இலக்கில்லாது வாழும் ஒரு பணக்கார இளைஞனுக்கும், ஒர் இலக்கோடு மும்பை வரும் பெண்ணொருத்திக்கும் இடையே நடக்கும் ஃபீல் குட் ரொமாண்டிக் கதை.
மிக இயல்பாய் ஆரம்பிக்கிறது கதை. பெரிய பிஸினெஸ் சாம்ராஜ்யத்தை ஆளூம் அனுபமுக்கு ஒரே மகன் சித்தார்த எனும் ரண்பீர். அவனுக்கு என்று ஒரு குறிக்கோளோ, ஆசையோ, காதலோ என்று எதுவுமே இல்லாமல் வாழும் ரண்பீருக்கு ஒர் நாள் இரவில் ஆயிஷா எனும் கொங்கனாவிற்கும் நட்பு வர, இருவரும் ஒருவருக்கொருவர் இ-மெயிலில் தொடர்பு கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் அப்பாவின் கம்பெனியில் ட்ரெயினியா இருந்து வரும் ரண்பீர் அவரிடமிருந்து தப்பிக்க, கொங்கனாவுக்கு வீடு பார்த்து கொடுக்க அலைய, ஒரு வீட்டை பிடித்து போய் அவருக்கு பிக்ஸ் செய்து கொடுத்து கூடவே இருந்து உதவுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரின் பரிட்சை ரிசல்டில் பெயிலாகிவிட, அதை கேட்கும் அம்மாவிடம் அவர் ஷ்ட் அப் என்று சொன்னதற்காக அனுபம் மன்னிப்பு கேட்க சொல்ல, இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற சொல்ல, கோபித்து கொண்டு தனக்கு இருக்கும் ஒரே நண்பியான கொங்கனாவின் வீட்டிற்கு செல்கிறான். ரண்பீர். அதன் பிறகு ரண்பீருக்கும் கொங்கணாவிற்கும் இடையே காதல் மலர்ந்ததா.? ரண்பீர் வாழ்கையை புரிந்து கொண்டானா..? என்பதை மனதை வருடிய படி சொல்லியிருக்கிறார்கள்.
ரண்பீர் திரையில் தோன்றியதும் தியேட்டரில் இருந்த பெண்கள் பகக்த்தில் இருந்து ஒரே கூச்சல்.. விசில் எல்லாம் நிஜமாகவே அவ்வளவு க்யூட்டாக, ஹண்ட்ஸம்மாக இருக்கிறார். ஃபைனல் இயர் காலேஜ் ஸ்டுடண்டை கண் முன்னே நிறுத்துகிறார். முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு அலைவதாகட்டும், ஒரு சின்ன குழந்தையை போல கொங்கணாவை சந்தோசபடுத்த ஆம்லெட் போடும் இடமாகட்டும், வீட்டை விட்டு அப்பா துரத்தியவுடன், நேராக கொங்கணாவின் வீட்டிற்கு போய், கண்களிலில் நீர் முட்ட, அவரை அணைத்து கலங்குவதாகட்டும்.. மனதில் நிற்கிறார்.
கொங்கணாவிற்கு லட்டு சாப்பிடுவது போன்ற ரோல் சும்மா லெப்டில் அடித்து தள்ளுகிறார். பல இடங்களில் பாடிலேங்குவேஜிலும், முக எக்ஸ்பிரஷனிலும் பின்னி எடுக்கிறார். கேர்ள் நெக்ஸ்ட் டோர் உணர்வு இருக்கும் வரை இவரை விட்டால் இம்மாதிரியான ரோல்கள் அவருக்கு ஜூஜூபி.
இவரும் தன் பங்குக்கு, நாம் ஏன் நண்பர்கள் தாண்டி ஒரு உறவாக கூடாது என்று கேட்கும் ரண்பீரிடம் அவரின் கனவுகளை சொல்ல, அவர் கனவாய் நினைத்த பாஸ் அவரிடம் வெளியே அவுட்டிங் போக கூப்பிட, அன்று முழுவதும் அவருக்கே புரியாத ஜாஸ் இசையை நொந்து போய் கேட்டுக் கொண்டு கைதட்டுவதும், ரண்பீர் ஆபீஸ் தாண்யாவுடன் பார்ட்டிக்கு போக, ஈகோவினால் வரவில்லை என்று சொல்லிவிட்டு போரடித்து போய் எதிர் வீட்டு பெண்ணுடன் தண்ணியடிப்பதும், தான்யா வீட்டிற்கு வந்து போனதன் பொறாமை காரணமாய் ரண்பீரை காயப்படுத்தி பின்னர் அதே காட்சியில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடி கோபத்தை மறைப்பதாகட்டும். கொங்கணா.....
