Thottal Thodarum

Sep 19, 2009

சொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்


காதலுக்கு புது டெபனிஷன் கொடுத்திருக்கும் படம். காதல் ஒரு முறைதான் வரும், காதலுக்காக உயிரையே கொடுக்கணும், போன்ற விஷயங்களையே சொல்லி வந்த சினிமாக்களின் மத்தியில், காதல் என்பது ஒரு நல்ல உணர்வு, இன்று ஒரு பெண்ணை பார்க்கிறோம், அது தோல்வியாகிவிட்டால் நாளை வேறு ஒரு பெண்ணை பார்த்தால் காதலிக்க மாட்டோமா..? அது தானே நிதர்சனமான வாழ்க்கை என்பதை இந்த கால இளைஞர்களின் பார்வையில் ஒரு யூத் பெஸ்டிவலே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

நவ்தீப், அபினவ், சத்யன், மற்றும் சில நண்பர்கள் ஒன்றாய் கூடும் டீக்கடையின் எதிர்வீட்டில் பம்பாயிலிருந்து ஒரு பெண் வருகிறாள்., பார்த்தவுடன் சட்டென நவ்தீப்புடன் ஒட்டிக் கொள்கிறாள்.. சென்னையை சுற்றி காட்ட சொல்கிறாள், கனவில் கூட வந்தாய் என்கிறாள், அவளின் காதலை சொல்லும் நவ்தீபபை, நிராகரிக்கிறாள். தான அவ்விதமாய் பழகவில்லை.. ஒரு நண்பியாகத்தான் பழகினேன் என்று சொல்லி விலகுகிறாள். நவ்தீப்பும் காதலை மென்று முழுங்கி நிற்க,

அடுத்து அடுத்து அவன் சந்திக்கும், பெண்கள் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவனை நிராகரிக்க, இப்படி போகும் வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு காதல் அவனுக்கு மல்லிகா கபூர் மூலம் அமைய வாழ்க்கை சந்தோச்மாய் போகும் நேரத்தில் மதுமிதாவால் அவனின் காதல் குலைய, க்ளைமாக்ஸ்.

படம் பூராவும் வசனங்கள் பளிச்.. பளிச்..

“பறவைக்கு ரெக்கையும், மனுஷனுக்கு மனசையும் கடவுள் எதுக்குடா கொடுத்திருக்கான்..? பறக்குறதுக்குதானே..?”

“பறக்கட்டும் ஆனா அவன் என் காசுல இல்ல பறக்குறான்”

“எது உன் காசு..? எப்ப நீ மிச்சம் வச்சிட்டியோ. அப்பவே அது உன் காசில்லை..”

படு ஸமார்ட்டான, ஷார்பான வசனங்கள்.

படத்தின் இன்னொரு முக்கியமான அதிரடியான கேரக்டர் பிரகாஷ்ராஜ்.. சும்மா அதகள படுத்துகிறார். அவருக்கு ஒருவர் மாலை போட்டு விட்டால் அது சரியோ, தப்போ அவருக்காக போராடும் தாதா.. மனுஷன் கலக்குகிறார்.. படத்தில் பாருங்கள் நீங்கள் அவரின் கேரக்டரை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதுவும் அவரின் சின்ன பையன் அவருக்கே மாலை போடும் காட்சி.. சூப்பர்.

நவ்தீப், மிக அழகாய் புரிதலுடன் நடித்திருக்கிறார், அபினவ் சரியாய் அந்த பாத்திரத்துக்கு பொருந்தியிருக்கிறார். சத்யன் தனியாய் செய்யும் காமெடிகளை விட, சீன்களுக்கு நடுவில் அவர் பேசும் கமெண்டுகள் சூப்பர். ஹீரோயின்களில் மதுமிதா மட்டுமே பாஸ் ஆகிறார்..நடிப்பில்.மற்றவர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றே சொலல் வேண்டும்.

ஆர்தர்வில்சனின் ஒளிப்பதிவு நச்.. முள்ளே முள்ளே பாடல் காட்சியில் கண்களுக்கு ஜில்.. அதே போல் கிரவுண்டில் நட்க்கும் சண்டை காட்சியும், தண்ணீர் தெரித்து ஓடும் காட்சியும் அருமை.

