சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே.
இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்?
என்பதுகளில் திரையரங்குகளை தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்ற நிலையில் வந்த தொலைக்காட்சி பெட்டி தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே ஒரு ஆட்டு ஆட்டியது என்றால் அது மிகையில்லை. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான். கூடவே ஞாயிற்று கிழமை சினிமா வேறு மக்களை கட்டி போட ஆரம்பிக்க, டிவி மெல்ல எல்லார் வீடுகளிலும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, மெல்ல உள்ளே வந்தது விடியோ கேசட் என்னும் ஒரு மாற்று பொழுதுபோக்கு,.
சினிமாவை தியேட்டரில் மட்டுமல்லாமல், வீட்டின் தொலைக்காட்சியிலும் காணலாம் என்றிருந்த காலத்தில் நாம் விரும்பும் படங்களை விடியோகேசட்டாய் வெளிவர, மக்களுக்கு இன்னும் சந்தோசம். வீடியோ கேசட்டுகள் பிரபலமாக, பிரபலமாக, ஒவ்வொரு ஏரியாக்களீலும் வீடியோ லெண்டிங் லைப்ரரிகள் புற்றீசல் போல் உருவாக, மெல்ல பழைய படஙக்ள் மட்டுமே லைப்ரரிகளில் கிடைத்துவந்த காலங்களில் புதிய படங்கள் திருட்டு தனமாய் தியேட்டர்களிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டோ, அல்லது தியேட்ட்டர்களில் பெட்டியை கொண்டு போகும் ஆட்களூடன் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு, திருட்டு தனமாய் ஒளிப்பதிவு செய்தோ, படங்கள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே வெளிவர ஆரம்பிக்க, தியேட்டர்களில் கூட்டம் குறைய ஆரம்பித்தது.
தியேட்டர்களில் கூட்டம் குறைய குறைய என்ன செய்வது என்று புரியாமல் விழித்தனர் திரையுலகினர். விடியோ பைரசிக்காக ஒரு தனி டீமையே படப் பெட்டிகளுடன் அனுப்பி பார்த்தார்கள், படம் ரிலீஸானவுடன் ஒரு பக்கம் தயாரிப்பாளர் போலீஸ் ரைய்ட் விட, இன்னொரு பக்கம் வீடியோ ரைட்ஸ் வாங்கிய உரிமையாளர்களே, பைரஸியாய் படஙக்ளை வெளியிட ஆரம்பித்தனர். ஏனென்றால் அவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு பிறகு தான் ஒரிஜினல் கேசட்டை வெளியிட உரிமையிருக்கும் அதனால் முன்பே பைரஸி கேசட்டை விட்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர். பின்பு இதையே காரணம் சொல்லி தயாரிப்பாளர்களிடம் மூன்று வருடம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து இரண்டு வருடம், ஒரு வருடம், ஆறு மாதம் என்று ஆகி படம் ரிலீஸ் ஆன ரெண்டாவது நாள் வீடியோ கேசட் வெளியிட்டார்கள்.
அப்படி விடியோவிலும், தியேட்டரிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே ரிலீஸாகி வெற்றி பெற்ற முதல் படம் நாயகன்.
தொடரும்…
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
34 comments:
super anna
good information abt nayagan movie
கடைசி பாராவில ஹீரோவோட ஒபெனிங் சீனா... சூப்பரங்கனா...
ஆருமையான தொடர் நண்பரே. தமிழ் நாட்டில் மட்டும் இன்றி இலங்கையிலும்கூட பல திரையரங்குகள் இருந்த இடங்கள், தற்போது சொப்பிங் கொம்ளக்ஸ்களாக கட்டப்பட்டும், பல பலவேறு கட்டடங்களாக மாறியும் வருகின்றன.
இலங்கையினைப்பொறுத்தவரையில் அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத் திரையரங்கங்களே பெரும் புகழ்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் தருணங்களில் ஒரு திருவிழாவே கொண்டாடப்படும் என எனது முன்னோர்கள் கூறியுள்ளனர். எம்.ஜி.ஆர் உட்பட பலரது காலடி பட்ட அந்த யாழ்ப்பாண திரையரங்குகளே இப்பொது கொடோன்களாகவும், இராணுவ முகாம்களாகவும், சில இருந்த இடமே தெரியாது போன நிலங்களாகவும் உள்ளன.
