Thottal Thodarum

Nov 30, 2009

கொத்து பரோட்டா –30/11/09

துபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குறும்படம்
மனதை அறுக்கும் குறும்படம். நிறைய விருதுகளை அள்ளிய படம். பட் சிம்பிள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சாப்பாட்டுக்கடை
அரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அரசியல்
சென்னையில் முக்கிய ரோடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு அனுமதி வாங்குவதற்குள் அந்த திரைப்ப்டத்த்ன் மேனேஜர், நொந்து நூலாகிபோய் விடுவார். அப்படியே போராடினாலும் நடு ராத்திரிக்கு தான் அனுமதி கிடைக்கும். ஆனால் சன் டிவி தயாரிக்கும் எந்திரன் படத்துக்கு, கத்திபாரா மேம்பாலத்தில் காலை ஆறு மணியிலிருந்து பதினோரு மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்க, அவர்கள் காலை நாலு மணியிலிருந்தே இடத்தை ஆக்கிரமித்து கொள்ள, மேம்பாலம் பூராவும் ட்ராபிக் ஜாம். மேலே போன வண்டியை எல்லாம் கீழே அனுப்ப, ஒரே களேபரம். மதியம் 12 மணிக்குதான் பேக் அப் ஆனார்கள்.. மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விஷுவல் டேஸ்ட்
என்னுடய நோக்கியா ஸ்லைட் 3600வில் எடுத்தது. போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.

Image0198 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
டார்க் ஜோக்

டீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான்

டீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு? இப்ப நல்லாத்தானே இருக்காரு.?” என்று கேட்க

வெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ரெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏ ஜோக்
ஒரு பெண் அரசு அதிகாரி ஆஸ்பிடல்களுக்கு செக்கிங்குக்கு போக, அங்கே ஒரு பேஷண்ட் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதை பார்த்து “ என்ன இது அநியாயம்? “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று டாக்டரிடம் கேட்க, “இவருக்கு அதே வியாதிதான். பட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் என்றார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பொன்மொழி
விஜய் மல்லையா: உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாரம் ஒரு பதிவர்
தமிழ்மாங்கனி என்கிற பெயரில் எழுதி வரும் இவர் ஒரு மாணவி. கவிதை, கதை, கட்டுரை, இசை என்று கலந்து கட்டி சுருக்கமாய் எழுதி வருபவர். இன்றைய ”என்” போன்ற யூத்துகளின் நாடியை பிடிக்க.. http://enpoems.blogspot.com/2009/11/9.html
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 29, 2009

நான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்

naan avan illai

அதே ஜீவன், அதே இயக்குனர் செல்வா, அதே கதை, அதே தயாரிப்பாளர், வேறு ஒரு செட் ஹீரோயின்கள் என்று மீண்டும் அதே படத்தை கொடுத்திருக்கிறார்கள்

முதல் பாகத்தில் ஏற்கனவே ஏதோ வெளிநாட்டில் தப்பித்து இருப்பதாகவும், மீண்டும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் காட்சியுடன் முடிந்த இடத்திலிருந்து, ஆர்ம்பிக்கிறது படம். சுவிசர்லாந்தோ என்னவோ ஒரு ஊரில் ஒரு பெரிய திருடி சாமியாரிணியாக மாறி தன்னுடய கடவுள் என்று ஜீவனின் போட்டோ பேப்பரில் வெளிவர, அதை பார்த்த ஒரு தெலுங்கு காரப் பெண், ஒரு அல்ட்ரா மார்டன் திருடி, நடிகை லஷ்மிராய் என்று எல்லோரும் அதை பார்த்து அவனை தேடி சாமியாரிணியை அணுக,
naan avan illai 1

இன்னொரு பக்கம் மொட்டை அடித்த ஜீவன் சங்கீதாவின் பின்னால் அலைய, காலை இழுத்து, இழுத்து, நடக்கும், திக்கி, திக்கி பேசும் சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்க, அவருக்கு ஒரு ப்ளாஷ் பேக், அவருக்காக உதவ நினைக்கும் ஜீவன்,

ஏற்கனவே முதல் பாகத்தில் வந்தது போலவே டெம்ப்ளேட் திரைக்கதையில் நடு, நடுவே சங்கீதாவின் கதை ஓடுவதை தவிர பெரிசசாய் ஒன்றுமில்லை.
naan avan illai 2

அல்ட்ரா மார்டன் பெண் ஏற்கனவே கல்யாணமான இந்திய கணவர்களை வலையில் விழ வைத்து, அவனிடமிருந்து பணம், வைரங்களை பெற்றபின், அவனது மனைவிகளூக்கு போன் செய்து அவனிடமிருந்து பணம் பறிப்பதை வாடிகையாக கொண்டவளிடம் ஜீவன் ஏமாற்றி கொள்ளையடிப்பது, எல்லாம் படு செயற்கை.
naan avan illai 3

லஷ்மிராயிடம் டபுள் ஆக்‌ஷன் அண்ணன் தம்பி கேரக்டராய் வலம் வந்து, 28 கோடி ஏமாற்றுவது எல்லாம் ரொம்பவே அமெச்சூர்தனம். ஏமாற்றும் வித்தையில் இண்ட்ரஸ்டாய் இருப்பது லோக்கல் தாதாவாக இருக்கும் பெண்ணிடம் தான் தான் கவிஞ்சர் வாலி என்று சொல்லி வாலி எழுதிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரின் நெஞ்சில் கை வைத்து சொல்வதும் அதை கேட்டு, அவர் ஜீவனை தன் குருவாய் ஏற்றுக் கொண்டு, எலல பணத்தையும் கொடுத்து விட்டு சாமியாரிணியாவதும் இண்ட்ரஸ்டிங்க்.

ஜீவன் வழக்கம் போல கருங்கல்லை போல எட்டடிக்கு நடிக்க தெரியாமல் நிற்கிறார்.  முகத்திலோ, அல்லது டயலாக் மாடுலேஷனிலோ கொஞ்சம் கூட எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாமல் கடனே என்று வந்து போகிறார். கொஞ்சமாவது நடிக்க சாமி. அல்வா மாதிரியான கேரக்டர்.. என்னமாய் பின்னலாம். ம்ஹும்.

நான்கு கதாநாயகிகளும் முடிந்தவரை எவ்வளவு குறைவாய் உடை போட முடியுமோ.. அவ்வளவு குறைவாய் போட்டு அலைகிறார்கள். சங்கீதா கேரக்டர் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
naan avan illai 4

மயில்சாமி படம் முழுவதும் ஜீவனின் அஸிஸ்டெண்டாக வருகிறார். பெரியதாய் ஏதும் செய்ய வாய்ப்பில்லாமல், கிடைத்த் இடத்தில் எல்லாம் கோல் அடிக்க முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் இன்னும் கொஞ்சம் இவரை யூஸ் செய்திருக்கலாம்.

பாலமுருகனின் கேமரா சுவிச்சர்லேந்து அழகை பற்றி கவலை படாமல் ஏதோ மன்னார்குடி தெருவில் எடுத்ததை போல கடமையே என்று எடுத்டிருக்கிறார்.

வசனம் பட்டுகோட்டைபிரபாகர்.. நத்திங் டு சே. டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் தேறும். மரியா பாடல் இண்ட்ரஸ்டிங்

கதை, திரைகதை, வசனம், இயக்கம், செல்வா. க்ளைமாக்ஸ் காட்சியில் சர்ச்சில் போப் போல உடை மாட்டிக் கொண்டு ஜீவன் பேசும் காட்சிகள் எல்லாம் படு காமெடி. எல்லோருடைய ஏமாற்றத்துக்கும் காரணம் இது என்று அவர் ஏமாற்றியதை ஜஸ்டிபை செய்வதை போன்ற காட்சிகள் எல்லாம் படிப்பதற்கு ஒத்துவரலாம் படம் பார்க்கும்போது முடியலடா சாமி. படம் முழுவதும்,விறுவிருப்பாய் சொல்வதாய், கட் டூ கட்டில் ஓடுகிறது.

நான் அவன் இல்லை 2-   பார்ட் 3  வந்திருமோ.???



