இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது.
பரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை..? அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..?
இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு பிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..
ஆனால் சுபாஷினால் பட்ட அவமானம் மட்டும் ஆறவேயில்லை..கலாநிதிக்கு.. காத்திருந்தார். தங்களது சுமங்கலி கேபிள் விஷன் ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில், சென்னையில் அப்போது இருந்த எம்.எஸ்.ஓ எனப்படும் மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் என்று இருந்தவர்களில் முக்கியமான நிறுவனமாயிருந்தது ஜீ டிவியின் சகோதர கம்பெனியான சிட்டி கேபிள்.. மற்றும் ஏ.எம்.என்.. தங்களது கம்பெனி ஆரம்பிக்கப் பட்டவுடன் முதல் களபலியாய் சன் போட்டது சிட்டி கேபிளைதான். அதன் பிறகு தமிழ் நாட்டில் அவர்களின் நிறுவனத்துக்கான அறிகுறி ஏதுமில்லை.
2001ல் ஜீ தனது தமிழ் சேனல் ஆசையை பாரதி என்று ஆரம்பிக்க, ஆரம்பித்த சில காலங்களிலேயே மூடுவிழா நடத்தினார்கள். அதற்கும் பல காரணங்கள் பிண்ணனியில் இருக்கிறது. பிறகு அவர்கள் தமிழில் சேனல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் தங்களுடய பலத்தை வைத்து தள்ளிப்போட வைத்த விஷயமும் நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் ஜீ இந்திய பிராந்திய மொழிகளில் கவனம் கொள்ள ஆரம்பிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும் ஆரம்பிக்க, தமிழிலும் காலூன்ற மட்டும் வருடங்கள் ஆனது என்னவோ நிஜம்..
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தில் பிரபலமான எம்.எஸ்.ஓவான ஆர்.பி.ஜி தங்களுடய நெட்வொர்கை விற்கபோவதாய் தெரிய, அந்த நேரத்தில் பெங்காலி சேனல் ஆரம்பிக்க முஸ்தீப்புடன் இருந்த சன், வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அதை வாங்கி தங்களது சேனலை நிலைநாட்டிக் கொள்ள நினைத்திருந்த போது ஜீயும் தனது பெங்காலி சேனலை ஆரம்பிக்கவிருந்தது.எப்படி சன் தெற்கு பிராந்திய மொழிகளில் முதன்மையாய் இருந்ததோ, அதே போல் ஜீ மற்ற ஏரியாக்களின் பிராந்திய மொழிகளில் நம்பர் ஒன்னாக இருந்த நேரம். வேறு சேனல்களூம் இல்லாத நிலையில் புதிய ஸ்டாராங் எண்ட்ரியான சன்னை உள்ளே அனுமதிக்க மனமில்லாமல், போட்டி போட்டுக் கொண்டு, தங்களுடய அரசியல், பண பலம் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஆர்.பி.ஜியை கைபற்றியது.. அதன் பின் சன்னின் பெங்காலி சேனல் கனவு தள்ளிப்போடப்பட்டது.
இந்த தொழில் போட்டியில் உள்ளே ஓடும் வன்மம் தான் இப்போது வெளிவந்திருக்கிறது.. தமிழில் ஜீதமிழ் ஆரம்பித்த நேரம் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடுமபத்திற்கும் இடையே லடாய் இருந்த நேரம்.. அதனால் அப்போது அரசின் ஆதரவோடு இருந்த எம்.எஸ்.ஓவில் உடனடியாய் கிட்டத்தட்ட ப்ரைம்பேண்டில் அலாட்மெண்டும், செட்டாப் பாக்ஸுகளில் பிரதானமும் கிடைக்க, சில மாதங்கள் மக்களிடையே தெரிந்து கொஞ்சம், கொஞ்சமாய் ரீச் ஆக ஆரம்பிக்க, அந்த நேரத்தில் எஸ்.ஸி.வியிலும் அவர்களின் சேனலை தெரியவைக்க அலைய வைத்தது.
