உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்

என்னுடய விமர்சனங்களில் எ.வ.த.இ.மா. படம் என்று சில படங்களை சொல்லி எழுதியிருக்கிறேன். அதாவது எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன்.
வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம்.
சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சி வசனம், சூப்பர்ப்.. ஆங்கில வசனங்களின் ஆளுமை ஆங்காங்கே தலைகாட்டினாலும் இயல்பாகவே இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் கீழே யாருக்கும் புரியாது என்று இயல்பாய் வசனம் பேச முடியாமல் தவிப்பது.
நடிப்பு என்று வரும் போது படத்தில் நடித்த, கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் பரத் ரெட்டி, அபியும்,நானும் கணேஷ், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல என்பதால் எதை சொல்லி பாராட்டுவது என்றெ தெரியவில்லை. பல இடங்களில் சின்ன சின்ன உடல் மொழிகளீன் மூலம் அவரின் விருப்பு, வெறுப்புகளை வெளிபடுத்துவதும், க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் காட்சியில் அவரின் செய்கைக்கான ஞாயத்தை சொல்லும் இடம் ஆஹா.. ஸ்பெல்பவுண்ட் என்றால் அது மிகையில்லை.. சமூகத்தின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், இயலாமை, துக்கம், அழுகை, பின்பு அதை மென்று விழுங்கி மீண்டும் ஆளுமையான குரலில் பேசும் அந்த காட்சி அற்புதம். பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதும், ஹாட்ஸ் ஆப் கமல்.
அதே போல் மோகன்லால், மிகவும் சப்டூயூட் ஆக்டிங்.. இவரும் தன்னுடய உணர்வுகளை மிக அழகாய் தன் உடல் மொழியிலேயே வெளிபடுத்துகிறார். சில இடங்களில் அவரை மடக்கும் சீப் செக்கரட்டரி லஷ்மியை எதிர்க்கும் நேரத்தில் காட்டும் கண்ட்ரோல்ட் அரகன்ஸ் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். தன் கீழே வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆர்டர் போடும் போதும், காட்டும் அதிகாரம், பின்பு அவர்களிடம் காட்டும் பரிவை கூட தன்னுடய் குரல் மாடுலேஷனில் வெளிப்படுத்தும் அழகு அருமை.

அதே போல் போலீஸ் ஆபீசராய் வரும் டூயூட்டி பவுண்ட் பரத் ரெட்டியும், அதிரடி போலீஸ் காரனாய் வரும் கணேஷும், சரியாய் பொருந்தியிருக்கிறார்கள்.
முதல்மைச்சரின் வீட்டுக்கு, நம்முடய முதலமைச்சரின் வீட்டையும், குரலுக்கு அவரது குரலை போலவே மிமிக்ரி குரலை உபயோகித்து இருப்பது காண்ட்ரவர்ஸியை உருவாக்கலாம்.
மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு அருமை. அதிலும், ரெட் ஒன்னின் 4கே துல்லியம் படத்தில் எலலா இடஙக்ளில் தெரிகிறது. படத்தின் மூடுக்கேற்ற ஒளிப்பதிவு.
ஸ்ருதிஹாசனின் பிண்ணனி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஆப்டாக அமைந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் கிடையாது ஆங்காங்கே சின்ன, சின்ன இடங்களில் பிண்ணனி இசையில் ஆர்.ஆராக உபயோகபடுத்தியிருக்கிறார். எங்கெங்கே பிண்ணனி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஸ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தில் கமல், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களால லார்ஜர் தென் லைப் கேரக்டர்களிலேயே பார்த்து பழகி போன மக்களுக்கு இவர்களின் நடிப்பு அப்படியே தோன்றும். ஆனால் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அதையெல்லாம் மறக்கடிக்கும் திரைக்கதையுடன் நாமும் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.
ஒரிஜினல் படத்திலிருந்து,க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் சொல்லும் காரணத்தை தவிர பெரிய மாற்றம் எதையும் செய்யாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலெட்டி..
படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது.. ஆங்காங்கே.. சின்ன, சின்ன இடங்களில் அதையெல்லாம் பார்த்தால் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று காத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.
உன்னை போல் ஒருவன் – நம்மில் ஒருவன்.
எ.வ.த.இ.மா.படம் – ஏ வெட்னெஸ்டே விமர்சனம்
டிஸ்கி:
தயவு செய்து இந்தி படத்தையும், இதையும் கம்பேர் செய்து பார்க்காதீர்கள்.. நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம். நஸ்ரூதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தும் பத்திரிக்கைகளின் பாராட்டுகள் பெற்றாலும் கூட பெரிய அளவில் மக்களீடையே ரீச் ஆகவில்லை.. அதை இம்மாதிரியான பெரிய நடிகர்கள் நடிக்கையில் எல்லோருக்கு ரீச் ஆகும் நல்ல விஷயம் நடக்கிறதால்.. மேலும் நல்ல படங்கள் வரும். கமலை காமன் மேனாக ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறும் விமர்சகர்களுக்காக..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அன்பு நித்யன்
Thanks,
Yuva
இந்த வரிகள் போதும், இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு.
விமர்சனம் குறித்த பார்வையை படம் பார்த்துவிட்டு வந்து படித்துச் சொல்கிறேன் ஐயா. ஐயங்கரன் வெளியிடுவாரா எனத் தெரியவில்லை.
கவிஞர்கள் குறித்த இடுகையின் பின்னூட்டத்தில் தங்களை விமர்சனம் பண்ண வேண்டாம் எனும் பொருளில் குறிப்பிடவில்லை, ஒரு படைப்பினை படைப்பது மிகவும் கடினமானது என்பதை குறிப்பிடவே அவ்வாறு எழுதினேன். தாங்கள் அறியாதது அல்ல, மிகச் சரியாக ஒரு படைப்பினை விமர்சனம் செய்வது என்பது மிகவும் கடினமானது. அத்தகைய செயலை நடுநிலைமையுடன் நீங்கள் செய்து வருவது பாராட்டுக்குரியது.
மிக்க நன்றி.
:D
நான் a Wednesday படத்தை ஏற்கனவே பல முறை பார்த்த அனுபவத்தில் , இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை.
அத விடுங்க.. சுருதி பிண்ணனி இசை தொடர்பாக நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.
இந்தி version பார்காதவர்களுக்கு படம் பிடிக்கலாம்ம்ம்ம்ம்..
People should accept these kind of movies.
வழக்கமான ஒரிஜினல் போல் இல்லை என்று எழுதிவிடுவீர்கள் என்று பயந்துவிட்டேன், நல்ல விமர்சனம் மிக்க நன்றி , துக்கடா படங்கள் எல்லாம் ஒட விடும் நாம், கமல் போல் நம்மை விட ( என்னை) சினிமா மற்றும் பல விசயங்களில் தேர்ந்தவர்களைதான் எளிதாக விமர்ச்சித்துவிடுகிறோம்.
அவர் போன்றவர்களை போற்றவேண்டும்
ஆனால் "உன்னைப்போல் ஒருவன்" ட்ரைலர் பார்க்கும் பொழுதே ஒரு மின்சாரம் உடம்பு எங்கும் பாய்வதை போல் இருந்தது..கமல் & மோகன் லால் காம்பிநேஷன் நினைக்கும் பொழுதே சில்லிட்டது..ஆனா சில பேர் தேவை இல்லாமல் compare பண்ணி பேசுறாங்க..இதை வேறு ஒரு கோணத்தில் கண்டிப்பாக ரசிக்க முடியும்..
inga mumbaila indha padam release aagala...kandhasamy ellam release aachu...avvvvvvvvvvvvvvvvvvvvv
பிளாக்கர் விமர்சகர்கள் தங்களது சொந்த விருப்புகளை வைத்து விமர்சனம் எழுதும் போது நல்ல படங்கள் கூட படுத்து விடுகிறது..
படத்தில் உள்ள சிறிய தவறுகளை தவிர்த்து நல்லதை மட்டும் சொல்லிய விதம் அருமை ..அருமையான விமர்சனம் சார்..