படத்தில் இசை ஒரு ப்ளஸ்பாயிண்ட்.. மூன்று பாடல்கள் அருமையாய் இருக்கிறது.. முக்கியமாய் ”முள்ளே.. முள்ளே..காதல் முள்ளே” ‘காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா” ”ராஜாதிராஜா இல்ல” பாடல்களும், படமெடுத்தவிதமும் அருமை. பாடல்களுக்கு எழுந்துபோகும் காலத்தில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் அப்துல்லா.. புதிய பாடலாசிரியர் தங்கம் மூர்த்தி “அச்சம், வெட்கம்” என்ற பாடலின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். என்னோட பேவரேட் “முள்ளே.. முள்ளே” பிண்ணனி இசையும் ஆப்ட்.

படம் முழுவதும் பளீரிடும் வசனங்கள், பரபரவென ஓடும் காட்சிகள், இன்றைய இளைஞர்களின் மனக் கண்ணாடியாய் நவ்தீப், அபினவ், மதுமிதா, பம்பாய் பெண், டான்சர், மல்லிகா கபூர் கேரக்டர்களின் மூலம் இயல்பாய் வெளிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் முரளி அப்பாஸ். அபினவ், மதுமிதா காதல் காட்சிகள் குட்டி சிறுகதை.. அந்த ஒரு கப் காபி, மேட்டர் அட போட வைக்கிறது.

அதே போல் நவ்தீப்பின் காதல் நிராகரிப்புகளுக்கான காரணங்கள் நச்.. பார்த்தவுடனேயே காதல் வயப்படும் சராசரி இளைஞனாக இருந்தாலும், அவனின் ஆழ்மன உளைச்சலை மதுமிதாவிடம் நவ்தீப்பிடம் கொட்டும் காட்சியில் வசனமும் நடிப்பும் ஆழம்.

பிரகாஷ்ராஜ் கேரக்டரை லைட்டாக சொலல் ஆரம்பித்து, ஏலம் எடுக்கும் சீனில் அமைதியாய் உட்காரவைத்து பில்டப் செய்தே டெரராக காட்டும் காட்சி, என்று பளிச்..பளிச்.. இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் டீவியேட் ஆவதை தவிர்த்திருக்கலாம். இன்டெப்தாக க்ளைமாக்ஸில் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.வழக்கமான காதல் கதையை கொடுக்காமல் காதலை இன்னொரு விதமாய் பார்க்க வைக்கும் கதையை தேர்தெடுத்தற்காக இயக்குனர் முரளி அப்பாஸை பாராட்டியே ஆகவேண்டும்

சொல்ல சொல்ல இனிக்கும் – நிச்சயமாய் இனிக்கும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

40 comments:

மேவி... said...

raittu

ஜெட்லி... said...

படம் எந்த தியேட்டரில் அண்ணே ஓடுது?.....
தேவிபாலாவா???? தியேட்டர் நல்லா இருக்கா?

Cable சங்கர் said...

/படம் எந்த தியேட்டரில் அண்ணே ஓடுது?.....
தேவிபாலாவா???? தியேட்டர் நல்லா இருக்கா?
//

நான் மினி உதய்ம்ல பார்த்தேன்.. உஙக மொபைல் நம்பரை மெயில் அனுப்புங்க

தராசு said...

அப்துல்லா அண்ணனின் பாட்டை பாராட்டியதற்கு பாராட்டுகிறேன்.

Mahesh said...

//காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் அப்துல்லா..//

அது!!! நினைத்தாலே இனிக்கும்ல சொன்னதை நினைவுல வெச்சுக்கிட்டதுக்கு பாராட்டுக்கள் !!
:)))))))))))

butterfly Surya said...

நன்றி. நீங்க சொன்ன அப்பீலே இல்ல...

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே சினிமாவுல இப்ப புது டாக் என்ன தெரியுமா?? கேபிள் ஒரு படத்தப்பத்தி நல்லபடியா விமர்சனம் எழுதுனா அந்த படம் நிச்சயம் ஹிட். இதை சில இயக்குனர்கள் சொல்லவே கேட்டு இருக்கேன்.இந்த படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க... பார்ப்போம் :)

என்னை வாழ்த்திய உங்களுக்கும்,அண்ணன் தராசு மற்றும் அண்ணன் மகேஷ் அவர்களுக்கும், இன்னும் பாராட்டப்போகும் அனைவருக்கும்(?) நன்றி. :)

கார்க்கிபவா said...

annanukku jay...

மணிஜி said...

true?

Romeoboy said...

ok done .. பார்த்துட வேண்டியது தான் ..

நாடோடி இலக்கியன் said...

பார்த்துட வேண்டியதுதான்.

Ashok D said...

நிறைவாய் உள்ளது விமர்சனம், templete, allginment & Rs.300 adspace.

