Thottal Thodarum

Oct 21, 2009

தியேடடரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-1

kaamadhenu

திபாவளி,பொங்கல் என்ற பண்டிகை நாட்கள் வந்தால்  பண்டிகையை அடுத்து ஞாபகத்துக்கு வருவது சினிமாதான். அதிலும் முதல் நாள் முதல் காட்சி பார்பது என்றால் அதில் இருக்கும் கிக்கே தனிதான் இளைஞர்களுக்கு எந்த காலத்திலும்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தியேட்டர் ராசியாய் இருந்த காலம் இருக்கிறது. சென்னையில் சித்ரா என்று ஒரு திரையரங்கம் இருந்தது அங்கே வழக்கமாய் எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கே வெளியிட்டால் நிச்சய வெற்றி என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது.  சிவாஜி படங்கள், பிளாசாவிலோ, அல்லது கொஞ்ச காலங்களுக்கு பிறகு சாந்தியிலேயோ வெளியாகும்.

இப்படி ஒவ்வொரு தியேட்டருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மக்களிடையே அதிகம் ஆக, ஆக, தியேட்டரில் ஆட்கள் உட்கார்ந்து பார்க்கும் இருக்கைகள் அதிகமாகி கொண்டே வர ஆரம்பித்தது. மதுரை தங்கம், திருச்சி, கலையரங்கம் போன்ற அரங்கங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளாய் இன்று வரை இருக்கிறது.. மதுரை தங்கம் தெற்கு ஆசியாவில் பெரிய தியேட்டராய் இருந்தது. இப்போது பல பிரச்சனைகளால் மூடிக்கிடக்கிறது.

நடுவில் அதை ஜி.வி.பிலிம்ஸ் வாங்கிவிட்டதாக கூட சொன்னார்கள். அதை பற்றிய தகவல்கள் அவ்வளவாக அதன் பிறகு வரவில்லை.
bhuvaneswari

மதுரை தங்கத்தில் ஹவுஸ்புல் காட்சிகள் என்றாலே ஒரு காட்சிக்கு இரண்டாயிரம் டிக்கெட்டுக்களுக்கு மேல் என்று சொல்வார்கள். அந்த திரையரங்கில் பாக்யராஜ் கொடி கட்டி பறந்த காலத்தில் தூறல் நின்னு போச்சு படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது என்றால் பார்த்து கொள்ளுங்க்ள் படம் எவ்வளவு பெரிய ஹிட் என்று. அந்த படத்திற்கு பிறகு என் தங்கச்சி படிச்சவ என்கிற படத்திற்கு ஓரளவுக்கு நல்ல கும்பல் வந்ததாம்.

நாடகம், தெருகூத்திலிருந்து மெல்ல, சினிமா தன் ஆக்கிரமிப்பை ஆரம்பிக்க, மக்களுக்கு சினிமாவை தவிர வேறு பொழுது போக்கு விஷயங்கள் இல்லாததால் சினிமாவிற்கான வரவேற்ப்பு அதிகமாக, அதிகமாக், புதிதாய் நிறைய திரையரங்குகள் ஆரம்பிக்க பட்டது.

ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு விதமான ஸ்பெஷல் இருக்கும். அந்த காலங்களி பெண்கள் நிறைய பேர் சினிமா பார்க்க வந்த காலங்களில் தியேட்ட்ர்காரர்கள் பெண்களுக்கு முக்யத்துவம் கொடுத்து பெண்களுக்கான டிக்கெட்டுகள் கொடுத்துவிட்டுதான் ஆண்களுக்கு கொடுத்த காலஙக்ள் உண்டு.

தியேட்ட்ர்கள் அதிகமாகும் காலகட்டத்தில்தான் 70mm, சினிமாஸ்கோப் திரைகள், நல்ல ஒலியமைப்பு உள்ள் தியேட்டர்கள் என்று பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர ஆரம்பித்தார்கள் திரையரக்கு உரிமையாளர்கள்.

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே.

இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்?

டிஸ்கி:

இந்த தொடர் பற்றிய கருத்துகளையும், உங்களுக்கும் தெரிந்த தியேட்டர்களை பற்றிய செய்திகளையும் நீங்கள் பின்னூட்டினால் உதவியாக இருக்கும். எனக்கு சென்னை பற்றிய அறிமுகம் உளள அளவிற்கு மற்ற ஊர்களை பற்றி இல்லாததால், உங்கள் அனுபவஙக்ளை, சொல்லுங்கள்.



ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

68 comments:

Jana said...

தியேட்டர் சென்டிமென்ட்ஸ் தூக்கல் நண்பரே..

பாலா said...

ஆஹா... இது சூப்பர் கான்ஸப்ட் சங்கர். நீங்க சொன்ன பின்னாடிதான்.. பெண்களுக்கு முதல்ல டிக்கட் கொடுக்கும் மேட்டர் நினைவு வந்தது.

நம்ம ஊர்ல... ஆண்-பெண் தனி கவுண்ட்டர் இல்ல?! :) :)

மலரும் நினைவுகளை கொண்டு வரப் போகுதுன்னு நினைக்கிறேன். :)

=====

வெய்ட்டிங்..!

பாலா said...

சேலம்-நாமக்கல் ஏரியா பத்தி எழுதும் எபிசோடுக்கு.. வெய்ட்டிங்!

Beski said...

