பேராண்மை – திரைவிமர்சனம்
கோட்டாவில் படித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீஸராய் உயர்ந்து நிற்கும் துருவனும், ஐந்து என்.சி.சி கேடட் பெண்களும் சேர்ந்து நம் நாட்டின் பசுமை புரட்சிக்காக அரசு ஏவ இருகும் ராக்கெட்டை அழிக்க வரும் வெளிநாட்டு கூலிப்படையின் முயற்சியை தடுப்பதே கதை.
மேம்போக்காக பார்த்தால் ஏதோ பாண்டஸி வகையை போல தெரிந்தாலும் படம் முழுக்க இயக்குனரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு.. ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்.சி.சி பயிற்சிக்காக வரும் ஒரு காலேஜ் குரூப் வந்து சேர, அங்கே பயிற்சியாளராக வருகிறார் துருவன் எனும் ஆபீஸர். அவர் பழங்குடியினர் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முன்னேறியவர். ஊருக்குள் வரும் முன்னரே பழங்குடியினராக பார்த்த ஒருவனை தங்களது பயிற்சியாளராய் ஏற்க மறுக்கும் ரவுடி பெண்களான ஐந்து பேர். அவரை துரத்த நினைத்து இந்த மாணவிகள் செய்யும் முயற்சிகள் எல்லாம் பாதி வெற்றியும், தோல்வியுமாய் முடிய, அதில் ஒரு பெண் ஒரு தலையாய் அவரை காதலிக்கவே ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கடைசி நாளாக இது வரை மக்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதிகுள் ஒரு நாள் பயிற்சிக்கு ஐந்து பேரை செலக்ட் செய்து துருவன் செல்ல, அடாவடி ஐந்து பெண்கள் அவனை பிரச்சனைக்குள்ளாக்க, முயற்சிக்கும் வேளையில் ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளில் நடமாட்டத்தை பார்க்கும் ஒரு பெண் துருவனிடம் சொல்ல அன்னிய சக்திகளில் சதி திட்டத்தை முறியடிக்க, ஐந்து பெண்களுடன் போராட்டத்தில் இறங்குகிறான் துருவன் , அவன் ஜெயித்தானா, அந்த பெண்கள் அவனுக்கு உதவினார்களா..? என்பது வெள்ளிதிரையில்.
ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம். கமலஹாசனுக்கு பிற்கு கோவணத்துடன் ஒரு நீள காட்சியில் வலம் வருகிறார். பயிற்சியாளராய் அவரின் பாடி லேங்குவேஜ், சண்டை காட்சிகளில் அவர் காட்டும் வேகம், பெண்களிடம் அவரின் அதட்டல் உருட்டல் செல்லுபடியாகாமல் திண்டாடும் போது காட்டும் பொறுமை. அவரின் ப்ளான் எக்ஸிகியூஷன் போன்றவற்றில் காட்டும் நிதானம், ஆக்ஷன் காட்சிகளிலும், மரம், மலையில் ஏறும் காட்சிகளில் அங்கேயே வாழ்ந்தவர் போல் காட்டும் லாவகம், ரவி உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்.
அவரின் உயர் அதிகாரியாய் வரும் பொன்வண்ணன் கேரக்டரும் அருமை. மலைஜாதியிலிருந்து ஒருவர் இந்த நிலைக்கு வந்ததை ஒவ்வொரு முறை பேசும் போதும், மட்டம் தட்டியே பேசுவதும், அவனின் வளர்ச்சி பொறுக்காமல், அவனை ஒரு காம கொடூரன் ரேஞ்சில் பில்ட்ப் செய்து அவனை கொல்ல ஆர்டர் வாங்குவதும், கடைசியில் வீர பராக்கிரம விருதை அவர் வாங்குவதும். படம் முழுக்க, இயக்குனர் தான் சொல்ல நினைக்கும் கருத்துகளை எல்லாம் இவரின் கேரக்டர் மூலமே சொல்லியிருப்பது அருமை.