அருமையான விமர்சனம் (கமலை யார் பாராட்டினாலும் எனக்கு பிடிக்கும் என்பது வேறு விஷயம்).
நன்றி
ஐ ரீப்பீட்டு .....
நல்ல விமர்சனம் சங்கர் சார்...
உங்க விமர்சன்மும் முன்னைய விட பயங்கரமாகிட்டேன் இருக்கே!
நான் a Wednesday படத்தை ஏற்கனவே பல முறை பார்த்த அனுபவத்தில் , இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை."
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தொர தான் மேதாவிங்குது.
இந்த மாதிரி நெறைய பீட்டருங்கள பாத்தாச்சு ராசா.
நல்லா சொல்லியிருகீங்க.
ய வெட்னெஸ்டே பார்க்காதவர்களுக்கு இதில் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும்.
குஜராத் கலவரத்தில் கருசிதைவு செய்யப்பட்ட இசுலாமியப் பெண்ணை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கமல் துப்பாக்கியால் கண்களை துடைப்பார் அருமையான நடிப்பு.மனிதம் தான் முக்கியம் மதம் அல்ல என்பதை நறுக்கென்று கொட்டி சொன்ன படம்.தீவிரவாதிக்கு ஆயுத சப்ளை செய்யும் சந்தானபாரதியை ஒரு இந்துவாக சித்தரித்ததும் சமயோஜிதம்.நம் நாட்டில் சிறுபான்மையினரை தொடர்ந்து குற்றம் சாட்டும் போக்கை இது மாற்றும்.
நல்ல வேளை இந்த படத்திற்கு ஒரு கேசு தான் போட்டனர்,
தசாவதாரம் போல 40 கேசுகள் போட்டால் என்ன ஆயிருக்கும்?படம் ஒரு வருடம் இழுத்திருக்கும்.படத்தில் லாலு அட்டன் பங்கு அற்புதம்.
ஒரு தராசில் இருவர் நடிப்பையும் வைத்தால் இரண்டும் சமம் என்று காட்டும்.அதிரடி போலிஸு ஆசிப்பும் கலக்கியிருந்தார்.
கலைஞர் குரல் ஒரே கலாய்.
கலைஞர் வீடு செட்டா? நம்பவே முடியலை.
நிலை வருமா பாடல் வரவே எங்கும் வரவேயில்லை.
இது போல தரமான இரண்டுமணி நேர படங்கள் நிறைய வரனும்.
விமர்சனம் அருமை.
கமல் இந்தப் படத்தை எடுக்கப்போகிறார் என்றவுடனே வந்த விமர்சனங்கள் கண்டு, படம் சொதப்பி விடுமோ என சந்தேகப்பட்டேன். தங்களது விமர்சனம் பார்த்தபின்தான் நிம்மதி.
---
அப்புறம் ஹாட் ஸ்பாட் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. :)
வசனத்தில் எதோ ஒன்னு குறையுது........
கமலுக்கு இந்த பத்திரம் செறியா அமையவில்லை...:((((((((((
மிக நேர்த்தியான விமர்சனம். நான் வெட்னஸ்டேவைப் பார்க்கவில்லை. எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது. நேரமிருந்தால் எனது விமர்சனத்தையும் படியுங்கள். நன்றி!
வாழ்த்துக்கள்
நேற்று உன்னைப்போல் ஒருவன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணனின் விமர்சனத்தை படித்து விட்டுத் தான் போக வேண்டும் என்பதால், தில் போலே ஹடிப்பா படத்திற்கு சென்று வந்தேன். இந்த படத்தை முடிந்தால் பார்த்து விமர்சியுங்கள், வெற்றி படத்துக்கான எல்லாம் இருக்கிறது என் பார்வையில்.
உ.போ.ஒ விமர்சனம் மிக அருமை. உங்களோடு இன்று பேசுகிறேன்.
பிரபாகர்.
பார்த்துபுட்டு சொல்லறேன்!!
விமர்சனத்துக்கு நன்றி தலைவா!!!