வீடியோ கேசட் கொடுக்கப்போய்தான் உடன் பிறவா சகோதரிகளானார்கள்
அருமை,
இன்னும் நீளம் கூட்டினால் நல்லாயிருக்கும், படிக்க ஆரம்பிச்ச உடனே பொசுக்குனு முடிஞ்சு போகுது.
ரஜினி கமல் படம் ரிலிஸான காலக்கட்டத்துல எங்க அம்மா எங்கள ‘பாலும் பழமும்’ ‘பாகபிரிவினை’ ‘பாசமலர்’ படங்களுக்குதான் (காமதேனு)கூப்பிட்டு போங்க.. (டிக்கெட்2.90 பால்கனி)அதுவும் கால்வாசி படம் போன பின்னற.(தலையும் புரியாது வாலும் புரியாது). ஒன்பதாங்களாஸ் வரைக்கும் 4 கலர் படம்தான் பாத்தோம்னா பாத்துக்குங்களன். பத்தாங்கிளாஸ் மேல ரவுடி ஆகிட்டோம்ல. (கஷ்டம்.. அப்ப தான் கட்டடிக்க ஆரம்பிச்சோம்) அப்புறம் pilot, melody, udlands, jeyparadha அலங்கார் தேவி sathyamnu டெவலப் ஆகிட்டம்ல
சுமார் இருபது வருடங்களுக்கு முன் வந்த நாயகன் பற்றி புதிதாய் ஒரு தகவல்!
நன்றி நண்பரே!
//காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி //
இந்தத் தியேட்டர்ல்லாம் இன்னைக்கு இல்லாமப் போய்ட்டாலும் பஸ்ஸ்டாப்புக்கு இன்னைக்கும் இதுதாண்னே பேரு. அதை எந்தக் கொம்பன் வந்தாலும் மாத்த முடியாது.
:)
அருமையான பதிவு, புதிய பாதை படம் வரும் முன்பே கேசட் ரீலீஸ் ஆனது....
//வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான்.//
இது ஒரு காரணம், தியேட்டர் ஊழியர்களை விட்டே பிளாக் மார்கெட்டில் மொத்த டிக்கெட்டையும் விற்க ஆரம்பித்தது, பொன் முட்டை இடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதையாகிவிட்டது தியேட்டர்காரர்களுக்கு.
எந்த துறையாக இருந்தாலும் நியாயம் தவற ஆரம்பித்தால் இப்படிதான் ஆகும்.
தொடர் நன்றாக இருக்கிறது.
பழைய ஒளியும் ஒளியும் நினைவுகளை மீண்டும் புதிப்பித்ததற்கு நன்றி
நல்ல டாபிக் , வெற்றிக்களாகட்டும்
திருச்சி ன்னா மாரிஸ்தான் அப்புறம் கலையரங்கம் , இப்போ மாரிஸ் பக்கம் போனாலே பாக்கவே கஷ்டமா இருக்கு , அங்க டிக்கெட் லைன் ல அடிவாங்கி படம்பார்த்தவங்க அதிகம் எல்லா ரஜினி படமும் போட்ருவாங்க . கடைசியா எஜமான் பார்த்தது ..இப்ப எல்லா டப்பிங் படம்தான்
//அப்படி விடியோவிலும், தியேட்டரிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே ரிலீஸாகி வெற்றி பெற்ற முதல் படம் நாயகன்.
நாயகன் படம், தியேட்டர்ல ரிலீசான அன்றே வீடியோ கேசட்டும் ரிலீஸ் ஆச்சுன்றீங்களா?
அந்த கால கட்டத்துல, ஒரு படம் தியேட்டர்ல ரிலீசான நாள்ல இருந்து 90 நாட்கள் கழித்துதான் வீடியோ கேசட் ரிலீஸ் பண்ணனும்ங்குற நடைமுறை இருந்ததா ஞாபகம்..
