கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா..(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை)

கொள்ளை, கொள்ளையாம் முந்திரிக்கா.. இது எழுத்து பிழையில்லை.. வேண்டுமென்றே எழுதப்பட்டதுதான். ஆம் கொள்ளை கொள்ளையாய் கொள்ளை அடித்து கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைக்காரர்களை பற்றி எழுத இப்படித்தான் தோன்றுகிறது.
நான் சமீபத்தில் ஆந்திர மாநிலத்துக்கு போயிருந்தேன். அங்கே இருக்கும் ஓயின் ஷாப்புகளில் கூட்டமே காணவில்லை. இத்தனைக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் கடையில் கூட கும்பல் இல்லை.. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில பேர் உட்கார்ந்திருக்கிறார்கள், சரி நம்ம ஊர் போல காலையில் அடிக்க மாட்டார்கள் போலிருக்கிறதே என்று ராத்திரியில் கூட சொற்ப கூட்டமே..
அதை விடுங்கள்.. அங்கே கடைகளில் எம்.ஆர்.பி என குறிப்பிட்டு இருக்கும் விலையை விட ஐந்து ரூபாய் குறைந்த விலையில், வாட்டர் பாக்கெட்டுகள், ஒரு சைட் டிஷ் இலவசமாய் கொடுக்கிறார்கள். இத்தனைக்கும் தனியார் கடைகள் தான்.. அதெப்படி இவர்களுக்கு சாத்தியமாகிறது..? என்ற கேள்வி என்னுள் ஓடியது.. விசாரித்த போது.. அங்கே பல இடஙக்ளில் சாராயம் கிடைக்கிறது என்று சொன்னார்கள்.. என்ன தான் சாராயம் கிடைத்தாலும், கீழ் நிலை மக்கள வேண்டுமானால் அங்கே போவார்களே அன்றி நடு நிலை மக்கள் போக போவதில்லை.. இவ்வளவு விலை குறைத்து கொடுத்தே அவர்களுக்கு லாபம் இருக்கும் தொழில் அது. ஒயின் ஷாப்புகள் அங்கே அப்படியிருக்க,
இங்கே அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக்குகளில் நடக்கும் அநியாயங்களை என்னவென்று சொல்வது..? ஒரு நாளைக்கு அவர்கள் சம்பாதிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா..? சுமாராய் ஒரு கடையில் ஓரு நாளைக்கு வெயில் காலத்தில் 500 பீர் பாட்டில் விற்கும் என்று வைத்து கொள்ளுங்கள். ஒரு பாட்டிலுக்கு சுமார் மூன்றிலிருந்து நான்கு ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்கிறார்கள். 500*4=2000 ரூபாய் வெறும் பீர் பாட்டிலிலேயே வந்துவிடுகிறது.. முன்பெல்லாம் பீரை கூலாக தருகிறோம் என்று சொல்லித்தான் இந்த காசை வாஙக் ஆரம்பித்தார்கள். நம்ம ஆட்களையும் பத்தி தெரியுமே.. சரி அவன் என்ன சொல்றானோ அதை கேட்டுட்டு போய் பழகினவன் தானே.. கொடுக்க ஆரம்பிச்சிட்டான்.
அவன் கொடுக்க ஆரம்பிக்க, கடைக்காரன் மெல்லமா பிராந்தி, விஸ்கி ஜின், போன்ற வஸ்துக்களுக்கும் அதே ரெண்டு, மூணு ரூபாய் கொள்ளை.. குறைஞ்சது ஒரு நாளைக்கு 750 குவாட்டர் பாட்டில் போகும் கடையில் 750*3=2250. ஒரு நாளைக்கு டாஸ்மாக் கடையில், எந்த விதமான முதலும் போடாமல், கடை வாடகை, மின்சார கட்டணம், அவர்களுக்குகான சம்பளம், என்று எல்லா விஷயஙக்ளையும், அரசு செலவில் நடத்தும் கடையிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் கடையில் 4250 ரூபாய் வருமானம் அதே ஒரு மாதத்திற்கு 1,27,500 ரூபாய்.. வருடத்திற்கு 15,30.000 ருபாய்.
