பரபரப்பான சாலையில் கார்கள் பறக்கின்றன, எல்லாரிடமும் வேகம், வேகம்.. ஒரு சிக்னலில் பச்சை விழ, முன்னிருக்கும் வண்டி மட்டும் கிளம்பாமல் இருக்க, ஆரன்களின் அணிவகுப்பு ஆரம்பிக்க, அந்த வண்டியில் டிரைவர் சீட்டில் இருந்தவனுக்கு அந்த நிமிடத்திலிருந்து, நல்ல கண் பார்வை கொண்ட் அவனுக்கு பார்வை தெரியவில்லை.. வொயிட் ப்ளைண்ட்னெஸ்..
ஒரு விதமான ப்ளேக் போல இந்த வியாதி ஒவ்வொருவருக்காய் தொற்ற, பயந்து போன அரசாங்கம், என்ன செய்வது என்று தெரியாமல் பாதிக்க பட்டவர்களையெல்லாம், ஒரு மெண்டல் அசைலமில் தனியாக்கப்பட்டு, தங்க வைக்கப்படுகின்றனர். பாதிக்க பட்ட ஆட்களில் முதல் காட்சியில் பாதிக்கப்பட்ட முதல் ஆளான பணக்கார சைனாக்காரனும், அவனுக்கு உதவி செய்ய முயன்று, அவனின் காரை திருடிக் கொண்டு போக, முயற்சி செய்தவனும், அவனது மனைவியும், ஒரு கண் டாக்டரும் ஆவார்.
கண் டாக்டரையும் அரசாங்கம் அந்த மெண்டல் அசைலமில் வைத்திருக்க முடிவு செய்யும் போது, இந்த ப்ளேக்கால் பாதிக்கபடாத அவரது மனைவியும் தன் கணவனை விட்டு பிரிய மனமில்லாமல், தனக்கும் பார்வை போய்விட்டது என்று கூறி அவனுடன் போகிறாள். பின்பு அந்த அசைலமில் நடக்கும் காட்சிகள் தான் படம்.
திடீரென கண் பார்வை போய் விட்டவர்களின் மனநிலை, கணவன் மனைவிக்குள் இருக்கும் காதல், ஆட்கள் நிறைய பேர் ஒவ்வொரு வார்டாக சேர்ந்து அதிகமாக, அவர்களுக்காக சாப்பாட்டு விஷயங்களில் நடக்கும் தில்லு முல்லுகள், ஆண் பெண்களுக்கிடையே ஏற்படும், காமம் என்று கண் இருக்கும் கதாநாயகி பார்வையில் காட்சிகள் ஓடுகிறது..
அந்த வார்டுகளில் வந்து சேரும் சில பேர் ஒரு குழு சேர்ந்து கொண்டு, வரும் சாப்பாட்டை தங்கள் வசம் வைத்து கொண்டு, சாப்பாடு வேண்டுமென்றால் தங்கள் வசமுள்ள பொருட்களை கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும் என்று மாப்பியா போல அந்த அசைலத்தை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருக்க.. ஆரம்பிக்க, கண் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் கதாநாயகி.
ஒரு கட்டத்தில் பணம் பொருள்களுக்கு பிறகு, அங்கிருக்கும் பெண்களை பண்ட மாற்றுக்காக அழைக்கிறார்கள் அவர்கள், வேறு வழியில்லாமல் கணவர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், வேறு வழியில்லாமல் வயதாகி போயிருந்தாலும் இருக்கும் ஒன்பது பெண்கள் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, சாப்பாட்டுக்காக, அவர்களுடன் படுக்கிறார்கள், அதில் ஒருவனது இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனின் அடியை தாங்காமல் இறந்து போகிறாள்.
இந்த கொடுமையை தாஙக் முடியாமல் கதாநாயகி அந்த கும்பலின் தலைவனை கொன்றுவிட்டு, அங்கிருந்து தன் கணவனுடன் இருந்தவர்களை கூட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறாள். வெளியே வந்தால் மொத்த ஊரே குருடாயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசியும், பட்டினியும்மாய் உணவு தேடி அலையும் கண்ணில்லா மனிதர்கள், வயிற்று பசியில் அலைவது போல் உடல் பசியையும் தேடும் ஆட்கள், யார் பார்கக் போகிறார்கள் என்ற அசட்டையில் நிர்வாணமாய் அலையும் மனிதர்கள், உணவுக்காக வயது வித்யாசம் இன்றி இன்னொருவனை கொன்றாவது வாழ துடிக்கும் மக்கள், என்று காட்சிகள் ஓடுகிறது.
கடைசியில் எல்லோரும் கதாநாயகியின் வீட்டிற்குள் வந்து செட்டிலாக, முதல் முதலாய் பார்வை போன சைனாகாரனுக்கு பார்வை வருவதுடன் படம் முடிகிறது.
