Thottal Thodarum

Oct 16, 2009

பேராண்மை – திரைவிமர்சனம்

வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் கேபிள் சங்கரின் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Jayam-Ravi-Peranmai-Stills-pics (1)

கோட்டாவில் படித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீஸராய் உயர்ந்து நிற்கும் துருவனும், ஐந்து என்.சி.சி கேடட் பெண்களும் சேர்ந்து நம் நாட்டின் பசுமை புரட்சிக்காக அரசு ஏவ இருகும் ராக்கெட்டை அழிக்க வரும் வெளிநாட்டு கூலிப்படையின் முயற்சியை தடுப்பதே கதை. 

மேம்போக்காக பார்த்தால் ஏதோ பாண்டஸி வகையை போல தெரிந்தாலும் படம் முழுக்க இயக்குனரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு.. ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்.சி.சி பயிற்சிக்காக வரும் ஒரு காலேஜ் குரூப் வந்து சேர, அங்கே பயிற்சியாளராக வருகிறார் துருவன் எனும் ஆபீஸர். அவர் பழங்குடியினர் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முன்னேறியவர்.  ஊருக்குள் வரும் முன்னரே பழங்குடியினராக பார்த்த ஒருவனை தங்களது  பயிற்சியாளராய் ஏற்க மறுக்கும் ரவுடி பெண்களான ஐந்து பேர். அவரை துரத்த நினைத்து இந்த மாணவிகள் செய்யும் முயற்சிகள் எல்லாம் பாதி வெற்றியும், தோல்வியுமாய் முடிய, அதில் ஒரு பெண் ஒரு தலையாய் அவரை காதலிக்கவே ஆரம்பிக்கிறார்.  
peranmai
ஒரு கட்டத்தில் கடைசி நாளாக இது வரை மக்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதிகுள் ஒரு நாள் பயிற்சிக்கு ஐந்து பேரை செலக்ட் செய்து துருவன் செல்ல, அடாவடி ஐந்து பெண்கள் அவனை பிரச்சனைக்குள்ளாக்க, முயற்சிக்கும் வேளையில் ஆள் நடமாட்டமே இல்லாத காடுகளில் நடமாட்டத்தை பார்க்கும் ஒரு பெண் துருவனிடம் சொல்ல அன்னிய சக்திகளில் சதி திட்டத்தை முறியடிக்க, ஐந்து பெண்களுடன் போராட்டத்தில் இறங்குகிறான் துருவன் , அவன் ஜெயித்தானா, அந்த பெண்கள் அவனுக்கு உதவினார்களா..? என்பது வெள்ளிதிரையில்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (2)

ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம். கமலஹாசனுக்கு பிற்கு கோவணத்துடன் ஒரு நீள காட்சியில் வலம் வருகிறார். பயிற்சியாளராய் அவரின் பாடி லேங்குவேஜ், சண்டை காட்சிகளில் அவர் காட்டும் வேகம், பெண்களிடம் அவரின் அதட்டல் உருட்டல் செல்லுபடியாகாமல் திண்டாடும் போது காட்டும் பொறுமை.  அவரின் ப்ளான் எக்ஸிகியூஷன் போன்றவற்றில் காட்டும் நிதானம், ஆக்‌ஷன் காட்சிகளிலும், மரம், மலையில் ஏறும் காட்சிகளில் அங்கேயே வாழ்ந்தவர் போல் காட்டும் லாவகம், ரவி உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (4)

அவரின் உயர் அதிகாரியாய் வரும் பொன்வண்ணன் கேரக்டரும் அருமை. மலைஜாதியிலிருந்து ஒருவர் இந்த நிலைக்கு வந்ததை ஒவ்வொரு முறை பேசும் போதும், மட்டம் தட்டியே பேசுவதும், அவனின் வளர்ச்சி பொறுக்காமல், அவனை ஒரு காம கொடூரன் ரேஞ்சில் பில்ட்ப் செய்து அவனை கொல்ல ஆர்டர் வாங்குவதும், கடைசியில் வீர பராக்கிரம விருதை அவர் வாங்குவதும். படம் முழுக்க, இயக்குனர் தான் சொல்ல நினைக்கும் கருத்துகளை எல்லாம் இவரின் கேரக்டர் மூலமே சொல்லியிருப்பது அருமை.