வருடத்திற்கு இவ்வளவு ரூபாய் அரசுக்கு தெரியாமல் எம்.ஆர்.பி. மேல் விற்று கொள்ளை அடிக்கும் ஒரு ஆவரேஜ் கடையின் வருமானம். இந்த வருமானத்தை கடையின் சேல்ஸ்மேன், மேனேஜர், டாஸ்மேக்கின் முக்கியஸ்தர்கள், போலீஸ் என்று ஆளாளுக்கு பிரித்து கொள்கிறார்கள்.
ஒரு டீக்கடையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கப்போய், அந்த கடையில் பத்து பைசா குறைவாய் இருக்கிற்தே என்று கேட்க தெரியும் நம்ம ஆட்களுக்கு ஏன் இவர்களிடம் கேட்க முடியவில்லை.. எவ்வாறு எம்.ஆர்.பி யை விட அதிகம் விற்கலாம் என்று.? அப்படி கேட்டால் அவர்கள் சொல்லும் காரணம்.. சார் பாட்டில் எறக்கும் போது டாமேஜ் ஆயிருது..? அதுக்கும் சேர்த்துதான் நாங்க கணக்கு காட்டணும்.. இந்த் பதில் கூட ஆள் பார்த்துதான்.. ஆனால் அரசாஙக்மோ.. அப்படி டாமேஜ் ஆன சரக்குகளுக்கு கணக்கு கொடுத்தால் போதுமானது.. அதிலும் கடைக்காரர்கள் தில்லுமுல்லு செய்கிறார்கள். என்கிற குற்றச்சாட்டு டாஸ்மாக்கில் உண்டு.
கடையில் வேலை செய்யும் ஆட்களுக்கு அரசு தொகுப்பூதியம்தான் தருகிறது என்ற சாக்கை சொன்னாலும், எந்த கடையில் வேலை செய்பவனையாவது பாருங்கள், கழுத்தில் தாதாக்களூக்கு இணையாக செயின் போட்டுக் கொண்டு, மேலும் ரெண்டு, ஆட்களை பார்ட்டைமாக வேலைக்கு வைத்து கொண்டுதானிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கம், போனஸ், சேல்ஸ்போனஸ் போன்றவை கூட உண்டு,
இவ்வளவு பணம் கிடைக்காவிட்டால் ஏன் டாஸ்மாக் அதிகாரி ஒரு 25 லட்சம் டாஸ்மாக் கடையில் லஞ்சம் கேட்டதாய் புகார் எழுந்து கைதானார்..?

நான் தவறை அவர்களிடம் மட்டும் சொல்ல மாட்டேன். எண்ட் யூஸரான நம்மை போன்ற நுகர்வோர்கள் கொடுக்க மாட்டோம் என்று சண்டை போட்டால் நிச்சயம் பிரச்சனை வெடிக்கும். பல பேர் ஒயின் ஷாப்பில் இரண்டு மூன்று ரூபாய்க்கு சண்டை போடுவதா என்று யோசித்தும், நாலு பேர் பார்த்தால் கேவலம் என்றும் நினைத்து கொண்டு, கேட்காமல் போய் விடுகிறார்கள்.. மேலும் பல பேர் இரண்டு ரூபாய் தானே.? என்று யோசித்து விட்டுவிடுகிறார்கள்.. அப்புறம் அந்நியன் கணக்குதான்..?
நான் ஒரு போதும் எக்ஸ்ட்ராவாக கொடுக்க மாட்டேன். ஒவ்வொரு முறையும் சண்டை போட்டு வாங்கிவிடுவேன். ஒரு முதலும் போடாமல் கொள்ளையடிக்கும் காசையே அதிலிருந்து ஒரு ரெண்டு ரூபாய் விட்டு கொடுக்க மனமில்லாமல் அவர்களே சண்டை போடும் போது. நாம் ஏன் நம் பணத்துக்காக சண்டை போடக்கூடாது..?