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 28, 2009

Tsotsi (எ) யோகி – திரை விமர்சனம்

tsotsi

Tsosti சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஸ்லமில் இருக்கும் அநாதை டீன் ஏஜர். சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டு முட்டி மோதி இந்த ஸ்லம்மில் செட்டிலானவன். அவனும், அவனுடய கூட்டாளிகளும் வழக்கமாய் இம்மாதிரியான சிறுவர்கள் ஈடுபடும், கொள்ளையில் ஈடுபட்டு பணத்தை திருடி குடித்தும், பெண்களுடனுமாய் அலைய, ஒரு நாள் ஒரு கொள்ளையை நடந்த்திவிட்டு ஓடி வரும் போது ஒரு காரை திருட எத்தனிக்க, அதை தடுக்கும் பெண்ணை சுட்டுவிட்டு, காரை திருடிக் கொண்டுவர, கொஞ்சம் தூரம் ஓட்டி வந்த பிறகு பின்னால் சத்தம் வர, பார்த்தால் ஒரு கைக்குழந்தை, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு போக மனமில்லாமல் குழந்தையை ஒரு பேப்பர் பேக்கில் போட்டுக் கொண்டு தன் வீட்டில் வைத்து பராமரிக்க ஆரம்பிக்க,ஒரு கட்டத்தில் குழந்தையால் அவனுடய வாழ்கையில் மாற்றம் ஏற்பட, அந்த குழந்தையை ஒரு கட்டத்தில் அதன் தாயிடமே கொண்டு போய் விட போகும் போது அவனை போலீஸ் கொன்று விடுகிறது.
yogi pic

மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் யோகி படத்தில் வரிசைக்கிரமமாய் அச்சு அசலாய் இருக்கிறது என்ன டீன் ஏஜ் பசஙக்ளுக்கு பதிலாய் நாற்பது வய்து யூத்துகள். அவர்கள் ஸ்லம்மில் சுற்றும் காட்சிகள், மற்றும் கொலை, கொள்ளை செய்யும் காட்சிகள் எல்லாம் இதைவிட லைவ்வாக பல படங்களில் பார்த்தாகிவிட்டது. அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. முக்கியமாய், சென்னை ஸ்லம் ரவுடிகளை பற்றிய படமாக்கும் போது அதனுடய நேட்டிவிட்டியும், லாங்குவேஜ், பாடி லேங்குவேஜ் போன்ற வற்றை படத்தில் பிரதிபலித்தால்தான்  படத்தோடு ஒட்ட முடியும்,  அதுவே இதில் பெரிய சைபர்.  ஒரிஜினல் படத்தில் கைக்குழந்தையோடு ஒரு பெண் அலைய, அந்த பெண்ணை, மிரட்டி, தன் குழந்தைக்கு பாலூட்ட சொல்வதும், பின்பு அவளுடன் நெருக்கமாவதும், குழந்தைக்கு பாலுட்ட மில்க்மெயிட் ஊட்டிவிட்டு அப்படியே போய்விட திரும்ப வரும் போது குழந்தையை எறும்பு கடித்து அழுவதும், அதே போல் குழந்தையை திருடிய வீட்டிற்கே போய் மீண்டும் கொள்ளை அடிக்க போவது, போய் திரும்பும் போது குழந்தைகளூக்கான பொருட்களை எடுத்து வருவதும், அங்கே நடக்கும் பிரச்சனையில் கூட்டாளியையே போட்டு தள்ளூவது, என்று மிச்சம வைக்காமல் ஒரிஜினல் படத்தின் எல்லா காட்சிகளும்.
tsotsi-10 yogi 2

அமீர் நடக்கிறார், ஜீன்ஸ் போட்டு நட்க்கிறார், சார்ட்ஸ் போட்டு நடிக்கிறார், ஹை ஸ்பீடில் ந்டக்கிறார், ஆனால் நடிப்பை பார்க்கும் போது பருத்டி வீரன் அமிர் சாரி கார்த்தி தான் தெரிகிறார். முக்கியமாய் கொஞ்சம் கூட சென்னை ஸ்லாங்கில்லாம் மதுரை ஸ்லாங்கிலேயே இழுத்து இழுத்து பேசுகிறார். குழந்தையை கடிக்க வரும் பாம்பை கொல்லும் காட்சி மட்டும் நச்.
tsosti

கவிஞர் ஸ்நேகன் இன்னொரு ரவுடியாய் வருகிறார். என்ன அவருக்கு பாடி லேங்குவேஜும், ஸ்லாங்கும்தான் வருவேனா என்கிறது. ஒரு வேளை இன்னும் ரெண்டு மூணு ரவுடிகள் படம் வந்தால் அஜயன் பாலாவுக்கு பதிலாய் இவரை போடலாம்.கூட வரும் இரண்டு பேர் சரியான செலக்‌ஷன்.
photo_03_hires

குழந்தைக்கு பால் கொடுக்கும் தெலுங்கு பெண்ணாக, மதுமிதா பெரிதாய் சொல்ல முடியாவிட்டாலும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷனில் ஜெயிக்கிறார். மேலே உள்ள ஒரிஜினல் படத்தில் குழந்தையை தூக்கி போவது போன்ற யோகியிலும் தூக்கி போகிறார். குழந்தையின் அப்பாவாக வின்செண்ட் அசோகன், மனைவி சுவாதி, வேறு ஒருவனுக்கு கர்பமானவள் மனைவி என்று தெரிந்தே திருமணம் செய்து கொண்டு, அந்த காணாமல் போன குழந்தையை கொல்ல துடிப்பவன். அரைவேக்காட்டுதனமான திரைகதை ஆசிரியரின் சொந்த கற்பனை.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம், அமிர் போடும் சண்டை காட்சிகளில் இவரும் எடிட்டரும் ஜெயித்திருக்கிறார்கள். யுவனின் பிண்ணனி இசை அருமை, பாடல்கள் என்று பெரிதாய் இல்லாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. செகண்ட் ஹாப் முழுவதும், யோகி தீம் மீயூசிக் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
yogi

திருடா திருடி சுப்ரமணிய சிவாவுக்கு இது மூன்றாவது படம் தமிழில். அமீர், யுவன், அமிரின் கம்பெனி என்று சரியாகத்தான் செலக்ட் செய்திருக்கிறார். அமிரை சூப்பர் ஹீரோவை போல பில்டப் செய்ய பிரயத்தனபட்ட அளவுக்கு படத்தில் அவ்ரின் உழைப்பு தெரியவில்லை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒவ்வொரு அடிக்கும் பஞ்ச் டயலாக் பேசி அடிப்பது எல்லாம் தேவையா..? அதே போல் ஹல்க் போல நெஞ்சில் அடித்து கொண்டு அலறுவது எல்லாம் ரொம்பவே ஓவர். கதை  இவருடயதாம்.

yogi1

திரைக்கதை, வசனமெழுதி நடித்து, தயாரித்திருப்பவர் அமீர். இவர் புதியா திரைக்கதை என்ன எழுதினார் என்று தெரியவில்லை. பல இடங்களில் வசனங்கள் கூட ஒரிஜினலின் பிரதிபலிப்பு. முக்கியமாய் மதுமிதா அமீர் வசனங்கள். இவர் திரைகதையில் செய்த மாற்றங்கள் குழந்தையின் தந்தையை வில்லனாக காட்டியதும், இவரின் ப்ளாஷ் பாக் காட்சிகளும் தான். அந்த காட்சிகளில் கூட தள்ளூவண்டியில் பிச்சையெடுக்கும், ஒரு பிச்சைக்காரனைக்கூட தன் அப்பாவாக உருமாற்றியிருக்கிறார். அந்த ப்ளாஷ் பேக்கெல்லாம் படு சொதப்பல்.
yogi3

ஒரிஜினல் படத்தை பார்க்கும் போது டீனேஜ் பையன்களின் ஸ்லம் வாழ்கையையும், அதில் ஒருவனுடய மன மாறற்மும், அதனால் ஏற்படும் பிரசனைகளூம்,  நம் மனதில் ஒரு சின்ன நெகிழ்வை உருவாக்கும். இதில் என்ன செய்தாலும் அது வர மாட்டேன் என்கிறது. எந்த இடத்திலும், நம்மால் கதையோடு ஒட்ட முடியவில்லை. யாருக்கோ நடக்கிற உணர்வு தான் படம் முழுவதும். தெரியாத களனை கையிலெடுத்ததால் திண்டாடியிருக்கிறார். நமக்கு என்ன வருமோ அதை செய்வதுதான் உசிதம். அமீர் என்னாச்சு நல்லாத்தானே போயிட்டிருந்தது.?:(((( 

Tsosti (எ) யோகி – ரோகி

டிஸ்கி: இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..?

Nov 26, 2009

பி.பி-10

நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன்.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

மேலுள்ள விதிகளை சில இடங்களில் மீறியிருக்கேன். விதின்னாலே மீறுவதுதானே விதி..!!!!!