ஐந்து பெண்களும் ஆரம்ப காட்சிகளில் அடிக்கும் லூட்டிகளுக்கும் இணையாய் காட்டில் அவர்கள் துருவனுடன் செய்யும் சாகசங்களில் அவர்களின் முழு ஒத்துழைப்பு தெரிகிறது. ஐந்து பெண்கள் இருந்தாலும் அடர் காட்டை போலவே ஒரு இறுக்கம் படம் ம்ழுவதும் இருக்கிறது. ஒருதலையாய் துவனின் மீது காதல் வயப்படும் சரண்யாவை தவிர. ஏதோ வந்தோம், ஆடினோம், பாடினோம் என்றில்லாத கேரக்டர்கள்.
அந்த அமெரிக்க வில்லன் 70mm சைஸ் உடம்பை வைத்து கொண்டு பயமுறுத்துவதை தவிர, வேறேதும் பெரிதாய் செய்யவில்லை. டெர்மினேட்டர் பட ஹீரோவாம் மெஷின் போலவே படம் முழுவதும் வருகிறார்.
படத்தின் கேமராமேன் சதீஷ்குமாருக்கு சுற்றி போடுங்கள்.. அடர்காடுகளுக்குள் ஓடுகிறார், தாவுகிறார், நடக்கிறார், பாய்கிறார், தண்ணீரில் நடக்கிறார். நம் கண் முன்னே காட்சிபடுத்தியிருக்கிற உணர்வே இல்லாத வகையில் காட்டையும், அருவியையும், ஏரியையும், விரித்திருக்கிறார். இடைவேளையின் போது ஒரு காட்சியில், ஒரே ஷாட்டில் ஒரு மலையில் இருக்கும் கதாநாயக, ஹீரோயின்களிலிருந்து கிளம்பும் கேமரா, அப்படியே பயணித்து கீழே இருக்கும் வில்லன் இடத்தையும், அங்கேயிருந்து அவர்கள் போக இருக்கும் இடத்தையும், ராக்கெட் தளத்தையும் காட்டி இடைவேளை போடும் போது எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருந்தது.. படம் முழுக்க இவரின் ஆளுமை அதிகம் என்றால் அது மிகையில்லை.
வித்யாசாகரின் பிண்ணனி இசை சுமார் ரகம் தான். பாடல்கள் படத்தில் பெரிதாய் பிரஸ்தாபிக்க படவில்லை என்றாலும், முதல் பாடல் பரவாயில்லை ரகம், காட்டில் மாண்டேஜில் பாடப்படும் பாடலில் வைரமுத்துவின் ஆளுமை.
பாராட்ட பட வேண்டிய இன்னொருவர் ஆர்ட் டைரக்டர். காட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு என்ன ஆர்ட் டைரக்டர் என்று கேட்பவர்களுக்கு படத்தின் உபயோக படுத்தபட்டிருக்கும் அனைத்து தளவாடங்களும் அவர்கள் அமைத்ததுதான் தத்ரூபம்.
இயக்குனர் ஜனநாதன் தன்னுடய் கம்யூனிச கருத்துகளை எல்லாம் படம் பூராவும் ஏதாவது கொரு கேரக்டர் மூலம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுகிறார். பெண்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்களில் இளமை துள்ளல். படத்தில் இவரது உழைப்பு மிக அதிகம். ஜெயம் ரவியுடன் பெண்கள் காட்டில் மாட்டியவுடன் அவரின் மூலம் காட்டின் நிகழ்வுகளை வசனங்களாய் அவர் சொல்ல, சொல்ல, கொஞ்சம், கொஞ்சமாய் நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம். அதே போல் அவர் எதிரிகளை எதிரி கொள்லும் முயற்சிகளை, அந்த பெண்களுக்கு சொல்லும் போது, சின்ன சின்னதாய் எவ்வளவு விஷயங்களை அவர் சொல்லி கொண்டே போகிறார், யானை சாணம், மரத்தின் கிளைகளை ஒடிக்கும் காரணம், சட்டை துணி மெல்லியதய் கேட்டு அதை அடையாளமாய் கட்டும் யுக்திக்கான் காரணம், போகும் வழியை படத்தில் கேரக்டர்கள் ம்றந்தாலும் நாம் மறக்க மாட்டோம் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் நம்மை பிரிபேர் செய்து கூட்டி போகிறார்..