இதற்கெல்லாம் காரணம் அரசுதான். அரசு கடைகளிலேயே விலையை கட்டுபடுத்த முடியாமல் அவர்களின் கொள்ளையை நாமே அடித்து கொள்வோம் என்று சொச்சமாய் இருந்த எல்லா விலைகளையும் ரவுண்டாக மாற்றியது. சரி இப்போது என்ன செய்வார்கள் என்று கேட்பவர்களுக்கு.. சரியாய் அதே ரெண்டு மூன்று ரூபாய் எடுத்துக் கொண்டு, சரியாக சிலல்றை கொடுக்கிறார்கள், சில்லறையில்லாததால் அதிக விலைக்கு விற்றதாக சொன்ன டாஸ்மாக் ஊழியர்கள்.. அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய ஒரு எண்ணை கொடுத்திருக்கிறார்கள்.. ஆனால் அதை எடுக்கத்தான் மாட்டேன் என்கிறார்கள்..
இவர்களின் கொட்டத்தை அடக்க, அரசு முயற்சி செய்கிறதோ, அல்லது துணை போகிறதோ.. மக்கள் நாம் ஏன் எம்.ஆர்.பிக்கு மேலாய் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் போய் கேள்வி கேளுங்கள் தானாய் சரியான விலைக்கு கிடைக்கும். நான் கேட்டு கிடைக்கிறது.. அப்போது ஏன் உங்களுக்கு கிடைக்காது.. நிச்சயம் கிடைக்கும். ஏன் டாஸ்மாக்குகளை மூட போராட்டம நடத்தும் ப.ம.க ஏன் இந்த அராஜகம் தெரிந்தும் அதை பற்றி போராட்டம் நடத்தவில்லை..? உள்குத்து.. எனவே இவர்களை நம்பி பிரயோசனமில்லை.. அது உங்கள் உரிமை. கேளுங்கள் நிசச்யம் கொடுக்கப்படும்..பாரில் நடக்கும் கொள்ளைகள் அது தனி.. இதுவே ஜஸ்ட் ஒரு சாம்பிள் தான்.
டிஸ்கி:
டாஸ்மாக் பற்றி எழுதியதால் நான் ஏதோ தினக்குடிகாரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை.. இப்படி நினைத்து, நினைத்துதான் பல விஷயஙக்ளில் நாம் நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறோம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
Sankar in HOTSPOT missing.
தினக்குடிகாரன்னா உங்களுக்கு அவ்வளோ கேவலமா? யு டூ கேபிள்? டென்சன் பண்ணிட்டீங்களே...சரக்கு போட்டுட்டு சங்கத்துல சொல்றேன்...
தம்பீ மாதிரி ஆளுகளுக்கு இந்தப் பாசமும், கோபமும் டாஸ்மாக் மேட்டர்லதான் வரும் போலிருக்கு..
சரக்கடிச்சிட்டு நாலு பேர் நடுரோட்டுல சண்டை போட்டா நாம என்ன செய்வோம்? அதே மாதிரி இதையும் லூஸ்ல விட்டுட்டுப் போக வேண்டியதுதான்..!
கடையை மூடுங்கடா கபோதிகளான்னு சொல்லத் தெரியலை..
ஆனா இவர் கரெக்ட் காசுக்குத்தான் பாட்டில் வாங்குவாராம்.
போய்யா நீயும் உன் யோக்கியமும்..!
பிரபாகர்.
தினமலர் போன்ற செய்தித்தாள்கள் எப்போதும் குடிப்பவர்களை ஒரு எள்ளலோடு கேவலப்படுத்தி எழுதுகிறது. குடி அவ்வளவு கேவலமானதென்றால் ஏன் தெருவுக்கு தெரு பப்ளிக் டாயிலட்டை விட கேவலமாக பராமரிக்கப்படும் ஒயின் ஷாப்புகள் திறந்து வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்.
மற்ற அரசுத் துறைகளில் என்ன நடக்கிறதோ, அதே தான் இந்தத் துறையிலும் நடக்கிறது.
நல்ல தெளிவான கட்டுரை!
யாராவது டாஸ்மாக்ல வேலையிருந்தா வாங்கிகொடுங்களேன்......
இருங்க போய் ஒரு குவாட்டரை விட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்...
இந்த மாதிரி படம் போட்டு எங்களைப் போன்ற இளைஞர்களை வெறுப்பேற்றும்.. திரு.Cable sankarக்கு டாஸ்மாக்கிலிருந்து ஒரு குவார்ட்டர்....
உங்களப் பத்தி எனக்குத் தெரியும்னே...