படத்தில் ஒளிப்பதிவு அருமை.. முதல் காட்சியில் ஆதீத வேகத்துடன் காட்டப்படும் ட்ராபிக்கை காட்டும் போதும் சரி, பின்னால் ஊரே சுடுகாடாய் இருக்கும் போதும் சரி.. கண் முன்னே நிறுத்துகிறார்.
படத்தில் ப்ளேக்கின் பாதிப்பில்லாமல் இருக்கும் ஒரே ஆளாய் வரும் கண் மருத்துவரின் மனைவி ஜூலியன்மூர். அருமையாய் நடித்திருக்கிறார். கணவருக்கு கண் பார்வை போய்விட்டதென்றதும், கூட்வே அவருக்கு உதவுவதற்காக வருவதும், நடக்கும்துக்கம் தாங்க முடியாமல் ஓய்ந்து போய் அவர் குலுங்கி அழ, பக்கத்தில் படுத்திருக்கும் கணவன் அவரை சமாதான படுத்த அணைத்து கொள்ள, அணைப்பு, காமமாய் மாறி உறவு கொள்ளும் இடமாகட்டும், ஒரு கட்டத்தில் தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதை அவர்களுக்கு கண்ணில்லை என்றாலும், அவரின் கண்ணால் பார்த்தும் வெதும்புவதாகட்டும், கோபத்தின் உச்சத்தில் மாபியா கும்பலை கொன்றுவிட்டு கிளம்பி வெளீயேறுவதாகட்டும். அருமை.
படத்தில் இவருக்கு மட்டும் ஏன் கண் பார்வை போகவில்லை என்ற கேள்வி நமக்குள் எழுந்தாலும், யாராவது ஒருவரின் பாயிண்ட் ஆப் வீயூவில் கதை சொல்ல வேண்டுமெ என்ற கட்டாயம் இயக்குனருக்கு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.
அதே போல் பல இடங்களில் கொஞ்சம் மெலோ ட்ராமாவாகவும், திரைக்கதையில் தொய்வும் இருக்கிறது.
படம் பார்த்து விட்டு திடீரென பன்றி காய்ச்சல் மாதிரி இந்த மாதிரியான வியாதி வந்துவிட்டால் என்னவாகும் என்று நினைக்கும் போது பகீரென்றுதானிருக்கிறது..
Blindness - பயம்
Post a Comment
33 comments:
:(
:(
:(
:(
:(
படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று எனக்கும் சிறிது நேரம் ஒன்றும் தெரியவில்லை
அண்ணா,
இது மாதிரி படத்தையெல்லாம் எங்கே தேடி பிடிக்கிறீங்க? ரொம்ப நல்லருக்கு. ஓட்டும் போட்டுட்டேன்... 3/3
பிரபாகர்.
விமர்சனம் நல்லா இருக்கு ஜி.
ஆனா இன்னும் கொஞ்சம் ‘பயங்கரமா’ எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
ம்ஹும்ம்....எங்களுக்கு இதெல்லாம் வேணாம். சூரியன் சட்டக் கல்லூரி, ஆறுமுகம் தான் வேணும்.
வர வர உங்க கடமை உணர்ச்சி குறைஞ்சுகிட்டே வருது.
:-)
நான் ஏற்கனவே இந்த படத்தைப் பார்த்துவிட்டேன் என்றாலும் உங்கள் பதில் மறுபடியும் என் கண் முன் காட்சிகள் விரிந்தது நன்றி...
sankar,
y nowadays no review abt tamil movies?
blindness is good or bad?
எப்படித்தான் இப்படி வித்தியாசமாக யோசிக்கிறார்களோ,இந்த ஹாலிவுட்காரகள்!
செயற்கையான சோகங்களும் அதிலிருந்து மீளும் த்ரில்லும்தான் அவர்களது பெரும்பாலான படங்கள்.
BLINDNESS பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருந்தது,ஷங்கர்.
இந்தப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. :)
அருமையான விமர்சணம்.
பன்றிக்காய்ச்சல் வந்தால்
பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக்காய்ச்சலை..
நல்ல விமர்சனம் தலைவா.
கிளுகிளுப்பாவும் இருக்கு :)
எங்கிருந்து சார் இந்த மாதிரி படமெல்லாம் தேடி பிடிகிறிங்க .. சூப்பர்..
படம் பார்க்கலாம் போல இருக்கு உங்க விமர்சனத்த பார்த்துட்டு...
Nice Sankar.
muthal kaatchi epadi yosithirukiraargal paarungal.
That is screenplay. Good terror movie. paarkanum poaliruku.
Thanks for introducing such movies to us.
VISA.
அருமையான கதை ,
இதை தமிழ்ல எடுக்காம இருப்பாங்களா ...