Read my review at http://kaluguppaarvai.blogspot.com/
Good review, film too
இதையும் பார்க்கவும்.
http://mynandavanam.blogspot.com/search/label/Movie%20Review
கொடுத்து இருக்கிறார் முதன் முறையாக. computer engineer என்றால் பார்ப்பானாக தான்
இருக்க வேண்டுமா உலக நாயகனே அந்த ABHIVATHAYE வசனம் மனதை நெருடியது
"உன்னை போல் ஒருவன்" பாடலில் எதற்கு PAVITHRANAYA SATHURNAAM மந்திரம்.
மந்திரம் சொல்லட்டும் தவறில்லை "நாத்திகம்" பேச வேண்டாம் உலக நாயகனே.இந்த நெருடல்களை தவிர உலக நாயகன் உலக நாயகன் தான்
சுருக்கமாக சொல்வதானால்.. கேபிள் அண்ணே.. நீங்க எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து எழுதிட்டா, நம்மைப் போலவங்க எல்லாரும் எதைத் தான் எழுதுறது? ;)
எனக்கென்றால் படம் முழுத் திருப்தி.. உங்கள் விமர்சனத்திலும் அத்தனை விஷயமும் சொல்லி விட்டீர்கள்..
கேபிள் விமர்சனம் பொய் சொல்லாது.. கமலின் படைப்புக்களும் இலேசில் ஏமாற்றாது..
எனது :
http://www.aathi-thamira.com/2009/09/blog-post_19.html
repeat.....
நன்றி
@புதுவை சிவா
நன்றி
@யுவராஜா
மிக்க நன்றி
நன்றி சார். எந்த ஊரில் இருக்கிறீர்கள்..?
@சாம்ராஜ்ய ப்ரியன்
நன்றி
@சிண்டோக்
எதுக்கு ஆண்டவன் புண்ணியம் எல்லாம் நம்ம புண்னீயத்திலேயே படம் நல்லா இருக்கும். நான் நாத்திகவாதியில்லை
:)
@தீப்பெட்டி
நன்றி
பர்ஷப்ஷன் டிபர்ஸ்.. அருண்
@முத்துகுமார்
நன்றி.. முதலில் நீங்கள் போய் பார்த்தீர்களா..?
@வெட்டிபையன்
அப்படி எழுத அவர்கள் ஏதும் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை அதனால் தேவையில்லாமல் கம்பேர் செய்வது முட்டாள்தனமாய் தோன்றியது.
@மகேஷ்
நன்றி
@அசோக்
மிக்க நன்றி தலைவரே
டோண்ட் பாதர் அபவுட் அதர் வினோத்.. படம் டிக்ளேர்டு ஆஸ் சூப்பர் ஹிட்
@முரளிகுமார் பத்மநாபன்
படம் பார்த்துட்டு நிச்சயமா வந்து சொல்லுங்க..
@ட்ரூத்
நன்றி பாருங்க
@அக்னிபார்வை
என் ஜாய்.. என்ன பி.வி.ஆர். ஆ..?
மும்பையில் ஏற்கனவே இந்தியில் ஓடியதால் லேட்டாய் ரிலீஸ் செய்யப்படலாம்
@தண்டோரா
அனுபவியுங்கள்..
@எம்.கே.முருகானந்தம்
மிக்க நன்றி...