ஐந்து பெண்களும் ஆரம்ப காட்சிகளில் அடிக்கும் லூட்டிகளுக்கும் இணையாய் காட்டில் அவர்கள் துருவனுடன் செய்யும் சாகசங்களில் அவர்களின் முழு ஒத்துழைப்பு தெரிகிறது. ஐந்து பெண்கள் இருந்தாலும் அடர் காட்டை போலவே ஒரு இறுக்கம் படம்  ம்ழுவதும் இருக்கிறது. ஒருதலையாய் துவனின் மீது காதல் வயப்படும் சரண்யாவை தவிர. ஏதோ வந்தோம், ஆடினோம், பாடினோம் என்றில்லாத கேரக்டர்கள்.

Jayam-Ravi-Peranmai-Stills-pics (5)

அந்த அமெரிக்க வில்லன் 70mm சைஸ் உடம்பை வைத்து கொண்டு பயமுறுத்துவதை தவிர, வேறேதும் பெரிதாய் செய்யவில்லை. டெர்மினேட்டர் பட ஹீரோவாம் மெஷின் போலவே படம் முழுவதும் வருகிறார்.

படத்தின் கேமராமேன் சதீஷ்குமாருக்கு சுற்றி போடுங்கள்.. அடர்காடுகளுக்குள் ஓடுகிறார், தாவுகிறார், நடக்கிறார், பாய்கிறார், தண்ணீரில் நடக்கிறார். நம் கண் முன்னே காட்சிபடுத்தியிருக்கிற உணர்வே இல்லாத வகையில் காட்டையும், அருவியையும், ஏரியையும், விரித்திருக்கிறார். இடைவேளையின் போது ஒரு காட்சியில், ஒரே ஷாட்டில் ஒரு மலையில் இருக்கும் கதாநாயக, ஹீரோயின்களிலிருந்து கிளம்பும் கேமரா, அப்படியே பயணித்து கீழே இருக்கும் வில்லன் இடத்தையும், அங்கேயிருந்து அவர்கள் போக இருக்கும் இடத்தையும், ராக்கெட் தளத்தையும் காட்டி இடைவேளை போடும் போது எழுந்து நின்று கைதட்ட வேண்டும் போலிருந்தது.. படம் முழுக்க இவரின் ஆளுமை அதிகம் என்றால் அது மிகையில்லை.

peranmai-movie-stills-5.jpg_800

வித்யாசாகரின் பிண்ணனி இசை சுமார் ரகம் தான். பாடல்கள் படத்தில் பெரிதாய் பிரஸ்தாபிக்க படவில்லை என்றாலும், முதல் பாடல் பரவாயில்லை ரகம், காட்டில் மாண்டேஜில் பாடப்படும் பாடலில் வைரமுத்துவின் ஆளுமை.

பாராட்ட பட வேண்டிய இன்னொருவர் ஆர்ட் டைரக்டர். காட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு என்ன ஆர்ட் டைரக்டர் என்று கேட்பவர்களுக்கு படத்தின் உபயோக படுத்தபட்டிருக்கும் அனைத்து தளவாடங்களும் அவர்கள் அமைத்ததுதான் தத்ரூபம்.

இயக்குனர் ஜனநாதன் தன்னுடய் கம்யூனிச கருத்துகளை எல்லாம் படம் பூராவும் ஏதாவது கொரு கேரக்டர் மூலம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுகிறார். பெண்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்களில்  இளமை துள்ளல்.  படத்தில் இவரது உழைப்பு மிக அதிகம். ஜெயம் ரவியுடன் பெண்கள் காட்டில் மாட்டியவுடன் அவரின் மூலம் காட்டின் நிகழ்வுகளை வசனங்களாய் அவர் சொல்ல, சொல்ல, கொஞ்சம், கொஞ்சமாய் நாமும் அவருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம். அதே போல் அவர் எதிரிகளை எதிரி கொள்லும் முயற்சிகளை, அந்த பெண்களுக்கு சொல்லும் போது, சின்ன சின்னதாய் எவ்வளவு விஷயங்களை அவர் சொல்லி கொண்டே போகிறார், யானை சாணம், மரத்தின் கிளைகளை ஒடிக்கும் காரணம், சட்டை துணி மெல்லியதய் கேட்டு அதை அடையாளமாய் கட்டும் யுக்திக்கான் காரணம், போகும் வழியை படத்தில் கேரக்டர்கள் ம்றந்தாலும் நாம் மறக்க மாட்டோம் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் நம்மை பிரிபேர் செய்து கூட்டி போகிறார்..

