Thottal Thodarum

Sep 3, 2009

Duel –(1971)

220px-Duel_poster

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க இயக்கிய முதல் படம். மிக குறைந்த கேரக்டர்களை வைத்து எடுக்கப்பட்ட படம். நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிடும்.



0

தொழிலதிபரான டேவிட்மான் ஒரு மீட்டிங் விஷயமாய் கலிபோர்னியா பாலைவன ரோட்டில் வேறு ஒரு ஊருக்கு அவசரமாய் போய் கொண்டிருக்க,  தன் முன்னே ஓடும் ஒரு பழைய அழுக்கடைந்த டாங்கர் லாரி மிக மெதுவாக செல்ல, அதை முந்துகிறார்.  அதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை.



தன்னை முந்திய காரை, மீண்டும் முந்தி வந்து, பழையபடி மெதுவாக செகிறது அந்த டாங்கர் லாரி,  மீண்டும் மான் டாங்கரை முந்த, இம்முறை அந்த டாங்கர் மானின் காரை இடித்து அவரை கொல்ல முயற்ச்சிக்கிறது.  என்னை செய்வது என்று தெரியாமல் மிரண்டு போகிறார் மான்.  மிக வேகமாய் வண்டியை ஓட்டி போய் விடலாம் என்று மிண்டும் ஓவர் டேக் செய்து போக, எமன் வேகத்தில் டாங்கர் துரத்த, மயிரிழையில் தப்பிக்கிறார்.
Dueltruckfront

சரி போகட்டும் அவன் என்று ஒரு பாரில் நிறுத்தி இளைபாறிவிட்டு போகலாம் என்று நினைத்து, பியர் சாப்பிட்டு க்கொண்டிருந்தால் மீண்டும் அந்த டாங்கர் ரிவர்ஸ் வந்து  பாரின் வாசலில் காத்திருக்கிறது.  பயத்தின் உச்சத்தில் மான் நடுங்க, டாங்க்ர் கிளம்பி போனவுடன் மெல்ல கிளம்புகிறான். சிறிது தூரம் சென்றவுடன் ரோட்டின் ஓரத்தில் அவனுக்காக காத்திருகிறது டாங்கர். அருகேயிருந்த ஒரு டெலிபோன் பூத்திலிருந்து போலீஸுக்கு போன் செய்ய முயல, டாங்கர் கோபத்தோடு அவனை கொல்ல முயற்சிக்கிறது.  எப்படி டேவிட் மான் அந்த டாங்கரிடமிருந்து தப்பினான்?  என்பதுதான் க்ளைமாக்ஸ்.



படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. கலிபோர்னியாவின் அழகிய பாலைவன ஹைவேயை நம் க்ண்ணுக்குள் தகிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர்,  டாங்கருக்கும், காருக்கும் நடக்கும் போராட்டத்தை சீட்டு நுனிக்கு கொண்டு வரவைப்பதில் அடுத்த் முக்கியஸ்தர் எடிட்டர்.  



ஆரம்பத்தில் அருமையான ஹைவே டிரைவை உற்சாகத்தோடு ஆரம்பிக்கும்படம், அழுக்கு டாங்கரை காட்டியபின் வேறு உணர்வுக்கு மாறுகிறது.  முதல் படத்திலேயே வெறும்  இரண்டு காரக்டர்களை வைத்து, அதிலும் டாங்கர் டிரைவர் யார் என்பதை வெளிகாட்டாமலேயே உங்கள் முதுகு தண்டை சில்லிட வைத்திருப்பர் ஸ்பீல்பெர்க். ஒரு கட்டத்தில் டேவிட் மான் வண்டியோட்டி செல்லும்போது நம்மை அறியாமல் படத்தில் எங்கேயாவது டாங்கர் ஒளிந்து கொண்டிருக்குமோ என்று தேட ஆரம்பிப்பது இயக்குனரின் வெற்றியே.



கார் ஓட்ட தெரிந்தவராய் இருந்தால் படம் பார்க்கும் போது கண்டிப்பாய் உங்கள் கால்கள் தானாகவே கிளட்சுக்கும், பிரேக்குக்கும், ஆக்ஸிலேடருக்கும் அலையும்.



டிஸ்கி:

கிட்டத்தட்ட இதே கதை களனில் ஜாய் ரைட் என்றோரு படம் கொஞ்ச வருஷஙக்ளுக்கு முன் வெளியாகியது என்பது குறிபிடதக்கது.

Technorati Tags: ,



ராமி, சம்பத, துப்பாக்கி - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்.

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

40 comments:

பிரசன்னா கண்ணன் said...

நானும் பாத்துருக்கேன்.. நல்ல படம்..

யோ வொய்ஸ் (யோகா) said...