படத்தில் பாராட்டபட வேண்டிய இன்னொரு நபர், ஷங்கர்- இஷான் – லாயின் இசை. பெரிய சூப்பர் ஹிட் பாடல்களாய் ஏதும் இலலவிட்டாலும், படம் நெடுக மாண்டேஜில் ரம்மியமான பாடல்களை உலவ விட்டிருக்கிறார்கள்.
திரைக்கதை ஆங்காங்கே யூத்புல்லாக இருந்தாலும், கொஞ்சம் ஸ்லோவாகவே இருக்கிறது.. ஒரு சில காட்சிகள், அதுவும் அப்பாவும் பையனும் பேசிக் கொள்ளும் இடமாகட்டும், கொங்கணா, ரண்பீருக்கு வேலை வாங்கி தரும் இடமாகட்டும், ஏற்கனவே தமிழிலும், மற்ற மொழிகளீலும் பார்த்த படத்தின் காட்சிகள் வந்தாலும் அதை ப்ரெசெண்ட் செய்தவிதம் க்யூட்.
மிக இயல்பான காட்சிகள், உறுத்தாத நடிப்பு, லைவ்வான டயலாக்குகள், என்று க்யூட்டான ஸ்லோ பேஸ்டு ரொமாண்டிக் ஃபீல் குட் படத்தை அளீத்திருக்கிறார்கள், இயக்குனர் அயன் முகர்ஜியும், தயாரிப்பாளர் கரண் ஜோகரும்..
Wakeup Sid – Lovable Feel Good Romantic Movie Even though A Bit slow.
Post a Comment
29 comments:
hindi padam.. nalla irukkunu solreenga anna..
aana subtitle illama enaku onnume puriyathu :(
கொங்கனா மீது எனக்கு அவ்வளா "ஈர்ப்பு" வரலையே சங்கர்.. உங்களுக்கு பிடிச்சுருக்கா என்ன?
Off-topic:
அப்புறம் நேத்து தான் நான் தெலுங்கு கிக் (Kick) பாத்தேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது... ரவி தேஜா மெரட்டிருக்காரு.. (பாவம் நம்ம ஜெயம் ரவி தமிழ்ல என்ன பண்ண போறாருன்னு தெரியல).. இலியனா கேக்கவே வேணாம்.. பிரம்மானந்தம் superb..
இந்த படத்துக்கு நீங்க ஏன் விமர்சனம் பண்ணல?
கொங்கனா, நம்ம தாம் தூம் கொங்கனாவா?
மொழி கத்துக்கணுமின்னா.. படம் பார்க்க ஆரம்பிங்க கனகு.. கொஞ்சம் கொஞ்சமா பழகிரும்.. அப்படிபடம் பார்த்து தான் நான் தெலுங்க்கு கத்துகிட்டேன். இன்னிக்கு தெலுங்கு ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்ற அளவுக்கு
/கொங்கனா மீது எனக்கு அவ்வளா "ஈர்ப்பு" வரலையே சங்கர்.. உங்களுக்கு பிடிச்சுருக்கா என்ன?//
எனக்கு கொங்கணாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். நம்ம பக்கத்துவீட்டு பொண்ணு மாதிரியும் தெரிவாங்க, திடீர்னு ஒரு ஹெப் லுக்கும் வந்திரும்
Off-topic:
அப்புறம் நேத்து தான் நான் தெலுங்கு கிக் (Kick) பாத்தேன்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது... ரவி தேஜா மெரட்டிருக்காரு.. (பாவம் நம்ம ஜெயம் ரவி தமிழ்ல என்ன பண்ண போறாருன்னு தெரியல).. இலியனா கேக்கவே வேணாம்.. பிரம்மானந்தம் superb..
இந்த படத்துக்கு நீங்க ஏன் விமர்சனம் பண்ணல?
//
என்னது விமர்சனம் போடலையா..?http://cablesankar.blogspot.com/2009/05/kick-telugu-film-review.html அப்ப இது யார் எழுதினதாம்.?
இல்லை முரளீ இது கொங்கணா சென்.. அது கங்கனா ராவத்
"Wakeup Sid – Lovable Feel Good Romantic Movie Even though A Bit slow."
ninaichen .... ninaichen...
Lovable Feel Good Romantic Movie Even though A Bit slow.//
அப்போ நம்ம பாலாவுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்,இல்லையா ஷங்கர்?
//என்னது விமர்சனம் போடலையா..?http://cablesankar.blogspot.com/2009/05/kick-telugu-film-review.html அப்ப இது யார் எழுதினதாம்.?//
நான் எப்படி இத படிக்காம விட்டேன்னு தெரியலையே..
வேறொன்னும் இல்ல சங்கர்.. புதுசா இப்போ பாக்குறமாதிரி படங்கள் இல்லையா.. அதான் உங்களோட Archives-ல போய், நல்ல விமர்சனங்கள் வாங்கின ரெண்டு படங்கள தேடிபிடிச்சு பாத்தேன்..
