சில பேர் தாங்கள் செய்தது தவறு என்று “போதையின்” உச்சத்தில் இருக்கும் போது, தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை திறந்திருப்பதும், அடிபட்டவர் நடந்த சம்பவத்தை எழுதிவிட்டார் என்பதும், மேலும் தான் குடித்திருந்ததை நிருபிக்க, வந்திருந்த நண்பர்கள் கூட மதுவருந்தி போதையில் இருந்ததாய் ஆளுக்கொரு ஒரு பீர் அடித்திருந்து, அதுவும் இந்த பிரச்சனையை கேள்விபட்டு டென்ஷனாகி, மூச்சா போய்விட்டு வந்தவர்களை பார்த்து போதையில் இருந்தார்கள் என்று சொன்னது எவ்வளவு மிகைபடுத்தல் என்பதை, கூட இருந்து பீரடித்து, மூச்சா போனவர்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட என் பாக்ஸ் திறந்தே இருக்கும்.
******************************************************************
செவிக்கினிமை
ரொம்ப நாளாகிவிட்டது இந்த பாட்டை கேட்டு, ரட்சகன் படத்தில் நாகார்ஜுன், சுஷ்மித சென்னை அலேக்காய் தூக்கிய படி பல மாடி கட்டிடங்களில் படியில் ஏறி போவதாய் காட்சி, “கனவா.. இல்லை காற்றா.?” என்ற ஸ்ரீனிவாஸ் உருகியிருக்கும் அந்த பாடல். சுகம். முக்கியமாய் வைரமுத்துவுன் வரிகள் அருமையோ.. அருமை.
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்,
நீரில் பொருள்கள் எடை இழக்கும்,
காதலில் கூட உடல் எடை இழக்கும்
என்று கண்டு கொண்டேனடி, நான் கண்டு கொண்டேனடி,
என்பவர், அடுத்த வரியில்
காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது. என்று முடித்திருப்பார். ஹாட்ஸ் ஆப்.
கிட்டத்தட்ட இதே ட்யூனை ஹாரிஸ் கொஞ்சம் ரிதமை மாற்றி, தாம் தூம்\என்ற படத்தைல் “ ஆழியிலே முக்குளிக்கும் அழகே” என்று போட்டிருப்பார்.
********************************************************************
இந்த வார குறும்படம்
மிரட்டலான படம. கொஞ்சம் லாஜிக் இடிச்சாலும்…
***********************************************************
சாப்பாடுக் கடை
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிர் தெருவில் சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும், சப்பாத்தி என்றால் சைதப்பேட்டையில் மிகவும் பேமஸான கடை. ஒரு காலத்தில் மிக சின்ன கடையாய் இருந்த இடம், இப்போது, சற்றே பெரிய கடையாய் ஆகியிருக்கிறது. கையேந்தி பவன் தான். ஆனால் சூடான சப்பாத்திக்கு அவர்கள் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம் .. அங்கேயே தோசை, இட்லி, சாம்பார் சாதம் கூட கிடைக்கிறது. குறைந்த விலையில்.
********************************************************************
பிக்ஸார் கம்பெனி உருவான கதை மிக அருமையாய் எழுதப்பட்ட ஒரு தொடர், Informative and Interesting. நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட இந்த தொடர் என் நண்பர் HollyWood Bala எழுதியது என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருக்கிறது. நிச்சயமாய் இது ஒரு முதுகு தொறிதல் ரெபரன்ஸ் அல்ல. படிப்பவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள தகவல் உள்ள பதிவு. புத்தகமாய் வருவதற்கு ஏற்ற பதிவுகள். எழுதிய ஹாலிவுட் பாலாவுக்கு பாராட்டுக்கள்.
********************************************************************
ஏஜோக்
ஒரு மாமிச கடைக்காரனின் முன் ஒரு பெண் கைகுழந்தையுடன் வந்து நின்று இது உனக்கு வாபிறந்தது என்று கூறி பிரசச்னை செய்ய, வேறு வழியில்லாமல் அந்த குழந்தை 16 வயது வரும் வரை, இலவசமாய் மாமிசம தருவதாய் ஒத்துக் கொண்டான். இப்படியாய வருடங்கள் போக, அந்த பையனும் தன்க்கு நாளை பதினாறு வயதாக போகிறது என்று சொல்ல அந்தா நாளுக்காகத்தான் காத்திருந்தேன். என்று சொல்லிவிட்டு.. உன் அம்மாவிடம் போய் இதுதான் நான் கொடுக்கும் கடைசி மாமிசம் என்று சொல்லிவிட்டு அவளின் முகத்தில் தெரியும் எக்ஸ்ப்ரெஷனை பார்த்து சொல்ல சொல்ல, அதை அப்படியே சொன்ன மகன், அதை கேட்ட அவள், இத்தனை வருடமாய் இலவச மளிகை, இலவசபால், இலவச வாடகை என்று இலவசமாய் தான் வாங்கி கொண்டிருந்ததாய் சொல், அவன் எக்ஸ்பிரஷனை பார்த்து சொல் என்றாள்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
41 comments:
அண்ணேன் முதல் பத்தி சுத்தமா புரியல :-(....வேற யாருக்கும் புரியுமோ என்னவோ.
