Thottal Thodarum

Sep 17, 2009

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று..

இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய..

சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் கிட்ட போய் சொன்னேன்.. அது கவிதையில்லியாம்.. லைனா டைப் அடிச்சிட்டு எண்டர் பட்டனை தட்டிவிட்டுட்டாராம்.

அப்ப அது கவிதையில்லியானா.. அப்ப எது கவிதைங்கிற ஒரு தேடல் என்னுள் கும்மாளமிட்டது. அனுஜன்யா ஒருத்தர் கவிதை எழுதியிருந்தாரு.. யாரை பார்த்தாலும் அவ்ரை கவிஞர்னு சொல்வதால் சரின்னு படிச்சேன். கடற்கரையில் ஒரு ஒத்த மரம் அப்பிடிங்கிற மாதிரி ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. உடனே அவருக்கு மெயில் அனுப்பிச்சி, அந்த மரம் அவனோட காதலிதானேன்னு கேட்டா..? அப்படியா தோணுது.. வச்சிக்கங்கன்னு சொன்னாரு..என்னாடாது வச்சிக்கங்கன்னு சொல்றாரு..

அப்புறம் தண்டோரா, தண்டோரான்னு ஒருத்தர் எழுதுறாரு.. அப்பப்ப கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸுகிட்டயெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருந்தாரு.. ஒரே ஜாலியா இருக்கும். திடீர்னு கவிஞர்கள் நட்பு ஜாஸ்தியானதுனால கோவம், கோவமா, சீரியஸா எழுதறேன்னு, கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாரு.. பாதி நேரம் படிக்கிறப்ப, ஹாங் ஓவர்ல எழுதினமாதிரியே இருந்திச்சு. புரிஞ்சும், புரியாம..

சரி இவங்களையெல்லாம் விட்டுருவோம்னு.. நம்ம ஜ்யோவ், அகநாழிகை,முத்துவேல், யாத்ரானு படிச்சேன்.. மேலே சொன்னவஙக கவிதையே புரியலைங்கிற போது..
இதை பத்தி சொல்ல என்ன இருக்கு..

சரி இவங்க எல்லாம் கவிஞர்கள்.. நம்ம மாதிரி மொக்கை போடுற ஆளுங்க கவிதை எழுதுறாங்களேன்னு பரிசலை படிச்சேன்.. அவரு கவிதை ஓன்ணு விகடன்ல வந்திச்சி.. நல்லா பெரிசு, பெரிசா.. தெரிஞ்சிச்சி.. கவிதைக்கு அவஙக் போட்ட படம் ரொம்ப நல்லா இருந்திச்சி..

நம்ம அதிஷா கூட எப்பவாச்சும் கவித எழுதும்.. படிச்சதும், ஒரு மாதிரி கில்மாவா ஆயிரும்.. ஆனா அதுகூட கவிதை இல்லினு சொல்றாங்க..

சரி.. லேட்டஸ்டு விஷய்ம்தான் புரியலைனு கம்பர், வள்ளுவர்னு படிக்கலாம், அவங்க தமிழ்ல தானே எழுதியிருப்பாங்கன்னு, நர்சிம் பக்கம் போனா, அதுல அவரு கம்பர் எழுதினாதா சொன்னதெல்லாம் தமிழ்லயே இல்லீங்க.. பின்ன என்னங்க.. எங்கனாச்சும், தமிழ்ல எழுதினதுக்கே விளக்கம் தமிழ்ல எழுதுவாஙக்ளா..?

கவிதையே புரியல இதுல நையாண்டி நைனான்னு ஒருத்தர் எதிர் கவிஜனு போடறாரு.. முதல்ல கவிஜன்னால என்னனு புரிஞ்சிக்கிறதுக்கு கொஞ்ச நாளாயிருச்சு.. அதுசரி.. ஒரிஜினல் கவிதையே பிரியல.. அதுக்கு எதிர் கவிஜ எப்படி பிரியும்..?

பாத்தீங்களா.. வர.. வர.. என் பாசை.. சே.. பாஷையே மாறுது.. செரி.. நமக்கு தான் புரியமாட்டேங்குது போலருக்குனு விட்டூட்டு போலாம்னாலும் முடிய மாட்டேங்குது. கவிதை தெரியலைன்னா நம்ம கூட்டத்தில சேத்துக்க மாட்டேங்கிறாங்க..

