyDelete
  5. நான் இல்லாமல் இவ்வளவு விஷயம் நடந்து இருக்கிறதா ????? ரைட்டு ....


    "A" ஜோக் எப்படி எழுவது என்று நீங்க கிளாஸ் எடுத்திங்க போல் இருக்கு ???

    ReplyDelete
  6. கார்கியை இந்த மாதிரி புகைப்படம் எடுத்ததற்கு உங்களை ....................

    ReplyDelete
  7. அழகான கார்கியை இப்படி பண்ணிடிங்களே.....

    ReplyDelete
  8. இப்படிக்கு
    தலைவர்
    கார்கி ரசிகர் மன்றம்
    திருச்சி கிளை

    ReplyDelete
  9. "Cable Sankar said...
    from windows live writer. why what is the problem/"


    துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுது !!!

    இலக்கியவாதி ஆகிடிங்க போல் இருக்கு

    ReplyDelete
  10. படங்களில் கவர்ச்சி கம்மியா இருக்கு ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
  11. அண்ணே சூப்பரா எழுதியிருக்கீங்க. படங்கள் அவ்வளவாக கிளியராக இல்லை. ஏன்? மொபைல் போனில் எடுத்தீங்களா?

    உண்ட மயக்கம் உங்களுக்கும் வந்திடுச்சா?

    ReplyDelete
  12. இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு பாப்போம்னு //

    இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

    சாலட்டுகள், ப்ரைட் ரைஸ், கோபி மஞ்சூரியன்,வெஜ்குருமா, டால், நான், பிஷ் பிரை, செட்டிநாடு சிக்கன், ஐஸ்க்ரீம் என்று அதிரிபுதிரி செய்துவிட்டர்கள்//

    ஹிஹி.. நீங்க எப்பிடியும் கவர் பண்ணிடுவீங்க்கன்னு தெரியும். அதான் நான் அதுபற்றி எழுதலை.

    அப்புறம் என் போட்டோ நல்லாயிருக்குங்க. கார்க்கிக்கு இன்னொண்ணு தொப்பை கவர் பண்ணி எடுத்து வச்சிருந்தேன். என்னை கேட்டிருக்கலாமே..

    ReplyDelete
  13. உலகின் தலைசிறந்த கவியான D.R.Ashokக்கு அழைப்பிதழ், பாக்கு வெத்தலை வைத்து அழைக்கவில்லை. :)

    ReplyDelete
  14. அண்ணா... அவசியம் உங்களுக்கு ஒர் நல்ல கேமிரா வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

    நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க, நமக்குத்தான் கொடுப்பினை இல்லை.


    பிரபாகர்.

    ReplyDelete
  15. I am very unlucky. Due to personal reasons I was not able to attend it. I missed it very much.

    ReplyDelete
  16. ஆமா தலைவரே என்ன ஆச்சு கேமிராவிற்க்கு?

    ReplyDelete
  17. http://www.aathi-thamira.com/2009/09/blog-post_14.html

    ReplyDelete
  18. சிறுகதைப் பட்டறை சிறப்பாக அமைந்தது. சிறப்பாக நடத்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  19. //உடனே ஆர்வகுட்டியாய் நான் கூட இரண்டு சிறுகதை எழுதி விகடனில் வந்திருக்கிறது என்று சொன்னேன்.. அவர் நேராக என்னை பார்த்து “அப்படியா.. என்னை ஆபீஸில் வந்து பாரு என்றார்” ரூமுல கூப்ட்டு அடிப்பாரோ...?//

    இப்டி வாயக்குடுத்து மாட்டிகிட்டீங்களே தலைவரே...

    நிகழ்ச்சியை பதிவு செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  20. // பட்டறையின் முடிவில் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் தெரிந்தது, சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்.. //

    இது எப்டி தெரியுமா இருக்கு...
    விடிய விடிய வில்லு படம் பாத்துட்டு...கடைசியில விஜய் நல்லா நடிச்சிருக்காருன்னு சொன்ன மாதிரி இருக்கு......