அடுத்து ஒரு அருமையான தொடர், சிறக்க வாழ்த்துக்கள்.

எங்க ஊரு கதையெல்லாம் அப்றம் சொல்றேன். :)

anujanya said...

சிவாஜி படம் என்றாலே 'சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மற்றும் தென்னகமெங்கும்' என்பது standard விளம்பரமாக தமிழ் நாளிதழ்களில் வரும்.

அலங்காரின் பூர்வாசிரமப் பெயர் Globe என்று ஞாபகம். நீங்கள் சொல்லும் 'அந்தக் காலம்' எது என்று தெரியவில்லை. நான் சிவாஜியின் பழைய படங்களைத் தேடித் தேடித் பார்த்த அரங்குகள் சைதாப்பேட்டை நூர்ஜகான், ஜெயராஜ், நுங்கம்பாக்கம் பழனியப்பா, அமிந்தகரை முரளிகிருஷ்ணா போன்ற சிங்கள் ஸ்க்ரீன் அரங்குகளே. அதே போல எம்.ஜி.ஆர். படங்களுக்கு மகாராணி ரொம்ப ஃபேமஸ்.

இப்போது Anna, Ega, Anu Ega, Midland, Leo எல்லாம் shopping complex ஆகிவிட்டனவா? சத்யம் multiplex இல் சாந்தம், சுபம் போன்ற பெயர்கள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.

என்னவோ போங்க, ஆபீஸில் வேலை பார்க்க விடமாட்டேங்கறீங்க. சீட்டு கிழித்து விடுவார்களோ என்று பயமா இருக்கு.

அனுஜன்யா

சிவகுமார் said...

Ok write , Next SPL Train Start....
Good.

பாலா said...

எனக்குத் தெரிந்த வரை (6-7 வருட பழைய கதை), நாமக்கல் நகரின் தியேட்டர்கள்....

1. சேரன் - சோழன் - பாண்டியன் - பல்லவன்

2. எம்.ஜி.எம்

3. கே.எஸ்

4. சாந்தி

5. ஜோதி

6. ரமேஷ் (இது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆய்டுச்சின்னு நினைக்கிறேன், ஒரு காலத்தில் நாமக்கல்லின் ‘பரங்கிமலை’)

7. சிவசக்தி (டெண்ட் கொட்டாய்)

8. முருகன் (டெண்ட் கொட்டாய்)

9. இன்னொரு தியேட்டர்.. எங்க ஊருக்கு போற வழியில் இருக்கும். பேர் மறந்துடுச்சி.

இதில்.. எத்தனை இருக்கு... போச்சின்னு.. ஒரு கணக்கெடுத்து சொன்னீங்கன்னா.. நல்லாயிருக்கும்.

anujanya said...

சரி, கபாலி, ராம், கமலா, ஓடியன், லிபர்டி, கிருஷ்ணவேணி, அடையார் ஈராஸ், ஸ்டார் இவைகள் எல்லாம் கூட சிங்கள் ஸ்க்ரீன் தானே? இன்னும் இருக்கா?

அனுஜன்யா

Cable சங்கர் said...

/சரி, கபாலி, ராம், கமலா, ஓடியன், லிபர்டி, கிருஷ்ணவேணி, அடையார் ஈராஸ், ஸ்டார் இவைகள் எல்லாம் கூட சிங்கள் ஸ்க்ரீன் தானே? இன்னும் இருக்கா?

அனுஜன்யா
//

கபாலி, ராம், ஓடியன், ஆகியவை இலலை..

Cable சங்கர் said...

/எனக்குத் தெரிந்த வரை (6-7 வருட பழைய கதை), நாமக்கல் நகரின் தியேட்டர்கள்....

1. சேரன் - சோழன் - பாண்டியன் - பல்லவன்

2. எம்.ஜி.எம்

3. கே.எஸ்

4. சாந்தி

5. ஜோதி

6. ரமேஷ் (இது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆய்டுச்சின்னு நினைக்கிறேன், ஒரு காலத்தில் நாமக்கல்லின் ‘பரங்கிமலை’)

7. சிவசக்தி (டெண்ட் கொட்டாய்)

8. முருகன் (டெண்ட் கொட்டாய்)

9. இன்னொரு தியேட்டர்.. எங்க ஊருக்கு போற வழியில் இருக்கும். பேர் மறந்துடுச்சி.

இதில்.. எத்தனை இருக்கு... போச்சின்னு.. ஒரு கணக்கெடுத்து சொன்னீங்கன்னா.. நல்லாயிருக்கும்.
//

அலோ..நீங்க எனக்கு சொல்லுங்கன்னா.. என்னைய கேட்டுசொல்ல சொல்றீங்களே..இது ஞாயமா..?

ஆண்மை குறையேல்.... said...

என‌க்கு தெரிந்து க‌ரூரில் ஒரே தியேட்ட‌ர்(லைட்ஹ‌வுஸ்) தான் ஊத்திட்டாங்க‌...ம‌த்த‌ எல்லாம் அப்டியேதான் இருக்கு.. நான் அங்க‌ பாத்த‌ ஒரு ப‌ட‌ம் ம‌ற‌க்க‌வே முடியாது. விஜ‌ய‌காந்த் ப‌ட‌ம். ஹீரோயின் பேரு தெரில‌. தொப்புள‌ காட்டி கிச்சு கிச்சு மூட்டுங்க‌ மாமானு சொல்லும். நாங்க‌ ஜொள்ளுவோம்...ஹிஹிஹி...ஹான‌ஸ்ட்ராஜ் நு நெனைக்கிறேன்..