அருமையான கட்டுரை. பகிர்ந்ததற்கு நன்றி
சின்ன வயசில விசிஆர்ல 'ராஜா கைய வச்சா....' பாட்டு பாத்த நினைவு வருது. செம பாட்டு. ஆல்டைம் பேவரைட்.
தொடர் அருமை ஜி.
அண்ணே என்னை போன்ற சினிமா ரசிகர்களுக்கு
தெரியாத விஷயம் இதெல்லாம்....
ரொம்ப நன்றி.....
/
படம் ரிலீஸானவுடன் ஒரு பக்கம் தயாரிப்பாளர் போலீஸ் ரைய்ட் விட, இன்னொரு பக்கம் வீடியோ ரைட்ஸ் வாங்கிய உரிமையாளர்களே, பைரஸியாய் படஙக்ளை வெளியிட ஆரம்பித்தனர்.
/
ஓ இவிங்கதான் திருட்டு கேசட், விசிடி , டிவிடி எல்லாம் விடறவிங்களா???
எங்கிருந்தாலும் வாழ்க!
:))))))))))))
நாயகன் படத்துக்கு இப்படியான இன்னொரு புகழும் இருக்கிறதா? விசாரித்தால் தெரியும்.. இந்தியாவில் முதல் முறையாகக்கூட இருக்கும். புதிய தகவல். ஆச்சரியம்.
சார் உங்களுக்கு கமலை ரொம்ப பிடிக்கும் அது தெரிந்த மேட்டர் தான் ஆனா நாயகன் தான் இப்படி வீடியோ காசட் போட்ட முதல் படம் என்பது தவறான தகவல்
இப்படி அதிரடியாக வீடியோ காசட் போட்ட படம் ஊமை விழிகள்.
//சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள்,//
என்று பொதுவாக சொல்லாமல் 1980 வாக்கில்\காலகட்டத்தில் 1990 வாக்கில்\காலகட்டத்தில் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
//சார் உங்களுக்கு கமலை ரொம்ப பிடிக்கும் அது தெரிந்த மேட்டர் தான் ஆனா நாயகன் தான் இப்படி வீடியோ காசட் போட்ட முதல் படம் என்பது தவறான தகவல்
இப்படி அதிரடியாக வீடியோ காசட் போட்ட படம் ஊமை விழிகள்.//
நான் ஒரு வீடியோ கடை உரிமையாளராக சுமார் 15 வருடங்கள் தொழில் செய்திருக்கிறேன் அருண்.. அது மட்டுமில்லாமல் பைரஸி சப்ளை பற்றி எனக்கு மற்ற எல்லாரையும் விட எனக்கு நிரம்ப தெரியும்.. ஏனென்றால் நான் ஒரு காலத்தில் சென்னையின் பெரிய பைரஸி சப்ளை நெட்வொர்க்கில் பெரிய ஆள்..:).. எனக்கு தெரிந்து நாயகன் தான் முதன் முதலாய் படம் ரிலீஸாகி ய உடனேயே ரிலீஸ் செய்த படம் அப்போதெல்லாம் சுமார் 275 ரூபாய் க்கு ஒரிஜினல் கேசட் வெளிவந்த காலத்தில் அதை விட அதிக விலையில் சினி இந்தியா என்ற நிறுவனம் இப்போதை மெட்டிஒலி த்யாரிப்பு நிறுவனம் தான் அதை வெளியிட்டது.. மேலும் ஏதேனும் தகவல் அறிந்தால் தவறுகளை திருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்
நான் ஒரு காலத்தில் சென்னையின் பெரிய பைரஸி சப்ளை நெட்வொர்க்கில் பெரிய ஆள்..:)../////////////////
அந்த சங்கர் நீங்களா...??
ஏனென்றால் நான் ஒரு காலத்தில் சென்னையின் பெரிய பைரஸி சப்ளை நெட்வொர்க்கில் பெரிய ஆள்..:)..///
கண்ணா எனக்கு இன்னொரு பேர் இருக்கு!:)
!@indianshare market
நன்றி
@மூவி போஸ்டர்
நன்றி
@அசோக்
ஏதோ நமக்கு தெரிந்தது..