    க்ளாசுக்கு போனா ஒழுங்கா கவனிக்கணும். அதை விட்டுட்டு பதிவு போடறதுக்கு போட்டோ புடிக்கிறது....... எங்களை வெறுப்பேத்த சாப்ட்ட அயிட்டம் எல்லாத்தையும் எழுதி வச்சிக்கிறது... மதியம் மேல கட் அடிச்சிட்டு ரெசார்ட் உள்ளேயே லோகாஷன் பாக்கறது.....
    அப்புறம் எங்க சாமி படிப்பு ஏறும்.......????

    ReplyDelete
  21. // பட்டறையின் முடிவில் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் தெரிந்தது, சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்.. //

    ;;)

    போட்டோ எல்லாம் நல்லா இருக்கு! கேமரா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்!!!

    ReplyDelete
  22. தூக்க கலக்கத்துல காத்துல காமிராவ சுத்துனா இப்படித்தாம் வரும்.
    அக்னி பார்வைய க்ளோசப்ல எடுக்காதீங்கன்னு தலய தலய அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா....

    உடனே ஆர்வகுட்டியாய் நான் கூட இரண்டு சிறுகதை எழுதி விகடனில் வந்திருக்கிறது என்று சொன்னேன்.. அவர் நேராக என்னை பார்த்து “அப்படியா.. என்னை ஆபீஸில் வந்து பாரு என்றார்” ரூமுல கூப்ட்டு அடிப்பாரோ...?


    ஆள் ஏற்பாடு பன்னித்தான் அடிப்பார்....வேறெதுக்கு...

    எல்லா கதையும் கேட்டுட்டு அப்புறம் எந்த தைரியத்துல அவர்கிட்ட இப்படி கேட்டீங்க..?


    பட்டறையின் முடிவில் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் தெரிந்தது, சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்..

    ஆஹா.......அற்புதம்.

    இதெ மொதல்லயே சொல்லியிருந்தா என்னவாம்?

    ReplyDelete
  23. //சிறுகதை போட்டி நடத்தி, கடைசியில் எல்லாவற்றையும் படித்து நொந்து போய், இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு//

    ha ha.

    //சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்../

    :))
    உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிங்க நண்பரே.

    ReplyDelete
  24. அண்ணாச்சி அப்படியே இந்தப் பட்டறையில் பயின்ற விடயங்கள் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுதுங்கள்

    ReplyDelete
  25. //அதென்னா பேசினாராம் என்று கேட்பவர்கள் தனியே என் மொபைலுக்கு வரவும்//

    பப்பே சிஸ்டம் என்றால் கேட்கவா வேண்டும், சாப்பிட்டதும் என்ன செஞ்சு இருப்பீங்க என்று தெரியும் சித்தப்பு:))

    ReplyDelete
  26. //வந்தியத்தேவன் 4:23 PM

    அண்ணாச்சி அப்படியே இந்தப் பட்டறையில் பயின்ற விடயங்கள் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுதுங்கள்
    //

    அண்ணே அப்ப இதுவரை எழுதியது எல்லாம்? அவ்வ்வ்வ்வ்

    (ஏதோ என்னால முடிஞ்சது, நாராயணா நாராயாணா)

    ReplyDelete
  27. //எல்லாவற்றையும் படித்து நொந்து போய், இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு பாப்போம்னு//

    :))))))

    ReplyDelete
  28. /அண்ணே,

    எந்த கேமராவுல போட்டோ எடுத்தீங்க, ஒண்ணு கூட நல்லால்ல, அதாவது தெளிவா இல்லைன்னு சொல்ல வந்தேன்.

    அது சரி, மத்தியான சாப்பாட்டுக்கப்பூறம் தூக்கமா????
    //

    தராசண்ணே.. அதான் நான் போன் பண்ண சொன்னேனில்ல

    ReplyDelete
  29. @கோவி கண்ணன்

    நன்றி தலைவரே..