கேபிள், நீங்க க‌தை எழுதி ரொம்ப‌ நாள் ஆகுது.. அதுல‌ கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌..அது தானே ந‌ம‌க்கு முக்கிய‌ம்... எவ்ளோ நாள் தான் அடுத்த‌வ‌ன் ப‌ட‌த்துக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுத‌ற‌து?
அவ்வ்வ் !!!!

Unknown said...

//இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்? //

1.டீவியின் ஆதிக்கம்
2.ஒரிஜினல் டிவிடி/சிடி (திருட்டு டிவிடி/சிடி)
3.Distance factor/cost of transport
4.பழைய தியேட்டரை புதுப்பிப்பதை விட அந்த இடத்தை விற்றால் கொள்ளை லாபம்.
5.தியேட்டர் வாரிசுகளின் மாற்றம்/சண்டை
6.நிறைய அளவில் பெண்கள் வேலைக்குப் போதல்
7.சினிமாவுக்கு மாற்றாக பல பொழுது போக்குகள்.
8.இண்டெர்னெட்
9.தலைமுறை மாற்றம்

Arun Kumar said...

திருச்சியில் முக்கியமான தியேட்டர்கள்

கலையரங்கம்
காவேரி
ரம்பா , ஊர்வசி
சோனா, மீனா
மாரிஸ் காம்பளக்ஸ் மொத்தம் ஐந்து தியேட்டர்கள்

மாரிஸ் 70mm, மாரிஸ் ராக், மாரிஸ் போர்ட், மாரிஸ் மினி, மாரிஸ் மாக்ஸி இதில் தற்போது மாரிஸ் , மாரிஸ் ராக்கை தவிர மற்ற தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன

ஸ்டார், கெயிட்டி, கோகினூர்


இதில் கலையரங்கத்தில் 100 நாளை தாண்டிய படங்கள் மிக சிலதே/ஹவுஸ் புல் ஆவதே பெரிய மேட்டர்.

ராஜாதி ராஜா, சூரியன், சந்திரமுகி அப்புறம் இன்னும் ஒரு சில படங்கள்.

நல்ல தியேட்டர்ன்னு இப்ப ஏதும் சொல்லி கொள்வது போல இல்லை..
காவேரியும் ரம்பா தியேட்டரும் தேவலாம்.

Unknown said...

அண்ணே..! தேவி காம்பிளகஸ் புச்சா ஆக்கிட்டாங்க பாத்தீங்களா!

படம் ரீலீஸ் ஆகும் போது
சாந்தி, கிரவுன்,புவனேஸ்வரி என ஜோடியாக(எங்கிருந்தோ வந்தாள்) ஒரேபடமும் தேவிபாரடைஸ்,
அகஸ்தியா உமா(சொர்க்கம்)ஒரே படமும்தான் கூர் கட்டி ரிலீஸ் ஆகும்.

ஒற்றை வாடை தியேட்டர் தெரியுமா?
பிராட்வே தியேட்டரில் ஹரிதாஸ் படம் மூணு வருடம் ஓடியது. இப்போது இரண்டுமே இல்லை.

வால்பையன் said...

எங்கள் ஊரில் 6 தியேட்டர் பூட்டி கிடக்குது!

மணிஜி said...

அருள்,குமரன்,ஜீபிடர்,திருவள்ளுவர்
,யாகப்பா,ஞானம்,ராஜா இதெல்லாம் பழசு.ராஜராஜன்,சாந்தி கமலா கொஞ்சம் நவீனம்..பிக் ஸ்கீரினின் ஒரு தியேட்டர் வந்திருக்கிறது(ராணி பேரடைஸ்)(தஞ்சை)

வினோத் கெளதம் said...

தல புதுவையில் எனக்கு தெரிந்து மூடப்பட்ட தியேட்டர்கள்

in the order

1.Jayaraman
2.kanthan
3.ajantha(A)
4.naveena
5.Venus(A)
6.anantha,bala anantha.
7.sri raman.

இதில் ஆனந்தா மாதிரி ஒரு தியேட்டர் இனி புதுவையில் வர வாய்பே இல்லை..(Excellent DTS effect,Wide screen etc.,)

ராஜன் said...

வால்பையன் said...
//எங்கள் ஊரில் 6 தியேட்டர் பூட்டி கிடக்குது!
//
ஒரேடியாக இப்படி சொல்லி வயித்திலே புளியகரைக்காதீங்க... அது எந்த எந்த தியேட்டர்ன்னு சொல்லுங்க... ஏன்னா.. நானும் உங்க ஊர்தான்... கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமேன்னு ஆசை.... அவ்ளோ தான்...

Unknown said...

following erode theatre closed.

1.RAVI
2.CENTRAL
3.NATRAJA ( ERODE XXX THEATRE)
4.ROYAL ( ITS LOCATED NEAR BUS STAND )

Mahesh said...