இவ்வளவு தூரம் உழைத்தவர் திரைக்கதையில் அந்த ஐந்து பெண்களுக்கான கேரக்டர்களை கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் நம்பகத்தன்மை வ்ந்திருக்க கூடும். என்னதான் என்.சி.சியில் அவர்கள் இருந்தாலும, பட்டின காலேஜ் ஸ்டூடண்டுகள் தான். அவர்கள் திடீரென காட்டுக்குள் தனியே அலைய ஆசைப்படுவதும், திடீரென நாட்டுக்கு பிரச்ச்னை என்றதும் உயிரை பணயம் வைத்து ராணுவ தளவாடங்களை துருவன் சொல்லி கொடுத்த உடனேயே லாவகமாய் பயன் படுத்துவதும், சாட்டிலைட் ஏவுகணைகளை அனாயாசமாக கையாள்வதும், வந்திருக்கும் வில்லன்கள் எந்த நாட்டுகாரர்கள், என்ன காரணத்திற்காக நம் ராக்டெட் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்கள் என்று சொல்வதற்கு பதிலாய் கூலிப்படை, அந்நிய சக்தி என்று சொல்வதும் கதையின் மீதான நம்பகத்தந்மையை குறைந்து ஒரு சாதாரண பேண்டஸி சப்ஜெக்டாய் போய்விடுகிறது. என்பதுதான் வருத்தம்
இந்த படத்தில் உழைத்த அனைவரின் உழைப்பிற்காக ஒரு ராயல் சல்யூட்
பேராண்மை – வீர்யம்
டிஸ்கி:
வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
//வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்//
>>>100% உண்மை!!!!
இந்த படம் வெற்றி பெற வேண்டும். கருத்து அல்லது கேமரா அல்லது கதை ஏதற்காவது தேசிய விருது கிடைக்க வேண்டும்!
மயிலாடுதுறை சிவா...
அதை எடுத்தவர் தானே இவர்.
கலக்கியிருக்கிறார் - என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது.
படம் பார்க்க ஆவலாய் இருக்கு
நன்றி தலைவரே...!
Please also read this review.
http://www.thenaali.com/thenaali.aspx?A=1175
சூப்பர்!
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
முதல்ல சொல்லாம போய்ட்டேன்...
எனக்கு படம் பிடிச்சிருந்தது அண்ணே...
விமர்சனம் நல்லயிருக்கு படத்த கண்டிப்பா தியட்டர்ல்ல பாப்பன்.
s.p.jananathan மற்றும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
(royal salute என்பது ஒரு சரக்கு பேரு என்பது வேறு விஷயம்)
vimarsanam nalla irunduthu na :)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஒரு படம் ஜெயிக்கணும்னா அதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரணும். முக்கியமா பெண்களுக்கு புடிக்கணும். இது ரெண்டுமே மிஸ்ஸிங். ஈ படத்தில் எதிர்பார்ப்பில் போய் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அநேகமா ஆதவன் போட்டியில்லாம ஜெயிச்சிடும் போல தெரியுது.
அதென்ன கோட்டாவில் படித்து என்று ஒரு எள்ளல்...?
சரியில்ல கேபிள் உங்களிடமிருந்து இப்படியொரு சொல்லாடலை எதிர்பார்க்கவில்லை. இட்லி வடை எழுதலாம் நீங்கள் எழுதலாமா..?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
வாழ்த்துக்கள்.
படம் இங்க வராது. டிவிடியே நமஹா
படத்தில் சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் படம் நன்றாக வந்திருப்பது போலத்தான் இருக்கிறது.
கேபிள் விமர்சனமும் சரியான அணுகலில் உள்ளது. பகிர்தலுக்கு நன்றி.
- பொன்.வாசுதேவன்
சரியில்ல கேபிள் உங்களிடமிருந்து இப்படியொரு சொல்லாடலை எதிர்பார்க்கவில்லை. இட்லி வடை எழுதலாம் நீங்கள் எழுதலாமா..?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
//
அரவிந்தன் படம் பாருங்கள் புரியும்..:) அதை படத்தின் முக்கியமான விஷயமாய் சொல்லியிருகிறார்கள்.. தீபாவளி வாழ்த்துக்கள்.
“கோட்டா” என்றால் என்ன?
எனக்கு அதில் காலை எடுத்து ஒரு”ர்” போட்டாத்தான் புரியும்.
படத்தின் கேமிராமேன் பதிவர் கணேஷின் உறவினர் என்று கேள்விப்பட்டேன்.
நடுநிலையான விமர்சனம்.