பின்பு கண்கள் பனித்து, இதயம் இனித்தவுடன், மீண்டும் தன் முழு கட்டுப்பாட்டை எடுத்த எஸ்.ஸி.வி.. முன்னாள் அரசு ஆதரவு எம்.எஸ்.ஓவை தூக்கிவிட்டு.. தன் முழு வீச்சை பரப்பியது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் தன்னுடய நெட்வொர்கை வைத்திருக்கும் எஸ்.சி.வி.. தன்னுடய நெட்வொர்க்கில் ஒரு சேனலை ஒளிபரப்ப, கேரேஜ் பீஸ் என்று ஒரு தொகையை வாங்கிக் கொண்டுதான் ஒளிபரப்பும். இதுதான் எல்லா எம்.எஸ்.ஓக்களும் செய்வார்கள்.. அவர்களின் தொழில் லாபமே இந்த் கேரேஜ் பீஸிலிருந்துதான். உலகம் பூராவுமே இதுதான் நடைமுறை.. டிடி.எச்சுக்கு இதே நடைமுறைதான்.
வருடத்துக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து தமிழகம் எங்கும் உள்ள தங்களது நெட்வொர்க்கில் ஒளீபரப்ப ஒப்பந்தம் போட்டது ஜீ. ஆனால் ப்ரைம்பேண்ட்டில் இல்லாததால்.. அவர்களுக்கான ரீச் இல்லை.. அதுமட்டுமில்லாமல் சென்னையில் செட்டாப் பாக்ஸ் முறையில் இருப்பவர்கள் டிஜிட்டலில் வரும் சிக்னலில் உள்ள சேனலகளை பார்ப்பார்களே தவிர, அனலாகில் உள்ள சேனல்களை மாற்றி பார்ப்பதில்லை.. எனவே.. வேறு வழியில்லாமல் ஜீ தங்களது சேனலின் நிலைப்பாட்டை தகக வைத்துக் கொள்ள பணிந்து போய் தங்களது சூப்பர் ஹிட் தமிழ் பட உரிமையை சன்னுடன் ஷேர் செய்ய முடிவு செய்தது.. படம் ஒளிப்பரப்பான அடுத்த நாள் ஜீதமிழ் சன் நெட்வொர்க்கில் டிஜிட்டல் நெட்வொர்க்கில் வந்துவிட்டது.
இப்போதைக்கு ஜீ பணிந்தது போல் இருந்தாலும், பின்னால் பாய்வதற்கும் தயாராய் இருக்கும் என்றே தோன்றுகிறது..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
71 comments:
தூள் கேபிள்..இதுல இவ்வளவு இருக்கா?
நமக்கு இந்த உள் குத்து அரசியல் வர மாட்டேங்குதே
சன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..??
அமர்களமா எழுதி இருகீங்க தல.. சூப்பர் நடை..
தமிழ் மணத்துல ஓட்டு போட முடியலை.. என்னனு பாருங்க..
இந்தமாதிரிதான் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். சரியாகவே உள்ளது.
நடக்கட்டும் நடக்கட்டும்
//சன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..??//
இதுவும் சன் டி.வி. ஒரு நான் ஸ்டாப் என்டர்டெய்ன்மென்ட்.
என்ஜாய்
//சன் டிவியின் அடாவடிக்களுக்கு அளவே இல்லையா..??//
இதுவும் சன் டி.வி.யின் ஒரு நான் ஸ்டாப் என்டர்டெய்ன்மென்ட்.
என்ஜாய்
[[[இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒளிபரப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய, ஜீடிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவை பார்க்க போயிருந்தார்.. சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்துவிட்டு, பார்க்காமலேயே முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் சுபாஷ்.. இந்த அவமானத்துக்கு பிறகு கலாநிதி மாறன் வெகுண்டு எழுந்து,போராடி பல சாட்டிலைடுகளை மாற்றி வாடகைக்கு எடுத்து இன்றைய சாம்ராஜ்யத்தை அமைத்த விஷயம் வரலாறு..]]]
இது ஜி டிவி இல்லை கேபிளு..
ஸ்டார் டிவி அலுவலகத்தில்தான் காத்திருந்த கொடுமை கலாநிதிக்கு..!
ஜி டிவியுடனான மோதலுக்கு முதல் காரணம் பாரதி சேனலை கவிதாலயா மற்றும் மின்பிம்பங்களுடன் இணைத்து துவக்க அனைத்து முயற்சிகளையும் செய்ததுதான்..!
mee 10th.
/இது ஜி டிவி இல்லை கேபிளு..
ஸ்டார் டிவி அலுவலகத்தில்தான் காத்திருந்த கொடுமை கலாநிதிக்கு..!//
இல்லை உ.த.. இந்த பிரச்சனை நடக்கும் போது ஸ்டார் எல்லாம் ஆட்டத்திலேயே இல்லை..