அதுனால நானும் கவிஞனாக முடிவு பண்ணி ஒரு கவிதை எழுதினேன்.. எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு போலருக்கு. அதுனால அதை கவிதையே இல்லைன்னு சொல்லிட்டாஙக்.. இருந்தும் விடாம இன்னொரு கவிதை எழுதிட்டேங்க.. இவங்க ஒத்துகிட்டாலும், ஒத்துகிடாட்டாலும், நானும் ஒரு கவிஞன் தானு முடிவு பண்ணி எழுதின கவிதைய, ரமேஷ் வைத்யாகிட்ட சொன்னேன். நெதம் தளும்பினாலும், தளும்பாட்டியும் பேசுறவரு.. ஒரு வாரமா இருக்கியா செத்தியான்னு கூட கேட்க மாடேங்கிறாரு.. ஒரு வேளை அவரை விட நல்லா எழுதிட்டேன்னு காண்டோ..?

என்னுடய லேட்டஸ்ட் கவிதையை தமிழ்கூறும் பதிவுலகத்திற்கு சமர்பிக்கிறேன்.

காத்திருப்பு



காத்திருக்கும் போதும்
எனைக் கொல்கிறாய்
நான்
பிடிக்கும்
சிகரெட்டுகளால்.


டிஸ்கி:
முழுக்க நகைச்சுவைக்காக எழுதபட்டது.. மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

67 comments:

தினேஷ் said...

me the firstu

வந்தியத்தேவன் said...

கவிதை நன்றாக இருக்கின்றது. காதலி இல்லாத தனிமையும் கொல்லும் அதே நேரம் சிகரெட்டும் கொல்லும் என அர்த்தம் பொதிந்த கவிதை. நீங்கள் பாஸாகிவிட்டீர்கள்

தினேஷ் said...

கவிதை எங்கண்ணே?

swizram said...

நீங்களும் நல்லாவே கவித எழுதுறிங்க பாஸ்!!!

Robin said...

எதையாவது கிறுக்கிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் ஒவ்வொரு வரியிலும் வருவது போல மாற்றுங்கள். கவிதை ரெடி.

மணிஜி said...

கேபிள்..இது நான் போதையில் உளறியதா?சுட்டுவிட்டாயா?நல்லாயிருக்கு(இன்னிக்கு கூட ஒன்னு உளறியிருக்கிறேன்)

Unknown said...

அந்த பழைய
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டிடம் ஒத்த கருப்பு ஜன்னல்
பிளாட்பாரம்
அந்த கருப்பு ஆள்
எல்லாம் புரிகிறது
கவித்துவமாக
புரியாதது
ஜன்னல் கிழ் ஒரு ஒட்டையும்
ஒரு இன்ச் கிழே
ஐந்து வரிகளும்

நையாண்டி நைனா said...

தண்டோரா அண்ணே.... நல்லா பார்த்துகோங்க....

இப்படி யூத்தா திங்கு பண்ணி எழுதனும்....

நீங்களும் தான் எழுதுறீங்களே...!!! மஞ்ச சட்டைய காணோம்...
சூப்பி போட்ட கொட்டைய காணோம்னு....

நையாண்டி நைனா said...

/* கே.ரவிஷங்கர் said...
அந்த பழைய
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டிடம் ஒத்த கருப்பு ஜன்னல்
பிளாட்பாரம்
அந்த கருப்பு ஆள்
எல்லாம் புரிகிறது
கவித்துவமாக
புரியாதது
ஜன்னல் கிழ் ஒரு ஒட்டையும்
ஒரு இன்ச் கிழே
ஐந்து வரிகளும்*/

இதுலே "டபுள்" மீனிங் வருதே.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

Unknown said...

//காத்திருக்கும் போதும்
எனைக் கொல்கிறாய்
நான்
பிடிக்கும்
சிகரெட்டுகளால்.//

ஆகா...
அருமை...
எப்பிடி...
கவிதை எப்பிடி எழுதிறது எண்டு தனிவகுப்பு எடுக்க முடியுமா???

Unknown said...

//இதுலே "டபுள்" மீனிங் வருதே.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..!

anujanya said...