அந்த பாடல் மிக அருமையா இருக்கும்.
குறும்படம் மீள் பதிவா? :-))
சப்பாத்தி பார்சேல் அனுப்புங்க....
nice anna
ஃபர்ஸ்ட் மேட்டர் புரியுனும்னா ஒரு பீர் அடிக்கணும்னு நினைக்கிறேன்.
தாங்கள் சொன்ன ரட்சகன் பாடல் உண்மையில் அருமையாக இருக்கும்.
குறும்படம் நன்றாயிருக்கிறது. பட் அவளின் உடல் ஒத்த மேனாக இருந்திருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும்.
ஏ ஜோக்...வெரி நைஸ்....
மொத்தத்தில் கொத்து நல்ல காரம்...
எனக்கும் இந்த முதல் வரி புரியலே..... "வசந்தமான-பூ" மேட்டர்ன்னு புரியுது... ஆனா நீங்க எழுதி இருக்கறது... புரியலே... சம்பந்த பட்டவர்களுக்கு புரிஞ்சா சரி...
இந்த வாரம் நல்லா கொத்திட்டீங்க..... பரோட்டாவைதான் காணோம் :-(....
அண்ணே,
அந்த முதல் மேட்டர் வேணான்ணே, விட்டுருங்க.
அப்புறம் குறும்படம்...ம்ம்ம்ம்.... நம்ப முடியல.
குறும்படம் ரொம்ப பழசுண்ணே...
முதல் பாரா... எதுக்கு மறுபடியும்?
மொத்ததுல இந்த வாரம் கொஞ்சம் சூடு ஆறின கொத்து தான்..
இந்த வீக் கால் பண்றேன் !!!
பாலிடிக்ஸ் பக்கம் போகாதன்னு அப்பா சொல்லிருக்காரு. சோக்கு பழசுண்ணே! நான் ஒரு எபுக்கே வச்சிருக்கேன். அப்பப்ப கேளுங்க அள்ளிவிடுறேன் :)
புக்க கேட்டுறாதீங்க, அது தொழில் ரகசியம்.
shankar something missing :)
முதல் பாரா சுத்தமா புரியலை. கொஞ்சம் புளி போட்டு விளக்கினா நல்லா இருக்கும். மத்தபடி கொத்து பரோட்டா நல்லா இருக்குது!!!
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ
மனது மறக்காத அருமையான பாடல் அது நண்பரே..
ஏதோ அரசியல்.
-----------------------------------
வைரமுத்துவின் வரிகள் அருமைதான்.நுரையால் செய்த சிலையா நீ...பாடும் போது பாடகர் தனித்து தெரிவதாக தோன்றுகிறது.
-----------------------------------
சாப்பாட்டு கடை தகவலுக்கு நன்றி.சென்னை நண்பர்களுக்கு சொல்லலாம்.(உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுதுன்னு நினைப்பாங்க..நாங்கல்லாம்..ன்னு சொல்லிக்லாம்)
-----------------------------------
A joke
life time free card ன்னு சொல்றாங்களே..அது மாதிரி போல.
முதல் பத்தி தேவையற்றது.
///இந்த வாரம் நல்லா கொத்திட்டீங்க..... பரோட்டாவைதான் காணோம் .///
ரிப்பிட்டு....
நான் உங்ககூட அன்னிக்கு சேர்ந்து தண்ணியடிக்காத ஒரே காரணத்தால இந்த கமெண்டை போட்டுட்டு போறேன் :)
ஹாலிவுட் பாலா - அருமையான ரைட்டர். சுவாரஸ்யமா எழுதற தொழில்முறை எழுத்தாளர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத எழுத்துத் தன்மை அவர்கிட்ட இருக்குது.
நானும் இங்க பாலாவுக்கு சொம்பு தூக்கலைன்னு இங்க சொல்லிக்கறேன் கேபிள்ஜி! :))
http://ashokpakkangal.blogspot.com/2009/10/blog-post_25.html
தலைவரே பிரபல பதிவர் பத்தி கிசுகிசு படிச்சிங்களா. அதிர்ச்சியா இருக்கே???
