Dil Bole Hadippa - Hindi Film Review

ஹாஹித்கபூர், ராணிமுகர்ஜி, அனுபம்கெர், யாஷ் சோப்ரா, யாஷ் ராஜ் பிக்ச்ர்ஸுனதும், ஒரு சின்ன எதிர்ப்பார்போட போய் உட்கார்ந்தேன். வழக்கமான ஒரு படமாயிருச்சு..
ராணி அமிரிஸ்தரில் ஒரு கிராமத்தில் வசிப்பவள், அவளின் மிக சிறந்த திறமை கிரிக்கெட், அதுவும் பெட் கட்டி பேக் டூ பேக் சிக்ஸர் அடிப்பவள், இடது, வலது என்று இரண்டு வகையிலும் ஆடக்கூடியவள். சுட்டித்தனமும், துறுதுறுப்பும் துள்ளும் இளம் பெண்.

லண்டனிலிருந்து தன் கிராமத்துக்கு வந்திருக்கும், அனுபம்கெரும், அவரது பாகிஸ்தானி நண்பர் திலீப் தாகிலும் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் இருவரும் வருடா வருடா பாகிஸ்தானில் ”அமான் டிராபி” என்று ஒரு கிரிக்கெட் போட்டி இணைந்து நடத்துவார்கள்.. அதில் இந்தியா டீமான அனுபம் கெரின் டீம் கடந்த ஒன்பது வருடங்களாய் தோற்று கொண்டிருக்க, அந்த டீமுக்கு ஆக்ஸிசன் கொடுக்க தன் மகன் லீக் கிரிக்கெட்டரான ஷாஹித்தை அழைத்து வருகிறார்.
சக்தே இந்தியாவில் ஷாருக் போல இவரும் புதியதாய் ஒரு இளைஞர் அணியை உருவாக்க, முயற்சிக்க, கிரிக்கெட் வெறியரான ராணி விளையாட போக, அவர் பெண் என்பதால் ஒதுக்க படுக்கிறார். அந்த நேரத்தில் எப்படியாவது கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஆண் வேடத்தில் டீமில் சேருகிறார். இதற்கிடையில் ஒரிஜினல் ராணிக்கும், ஷாகித்துக்கும் காதல் வேறு.. ஷாகித்துக்கு உண்மை தெரிந்ததா..? ராணியின் கனவு பலித்ததா..? இந்தியா கோப்பையை வென்றதா..? இருவரின் காதல் ஜெயித்ததா.? போன்ற கேள்விகளுக்கு முடிந்த வரை சுவாரஸ்யமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

ஆண் வேடம் போட்டு வரும் ராணி முகர்ஜியின் நடிப்பு.. அருமை.. வீர் சிங் என்று பேரை வைத்து கொண்டு, குட்டியாய் ஒரு சிங் பையனை கண் முன்னே நிறுத்துகிறார். ராணி , ஷாகித்துடன் காதல் காட்சிகளில் கார்ஜியஸ்.
ஷாகித்துக்கு பெரிதாய் வேலையில்லை.. முடிந்த வரை ஷாருக்கை இமிடேட் செய்யாமல் நடிக்க முயற்சித்திருக்கிறார்.
அதே போல் அனுபம்கெர், தீலீப் தாகில் குறையொன்றுமில்லை..

பாடல்கள் சுமார் ரகமே.. க்ளைமாக்ஸ் கிரிக்கெட் மேட்ச் காட்சிகள் ஏதோ லோக்கல் டீவியில் காட்டப்படும் மேட்ச் போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
திரைகதை அவ்வப்போது விழுந்து,விழுந்து எழுகிறது.. சில சமயம் கொட்டாவியை அடக்க முடியவில்லை.. இயக்குனர் அனுராக் சிங்கின் இரண்டாவது படம்.. வழக்கமான யாஷ்ராஜ் பார்முலா படம்..
Dil Bole Hadippa- Dil Bole ஆவரேஞ்பா..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
நானும் பாத்த உடனே நல்லா இருக்கிற மாதிரிதான் தெரிஞ்சது. சுமார்தான்...
பிரபாகர்.
இன்னும் எத்தன படத்துலதான் பெண், ஆண் வேசம் போட்டு யாராலையும் கண்டுபிடிக்கமுடியாதபடி (?!) அலையவிடுவாங்களோ தெரியல...
விமர்சனம் நல்லாருக்கு தலைவா....
அண்ணே... என்னை மாதிரி அப்பாவிகள் வந்து போற இடம் இது.... இங்கே இப்படி கொத்து பரோட்டாவிலே போடுற டபுள் மீனிங் மேட்டரை இங்கே எழுதலாமா!!! அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தனியா போக வாய்ப்பில்லையே.....(தியேட்டர்ல ஆளே இல்லைன்னு கேள்விபட்டேன்)
அந்த படத்தை இவனுங்க ரீமேக்கிருக்கானுங்களே..எப்படி இருக்கும்னு யோசிங்க :)
ஆனா இதே போல் ஒரு ஆங்கிலப் படம் ஒன்று இருக்கு. அதுல கால் பந்து. படத்தோட பேரு மறந்துடுச்சு
russia அல்லது poland படம் ஒன்னு இதே மாதிரி இருக்கும் தல ..... காலேஜ் டைம் ல பார்த்து இருக்கிறேன்
ரெண்டும்கெட்டான்படம் தலைவரே
@பாலாஜி
சினிமா இருக்கிற வரைக்கும்
@அசோக்
போட்டுருவோம்
@
எதுய்யா டபுள் மீனீங்.. வர வர எவன் எவன் சின்ன் புள்ளைங்க்னு பிரியவே மாட்டேங்குதே..?:)
@ஜெட்லி
ஆமா.. ஆளேயில்லின்னு உனக்கெப்படி தெரியும்
@பின்னோக்கி
இங்கிலீஷ்ல வந்திருக்குண்ணே.. ஆமா புட்பாலுக்கு பதிலா கிரிக்கெட்
நன்றி
@கார்த்தி
அவர்க்ள இந்த மாதிரி படங்கள் தோல்விஅடையற் வரைக்கும்
@பப்பு
சொல்லிக்கிறா மாதிரி ஏதுவும் இல்லை.. அதனால்..
ஆமாம்
@அசொக்
இதில என்ன கொடுமை.. தலைவரே
3பின்னோக்கி
அதான் சொல்லிட்டேனே ரொம்ப ஆவரேஜ்
@டூருத்
பார்க்க வேண்டாம்
2ஷண்முகப்பிரியன்
ஆமாம் சார்.. ஆனா இவங்க அளவுக்கு வேற யாராவது நடிச்சிருப்பாஙக்ளான்னு ஒரு கேள்வியும் வருது.. சார்.
2டம்பிமேவி
ஓடுது
இங்கிலீஷிலேயே வந்திருக்கு, எதுக்கு எதோ ஒரு லேண்ட் எல்லாம்..:)
@ரவிகுமார் திருப்பூர்
தமிழ்ல எல்லாம் இந்த மாதிரி படம் வர கொஞ்சம் நாள் ஆகும் தலைவரே..
நமக்குன்னு ஒரு கடமையிருக்கில்லா..