**************************************************************
அகநாழிகை
இன்னொரு சந்தோஷமான விஷயம் நம் பதிவர்கள் எல்லாம் பதிவர் திரு. பொன்.வாசுதேவன் ஆசிரியராய் பொறுப்பேற்று புதிதாய் வந்திருக்கும் அகநாழிகை என்கிற சிற்றிதழில் எழுதியிருப்பது. இலக்கிய உலக ஜாம்பவான்களான பாவண்ணன், கெளதம சித்தார்த்தன், யுவன் சந்திரசேகர், லீனா மணிமேகலை, தமிழ் நதி, அஜயன்பாலா,போன்றவர்களுடன் நம் பதிவுலக நண்பர்களான யுவகிருஷ்ணா, ஜ்யோவ்ராம் சுந்தர், மண்குதிரை, நிலா ரசிகன், சேரல், ரெஜோவாசன், நர்சிம், குடந்தைஅன்புமணி, விதூஷ், நேசமித்ரன், ரிஷான் ஷெரிப், ஆதிமூல கிருஷ்ணன், போன்றவர்களின் படைப்புகளோடு என்னுடய ஒரு பங்களிப்பும் இருக்கிறது என்பது பெருமையாய் இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு http://www.aganazhigai.com/2009/10/2009.html நிச்சயமாய் ஒரு வித்யாசமான வாசிப்பனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும் இந்த சிற்றிதழ்..
*********************************************************
லெபனானில் ஒரு சேனலில் நான்கு குழந்தைகளுக்கு தகப்பன் ஒருவன் கொடுத்த பேட்டி அவனுக்கு சவுதி அரேபியாவில் ஜெயில் தண்டனையும், சவுக்கடியையும் கொடுத்திருக்கிறது. அவரு ஒரு ஸ்திரி லோலன். இளம் பெண்களை பேசி, பேசியே மயக்கி விடுவதில் தில்லாலங்கடி, எப்படி பேசுவது, மடக்குவது, மேட்டர் முடிப்பது என்று விலாவாரியாய் டீவியில் சொல்ல, அதை பார்த்த சவுதி அரேபியா காரர்கள் கொந்தளித்து போய்.. அவனை கைது செய்து மேற் சொன்ன தண்டனை கொடுத்திருக்கிறார்கள். சில விஷயஙக்ளை பத்தி வந்தமா, பாத்தமா, பேசினமா கரெக்ட் பண்ணமான்னு இல்லாம பிரஸ்தாபிச்சிட்டுருந்தா இப்படித்தான்.
*********************************************************
சாப்பாட்டுகடை
குரோம்பேட்டையில் துணிகடை பெருசுக்கு ஒரு ஆப்பக்கடை. நளாஸ்.. ஆப்பத்தில் இவ்வளவு வெரைட்டியா என்று அதிர வைத்துவிட்டார்கள். அதிலும் மட்டன் கைமா ஆப்பம். சூப்பர்ப்.. கூட வரும் சைட்டிஷ்களும் அருமையான டேஸ்ட். ஆனால் பர்சை பதம் பார்க்க கூடிய இடம்தான். சொல்லிட்டேன்.
************************************************************
இந்த வார குறும்படம்
நிமிட நேர சபலத்தை, சில நிமிடங்களில் விளக்கும் படம். “Consequences”
************************************************************
ஏஜோக்
எமலோகத்தின் க்யூவில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள், முதலாமவன் அடுத்தவனை பார்த்து நீ எப்படி இறந்தாய் என்று கேட்க, அவன் நான் குளிரில் உறைந்து இறந்தேன். அதற்கு முதலாமவன்.. அய்ய்யோ. ரொம்ப கொடுமையா இருந்திருக்குமே.. என கூற ஆமா அதையேன் கேட்குறே.. மொதல்ல கொஞ்ச நேரத்துக்கு ஒன்னும் முடியல.. பின்னாடி உறைஞ்சி போய் எதுவும் தெரியல்.. அது சரி நி எப்படி.. நான் ஹார்ட் அட்டாக். என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்ணுறானு தெரிஞ்சு கண்டுபிடிக்க ஒளிஞ்சிருந்து வீட்டுக்கு போனேன். அவ நேக்கடா இருந்தா, கட்டிலுக்கு அடியில, அலமாரிலன்னு வீட்டுல ஒரு இடத்துல விடாம தேடினேன்.. ஓடி ஓடி தேடினதுல எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டேன். முதலாமவன் “ அடப்பாவி கொஞ்சம் பீரீஸரை திறந்து பாத்திருந்தா நம்ம ரெண்டு பேரும் செத்திருக்க மாட்டமே..:” என்றான்
***************************************************************
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
41 comments:
me the first :)
/*தமிழ் ஸ்டூடியோ காரர்கள் கொடுத்த விருதுகளில் ஒன்று நண்பர் தண்டோராவின் சியர்ஸ் குறும்படம் சிறந்த படமாய் தேர்ந்தெடுக்க பட்டதும், இன்னொன்று என்னுடய ஆக்ஸிடெண்ட் குறும்படத்திற்கு சிறந்த எடிட்டிங் பரிசு பெற்றதும் ஆகும்.*/
வாழ்த்துக்கள் அண்ணா.... :)
அதே போல் சிற்றிதழில் உங்களது எழுத்துக்கள் வெளிவந்ததற்கும் வாழ்த்துக்கள்.. :)
அந்த அரேபியா மேட்டர் சூப்பர்..