பதிவு ஹாஸ்யமாக, நல்லா இருக்கு. ரவிசங்கர் கவிதை நல்லா இருக்கு. சரி, இவ்வளவு சொல்லிட்டு ஒரு கவிதை எழுதியிருக்கலாமே :)

அனுஜன்யா

க.பாலாசி said...

//ரமேஷ் வைத்யாகிட்ட சொன்னேன். நெதம் தளும்பினாலும், தளும்பாட்டியும் பேசுறவரு.. ஒரு வாரமா இருக்கியா செத்தியான்னு கூட கேட்க மாடேங்கிறாரு.. ஒரு வேளை அவரை விட நல்லா எழுதிட்டேன்னு காண்டோ..?//

உடுங்க தலைவரே அவருக்கு பொறாம...

கவிதை சூப்பர்....

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆஹா நீங்க எடுக்க போற படத்திற்கு பாடல் எழுத முன்னோட்டமா?

ஜெட்லி... said...

//சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய..
//

அப்ப இவங்க மோருக்கு சமம் அண்ணே....

வரதராஜலு .பூ said...

அப்பீட்டு ஆயிடவேண்டியதுதான.

இனிமே நீங்களும் கவிஞரா?

நடக்கட்டும் நடக்கட்டும்.

6 வரி கவிதைக்கு 60 லைன்ல என்னா பில்ட் அப்பு.

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் சார்.. :)

GHOST said...

ஸ்ஸ்ஸ் அப்பா!!!! இப்பவே கண்ண கட்டுதே!!!!

Thamira said...

கவிதைக்காக தனிக்கடையே நடத்திக்கொண்டிருக்கும் என்னைப் பற்றி பதிவில் எங்குமே குறிப்பிடாத ஆத்திரத்தில் பதிவைப்படிக்காமல் வெளி நடப்பு செய்கிறேன்.

Ashok D said...

வார்த்தைகள் உதவின்னு என் பேரு போடலியே? :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அண்ணே இது ஹைக்கூ கவிதைன்னு நினைக்கிறேன், யாராவது பதில் சொல்லுங்களேன்

VISA said...

//முழுக்க நகைச்சுவைக்காக எழுதபட்டது.. மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.//

இது நகைச்சுவைக்காக எழுதிய கவிதை என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். உலக இலக்கியம் ஆக வேண்டிய அபார கவிதை. சிலப்பதிகாரத்தை புரட்டி போட்டு படித்ததில் சிகிரெட் என்ற சொல்லுக்கு அங்கே மேற்கோள் இருக்கிறது. இரண்டாவது வரியில் கம்பனை வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள். முதல் வரியில் வள்ளுவனை வாயடைக்க செய்திருக்கிறீர்கள். என்ன தான் இருந்தாலும் இன்றைய தமிழ் கவிஞர் சமுதாயம் உங்களை வரவேற்காது. காரணம் இதில் பின் நவீனத்துவம் இல்லை. எல்லோருக்கும் புரியும்படி ஒரு கவிதை எழுதுவது அரச பழசு.பின் நவீனத்துவ கவிதை எழுதுவது மிக சுலபம். இந்த வகையில் முயற்சிக்கவும். உங்கள் அலமாரியில் இருக்கும் ஐந்து பொருட்களுக்கு சுத்த தமிழ் வார்த்தை தேடிக்கொள்ளவும். அதை கோர்வையாய் எழுதவும். பிறகு கண்களை மூடி தலையை வானத்தை பார்த்தபடி வைத்தால் வேறு ஒரு இரண்டு வார்த்தைகள் தோன்றும் அதையும் இணைத்து போட்டால் நீங்கள் பின் நவீனத்துவ கவிஞர் ஆகிவிடுவீர்கள். எப்படி முயற்சித்து பாருங்கள்.

Romeoboy said...

அட ஏதோ மொக்கை பதிவு எழுதி இருக்கீங்கன்னு படிச்சிட்டு வந்தா சூப்பர்ரா எழுதி இருக்கிங்க பாஸ் ..

Romeoboy said...

கொஞ்சம் இந்த சைடு வந்துடு போங்க ..

http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post_1559.html

iniyavan said...

கேபிள்,

கவிதை நல்லா இருக்கு.

கொத்து புரோட்டா என்னாச்சு?

பசிக்குதுல்ல???

தராசு said...

கவிதை எங்கண்ணே????

நர்சிம் said...


ரு
மை.

பின்னோக்கி said...