இவ்வளவு தகவலா? ஆச்சிரியம் கேபிளாரே
அண்ணே, ஜீ டிவியோட அடுத்த பாய்ச்சல் தீபாவளிக்கு இருக்கும்ன்னு நினைக்கிறேன்....
"நான் கடவுள்" அவங்ககிட்டதான இருக்கு..! நாடோடிகளும்.
துறை சார்ந்த பதிவாண்ணே..!
:-)
Waw! ஏகப்பட்ட தகவல்கள், ஜூனியர் விகடனில் கட்டுரை படிப்பதுபோல் இருந்தது.
நாங்களும் யோசித்தோம் எப்படி 2 சேனல்லயும் படம் போகுதுனு. நல்லா விளங்க வைத்துட்டீர்கள்.
பொதுவாக தான் எழுதியுள்ளீர்கள், ஆனால் நண்பர்கள் சன் டிவி மட்டும் அடாவடி செய்வதுபோல் புரிந்துகொண்டுள்ளனர்.
அடாவடி செய்வது நம்ம சேனல்களின் இயல்பு. ஏன்? ஏரியாயுக்கு எரியா கேபிள் தகராறுகள் நாடு முழுக்கவே உண்டு.
அட...
இதுக்கு பின்னாடி இம்புட்டு மேட்டர் கீதா "தல"....
இன்னாவோ போங்க... நீங்க எல்லாம் சொல்லலேன்னா, எங்களுக்கு கடைசி வரை இதெல்லாம் தெரியறதுக்கு வாய்ப்பே இல்லை...
இதெல்லாம் நுண்ணரசியல்... சாமானியனுக்கு எங்க வரும், தெரியும்?? கரீட்டாபா?
அன்றைய காலகட்டங்களில் தான் பட்ட அவமானத்திற்காக கூனிக்குறுகாமல், கலத்தில் நின்று ஜெயித்த கலாநிதிமாறனை பாராட்டவேண்டும்.
மற்றபடி அடுத்த சேனல்களை வளரவிடாமல் தடுக்கும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகம் கண்டிக்கத்தக்கது.
அண்ணே,
பாலிடிக்ஸ்லயும் சும்மா புகுந்து விளையாடுறீங்க? கலக்குங்க... எதிலும் நீங்கள் தான் நம்பர் 1.
பிரபாகர்.
இவ்வளவு மேட்டர் இருக்கா
எப்படியோ உலக வரலாற்றில் தமிழ் மெகா ஹிட் படம் முதன்முறையாக ஒரே நேரத்தில் வந்தது . அதுவே பெரும் சாதனை தான்
சார், ஏன் ஜீ தமிழ் டாடா ஸ்கையில் வருவதில்லை ஏதாச்சும் அங்கேயும் உள் குத்து இருக்கா??
eஎல்லா பாலிடிக்ஸும் தெரிஞ்சிருக்கே! அப்படியே நீங்க ஒரு சேனல் ஆரம்பிக்கிறது! ச.ம.க.வுக்கு இன்னும் டிவி இல்லையாம்!
’கேபிள்’னாவே பிராபளம் தான் போல ;)
சூப்பர் கேபிள் பட்டைய கிளப்புர பதிவு .
ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
காலம் தீர்மானிக்கும் யார் சரி, யார் தப்பு செய்கின்றார்கள் என்று.
1990இன் ஆரம்பத்தில், இந்தியாவில் சேட்டிலைட் சேனனல்கள் 'அனுமதிக்கப்பட்ட' காலத்தில் டி.டி.ஹெச் டெக்னாலஜியும் இருந்தது. ஆனால் சப்பை காரணங்கள் சொல்லி அன்று டி.டி.ஹெசை அனுமதிக்க மறுத்தது அரசு. அன்று ஒழுங்காக, சுதந்திர சந்தை பொருளாதார விதிகளின் படி, டி.டிஹெசை அனுமதிதிருந்தால்,
பிற நாடுகள் போல இந்த எம்.எஸ்.ஓ மற்றும் கேபிள்கள் வந்திருக்காது. ('கேபிள்' சங்கர் என்ற புணைப்பெயர் கூட இருந்திருக்காதோ ? !!). மாஃபியா போன்ற அமைப்பு, கேபிள் தொலைகாட்சி துறையில் உருவாகியிருக்காது. இதுக்காகத்தான் எம்மை போன்றவர்கள் சந்தை பொருளாதாம் வேண்டும் என்று அடித்துக்கொள்கிறோம்.