1.அரசியல்வாதி
பிடித்தவர் : யாருமில்லை.. எல்லாருமே திருட்டு …..பசங்

பிடிக்காதவர்: முக்கியமா ராமதாஸ்

2. நடிகர்

பிடித்தவர் : கமல்ஹாசன், kamal Haasan மற்றும் நடிக்க தெரிந்த எல்லா நடிகர்கள்

பிடிக்காதவர் : விஜய் ஏன்னா நடிப்புங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூட தெரியாதவர்.

3. நடிகை

பிடித்தவர் : இளமை துள்ளும் எல்லோரும்(ஹி..ஹி..)

பிடிக்காதவர் : த்ரிஷா இவங்க கிட்ட என்ன இருக்குன்னு தேடிபார்த்தாலும் தெரியல. :)
இந்த லிஸ்டுல மட்டும் நடிகைங்கிற வார்தைக்கு அர்த்தம் தெரிஞ்சவங்களான்னு கேட்டீங்கன்னா சாரி.. நோ. கமெண்ட்ஸ்

4. இயக்குனர்:

பிடித்தவர் : மணிரத்னம், சேகர் கம்மூலா, குவாண்டின், குஸுபி டெரண்டினோ, ஸ்பீல்பெர்க், என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

பிடிக்காதவர் : நிறைய பேர்.

5. தொழிலதிபர்

பிடித்தவர் : கருணாநிதி ( வேற யாரோ கூட சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்) சரவணபவன் அண்ணாச்சி

பிடிக்காதவர் : இதுவும் அவங்களே தான்.. ரெண்டு பேருககும் பிரச்சனை ஒண்ணே.. என்ன அந்த பிரச்சனையோட வீரியம் தான் வேற.வேற.. (என்னனு புரிஞ்சவங்க உடனடியாய் பின்னூட்டமிடுங்கள்)

6. எழுத்தாளர்

பிடித்தவர் : சுஜாதா, சுஜாதா, தி.ஜா.(யார் சொன்னாங்க அவங்க இறந்துவிட்டார்கள் என்று) பாலகுமாரன் (பழைய),

பிடிக்காதவர் : இப்போதைய பாலகுமாரன், சாரு.(லூசுத்தனாமாய் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. பெரும்பாலும் இவர் செய்யும், பேசும் விஷயங்கள் டிராயிங் அட்டென்ஷன் ரகம்) * இரண்டு மைனஸ் ஓட்டு நிச்சயம்டா கேபிளு…

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா, எ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்,

பிடிக்காதவர்: சமீபகால இளையராஜா, ஹாரிஸ் (பெரும்பாலும் ஒரே டுயூனை வைத்து கொண்டு உட்டாலக்கடி அடிப்பதால்)

8. ஓளிப்பதிவாளர்:

பிடித்தவர் : இது மாறிக் கொண்டேயிருக்கும். ஸ்ரீராம், லேட்டஸ்டாய் பேராண்மை சதீஷ்குமார்

பிடிக்காதவர் : மொக்கையாய் ஒளிப்பதிவு செய்யும் எல்லோரும்

9. காமெடியன்:

பிடித்தவர் : எவர்க்ரீன் கவுண்டமணி, வடிவேலு, விவேக் (பழைய)

பிடிக்காதவர் : இப்போதைய விவேக், கருணாஸ் வையாபுரி (இவரையெல்லாம் காமெடி நடிகர்னு யார் சொன்னது?)

10. பதிவர்

பிடித்தவர் : கேபிள் சங்கர் (நம்மள நமக்கே பிடிக்கலைன்னா வேற யாருக்குத்தான் பிடிக்கும்)

பிடிக்காதவர் : கேபிள் சங்கர் (இது மேல சொன்ன பதிலுக்கு எப்படியும் பெரிய எதிர்ப்பை காட்டுறவங்களுக்கு..)

ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

1. பெயர் சொல்ல விருப்பமில்லை
2. கனகு
3. D.R.அசோக்
4. மோகன் குமார்
5. முத்துசாமி பழனியப்பன்

Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 25, 2009

என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்


“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார்.

“உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?”

“எனக்கு கமல், ஸ்ரீதேவி  பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன்.

“உனக்கு பிடிச்சது மாதிரி பெரியவங்களுக்கு பிடிக்கணுமில்ல.. சினிமா உனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் அதனால தான் அந்த டான்ஸ்” என்று ஜெயமாலினியின் டான்ஸுக்கு விளக்கம் கொடுத்தபடி எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார்  அப்பா.

வேகமாய் நடந்தோம் வீட்டிற்கு. அம்மா ஆபீஸிலிருந்து வருவதற்குள் போக வேண்டும். பத்தாவது பைனல் பரீட்சையின் கடைசி பரிட்சைக்கு இடையே இரண்டும்  நாள் விடுமுறை இருக்க, ரொம்ப நாளாய் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த குரு திரைப்படம் அருகில் உள்ள தியேட்டரில் ஓட, ஒரு வாரம் மட்டுமே என்று போஸ்டரில் போட்டது வேறு என்னுள் உளப்பி கொண்டேயிருக்க, என் உளப்பல் தாங்காமல் என்னை தியேட்டருக்கு அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போய் விட்டு வரும் போதுதான் இந்த டிஸ்கஷன். இந்த மாதிரியான டிஸ்கஷன் வழக்கம் தான்.

சத்தமில்லாமல் வீட்டின் வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு, உள்ளே நுழைந்த போது வாசலில் அம்மாவின் செருப்பு இருந்தது.

“எங்க போயிட்டு வர்றீங்க ரெண்டு பேரும்?”

அப்பா திரும்பி என்னை பார்த்து சொல்லிடட்டுமா என்பதை போல முகத்தை வைத்து கொண்டு “ படத்துக்கு போயிட்டு வந்தோம்.” என்று சொன்னதும் அம்மா முகம் முழுவதும் கோபமாய் “ உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா..? பைனல்  எக்ஸாம், படிக்கிறதுக்கு லீவு விட்டா,  பிள்ளைக்கு புத்தி சொல்லி, படிக்க சொல்லாம, சினிமாவுக்கு கூட்டி போயிட்டு வர்றீங்களே? அந்த புள்ள எப்படி உருப்படும்?” என்று மளமளவென்று கோபத்தில் பேசிக்கொண்டே போக, சிரித்தபடி அப்பா என்னை பார்த்து கொண்டிருக்க , அது அம்மாவுக்கு இன்னும் கோபத்தை ஏற்ற, அப்பாவின் மீதுள்ள கோபத்தை என் தலையில் நெக்கென ஒரு குட்டை குட்டி “அப்படி என்ன சினிமா வேண்டியிருக்கு, ராஸ்கல்?”

அப்பா அம்மாவிடமிருந்து என்னை விலக்கி ”ஒரு வருஷமா படிக்காததையா இந்த மூணு மணி நேரத்தில படிச்சிரப் போறான்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து “படம் பார்த்தாச்சு இல்ல போய் படி” என்றார். அம்மா பேசவில்லை.

Technorati Tags:



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 23, 2009

Kurbaan – Hindi Film Review

kurbaan

முழுக்க, முழுக்க ஹாலிவுட் பாணி பாதிப்பில் எடுத்திருகிறார்கள். நடிகர்கள் மட்டும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  சாயிப் ஒரு பி.எச்டி. லெக்சரர், அவரும் கரீனாவும் ஒரே காலேஜில் ப்ரொபஸராய் வேலையில் இருக்க, காதல் வசப்படுகிறார்கள். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்த சமயத்தில் கரினாவுக்கு நியூயார்க்கின் ஒரு யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு வர, அவருக்காக தன் வேலையை துறந்து கரினாவுடன் அமெரிக்காவுக்கு போகிறார் சாயிப். வேலைக்கு போய் சேர்ந்ததும், அங்கேயே இந்தியர்கள் வசிக்கும் ஏரியாவில் போய் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக, பக்கத்திலிருக்கும் ஓம்பூரியின் குடும்பத்திலிருந்து, கரினாவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-10

ஓம்பூரியின் வீட்டில் இருக்கும் மருமகள் ஒருத்தி தன்னை காப்பாற்றும் படி சொல்ல, அவளின் கணவன் அடிப்பதை பார்த்த கரீனா அவள் கொடுத்த ஒரு இந்திய முஸ்லீம் இளைஞன் வேலை செய்யும் நியூஸ் சேனலுக்கு போகிறாள்.  அடுத்த நாளிலிருந்து அவளை காணாமல் இருக்க, அவளை தேடி வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைய, அங்கே அவள் காணும் காட்சி, அதிர்ச்சியின் உச்சம்,  அவளின் கணவனே ஒரு தீவிரவாதி என்பதுதான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-09

ஆரம்பத்தில் சாயிப், கரீனாவின் காதல் காட்சிகள் படு காமெடி, அவ்வளவு மெச்சூர்டான ஆட்களிடையே ஏற்படும் காதலை ஏன் இவ்வளவு சிறுபிள்ளைதனமான காட்சிகள் என்றே புரியவில்லை. ஆரம்ப காட்சியிலேயே அவர்கள் இருவரும் காதலர்கள் என்று சொல்லியிருக்கலாமே. ஏன் என்றால் அவர்களீடையே உள்ள காதல் தான் பட்த்தின் உயிர்நாடி என்று இயக்குனர் நினைத்து அந்த காட்சிகளை வைத்திருந்தால். .. சாரி இயக்குனரே. 