எப்படி இப்படியெல்லாம் எசகு பிசகா யோசிக்குறாங்க? இந்த மாதிரியெல்லாம் இல்லாம இன்னும் நம்ம ஊருல, 'இன்னும் இருபத்தி நாலு மணிநேரத்துல இன்னைய தூக்கல...' படமே எடுக்குறாங்க?
படம் பார்க்கலாம் போல
இந்த படத்தோட டிரைலர் பார்க்கும் போதே படத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். பட் டீவிடீ கிடைக்க வில்லை. இந்த வாரம் எப்படியும் பார்த்தே ஆகா வேண்டும் போல இருக்கு உங்க விமர்சனம்.
Next stopping is Burma Bazaar ..
இந்தப்படத்தை பார்த்துமுடித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடவேண்டும் என்று தேடிக்கண்டுபிடித்து முழுமையாக பார்த்துவிட்டு பின்னூட்டம் எழுதுகின்றேன். பின்னிட்டீங்க நண்பா..
இந்தப்படத்தை பார்க்கவிரும்பும் நண்பர்கள்
http://www.watch-movies-links.net/movies/blindness/
என்ற இணைப்பின்ஊடாக சுலபமாக டீ.வி.டி தரத்தில் இந்தப்படத்தை முழுமையாக பார்க்கலாம்.
அப்ப வர்ற சனிக்கிழமை இந்த படம்தான் !!!நன்றி ஷங்கர் சார்.
வாவ். அமேசிங் சப்ஜெக்ட். நல்லா எழுதியிருக்கீங்க அண்ணே. இது புது படமா? நான் இது வரை கேள்வி படல. பழைய படமா இருந்தா, டவுன்லோட் பண்ணி பாக்கணும்...
I am Legend, 23 weeks later (or) 22 weeks later. இந்த படங்கள பாத்திருக்கீங்களா? கிட்டத் தட்ட எல்லாமே ஒரே கதை தான். கொஞ்சம் வேரியேஷன்ஸ் இருக்கு ஆனா...
I am Legend, 28 weeks later, Resident Evil, - இதெல்லாமே முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளே(zombie வகை).
ஆனால் Blindness படம் இவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. இதில் நடப்பவைகள் கற்பனையாக இருந்தாலும், நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதனாலேயே இந்தப் படம் மற்றவைகளை விட அதிகம் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
தங்களது விமர்சனம் நன்றாக உள்ளது.
புதிய வாசகன் நான். உங்களின் பழைய கட்டுரைகளை படித்து வருகிறேன்.
"The Seven Pounds " படத்திற்கு விமர்சனம் எழுதலாமே. இந்த படம் "Pursuit of Happyness" படத்தை எடுத்த, அதே குழுவினரால் எடுக்கப்பட்டது.
expecting more english movies...
பிரியன்
என்ன அண்ணே !
அண்ணாமலை பட விமர்சனத்தை எழுதலியா ....
ஓ ...ஓ.... சாரி சாரி ...
ஆறுமுகத்தை சொன்னேன் ...
அண்ணே வணக்கம்ணே
enoda view list la sethukaren...
seekram paakuren anne.. :)
//படம் பார்த்து விட்டு திடீரென பன்றி காய்ச்சல் மாதிரி இந்த மாதிரியான வியாதி வந்துவிட்டால் என்னவாகும் என்று நினைக்கும் போது பகீரென்றுதானிருக்கிறது..
//
:)))
I wish they don't attempt to make this movie in Tamizh and spoil the originality.
Some movies are done better in Tamizh actually, I would say I liked Tamizh version of 'Pachaikili Muthichram' rather its original version of 'Derailed' in English. Originality was not spoiled. Both were almost equally good.
Regards,
bala
I wish they don't attempt to make this movie in Tamizh and spoil the originality.
Some movies are done better in Tamizh actually, I would say I liked Tamizh version of 'Pachaikili Muthichram' rather its original version of 'Derailed' in English. Originality was not spoiled. Both were almost equally good.
Regards,
bala
சூப்பர் சங்கர்
நிச்சயம் பார்த்து விடுகிறேன்.
மயிலாடுதுறை சிவா..
/
படம் பார்த்து விட்டு திடீரென பன்றி காய்ச்சல் மாதிரி இந்த மாதிரியான வியாதி வந்துவிட்டால் என்னவாகும் என்று நினைக்கும் போது பகீரென்றுதானிருக்கிறது..
/
avvvvvvv
:((((((((
//Blindness - பயம்
அப்படி ஒன்னும் இல்லேயே அண்ணே! இப்போ தான் பாத்து முடிச்சேன்!
இது தலையோட... 400-ஆவது பதிவு...!! எல்லோரும்... வந்து... தாரை தப்பட்டையை.. தட்டுங்க....!!!
டும்.. டும்.. டும்.. டும்...!!!!
வாழ்த்துகள் சங்கர்..!! :) :) :)
Post a Comment