(New York & Konjam Ishtam Konjam Kashtam).. அப்போ கடைல கூடுதலா இலியனா, ரவி தேஜாவுக்காக வாங்கின DVD தான் Kick..
மூணு படங்களுமே நல்ல இருந்துது..
ஆமா, மகதீரா DVD இன்னும் ரிலீஸ் ஆகலையா என்ன?
Story line looks very similar to Gogulathil seethai and thambikku entha ooru...something something????
அண்ணா...
பார்க்கலாம் என wake up கால் கொடுத்ததற்கு நன்றி.
பிரபாகர்.
ஓட்டும் போட்டுட்டேன்..... 2/2...
// இன்னிக்கு தெலுங்கு ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்ற அளவுக்கு
//
கலக்குங்க ஜி.............
நைஸ், நைஸ், பார்க்கலாம்...கான்களுக்கு வயதாயிடுத்து, இப்ப பாலிவுட் இளம் ஆம்படையான் இந்த சித்தார்த்த தானாம்னோ.
ஹிந்தி படம் எங்க போய் பார்க்குறதுங்க... தியேட்டர் போக முடியாது..வேற எதாவது வழி இருந்தா சொல்லுங்க..புண்ணியமா போகும்
நன்றி ஜி.
நமக்கும் ஹிந்தி தெரியாது. டிவிடி வாங்கி சப்டைட்டிலோடத்தான் பாக்கனும்.
கொங்கனா சென்..
என் உள்ளம் கவர்ந்த
கள்ளி..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
anna vimarsanam super! thelungu, hindi,nu vithyasama pindranga....tamil,a oru theakka nilai irukku. malayala pada vimarsanam eathum varrathu illayea? y?
Vanakkam thiru.sankar avarhalae,
Naan silavaaranglaaaha ungal vimarsanangalai padithuvaruhiraen.Matravarhalaippol oru thalaippatchamaaha ilaamal naermayaaga vimarsippadhu kandu mahilchi.
ungal pani inidhae thodara vaazhthuhal.
அழகான விமர்சனம்.. :)
கொங்கனா சென்... 'ஓம்காரா'ல பாத்தேன்னு நினைக்குறேன்....
/*மொழி கத்துக்கணுமின்னா.. படம் பார்க்க ஆரம்பிங்க கனகு.. கொஞ்சம் கொஞ்சமா பழகிரும்.. அப்படிபடம் பார்த்து தான் நான் தெலுங்க்கு கத்துகிட்டேன். இன்னிக்கு தெலுங்கு ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்ற அளவுக்கு*/
கண்டிப்பா பாத்து மொழி அறிவ வளத்துக்குறேன் அண்ணா... :)
@டம்பிமேவி
நினைச்சியா போய் காய போடு..::)
@ஷண்முகப்பிரியன்.
ஆமா சார்.
@பிரசன்னா
பைரஸி வேணுமின்னா கிடைக்கும்
@சிவகுமார்
நிச்சயமாய் நீங்கள் சொன்ன படத்தின் எந்த சாயலுக்குமான முகாந்திரம் இலலை தலைவரே
@பிரபாகர்
நிச்சயம் பார்க்கலாம் பிரபா..
@ஜெட்லி
நன்றி
@ஜனா
ஆமாம் ஜனா.. பையன் செம க்யூட்
2பின்னோக்கி
டிவிடியே சரணம்
@அசோக்
அப்படியா../ எனக்கும் தான்
@ரவிகுமார் திருப்பூர்
அப்படியில்ல ரவி தமிழ்லயும் இதே மாதிரி பீல் குட் படமா திருதிரு துருதுரு வந்திருக்கே
@
@திருமலை
உங்களின் புதிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி மேலும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறென்.
@கார்த்திக்
மிக்க நன்றி
@பப்பு
ஓக்கார்லயா..?
@கனகு
தலைவரே ஏதோ அட்வைஸ் பண்ணிட்டனோன்னு தோணுது.. அப்படி பீல் பண்ணீங்கன்னா.. சாரி.. என்னோட அனுபவத்தை சொன்னேன்.
/*தலைவரே ஏதோ அட்வைஸ் பண்ணிட்டனோன்னு தோணுது.. அப்படி பீல் பண்ணீங்கன்னா../
அப்படியெல்லாம் எதுவும் இல்ல அண்ணா.. நீங்க உங்க அணுபவத்துல இருந்து சொல்றீங்க... அத கேட்டு நான் கத்துகிட்டா நல்லது தான்... :)
Konkana romba serious ana characterle nadichavanga inda moviela romba un naturala feel panne, avanga nadippu naduvile sila edathile overact panna madiri irundadu
ஹிந்தி படம் எல்லாம் இப்ப சூப்பரா எடுக்க ஆரமிசிடாங்க இந்த படத்தையும் பார்த்தடனும் பாஸ் . நல்ல விமர்சனம் .
Post a Comment