@ஜனா
இம்மாதிரியான கொசுவர்த்திகளை கிளப்பியதுதான் இந்த தொடரின் வெற்றி என்று நினைக்கிறேன்.
@தண்டோரா
அது வேற கதை..
@தராசு..
போங்கண்ணே.. எவ்வளவு எழுதினாலும் இப்படியே சொல்றீங்க..
@வேல்ஜி
நன்றி
@எம்.எம்.அப்துல்லா
நிச்சயம் அண்ணெ.. எவன் வந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது இந்த விஷயத்திலே..
@பித்தன்
இல்லை தலைவரே.. இது தவறான தகவல்
@வரதராஜுலு
அதுவும் ஒரு காரணம்
@விசா
நன்றி
!@காவேரி கணேஷ்
உங்கள் ஆதரவுடன்
@ஸ்ரீகிருஷ்னா
கொசுவர்ர்த்தியா..?
@பிரசன்னா
அதை உடைத்தது இந்த படம் தான்.. ஆனால் பின்னாலில் மீண்டும் முருங்கை மரத்துக்கே போய்விட்டது..
@சரவணகுமார்
நன்றி
@பப்பு
அதுஒரு காலம்
@எவனோஒருவன்
நன்றி
@ஜெட்லி
நன்றி
@மங்களூர் சிவா
அது ஒரு காலம்
@ஆதிமூலகிருஷ்ணன்
ஆமாம் ஆதி
@குறும்பன்
முயற்சி செய்கிறேன் தலைவரே
@சூர்யா
ஆமாம்
@பப்பு
ஆமா..
ஊமை விழிகள் 1986 ஆகஸ்டில் ரிலீஸானது.மதுரை ராயல் வீடியோ(மு.க.அழகிரி)ஹவுஸிலிருந்து
ஒரிஜினல் ப்ரிண்ட் வாடகைக்கு வாங்கி அன்று மாலையே பார்த்தேன்.
மதுரை நடனாவில் மறு வாரம் பார்த்தேன்.
நாயகன் 1987 தீபாவளி ரீலீஸ். ஆக ”ஆபா” தான் ஃப்ர்ஸ்ட் வீடீயோ.
/ஊமை விழிகள் 1986 ஆகஸ்டில் ரிலீஸானது.மதுரை ராயல் வீடியோ(மு.க.அழகிரி)ஹவுஸிலிருந்து
ஒரிஜினல் ப்ரிண்ட் வாடகைக்கு வாங்கி அன்று மாலையே பார்த்தேன்.
மதுரை நடனாவில் மறு வாரம் பார்த்தேன்.
நாயகன் 1987 தீபாவளி ரீலீஸ். ஆக ”ஆபா” தான் ஃப்ர்ஸ்ட் வீடீயோ.
//
இதையேதான் அருண்குமாரும் சொல்கிறார். எனனுடய ஞாபக அடுக்குகளிலிருந்து தகவல் இல்லை இரண்டு பேர் சொல்லும் போது அது உண்மையான தகவலாய் இருக்கக்கூடும்.. எனவே நிச்சயமாய் திருத்தி கொள்கிறேன்.
முதல் தகவல் சொன்ன அருணுக்கும், பிராட்வே பைனுக்கும் மிக்க நன்றி..
மறுத்தலித்தலுக்கு மன்னிப்பு
//ஏனென்றால் நான் ஒரு காலத்தில் சென்னையின் பெரிய பைரஸி சப்ளை நெட்வொர்க்கில் பெரிய ஆள்..:)..//
அடடே.. உங்கள இவ்வளவு நாளா ரொம்பொ நல்லவவர்ன்னு நானும் இந்த உலகமும் நினைச்சிட்டுயிருந்தோமே... வடைபோச்சே...
//முதல் தகவல் சொன்ன அருணுக்கும், பிராட்வே பைனுக்கும் மிக்க நன்றி..
மறுத்தலித்தலுக்கு மன்னிப்பு//
ஹிஹி நீங்க ரொம்போ ரொம்போ நல்லவர்ங்கன்னா...
(கோல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்)
Post a Comment