கோவை :

கே.ஜி (ராகம்/தானம்/பல்லவி/அனுபல்லவி) - இருக்கு
ஜி.பி - கீத்தம் / ப்ரீத்தம் - தெரியல
நாஸ் - இல்லை
கர்னாடிக் - தெரியல
அம்பிகா / அம்பாலிகா - பேர் மாத்தி இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன்
தேவி - இருக்கு

உடுமலை :

தாஜ் - ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆயிடுச்சு
லதாங்கி, அனுஷம், கல்பனா - இருக்கு
ப்ரேவோ - தெரியல
அமுதராணி - டூரிங் டாக்கிஸ் - இல்லை

வால்பையன் said...

ரவி
ராயல்
பிரபா
செண்ட்ரல்
நடராஜா
ராஜாராம்

மொத்தம் ஆறாச்சா!?
இது இல்லாம ஆனந்த்ன்னு ஒரு டெண்டு கொட்டாய் காலியாயிருச்சு!

R.Gopi said...

கேபிளாரே...

"தல" கே.ரவிஷங்கர் சொல்லிய 9 பாயிண்டுகளோடு சொல்லாமல் விட்ட மிக முக்கியமான 10வது பாயிண்ட்... கொள்ளை விலை டிக்கெட் / அதிக விலை டிக்கெட்...

R.Gopi said...

சிவாஜிக்கு சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி போல் ரஜினிக்கு

ஆல்பர்ட்
கமலா
அபிராமி
ஸ்ரீபிருந்தா
பாரத்

இந்த ஐந்து தியேட்டர்கள்...

ஜெட்லி... said...

தலைவரே பரங்கிமலை ஜோதியில் கூட குளிர்சாதன
வசதி செய்ஞ்சுட்டாங்க...(பிட் படம் ஒட்டாம இருந்தா
சரி). நான் சிறு வயதில் பெரியமெட் எம்.சி.எம் தியேட்டர்க்கு
அடிக்கடி நண்பர்களுடன் செல்வோம், அதையும் சொல்லாம கொள்ளாம முடிட்டாங்க. பைலட் தியேட்டர் டப்பிங் படத்தின்
மூலம் நல்லாவே கல்லா கட்டுகிறது.......

வூட்லண்ட்ஸ் தியேட்டர் பத்தி உங்களுக்கு தெரியாதது இல்ல..
பாவிங்க ஏ.சி போட மாட்டறாங்க....

கார்க்கிபவா said...

//சிவாஜி படம் என்றாலே 'சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மற்றும் தென்னகமெங்கும்' என்பது standard விளம்பரமாக தமிழ் நாளிதழ்களில் வரும்//

ஆவ்வ்வ்.. யூத் அங்கிள் யூத் அங்கிள்.. நல்லா இருக்கிங்களா?

// சத்யம் multiplex இல் சாந்தம், சுபம் போன்ற பெயர்கள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்//

சுபம், சீசன் ஆகிவிட்டது.. சாந்தம் இருக்கு.

கேபிள், ஆதவன் போஸ்டரில் ஒரு புது தியேட்டர் பேர் பார்த்தேன்.. ஐடிரீம்ஸ் என நினைக்கிறேன். எங்க இருக்கு?

ராஜன் said...

வால்பையன் said...
//ரவி
ராயல்
பிரபா
செண்ட்ரல்
நடராஜா
ராஜாராம்

மொத்தம் ஆறாச்சா!?
இது இல்லாம ஆனந்த்ன்னு ஒரு டெண்டு கொட்டாய் காலியாயிருச்சு!//

நன்றி "வால்மாம்ஸ்".... உங்களை எப்படி "வால்பையன்"னு மரியாதை இல்லாம சொல்றது...ஙே !!!.... அதான்...

காமிக்ஸ் காதலன் said...

கேபிளாரே,

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால போஸ்டர்களை பார்க்கவும், அவை வெளியான தியேட்டர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் இங்கே கிளிக்கவும்.

வால்பையன் said...

//நன்றி "வால்மாம்ஸ்".... உங்களை எப்படி "வால்பையன்"னு மரியாதை இல்லாம சொல்றது...ஙே !!!.... அதான்... //

வால்ன்னு அழைத்தாலே போதுமானது தல!

மரியாதை என்ற வார்த்தையே முகமூடி போலத்தானே!

Raj said...

ஹலோ....இசை என்னும் ராஜ வெள்ளம் என்னாச்சு தல!

தராசு said...

காமநாயக்கன் பாளையத்துல கஸ்தூரி தியேட்டர், ஊஞ்சவேலாம்பட்டியில பழனியப்பா, சின்னக்குருவுவலசுல மணி, தம்பி செட்டி பாளையத்துல தங்கம், கருமத்தம்பட்டியில நாகராஜா, எருமையூர்ல ஈஸ்வரி, கல்குழிபேட்டைல விஜயா தியேட்டர்.....

இப்பிடி நிறைய தியேட்டரும் காணாம போயிடுச்சு அண்ணே.

kanagu said...

nalla thodar anna.. enakku theatres pathi therinjikanum apdinu romba naal aasai.. :)

athe maathiri devi theatre romba naala irukku nu nenaikeren... atha vittuteengale..

anna Ilayaraja thodara apram continue pannave illaye :(

ரவி said...

1996 ல் ஆரம்பித்த கன்ஸூமரிஸம் இந்திய நுகர்வோரில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றம்தான் காரணம்.

டிவி ஒரு காரணம்.

திருட்டி விசிடி அப்புறம் டிவிடி ஒரு காரணம்.