போன சனிக்கிழமை அப்படி நடக்கும்போதே தெரியும், இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு.
வாங்கிட்டாங்க.சரி திருப்பி போய் கேக்கலாம்
அப்படின்னு பார்த்தா, மக்கள் வெள்ளம் அவன்
கிட்ட கேட்டு ரெண்டு ரூபா வாங்கறதுகுள்ள
பார் க்ளோஸ் ஆயிடும்.....
அண்ணே பேசாம இந்த பிரச்சனைக்கு நாம ஒரு
இயக்கம் ஆரம்பிப்போம்......
அம்பத்தூரில் (முதலில் லக்ஷ்மி வைன்ஸாக இருந்த வடக்கு பூங்கா தெரு டாஸ்மாக் கடையில்) ஒரு பீர் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை அதிகம் விற்கிறார்கள். அதனால் நான் பீரே சாப்பிடுவதில்லை :(
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். ஆனாலும் இது அநியாயம் தான். நாசமா போக, டாஸ்மாக் காரன்.
சரியா சொன்னிங்க தலைவா.......நானும் கேட்டிருக்கிறேன். எனக்கும் கிடைத்திருக்கிறது.......
குடிப்பதன் குற்ற உணர்ச்சியைத் துண்டி விட்டுக் குளிர் காயும் அரைகுறை போலி ஒழுக்கவாதிகளே குடிக்காத குடிகாரர்கள்.
அருமையான கட்டுரை,ஷங்கர்.
//டாஸ்மாக் பற்றி எழுதியதால் நான் ஏதோ தினக்குடிகாரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை..
முதல் இரண்டு பாரா படித்து விட்டு உண்மையில் நானும் உங்களை தினக்குடிகாரன் என்று தான் நினைத்து விட்டேன். மன்னிச்சுக்கோங்க அண்ணாத்தே! :-)
தலே...
இருங்க போய் ஒரு குவாட்டரை விட்டு வந்து பின்னூட்டம் போடுறேன்...*/
அண்ணே...
வந்துட்டேன்... ஸ்டார்ட் மீஜிக்....
நன்றி இதயம்.. நிச்சயமாய் எழுதுகிறேன்.
Sankar in HOTSPOT missing.//
இது வெறும் சாம்பிள் தான் சிவகுமார்.. இன்னும் நிறைய இருக்கு.. உங்க பேவரேட் ஹாட் ஸ்பாட் வந்திருச்சி
பின்ன ஒருகட்டிங் அடிச்சிட்டு போயிட்டா.. முடிஞ்சிருச்சா..?
@ஆண்மை குறையேல்
அண்ணே என்ணன்ணே இப்படி கோச்சிக்கிறீங்க..?
@நவநீத்
நன்றி
தம்பீ மாதிரி ஆளுகளுக்கு இந்தப் பாசமும், கோபமும் டாஸ்மாக் மேட்டர்லதான் வரும் போலிருக்கு..
சரக்கடிச்சிட்டு நாலு பேர் நடுரோட்டுல சண்டை போட்டா நாம என்ன செய்வோம்? அதே மாதிரி இதையும் லூஸ்ல விட்டுட்டுப் போக வேண்டியதுதான்..!
கடையை மூடுங்கடா கபோதிகளான்னு சொல்லத் தெரியலை..
ஆனா இவர் கரெக்ட் காசுக்குத்தான் பாட்டில் வாங்குவாராம்.
போய்யா நீயும் உன் யோக்கியமும்..!
//
யோவ் அண்ணே.. கல்யாணம் செஞ்சவனுக்குத்தான்யா அதோட வலி தெரியும் எதையும் தெரியாம சும்மா பெரிய் இதுவாட்டம் பின்னூட்டம் போடக்கூடாது.. உங்களுக்கு தான் ஷண்முகப்பிரியன் சார் பதில் போட்டுருக்காரு பாருங்க..:)
நன்றி
@தராசு
நன்றி தலைவரே
@கபிலன்
அப்படியெல்லாம் விட முடியாது கபிலன்
@ஷாகுல்
அதான் குத்திட்டேன்.. நீங்களும் குத்துங்க..