பக்கத்து வீட்டில் உள்ள முஸ்லீம் குடும்பம் மொத்தமுமே, தீவிரவாதிகளாய் இருப்பதும், அதற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாத சாதாரண குடும்பமாய் அலைவதும், ப்ளைட்டுக்கு சூசைட் பாமரை அனுப்பி ப்ளாஸ்ட் செய்ததும், உடனடியாய் அடுத்த விஷயத்துக்கு  ரெடியாவதும், சொல்வதற்கும், படிப்பதற்கும் இண்ட்ரஸ்டாய் இருப்பதை போல் இருந்தாலும், படம் ஆமை  ஸ்லோ. அவர்கள் மிகப்பெரிய த்ரில்லிங் தருணம் என்று நினைத்தது எடுத்தது  எல்லாம் புஸ்ஸாகி போய் விடுகிறது. kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-03 ஒரு பக்கம் கணவனே தீவிரவாதியாய் ரயில்வே ஸ்டேஷனில் பாம் வைக்க அலைவதும், இன்னொரு பக்கம் பத்திரிக்கையாளரான விவோக் ஓபராய் அமெரிக்க முஸ்லிமாய் அதை முறியடிக்க அவர்களுடனே பழகி ஒரு தீவிரவாதியாக மாறி, கரினாவை காப்பாற்ற முயல்வதும், போலீஸுக்கு தகவல் சொல்லி ப்ளாஸ்டை தடுக்க முயலும் நலல் முஸ்லிமாக் வருகிறார். பாவம் சும்மா அங்கும் இங்கும் ஓடுவதை தவிர வேறு ஏது வேலையில்லை.

முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்த ஹிந்துப் பெண்ணான  கரீனாவாவது ஏதாவது செய்து அங்கிருந்து தப்பித்து விடுவார் என்றால் அதுவும் இல்லை. சாயிப்பால் கர்பமாகி, ஆவூவென்றால் அழுகிறார். கடைசி காட்சியில் அழுகிறார். படு சொதப்பலான கேரக்டர்.

அதே போல சாயிப்பின் கேரக்டரும், ஒன்று நல்வனாக காட்டவேண்டும், அல்லது கெட்டவனாக காட்ட வேண்டும், தன் மனைவி கர்பமாய் இருப்பதால், அவளின் மேல் காதல் கொண்டிருக்கும் நல்ல கணவனாகவும், இன்னொரு பக்கம் சதக், சதக், டுமீல்,டுமில் என்று குத்தியும், சுட்டும் கொல்லும் வில்லனாகவும் அவரை பார்க்க, ஒரு எமோஷன் எழவும் எழ மாட்டேன் என்கிறது. படத்தில் சர்சைக்குண்டான விஷயங்கள் நிறைய இருக்க, கரினாவின் வெறும் முதுகை போட்டு பிரட்டி எடுத்த அரசியல்வாதிகளே, நீங்கள் செய்த கலாட்டாவை  பார்த்துவிட்டு படத்துக்கு போன ஆட்கள் நொந்து போய் தியேட்டரில்  கரீனாவின்  முன் பக்கத்தை சாயிப் மட்டுமே பாக்கிறத்துக்கு நாங் எதுக்குடா தியேட்டருக்கு வரணும் என்ற கூச்சல் உங்களுக்கு கேட்கலியா.?

படம் பூராவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாய் அலைவதற்கான காரணங்களை, இந்தியா பற்றி சொல்லாமல் ஆப்கானிஸ்தான், ஈரான் , ஈராக் என்று உட்டாலக்கடி அடிப்பது போல் கிரோன் கர் வசனம் பேசுவதும், அதை எதிர்பதாக விவேக், மற்றும் கரினா பேசும் வசனங்கள் டெம்ப்ளேட் டயலாக்குகள். வசனம் அனுராக் காஷ்யப்.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-05 அவன் ஆறு வயது குழந்தையை கொன்னான், அதனால நான் அமெரிக்கா காரன் நாட்டை அழிக்கணும்னு அல்லாவின் ஆணை என்று அடிக்கடி சொல்லும், கிரோன், அதை எதிர்க்கும் மருமகளை கொலை செய்ததை பெரிஅய் விஷயமாய் எடுத்துக் கொள்ளாத கிரோன் கேரக்டரும், சொதப்பல். என்ன ஒரு வித்யாசமான விஷயம் என்னவென்றால் பெண்களையும் தீவிரவாதிகளாய் காட்டியிருப்பதுதான்.

அதே போல் சும்மாவாச்சும் நானும் அமெரிக்க நடவடிககைகளை எதிர்க்கிறவன் என்று சொன்னதாலேயே விவேக்கை வா வீட்டிற்கு சாப்பிட போகலாம் என்பதுபோல் பாம் வைக்க சேர்த்து கொள்வதும்,  தீவிரவாதிகளை விடுதலை புலிகள் போல சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்பதும்,  ஓடுகிறா ரயிலில் ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வதும், ரோட்டில் சேஸிங்கில் மிக ஈஸியாய் அமெரிக்க போலீஸ் இடமிருந்து தப்பிப்பதும்  படு காமெடி.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-08

படத்தின் விளம்பரத்தில் எல்லாம் ஒரு வயலண்ட் லவ் ஸ்டோரியாய் பில்டப் செய்துவிட்டு, மிக தீவிரமாய் தீவிரவாதிகளை பற்றி எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் தீவிரவாதத்தை ஞாயப்படுத்தியிருக்கிறார்கள்.  குரானில் எங்கேயும் தீவிரவாதத்தை ஆதரித்து, சொன்னதில்லை என்று விவேக் ஓபராய் மூலமாய் சொன்னாலும், திவிர பண்டமெண்டலிஸ்டான ஓம்பூரி. அல்லாவின் ஆணைப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றே சொகிறார். அதையே அவரது மனைவியும் வழிமொழிகிறார்.  என்.ஆர்.ஐ மார்கெட்டை மட்டுமே இலக்காய் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட படமாய்தான் தோன்றுகிறது.

அருமையான எடிட்டிங், ஒளிப்பதிவு, தரமான மேக்கிங் எல்லாம்  இருந்தும், காதல் கதையாகவும் இல்லாமல்,  த்ரில்லராகவும் இல்லாமல், தீவிரவாதிகளை பற்றியும் இல்லாமல்,  இலக்கில்லாத, ரெண்டும் கெட்டான் திரைக்கதையாலும்,  தெளிவான கேரக்டரைஷேசன் இல்லாததாலும்,  ஒரு நல்ல நாட்டை வேஸ்ட் செய்து விட்டார்கள்.

Kurbaan -  Aimless

Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 22, 2009

கொத்து பரோட்டா –23/11/09

திடீர் பதிவர் சந்திப்பு சனிக்கிழமை மாலை ஏற்பாடாகியிருந்தது, என்னால் சரியான நேரத்தில் போக முடியவில்லை. கடைசியாய் டீகடை நேரத்தில் தான் எல்லோரையும் சந்திக்க முடிந்தது. வநத விருந்தினர் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்ததால் எல்லோரும் கவிதைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்க, எனக்கு ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்த பைத்தியக்காரனிடம், ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.

அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
ஹிந்தி சீனிகம் படத்திற்கு பிறகு இளையராஜாவின் இந்தி படம் “பா” ஏற்கனவே ஹிட் கொடுத்த டீம், பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை களன் என்று இருந்தாலும் நான் மிகவும் எதிர்பார்த்தது ராஜாவின் இசை, பழைய பாடல்களின் அணிவகுப்பு என்பது நம்க்கு வேண்டுமானால் ஏமாற்றமாய் இருக்கலாம். மனுஷன் ஆர்கெஸ்ட்ரேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார். அதிலும் கும்சும் என்றா பாட்டில் அவர் செய்திருக்கும் இம்பர்வைசேஷன் சிம்ப்ளி சூப்பர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இண்டெர்நெட் டிக்கெட் புக்கிங் ப்ளாக் டிக்கெட்டை என்கிற கான்செப்டை காணாமல் போக அடிக்கிறது. 2012 ரீலீஸ் அன்று தேவி தியேட்டரில் ஆன்லைன் புக்கிங்கில், காலை 10 மணி வரை புல் ஆகாத டிக்கெட்டுகள், சுமார் 350 டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் ஆகியிருக்கிறது. தேவியில் ஒரு வித்யாசமான விஷயம் என்ன என்றால் 10 ரூபாய் டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்ய முடியும். என்ன அதுக்கு புக்கிங் சர்வீஸ் சார்ஜ் 10 ரூபாய். 2012 தேவியில் சும்மா பின்னி பெடலெடுக்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசியல்
தீவிரவாதி என்றாலே முஸ்லிம் தானா என்று கேள்வி கேட்டு, இந்துயிசம், பாஸிசம், பாயஸம், இந்துத்துவா, அவா, இவா என்று பேசியவர்கள், சமீபத்தில் ரிலீஸாகியிருக்கும் “குர்பான்” படத்தை பார்க்க வேண்டும். ஊரில் உள்ள முஸ்லிம் பாதி பேர் பெண்கள் உட்பட தீவிரவாதிகளாய் இருக்கிறார்கள். படத்தின் விமர்சனம் விரைவில். படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். ஓகே.. ஸ்டார்ட் ப்ளாகிங்….

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுகடை
சென்னை தங்க சாலையில் கொஞ்சம் உள்ளே போனால் ஒரு ஹரி ஓம் பவன் என்று ஒரு ஹோட்டல் இருக்கும். ப்யூர் வெஜிட்டேரியன், அதிலும் ஜெயின் ஸ்பெஷல் கிடைக்கும். (அதாவது வெங்காயம் இல்லாமல்). போனவுடன் ஒரு மசால பப்பட் ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்தால் சுகம். அவ்வளவு டேஸ்டான பப்பட். அதன் பிறகு, சப்பாத்தி, பூரி, புல்கா, என்று சுடசுட ஆர்டர் செய்ய, செய்ய வந்து கொண்டேயிருக்கும், முக்கியமாய் ஒரு விஷயம் சைட் டிஷ்கள் யானை விலை, குதிரை விலை எல்லாம்கிடையாது. ஒருவர் சாப்பிடக்கூடிய அளவிற்கு சகாய விலையில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சைட் டிஷ் டேஸ்ட் பண்ணலாம், ஐ ரெகமெண்ட், பிந்தி மசால, மலாய் கோப்தா, மற்றும் எல்லா டிஷ்களுமே. :)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விஷுவல் டேஸ்ட்

Image0231


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்

செக்ஸ் புத்தகம் விற்கும் கடையில் உள்ள நோட்டீஸ் போர்டில் எழுதியிருந்த வாசகம்:
தயவு செய்து புத்தகம் படிக்கும் போது இரண்டு கைகளிலும் புத்தகத்தை பிடித்து படிக்கவும்

ஒரு மிடில் ஏஜ் தம்பதிகள் டாக்டர் ஒருவரிடம் வ்ந்து நாங்கள் உறவு கொள்ளூம் முறையை பார்த்து அதில் ஏதாவது தவறு செய்கிறேனா என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவரின் எதிரேயே மேட்டர் பண்ண, முடிந்தவுடன் டாக்டர் “ பர்பெக்ட்லி ஆல்ரைட்” என்றதும் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்த அந்த தம்பதி, அதே கோரிக்கையை வைத்து மேட்டரை பண்ண, அவர்கள் கிளம்புகையில்”அது சரி அதான் நீஙக் சரியா ப்ண்றீங்களே எதுக்கு இங்க வந்து செஞ்சு காட்டறீங்க என்று கேட்க, வந்தவர்களில் ஆண் “அவ வீட்டுக்கு போன அவ புருஷன்கிட்ட மாட்டிக்குவோம், என் வீட்டுக்கு போனா என் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்குவேன். ஹோட்டலுக்கு போனோமின்ன கொறஞ்சது ஆயிரம் ரூபா இல்லாம முடியாது. இங்கேயான உங்க பீஸ் 200 தான். சீப்பா இருக்கேனுதான் என்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 21, 2009

அதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்

சென்னையில் தீடீர் பதிவர் சந்திப்பு

தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

சந்திப்பு நாள் : 21.11.2009
இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம்
நேரம் : மாலை 5.30 மணி முதல்

சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு :

யெஸ்.பாலபாரதி - 9940203132
நர்சிம் - 9841888663
கேபிள் சங்கர் - 9840332666
யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

athe-naal-athe-idam

பல படங்களின் கதை ரொம்பவே சிம்பிளாய் இருக்கும் ஆனால் அதை சொல்லும் விதத்தில்தான் படத்தின் வெற்றி தோல்வி அமையும், அதே போல் இந்த படத்தின் கதையும், தன்னை காதலித்துவிட்டு, வேறு ஒருவனை வசதி வாய்ப்புக்காக திருமணம் செய்த ஒருத்தியை என்ன செய்கிறான் காதலன் என்பதுதான் கதை. ஆனால் அதை சொன்ன விதம் கொடுமைடா சாமி..

அரத பழசான குட்டிச் சுவர் இளைஞர்கள், மொக்கை ஜோக்குகள், வேலையில்லாத ஹீரோ, அதே ரோடில் இருக்கும் கதாநாயகி, பார்த்த ரெண்டாவது சீன்லேயே காதல். என்று வழக்கமாய் போகிறது. சமீப காலங்களில் இவ்வளவு கற்பனை வறட்சி உள்ள காதல் காட்சிகளை சமீபத்தில் பார்த்ததில்லை. அதன் பிறகு ஹீரோவுக்கு பொறுப்பு வந்து, ஆஸ்திரேலியா போகிறார். ஏன் எதற்கு என்று இல்லாமலே ஒரு மொக்கை காரணம் சொல்லி இருவரும் பேசாமல், மெயில் என்று எதுவுமில்லாமல் இருக்கிறார்கள். திடீரென ஒரு பணக்கார வாலிபனை தனக்கு மாப்பிள்ளையாய் பார்த்தவுடன் காதலனை மறந்து அவனை மணக்கிறாள் கதாநாயகி.
athey-neram-athey-idam-vijayalakshmi-prabhu-movies

கதையில் மிகப் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோவும், நாயகியின் கணவனும் நெருங்கிய நண்பர்களாக ஆக, அவனை ஏமாற்றிய காதலியை, சும்மா விடாதே அவளை நிம்மதியாய் வாழவிடாதே என்று அவனே தனக்கு தெரியாமல் சூனியம் வைத்துக் கொள்கிறான். முடிவு என்ன என்பதை வெள்ளி திரையில் பார்க்க (தைரியமிருந்தால்)

ஜெய், விஜய் மாதிரியே சிரிக்கிறார், நடக்கிறார், குதிக்கிறார், எப்படி விஜய்க்கு நடிக்க வராதோ.. அதே விட இரண்டு மடங்கு நடிக்க மட்டும் வரமாட்டேங்குது. இவர் சீரியஸாய் காதலை பற்றி பேசும் போதெல்லாம் படு காமெடியாய் இருக்கிறது. ஏதோ குழந்தைகள் அடிச்சு துவட்டிடோமில்ல என்று பெருமையாய் சொல்லுமே அது போன்ற மாடுலேஷனில் பேசுகிறார். க்ளைமாக்சில் அவரின் நடிப்பு இருக்கிறதே சூப்பரப்பு..
athe-naal-athe-idam (15)

அதே போல் விஜயலட்சிமியின் பாத்திரமும் ஒரே குழப்பம். கொஞ்சம் கவர்சியாய் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி பெரிதாய் சொல்வதற்கு இல்லை.

லொல்லு சபா ஜீவா சமயங்களில் ஜெய்யை விட ஸ்மார்டாக இருக்கிறார். சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், இன்னும் கொஞச்ம் மெனக்கெட வேண்டும்.

படத்தின் ஸேவிங் கிரேஸே பிரேம்ஜி அமரனின் பாடல்கள், மூன்று பாடல்கள் இதம். சபேஷ் முரளியின் பிண்ணனி இசையும் ஓகே.

திரைகதையால் கட்டி போட வைத்திருக்க வேண்டிய படம். தியேட்டரை விட்டு ஓட வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு.