    @கார்க்கி
    முட்ஞ்சவரைக்கும் உன்னோட புகழை காலி பண்ணத்தான்
    @டம்பிமேவி
    அங்க போயிம் ஏ ஜோக் தானா..?

    ReplyDelete
  30. @டம்பி மேவி
    என்ன கவர்ச்சி க்றைவாஅ இருக்க்கா./ இரு வர்றேன்.

    ReplyDelete
  31. @ இராகவன்
    அண்ணே அது என்னவோ தெரியல.. முத தடவ எடுக்கும் போதெல்லாம் ஏதாச்சு ஒரு ப்ராப்ளம் வருது.. மிக்க நன்றிண்னே.

    @ஆதி
    கார்க்கி போட்டோவை அனுப்பி வைக்கவும்

    @அசோக்

    தலைசிற்நத கவிக்கெல்லாம் அங்க அனுமதியில்ல.. வெறும் ஸ்டூடண்டுக்குதான் அனுமதி..

    ReplyDelete
  32. @பிரபாகர்புது சோனி சைபர் ஷாட்.. 10.2 மெகா பிக்ஸல் தான் ஏதோ நோண்டிட்டேன்னு நினைக்கிறேன்.
    மிக்க நன்றி பிரபாகர்

    ReplyDelete
  33. @விசா
    நீஙக் வந்திருக்கலாம் விசா
    @ஆதி
    படிச்சிட்டேன்
    @உழவன்
    மிக்க நன்றி உழவன். உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
    @முரளிகுமார் பத்மநாபன்
    ஆமா த்லை புது காமிராதான் ஏதோ நோண்டிட்டேன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. @பாலாஜி

    எனன் செய்யுறது.. நுணலும் தன் வாயால் கெடும்னு சுமமவா சொல்லியிருக்காஙக
    மிக நன்றி

    @ சுகுமார்.
    யோவ் அவங்க சொன்னதைதான் சொன்னேன்.

    நாஙக் ரிசாட்டுக்கு போகல.. பெரிய மேட்டுல ஒரு ஹோட்டல்ல நடந்திச்சு.

    ஆனாலும் அங்க லாபியில கொத்து கொத்தா ஸ்போர்ட்ஸ் பொண்னுங்க.. ஒவ்வொன்னும் நின்னு விளையாடுதுங்க.. வாலிபால்..:)

    ReplyDelete
  35. @ஜீவன்
    முதல்ல்யே சொன்னா நாங்க ஒத்துகக் மாடமில்ல

    @நாடோடி இலக்கியன்
    உங்களை சந்தித்ததில் எனக்கும் பெரிய மகிழ்ச்சி. தலைவரே..
    நீங்கெல்லாம் என்னை படிக்கிறதே பெரியவிஷய்ம்
    @வந்தியத்தேவன்
    ஏன் இந்த் கொலைவெறி

    @குசும்பன்

    அதாண்ணே நீங்க்ளே கேளுங்க

    ReplyDelete
  36. @எவனோ ஒருவன்
    நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

    ReplyDelete
  37. //ஆனாலும் அங்க லாபியில கொத்து கொத்தா ஸ்போர்ட்ஸ் பொண்னுங்க.. ஒவ்வொன்னும் நின்னு விளையாடுதுங்க.. வாலிபால்..:)//

    என்னடா இதப் பத்தி ஒன்னுமே சொல்லலயேன்னு பாத்தேன்...

    ReplyDelete
  38. /என்னடா இதப் பத்தி ஒன்னுமே சொல்லலயேன்னு பாத்தேன்...

    12:01 AM//

    அதானே ஒரு யூத்து மனசு உஙக்ளுக்கு தெரியாதா..

    உஙளுடய மொபைல் எண்ணை எனக்கு அனுப்புங்க என் மின்னஞ்சலில்..

    ReplyDelete
  39. என்னங்க இது? உ.த இவ்ளோ.. யு.த?