தினமலர் போன்ற செய்தித்தாள்கள் எப்போதும் குடிப்பவர்களை ஒரு எள்ளலோடு கேவலப்படுத்தி எழுதுகிறது. குடி அவ்வளவு கேவலமானதென்றால் ஏன் தெருவுக்கு தெரு பப்ளிக் டாயிலட்டை விட கேவலமாக பராமரிக்கப்படும் ஒயின் ஷாப்புகள் திறந்து வைத்து கொள்ளை அடிக்கிறார்கள்.
//
நிச்சயமாய் எழுதுங்கள்.. ஆந்திராவில் மிக் சுத்தமாய் சுகாதரமாய் இருக்கிறது..
தினமலர் ஓனர் வேண்டுமானால் தாஜிலோ, அல்லது பார்க் ஷெரட்டனிலோ அடிக்கட்டும். அதனால் அப்படித்தான் பேசுவார்கள்..
நம்ம கட்சி
@பாலாஜி
அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.. பாலாஜி
@நைனா..
ரைட்டு..
@அசோக்
எப்ப வரட்டும்?
நல்லாருக்கா.. ஏதோ நீங்களெல்லாம் சந்தோஷமா இருந்தா சரிதான்..
அந்த 50 ரூபாய் வெட்டியா செலவு செய்யுறதா பத்தி கொஞ்சம் கூட வருத்த படலயே... ஏன்
குடிக்கவே இல்லன்ன அந்த 55 ரூபாயும் மிச்சம்தானே...
குடிக்குறது கூழு கொப்பளிக்குறது பன்னீராம் :)
அரிசி/பருப்பு/எண்ணெய் விலை எல்லாம் கூடுது.... !
ஒட்டு மொத்தமா நகைக் கடைகள்ல ஒரு கொள்ளை அடிக்கிறாங்களே அதைப் பத்தி ஒரு பதிவு எழுதுங்களேன்?
நீங்க சென்னை நிலவரத்த மனசுல வச்சு, சூபர்வைசர்கள் மேல தப்பு இருக்கிற மாதிரி சொல்லீட்டிங்க. எங்க ஊர்ல, கிராமப்புறத்துல நிலைமை வேற. ஒவ்வொரு டிவிசனுக்கும் ஒரு தலைமை மார்கட்டிங் ஆபீசர் இருக்காருல்ல, அவருதான் டார்கட் வைக்கறாரு. இதுல, நிறைய கடைகளில ஃபேன், ஃப்ரிட்ஜ் இதுகளுக்கான கரண்ட் பில்ல அந்த சூபர்வைசர் தான் பார்த்துக்கணும். ஒரே ஏரியால 2 கடை திறந்துடறாங்க வேற. கட்டாயம் பீர் ஜில்லுனு கொடுத்தாத்தான் கஸ்டமர் வருவாங்க. இது தவிர, விக்குற பாட்டில்கள் எண்ணிக்கையில 60 லிருந்து, 75 சதவீதம் காலி பாட்டில் அரசாங்கத்துக்கு கணக்குல திருப்பி கொண்டு வரணும்னு கட்டாயப்படுத்துறாங்களாம். இதெல்லாம் என்னோட நண்பன் ஒருத்தன் M.Sc படிச்சுட்டு ஈரோட்டு பக்கம் ஒரு 2 வருசம் சூபர்வைசரா குப்பை கொட்டினபோது என்கிட்ட சொன்னது. அரசாங்க வேலைங்கிற ஆசைல 50000 டெபாஸிட் கட்டி சேர்ந்துட்டு, 2 வருசத்துக்கு அப்புறம் இந்த தொல்லை தாங்காம, இப்ப Garment Business ல நிம்மதியா இருக்கான்.
கழெக்டு.. அவுனுங்க புழுங்கற காச பத்து நாழு திழுப்பி வாங்கினா ஒழு கோட்டழுக்கு ஆவும்.
kudimakkalukku utri kodukkum velaiyai vera endha arasangamum vlo sirappa senjathu illa..
naan idhai patri naan sila madhathirku mun padhiviten..
http://enadhu-ularalgal.blogspot.com/2009/07/blog-post_19.html
neram irundhal padinga anna...