விடுங்க...பீல் பண்ணாதீங்க. நம்ம மாதிரி (???!!!!!) வளரும் கவிஞர்களை இந்த உலகம் மதிக்கறது இல்லை. அதுக்காக நம்ம தொண்டு ஆற்றுவதை நிறுத்த முடியுமா. டீ குடிக்க ஆள் இல்லைன்னாலும் டீ மாஸ்டர் டீ போடுறது இல்லையா. பாருங்க என் கவிதைய

http://pinnokki.blogspot.com/2009/09/blog-post_03.html

பிரபாகர் said...

கவிதையையும் விடுவதாயில்லையா அண்ணா?

நன்றாக இருக்கிறது.

பிரபாகர்.

Radhakrishnan said...

அட, கவிதை எழுதுவது பற்றி புதுப்பாடம் ஒன்றை எடுத்துவிட்டீர்கள். அதோடு இல்லாமல் ஒரு கருப்பு வெள்ளை படம் போட்டு வாழ்க்கை இருண்டதாகிவிடும் என கவிதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

நீங்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர் என கேள்விபட்டேன்.

ஐந்து வரி கவிதை எழுதுவதற்கே எத்தனை திண்டாட்டம் உங்களுக்கு, பார்த்தீர்களா?

கவிதை - ஒருமுறைப் படிக்கலாம். :)

கார்ல்ஸ்பெர்க் said...

அண்ணா, இனிமேல் 'நானும் ரவுடி தான்'ன்னு' கண்டிப்பா நீங்க சொல்லிக்கலாம்.. :)

அகநாழிகை said...

கேபிள்,

உங்களை நெனச்சா பாவமா இருக்கு.

கவிதை முழுசா குடிச்சுட்டு கேட்டாலே இறங்காது, அதிலேயும் முன்னால அனுப்பிட்டு பாதியில வந்து கேட்டா எப்பூடி பிரியும்?

கவிதைக்கு தனியா ஒரு வகுப்பெடுக்கலாம் வர்றீங்களா,

நாஞ்சில் நாதம் said...

// காத்திருக்கும் போதும் எனைக் கொல்கிறாய் நான் பிடிக்கும் சிகரெட்டுகளால்.//


ரெண்டு வரி கவித எழுதறதுக்கு என்னா பில்டப்பு. இதுல வேற பிரபல கவிதை ரவுடிகள சீண்டிவிட்டு வேடிக்கை பாக்குறீங்க

Prabhu said...

தலைவா, நீங்க காமெடிக்கு எழுதினதுதான் சீரியஸாவே நல்லாருக்கு!

தமிழ் அமுதன் said...

///இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.///

;;))

//காத்திருக்கும் போதும்
எனைக் கொல்கிறாய்
நான்
பிடிக்கும்
சிகரெட்டுகளால்.//


கவிதை அருமை ...!

ஆனா...! எவ்ளோ பெரிய முன்னுரை.............! ;;))

நையாண்டி நைனா said...

இந்திய வரலாற்றிலேயே இது வரை வெளி வராத "கவுஞ்சர் திலகம்" தண்டோரா,"புரட்சி யூத்து" கேபிள் சங்கர், "90" நைனா இணைந்து "கலக்கும்" புத்தம் புதிய திரைப்படம் "குடிக்காதவன்" இன்று முதல், உங்கள் "லக லக லக....." தளத்திலே...

Kumky said...

ஒழிந்தார்கள் கவிஞர்கள்....இதை படித்தாவது அவர்கள் திருந்தட்டும்.
உம்மய சொல்லோனும்னா கவுஜ..சாரி கவிதையைவிட அதற்கான முன்னோட்டம் ரசிக்கத்தக்கதாயிருக்கிறது.

நீங்க ஏன் கவிதை பட்டறை நடத்தி அனைவருக்கும் கற்றுக்கொடுக்க கூடாது..?

கா.கி said...

உங்களுக்கும் கவிதை எழுதற ஆசை வந்தாச்சா. நடத்துங்க... ஆனாலும், உங்களால, என்னை மாதிரி கவிதை எழுத முடியாது... இதோ நான் எழுதிய கவிதை

Veg கேக்,
Non-Veg கேக்,
எதுவா இருந்தாலும் சரி..
கேக் வெட்டுறது தப்பு இல்ல...
கேக்காம வெட்டுறதுதான் தப்பு...
!!!...