இவ்வளவு தூரம் உழைத்தவர் திரைக்கதையில் அந்த ஐந்து பெண்களுக்கான கேரக்டர்களை கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் நம்பகத்தன்மை வ்ந்திருக்க கூடும். என்னதான் என்.சி.சியில் அவர்கள் இருந்தாலும, பட்டின காலேஜ் ஸ்டூடண்டுகள் தான். அவர்கள் திடீரென காட்டுக்குள் தனியே அலைய ஆசைப்படுவதும், திடீரென நாட்டுக்கு பிரச்ச்னை என்றதும் உயிரை பணயம் வைத்து ராணுவ தளவாடங்களை துருவன் சொல்லி கொடுத்த உடனேயே  லாவகமாய் பயன் படுத்துவதும், சாட்டிலைட் ஏவுகணைகளை அனாயாசமாக கையாள்வதும், வந்திருக்கும் வில்லன்கள் எந்த நாட்டுகாரர்கள், என்ன காரணத்திற்காக நம் ராக்டெட் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்கள் என்று சொல்வதற்கு பதிலாய் கூலிப்படை, அந்நிய சக்தி என்று சொல்வதும் கதையின் மீதான நம்பகத்தந்மையை குறைந்து ஒரு சாதாரண பேண்டஸி சப்ஜெக்டாய் போய்விடுகிறது. என்பதுதான் வருத்தம்

இந்த படத்தில் உழைத்த அனைவரின்  உழைப்பிற்காக ஒரு ராயல் சல்யூட்

பேராண்மை – வீர்யம்

டிஸ்கி:

வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.?  அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த  திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

65 comments:

djகுரூஸ் said...

ஜனநாதன் உண்மையிலேயே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

//வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்//

>>>100% உண்மை!!!!

Prasanna Rajan said...

appa padam weighta???!! Right...

மயிலாடுதுறை சிவா said...

விமர்சனதிற்கு நன்றி சங்கர்.

இந்த படம் வெற்றி பெற வேண்டும். கருத்து அல்லது கேமரா அல்லது கதை ஏதற்காவது தேசிய விருது கிடைக்க வேண்டும்!

மயிலாடுதுறை சிவா...

Tech Shankar said...

ஈ. படம் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தீர்கள் முன்பு.

அதை எடுத்தவர் தானே இவர்.

கலக்கியிருக்கிறார் - என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது.

தமிழ் அமுதன் said...

நல்ல விமர்சனம்..!
படம் பார்க்க ஆவலாய் இருக்கு
நன்றி தலைவரே...!

Jana said...

ஈ திரைப்படத்தின் இயக்குனர் என்றதுமே, நல்லாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அது இப்போ சரிதான்.

நையாண்டி நைனா said...

paarthuduvom.

VISA said...

I was waiting for your review.
Please also read this review.

http://www.thenaali.com/thenaali.aspx?A=1175

Karthik said...

நன்றிங்ணா.. :)

மங்களூர் சிவா said...

//வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்//

சூப்பர்!

பின்னோக்கி said...

பார்க்க வேண்டிய படம் என புரிகிறது. சுட..சுட..விமர்சனம். தீபாவளி விருந்து.

kishore said...

அப்போ பார்க்கலாம்னு சொல்றிங்க.. பார்த்துடுவோம்..

geethappriyan said...

சங்கர் சார் அப்போ படம் பாக்குறோம்,

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Karthik said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :)

முதல்ல சொல்லாம போய்ட்டேன்...

Ganesan said...

ஆங்கில படங்களுக்கு நிகரான ஓளிப்பதிவு.செயம் ரவி, ஓளிபதிவாளர் சதீஷ்குமார், இயக்குனர் , முழூ டீமின் உழைப்பு தென்படுகிறது

கார்க்கிபவா said...

ஆதவனுக்கு ஆப்படிக்குமா? அதுக்குதான் வெயிட் பண்றேன் :)))

Truth said...

ஓ, பாத்தே ஆகனும் போல இருக்கே. இங்க ரிலீஸ் ஆகுமான்னு தெரியல, ஆனா பாத்துடுவேன்னு நினைக்கிறேன் :-)

இரும்புத்திரை said...