பராமரிப்பில்லாத திரையரங்குகளும், அதிகரிக்கப்பட்ட கட்டணங்களும் ஒரு காரணம்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை மொக்கைப்படங்களாக வந்ததும் ஒரு காரணம் ஹி ஹி

The EMPEROR said...

http://cablesankar.blogspot.com/2009/08/240809.html

இந்த பதிவில் வரும் சாப்பாட்டு கடை சூப்பர் பிரியாணி என்று நினைகிறேன். ஏனென்றால் ஸ்டார் பிரியாணி என்ற கடை சைதாப்பேட்டை கோடம்பாக்கம் ரோடில் இல்லை.அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சொன்ன ரெடிமேட் பாக்கெட் சைட் டிஷ், சிக்கன் ப்ரை, ஈரல், மட்டன் சுக்கா, முட்டை மசாலா இதில் இருந்தது.சரிபார்த்து சொல்லவும்.ஸ்டார் பிரியாணி இருந்தால் மருபடியும் ஒரு முறை சைதாப்பேட்டை பொய் வரலாம்.

புலவன் புலிகேசி said...

தல நல்ல பதிவு தல...எப்புடி இவ்வளவு திரையரங்கங்கலப் பத்தி புடிச்சீங்களோ???

Ravikumar Tirupur said...

அருமையான தொடர், சிறக்க வாழ்த்துக்கள்! எங்கள் ஊரில் 1 தியேட்டர் பூட்டி கிடக்குது!அது புஷ்பா. மொத்த தியேட்டர் 36.

நிலாரசிகன் said...

தனலட்சுமி டாக்கீஸின் சோகத்தை இங்கே பார்க்கலாம்: :(

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2008/06/blog-post_30.html

Balamurugan said...

most of the theater owners are graduate educated and doing part time business with theaters not a full time work. most are managed by 10+2 or simple graduate relative who knows to manage people but no idea of what cinema is. so mostly they want money to come from theaters without spending much time of doing work. when someone insist a technology like DTS, AC, they are unwilling to implement. if there is no people simply they close or change the theatre to some auditorium for marriages. most theatre owners are millionares still unwilling to maintain clean toilets. no need to mention about parking and high price for tickets. combined with lack of people for second release films, TV, CD/DVD they simply prefer to close the business and do their regular activities. mostly people prefer to see movies in TV/DVD after a month even new movies are taken by TV within a month. i hope those multiplexes also survives owing to the large population (chennai-large population+money, coimbatore-students, south,maduari- cinema is the only pass time)

பித்தன் said...

தல நல்ல பதிவு தல...எப்புடி இவ்வளவு திரையரங்கங்கலப் பத்தி புடிச்சீங்களோ???

sriram said...

யூத்து,
நாகேஷ், ராஜகுமாரி - தி நகரின் முக்கிய இடத்தில் இருந்த சினிமாக்கள்.
திரையரங்கின் ஆங்கில மொழிபெயர்ப்பு Cinema, அது Theater அல்ல. துறை வல்லுனரான உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்..
அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கும்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

///திரையரங்கின் ஆங்கில மொழிபெயர்ப்பு Cinema, அது Theater அல்ல.////

இங்க பாருய்யா..! இங்கிலிபீஜு.. டீச்சரு.. இங்கயும் வந்து க்ளாஸ் எடுக்கறாரு.

அத்திரி said...

அண்ணே திருநெல்வேலியிலே பெரிய தியேட்டர் சென்ட்ரல் தியேட்டர்..சுமார் 1000பேர் ஒரு ஷோவுக்கு முன்னாடி எல்லா படமும் இங்கதான் ரிலீஸ் ஆகும் இப்ப பழைய படம்தான் ஒட்டுறாங்க............. இப்போதைக்கு பேமஸ் தியேட்டர்னா அது ராம் காம்ப்ளெக்ஸும், பாம்பே தியேட்டரும்தான்.

தென்காசில வாஹினி தியேட்டரை மூடிட்டாங்க.......

எங்க ஊர்ல டூரிங்க் தியேட்டர் இருந்த இடத்துல இப்ப புல்தான் முளைச்சிருக்கு

அம்பாசமுத்திரத்துல கிருஷ்ணா தியேட்டர்னு ஒன்னு இருந்திச்சி...அதுக்கு ரைஸ்மில்னு ஒரு பட்டபெயர் உண்டு.... ரைஸ்மில்லத்தான் வாங்கி கொஞ்சம் அப்படியே மாத்திட்டாங்க..இப்ப வேறொருவர் வாங்கி தியேட்டரை சூப்பரா அமைச்சிட்டார்.....பேரைக்கூட மாத்திட்டாங்க பாலாஜின்னு பேரு


நல்ல கொசுவத்தி

sriram said...

// ஹாலிவுட் பாலா said...
இங்க பாருய்யா..! இங்கிலிபீஜு.. டீச்சரு.. இங்கயும் வந்து க்ளாஸ் எடுக்கறாரு//

க்ளாஸ் எல்லாம் எடுக்கல பாலா, எல்லாரும் சரியா பேசணும், எழுதணும்னு ஒரு ஆசை, ஆங்கிலம் சரியா தெரியாம நெறய பேர் தாழ்வா உணர்றாங்க, அதுக்காகத்தான் கண்ல படற தவறுகளை சுட்டிக்காட்டி சரி பண்ண முயல்கிறேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

பாலா said...