தல யாரு அவரு? விஷயம் உண்மையா?
//தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை//
இதுல எந்த உள்குத்துமில்லையே?
//ஆண்மை குறையேல்.... said...
குறும்படம் ரொம்ப பழசுண்ணே...
முதல் பாரா... எதுக்கு மறுபடியும்?
மொத்ததுல இந்த வாரம் கொஞ்சம் சூடு ஆறின கொத்து தான்..
இந்த வீக் கால் பண்றேன்
//
என் கருத்தும் இதுதான் தல
ஜோக் கொஞ்சம் சூடில்லாம இருக்கு ஜி
//சில பேர் தாங்கள் செய்தது தவறு என்று “போதையின்” உச்சத்தில் இருக்கும் போது, தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை திறந்திருப்பதும், அடிபட்டவர் நடந்த சம்பவத்தை எழுதிவிட்டார் என்பதும், மேலும் தான் குடித்திருந்ததை நிருபிக்க, வந்திருந்த நண்பர்கள் கூட மதுவருந்தி போதையில் இருந்ததாய் ஆளுக்கொரு ஒரு பீர் அடித்திருந்து, அதுவும் இந்த பிரச்சனையை கேள்விபட்டு டென்ஷனாகி, மூச்சா போய்விட்டு வந்தவர்களை பார்த்து போதையில் இருந்தார்கள் என்று சொன்னது எவ்வளவு மிகைபடுத்தல் என்பதை, கூட இருந்து பீரடித்து, மூச்சா போனவர்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட என் பாக்ஸ் திறந்தே இருக்கும்.
//
:-)
உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!
barottaala chappaaththi arumai...
முதல் பத்தி புரில ... ரட்சகன் பாடல என்னோட fav.... அந்த படம் என்னோட systemla ஓடல... அந்த ஜோக்கும் புரில... இப்போ நான் என்ன பண்றது.....
முதல் பத்தி புரில. குறும்படம் அதிர்ச்சி!!! இப்படியும் சிந்திக்கலாமா???
யூத்து
முதல் பாரா தேவையற்றது என்பது என் கருத்து. அவரும் அவர் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல முயல்கிறார்.. It is your / my prerogative to buy that logic or not. Lets bury that as Valarmathi said and move forward..
Grow up Sankar...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(I read what he wrote about you, I still feel your reply is unwarranted and uncalled for)
அண்ணே, படத்துல லாஜிக் பெரியவரோட தொப்பை அளவுக்கு பெருசா இடிக்குது... பீர் குடிக்காமலே வளர்ந்த தொப்பைகள் பற்றி எதுனா குறும்படம் இருக்கா?!
இரண்டாம் முறை... என்னை உங்கள் ப்ளாகில் ரெஃபர் பண்ணி பெருமை படுத்தியதற்கு மிக்க நன்றி சங்கர். மத்தபடி புத்தக மேட்டர் எல்லாம் கொஞ்சம் ஓவர்...! :) :)
உங்கள் நம்பிக்கைக்கு மீண்டும் என் நன்றிகள் சங்கர்! :) :)
=====
அந்த குறும்படம், நீங்களே.. ஏற்கனவே.. லிங்க் கொடுத்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப நாள் முன்னாடி பார்த்தது.
அடடா! இப்ப புரியுது முதல் பாரா! அட ஆண்டவா, நான் கொஞ்சம் தமிழ்மனத்துக்கு லீவ் விட்டா இத்த்னை நடந்துடுச்சா! என்ன கொடுமை இதல்லாம்!!!என்னவோ போங்க!!
குறும்படம் “அவ்வை ஷண்மு(மோ)கி”?
முதல் பாராவுல என்னதான் சொல்ல வர்றீங்க.......................
குறும்படம் ரொம்பவே மிரட்டல்தான்.
@rosevig
அனுபிட்டா போச்சு நன்றி
@இந்தியன் ஷேர் மார்கெட்
நன்றி
@பாலாஜி
அடிச்சிக்கங்க..
அதான் சொல்லிட்டேனே கொஞ்சம் லாஜிக் இடிச்சாலும் மேக்கிங் நல்லாருந்தது அதுனாலதான்
நன்றி
@rajan
இதுல கிசு கிசு வேறயா.. பரோட்டாவை காணம..? :(
@தராசு..