Hotspot மட்டும் ஹாட்டா இல்ல. பின்னால் நிற்கும் பெண் அந்த குறையை தீர்கிறாள் :)

பிரபாகர் said...

அண்ணன் நல்ல மூட்ல இருப்பீங்க போலிருக்கு, ரெண்டு நல்ல படத்த பாத்திருக்கீங்க. நன்றிங்கண்ணா.

பிரபாகர்.

கலையரசன் said...

எனக்கும் புதுசாதான் இருக்கு..
எல்லா படத்தையும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்களே?

அப்துல்மாலிக் said...

நல்லா ரசிக்கும்படி படம் வந்தது ரொம்ப சந்தோஷம்

thiyaa said...

அறிந்தும் அறியாமலும் போல் வருமா?

வெண்பூ said...

"காதல் ஒரு பள்ளிக்கூடம்" விஷுவலும் நன்றாக இருக்கிறது என்று தெரியும்போது சந்தோஷமாக இருக்கிறது... நல்ல படங்கள் வர ஆரம்பித்து இருக்கிறது.

அ.மு.செய்யது said...

அப்துல்லா அண்ணன் பாட்டுக்காகவாவது இந்த படத்த பாக்கணும்ங்க..!!!

குசும்பன் said...

//காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. //

நானும் போல்டா சொல்றேன்..

காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

(அப்துல்லா அண்ணாச்சி என் அக்கவுண்ட் நம்பர் தெரியும்தானே:)))

Prabhu said...

வந்ததே தெரியல!

///அண்ணே சினிமாவுல இப்ப புது டாக் என்ன தெரியுமா?? கேபிள் ஒரு படத்தப்பத்தி நல்லபடியா விமர்சனம் எழுதுனா அந்த படம் நிச்சயம் ஹிட். இதை சில இயக்குனர்கள் சொல்லவே கேட்டு இருக்கேன்.இந்த படம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க... பார்ப்போம் :)////

சொல்லவே இல்ல!

வெண்ணிற இரவுகள்....! said...

ஒரு சின்ன படத்தை பாராட்டுவதற்கு மனது வேண்டும் சங்கர் அது உங்களிடம் நிறையவே இருக்கிறது .எல்லாரும் உன்னை போல் ஒருவனை பாராட்டி கொண்டிருக்கும் போது நீங்கள் இந்த படத்தை பாராட்டியது மிக்க மகிழ்ச்சி உங்களுக்காகவே இன்று உதயமில் பார்க்க இருக்கிறேன்

manjoorraja said...

இப்போதெல்லாம் உங்க விமர்சனத்தை பார்த்துவிட்டுத்தான் படம் பார்க்கவேண்டும் என எண்ணியுள்ளேன்.

manjoorraja said...

மறந்துட்டேன்
நண்பர் அப்துல்லாவுக்கு வாழ்த்துகள்

swizram said...

படத்த பத்தி எதுலயும் எந்த பில்ட் அப்பும் வரல... அதுனாலயே நல்ல படமா தான் இருக்கணும்..
ரொம்ப காஷுவலான விமர்சனம் கேபிள் சார்.....

நண்பர் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்!!!

Thamira said...

இங்கு பின்னூட்டம் இட்டுள்ள ஒரு பிரபலத்துக்கு நேரில் பார்க்கும்போது கும்மாங்குத்து காத்திருக்கிறது. எச்சரிக்கை.!

Thamira said...

நீங்க விமர்சனம் பண்ணாட்டாலும் அண்ணன் இருக்கும் படம் 100 டேஸ்தான்.. என்ன சந்தேகம்.?
பாடலின் விஷுவல் பார்க்க ஆவலாகவுள்ளேன்.

gulf-tamilan said...

காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

(அப்துல்லா அண்ணாச்சி என் அக்கவுண்ட் நம்பர் தெரியும்தானே:)))

:)))அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்!!!

selventhiran said...

"ராசி"-ல் சேர்த்த பாவத்தை இயக்குனர் தீர்த்துவிட்டாரென்று சொல்லுங்கள்... கோயம்புத்தூருக்கு இன்னும் வந்தமாதிரி தெரியலை...

selventhiran said...

"ராசி"-ல் சேர்த்த பாவத்தை இயக்குனர் தீர்த்துவிட்டாரென்று சொல்லுங்கள்... கோயம்புத்தூருக்கு இன்னும் வந்தமாதிரி தெரியலை...

selventhiran said...

"ராசி"-ல் சேர்த்த பாவத்தை இயக்குனர் தீர்த்துவிட்டாரென்று சொல்லுங்கள்... கோயம்புத்தூருக்கு இன்னும் வந்தமாதிரி தெரியலை...

