தன் அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன் போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில் எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத், லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல, பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும் வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத் மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன?
பரத் பெரிய கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான். அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே. அய்யோ..
தமன்னா முடிந்தவரை கரீனா கபூரை பாலோ செய்திருக்கிறார். அப்போ இருந்த அவரின் உடல் அளவு உட்பட, பட் கரீனாவின் ஹிந்தி கேரக்டரில் அவர் ஒரு லொட, லொட, பெண் என்றளவில் தான் நம் மனதில் நிற்பார். இதில் தமன்னாவை பார்க்கும் போது லூசோ என்று கேள்வி எழுந்து, பரத் வேறு அதையே கேட்டு, உறுதிபடுத்துகிறார். அதனால் கொஞ்சம் தமன்னாவின் கேரக்டர் மேல் ஈடுபாடு குறைவது நிஜம்.
படத்தில் ஒருவர் வந்தால் மட்டும் தியேட்டரே குபீரென சிரிக்கிறது. அவர் வேறு யாருமில்லை சந்தானம் எண்ட்ரியில்தான். மனுஷன் இன்னொரு கவுண்டராகி கொண்டிருக்கிறார். படம் நெடுக அவரின் ராஜ்யம் தான். படத்தை பெரும்பாலும் கீழே விழும் போது இவர்தான் காப்பாற்றுகிறார்.
ஹிந்தியில் படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள், அதிலும் பரத்தும், தமன்னாவும் ஓட்டலில் பேசும் வசனங்கள், சின்ன சின்னதாய் இருந்தாலும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் இருக்கும், ப்ட்டுக்கோட்டை பிரபாகர், இந்த காட்சியில் நிறைய இடங்களீல் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பல இடங்களில் சவ, சவ வென்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். காரணம் மொழிமாற்றம்.
ஹிந்தியில் இப்ப்ட வெற்றிக்கு மிக உறுதுணையாய் இருந்தது பாடல்கள், ஏதோ கேட்க சுமாராய் இருக்கிற மாதிரியான பாடல்கள்தான். மெலடி கிங் வித்யாசாகர் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஏமாற்றி விட்டார்.
முத்தையாவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. வயல் வெளி, நடுவில் குடில் என்று பஞ்சாப் வயல் வெளியை மீட்டு எடுத்து வந்திருக்கிறார்கள்
ஹிந்தியில் ஷாகித்துக்கு, கரினாவின் வீட்டிற்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றத்தை அவரின் பஞ்சாபி பிண்ணனியில் இன்ரஸ்டாக சொல்லியிருப்பார்கள். இதில் அதில் மிஸ்ஸிங். திரைக்கதையில் தேனிக்கு வந்தும் எல்லோரும் ஒரு டீவி சீரியல் குடும்பம் போலவே இருப்பது ஒட்டவில்லை. கொஞ்சம் இயக்குனர் மெனக்கெட்டிருக்கலாம்.
ஹிந்தியில் இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாய் இருந்தது படத்திற்கும் அப்பாற்பட்ட, சாகித், கரீனா, காதல் முறிவு, சமயத்தில் வெளியான காதல் படம். அதுவே பெரிய ட்ராயிங் அட்டென்ஷனாய் படத்தில் அமைந்தது, அதே போல் அவர்களுக்குள் படத்தில் தெரிந்த கெமிஸ்ட்ரி. இதில் மிஸ்ஸிங்}
படத்தில் எனக்கு பிடித்த காட்சி.. தமன்னா தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரனிடம், தண்ணி காசு கொடுத்து வாங்குறதே அநியாயம் இதில அதிக விலை வேறயா.. யாரும் கேட்காததினாலேயே நீங்க செய்யறது சரிங்கிற மாதிரி ஆயிருச்சு.. நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் என்று சண்டை போடும் காட்சி, இதில் ஒரு கருத்தை மக்களுக்கு வைப்பது மட்டுமில்லாமல், இவ்வாறு சண்டை போடும் நேரத்தில் மீண்டும் தமன்னா ரயிலை மிஸ் செய்கிறார். ஐ.லைக்.. இட்
கண்டேன் காதலை – கண்டாச்சு.. காதல் எங்கே..?
டிஸ்கி:
உ.பொ.ஒ.வில் நான் ஹிந்தி படத்தை கம்பேர் செய்ய வேண்டாம் என்றிருந்தேன். ஆனால் இந்த படம் பார்க்க, பார்க்க, அந்த படம் ஞாபக்ம் வ்ந்து தொலைக்கிறது. அதுதான் உ.பொ.ஒவில் கமலின் வெற்றி.