    ReplyDelete
  40. /என்னங்க இது? உ.த இவ்ளோ.. யு.த?
    //

    இப்படி இருந்திட்டு என்னா பேச்சு பேசுறாரு.. பாத்தீங்களா.பாலா..?

    ReplyDelete
  41. போட்டோக்கள் அருமை...
    என் போட்டோ எப்போ வரும்...?

    ReplyDelete
  42. மூக்கு முட்டத் தின்னுப்புட்டு மல்லாக்க உக்காந்து குறட்டை விட்டுத் தூங்கினியே.. அதை நேர்மையா இங்க பதிவு செய்யலையே.. ஏன்..? ஏன்..? ஏன்..?

    வன்மையாகக் கண்டிக்கிறேன். இது உண்மையற்ற பதிவு..!

    ReplyDelete
  43. [[[ஹாலிவுட் பாலா said...
    என்னங்க இது? உ.த இவ்ளோ.. யு.த?]]]

    ஆமா.. அதிலென்ன சந்தேகம் பாலா..? நான் எப்பவுமே யூத்துதான்..!

    ReplyDelete
  44. என் புகைப்படத்தையும் போட்டு என்னை ரொம்ப பெருமைப்படுத்திட்டீங்க :-))

    ReplyDelete
  45. /மூக்கு முட்டத் தின்னுப்புட்டு மல்லாக்க உக்காந்து குறட்டை விட்டுத் தூங்கினியே.. அதை நேர்மையா இங்க பதிவு செய்யலையே.. ஏன்..? ஏன்..? ஏன்..?//

    athai than எனக்கு போன் பண்ணி கேட்டுக்க சொல்லிட்டேனே.. அதுக்கு பிறகு வேற என்ன வேணும்.

    ReplyDelete
  46. @சாம்ராஜ்ய ப்ரியன்

    நன்றி.. தினேஷ் என்கிற உங்கள் ஒரிஜினல் பெயரை போட்டு விட்டேன்

    @மங்களூர் சிவா

    நன்றி

    ReplyDelete
  47. என்னதான் உங்க கதைய கேட்க நான் பயந்ததற்க்கு என்னை மறக்கலாகுமா கேபிலாரே....?

    ReplyDelete
  48. /தூக்க கலக்கத்துல காத்துல காமிராவ சுத்துனா இப்படித்தாம் வரும்.
    அக்னி பார்வைய க்ளோசப்ல எடுக்காதீங்கன்னு தலய தலய அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா...//

    இதுக்கே இப்படி சொல்றீங்களே.. மத்யானம் எடுத்த போட்டோவ இன்னூம் போடவேயில்லை

    ..உடனே ஆர்வகுட்டியாய் நான் கூட இரண்டு சிறுகதை எழுதி விகடனில் வந்திருக்கிறது என்று சொன்னேன்.. அவர் நேராக என்னை பார்த்து “அப்படியா.. என்னை ஆபீஸில் வந்து பாரு என்றார்” ரூமுல கூப்ட்டு அடிப்பாரோ...?


    ஆள் ஏற்பாடு பன்னித்தான் அடிப்பார்....வேறெதுக்கு...

    எல்லா கதையும் கேட்டுட்டு அப்புறம் எந்த தைரியத்துல அவர்கிட்ட இப்படி கேட்டீங்க..?//

    சும்மாதான்..


    //பட்டறையின் முடிவில் சிறப்பு பேச்சாளர்கள் மூலம் தெரிந்தது, சிறுகதை எழுத யாரும் சொல்லி கொடுக்க முடியாது, அவங்களா எழுதி, பழகறதுதான் என்பதுதான்..

    ஆஹா.......அற்புதம்.

    இதெ மொதல்லயே சொல்லியிருந்தா என்னவாம்?..

    சொல்லியிருந்தா.. உங்களையெல்லாம் சந்திச்சிருக்க முடியாதே..

    ReplyDelete