அதே நேரம் அதே இடம் – சரி டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?


டிஸ்கி: போன வாரம் போடுவதற்காக எழுதியது.. கொஞ்சம் லேட்.. :(

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 20, 2009

காளிதாஸ்

Drunken_Nights_by_Dan14Lev

காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.

காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.

”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே.? என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம்  அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.

”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா..?  ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.

“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது.  தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா...  ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே..  இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய்  லவுட்டி லபக்கினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.

“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.?”

அண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப..  அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும்  எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு..  நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான்.  அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா.?  “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல”  என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா.  நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு..  இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.

“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”

“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி”  என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,

நான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி  கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய்  வெளியே அழைத்து வந்து  வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.

“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு  கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு
திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 18, 2009

காக்கை

இம்மாதிரி விஷயங்களை யாராவது சொல்லும் போது பெரிசாய் முக்யத்துவம் கொடுத்ததில்லை. மிகைப்படுத்தி சொல்வதாய்தான் தோன்றும் இறந்தவர்களின் மேல் உள்ள பாசத்தின் காரணமாக, அவர்கள் உணர்ச்சி பெருக்கில் சொல்வது என்றுதான் நினைத்திருந்தேன் இரண்டு நாள் முன்பு வரை. அப்பா இறந்து மூன்றாவது நாள் காலையில் காலையில் டிபன் சாப்பிட உட்காரும் முன் என் மனைவி என் அப்பாவுக்காக ஏற்றி வைத்திருந்த விளக்கின் முன் காப்பியும், ஒரு ப்ளேட்டில் தோசையும் வைத்துவிட்டு எனக்கு தோசை வைத்தாள்.

அப்போது வீட்டின் வாசல் கதவை தடாலென திறந்து கொண்டு, பக்கத்து வீட்டு குழந்தை சுமார் ஒன்னறை வயதிருக்கும், ஓடி வர பின்னாலேயே, அவனுடய அம்மா ஓடிவர,  ஓடிவந்த குழந்தை என்னை பார்த்து மழலையாய் தோசை என்று கை நீட்டி கேட்டது. நான் என் ப்ளேட்டை எடுத்து அப்படியே கொடுத்தேன், அவனின் அம்மா, “அய்யோ வேணாங்க இப்பத்தான் பாலைக் குடிச்சிட்டு கீழே வச்சான்.. என்ன ஆச்சோ தெரியல குடுகுடுன்னு ஓடி வந்திட்டான்” என்றாள்.

என் மனைவிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”பரவாயில்லைங்க அவன் சாப்பிடாட்டி கூட பரவாயில்லை விட்டுட்டு போங்க நான் கொண்டு விடறேன்” என்றதும் மறுப்பேதும் பேசாமல் அவர் போய்விட, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, கடந்த ஒரு வருடத்தில் அந்த குழந்தை இதுவரை என் வீட்டினுள் வந்ததேயில்லை.

என் ப்ளேட்டை அவனிடமிருந்து வாங்கி விட்டு இன்னொரு புது ப்ளேட்டில் ஒரு தோசையை போட்டு என் பக்கத்தில் உட்கார சொல்ல, அவன் சைகையால் மாத்தேன் என்றான். சரி என்று அவனுக்கு ஒரு குட்டி சேரும், டேபிளும் வைத்து அதில் உட்காரச் சொன்னால் அதையும் மாட்டேன் என்று சொல்ல, சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு, ப்ளேட்டை கேட்க, மெல்ல ஒவ்வொரு குட்டி, குட்டி துண்டாய் தோசையை ஆக்கி, சர்கரையில் தோசையை விட சர்கரையாய் சாப்பிட ஆரம்பிக்க, என் மனைவி என் தோளை தொட்டு “உங்க அப்பா சாப்பிட வந்திருக்காரு” என்றாள். நான் அவனை உற்று பார்த்தேன் அவன் மெல்ல தட்டிலிருந்து பார்வையை விலக்கி, நேராய் என்னை பார்த்து சிரித்தான் அழுத்தமான சிரிப்பு, சத்தமில்லாமல், நிச்சயம் இலக்கில்லாத குழந்தை சிரிப்பில்லை.  நடுவில் சாப்பிட முடியாமல் ஏப்பம் விட, மனைவி ப்ளேட்டை வாங்க போன போது தண்ணி கேட்க, கொடுத்தவுடன் தண்ணி ஒரு வாயும், தோசை ஒரு வாயுமாய் சாப்பிட ஆரம்பித்தான்.

எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி விர்ரென கரண்ட் போல ஓடியது, திடீரென அங்கிருந்து ஓடி வீட்டின் பால்கனியில் போட்டிருந்த சேரில் போய் உட்கார்ந்தான்.  நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, திரும்பவும் அதே போல ஒரு அழுத்தமான பார்வையையும், சிரிப்பையும் சிரித்தான், சிரித்துவிட்டு, ஒன்னறை வயது குழந்தை, கையை சொடக்கு போடுவது போல் கைநீட்டி சொடக்கு போட்டு, என்னை பார்த்து கூப்பிட எனக்கு ஒன்றும் புரியாமல் மெல்ல அவனருகில் சென்று உட்கார்ந்து “என்னடா. என்றேன்.. முகத்தை என் அருகில் வைத்து, வாயை திறந்து, ஏதோ வார்த்தைகளை பேசுவது போல் பேசினான், ஆனால் அது வெறும் அசைவாய் இருந்ததே ஒழிய, சத்தமில்லை, நான் குழப்பமாய் அவனை பார்க்க, திடீரென குழந்தையாய் சிரித்து, வெளிப்பக்கம் கைநீட்டி ‘காக்கா” என்று சொல்ல, அவன் காட்டிய பக்க பார்த்தேன் ஒரு காக்கா மரத்தின் கிளையில் உட்கார்ந்திருக்க, நான் என் மனைவியை பார்த்தேன் மிகவும் எமோஷனலாய் இருந்தாள், மெல்ல சேரிலிருந்து இறங்கியவன் அவள் கையை பிடித்து பாத்ரூமுக்குள் அழைத்து சென்று கையை கழுவிக் கொண்டு வெளியே போனான்.

அவனை கொண்டு விட்டு வந்த என் மனைவி, அழ ஆரம்பிக்க, எனக்குள் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு  ஓடியது.  பால்கனியில் உட்கார்ந்து கொண்டுதான் அவர் தினமும் காலையில் பேப்பர் படித்து கொண்டே என்னுடன் பேசுவார். அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டுதான் அவனும் என்னை அழைத்து ஏதோ சொன்னான். இறப்பதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன் கூட நான் படம் பண்ண வேண்டும் என்று சில ஆட்களிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் பெங்களூர் போகவேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தார்.

அப்பா என்ன சொல்ல விழைந்தாய் அந்த குழந்தையின் மூலம்? நானிருக்கிறேன். உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன் என்பதை காக்கையின் மூலம் காட்டினாயா.? நீ என்னுடன் பேசியது, சிரித்தது எல்லாம் ஏதோ ஒரு குறியீடோ..? அந்த குழந்தை அதற்கு பிறகு இன்று வரை மீண்டும் வீட்டிற்குள் வரவில்லை. அவன் உட்கார்ந்த சோபாவில் தான் என் அப்பா கடைசியாய் உட்கார்ந்து  உயிர் விட்ட இடம்.

Nov 17, 2009

நெகிழ்வின் உச்சத்திலிருந்து….

போன ஜென்மத்தில்  நான் கடும் தவமோ, அல்லது ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியமோ செய்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியொரு நட்புகள் கிடைத்திருக்குமா.? உன் சந்தோஷம், என் சந்தோஷம் என்பது மட்டுமில்லாமல் உன் துக்கம், என் துக்கம் என  இரண்டு நாட்கள், எடுப்பதிலிருந்து, கரைப்பது வரை  கூடவே இருந்து, என் தந்தையை நல்லபடியாய் வழியனுப்பி வைத்த  பதிவுலக நண்பர்களுக்கு  நான் எப்படி நன்றி கூறுவது என்றே  தெரியவில்லை.  அப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடுகிற  விஷயமா அவர்கள் காட்டிய ஆறுதலும், அரவணைப்பும்.?

உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய்  ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்,  நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை  தனியாய் விட்டு போகவில்லை என்ற  திருப்தியுடன்.  என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில்,  நெகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து… கண்ணீருடன்..

கேபிள் சங்கர்

Nov 14, 2009

2012-(2009)

இன்று மாலை 5-7.30 பதிவர் சந்திப்பு.. ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை அள்ளி வழங்கிய சகபதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றிங்கோ...