சன் டிவி சகோதர்கள் செய்வது கடும் அயோக்கியத்தனம். தெய்வம் நின்று கொல்லும். (அழகிரி ரூபத்தில் ஏற்கெனவே ஒரு முறை ஆப்பு விழுந்தது. இன்னும் வரும்..)
ராஜ் டி.வியை, தயானிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சாராக இருந்த போது ஒழித்துக்கட்ட கடுமையாக முயன்றது இங்கு மறந்துவிட்டது போல. அமைச்சருக்கு இத்தனை அதிகாரம் இல்லாமல், ஏன் அந்த அமைச்சரகமே இல்லாமல், லைசென்ஸ் என்ற கெட்ட வார்த்தையே இல்லாமல் இருப்பதுதான் சரி.
ஸ்பெட்ரம் அலைவரிசை க்லோபல ஒபென் டென்டர் முறையில் விட்டால் போதும். ஆனால்...
மற்றபடி ஆரம்பத்தில் இருந்தே அரசு தாராளமாக்கலை அமலாக்கியிருந்தால், இத்தனை அயோக்கியத்தனங்கள் உருவாகியிருக்காது. அய்ரோப்பா, அமெரிக்கா போல சேட்டிலைட் டி.வி ஒழுங்காக, ஊழல் இல்லாத துறையாக உருவெடுத்திருக்கும். ஹூம்..
குத்து இதுதானா...
ஏதோ கிரைம் கதை படிப்பது போல் உள்ளது....
ஆஹா...இதுக்குள்ள ஹயாஸ் தியரி எல்லாம் இருக்குதா?? கேபிளை கன கச்சிதமாக கொழுவி விட்டீங்க சங்கர்.
ஹூம்..
அண்ணே,
இந்த மாதிரி துப்பு துலக்கற வேலையும் செய்யாறீங்களா???
அடேயப்பா!
கலக்குறீங்க கேபிள்ஜி.
நீங்க சினிமா விமர்சனம் எழுதுறதை விட இன்வஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் பக்கம் திரும்பலாம் போலிருக்கே!! அசத்தலான கட்டுரை
கேபிள்...சசிகுமாருக்கு ரெண்டு கோடி சன் தரப்பில் கொடுத்ததாக நான் கேள்விபட்டேன்...சன் டி நண்பர் சொன்னார்.ஜீ டிவி 75 லட்சத்திற்கு வாங்கினார்களாம்
மறைமுகமா நிறைய வாட்டி நடந்து இருக்கு கேபிள்ஜி ........ நேர்ரடி தகுதல் இப்போ தான் நடந்து இருக்கு
பெரிய இடத்து சமாச்சாரம் சாமியோவ்:)
கட்டுரை படு சுவாரஸ்யம்... ஆனால், எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.
பின்னணிதான்... பிண்ணனி இல்லை!
>>>>>தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, என்று எல்லா பிராந்திய மொழிகளிலும்<<<<<
கேபிள் சங்கர் சார் , நீங்களே இப்படி சொல்லலாமா ? தமிழ், தெலுங்கு, கன்னடம் என்பவை முழுமையான மொழிகள். போஜ்புரி என்பது பீகார் , உ. பி. மற்றும் பிஜி , சூரினாம் போன்ற நாடுகளில் இந்தியர்கள் உபயோகிக்கும் வட்டாரப் பேச்சு மொழி (Spoken Dialect of Hindi) . சொந்தமான லிபி இல்லாமல் கய்தி, தேவநாகரி (மற்றும் முன்னாளில் பாரசீகம்) போன்ற லிபிகளை உபயோகிக்கும் மொழி . இந்திய அரசு இதனை முழுமையான மொழியாக அங்கீகரிக்கலாமா கூடாதா என்று ஆராய்ந்து வருகிறது. நம் மொழிகள் அப்படியா?
நன்றி!
சினிமா விரும்பி
சினிமா விரும்பி, Antigua விட்டுட்டீங்க :)-
கேபிள் அண்ணேன் :- பின்னணிக்கு ரெண்டு சுழி "ன" வருமா இல்லாட்டி மூணு சுழியா :)-
zee tamil சேனல்ல தான் யாருக்கு யாரோ ஸ்டெப் நீ. அப்ப என்ன பண்ண முடிஞ்சது சன் டிவியால ?