2கிஷோர்
அப்படியெல்லாம் கிடையாது கிஷோர்.. ஏன் என்வழி.காம் கூட பாராட்டி இருக்கிறது. என்னை பொருத்த வரை நலல் படஙக்ளுக்கு விமர்சன்ம் ஒரு எக்ஸ்டட்ரா மைலேஜ் அவ்வளவுதான்
@
நன்றி
@ரசனைக்காரி
நன்றி
@ஈரவெங்காயம்
நிச்சயமாய்
@ஜோ
மத்தவஙக் சொல்றதை பத்தி கவலை படாதீங்க.. மக்கள் சரியான படத்தை தலையில் வைத்து தூக்கி கொண்டாட மறுக்க மாட்டார்கள்
@சந்தோஷ்
நன்றி
@பப்பு
என்ன மாதிரி பயங்கரமாகிட்டே வருது பப்பு
@ராமலிங்கம்
அதெல்லாம் பெரிதாய் பாதிக்காத் தலைவரே.. உஙகளுக்க் தெரியாதா. படத்துக்கு ஆணிவேர் திரைக்கதைதான் என்று
விடுங்க, விடுங்க அவங்க, அவங்க கருத்து அவங்களுக்கு
@கார்த்திகேயனும், அறிவுத்தேடலும்
ஆமாம் கார்த்தி . இமமாதிரியான படங்கள் கம்ல் போன்ற சிற்நத நடிகர்கள், வெகுஜன நடிகர்கள் நடித்தால் எதிர்கால சினிமாவுக்கு மிகவும் நலலது.
அப்படியா பீல் பண்றீங்க
?
@நன்றி உலவு.காம்
@பிரபாகர்..
மிஸ்பண்ணிட்டீங்கபிரபாகர்.. உடனே போய் பாருங்க
@செந்தில்நாதன்
பார்த்துட்டு சொலுங்க செந்தில்
@முருகானந்தம்
படிச்சிட்டேன் முருகானந்தம்
@ராஜராஜன்
பாத்துட்டு சொல்லுங்க
2தராசு
அதென்ன என் ஆஸ்தான நடிகர்..?
@டம்பிமேவி
படம்பார்த்துட்டு சொல்லுங்க
@முத்துபாலகிருஷ்ணன்
நன்றி
இப்பவும் ரெண்டு தடவை வந்திருக்கு.
@பட்டர்ப்ளை சூர்யா
நன்றி பாத்துட்டேன்
@நாடோடி இலக்கியன்
ஆமாம் நாடோடி நான் மிகவும் ரசித்த காட்சிகளில் அதுவும் ஒன்று..
பாத்துட்டு சொல்லுங்க
@ வெண்ணிற இரவுகள்
ஸ்தோத்திரம் சொன்னது.. அபிவாதியே சொல்வது எல்லாம்.. ஒரு விஷயமாய் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்..
உங்களின் எதிர்பார்பை பார்த்து பரவசமாகவும், பயமாகவும் இருக்கிறது.லோஷன்
மிக்க நன்றி படித்துவிட்டேன். அருமை
@ராமன் பேஜஸ்
பெரிய ரிப்பிடுகிறேன்.. ராமன்
நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம்.
/
இதுக்காகவே பார்க்கணும்!
நான் கமலிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன் ஒரு கலைஞனாக பிரமிக்கிறேன்.....
ஆனால் நாத்திகம் பேசி விட்டு சாதீயம் வேண்டாமே
Dialaque is super, who is this Murugan..
@arun:
when hacker said the system crashed mohanlal found he showing the explorer. he again open the software minimised in the system and its actually showing the place.
u should have absorbed little carfuly in the last :)
நிச்சயம் பாருங்க
@வெண்ணிற இரவுகள்
தலைவரே. நான் மீண்டும் ஒரு முறை சத்தியம் தியேட்ட்ரில் பார்த்தேன். நாம் இங்கு பேசும் எந்த விஷம் பற்றியும் கவலைபடாமல் நிறைய முஸ்லிம் சகோதரர்கள்,சகோதரிகள், படத்தை படமாக பார்த்து ரசித்தனர்.
எல்லாம் நாம்பார்க்கும் பார்வையில்தான்
நன்றி
@ட்ரூத்
நன்றி.. நீங்க்ளும் எழுதுங்களே ஒருபெரும் வெற்றி படத்திலிருந்து ஆரம்பித்ததாய் இருக்குமே
@அருண்
உங்களுக்கு தன்ஸ் பதில் சொல்லியிருக்கிறார்
நன்றி தன்ஸ்
@
அக்கிலீஸ்
நன்றி
@ஒன்லி சாப்ட்வேர்
நன்றி உங்கள் வாழ்த்துக்கு.
நானும் ஒரு இடுகை போட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)