http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_06.html
Just for Fun... :)
அன்புடன்
குகன்
குடியையே ஒழிக்க வேண்டும் என்கிறோம்.நீங்கள் நியாய விலையில சப்ளை செய்ய சொல்லி அதுக்கு ஒரு பிளாக் வேற. 10,+2 மாணவர்களில் 50 % பேராவது குடிக்காமல் இல்லை. சரி நான் குடிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்பீர்கள். குடித்து விட்டு ரோடில் கலாட்டா செய்வதும்,கண்டபடி வாகனத்தை ஓட்டி அப்பாவிகளை சாகடிப்பதும்,குடிக்க பணம் இல்லாமல் கொள்ளையடிக்க இறங்குவதும் தான் பிரச்சினை.\\
கேபிள்ஜி எங்கேயும் குடியுங்கள் குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லவில்லையே, அரசாங்கமே நடத்தும் கடையில் நடக்கும் நடக்கும் அராஜகத்தை சொல்லியிருக்கிறார். அது புரியாமல்...?!
//இந்த கருமத்தை குட் பிளாக் ஆக செலக்ட் பண்ணிய ஆனந்தவிகடனை என்ன சொல்ல.தரம் தாழ்ந்த விகடன்\\
தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமோ?!
மற்ற அரசு துறை நிறுவனங்கள் 5 மணியோடு மூடப்படும் போது மதுபான கடைகள் மட்டும் இரவு பத்து மணி வரை திறந்து இருக்க வேண்டும், என ஆணையிட்டு வியாபாரம் நடத்தும் அரசாங்கதை ஏன் தரம் கெட்ட அரசாங்கம் என்று சொல்லவில்லை. வீட்டிற்கு ஆட்டோ வரும் என்ற பயமா??
எதையும் நேர்மையான கண்ணோட்டத்தோடு விமர்சித்தல் நலம் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்
பப்ளிக் டாய்லெட்டை விட மோசமான பார்கள்.
கேவலமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள்.
கடுமையான விலை.
குடிப்பவர்களை இன்னும் எத்தனை வழிகளில் இம்சிப்பார்களோ தெரியவில்லை..
ஆனால் அபரிமிதமான வருமானம் மட்டும் அரசுக்கு தேவை.
கேடுகெட்ட அதிகாரவர்கம்.
சும்மா விட்டுருவோமா..?
@ முரளிகண்ணன்
நன்றி தலைவரே
@ஜெட்லி
இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது..
என்னை பொருத்தவரை அது கூட கொடுக்க கூடாது.. தலைவரே
//அம்பத்தூரில் (முதலில் லக்ஷ்மி வைன்ஸாக இருந்த வடக்கு பூங்கா தெரு டாஸ்மாக் கடையில்) ஒரு பீர் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை அதிகம் விற்கிறார்கள். அதனால் நான் பீரே சாப்பிடுவதில்லை //
ஆமாம் தலைவரே.. இது மாதிரிதான் அவுட்டர் ஏரியாவில் நடக்கிறது அதை கேட்க யாருமில்லை.. அங்ககுடிப்பதற்கு, பேசாமல் நல்ல பாரில் போய் உட்கார்ந்து சாப்பிடலாம். பீர் போன்ற வஸ்துக்களை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் விற்க, ஏற்பாடு செய்தால் விலையும் சல்லீசாக குறையும்.
//
தலைவரே நீங்க போனது இல்ல போலருக்கு
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். ஆனாலும் இது அநியாயம் தான். நாசமா போக, டாஸ்மாக் காரன்.
//
ரேஷன் கடைகளில் அரிசியை பதுக்கி விற்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதற்காக போராடாமல் , சாப்பிடாமலே இருந்துவிடுவீர்களா.. முருகானந்தம்..
நன்றி
@புலவன் புலிகேசி
நிச்சயம் இங்க் மட்டுமில்ல, எங்கேயும் கேட்டா நிச்சயம் கிடைக்கும் அது நம்ம உரிமை.
@சூரியா
நன்றி
@ஜோ
நன்றி
குடிப்பதன் குற்ற உணர்ச்சியைத் துண்டி விட்டுக் குளிர் காயும் அரைகுறை போலி ஒழுக்கவாதிகளே குடிக்காத குடிகாரர்கள்.
அருமையான கட்டுரை,ஷங்கர்.