2012

2009 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு கோல் மைனில் சாய்ராம் என்ற இந்தியர் ஒருவர் உலகம் அழியப்போகிறது என்பதை தன் நண்பரான ஒரு கருப்பரிடம் சொல்கிறார். அவர் உடனடியாய் ஆம்னிபஸ் பிடித்து ஊருக்கு போவது போல் அமெரிக்கா போய் உடனடியாய் விஷயத்தை சொல்ல, பேச ஆரம்பிக்கிறார்கள். இதற்கு நடுவில் சைனாவில் அணை கட்ட ஆள் எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலகில் முக்கியமான ஆட்கள் எலலாம் செத்து போகிறார்கள்.  என்று ஆரம்பிக்கும் பில்டப்.. மெதுவாய் சூடேறி.. சூடேறி.. பூமி வெப்பமடைந்து வெடிக்க கிளம்புவது போல் கதையும் பரபரவென வெடிக்க ஆரம்பிக்க.. ஆரம்பிக்கிறது விஷுவல் ஆர்ப்பாட்டம்.
2012 Plane

இம்மாதிரியான டிஸ்ஸாஸ்டர் படங்களுக்கு எல்லாம் ஒரு விதமான டெம்ப்ளேட் திரைககதை ரெடியாய் இருக்கும். எப்படியென்றால் ஹீரோ ஒரு சாதாரணன் ஆனால் புத்திசாலி, அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி வேறு ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருப்பாள், ஹீரோவுக்கு பிறந்த பிள்ளைகளில் ஒரு ஆணும், ஒரு பெண் குழந்தையும் நிச்சயம் உண்டு, பெண் குழந்தை அழகாய் க்யூட்டாய் இருப்பது அவசியம். வீக் எண்ட் பார்ட்டிக்கோ, அல்லது டூருக்கோ அவர்களை கூட்டி போகும் போதுதான் இம்மாதிரியான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும், உடனே தன் குழந்தைகளை காப்பாற்ற, இயற்கையை எதிர்த்து போராடுவான், ஹீரோவின் பையனுக்கும், அவனுக்கு ஒரு சின்ன முரண் இருக்க வேண்டும், அப்போதுதான் க்ளைமாக்ஸில் தன் தகப்பனுக்காக அவன் ரிஸ்கை ரஸ்குபோல் நினைத்து அப்பாவுடன் சாகசம் செய்ய முடியும்.
2012-2

இதற்கிடையில் நிச்சயமாய் ஒரு கறுப்பினர் ஒருவர் உயிர் தியாகம் செய்ய வேண்டும், பழைய மனைவியுடன் மீண்டும் காதல் துளீர்க்க, புதிய கணவன் விளக்கு பிடிக்காத குறையாய் பார்த்து கொண்டு நிற்பது, படத்தில் முக்கிய கதபாத்திரம் மனித நேயத்தை வலியுறுத்தும் ஆளாய் அவ்வப்போது அவருக்கு ஒரு செண்டிமெண்ட் காட்சி,  இதற்கு நடுவில் பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கி விடலாம் என்பதை சொல்ல ஒரு கேரக்டர் கடைசியில் மனிதம் தான் பெரிது என்பதை மகக்ளுக்கு விளக்க, சாவது. க்ளைமாக்ஸில் பத்து நிமிஷம் தான் இருக்குன்னு டைமரை போட்டு காட்டிவிட்டு அரை மணி நேரம் ஒரே ஆக்‌ஷனும், செண்டிமெடுமாய் ஆளாளுக்கு கட்டி பிடித்து அழுவதும், முத்தமிட்டு கொள்வதும் நடக்க,  சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போகும் என்று நினைக்கும்படியான ஒரு சின்ன ஸ்கேல் போன்ற ஒன்றினால் மிகப்ப்பெரிய பிரச்சனை இருக்க, ஹீரோ சென்று காப்பாற்றி எல்லாம் சுகமே.
2012 Movie pic 2

இதையெல்லாம் விடுங்க.. எப்படி நம்ம பட ஹீரோக்களுக்கு சண்டையில அடியே படாதோ அது போல கரெக்டா அவரு நவுந்தப்புறம் பூமி ரெண்டா பொளக்குது,ன்னு தெரியல.?
2012 Flood Picture மேலே சொன்ன எல்லா விஷய்ங்களும் ஆர்டர்படி முறையே வருகிறது. க்ளமாக்ஸில் மூன்று ஸ்பேஸ்ஷிப்பில் ஒரு ஷிப் மட்டும் பிச்சிட்டு போய்டுது.. ஆனா க்ளமாக்ஸில் மூணும் ஒண்ணா இருக்கு. வழக்கமா செத்து போற கருப்பினர் குரூப்பில் ஒருத்தரா இருப்பாரு.. இதில அமெரிக்கன் ப்ரெசிடெண்ட்..

ஆனால் இதுவெல்லாம் என்னன்னு யோசிக்கக்கூட முடியாம ஒரு விஷுவல் அட்டகாசம் பண்ணியிருக்கங்க பாருங்க. அங்கதான் நிக்கிறான் வெள்ளைக்காரன். பெரிய திரையில் மட்டுமே பார்த்து வாய் பிளக்க கூடிய விஷுவல்.  ஊரே தொபுக்கடீர்ன்னு பூமிக்குள்ள போறதும், சீட்டு கட்டை போல மகா கட்டடஙக்ள் எலலாம் சாஞ்சி பூமியில் போவதும், கடலும் அது பொங்குவது, என்று அட்டகாசம். க்ளைமாக்ஸ் சுனாமி காட்சியெல்லாம் சில ஷாட்டுகளில் நம்ம தசாவதாரத்தை மிஞ்ச முடியவில்லை.
2012 Plane 2

2012- உலகம் அழிய போவுது உடனே பாத்துருங்க..

டிஸ்கி:

நேற்று தமிழகம் எங்கும் சூப்பர்ஸ்டார் படங்களுக்கு எப்படி ஓப்பனிங் இருக்குமோ அப்படி ஒரு ஓப்பனிங். சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களையும் சேர்த்து சுமாராக 20 தியேட்டர்களுக்கு மேல் த்மிழிலும்,  ஆங்கிலத்திலும் ரிலீஸ். எல்லா தியேட்ட்ர்களிலும் ஆல்மோஸ்ட் புல்.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 12, 2009

Villagelo Vinayakudu – Telugu Film Review

ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றிங்கோ...

villagev4

சென்ற வருடம் விநாயகுடு என்று வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட்டான படம்.. நந்தி அவார்ட் கூட வாங்கியது.. மிக இயல்பான திரைக்கதையினால் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம்.. ஒரு அதி குண்டான வாலிபனுக்கும், சிக்கென்ற ஒரு ஆட் கம்பெனி பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாய் காமெடியாய் சொல்லியிருந்தார்கள். இப்போது அதே குருப் அந்த குண்டு வாலிபனை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார்கள்.
villagelovinayakuduthum

இந்த முறை கார்த்திக் என்ற குண்டு பையன் மட்டுமே.. கார்த்திக்கும், சரண்யா மோகனும் ஏற்கனவே காதலர்கள். கோதாவரியின் கரையில் ஒரு நல்ல பார்ம் ஹவுஸ் வைத்து கொண்டு ஸ்ட்ரிக்ட் அண்ட் டிஸிப்ளெயிண்ட் ரிட்டயர்ட் ஆபீசரான அவளுடய அப்பாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று குழப்பத்தில் இருக்க, அப்போது அவருடய சித்தப்பா பெண் திருமணம் வர, தன் அப்பாவிடம் சொல்ல பயந்து, கொஞச்ம் கொஞ்சமாய் தன் அத்தை, சித்தப்பா, பெரியப்பாவிடம் சொல்லி ஆதரவை திரட்ட, ஒரு வழியாய் எல்லோரும் சமாதானமாகும் நேரத்தில் கார்த்திக் வந்து நிற்க அவனின் குண்டு உடம்பை பார்த்து விட்டு மொத்த குடும்பமே எதிர்ப்பாக, எவ்வாறு கார்த்திக், சரண்யாவின் அப்பா, மற்றும் குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்து பிடிக்க வைக்கிறான் என்பது தான் கதை.

villagev

ஆங்கிலத்தில் வெளிவந்து பெரிய ஹிட்டான “Meet The Parents” என்கிற படத்தின் உட்டாலக்கடிதான் என்றாலும் மிகச் சரியாய் செய்திருக்கிறார்கள். படம் முழுவதும் வரும் ஒன்லைனர்கள் ஆகட்டும், சிட்சுவேஷனல் காமெடி ஆகட்டும், முதல் பாதி முழுவதும் தியேட்டரில் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்.
villagev2

வழக்கம் போல கார்த்திக்காக வரும் ‘கிருஷ்ணடு” ஸ்வீட் அண்ட் க்யூட். அவர் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமும், அவரது இன்னொசென்டான பேச்சும் அவரின் கேரக்டர் மேல் அபிப்ராயத்தை அள்ளிக் கொண்டு போகிறது.