ஏ ஜோக் நல்லா இருந்துது.. நல்லா சிரிச்சேன்.. :)
கேபிள் ஜி,
அகநாழிகை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.
தமிழ் ஸ்டுடியோ.காம் நிகழ்வு முக்கியமானது. இதுபோன்ற முயற்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்.
குறும்படம் அருமை.
... பொன்.வாசுதேவன்
தல
கலக்குங்க..
ஏ ஜோக் பழசு. :)
வாழ்த்துக்கள் குரும்படத்துகும் அகநாழிகைகும்!!
Super Koothu Paratotaa.
விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் தல..
//சில விஷயஙக்ளை பத்தி வந்தமா, பாத்தமா, பேசினமா கரெக்ட் பண்ணமான்னு இல்லாம பிரஸ்தாபிச்சிட்டுருந்தா//
ரைய்டு..புரியுதுங்கண்ணா...
A-jokeக்கு எத்தனவாட்டி படிச்சுயிருந்தாலும் interesting ஹிஹிஹிஹி
அண்ணே, வலைப்பூவை ஓப்பன் செய்துவிட்டு கத்திருக்கின்றேன்... எதுவுமே வரலை.... 8 தடவை Refreshம் கொடுத்தாச்சி..... இந்த டெம்ப்ளேடில் ஏதோ தவறு இருக்கின்றது... Content பகுதி ரொம்பவும் கீழே வருகின்றது... உடனே கவனிக்கவும்....
சூப்பர்.. :))
எல்லாத்துக்கும் ஒரு வாழ்த்து, ஒரே வாழ்த்து.
அகநாழிகையின் நானும் கிறுக்கி இருக்கிறேன்.கேபிள்...
ஆபத்துக்கு ஆடு கால் பாயா கிடைக்குமா அங்க ?
குறும்பட விருதுகளுக்கு
உங்களுக்கும்
தண்டோரவுக்கும்
வாழ்த்துகள்
//இலக்கிய உலக ஜாம்பவான்களான பாவண்ணன், கெளதம சித்தார்த்தன், யுவன் சந்திரசேகர், லீனா மணிமேகலை, தமிழ் நதி, அஜயன்பாலா,போன்றவர்களுடன்//
ஏனுங்க கொலவெறி?
லேனா பற்றி வளர்மதி அடிச்சு துவம்சம் பண்ணிகிடிருக்காரு!
அந்த சோக்கு.....ரொம்ப சோக்கா இருக்கு.. : )
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தண்டோரா.. மற்றும் அனைவருக்கும்.
அகநாழிகை புத்தகம் இன்று கையில் கிடைக்கும்.எழுதவேண்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கேபிள்,
நான் கிருஷ்ண பிரபு... கேணியில சந்திச்சோமே. அகநாழிகை அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய குறும்படம் யூ-ட்யூபில் இருந்தா உரல் தாங்க. பார்க்கிறேன். நன்றி...
முதலில் உங்களுக்கும் அண்ணன் தண்டோரா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
//சில விஷயஙக்ளை பத்தி வந்தமா, பாத்தமா, பேசினமா கரெக்ட் பண்ணமான்னு இல்லாம பிரஸ்தாபிச்சிட்டுருந்தா இப்படித்தான்.//
அதானே இதமாதிரிதான் சிலபேர்....வாயக்குடுத்து வம்பிழுத்துப்பாங்க...
குறும்படம் அழகு....
ஜோக் நைஸ்.....
அகநாளிகை ஒரு நல்லமுயற்சி. அப்புறம் தமிழ் ஸ்ரூடியோ.கொம் அன்று நான், சக பதிவர்கள் தண்டோரா, வண்ணத்துப்பூச்சியார், எவனோ ஒருவன் என பலர் சென்றிருந்தோம். தங்கள் விருதையும் வாங்கி வைத்திருந்தோம்..வாழ்த்துக்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் ஹொக்ரெயில் ஊத்தித் தருகின்றேன்.. கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிறு இரவுகளில் வந்து ஒரு சியேஸ் சொல்லுங்கள்...
avarukku en valthukkal
kadasi matter nalla irukku
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
கொத்து வழக்கம் போல் கலக்கல் ஜி
அவார்டுக்கு வாழ்த்துக்கள்,சங்கர், மணி!