(ஏதோ, கிடச்ச கேப்புல சுய புராணம் பாடியாச்சு ;)

பாலா said...

சங்கர்... இது கவிதையில்ல....

காவியம்.....!!!

-----------

வேணும்னா.. பாருங்க...., கவிதை பட்டறை-ன்னு ஒன்னு கூடிய சீக்கிரம்... வைக்கப் போறாங்க.

பரிசல்காரன் said...


பதி
பதிவு

மி
மிக
மிகவு
மிகவும்


அரு
அருமை.

.மைருஅ
மைரு
மை

மிகவும்
மிகவு
மிக
மி

பதிவு
பதி
ப்

sriram said...

யூத்து
ஏதோ கவுஜ எழுதிருக்கேன்னு சொன்னீங்க..
ஒரு படமும் அதுக்கு கீழ ஒரு Statement ம் தான் இருக்கு, கவுஜ எங்கே???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சில்க் சதிஷ் said...

நீங்களும் நல்லாவே கவித எழுதுறிங்க பாஸ்!!!

அத்திரி said...

//அப்புறம் தண்டோரா, தண்டோரான்னு ஒருத்தர் எழுதுறாரு.. அப்பப்ப கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸுகிட்டயெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருந்தாரு.. ஒரே ஜாலியா இருக்கும். திடீர்னு கவிஞர்கள் நட்பு ஜாஸ்தியானதுனால கோவம், கோவமா, சீரியஸா எழுதறேன்னு, கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாரு.. பாதி நேரம் படிக்கிறப்ப, ஹாங் ஓவர்ல எழுதினமாதிரியே இருந்திச்சு. புரிஞ்சும், புரியாம..//


hi hi hi............really correct

Sure said...

Unmaiyiley arumai

Cable சங்கர் said...

@சூரியன்
நன்றி

@ வந்தியத்தேவன்

மிக்க நன்றி.. ஹய்யா.. நான் கவிஞனாயிட்டேன்.

@சூரியன்
உங்களுக்கு முன்னாடி உள்ளவங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கு.. என்னன்னே இப்படி கேட்டுட்டீங்க..

Cable சங்கர் said...

@கத்துகுட்டி

நன்றி. தலைவரே

@ராபின்
அட
இப்ப்டி
கூட
கவிதை
எழுதலாமா..?

Cable சங்கர் said...

/கேபிள்..இது நான் போதையில் உளறியதா?சுட்டுவிட்டாயா?நல்லாயிருக்கு(இன்னிக்கு கூட ஒன்னு உளறியிருக்கிறேன்//

அலோ.. உங்களை பத்தி பெருமையா எழுதினத்துக்கு இதான் பரிசா..

Cable சங்கர் said...

/அந்த பழைய
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டிடம் ஒத்த கருப்பு ஜன்னல்
பிளாட்பாரம்
அந்த கருப்பு ஆள்
எல்லாம் புரிகிறது
கவித்துவமாக
புரியாதது
ஜன்னல் கிழ் ஒரு ஒட்டையும்
ஒரு இன்ச் கிழே
ஐந்து வரிகளும்///

வந்திட்டாருய்யா.. நக்கீரரூ..

பாத்தீங்களா சார்.. படிச்ச வேகத்துல உங்களை கவிதை எழுத வச்சுட்டேன்.

Cable சங்கர் said...

@நையாண்டி நைனா

சொல்லி வையுங்க பாஸூ..

@நையாண்டி நைனா

ஆமா பாஸு.. இவரு வேற நான் சொல்லாததெல்லாம் கவிதையா எழுதுறாரு.. உடனே ஒரு எதிர் கவிஜ போடுங்க..

Cable சங்கர் said...

@ கனக்கோபி
இதோ நான் எழுதினாப்புலதான்.. ஹி..ஹி

@ரவிஷங்கர்
அதைத்தான் முன்னமே சொன்னேன் கேட்கமாட்டீங்களே..

@அனுஜன்யா
நன்றி தலைவரே.. ரவிசங்கர் கவிதை நல்லாருக்குனு சொல்லும் போதே அந்த பாராட்டு எனக்குத்தான்னு தெரியுது.. அந்த வினைக்கு ஊக்கி நாந்தானே..