விட்டாச்சு
நம்பத்தான் வேணும் அது வெறும் குறும்படம்தான்
@ஆண்மைகுறையேல்
ஆமா
ஒரு கிளாரிபிகேஷனுக்குதான்
அப்படியா
நிச்சயம்
@பப்பு
உடனடியாய் மெயில் பண்ணவும் புக் வேணாம் புக்குல இருக்கிறதெல்லாம்
@யாசவி
அப்படியா..:(
@ஜனா
ஆமாம் நண்பரே
@வேல்ஜி
ஆமாம்
அது நிச்சயம் பாடகரின் திற்மைக்கு சவாலான பாட்டு தான் அதனால் அதில் அவரின் ஆளுமை தெரியத்தான் செய்யும்.
@ட்ரூத்
ஓகே
@இளவட்டம்
:(
@சென்ஷி
உங்களுக்கு உரிமை உண்டு,
நிச்சயமாய் அருமையாய் எழுதுகிறார்.
தலையெழுத்தை பாருங்க யாரையாவது பாராட்டனூமின்னா கூட வெளக்க வேண்டியிருக்கு..:(
@அசோக்
உள்குத்துன்னா..?
@நர்சிம்
:(
@கே.வி.ஆர்
பார்த்துடறேன்
:)
@பிரபா
நிச்சயம் வருகிறேன். ஏற்கனவே சில முறை உங்கள் பக்கத்துக்கு வந்திருக்கிறேன். பிரபா..
2பித்தன்
என்னாது சப்பாத்தி நல்லாருக்கா..:(
@பேநா மூடி
ஏதாவது ப்ரவுசர் ப்ராப்ளமான்னு பாருங்க..
@ரவி
எப்படியும் சிந்திக்கலாம்..:)
@ஸ்ரீராம்
ஓகே.
@செல்வேந்திரன்
ஆமாம் தலைவரே லாஜிக் இடிக்குதுதான் இருந்தாலும் அந்த ட்விஸ்ட் எனக்கு பிடிச்சிருந்தது. தேடி ப்பார்த்துடறேன்..
@ஹாலிவுட் பாலா
இரண்டாவது முறையா..? நிச்சயம் இது புத்தக மேட்டர்தான்.
ஆமாம் ஏற்கனவே ரொம்ப வருஷத்துக்கு முந்தி போட்டது..
@அபிஅப்பா
இதுக்குதான் லீவு போடப்படாதுங்கிறது..
@ரவிஷங்கர்..
ரிப்பீட்டு
@அத்திரி
நன்றி..
Cable Sankar said...
இரண்டாவது முறையா..?
////////////////
பெஞ்சமின் பட்டன் - படத்தின் பதிவை (என்னுடைய 2-ஆவது பதிவு), இங்கே அறிமுகம் படுத்தினீங்க.
இப்ப பிக்ஸார்! :)
கொஞ்சம் காரமான கொத்து ;)
முதல் பந்தி செம காரம்,,
ரட்சகன் பாடல் என் விருப்பப் பாடலும் கூட.. ஸ்ரீனியின் மாஸ்டர் பீஸ்.
தாம் தூம் பாடலும் அழகு தான்.வரிகள் இரண்டிலும் செழுமையும் அழகும்.
குறும்படம் அசத்தல்..
ஏ ஜோக் முன்பே அறிந்ததால் எதிர்பார்த்த சுவையில்லை..
முதல் பத்தி செம சவுண்டா இருக்கு, ஆனா என்னன்னு தான் புரியல.
அந்த சாப்பாட்டு கடை எப்படி போகணும்ன்னு சொல்லுங்க பாஸ்.
A ஜோக் என்பதை விட சாதரண ஜோக் என்றே சொல்லலாம்.
ஆகா மொத்தத்தில் கொத்து பரோட்டவில் குருமா கம்மியா இருக்கு .
kurumpadatha ippothu paaraka mudiyavillai anna..
but andha chappathi matter pudichu irundhudu... Saidapaetta pona chappathi parcel enaku :)
முதல் பாராவுல புள்ளியே இல்லாம எழுதுருக்கீங்களே, ஒரு பீர் அடிச்சுட்டு, ஒன்னுக்குப் போயிட்டு, போதையில எழுதிட்டீங்களோ!
இன்னுமொரு சப்பாத்திக்கடையா? போயிருவோம்.
ஏ ஜோக், இன்னைக்கு சரியில்ல.
//சாப்பாடுக் கடை
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிர் தெருவில் சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியு//
நாங்க டெல்லிகாரன் சாப்பாத்தி கடை என்று சொல்லுவோம். அதுபோல் சப்பாத்தி புனேஇல கூட கிடைப்பது இல்லை
இந்த கொத்துபரோட்டா கொஞ்சம் ஆறின கஞ்சிதான் தல. குறும்படம், ஏ ஜோக் எல்லாம் எனக்கு பழசுதான் தல..
குறும்படம் செம்ம.. என்னத்த சொல்லன்னு புரியல.!
Post a Comment