படம் பார்க்க ஆவலாய் இருக்கு
நன்றி...!
நன்றி
@பிரசன்னா இராசன்
ஓகே
@மயிலாடுதுறை சிவா
நிச்சயம் ஏதாவது ஒன்றுக்கு கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன்
ஆமாம்
@ஜீவன்
நிச்சயம் பாருங்கள் ஜீவன்
@ஜனா
ஒரளவுக்கு நம்பலாம்
@நைனா
பாத்துடுங்க
@விசா
படித்துவிட்டேன்.ஒவொவ்ருத்தருக்கு ஒவ்வொரு பார்வை
எதுக்கு?
@மங்களூர் சிவா
நன்றி
@பின்னோக்கி
ஆமாம் தலிவரே
@கிஷோர்
பார்கலாம்தான்
@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
வாழ்த்துக்கு மிக்க நன்றி.. படம் பாருங்க
@கார்திக்
மிக்க நன்றி உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஆமாம் கணேஷ்
@கார்க்கி
அடிக்கலாம்
@ட்ரூத்
எங்க இருக்கீங்க நீங்க..?
@இரும்பு திரை
படிக்கிறேன்
@ஜெட்லி
சத்யம்
@பீர்
பாருங்க தலைவரே
ஒரே சமயத்தில் ரெண்டு மொக்கை தாங்க முடியாது வந்தியத்தேவன்
@அசோக்
தியேட்டர்ல பாருங்க
அதை ஏன்யா ஞாபக படுத்துறே..?
@கனகு
பாருங்க
@சூர்யா
நன்றி உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@டம்பிமேவி
பார்த்துட்டு சொல்லுங்க
@
அமாம் சார்
@சிம்பா
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.. ஆதவன் அப்படியெல்லாம் ஓடாது.
ஆமாம் நன்றி
டிவிடில பாருங்க
@கிஷோர்
நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்
@அகநாழிகை
நன்றி
@கும்க்கி
கோட்டா ர் போட்டு அடிச்ச உடனே எனக்கு போன் பண்ணுங்க
நன்றி. ஆமாம்
@சரவணக்குமார்
நன்றி.. தீபாவளி வாழ்த்துக்கள்
@செந்தில்வேலன்
நன்றி
2பப்பு
நன்றி உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@அறிவிலி
ஆமாம்
@வெங்கிராஜா
நன்றி.. ஆமாம்
@துபாய்ராஜா
நன்றி
@பித்தன்
நன்றி
@செந்தில்நாதன்
பார்த்துட்டு சொல்லுங்க
எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை
நான் லண்டன்ல இருக்கேங்க. கமெண்ட் அடிச்ச பிறகு மறுபடியும் செக் பண்ணினேன். ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னைக்கு தான் பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்கு.
நான் ஆரம்பத்துல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். பொண்ணுங்க த்ரூவோட க்லாஸ் அட்டெண்ட் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டு ஒரு கம்ப்ளெயிண்ட் பண்றாங்கல்ல, அங்க இருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன். ஏதேனும் மிஸ் பண்ணிட்டேனா? மறுபடியும் பாக்கணுமா? எப்படியும் இன்னொரு முறை பாப்பேன். :)
பார்க்கிறேன்
@எவனோ ஒருவன்
நன்றி.. பாருங்கள்
@ட்ரூத்
இல்ல கொஞ்சம் தான் பரவாயில்லை.
@கிறுக்கல் கிறுக்கன்
பண்ணுங்க
உண்மைதான்.. வித்யாசமான கேரக்டர். நன்றாக உழைத்திருக்கிறார். படம் கண்டிப்பாய் வெற்றிதான்.
EVERY INDIAN SHOULD WATCH THIS MOVIE. EVERY TAMILAN SHOULD HAVE TO WATCH THIS MOVIE!
இரண்டுமே அருமை..(படம் &விமர்சனம்)
சில இடங்களில் கொஞ்சம் தொய்வாகவும், அதிகமான கருத்துக்களை ஒரே நேரத்தில் இயக்குனர் சொல்கிறாரோ எனத் தோன்றினாலும் முயற்சி,உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ரவிக்கு ஒரு திருப்புமுனை.
//வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்//
முழுக்க முழுக்க சரி,, :)
ப.சேர்முக பாண்டியன்