பேராண்மை விமர்சனம்

ஜெட்லி... said...

எங்க அண்ணே பார்த்திங்க???
எனக்கு படம் பிடிச்சிருந்தது அண்ணே...

பீர் | Peer said...

ம்... பார்த்திட வேண்டியதுதான்.

வந்தியத்தேவன் said...

ஞாயிற்றுக்கிழமை பார்த்துவிடவேண்டியதுதான் நான் ஆதவன் பார்த்தேன் ஜஸ்ட் பாஸ் என்றுதான் சொல்லவேண்டும். வேட்டைக்காரனை ஆதவனுடன் மோதவிட்டிருக்கலாம்.

Ashok D said...

ஈ படம் எனக்கு ரொம்ப பிடித்தது. கமர்சியல் சினிமாவில் அஸால்ட்டா சீரியசான mattera சொல்லி போவார் Director. ஈ யோட dialogues எனக்கு ரொம்ப பிடிக்கும்.

விமர்சனம் நல்லயிருக்கு படத்த கண்டிப்பா தியட்டர்ல்ல பாப்பன்.
s.p.jananathan மற்றும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

(royal salute என்பது ஒரு சரக்கு பேரு என்பது வேறு விஷயம்)

kanagu said...

kandippa paakanum na indha padatha.. :)

vimarsanam nalla irunduthu na :)

butterfly Surya said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

மேவி... said...

எனக்கு முன் தெரியும் இந்த படம் நல்ல இருக்கும் என்று.... இருந்தாலும் உங்க விமர்சனத்துக்கு தான் வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் கேபிள்ஜி


தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஷண்முகப்ரியன் said...

உங்கள் விமர்சனத்திற்குப் பிறகு இந்தப் படம் வெல்ல வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன்,ஷங்கர்.

சிம்பா said...

எனக்கு படம் திருப்தி இல்ல ஷங்கர் அண்ணா... படம் முழுக்க ஜெயம் ரவி மட்டும் நிலைச்சு நிக்கிறார். ஆனா முதல் பாதியில வரும் இரட்டை அர்த்த வசனங்கள் பசங்களையே முகம் சுளிக்க வைக்குது. இதில் மலை வாழ் மக்களை பற்றி அடிக்கடி பேசப்படும் கேவலமான வசனங்கள் சென்சார் காரணமாக இடை இடையே ஒரு கேப்.

ஒரு படம் ஜெயிக்கணும்னா அதுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வரணும். முக்கியமா பெண்களுக்கு புடிக்கணும். இது ரெண்டுமே மிஸ்ஸிங். ஈ படத்தில் எதிர்பார்ப்பில் போய் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அநேகமா ஆதவன் போட்டியில்லாம ஜெயிச்சிடும் போல தெரியுது.

அரவிந்தன் said...

//கோட்டாவில் படித்து //

அதென்ன கோட்டாவில் படித்து என்று ஒரு எள்ளல்...?

சரியில்ல கேபிள் உங்களிடமிருந்து இப்படியொரு சொல்லாடலை எதிர்பார்க்கவில்லை. இட்லி வடை எழுதலாம் நீங்கள் எழுதலாமா..?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

பாலா said...

குரு.. ஃபாலோயர்ஸ்லயும் 400 அடிச்சாச்சி! :)

வாழ்த்துக்கள்.

படம் இங்க வராது. டிவிடியே நமஹா

kishore said...

wishing you a very happy diwali

அகநாழிகை said...

நானும் படத்தை பார்த்தேன்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் படம் நன்றாக வந்திருப்பது போலத்தான் இருக்கிறது.

கேபிள் விமர்சனமும் சரியான அணுகலில் உள்ளது. பகிர்தலுக்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

Cable சங்கர் said...

/அதென்ன கோட்டாவில் படித்து என்று ஒரு எள்ளல்...?

சரியில்ல கேபிள் உங்களிடமிருந்து இப்படியொரு சொல்லாடலை எதிர்பார்க்கவில்லை. இட்லி வடை எழுதலாம் நீங்கள் எழுதலாமா..?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
//

அரவிந்தன் படம் பாருங்கள் புரியும்..:) அதை படத்தின் முக்கியமான விஷயமாய் சொல்லியிருகிறார்கள்.. தீபாவளி வாழ்த்துக்கள்.