Ivlo matter ah....???
rendu channelyum podum podhe doubt irundhudu....
sun tv oda monopoly ku seekram mudivu kattuna nalla irukkum....
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்லா எழுதியிருக்கீங்க கேபிள்.
அதே போல மார்டின் லாட்டரி ஒரு நம்பர் லாட்டரி விளம்பரத்துக்கு ஜீ டிவி கேட்ட தொகையில் அதிர்ச்சி அடைஞ்சுதான் S S டி வி தொடங்குனாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உண்மையா?
இந்த அரசியல் புரியாம அன்னைக்கு காலைல இப்டி எல்லாம் 2 சேனல் ஒரு புதுப் படத்தை ஒரே நாள்ல போட முடியாதுன்னு ஒருத்தி கிட்ட பந்தயம் கட்டி அசிங்கபட வேண்டியதா போச்சி.. :( ”மான”(அன்னைக்கே போய்டிச்சி மொத்தமும்) நஷ்ட வழக்கு போடலாம்னு இருக்கேன். :))
எங்கயும் கிடைக்காத சூப்பர் பதிவு...
சன் டிவி அடாவடி என்று ஏன் சொல்லணும் ?? வடக்குல ஜி டிவி ஆதிக்கம் இருக்குனா இங்க சன் டிவி. போட்டி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது அதை எல்லாம் ஆராய்ந்து கொண்டு இருந்தால் நமது மண்டை தான் காஞ்சி போகும். இவங்க சண்டை எப்படி போன நமக்கு என்ன ? லீவ் நாள்ல புது படம் எந்த டிவில போட்டாலும் நாங்க பார்த்துட்டு இருப்போம்..
- மிஸ்டர் பொதுஜனம்
கண்கள் பனித்து இதயம் கனிந்தபின்னும்
வெள்ளி தோறும் கலைஞருக்கும் கே டிவிக்கும் ஏன் போட்டி நடக்கிறது என்பதையும் தெளிவு படுத்துமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
ம.சங்கர் நெல்லை
THERE IS A CRIME BEHIND EVERY FORTUNE.
MARIO PUZO..AUTHOR OF 'GOD FATHER'
இதுல இவ்ளோ விசயம் இருக்குதுங்களா..??
@தண்டோரா
என்னது உள்குத்து அரசியல் வரமாட்டேங்குதா..? :)
@பட்டர்ப்ளை சூர்யா
நன்றி தலைவரே..
@வரதராஜுலு
நன்றி
@வரதராஜுலு
பிஸினெஸ்னா இதெல்லாம் சகஜம் தானே
@நைனா
நன்றி
@காவேரி கணேஷ்
இன்னும் இருக்கு தலைவரே.. இது சும்மா ட்ரைலர் தான்
@ராஜு
ஆமாம் இன்னும் சில நல்ல படங்களை அவங்க வாங்கியிருக்கிறதா தெரியுது.
@ராஜா
நன்றி ராஜா
@யோ
மிக்க் நன்றி
@அசோக்
ஆமாம் அசோக். இந்த மாதிரியான விஷயங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது என்றாலும், தமிழகத்தில் அதுவும் சன் டிவி செய்யும் விஷயஙக்ள் கொஞ்சம் அதிகமே
@கோபி
மிக்க நன்றி கோபி
@பாலாஜி
ஆமாம் நிச்சயமாக பாலாஜி.
@பிரபாகர்
ஏதோ நமக்கு தெரிஞ்சது..
@அருண்குமார்
ஆமாம் தலைவரே.. டாடாவுக்கும், டிஷ்டிவிக்கும் ஒரு பூசல் ஓடிக் கொண்டிருக்கிறது.
2பப்பு
அது ஒண்ணுதான் பாக்கி
@மின்னுது மின்னல்
அப்படியா..?