மேவி... said...

"எதிர்வீட்டில் பம்பாயிலிருந்து ஒரு பெண் வருகிறாள்., பார்த்தவுடன் சட்டென நவ்தீப்புடன் ஒட்டிக் கொள்கிறாள்.. சென்னையை சுற்றி காட்ட சொல்கிறாள், கனவில் கூட வந்தாய் என்கிறாள்,"


சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் வாசனை கொஞ்சம் வருதுல ..... சரி சரி இதை எல்லாம் பார்த்த கதை பண்ண முடியுமா

அது ஒரு கனாக் காலம் said...

அப்துல்லா அண்ணன் வாழ்க ..... அவர் புகழ் ஓங்குக

பிரசன்னா கண்ணன் said...

சங்கர்,

ஈரம், உன்னைப்போல் ஒருவன், சொல்ல சொல்ல இனிக்கும் - இப்படி வரிசையா பாசிடிவான விமர்சனங்கள் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க..

தமிழ் சினிமா புதிய முயற்சிகளோட நல்ல திசைல போக ஆரம்பிச்சுருக்கு போல.. மகிழ்ச்சி..

மங்களூர் சிவா said...

//காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடலை பாடிய நம் பதிவர் அப்துல்லாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் அப்துல்லா..//

வாழ்த்துக்கள் அப்துல்லா

Cable சங்கர் said...

@டம்பிமேவி
என்ன ரைட்டு.?

@தராசு
நன்றி

@மகேஷ்
நாங்க யாரு..?

@சூர்யா

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சூர்யா.. நீஙக்ளும் பார்த்து உங்க கருத்த சொல்லுங்க

Cable சங்கர் said...

@அப்துல்லா

அண்ணே பயமாயிருக்கண்ணே..

@கார்க்கி
நானும் ஜே..

@தண்டோரா..
இதிலென்ன சந்தேகம்

@நாடோடி இலக்கியன்
பார்த்துட்டு சொல்லுங்க

@ராஜராஜன்
பாருங்க நிச்சயமா

Cable சங்கர் said...

@அசோக்

போற போக்க பாத்தா.. ஒண்ணுமில்லாம போட்டாத்தான் ஹாட் ஸ்பாட் சூடாகும் போலருக்கு :)

@பிரபாகர்

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைன்னே.. ‘
@திவ்யாவின் பேனா
அது வேறு வகையான படம் இது வேறு வகையான படம்

@வெண்பூ

ஆமாம்

@ அ.மு.செய்யது

நிச்சயமா பாருங்க

@குசும்பன்

அலோ.. அமெளண்டு வந்தவுடனே நமக்கு ஒரு பர்செண்டேஜ் தள்ளீருங்க

@பபபு..

அப்படியா.?

Cable சங்கர் said...

@வெண்ணிற இரவுகள்

உன்னை போல் ஒருவனை பாராட்டி முடிச்சாச்சு, நாம அடுத்த் படத்துக்கு போயிட்டோம்

@மஞ்சூர் ராஜா
நன்றி..

@ரசனைக்காரி

நிச்சயமாய் ஒரு முறை பார்க்கலாம்

@ஆதி
உங்கள் வாழ்த்துகளை அப்துலலவிற்கு ரீ டைவர்ட்

@ஹாப்.த்மிலன்
நன்றி

@செல்வேந்திரன்
ஆமாம். கோயம்பூத்தூர்ல, திருப்பூர்ல நடக்குதுங்கோவ்...

Cable சங்கர் said...

@டம்பிமேவி

சும்மா மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் \முடிச்சுபோடக்கூடாது

@பிரசன்னா
நலலாருந்தா நல்லருக்குனு சொல்றது தப்பா..?:(

@மங்களூர் சிவா

ரீடைரக்ட் டூ அப்துல்லா..

mvalarpirai said...

உங்களின் இந்த சொ.சொ.இனிக்கும் படத்தின் விமர்சனும், சன் டீவின் சன் பிக்சர்ஸ் படங்களுக்கும் ஒன்னும் பெரிசா வித்தியாசம் இல்லை !

பட சுமாரான படங்களை விமர்சனத்தில் பின்னு பெலடெக்கும் நீங்கள் இந்த மொக்கை படத்துக்கு இப்படி விமர்சனம் எழுத காரணம் என்ன ? காரணம் இல்லை என்றால், நான் அடித்து சொல்வேன் உங்கள் ரசனையின் தன்மை குறைந்து விட்டது அல்லது குறைக்கப்பட்டது .