//க்ளாஸ் எல்லாம் எடுக்கல பாலா, எல்லாரும் சரியா பேசணும், எழுதணும்னு ஒரு ஆசை, //

நீங்க நிறைய ஆங்கிலப் படங்களை பார்க்கனும்னு எனக்கும் ஆசை! :) :)

பாலா said...

ஆங்கிலம்.. சரியா பேசலைன்னா கூடப் பரவாயில்லை. ஆனா.. தப்பா கூட பேச மாட்டோம். :( :(

இந்தியாவில் இருக்கும் போது நான் செய்த மிகப் பெரிய தவறு. இங்க வந்த பின்னாடியும்.. ததக்கா பிதக்கான்னு பேச வேண்டியிருக்கு! :(

உங்க.. கடமை உணர்ச்சியை.. நான் பாராட்டறேன்.! :) :)

பிராட்வே பையன் said...

நல்ல தொடக்கம் சார். வடசென்னையில்
மூடப்பட்டவை: க்ரவுன்,ஸ்ரீகிருஷ்ணா, பாண்டியன்,தமிழ்நாடு,தங்கம்,பிரபாத்,
சிவசக்தி.பிரைட்டன் இன்று("i dreams").

ஹஸன் ராஜா.

Agni said...

Namakkal... Cheran.. Chozhan.. Panidyan.. Pallavan.. ippa puthusaaki paer maathittanga..

Karur la oru Kalaiarangam irukku.. athuvum periya theatre thaan.. Lighthouse illainaalum... Amutha theatre complex la PonAmutha open pannittanga... so kanakku sariya pochu..

P.Velur.. naalu theatre
Siva
Abirami
Ganesha
Murugan... ithula murugan mattum aandiaagittar..

Salem la mattum 70 theatreku mela irunthatha engappa solluvaru.. ippa paathi kooda illa...

ராஜன் said...

To ஹாலிவுட் பாலா...

நாமக்கல் நகரின் குலோத்துங்கன் காம்ப்ளக்ஸ்(சேரன் - சோழன் - பாண்டியன் - பல்லவன்).... இப்போது LMR அபிராமி A/C

Cable சங்கர் said...

@jana
அதுக்குதானே தலைவரே இந்த பதிவே..?

@ஹாலிவுட்பாலா
ரொம்ப நாளா எழுதணுமினு நினைச்சிட்டு இருந்தேன்
இங்கேயும் ஆண் பெண் கவுண்டர்கள் வழக்கொழிந்து வருகிறது.

@எவனோ ஒருவன்
நன்றி..

Cable சங்கர் said...

/சிவாஜி படம் என்றாலே 'சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மற்றும் தென்னகமெங்கும்' என்பது standard விளம்பரமாக தமிழ் நாளிதழ்களில் வரும். //

தல நீஙக் யூத்துதான்..

//அலங்காரின் பூர்வாசிரமப் பெயர் Globe என்று ஞாபகம். நீங்கள் சொல்லும் 'அந்தக் காலம்' எது என்று தெரியவில்லை. நான் சிவாஜியின் பழைய படங்களைத் தேடித் தேடித் பார்த்த அரங்குகள் சைதாப்பேட்டை நூர்ஜகான், ஜெயராஜ், நுங்கம்பாக்கம் பழனியப்பா, அமிந்தகரை முரளிகிருஷ்ணா போன்ற சிங்கள் ஸ்க்ரீன் அரங்குகளே. அதே போல எம்.ஜி.ஆர். படங்களுக்கு மகாராணி ரொம்ப ஃபேமஸ். //

திரும்பவும்..:(

//இப்போது Anna, Ega, Anu Ega, Midland, Leo எல்லாம் shopping complex ஆகிவிட்டனவா? சத்யம் multiplex இல் சாந்தம், சுபம் போன்ற பெயர்கள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன். //

மிட்லேண்ட், லியோ.. மூடியாச்சு.

என்னவோ போங்க, ஆபீஸில் வேலை பார்க்க விடமாட்டேங்கறீங்க. சீட்டு கிழித்து விடுவார்களோ என்று பயமா இருக்கு.
//

ஏதோ நம்மாள முடிஞ்சது.. ஹி..ஹி..

Cable சங்கர் said...

@சிவகுமார்
நன்றி

/சரி, கபாலி, ராம், கமலா, ஓடியன், லிபர்டி, கிருஷ்ணவேணி, அடையார் ஈராஸ், ஸ்டார் இவைகள் எல்லாம் கூட சிங்கள் ஸ்க்ரீன் தானே? இன்னும் இருக்கா?
//
கபாலி, ராம், இவைகளை தவிர ம்ற்றதெல்லாம் ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அனுஜன்யா

Cable சங்கர் said...

/கேபிள், நீங்க க‌தை எழுதி ரொம்ப‌ நாள் ஆகுது.. அதுல‌ கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌..அது தானே ந‌ம‌க்கு முக்கிய‌ம்... எவ்ளோ நாள் தான் அடுத்த‌வ‌ன் ப‌ட‌த்துக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுத‌ற‌து?
அவ்வ்வ் !!!!
//

எழுதணும்.. கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் நிதர்சனகதை எழுதினேன்.. இன்னும் ரெண்டு மூனு கதை எழுதணும் இன்னும் டைம் கிடைக்கல.. அப்புறம் போன் செய்யறேன்னு சொன்ன்னீங்க..?