@சிவகுமார்
மிக்க நன்றி
@இராகவன் நைஜீரியா
அது சரி.. வண்டியில ஏறுர வரைக்கும் மத்த வண்டியெல்லாம் இருக்கணுமில்லேண்ணே..:(
/1990இன் ஆரம்பத்தில், இந்தியாவில் சேட்டிலைட் சேனனல்கள் 'அனுமதிக்கப்பட்ட' காலத்தில் டி.டி.ஹெச் டெக்னாலஜியும் இருந்தது. ஆனால் சப்பை காரணங்கள் சொல்லி அன்று டி.டி.ஹெசை அனுமதிக்க மறுத்தது அரசு. அன்று ஒழுங்காக, சுதந்திர சந்தை பொருளாதார விதிகளின் படி, டி.டிஹெசை அனுமதிதிருந்தால்,
பிற நாடுகள் போல இந்த எம்.எஸ்.ஓ மற்றும் கேபிள்கள் வந்திருக்காது. ('கேபிள்' சங்கர் என்ற புணைப்பெயர் கூட இருந்திருக்காதோ ? !!). மாஃபியா போன்ற அமைப்பு, கேபிள் தொலைகாட்சி துறையில் உருவாகியிருக்காது. இதுக்காகத்தான் எம்மை போன்றவர்கள் சந்தை பொருளாதாம் வேண்டும் என்று அடித்துக்கொள்கிறோம்.
சன் டிவி சகோதர்கள் செய்வது கடும் அயோக்கியத்தனம். தெய்வம் நின்று கொல்லும். (அழகிரி ரூபத்தில் ஏற்கெனவே ஒரு முறை ஆப்பு விழுந்தது. இன்னும் வரும்..)
ராஜ் டி.வியை, தயானிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சாராக இருந்த போது ஒழித்துக்கட்ட கடுமையாக முயன்றது இங்கு மறந்துவிட்டது போல. அமைச்சருக்கு இத்தனை அதிகாரம் இல்லாமல், ஏன் அந்த அமைச்சரகமே இல்லாமல், லைசென்ஸ் என்ற கெட்ட வார்த்தையே இல்லாமல் இருப்பதுதான் சரி.
ஸ்பெட்ரம் அலைவரிசை க்லோபல ஒபென் டென்டர் முறையில் விட்டால் போதும். ஆனால்...
மற்றபடி ஆரம்பத்தில் இருந்தே அரசு தாராளமாக்கலை அமலாக்கியிருந்தால், இத்தனை அயோக்கியத்தனங்கள் உருவாகியிருக்காது. அய்ரோப்பா, அமெரிக்கா போல சேட்டிலைட் டி.வி ஒழுங்காக, ஊழல் இல்லாத துறையாக உருவெடுத்திருக்கும். ஹூம்..
//
முதல்ல சந்தோஷமா இருக்கு.. நீஙக் என்க்கு வந்து பின்னூட்டம் போட்டது.. நீங்க சொன்ன டிடிஎச் விஷய்ம் அந்த் காலத்திலே இருந்தாலும்.. நம்ம ஊர்ல க்யூ பேண்ட் அலாகேஷன் காரணமாய் அக்செப்ட் செய்யல.. ஆனா அதுக்கு முன்னாடியே கேபிள் டிவி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.. ஏன் இன்றளவில் டிடிஎச் பெனிட்ரேஷன் இருக்கும் அமெரிக்காவில் கூட கேபிள் டிவி தான் அதிகமா கோலோச்சிட்டு இருக்கு.. உங்களுக்கு ஒரு நன்றி சொல்லணும்.. ஒரு தொடர் பதிவு எழுத ஐடியா கொடுத்ததுக்கு.
நன்றி
@சூரியன்
ஆமா
@ஜெட்லி
அவ்வளவு இன்ட்ரஸ்டாகவா இருக்கு
@ஜனா
கயாஸ்தியரியெல்லாம் மிஞ்சிரும்
2சிவா
நன்றி
@தராசு
ஏதோ நமக்கு தெரிஞ்சது
@எவனோ ஒருவன்
நன்றி
@ராஜா
அதையும் ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.
@தண்டோரா
இது வேறயா..?
@டம்பிமேவி
இதைவிட நேரட்டியா எல்லாம் தாக்கியிருக்காங்க..
@குசும்பன்
இதுவே பெரிய இடமா
@முருகேஷ்பாபு
சாரி தலைவரே.. சரி பண்ணிட்டேன். அவசர அவச்ரமா போஸ்ட் பண்ணிட்டேன்
@சினிமா விரும்பி
தலைவரே நான் பிராந்திய மொழிகள் என்று சொன்னது மாநில மொழிகள் அர்த்ததில்
@
@மணிகண்டன்
சரி பண்ணிட்டேண்ணே..
அதில ஜீதமிழை யாரும் போட்டி போட முடியாது.