Kumky said...

அண்ணே
“கோட்டா” என்றால் என்ன?

எனக்கு அதில் காலை எடுத்து ஒரு”ர்” போட்டாத்தான் புரியும்.

Ravikumar Tirupur said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த படத்தில் உழைத்த அனைவரின் உழைப்பிற்காக ஒரு ராயல் சல்யூட். விமர்சனம் நன்றாக இருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் cable அண்ணா...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

விமர்சனதிற்கு நன்றி சங்கர்!!

Prabhu said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

அறிவிலி said...

நல்ல படம் போல இருக்கே.. பாத்துருவோம்.

அறிவிலி said...

நல்ல படம் போல இருக்கே.. பாத்துருவோம்.

Venkatesh Kumaravel said...

விமர்சனத்துக்கு நன்றி!
படத்தின் கேமிராமேன் பதிவர் கணேஷின் உறவினர் என்று கேள்விப்பட்டேன்.

துபாய் ராஜா said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

நடுநிலையான விமர்சனம்.

பித்தன் said...

நல்ல நடுநிலையான விமர்சனம்..!
படம் பார்க்க ஆவலாய் இருக்கு
நன்றி...!

செந்தில் நாதன் Senthil Nathan said...

பார்த்துடுவோம் அப்ப!! நன்றி தலைவா!!

Cable சங்கர் said...

@டிஜேகுரூஸ்
நன்றி

@பிரசன்னா இராசன்
ஓகே

@மயிலாடுதுறை சிவா
நிச்சயம் ஏதாவது ஒன்றுக்கு கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன்

Cable சங்கர் said...

@amazing photos
ஆமாம்
@ஜீவன்
நிச்சயம் பாருங்கள் ஜீவன்

@ஜனா
ஒரளவுக்கு நம்பலாம்

@நைனா
பாத்துடுங்க
@விசா
படித்துவிட்டேன்.ஒவொவ்ருத்தருக்கு ஒவ்வொரு பார்வை

Cable சங்கர் said...

@கார்த்திக்
எதுக்கு?

@மங்களூர் சிவா
நன்றி

@பின்னோக்கி
ஆமாம் தலிவரே
@கிஷோர்
பார்கலாம்தான்

@கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
வாழ்த்துக்கு மிக்க நன்றி.. படம் பாருங்க

@கார்திக்
மிக்க நன்றி உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

@காவேரி கணேஷ்
ஆமாம் கணேஷ்

@கார்க்கி
அடிக்கலாம்

@ட்ரூத்
எங்க இருக்கீங்க நீங்க..?

@இரும்பு திரை

படிக்கிறேன்

@ஜெட்லி
சத்யம்

@பீர்
பாருங்க தலைவரே

Cable சங்கர் said...

@வந்தியத்தேவன்
ஒரே சமயத்தில் ரெண்டு மொக்கை தாங்க முடியாது வந்தியத்தேவன்

@அசோக்
தியேட்டர்ல பாருங்க
அதை ஏன்யா ஞாபக படுத்துறே..?

@கனகு
பாருங்க

@சூர்யா
நன்றி உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

@டம்பிமேவி
பார்த்துட்டு சொல்லுங்க

@

Cable சங்கர் said...

@ஷண்முகப்பிரியன்
அமாம் சார்

@சிம்பா
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.. ஆதவன் அப்படியெல்லாம் ஓடாது.

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
ஆமாம் நன்றி
டிவிடில பாருங்க

@கிஷோர்
நன்றி தீபாவளி வாழ்த்துக்கள்

@அகநாழிகை
நன்றி

@கும்க்கி

கோட்டா ர் போட்டு அடிச்ச உடனே எனக்கு போன் பண்ணுங்க

Cable சங்கர் said...

@ரவிகுமார் திருப்பூர்
நன்றி. ஆமாம்

@சரவணக்குமார்
நன்றி.. தீபாவளி வாழ்த்துக்கள்

@செந்தில்வேலன்
நன்றி

2பப்பு
நன்றி உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@அறிவிலி
ஆமாம்

@வெங்கிராஜா
நன்றி.. ஆமாம்

@துபாய்ராஜா
நன்றி

@பித்தன்
நன்றி

@செந்தில்நாதன்
பார்த்துட்டு சொல்லுங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/10/blog-post_17.html

எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை

Beski said...