Cable சங்கர் said...

/1.டீவியின் ஆதிக்கம்
2.ஒரிஜினல் டிவிடி/சிடி (திருட்டு டிவிடி/சிடி)
3.Distance factor/cost of transport
4.பழைய தியேட்டரை புதுப்பிப்பதை விட அந்த இடத்தை விற்றால் கொள்ளை லாபம்.
5.தியேட்டர் வாரிசுகளின் மாற்றம்/சண்டை
6.நிறைய அளவில் பெண்கள் வேலைக்குப் போதல்
7.சினிமாவுக்கு மாற்றாக பல பொழுது போக்குகள்.
8.இண்டெர்னெட்
9.தலைமுறை மாற்றம்
//

இன்னும் கூட நிறைய இருக்கு.

@அருண்குமார்

திருச்சியில் நிசச்யமாய் அடைக்கலராஜ் கையிலிருந்து வெளியேறி ஒரு நல்ல மல்டிப்ளெக்ஸுக்கானதேவை இருக்கிறாது அருண்

@வால்பையன்
ஆறா..?

Cable சங்கர் said...

@வினோத்கெளதம்
பாண்டியில் டிவிடி ஒழிக்காவிட்டால் நிச்சயம் மிச்சம் இருக்கிற தியேட்டர்களும் மூட வேண்டியதுதான்.

@ராஜன்.
வாலு சொல்லிட்டாரா..

@மணி

தகவலுக்கு நன்றி

@மகேஷ்

மிக்க நன்றி மகேஷ்

Cable சங்கர் said...

@கோபி

அதுவும் மிக முக்கியமான காரணம்

@ஜெட்லி
நன்றி

@கார்க்கி
ஆமாம் கார்க்கி

பழைய பிரைட்டன் என்கிற தியேட்டரை சத்யமின் பாதி அளவிற்கு அப்கிரேட் செய்து கலக்கியிருக்கிறார்கள்.

@காமிக்ஸ்காதலன்
மிக்க ந்னறி

@தராசு
ஆமாம் தலைவரே

@கனகு
மிக்க நன்றி’

@செந்தழல் ரவி

அதுவும் சரிதான்

@எம்பரர்

ஆமாம் தல.. லைட் மிஸ்டேக் ஆகிபோச்சு.. அது சூப்பர் பிரியாணிதான்..

Cable சங்கர் said...

@புலிகேசி

நன்றி

@ரவிகுமார் திருப்பூர்
நன்றி..

@நிலாரசிகன்
பார்க்கிறேன் தலைவரே

@பாலமுருகன்
நீஙக்ள் சொல்லியிருக்கும் விஷய்மும் லிஸ்டில் இருக்கிறது..

Cable சங்கர் said...

@ஸ்ரீராம்

அது சரிதன் தலைவரே.. இங்கே என்னதான் ஆங்கிலத்தில் சில விஷயங்கள் இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்களே.. தியேட்டர் என்று தான் அழைக்கிறார்கள்.. வழக்கு மொழியை சொலல் வேண்டும் என்றுதான்.. நன்றி

Cable சங்கர் said...

@அத்திரி

நன்றி தலைவரே

@ஸ்ரீராம்

எனக்கு தெரியும் பாலா. ஸ்ரீராம்.. வழக்கு மொழிக்காகத்தான்

@பிராட்வேபையன்

ஆளு ஊருல தான் இருக்கீங்களா..?

@அருள்
நன்றி தகவல்களுக்கு

@ராஜன்

பாலா டேக்த நோட்.

விஜய் said...

திருச்சியில் கூடுதலாக ஸ்டார், பேலஸ், ராமகிருஷ்ணா, அருணா, ருக்மணி, முருகன், மகாராணி. அன்று புகழோடுருந்து இன்று மறைந்தவை பரபாத், ஜுபிடர், ராஜா, சென்டரல், பிளாஸா.

ஜோ/Joe said...

கேபிள் சார்,
நடிகர் திலகத்தின் பழைய படங்களின் பேப்பர் விளம்பரங்களை காண...

http://www.nadigarthilagam.com/papercuttings/prereleaseandgeneralads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/releaseads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/runningads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/housefullshowsads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/50dayads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/75dayads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/100dayads.htm
http://www.nadigarthilagam.com/papercuttings/silverjubileeads.htm

ஜோ/Joe said...

நாகர்கோவிலில் எனக்கு தெரிந்து மூடப்பட்ட திரையரங்கங்கள் .. பயோனியர் ராஜகுமாரி ,பயோனியர் முத்து ,லட்சுமி ,சுவாமி

ஜோ/Joe said...

திருச்சி கல்லூரி நாட்களில் வாரம் ஒரு சிவாஜி படம் பார்த்த பிரபாத் இப்போது இல்லை :(

ஸ்ரீ.கிருஷ்ணா said...

திருச்சி ன்னா மாரிஸ்தான் அப்புறம் கலையரங்கம் , இப்போ மாரிஸ் பக்கம் போனாலே பாக்கவே கஷ்டமா இருக்கு , அங்க டிக்கெட் லைன் ல அடிவாங்கி படம்பார்த்தவங்க அதிகம் எல்லா ரஜினி படமும் போட்ருவாங்க . கடைசியா எஜமான் பார்த்தது ..இப்ப எல்லா டப்பிங் படம்தான்

Thamira said...