@பாலாஜி

அமா பாலாஜி.. அதுக்காக பதிவு போடாம விட்டுறுவெனா..?பாராட்டுக்கு நன்றி..

Cable சங்கர் said...

@யோ
இது வேற்யா.. பாருங்க மகா ஜனங்களே.. இப்படி ஏத்திவிட்டே ரணகள படுத்துறாங்க..

@ஜெட்லி

பீருக்கு சமம்னு சொல்லுங்க

@வரதராஜுலு
பயப்படாதீஙக்.. எப்பனாச்சும் தான் எழுதுவேன். அவ்வளவு ப்பில்டப் இல்லைன்னா.. படிச்சிருப்பீங்களா என் கவிதைய..?

Cable சங்கர் said...

@அக்கிலிஸ்
நன்றி

@கோஸ்ட்
அவ்வளவு நல்லாவா இருக்கு

@ஆதி
ஏற்கனவே போன மாசம் தானே கலாய்ச்சோம்னு விட்டுட்டேன்..

@அசோக்

எழுதினதே நாலு வரி.. இதையெல்லாம் போட்டா கவிதைன்னு ஒத்துக்குவாங்களா..?

Cable சங்கர் said...

@கிறுக்கல் கிறுக்கன்

இதபார்யா.. ஹைக்கூ மூணு வரில இருக்கும்னு சொல்லுவாஙக். நான் ஆறு வரில எழுதியிருக்கேன். முதல் கவிதையிலேயே டபுள் ஹைக்கூகூ..
நன்றி

@விசா..

மாற்று கருத்து இல்லை.

@ராஜராஜன்
நிசமா வா சொல்றீங்க

கண்டிப்பா வர்றேன்.

Cable சங்கர் said...

@உலகநாதன்

நிச்சயம் வர்ற திங்கட்கிழமை போட்டுருவோம்.. என்ன கவிதைய பத்தி ஒண்ணும் சொல்லல..

@தராசு..

அண்ணே. முழுசா படிங்கண்ணே..

@நர்சிம்

இதுக்கு நல்லா இல்லின்னு சொல்லிட்டு போயிருக்கலாம்.

@பின்னோக்கி
அதானே இதுக்கெல்லாம் அசந்துட்டோம்னா நாம என்ன யூத்து..:)

@பிரபாகர்
இது ஒண்ணுதான் கெடுக்காம இருந்தேன்.. இருந்தாலும் நன்றி

Cable சங்கர் said...

/அட, கவிதை எழுதுவது பற்றி புதுப்பாடம் ஒன்றை எடுத்துவிட்டீர்கள். அதோடு இல்லாமல் ஒரு கருப்பு வெள்ளை படம் போட்டு வாழ்க்கை இருண்டதாகிவிடும் என கவிதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.//

நன்றி..

//நீங்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர் என கேள்விபட்டேன்.//

அப்படியா சொல்றீங்க

//ஐந்து வரி கவிதை எழுதுவதற்கே எத்தனை திண்டாட்டம் உங்களுக்கு, பார்த்தீர்களா?//

இதுக்கே இப்படி நுரை தள்ளுறியே என்னத்துக்கு விமர்சனம் பண்ணுறுறே என்று கேட்கிறீர்களா.? இப்படி கேட்குற உங்களையே ஒரு முறை படிக்கலாம்னு சொல்ல வச்சிட்டோமில்ல.. அதுமாதிரி எல்லாத்தையும் ஒரு முறை பாக்க வச்சிருவோம்..ஹி..ஹி..

கவிதை - ஒருமுறைப் படிக்கலாம். :)//

நன்றி..

Cable சங்கர் said...

@கார்ல்ஸ்பெர்க்

நன்றி

@அகநாழிகை..
ஆமாம் தலைவா.. அடுத்த முறை முதல்லேர்து ஆரம்பிச்சிறலாம்
என்ன நான் ரெண்டு ரெண்டு வாட்டி சொல்றதுக்கு பதிலா.. மறுக்கா,மறுக்கா சொல்லிட்டிருப்பேன்.

Cable சங்கர் said...

@நாஞ்சில் நாதம்
ஏதாச்சும் செஞ்சாத்தானே நாமளும் கவிதை எழுதறோம்னு நம்புவாங்க
@பபபு
அப்ப நான்சீரியஸா எழுதறதையெல்லாம் காமெடியாவா நினைக்கிறீங்க

2

Cable சங்கர் said...