//
மிக சரியாக சொன்னீர்கள் சார்.. மிக்க நன்றி
அது கொடுமை
@ட்ரூத்
பெட்டி கடைகளில் வாட்டர் பாக்கெட்டை
தவிர பெரிதாய் எதையும் விலை உயர்த்தி கொடுப்பதில்லை. ஏனென்றால்பக்க்கத்தில் உள்ள டிபார்ட்மெண்டல் கடைகளில் விலை குறைத்து விற்பனை செய்வதே காரணம்.
உன் பாராட்டுகளில் மகிழ்ந்தோம். அதனால் இனிமேல் உன்னை உலக மக்கள் எல்லோரும் நை”நைண்டி” நைனா என்று அழைக்கப்படுவீர்கள்.
ஹா..ஹா.
அந்த 50 ரூபாய் வெட்டியா செலவு செய்யுறதா பத்தி கொஞ்சம் கூட வருத்த படலயே... ஏன்
குடிக்கவே இல்லன்ன அந்த 55 ரூபாயும் மிச்சம்தானே...
குடிக்குறது கூழு கொப்பளிக்குறது பன்னீராம்
அரிசி/பருப்பு/எண்ணெய் விலை எல்லாம் கூடுது.... !
//
அலோவ் வெட்டி.. ஒரு அஞ்சு ரூவா எவ்வளவு கோடி ஆவும் தெரியுமா..?
குடிக்காம இருந்தா செலவு மிசச்ம்னு எங்களுக்கும் தெரியும்.. ஏதோ நான் செலவு பண்றதுல பணம்போவுதுன்னு புலம்புரமாதிரி பேசறீங்களே.. அதுல உங்கள மாதிரியான ஆட்களின் புலம்பல்களும் இருக்குது. தெரியுமா.?
@அரிசி பருப்பு விலையெல்லாம் கூடுது.. நாளைக்கே நான் நடு ரோடுல நின்னு போராட தயார் நீங்க ரெடியா..?
எது பெரிய மனுஷங்க விஷயம்?
@முகிலன்
அது நான் சொன்ன கணக்கை பார்த்து வரும் ஆனா அதுதான் நிதர்சனம்
நகைகடை கொள்ளையை பத்தி எழுதணும்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்.. இன்னும் கொஞ்சம் டீடேய்ல் வேணும் உங்க கிட்ட இருந்தா கொடுங்களேன். இல்ல ஒரு பதிவு போடுங்களேன்.
அப்படியெல்லாம் சகிச்சிக்க கூடாது தலைவரே..
நீங்க சென்னை நிலவரத்த மனசுல வச்சு, சூபர்வைசர்கள் மேல தப்பு இருக்கிற மாதிரி சொல்லீட்டிங்க. எங்க ஊர்ல, கிராமப்புறத்துல நிலைமை வேற. ஒவ்வொரு டிவிசனுக்கும் ஒரு தலைமை மார்கட்டிங் ஆபீசர் இருக்காருல்ல, அவருதான் டார்கட் வைக்கறாரு. இதுல, நிறைய கடைகளில ஃபேன், ஃப்ரிட்ஜ் இதுகளுக்கான கரண்ட் பில்ல அந்த சூபர்வைசர் தான் பார்த்துக்கணும். ஒரே ஏரியால 2 கடை திறந்துடறாங்க வேற. கட்டாயம் பீர் ஜில்லுனு கொடுத்தாத்தான் கஸ்டமர் வருவாங்க. இது தவிர, விக்குற பாட்டில்கள் எண்ணிக்கையில 60 லிருந்து, 75 சதவீதம் காலி பாட்டில் அரசாங்கத்துக்கு கணக்குல திருப்பி கொண்டு வரணும்னு கட்டாயப்படுத்துறாங்களாம். இதெல்லாம் என்னோட நண்பன் ஒருத்தன் M.Sc படிச்சுட்டு ஈரோட்டு பக்கம் ஒரு 2 வருசம் சூபர்வைசரா குப்பை கொட்டினபோது என்கிட்ட சொன்னது. அரசாங்க வேலைங்கிற ஆசைல 50000 டெபாஸிட் கட்டி சேர்ந்துட்டு, 2 வருசத்துக்கு அப்புறம் இந்த தொல்லை தாங்காம, இப்ப Garment Business ல நிம்மதியா இருக்கான்.