அனுஜன்யா said...
சிவாஜி படம் என்றாலே 'சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மற்றும் தென்னகமெங்கும்' என்பது standard விளம்பரமாக தமிழ் நாளிதழ்களில் வரும்.//

ஹெஹெ.. அங்கிள்.!

இப்போது Anna, Ega, Anu Ega, Midland, Leo எல்லாம் shopping complex ஆகிவிட்டனவா? சத்யம் multiplex இல் சாந்தம், சுபம் போன்ற பெயர்கள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.//

சென்னை பற்றி தெரியலைன்னா சும்மா இருக்கணும். அவுருதான் சென்னை பற்றி தெரியும்ங்கிறார்ல..

Thamira said...

அப்படியே எங்கூரு தியேட்டரைப்பற்றியும் தெரிஞ்சுக்கங்க..

காலங்காலமாய் இருப்பது ஆஸ்பெஸ்டாஸ் போட்ட, 6.30க்கு 'விநாயகனே..' என்ற பாடலுடன் இன்றும் ஆரம்பிக்கும் "சொக்கலால் டூரிங் டாக்கீஸ்".

இப்போது புதிதாய் முளைத்திருப்பது ஓலைக்கொட்டாய் "சண்முகா டூரிங்"கும், பில்டிங்காய் எழும்பியிருக்கும் "சண்முகா திரையரங்க"மும். மொத்தமாய் இப்போது மூணு.

Beski said...

ஆதி அண்ணே,
உங்க ஊரு கொஞ்சம் பெருசு போல இருக்கே...
எங்க ஊருல இன்னமும் ரெண்டுதான்.

Jawahar said...

கேபிள் டிவி வந்த புதிதில் தியேட்டர்களின் வியாபாரத்தில் ஒரு தொய்வு வந்தது. அதனால்தான் variable charging சிஸ்டம் அனுமதிக்கப் பட்டது. technology updation இல்லாத தியேட்டர்கள் செய்வதறியாது விலகிக் கொண்டன. டிடிஎஸ் சிஸ்டம் திரும்ப ஜனங்களை தியேட்டர் பக்கம் அழைத்தது. மல்டிப்லேக்ஸ்கள் சினிமா தியேட்டர்களை சினிமாவுக்கு அப்பாற்பட்ட பொழுது போக்குகளையும் அளித்து கவர்ச்சியை அதிகமாக்கியுள்ளன.

எதிர்காலத்தில் hologram தியேட்டர்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

http://kgjawarlal.wordpress.com

பழூர் கார்த்தி said...

வடபழனி கமலா தியேட்டர் இப்போது மல்ட்டிப்ளெக்ஸாகி விட்டது, 2 திரைகளுடன் நன்றாக இருக்கிறது..

ஏவிஎம் ராஜேஸ்வரி எந்த மாற்றமும் இல்லாமால் அப்படியே இருக்கிறது..

எங்கள் ராமாபுரத்தில் பாலாஜி என்று ஒரு டூரிங் டாக்கிஸ் உள்ளது.. அதிகபட்ச டிக்கெட் விலை 10ரூ.

jananiantonyraj said...

ஹாய் எங்க திருச்சில சின்மாக்கு புகல் பெற்ற ஊர். கடல் மாறி பல த்யேட்டர்கல் இருந்தது மாரிஸ்,கலையரங்கம், சிப்பி.இவை மிக மிக பெரியவை
சோனா, ரம்பா ,காவேரி ,வெங்கடேஷா மெகா ஸ்டார், பெரியவை
ஊர்வசி மீனா ஸ்டார் சிறியவை, பெரியவைல சேராத மிடில்ல வருவபவை.
சிப்டிங் த்யேட்டர்கள் அதிகம் உள்ள த்யேட்டர்கள்ளகவும் இருந்தது. ராமகிருஷ்னா,பேலஷ்,கெயிட்டி, அருணா,லிட்டில் அருணா,ருக்குமணி,பாலாஜி, ராக்சி வெலிங்க்டன்,ஜுபிட்டர்,மகாராணி,முருகன் எனவி.வி.வி.வி,மரியம் சாந்தி,தங்கராஜா,அலங்கார் ,சரோஜா,எலைட்,சங்கீத் ,சபியா,ரெங்கராஜா, தேவி இப்படி பல தொன்மை வாய்ந்த த்யேட்டர்கள் இவை ஆனால் தற்போது மொத்தமே 7 ரிலீஷ் த்யேட்டர்கள் மட்டுமே திருச்ச்சியில் உள்ளது. 6 சிப்டிங் தெயேட்டர்கள் மட்டுமே உள்ளது அதில் 2 பிலிம் ரோல் த்யேட்டர்கள் அதனால் யெப்போதுமே பழைய ரஜினி கமல் விஜய் அஜித் படங்கள் தான். இப்ப புதுசா விஜய் நு மல்டிபிளக்ஸ் வந்துள்ளது ஆனால் அந்த தியேட்டருக்கு ஒருதடவை போனவர்கள் மறுமுறை போக மாட்டார்கள். மொத்தத்தில் திருச்சியில் படம் பார்க்க யேத்த ஒரு த்யேட்டர் மட்டுமே உள்ளது அது ரம்பா மட்டுமே, இது சார்ந்த உஙகள் கருத்துகளை பகிருங்கள் நன்பர்களே