@கனகு
அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாது அதுக்கு பின்னால நிறைய கதை இருக்கும்
@தமிழ்குறிஞ்சி
மிக்க நன்றி
@வடகரைவேலன்
நன்றி தலைவரே.. அது ஒரு பெரிய கதை.. பேசாம சாடிலைட் டீவி வளர்ந்த கதைன்னு ஒரு பதிவு எழுதலாம்னு பாக்கிறேன்.
@சஞ்செய்காந்தி
சரிவிடுங்க போனது போயிடிச்சி.. இதுல கோர்ட் செலவு வேறயா..?:(
@ரோமிபாய்
அதுசரி
@சங்கர்
அதற்கு பின்னாலும் ஒரு பெரிய கதையுள்ளது..
@ஷண்முகப்பிரியன்
சூப்பர் சார்.
@பட்டிக்காட்டான்
இன்னும் நிறைய இருக்குங்கோ..
//தமிழகத்தில் அதுவும் சன் டிவி செய்யும் விஷயஙக்ள் கொஞ்சம் அதிகமே//
கொஞ்சம் இப்படி யோசிச்சு பாருங்க தமிழகத்தில் கடந்த இரண்டு தடவையும் தேர்தல்ல ‘ஜெ’ விண் பண்னியிருந்தா ஜெயா டிவி அராஜகம் ஏப்படியிருந்துயிருக்கும் அவர்களின் காமடி ஏப்படியிருந்துயிருக்கும்? கொஞ்சம் பொறுமையா உக்காந்து ஜெயா நியூஸ் ஒரு அரை மணி நேரம் பாருங்க யாரு அராஜக பேர்வழின்னு தெரியும்.
சூப்பர் கேபிள்!!!
சேட்டிலைட் டிவி வளர்ந்த கதைனு ஆரம்பிச்சு எல்லா உள்குத்து வெளிகுத்துகளை எழுதுங்க . கண்டிப்பாக அதுவும் உங்களுடைய "சினிமா வியாபாரம்" மாதிரி ஹிட் அகும்.
கேபிள்ஜி,
1990இல் இந்திய அரசின் இன்ஸாட் வகை செயற்கைகோல்களில் தான் நீங்க சொல்ற பற்றாகுறை எல்லாம். அன்று பிற நாடுகளின் செயற்க்கை கோள்கள் மூலம் இந்திய ஸாடிலைட் டி.வி நிறுவனங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கபடவில்லை. பாதுகாப்பு என்று சப்பை காரணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கேபிள் டிவி இங்கு போல இல்லை.
ஒவ்வொறு லோக்கல் ஏரியாவிலும் அல்லது தெருவிலும் ஒரு டிஸ் அல்லது அதற்க்கு இணையான ஒன்றும், அதுலிருந்து கேபிள்கள் வீடுகளுக்கு என்று நினைக்கிறேன்.
இங்கு போல மாஃபியா போன்ற எம்.எஸ்.ஒ மற்றும் அரசியல் தலையிடுகள் மற்றும் ஊழல்கள் இல்லை. அங்கு போல இங்கும் நேர்மையாக அமைப்பு உருவாகியிருக்கும்...
விட்டிருந்தால். ஆனால்..
தொலைதொடர்பு அமைச்சரகம் தான் அனைத்து தொலைகாட்சி மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கான அலைவரிசையை ஒதுக்கும் பணியை அல்லது அதிகாரத்தை வைத்துள்ளது. அதில் ஏகபட்ட ஊழல். நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான்.
பிறநாடுகள் போல, வெளிப்படையான் ஏல முறை மட்டும் ஒரு பொது அமைப்பின் மூலம் நடந்தால் போதும். அமைச்சரகமே தேவை இல்லை. தயாநிதி மாறன், ராஜ் டி.வி அய் முடக்க செய்த கொடுமைகள், ஏஸியானெட் நிறுவனத்தில் புதிய சேனலை தடுக்க செய்த அயோக்கியத்தனங்கள் என்ற பட்டியல்.. மேலும் சன் நிறுவனத்தில் கூட்டாளியான ஒருவர் இத்தகைய முக்கிய பொறுப்பில் அமர்வது கான்ஃப்லிக்ட் ஆஃப் இன்டெரெஸ்ட் என்ற அறமீறலில் வரும். யார் கண்டுக்கிறா.