சரண்யா மோகன் மாடர்ன் டிரஸ்ஸில் க்யூட்டாக இருக்கிறார். ஆனால் புடவையில் பார்பதற்கு பொம்பை போல இருக்கிறார். படத்திற்கு ஏற்ற குறையில்லாத நடிப்பு.

சரண்யா மோகனின் அப்பாவாக வரும் ராவ் ரமேஷும், அவரின் நண்பராக வருபவ்ரும் எழுத்தாள்ர் எண்டமூரி விரேந்திரநாத், கேரக்டரும் அசத்தல். என்னதான் மிலிட்டரி ஆபீஸர் என்றாலும் ஜீன்ஸ், சர்ட் போட்ட படியே அப்பா தூங்கி எழுவது ஓவ்ர்.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிற்ர் சாய்கிரண் அடவி, கதை களனையும், மிலிட்டரி அப்பா, கல்யாணம், என்று ஒரு சில விஷயங்களை மட்டும் ஆங்கில படத்திலிருந்து எடுத்துக் கொண்டு, உடம்பு குண்டாய் இருப்பதால் கார்த்திக்குக்கு கொழுப்பு அதிகமாய் இருக்கும் என்று செக் செய்ய சொல்லி இருந்தால் அவனின் உடல் நலம் சரியில்லை என்று குறை சொல்லலாம் என்று க்டும்ப டாக்டரை விட்டு செக் செய்ய, அவனுக்கு பதிலாய் அவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பதும், அதே போல் படகின் துடுப்புகள் ஆற்றில் விழுந்துவிட, கார்த்திக் சமயோஜிதமாய் குடையை வைத்து கரை சேர்வது. என்று சின்ன, சின்னதாய் அழகான க்யூட்டான சீன்களாய் அடுக்கி நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறார்.

மனிகாந்த் கத்ரியின் பாடல்கள் சுகம். அதே போல் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் நன்றாக இருந்தாலும், பல காட்சிகளில் அவுட்டாப் போகஸில் இருக்கிறது. மார்தாண்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங் கச்சிதம்.

பல வருடங்களுக்கு முன் இந்த ஆங்கில படத்தை என் நண்பர்களிடம் சொல்லி தமிழில் செய்தால் நிச்சயம் ஹிட் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, காமெடி படம் என்பதால் யாரும் சட்டை செய்யவில்லை. ஆனால் அப்போதே தெலுங்கில் அரை குறையாய் எடுத்து ஒரு சுமார் ஹிட் படத்தை எடுத்தார்கள். தமிழில் வி.ஏ.இசட். துரை. அப்படியே காமெடி படத்தை சீரியஸாக்கி காதல் சடு குடுவென எடுத்து தோல்வியடைந்தார். இப்போது இந்த படத்தின் வெற்றி என் கணிப்பை மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

Villagelo Vinayakudu – A Feel Good Entertainer.. சினிமா பாகுந்தி.

Technorati Tags:


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Nov 11, 2009

இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09

சென்ற வாரம் ஏற்பாடாகியிருந்த பதிவர் சந்திப்பு.. லோ டிப்ரஷனாலும், தொடர் மழையினால், ஊரே தண்ணியில் டிப்பாகிவிட்டபடியாலும் தள்ளிப் போடப்பட்டது அறிந்ததே..

டிப்ரஷன் இடம் மாறி விட்டபடியால், வெயில் வெள்ளி முளைத்த தைரியத்தில் வரும் வாரம் 14/11/09 அன்று, போன வாரம் ஏற்பாடாகியிருந்த அதே இடத்தில் வரும் சனிக்கிழமை பதிவர் சந்திப்பை நடைபெறும்

நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு மாற்றம் இயக்குனர் திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் வெளியூர் செல்லவிருப்பதால், அவர் அடுத்த சந்திப்புக்கு வருவதாய் இசைந்துள்ளார் அவருக்கு நன்றிகள். அடுத்த சந்திப்பில் அவருடன் கலந்துரையாடி மகிழ்வோம்.

இம்முறை பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்.

pathivar santhippu 14.11.09[12]

புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..

சந்திப்பு நாள் : 14/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30

இடம் : Discovery Book Palace

No. 6. Mahaveer Complex

1st Floor, Munusamy salai,

West K.K. Nagar, Chennai-78

Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964

Up – Review

5 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய என் அன்பு சக பதிவர்களூக்கும்,வாசகர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ...

   upF1_S

கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். Lion King, Finding Nemo,வை எல்லாம் மனப்பாடம் செய்யும் அளவிற்கு பார்த்தவன். அதில் அவர்கள் கதை சொல்லும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும். நோகாமல் அட்வைஸ் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு புரியும் படி.

upF5_S

 up6 சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்து பத்து, பதினைந்து நிமிடங்களில் ஒரு சிறுவன், சிறுமி நண்பர்களாகி, வளர்ந்து, திருமணம் முடித்து, வயதாகி, மனைவி இறந்துவிட, என்னடா ஒரே டீவி சீரியல் கதையாய் இருக்கிறதே என்று யோசித்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.
upF2_S

ஒரு பள்ளி சிறுவன் வயதானவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஒரு பதக்கம் பெற இவரை அணுக, அதே நேரத்தில் அக்கம் பக்கம் வீடு கட்டுவதால், ஏற்படும் பிரச்சனை, அது மட்டுமில்லாமல் மனைவியின் ஆசையை ஒரு பெரிய பள்ளத்தாக்கு, அதில் மேலிருந்து கொட்டும் அருவி, அதன் முனையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற இளமையில் அட்வென்சர் செய்ய விரும்பாத கதாநாயகன், வயதான் காலத்தில் எடுக்க துணிய, தான் செய்யும் தொழிலான பலூன் விற்கும் தொழிலுக்கான ஹீலியம் பலூன்களை ஆயிரக்கணக்கில் கட்டி வேறோடு வீட்டை பறக்கும் விமானம் ஆக்கி பறக்க ஆரம்பிக்கிறார்.
upF3_S

பறக்கும் வீட்டில் அந்த சிறுவனும் வந்து விட, யாருடனும் சேர்ந்து இருக்க விரும்பாத கிழவருடன், சிறுவனும் சேர்ந்து கொள்ள, வழியில் ஒரு வான்கோழியை பையன் பிடித்து போய் அதற்கு சாக்லெட் கொடுத்து பின் தொடர, வான் கோழி போல ஒன்று தன் குஞ்சுகளை தேடி அலைய, அந்த வான் கோழியை பிடித்து கொன்று தன்னுடய மீயூசியத்தில் வைக்க, பேசும் வேட்டை நாய்களை ஏவிவிட்டு அலையும் வில்லன், என்று கதை பின்னி பெடலெடுக்க ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் வில்லனிடமிருந்து கிழவரை, வான் கோழி காப்பாற்ற, பின்பு அது வில்லனிடம் மாட்டிக் கொள்ள, கோழியை காப்பாற்ற தன் மனைவியின்  ஆசையை துறந்து வில்லனின் இடத்துக்கு போய் காப்பாற்றுகிறார்.
upF4_S

சிம்பிளான கதைக்கு மிக அருமையான அனிமேஷன், அவ்வளவு தத்ரூபம். அதிலும் அந்த வீட்டை பலூன்களுடன் மேலெழும்பும் காட்சியாகட்டும்ம் வீட்டுடன் கிழவரும், பையனும் காடு மலை என்று ஓட, பின்னால் வெறி நாய்கள் துறத்த, வான் கோழி அவர்களை தன் மேல் வைத்து பறந்து ஒரு பெரிய இடைவெளியை தாண்ட முயல, அதை துரத்தி ஓடும் ஒரு நாய் கோழியின் காலை கவ்வியபடி தொங்கி பள்ளத்தாக்கில் விழ, ஒரு நிமிடம் நாம் அனிமேஷன் படம் பார்க்கிறோமா இல்லை நிஜ படம் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடும். அவ்வளவு அற்புதமான் அனுபவம்.

Up- எல்லோருக்கும்


Technorati Tags: ,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..