படம் பார்க்கணும், நான் ஹாட் ஸ்பொட் பார்க்கலை

butterfly Surya said...

பதிவே திரில்லிங்....

நன்றி...

யாசவி said...

already some body put the review.

also have look on REST STOP some way similar

:-)

Sornakumar said...

Thanks for the review. Now I remember the Hindi movie Road Story.

ஈரோடு கதிர் said...

//கார் ஓட்ட தெரிந்தவராய் இருந்தால் படம் பார்க்கும் போது கண்டிப்பாய் உங்கள் கால்கள் தானாகவே கிளட்சுக்கும், பிரேக்குக்கும், ஆக்ஸிலேடருக்கும் அலையும்.//

இதை படிக்கும் போதே அந்த உணர்வு சற்று வருகிறது

பரிசல்காரன் said...

நான் ரொம்ப நாள் பார்க்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கும் படம்.

இருங்க. அர்த்தம் மாறுது. ரொம்ப நாளா நான் பார்க்கணும்னு நெனைச்சிட்டிருக்கற படம்...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

ஸ்பீல்பர்க்கின் படங்களை தவராமல் பார்த்துவிடுவேன். இந்தப்படம் மட்டும் எப்படியோ மிஸ்ஸிங்... கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது.. நன்றி...

ஷண்முகப்ரியன் said...

எதற்கு இந்த மிகப் பழம்பட விமர்சனம் ஷங்கர்?

Ashok D said...

தலைவரே.. நான் பாக்கலை..DVD?

இப்ப தான் ஹொட் ஸ்பாட்ல படம் தெளிவா தெரிது. இது வரைக்கும் No.

K.S.Muthubalakrishnan said...

Thiru Sankar sir,

How you & jackie sir getting these Dvds? i want to see more films no options !! pls let me know

K.S.Muthubalakrishnan said...

Thiru Sankar sir,

How you & jackie sir getting these Dvds? i want to see more films no options !! pls let me know

இராகவன் நைஜிரியா said...

உங்க விமர்சனத்தைப் பார்த்தபின் இந்த படத்தை பார்க்கணும் என்கிற ஆர்வம் வந்துடுச்சுங்க. தேடி கண்டுபிடிக்கணும்.

Thamira said...

எத்தினி தபா சொன்னாலும் கேக்கமாட்டீங்களா? புதுப்படத்துக்கு ஓகே.. பழைய படத்துக்கும் கிளைமாக்ஸ் என்னன்னு சொல்லலைன்னா எப்பிடி? படம்பார்க்க நேரமில்லாதவங்களுக்கு (எல்லாரும் சொல்லும் எல்லா படங்களையும் எப்பிடிய்யா எல்லாராலும் பாக்க முடியும்?) கிளைமாக்ஸ் தெரிஞ்சா கொஞ்சமாவது திருப்தியா இருக்கும் இல்லையா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பார்த்ததில்லை.கூடிய சீக்கிரம் பாக்க முயற்ச்சிக்கிறேன்.டிவிடி கிடைக்குமா தெரியலயே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல படம்..

Beski said...

பகிர்வுக்கு நன்றி.

அறிவிலி said...

ஹ்ம்ம்.. ந்ல்லா இருங்க.

படத்த தேடி கண்டுபிடிச்சு க்ளைமேக்ஸ பாக்கணும்.

வந்தியத்தேவன் said...

கேபிள் அண்ணாச்சி புதிய வடிவம் கலக்கலாக இருக்கின்றது.

நாஞ்சில் நாதம் said...

:))

க.பாலாசி said...

கொஞ்சம் பழைய படமாக இருந்தாலும்...விமர்சனம் செய்த விதம் அருமை...பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது...

Mahesh said...

ஆஹா... அருமை !!

ஆளவந்தான் said...

70'ல வந்த படம்.. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ஒளிப்பதிவு.. இப்போ பாத்தாலும் அலுக்காத படம்.. அருமையான விமர்சனம்.. :)

Cable சங்கர் said...

@ப்ரசன்னா
நன்றி
@ யோ வாய்ஸ்
நான் நம்பிட்டேன்
@பட்டர்ப்ளை சூர்ய
நன்றி
@யாசவி
நிச்சயமாய் பார்க்கிறேன்

Cable சங்கர் said...

/Thanks for the review. Now I remember the Hindi movie Road Story.//

road இந்த படம் கிடையாது சொர்ணகுமார்

Cable சங்கர் said...

/நான் ரொம்ப நாள் பார்க்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கும் படம்.

இருங்க. அர்த்தம் மாறுது. ரொம்ப நாளா நான் பார்க்கணும்னு நெனைச்சிட்டிருக்கற படம்...
//

ரெண்டுதுக்கும் என்ன வித்யாசம் தலை.

Cable சங்கர் said...