//
சீனிவாசன். உங்க நண்பர் வேலை செஞ்சது, கிராமபுறத்தில அதுல தனிய பார் வைக்க நிறைய பேர் இண்ட்ரஸ்ட் இருக்காது அதனால பிரிட்ஜ், கடைக்காரங்க வாங்கி வைக்கிறாங்க.. ஆனா சூப்பர்வைசர் அடிக்கிற காசுல அவங்களுக்கும் பங்கு இருக்கு. இல்லைன்னு சொல்லாதீங்க.. உங்க நண்பர் வேணுமின்னா நல்லவரா இருக்கலாம். ஆனா எல்லோரும் இல்லை. முக்கா வாசி இடத்தில கூலரே கிடையாது அப்படியே இருந்தாலும் கூலா கிடைக்காது..
//
ஏன் பிரச்சனை எதுவென்று தெரியாமல் காழ்புணர்ச்சியுடன் பின்னூட்டமிடுகிறீர்கள்.. அவர்கள் கடை விரித்திருக்கிறார்கள்..அதில் நடக்கும் அநியாயத்தை, அடிக்கும் கொள்ளையை பற்றி சொல்கிறேன். நாளையே அவர்கள் கடையை மூடிவிடட்டும்.. அதை பற்றி எனக்கு கவலையில்லை.. ஏதோ நீங்கள் ஒருவர்தான் சமுதாய உணர்வோடு இருப்பது மாதிரி எழுதியிருப்பது.. ஒரே காமெடியாய் இருக்கிறது..
சரி.. தலைவரே காலையில பேசுவோம்
@ஸ்ரீ
ஆமா..
@கனகு
நிச்சயம் படிக்கிறேன் கனகு
@குகன்
நோ.ப்ராப்ளம்.. நிச்சயம் படிக்கிறேன்.
@பப்பு
அதுக்குத்தான் டிஸ்கி போட்டேன்.
வேண்டுமென்றே பிரச்சனையை திசை திருப்ப எழுதிய பின்னூட்டம் அது கிறுக்கல் கிறுக்கன்.
பப்ளிக் டாய்லெட்டை விட மோசமான பார்கள்.
கேவலமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள்.
கடுமையான விலை.
குடிப்பவர்களை இன்னும் எத்தனை வழிகளில் இம்சிப்பார்களோ தெரியவில்லை..
ஆனால் அபரிமிதமான வருமானம் மட்டும் அரசுக்கு தேவை.
கேடுகெட்ட அதிகாரவர்கம்.
//
:(
சரியான் சில்லரையோடு போனா சரக்கே கொடுக்க மாட்டானுங்க..
ரொம்ப நாளா எழுதணுமின்னு நினைச்சிட்டிருந்த விஷய்ம்ணே.. ஒரு கடையில டேட்டா திரட்டி அதெண்டிக்கா எழுதணுமின்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். இதுல பார் மேட்டர் இன்னும் சூப்பர்..
இதை வன்மையாக வரவேற்கிறேன் .
பீரெல்லாம் ஒரு பெரிய குடி சமாச்சாரம் போல பாரில் மட்டும் வைப்பதால் தான் நம்மளுங்க பாதி பீருக்கே ரொம்ப தான் பில்டப் கொடுக்குறாங்க.
இங்கெ சிங்கையில் காபி கடைக்கு போனா ,நாம காபி குடிக்க அதே மேசையில் ஒருத்தர் பீர் குடிச்சிட்டிருப்பார் ..ஒரு வித்தியாசமும் இல்ல.
மன்னிக்கனும் கேபிள்.நீ எதை பற்றி எழுதியிருக்கேன்னு எனக்கு புரியலை...
மன்னிக்கனும் கேபிள்ஜி...அதிர்ச்சியில் ஆப் உள்ளே போய்விட்டது...
தொறந்த வாய மூடாத : கும்க்கி.
முருகானந்தம் said...
அவர்களிடம் சண்டைபோடுவதை விட குடிப்பதை நிறுத்துவது எளிது. மொத்த பணமும் மிச்சம்.
/
well said.
Lot of Higher official contact numbers are available.Right to Information Act forms are also available.
http://tasmac.tn.gov.in/