@ஜீவன்
இவவ்ளவு பெரிய முன்னுரை எழுதினாத்தான் கவிதை வருது தலைவரே..

@நைனா..
கலக்கிப்புட்டீங்களே நைனா..

@கும்க்கி
ஏன் நான் நல்லாருக்கிறது புடிக்கலையா..?

Cable சங்கர் said...

@கார்த்திக் கிருஷ்னா

அது சரி.. இதுவும் கவிதைதானாம்பா..

@ஹாலிவுட் பாலா

பாருங்க அமெரிக்காவுல இருக்கிற உங்களுக்கு தெரியுது.. எப்பவுமே இவஙக் இப்படித்தான் பாஸ்.. உள்ளூர்ல இருக்கிற திறமைய மதிக்க மாட்டேங்குறாங்க..
பட்டறையை அமெரிக்காவுல ஆரம்பிக்கலாமா..

Cable சங்கர் said...

@பரிசல்

பதிவுதானா..?

@ஸ்ரீராம்
அந்த ஸ்டேட்மெண்டை ஒவ்வொரு வரியையும் ரெண்டு ரெண்டு வாட்டி படிங்க.. கவிதையா தெரியும்

@சதீஷ்குமார்

நன்றி

@அத்திரி
நான் எப்பவும் கரெக்டாத்தான் சொல்றேன்..

@ஷ்யூர்
நிஜமாவே நன்றி

உண்மைத்தமிழன் said...

அட கண்றாவியே..

கேபிளு.. உனக்குத் தெரியாத லைன்ல ஏம்ப்பா இறங்குறே..?

உனக்கு கேபிள் பிஸினஸே போதும்..! டாஸ்மாக் பிஸினஸ் எதுக்கு? விட்ரு.. ஒதுங்கிக்க..!

ஆமா.. என் கவிதையை கவிதை இல்லைன்னு சொன்ன அந்தக் கவிஞன் யாரு..? ஆளைக் காட்டு.. அட்ரஸ் வாங்கிக் குடு.. ஆட்டோ அனுப்புறேன்.. பில்லை நீ கொடுத்திரு..!

shortfilmindia.com said...

/அட கண்றாவியே..

கேபிளு.. உனக்குத் தெரியாத லைன்ல ஏம்ப்பா இறங்குறே..?

உனக்கு கேபிள் பிஸினஸே போதும்..! டாஸ்மாக் பிஸினஸ் எதுக்கு? விட்ரு.. ஒதுங்கிக்க..!

ஆமா.. என் கவிதையை கவிதை இல்லைன்னு சொன்ன அந்தக் கவிஞன் யாரு..? ஆளைக் காட்டு.. அட்ரஸ் வாங்கிக் குடு.. ஆட்டோ அனுப்புறேன்.. பில்லை நீ கொடுத்திரு..!
//

எவ்வளவு பொறாமை.. என் கவிதை எல்லாரும் நல்லருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி சொல்ல..

செந்தில் நாதன் Senthil Nathan said...

தலிவா கவுஜ ஓகே ரகம்!! ஆனா அதுக்கு நீ குடுத்த builtup-u இருக்கு பாரு, அது சூப்பர்!!

butterfly Surya said...

நீங்களும் கவிதையா..??????

ச.முத்துவேல் said...

நீவீர் கவிஞரேதான்.அதுசரி, உங்களின் கவிஞர் அவதாரத்தால் நாங்கள் மட்டுமல்ல கோடம்பாக்கத்து கவிஞர்களும் கவிழ்ந்தார்கள் போலும்.

M.G.ரவிக்குமார்™..., said...

ஒரு கவிதையே

கவிதை

எழுதுகிறதே!

ஆச்சர்யக்குறி!....

Cable சங்கர் said...

@செந்தில் நாதன்
அவ்வளவு பில்டப் கொடுக்காட்டி.. நான் எழுதினத கவிதைன்னு நம்புவியாங்காட்டியும்.. அக்காங்..

@ச.முத்துவேல்

இவ்ளோ பெரிய கவிஞரே பாராட்டின பொறவு.. இனிமே நான் எதுக்கு கவிதை எழுதணும்..

@நேசன்

பாருங்க நான் எழுதின கவிதை படிச்சிட்டு எத்தனை பேருக்கு கவிதை வருது..