/இதை படிக்கும் போதே அந்த உணர்வு சற்று வருகிற//

வந்தால் நான் எழுதியதற்கு வெற்றி.. நன்றி கதிர்

Cable சங்கர் said...

/எதற்கு இந்த மிகப் பழம்பட விமர்சனம் ஷங்கர்?
//

சமீபத்தில் நல்ல படம் பார்க்காததால் சார்.

Cable சங்கர் said...

/ஸ்பீல்பர்க்கின் படங்களை தவராமல் பார்த்துவிடுவேன். இந்தப்படம் மட்டும் எப்படியோ மிஸ்ஸிங்... கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்ற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்திவிட்டது.. நன்றி..//

நிச்சயம் மிஸ் செய்யாதீர்கள் அக்கிலீஸ்

Cable சங்கர் said...

/தலைவரே.. நான் பாக்கலை..DVD?

இப்ப தான் ஹொட் ஸ்பாட்ல படம் தெளிவா தெரிது. இது வரைக்கும் No.

1//

இருக்கு தர்றேன் அசோக்..

நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.

Cable சங்கர் said...

/Thiru Sankar sir,

How you & jackie sir getting these Dvds? i want to see more films no options !! pls let me know//

திரைப்படங்களின் மீதுள்ள காதலால் தேடி பிடிப்பதுதான் பாலகிருஷ்ணன்.. நீங்கள் சென்னையில் இருந்தால் சொல்லுங்கள்.. நேரில் சொல்கிறேன். இல்லை உங்க மொபைலை சொல்லுங்க என் மெயிலில் டீடெயில்ஸ் அனுப்பி வைக்கிறேன்.

Cable சங்கர் said...

/உங்க விமர்சனத்தைப் பார்த்தபின் இந்த படத்தை பார்க்கணும் என்கிற ஆர்வம் வந்துடுச்சுங்க. தேடி கண்டுபிடிக்கணும்.
//

டோரண்டுல லிங்க் கிடைக்கும் தலைவரே..
இல்லேன்னா விடுங்க.. அடுத்த முறை வரும் போது ஒரு காப்பி போட்டு தந்துடறேன்.

Cable சங்கர் said...

/எத்தினி தபா சொன்னாலும் கேக்கமாட்டீங்களா? புதுப்படத்துக்கு ஓகே.. பழைய படத்துக்கும் கிளைமாக்ஸ் என்னன்னு சொல்லலைன்னா எப்பிடி? படம்பார்க்க நேரமில்லாதவங்களுக்கு (எல்லாரும் சொல்லும் எல்லா படங்களையும் எப்பிடிய்யா எல்லாராலும் பாக்க முடியும்?) கிளைமாக்ஸ் தெரிஞ்சா கொஞ்சமாவது திருப்தியா இருக்கும் இல்லையா?
//

சொல்லாமினு பாத்தாக்கா.. பொறவு நீங்க படமே பாக்காம போயிட்டீங்கண்ணா.. அதுனால்தான் ஆதி.. இதை படிச்சுட்டு கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சு அந்த படத்தை பாத்தோம்னு வச்சிக்கங்க அந்த கிக்கே தனிதான்.:)

Cable சங்கர் said...

@ஸ்ரீ
டிவிடி கிடைக்கும் நிச்சயமாய் பாருங்கள்.
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.
@எவனோ ஒருவன்
மிக்க நன்றி
@பாலாஜி
பழைசானும் இன்னைக்கும் பார்க்கும் போது புதுசாவே தெரியும் பாலாஜி

Cable சங்கர் said...

/ஹ்ம்ம்.. ந்ல்லா இருங்க.

படத்த தேடி கண்டுபிடிச்சு க்ளைமேக்ஸ பாக்கணும்.
//

ஆதிக்கு சொன்னதுதான் உங்களுக்கும் தேடுங்க..தேடுங்க.. நல்லா தேடுங்க.. :0)

Cable சங்கர் said...

@வந்தியத்தேவன்
நன்றி

@நாஞ்சில் நாதம்
மிக்க நன்றி உங்கள் புன்னகைக்கு.

Cable சங்கர் said...

/70'ல வந்த படம்.. விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ஒளிப்பதிவு.. இப்போ பாத்தாலும் அலுக்காத படம்.. அருமையான விமர்சனம்.. :)
//

ஆமாம் ஆளவந்தான். மிக முக்கியம் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் தான். மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.

Cable சங்கர் said...

@மகேஷ்
மிக்க நன்றி

சங்கரராம் said...

இங்கு கிடைக்கும் dvd ல நல்ல படம் எதுன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
நம்ம பதிவர்கள்ல நல்ல படங்கள தேடமுடியறது.விமர்சனத்திற்கு நன்றி.

மங்களூர் சிவா said...

பதிவே திரில்லிங்....
கண்டிப்பா பார்க்கணும்.