அகநாழிகைக்கு வாழ்த்துக்கள் வலைதள நண்பர்களுக்கும்,வாசு அண்ணாவுக்கும்!
சவுதியில்தான் நானும் இருக்கேன்.ஆனால் வால் மேல் அமர்ந்திருப்பதால் வாழ்வு போய் கொண்டு இருக்கு!!பயமுறுத்தலுக்கு நன்றி சங்கர்.
வாயூறும் சாப்பாட்டுக்கடை.
fantaastic பகிரல், குறும்படம்!
ஏ ஜோக் பழசு.ஆனால்,எப்பவும் பசுமை!
சும்மா,சுறு சுறு,நடையோட்டம் சங்கர்!
ஆவலாய் எதிர்பாத்த! கவித காணலயே..?
தலைவா... சனிப்பெயர்ச்சி எனக்கும் ஒர்க்கவுட் ஆகிடிச்சி... என்ன பிடிச்ச சனி க்ரெக்டா செப் 26 என்ன விடிட்டு விளகிடிச்சு....
குறும்படத்தோட editing பத்தி ஏற்கனவே உங்கள பாரட்டியிருக்கேன். அப்புறம் climaxல ஒரு twist. அப்போ தான் புரிஞ்சுது கேபிள் சரக்குல்ல மனிதர்ன்னு..
தண்டோரா அவர்கள், கேபிள் சங்கர் அவர்கள், அகநாழிகை அவர்கள்.. மூவருக்கும் வாழ்த்துக்கள். :D
'தமிழ் ஸ்டூடியோ காரர்கள்' பற்றி எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா...
@kanagu
நன்றி கனகு
@அகநாழிகை
ஆமாம் வாசு.என் ஆதரவு நிச்சயம் உண்டு
@யாசவி
நன்றி
@செந்தில் நாதன்
நன்றி தலைவரே
@சிவகுமார்
மிக்க ந்ன்றி
@யோ
நன்றி
@அசோக்
புரிஞ்சா சரிங்கண்ணா
@ராஜன்
நான்செக் செய்துவிட்டேன்.. இருந்தாலும் என்னவென்று பார்க்கிறேன் தலைவரே
@மங்களூர் சிவா
நன்றி
@அக்கிலீஸ்
நன்றி
@நையாண்டி நைனா
அவ்வளவு தானா..?:(
@தண்டோரா
சாரி தலைவரே உட்டு போச்சி..
@ரோமிபாய்
கேட்டு பாருங்களேன்
@கதிர்
மிக்க நன்றி தலைவரே
@வெங்கிராஜா
அப்படியா
@கபிலன்
அப்படியா மிக்க நன்றி
@முரளிகண்ணன்
மிக்க நன்றி தலைவரே
@நர்சிம்
வாழ்த்துக்கு நன்றி
நிச்சயம் பாருங்கள் எனக்கு மெயில் பண்ணுங்களேன் லிங்க் அனுப்புகிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விஷ்ணு பிரபு
@பாலாஜி
நன்றி வாழ்த்துக்கும் உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
@ஜனா
பரிசை வாங்கி வந்தமைக்கு மிக்க நன்றி
ஆமா அது என்ன ஞாயிற்றுக்கிழமை ஹொக்ரெயில்..?
@டம்பி மேவி
அப்ப எனக்கு வாழ்த்தில்லியா..?:(
@சஹானா
நன்றி
@பித்தன்
மிக்க நன்றி
@அறிவிலி
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்
2ஜெட்லி
மிக்க நன்றி
@பா.ராஜாராம்
மிக்க நன்றி ராஜாராம்
@அசோக்
மைண்டுல இருக்கு ரைட்டுல வர மாட்டேங்குது..
@அசோக்
பார்த்து புதுசா ராகு வருதாம்..?
உங்கள் கனிப்புக்கு வாழ்த்துக்கள் தலைவரே.
உஙக்ள் பாராட்டுக்கும் மிக்க நன்றி
@சாம்ராஜ்யபிரியன்
நன்றி.. மெயில் அனுப்பவும்
@சரவணக்குமார்
நன்றி தலைவரே..
அகநாழிகையில் மணிஜீ பெயரை விட்டு விட்டீர்கள்.
வழக்கப்படி கலக்கல்.
பெரிய சினிமா எடுக்க சனி பெயர்ச்சி இன்னும் நன்றாக வேலை செய்யட்டும்.
வாழ்த்துகள்.
Post a Comment