ஹாத்தவே நிறுவனத்தில் கேபிள்களை மூன்றாம் தடவையாக சென்னை முழுவதும், குண்டர்களை விட்டு (போலிஸ் துணையுடன்) அறுத்துவிட்டு, அந்நிறவனத்தை தமிழகத்தை விட்டே துரத்திய பெருமையும் மாறன் சகோதர்களையே சேரும்.
பார்க்கலாம். இன்னும் எத்தனை காலம் இவங்க ராஜ்ஜியம் என்று. வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்.
என்னிக்குத்தான் இவங்க அராஜகம் முடியுமோ?.....என்னோட இப்போதைய பயம் ..தீபாவளிய நெனச்சுதான் ...
வேட்டைக்காரன் ட்ரைலர் சும்மா அளரப்போகுது...ஒவ்வொரு ரெண்டு நிமிஷத்துக்கும்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
செய்திக்கு நன்றி...simulcasting என்கிற ஒப்பந்த முறைப்படி, இருவரும் ஒளிபரப்பினர். நாடோடிகள் படத்தையும் சன் டிவிக்கே கொடுத்ததாகச் செய்தி காற்றில் வந்தது...
//simulcasting என்கிற ஒப்பந்த முறைப்படி, இருவரும் ஒளிபரப்பினர்//
கார்த்திக் கிருஷ்ணா எழுதியுள்ளது போல இது ஒரு கமர்ஷியல் ஒப்பந்தம். உலகம் முழுவதும் உள்ளது. தமிழுக்கு அல்லது இந்தியாவிற்கு புதுசு. அந்த வகையில் இது ஒரு ஆரம்பம். எதிர்காலத்தில் இதன் பல கமர்ஷியல் பரிணாமங்களை நாம் பார்ப்போம்.
எந்த தமிழ்சேனலும் 24 மணிநேர ஒளிபரப்பை துவங்காத காலம். அப்போது Zee TV(தமிழ்) ஆரம்பத்தில் தினமும் மாலை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இது உங்களில் யாருக்காவது நினைவிருக்கின்றதா? அப்போது அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்கியது நான்தான்.
நீங்கள் எழுதியுள்ளவற்றில் சில வதந்திகளுடன் பல உண்மைகள் கலந்து உள்ளன.
@அசோக்
அவங்க அராஜகம் வேற விஷயம்
@சந்துரு
நிச்சயம் ஒரு தொடர் ஆரம்பிக்க ஏற்பாடு ஆகி கொண்டிருக்கிறது.
@கே.ஆர்.அதியமான்
அதியமான். நிச்சயம் ஒரு தொடர் ஆரம்பிக்கத்தான் வேண்டும் என்று தோன்றுகிறது..
@கமல்
அது விடுங்க நம்ம ஆளுங்களுக்கு பழகி போயிருச்சு..
@கார்த்திக் கிருஷ்ணா..
simulcasting பற்றி ஏற்கன்வே தெரிந்த விஷய்மதான். என்றாலும் அதன் பின்ன்ணீயில் உள்ள் தில்லாலங்கடி வேலைதான் இதன் அதிர்ச்சி.. கிருஷ்ணா.. சில நிகழ்ச்சிகளை சைமல்காஸ்டிங்கில் பே சேனலில் விளம்பரம் இல்லாமலும், ம்ற்றொரு சேனலில் விளம்பரங்களூடேயும் செய்வது உலகில் பல நாடுகளீல் அறங்கேறும் விஷய்ம் தான்..
@செல்வகுமார்
தலைவரே.. நாம் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறோம்.. எஸ்.சி.வி. அருகில் குறும்படஙக்ளுக்கான ஒரு கம்பெனியில் என்னுடய் குறுமப்டஙக்ளைபற்றி பேசினோம்.. பின்பு பல முறை பேசியிருக்கிறோம்.. என்னுடய் வெப்சை shortfilmindia.com மை பற்றி கூட பேசியிருக்கிறோம்..
அந்த நேரத்தில் தான் கலாநிதியும் போய் கேட்டிருக்கிறார். இதில் எது வதந்தி என்று சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியக இருக்கும்..
நிறைய திரைமறைவு தகவல்கள். நன்றி கேபிள்.. எப்பிடி இந்த சுப்பிரமணியபுரம் குழப்பம் நிகழ்ந்ததுனு சொன்னதற்கு.
அரசியல் நமக்கு வேணங்கோ.
@ஆதி
இன்னும் நிறைய இருக்குங்கோ..
@அன்பரசன்
ஏனூங்க..?
Interesting.....
Post a Comment