விமர்சனம் அருமை. பார்க்கிறேன்.

Truth said...

//எங்க இருக்கீங்க நீங்க.

நான் லண்டன்ல இருக்கேங்க. கமெண்ட் அடிச்ச பிறகு மறுபடியும் செக் பண்ணினேன். ரிலீஸ் ஆகியிருக்கு. இன்னைக்கு தான் பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்கு.
நான் ஆரம்பத்துல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். பொண்ணுங்க த்ரூவோட க்லாஸ் அட்டெண்ட் பண்ண மாட்டோம்னு சொல்லிட்டு ஒரு கம்ப்ளெயிண்ட் பண்றாங்கல்ல, அங்க இருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன். ஏதேனும் மிஸ் பண்ணிட்டேனா? மறுபடியும் பாக்கணுமா? எப்படியும் இன்னொரு முறை பாப்பேன். :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

உடனே ஓடிப்போய் புக்கப்போறேன்

Cable சங்கர் said...

@ஞானப்பித்தன்
பார்க்கிறேன்

@எவனோ ஒருவன்
நன்றி.. பாருங்கள்

@ட்ரூத்
இல்ல கொஞ்சம் தான் பரவாயில்லை.

@கிறுக்கல் கிறுக்கன்
பண்ணுங்க

பா.வேல்முருகன் said...

//ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம்//

உண்மைதான்.. வித்யாசமான கேரக்டர். நன்றாக உழைத்திருக்கிறார். படம் கண்டிப்பாய் வெற்றிதான்.

ssr said...

I saw this movie today. its an excellent movie in the tamil industry. I am sure this movie will will attract the world cinema including the hollywood industry. excellent hard work by jeyam ravi. hats off to the director jananathan. jananathan is a great architect of this movie. THANK YOU DIRECTOR FOR GIVING SUCH AN AMAZING MOVIE!!!

EVERY INDIAN SHOULD WATCH THIS MOVIE. EVERY TAMILAN SHOULD HAVE TO WATCH THIS MOVIE!

அக்னி பார்வை said...

தீபாவிளிக்கு ஒரு படம் தேரிச்சு

ARV Loshan said...

படம் பார்த்த பிறகே உங்கள் விமர்சனம் வாசிக்கவேண்டும் என்றிருந்தேன்..

இரண்டுமே அருமை..(படம் &விமர்சனம்)

சில இடங்களில் கொஞ்சம் தொய்வாகவும், அதிகமான கருத்துக்களை ஒரே நேரத்தில் இயக்குனர் சொல்கிறாரோ எனத் தோன்றினாலும் முயற்சி,உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ரவிக்கு ஒரு திருப்புமுனை.

//வில்லு, ஏகன் போன்ற மொக்கை படங்களை எடுத்து சுட்டுக் கொண்ட ஐங்கரனுக்கு இதிலாவது ஒரு லைட் அடிக்கிறாதோ இலையோ.? அட்லீஸ்ட் ஒரு நல்ல படத்தை எடுத்த திருப்தியாவது அவர்களுக்கு கிடைத்திருக்கும்//

முழுக்க முழுக்க சரி,, :)

soma said...

second half is slow and no twist after that.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா படம் பார்த்துட்டேன். படம் சூப்பர். ஆமா ஏன் கமலா தியேட்டர் ல இவ்ளோ மரியாதை கொடுக்குறாங்க. அங்க கொடுக்குற மரியாதையை பார்த்துட்டு என் நண்பன் இனிமே கமலா தியேட்டர் க்கு வரேவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கமலா தியேட்டர்ல பார்கிக்ங் பதினஞ்சு ரூபா. ஆனாலும் வண்டி வெயில்லயும் மழைலயும் காயனும்

P.P.S.Pandian said...

இன்றுதான் பேராண்மை படம் பார்த்தேன்.நம்மையும் கட்டுக்குள்ளே அழைத்து செல்கிறார் டைரக்டர்.நல்ல படம். உங்கள் விமர்சனம் அருமை
ப.சேர்முக பாண்டியன்

ரவி said...

"At Dawn It's Quiet Here" என்ற திரைபடத்தின் அப்பட்டமான காப்பி